அத்தியாயம் – 8
பரத்தை அடைதல்
பதம் 8.1
அர்ஜுன உவாச
கிம் தத் ப்ரஹ்ம கிம் அத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம
அதிபூதம் ச கிம் ப்ரோக்தம் அதிதைவம் கிம் உச்யதே
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; கிம் – என்ன; தத் – அது; ப்ரஹ்ம – பிரம்மன்; கிம் – என்ன; அத்யாத்மம் – ஆத்மா; கிம் – என்ன; கர்ம – பலன்நோக்குச் செயல்கள்; புருஷ-உத்தம – உத்தம புருஷரே; அதிபூதம் – ஜடத் தோற்றம்; ச – மேலும்; கிம் – என்ன; ப்ரோக்தம் – அழைக்கப்படுவது; அதிதைவம் – தேவர்கள்; கிம் – என்ன; உச்யதே – அழைக்கப்படுவது.
அர்ஜுனன் வினவினான்: எம்பெருமானே, உத்தம புருஷரே, பிரம்மன் என்பது என்ன? அத்யாத்மம் என்பது என்ன? பலன் நோக்குச் செயல்கள் யாவை? இந்த ஜடத்தோற்றம் என்ன? தேவர்கள் யாவர்? இவற்றை தயவுசெய்து எனக்கு விளக்குவீராக.
பதம் 8.2
அதியக்ஞ: கதம் கோ (அ)த்ர தேஹே (அ)ஸ்மின் மதுஸூதன
ப்ரயாண-காலே ச கதம் க்ஞேயோ (அ)ஸி நியதாத்மபி:
அதியஜ்ஞ: – யாகங்களின் இறைவன்; கதம் – எவ்வாறு; க: – யார்; அத்ர – இங்கே; தேஹே – உடலில்; அஸ்மின் – இந்த; மதுஸூதன் — மதுசூதனரே; ப்ரயாண-காலே – இறக்கும் நேரத்தில்; ச – மேலும்; கதம் – எவ்வாறு; ஜ்ஞேய: அஸி – உம்மை அறிய முடியும்; நியத-ஆத்மபி: – புலனடக்கம் உடையோரால்.
மதுசூதனரே, யாகங்களின் இறைவன் யார்? உடலில் அவர் எவ்வாறு வசிக்கின்றார்? பக்தித் தொண்டில் ஈடுபடுவோர் உம்மை மரணக் காலத்தில் எவ்வாறு அறிய முடியும்?
பதம் 8.3
ஸ்ரீ-பகவான் உவாச
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ (அ)த்யாத்மம் உச்யதே
பூத-பாவோத்பவ-கரோ விஸர்க: கர்ம-ஸம்க்ஞித:
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அக்ஷரம் – அழிவற்ற; ப்ரஹ்ம – பிரம்மன்; பரமம் – பரமமான; ஸ்வபாவ: – நித்தியமான இயற்கை; அத்யாத்மம் – ஆத்மா; உச்யதே – என்றழைக்கப்படுகின்றது; பூத-பாவ-உத்பவ-கர: – உயிர்வாழிகளின் ஜடவுடல்களை உண்டாக்குதல்; விஸர்க: – படைப்பு; கர்ம – பலன்நோக்குச் செயல்கள்; ஸஞ்ஜ்ஞித: – என்று அழைக்கப்படுகிறது.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிரம்மன் எனப்படுவது அழிவற்றதும் உன்னதமானதுமாகும், அதன் ஸ்வபாவமான (நித்திய இயற்கையான) ஜீவாத்மா, அத்யாத்ம என்றும் அழைக்கப்படுகிறான். ஜீவாத்மாவின் ஜடவுடலை வளர்க்கும் செயல்கள், கர்மா (பலன்நோக்குச் செயல்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
பதம் 8.4
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஷ் சாதிதைவதம்
அதியக்ஞோ (அ)ஹம்-ஏவாத்ர தேஹ-ப்ருதாம் வர
அதிபூதம் — பெளதிகத் தோற்றம்; க்ஷர: – தொடர்ந்து மாறுவது; பாவ: – இயற்கை; புருஷ: – சூரிய சந்திரர்கள் உட்பட எல்லா தேவர்களையும் உள்ளடக்கிய விஸ்வரூபம்; ச – மேலும்; அதிதைவதம் – அதிதைவம் எனப்படுகிறது; அதியஜ்ஞ: – பரமாத்மா; அஹம் – நான் (கிருஷ்ணர்); ஏவ – நிச்சயமாக; அத்ர — இதில்; தேஹே – உடல்; தேஹ-ப்ரு’தாம் — உடலை உடையவர்களில்; வர — சிறந்தனே.
உடல் பெற்ற ஆத்மாக்களில் சிறந்தவனே, எப்போதும் மாறிக் கொண்டுள்ள பௌதிக இயற்கை, அதிபூத எனப்படும். சூரியன், சந்திரன் போன்ற அனைத்து தேவர்களும் அடங்கிய பகவானின் விஸ்வரூபம் அதிதைவ எனப்படும். மேலும், உடல் பெற்ற அனைத்து ஜீவன்களின் இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றிருக்கும் பரம புருஷனாகிய நான், அதியக்ஞ (யாகத்தின் இறைவன்) என்று அழைக்கப்படுகிறேன்.
பதம் 8.5
அந்த-காலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்-பாவம் யாதி நாஸ்த்-யத்ர ஸம்ஷய:
அந்த-காலே — வாழ்வின் இறுதி காலத்தில்; ச – கூட; மாம் – என்னை; ஏவ –நிச்சயமாக; ஸ்மரன் – நினைத்துக் கொண்டு; முக்த்வா — விடுபவன்; கலேவரம் – உடலை; ய: – எவனொருவன்; ப்ரயாதி — செல்கிறான்; ஸ: – அவன்; மத்-பாவம் – என்னுடைய இயற்கையை; யாதி — அடைகிறான்; ந – இல்லை; அஸ்தி — இதில்; அதர – இங்கே; ஸம்’ஷய: – சந்தேகம்.
மேலும், தனது வாழ்வின் இறுதி காலத்தில், யாராவது என்னை மட்டும் எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
பதம் 8.6
யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்-யந்தே கலேவரம்
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்-பாவ-பாவித:
யம் யம் – எதுவாக; வா அபி — இருந்தாலும்; ஸ்மரன் – எண்ணிக் கொண்டு; பாவம் – இயற்கை; த்யஜதி – விடுபவன்; அந்தே – இறுதியில்; கலேவரம் – இவ்வுடல்; தம் தம் – அதுபோன்ற; ஏவ – நிச்சியமாக; ஏதி – அடைகிறான்; கௌந்தேய – குந்தியின் மகனே; ஸதா: – எப்போதும்; தத் – அந்த; பாவ – வாழ்வு நிலை; பாவித: எண்ணிக் கொண்டு.
ஒருவன் தனது உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன் அடைகிறான்.
பதம் 8.7
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச
மய்-யர்பித-மனோ-புத்திர் மாம் ஏவைஷ்யஸ்-யஸம்ஷய:
தஸ்மாத் – எனவே; ஸர்வேஷு – எல்லா; காலேஷு – நேரத்திலும்; மாம் – என்னை; அனுஸ்மர – எண்ணிக் கொண்டு; யுத்ய – போரிடு; ச – மேலும்; மயி – என்னிடம்; அர்பித – சரணடைந்த; மன: – மனம்; புத்தி — புத்தி; மாம் – என்னை; ஏவ – நிச்சயமாக; ஏஷ்யஸி – நீ அடைவாய்; அஸம்’ஷய: – ஐயமில்லை.
எனவே, அர்ஜுனா, என்னை இந்த (கிருஷ்ண) உருவில் எப்போதும் எண்ணிக் கொண்டு, அதே சமயம் உனக்கு விதிக்கப்பட்ட கடமையான போரிடுதலையும் செய்வாயாக. உன்னுடைய செயல்களை எனக்கு அர்ப்பணித்து, உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்துவதன் மூலம், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை.
பதம் 8.8
அப்யாஸ-யோக-யுக்தேன சேதஸா நான்ய-காமினா
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தானுசிந்தயன்
அப்யாஸ-யோக – பயிற்சி; யுக்தேன – தியானத்தில் ஈடுபட்டு; சேதஸா -மனதாலும் புத்தியினாலும்; ந அன்ய-காமினா — அதிலிருந்து சற்றும் பிறழாமல்; பரமம் – பரம; புருஷம் – புருஷர்; திவ்யம் – திவ்யமான; யாதி – அடைகிறான்; பார்த: – பிருதாவின் மகனே; அனுசிந்தயன் — இடையறாது எண்ணி.
பரம புருஷ பகவானாக என்னை தியானித்து, எப்போதும் தனது மனதை நினைப்பதில் ஈடுபடுத்தி, இவ்வழியிலிருந்து சற்றும் பிறழாது பயிற்சி செய்பவன், பார்த்தனே, நிச்சயமாக என்னை அடைகிறான்.
பதம் 8.9
கவிம் புராணம் அனுஷாஸிதாரம் அணோர் அணீயாம்ஸம் அனுஸ்மரேத் ய:
ஸர்வஸ்ய தாதாரம் அசிந்த்ய-ரூபம் ஆதித்ய-வர்ணம் தமஸ: பரஸ்தாத்
கவிம் – எல்லாமறிந்தவர்; புராணம் – மிகப் பழமையானவர்; அனுஷாஸிதாரம் — கட்டுப்படுத்துபவர்; அணோ: – அணுவைவிட; அணியாம்’ஸம் – சிறியவர்; அனுஸ்மரேத் – எப்போதும் நினைத்து; ய: – எவனொருவன்; ஸர்வஸ்ய – எல்லாவற்றையும்; தாதாரம் – பராமரிப்பவர்; அசிந்திய – புரிந்துகொள்ள இயலாத; ரூபம் – ரூபம்; ஆதித்ய-வர்ணம் – சூரியனைப் போன்ற நிறம் உடையவர்; தமஸ: – இருளிற்கு; பரஸ்தாத் – உன்னதமானவர்.
எல்லாமறிந்தவர், மிகப் பழமையானவர், கட்டுப்படுத்துபவர், அணுவைவிடச் சிறியவர், எல்லாவற்றையும் பராமரிப்பவர், எல்லா பௌதிகக் கருத்துக்களுக்கும் அப்பாற்பட்டவர், புரிந்துகொள்ள முடியாதவர், ரூபமுடைய நபர், சூரியனைப் போன்று பிரகாசமானவர், ஜட இயற்கையைக் கடந்த உன்னதமானவர் என்று பரம புருஷரை ஒருவன் தியானம் செய்ய வேண்டும்.
பதம் 8.10
ப்ரயாண-காலே மனஸாசலேன
பக்த்யா யுக்தோ யோக-பலேன சைவ
ப்ருவோர் மத்யே ப்ராணம் ஆவேஷ்ய ஸம்யக்
ஸ தம் பரம் புருஷம் உபைதி திவ்யம்
ப்ரயாண-காலே – இறக்கும் நேரத்தில்; மனஸா – மனதால்; அசலேன — பிறழாது; பக்த்யா – முழு பக்தியுடன்; யுக்த: — ஈடுபட்டு; யோக-பலேன – யோக சக்தியின் பலத்தால்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; ப்ருவோ: – இரு புருவங்களுக்கு; மத்யே – மத்தியில்; ப்ராணம் – உயிர்மூச்சு; ஆவேஷ்ய – நிறுத்தி; ஸம்யக் – முழுமையாக; ஸ: – அவன்; தம் – அந்த; பரம – பரம; புருஷம் – புருஷரை; உபைதி — அடைகிறான்; திவ்யம் – ஆன்மீக உலகில்.
எவனொருவன், இறக்கும் தருவாயில், தனது உயிர் மூச்சை புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி யோக பலத்தினால், பிறழாத மனதுடனும் முழு பக்தியுடனும், பரம புருஷரை நினைப்பதில் ஈடுபட்டுள்ளானோ, அவன் நிச்சயமாக பரம புருஷ பகவானை அடைவான்.
பதம் 8.11
யத் அக்ஷரம் வேத-விதோ வதந்தி
விஷந்தி யத் யதயோ வீத-ராகா:
யத் இச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி
தத் தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே
யத் – அந்த; அக்ஷரம் – ஓம்காரம்; வேத-வித: – வேதங்களை அறிந்தவன்; வதந்தி – கூறுகின்றனர்; விஷந்தி – நுழைவது; யத் – எதில்; யதய: – பெரும் முனிவர்கள்; வீத-ராகா: – துறவில்; யத் – எதை; இச்சந்த: – விரும்பி; ப்ரஹ்ம-சர்யம் – பிரம்மசர்யத்தை; சரந்தி – பயிற்சி; தத் – அதை; தே – உனக்கு; பதம் – நிலையை; ஸங்க்ரஹேண — சுருக்கமாக; ப்ரவக்ஷ்யே – நான் விளக்குகிறேன்.
வேதங்களைக் கற்றவர்களும், ஓம்காரத்தை உச்சரிப்பவர்களும், துறவில் சிறந்த முனிவர்களும், பிரம்மனில் நுழைகின்றனர். இத்தகு பக்குவத்தை விரும்புபவன் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறான். முக்தியடைவதற்கான இம்முறையை தற்போது நான் உனக்கு சுருக்கமாக விளக்குகிறேன்.
பதம் 8.12
ஸர்வ-த்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்ன்-யாதாயாத்மன: ப்ராணம் ஆஸ்திதோ யோக-தாரணாம்
ஸர்வ-த்வாராணி – உடலின் எல்லாக் கதவுகளையும்; ஸம்’யம்ய — அடக்கி; மன: – மனதை; ஹ்ருதி: – இதயத்தில்; நிருத்ய – நிறுத்தி; ச – கூட; மூர்த்னி – தலையில்; ஆதாய – நிறுத்தி; ஆத்மன: – ஆத்மாவை; ப்ராணம் – உயிர் மூச்சு; ஆஸ்தித: – நிறுத்தி; யோக-தாரணாம் – யோக நிலையில்.
புலன்களின் எல்லா ஈடுபாடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பதே யோக நிலை; புலன்களின் எல்லா கதவுகளையும் மூடி, மனதை இதயத்திலும் உயிர் மூச்சை தலை உச்சியிலும் நிறுத்தி, ஒருவன் யோகத்தில் தன்னை நிலைநிறுத்துகிறான்.
பதம் 8.13
ஓம் இத்-யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாம் அனுஸ்மரன்
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்
ஓம் – ஓம்காரம்; இதி – எனும்; ஏக-அக்ஷரம் – ஒரு சப்தம்; ப்ரஹ்ம – பூரணம்; வ்யாஹரன் – உச்சரித்து; மாம் – என்னை (கிருஷ்ணரை); அனுஸ்மரன் – எண்ணி; ய: – எவனொருவன்; ப்ரயாதி – விடுகிறானோ; த்யஜன் – துறந்து; தேஹம் — இவ்வுடல்; ஸ: – அவன்; யாதி – அடைகின்றான்; பரமாம் – பரம; கதிம் – கதியை.
இந்த யோகப் பயிற்சியில் நிலைபெற்ற பிறகு, ஓம் எனும் புனித பிரணவத்தை உச்சரித்து, பரம புருஷ பகவானை எண்ணிக் கொண்டு உடலை விடுபவன், நிச்சயமாக ஆன்மீக கிரகங்களை அடைவான்.
பதம் 8.14
அனன்ய-சேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஷ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்ய-யுக்தஸ்ய யோகின:
அனன்ய-சேதா: – பிறழாத மனதுடன்; ஸததம் — எப்போதும்; ய: — எவனொருவன்; மாம் – என்னை (கிருஷ்ணரை); ஸ்மரதி – எண்ணுகின்றானோ; நித்யஷ: – எப்போதும்; தஸ்ய – அவனுக்கு; அஹம் – நான்; ஸுலப: – அடைவதற்கு மிக எளிதானவன்; பார்த – பிருதாவின் மகனே; நித்ய — எப்போதும்; யுக்தஸ்ய – ஈடுபட்ட; யோகின: – பக்தனின்.
பிருதாவின் மகனே, பிறழாத மனதுடன் என்னை எப்போதும் நினைப்பவன், சுலபமாக என்னை அடைகிறான்; ஏனெனில், அவன் பக்தித் தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளான்.
பதம் 8.15
மாம் உபேத்ய புனர் ஜன்ம து:காலயம் அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா:
மாம் – என்னை; உபேத்ய – அடைந்து; புன: – மீண்டும்; ஜன்ம – பிறவி; து:க- ஆலயம் – துக்கத்தின் இடம்; அஷாஷ்வதம் தற்காலிகமானது: ந – என்றுமில்லை; ஆப்னுவந்தி – அடைதல்; மஹா-ஆத்மான: – மகாத்மாக்கள்; ஸம்’ஸித்திம் – பக்குவம்; பரமாம் – பரம; கதா: – அடைந்து.
பக்தியில் யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிகமான உலகத்திற்குத் திரும்பி வருவதே இல்லை; ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்துவிட்டனர்.
பதம் 8.16
ஆ-ப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன
மாம் உபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே
ஆ-ப்ரஹ்ம-புவனாத் – பிரம்மலோகம் வரை; லோகா – லோகங்கள்; புன: – மீண்டும்; ஆவர்தின: – திரும்புதல்; அர்ஜுன — அர்ஜுனா; மாம் – என்னிடம்; உபேத்ய – அடைந்து; து — ஆனால்; கௌந்தேய – குந்தியின் மகனே; புன: ஜன்ம – மறுபிறவி; ந – என்றுமில்லை; வித்யதே – எடுக்க வேண்டியது.
ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே. ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தை அடைபவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை.
பதம் 8.17
ஸஹஸ்ர-யுக-பர்யந்தம் அஹர் யத் ப்ரஹ்மணோ விது:
ராத்ரிம் யுக-ஸஹஸ்ராந்தாம் தே (அ)ஹோ-ராத்ர-விதோ ஜனா:
ஸஹஸ்ர – ஆயிரம்; யுக — யுகங்கள்; பர்யந்தம் – உள்ளிட்ட; அஹ: – பகல்; யத் – அந்த; ப்ரஹ்மண: – பிரம்மாவின்; விது: – அறிவாய்; ராத்ரிம் – இரவு; யுக – யுகங்கள்; ஸஹஸ்ர-அந்தாம் – அதுபோல ஆயிரத்தின் இறுதியில்; தே – அவர்கள்; அஹ:-ராத்ர — இரவும் பகலும்; வித: – அறிகின்றனர்; ஜனா: – மக்கள்.
மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்களைக் கொண்ட காலம் பிரம்மாவின் ஒரு பகலாகும்; அவரது இரவின் காலமும் அது போன்று நீண்டதே.
பதம் 8.18
அவ்யக்தாத் வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்-யஹர்-ஆகமே
ராத்ர்-யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்த-ஸம்க்ஞகே
அவ்யக்தாத் — தோற்றமற்ற நிலையிலிருந்து; வ்யக்தய: – ஜீவாத்மாக்கள்; ஸர்வா: – எல்லா; ப்ரபவந்தி — தோன்றுகின்றனர்; அஹ:-ஆகமே – பகலின் ஆரம்பத்தில்; ராத்ரி-ஆகமே – இரவின் தொடக்கத்தில்; ப்ரலீயந்தே – அழிக்கப்படுகின்றன; தத்ர — அதில்; ஏவ – நிச்சயமாக; அவ்யக்த – தோற்றமற்ற; ஸஞ்ஜ்ஞகே – அழைக்கப்படும்.
பிரம்மாவின் பகல் தோன்றும்போது எல்லா ஜீவாத்மாக்களும் அவ்யக்த நிலையிலிருந்து தோன்றுகின்றனர். பின்னர், இரவு வந்தவுடன் அவர்கள் மீண்டும் அவ்யக்தத்துடன் இணைந்து விடுகின்றனர்.
பதம் 8.19
பூத-க்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே
ராத்ர்-யாகமே (அ)வஷ: பார்த ப்ரபவத்-யஹர்-ஆகமே
பூத-க்ராம – ஜீவாத்மாக்களின் தொகுப்பு; ஸ: – அவர்கள்; ஏவ – நிச்சயமாக; அயம் – இந்த; பூத்வா பூத்வா – மீண்டும் மீண்டும் பிறந்து; ப்ரலீயதே – அழிகின்றனர்; ராத்ரி — இரவு; ஆகமே – வரும்போது; அவஷ: – தாமாகவே; பார்த: – பிருதாவின் மகனே; ப்ரபவதி — தோன்றுகின்றனர்; அஹ – பகல் நேரம்; ஆகமே – வரும்போது.
மீண்டும் மீண்டும், பிரம்மாவின் பகல் வரும்போது, இந்த ஜீவாத்மாக்கள் தோன்றுகின்றனர், பிரம்மாவின் இரவு வரும் போது இவர்கள் அனாதரவாக அழிக்கப்படுகின்றனர்.
பதம் 8.20
பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)ன்யோ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸநாதன:
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஷ்யத்ஸு ந வினஷ்யதி
பர: – பரம; தஸ்மாத் – இதற்கு; து – ஆனால்; பாவ: – இயற்கை; அன்ய: – வேறு; அவ்யக்த: – தோன்றாத; அவ்யக்தாத் – தோன்றாததற்கு; ஸநாதன: – நித்தியமான; ய: ஸ: – எதுவோ; ஸர்வேஷு – எல்லா; பூதேஷு – தோற்றம்; நஷ்யத்ஸு – அழிக்கப்படுவது; ந – இல்லை; வினஷ்யதி – அழிவடைவது.
இருப்பினும், தோன்றி மறையும் இந்த ஜடத்திற்கு அப்பால், நித்தியமானதும் திவ்யமானதுமான மற்றொரு தோன்றாத இயற்கை உள்ளது. அது பரமமானது, என்றும் அழிவடையாதது. இவ்வுலகிலுள்ள அனைத்தும் அழிவடையும்போதும், அப்பகுதி அழிவதில்லை.
பதம் 8.21
அவ்யக்தோ (அ)க்ஷர இத்-யுக்தஸ் தம் ஆஹு: பரமாம் கதிம்
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம
அவ்யக்த: – தோற்றமற்ற; அக்ஷர: – அழிவற்ற; இதி – இவ்வாறாக; உக்த: -கூறப்படும்; தம் – அந்த; ஆஹு: – அறியப்பட்ட; பரமம் – பரம; கதிம் — கதி; யம் – எதை; ப்ராப்ய — அடைந்தபின்; ந – என்றும் இல்லை; நிவர்தந்தே – திரும்பி வருவது; தத் – அந்த; தாம – இருப்பிடம்; பரமம் – பரம; மம – எனது.
எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.
பதம் 8.22
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ் த்வனன்யயா
யஸ்யாந்த:-ஸ்தானி பூதானி யேன ஸர்வம் இதம் ததம்
புருஷ: – புருஷர்; ஸ: – அவர்; பர: – எல்லோரிலும் சிறந்தவரான பரமன்; பார்த: – பிருதாவின் மகனே; பக்த்யா – பக்தித் தொண்டால்; லப்ய: – அடைய முடியும்; து – ஆனால்; அனன்யயா – களங்கமற்ற, பிறழாத; யஸ்ய – எவரது; அந்த:-ஸ்தானி – உள்ளே; பூதானி — இந்த ஜடத் தோற்றங்கள் எல்லாம்; யேன — யாரால்; ஸர்வம் – எல்லா; இதம் – நாம் கண்டவை எல்லாம்; ததம் – பரவியுள்ளது.
எல்லோரிலும் சிறந்தவரான, பரம புருஷ பகவானை களங்கமற்ற பக்தியினால் அடைய முடியும். அவர் தனது இருப்பிடத்தில் வசிக்கும்போதிலும், எங்கும் நிறைந்தவராக உள்ளார், மேலும், அனைத்தும் அவரினுள் அமைந்துள்ளது.
பதம் 8.23
யத்ர காலே த்வனாவ்ருத்திம் ஆவ்ருத்திம் சைவ யோகின:
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப
யத்ர – எந்த; காலே – காலம்; து — மேலும்; அனாவ்ரு’த்திம் – மீண்டும் வராத; ஆவ்ரு’த்திம் – மீண்டும் வருகின்ற; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; யோகின: – பற்பல யோகிகள்; ப்ரயாதா: – சென்றபின்; யாந்தி — அடைகின்றனர்; தம் – அந்த; காலம் – காலம்; வக்ஷ்யாமி – நான் விவரிக்கிறேன்; பரத-ருஷப — பரதர்களில் சிறந்தவனே.
பரதர்களில் சிறந்தவனே, எந்த எந்த நேரங்களில் இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகி, மீண்டும் வருகிறான் அல்லது வராது போகிறான் என்பதைப் பற்றி நான் இப்போது உனக்கு விளக்குகிறேன்.
பதம் 8.24
அக்னிர் ஜ்யோதிர் அஹ: ஷுக்ல: ஷண்-மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம-விதோ ஜனா:
அக்னி: – நெருப்பு; ஜ்யோதி: – ஒளி; அஹ: – பகல்; ஷுக்ல: – வளர்பிறை; ஷட்- மாஸா: – ஆறு மாதங்கள்; உத்தர-அயனம் – சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும்போது; தத்ர – அங்கே; ப்ரயாதா: – உடலை விடுபவன்; கச்சந்தி – செல்கிறான்; ப்ரஹ்ம – பிரம்மன்; ப்ரஹ்ம-வித: – பிரம்மனை அறிந்த; ஜனா: – நபர்கள்.
பரபிரம்மனை அறிந்தவர்கள், அக்னி தேவனின் ஆதிக்கத்தில், ஒளியில், பகலின் நல்ல நேரத்தில், வளர்பிறை உள்ள இரு வாரங்களில், சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களில், இவ்வுலகைவிட்டுச் சென்று அந்த பரமனை அடைகின்றனர்.
பதம் 8.25
தூமோ ராத்ரிஸ் ததா க்ருஷ்ண: ஷண்-மாஸா தக்ஷிணாயனம்
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர் யோகீ ப்ராப்ய நிவர்ததே
தூம: – புகை; ராத்ரி — இரவு; ததா – மேலும்; க்ருஷ்ண: – தேய்பிறை; ஷட்- மாஸா – ஆறு மாதங்கள்; தக்ஷிண-அயனம் — சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம்; தத்ர — அங்கே; சாந்த்ர-மஸம் – சந்திரலோகம்; ஜ்யோதி: – ஒளி; யோகீ – யோகி; ப்ராப்ய – அடையும்; நிவர்ததே – மீண்டும் வருகிறான்.
புகையிலும், இரவிலும், தேய்பிறையிலும், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களிலும், இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகிகள், சந்திரலோகத்தை அடைந்து மீண்டும் திரும்பி வருகின்றனர்.
பதம் 8.26
ஷுக்ல-க்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஷாஷ்வதே மதே
ஏகயா யாத்-யனாவ்ருத்திம் அன்யயாவர்ததே புன:
ஷுக்ல – ஒளி; க்ரு’ஷ்ணே – இருள்; கதீ – உடலை விடும் வழிகள்; ஹி – நிச்சயமாக; ஏதே – இந்த இரண்டு; ஜகத: – பௌதிக உலகின்; ஷாஷ்வதே – வேதங்களின்; மதே — கருத்தில்; ஏகயா — ஒருவழியில்; யாதி — செல்கின்றவன்; அனாவ்ருத்திம் – திரும்புவதில்லை; அன்யயா – மறுவழியில்; ஆவர்ததே — திரும்புகின்றான்; புன: – மீண்டும்.
வேதக் கருத்தின்படி, இந்த உலகிலிருந்து செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன—ஒன்று ஒளியில், மற்றது இருளில். ஒளியில் உடலை விடுபவன் திரும்பி வருவதில்லை; ஆனால் இருளில் உடலை விடுபவனோ திரும்பி வருகிறான்.
பதம் 8.27
நைதே ஸ்ருதீ பார்த ஜானன் யோகீ முஹ்யதி கஷ்சன
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக-யுக்தோ பவார்ஜுன
ந – இல்லை; ஏதே – இவ்விரண்டு; ஸ்ருதீ – விதமான வழிகள்; பார்த: -பிருதாவின் மகனே; ஜானன் — அவன் அறிந்திருந்தாலும்; யோகீ – இறைவனின் பக்தர்; முஹ்யதி – குழம்புவது; கஷ்சன – சிறிதும்; தஸ்மாத் – எனவே; ஸர்வேஷு காலேஷு — எப்போதும்; யோக-யுக்த: – கிருஷ்ண உணர்வில் ஈடுபடுபவனாக; பவ – ஆவாயாக; அர்ஜுன — அர்ஜுனா.
அர்ஜுனா, இவ்விரண்டு பாதைகளையும் அறிந்துள்ள பக்தர்கள், ஒருபோதும் குழப்பமடைவதில்லை. எனவே, எப்போதும் பக்தியில் நிலைபெறுவாயாக.
பதம் 8.28
வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவ
தானேஷு யத் புண்ய-பலம் ப்ரதிஷ்டம்
அத்யேதி தத் ஸர்வம் இதம் விதித்வா
யோகீ பரம் ஸ்தானம் உபைதி சாத்யம்
வேதேஷு – வேதங்களைப் படிப்பதால்; யஜ்ஞேஷு – யாகங்கள் புரிவதால்; தப:ஸு – பற்பல தவங்களை மேற்கொள்வதால்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; தானேஷு – தானம் செய்வதால்; யத் – எந்த; புண்ய-பலம் — புண்ணிய பலன்; ப்ரதிஷ்டம் — குறிப்பிடப்பட்டுள்ளதோ; அத்யேதி — தாண்டிவிடுகிறது; தத் ஸர்வம் — அவற்றை எல்லாம்; இதம் – இது; விதித்வா – அறிவதால்; யோகீ – பக்தன்; பரம் – பரம; ஸ்தானம் — இடத்தை; உபைதி — அடைகிறான்; ச – மேலும்; ஆத்யம் – ஆதி.
பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டை செய்வதன் மூலமாகவே.