a. கேரட் – பட்டாணி பொரியல்

தேவையான பொருட்கள்
  • கேரட் – 3 (தோல் சீவி பொடியாக நறுக்கியது)
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பட்டாணி – 1கப் (Fresh or Frozen)
  • பச்சைமிளகாய் – 2
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • கருவேப்பிலை , கொத்தமல்லி தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
செய்முறை:

முதலில் கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடாக்கிய பின் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளவும் நன்றாக கோல்டன் பிரவுன் நிறமாக மாறும் வரை வதக்கவும். பின் அதில் இரண்டு பச்சை மிளகாய் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சி (பொடியாக நறுக்கியது) இரண்டையும் நன்றாக வதக்கி பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு ,வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். தண்ணீர் நன்றாக சுண்டியபின் அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

பரோட்டா, Naan ,புல்கா, தயிர் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றிற்கு உகந்தவகையாக இருக்கும்.

இதில் கேரட்டுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare