a. ஃப்ரூட் சாட்

தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 1 கப் (வேகவைத்து க்யூபாக கட் பண்ணியது)
- ஆப்பிள் – 1 கப் (தோல் உரித்து சிறிதாக கட் பண்ணியது)
- வாழைப் பழம் – 1 கப் (சிறிதாக நறுக்கியது)
- சக்கரை வள்ளி கிழங்கு – 1 கப் (வேகவைத்து பொடியாக நறுக்கியது)
- எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
- சாட் மசாலா – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- மிளகாய்தூள் – சிறிதளவு
செய்முறை:
- உருளைக்கிழங்கு க்யூப்ஸை சிறிதளவு எண்ணெயில் பொன் நிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- இதோடு மேலே குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் சாட் மசாலா, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

