பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த

(கல்கி கிருஷ்ணமூர்த்தி)

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ? (²)
நந்தகுமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ? (²)
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி (²)
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (²)
அந்த நாளும் வந்திடாதோ?

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

மானினம் நாணிடும் மங்கையரோடு
மா தவத்தோரும் மயங்கிடுமாறு (²)
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் எனச்செய்த (²)
அந்த நாளும் வந்திடாதோ?

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

கானகம் சென்று ஆநிரைக்கன்று
கருணை மாமுகில் மேய்த்திட அன்று (²)
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு (²)
அந்த நாளும் வந்திடாதோ?

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

போதமில்லா ஒரு பேதை மீரா
பிரபு கிரிதாரி இதய ஸஞ்சாரி (²)
வேதம் வேதியர் விரிஞ்சனும் (Brahma) தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (²)
அந்த நாளும் வந்திடாதோ?

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ?

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare