எண்ணம் எல்லாம் உனக்கெங்கேயடி
(ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்)
(1)
எண்ணம் எல்லாம் உனக்கெங்கேயடி அதை –
என்னிடம் சொல்ல தயங்காதேடி
வண்ண குழலூதும் கண்ணனிட மென்றால்-
வந்த சொல்லும் நெஞ்சில் தங்காதடி (2 times)
(2)
வண்ண குழலென்றால் என்ன பொருள்- என்று
மாயமாய் மனதை மயக்குதடி
கண்ணன் ஊத வென்று என்னும் மூங்கில்தந்த-
காதலில் பாட்டும் கொழிக்குதடி (2 times)
(3)
வேணும் மென்று ஒரு பாம்பு தலை மேலே
வித்தகம் செய்ததும் ஏனோடி
பாதம் நீட்டிதுயில் பள்ளி கொள்ள என்றால்-
பாம்புகள் வம்பும் செய்யா தோடி (2 times)
(4)
காணும் பொருள்களில் கண்ணன் முகம் வந்து
கண்ணோடு கண் சிமிட்டுதடி
கண்ணோடு கண்ணைச் சிமிட்டுவதால் என்தன்-
காதலின் பித்தமும்முற்றுதடி (2 times)
(5)
சொல்லிச் சொல்லி சுகம் ஆனதினாலே- அந்த
தூயவன் நினைவு மோதுதடி
தூயவன் நினைவு மோதுதலால்-
பக்கம் சூழுவதெல்லாம் இனிக்குதடி (2 times)
(6)
மாரா நீ எம்மிடம் வாராதே உன்தன்-
மாமலர் அம்பினை போடாதே
நேரம் இதுவல்ல நீல மலர் கண்ணன்
நேருமுன் இத்திசை பாராதே (2 times)
(7)
நான்முகனே என்னை ஏன் படைத்தாய்
உன்னை நல்லவன் என்று நினைத்தோமே
நாரணனுக்கென்னை ஆட்படுத்தாய் எனில்
நாளையே போரும் தொடுப்போமே (2 times)
(8)
நெஞ்சம் நிறைந்திட்ட நாள்முதலாய் இன்று
நினைவில் ஏதேதோ தோணுதடி
நெஞ்சத்தில் ஏதேதோ தோணுவதால் கண்ணன்-
கொஞ்சத்தில் வந்ததாய் காணுதடி (2times)
** ஹரே கிருஷ்ணா **

