அத்தியாயம் – 3
கர்ம யோகம்
ப.கீ 3.1
அர்ஜுன உவாச
ஜ்யாயஸீ சேத் கர்மணஸ் தே மதா புத்திர் ஜனார்தன
தத் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ
அர்ஜுன: உவாச — அர்ஜுனன் கூறினான்; ஜ்யாயஸீ – சிறந்தது; சேத் – இருந்தால்; கர்மண: – பலன் நோக்குச் செயல்களைவிட; தே – தங்களால்; மதா – அபிப்பிராயம்; புத்தி: – புத்தி; ஜனார்தன – கிருஷ்ண; தத் – எனவே; கிம் – ஏன்; கர்மணி – செயலில்; கோரே – கோரமான; மாம் – என்னை; நியோஜயஸி – ஈடுபடுத்துகிறாய்; கேஷவ – கேசவனே.
அர்ஜுனன் கூறினான்: ஜனார்தனனே, கேசவனே, பலன் நோக்குச் செயல்களைவிட புத்தி சிறந்தது என்றால், கோரமான இப்போரில் தாங்கள் என்னை பலவந்தமாக ஈடுபடுத்துவது ஏன்?
ப.கீ 3.2
வ்யாமிஷ்ரேணேவ வாக்யேன புத்திம் மோஹயஸீவ மே
தத் ஏகம் வத நிஷ்சித்ய யேன ஷ்ரேயோ (அ)ஹம் ஆப்னுயாம்
வ்யாமிஷ்ரேண – இரு பொருள்படும்; இவ – நிச்சயமாக; வாக்யேன — வாக்கியங்கள்; புத்திம் – புத்தி; மோஹயஸி – தாங்கள் மயக்குகின்றீர்; இவ — நிச்சயமாக; மே – என்னுடைய; தத் – எனவே; ஏகம் – ஒன்றை; வத – தயவுசெய்து கூறுவீர்; நிஷ்சித்ய — நிச்சயமாக; யேன — எதனால்; ஷ்ரேய: – உண்மைப் பலன்; அஹம் – நான்; ஆப்னுயாம் — அடையலாம்.
இரண்டு வழிகளை ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால், எனது புத்தி பேதலிக்கின்றது. எனவே, எனக்கு மிகவும் நன்மையானது எது என்பதை முடிவாகக் கூறுவீராக.
ப.கீ 3.3
ஸ்ரீ-பகவான் உவாச
லோகே (அ)ஸ்மின் த்வி-விதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயானக
க்ஞான-யோகேன ஸாங்க்யானாம் கர்ம-யோகேன யோகினாம்
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; லோகே – உலகில்; அஸ்மின் – இந்த; தவி-விதா – இருவிதமான; நிஷ்டா – நம்பிக்கை; புரா – முன்னரே; ப்ரோக்தா — கூறப்பட்டது; மயா — என்னால்; அனக – பாவமற்றவனே; ஜ்ஞான-யோகேன — ஞானம் என்னும் இணைப்பு முறையால்; ஸாங்க்யானாம் – ஸாங்கிய தத்துவவாதிகளின்; கர்ம-யோகேன — பக்தி என்னும் இணைப்பு முறையில்; யோகியனாம் — பக்தர்களது.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பாவங்களற்ற அர்ஜுனா, இருவகையான மனிதர்கள் தன்னுணர்விற்காக முயற்சி செய்வதாக நான் முன்பே விளக்கினேன். சிலர் ஸாங்கிய தத்துவ சிந்தனைகளாலும், பிறர் பக்தித் தொண்டினாலும், தன்னுணர்வினை அடைய முயற்சி செய்கின்றனர்.
ப.கீ 3.4
ந கர்மணாம் அனாரம்பான் நைஷ்கர்ம்யம் புருஷோ (அ)ஷ்னுதே
ந ச ஸன்ன்யஸனாத் ஏவ ஸித்திம் ஸமதி கச்சதி
ந – இல்லை; கர்மணாம் – விதிக்கப்பட்ட கடமைகளை; அனாரம்பாத் – செயலாற்றாமல்; நைஷ்காம்யம் – விளைவுகளிலிருந்து விடுதலை; புருஷ: – மனிதன்; அஷ்னுதே – அடைகிறான்; ந – இல்லை; ச – மற்றும்; ஸன்ன்யஸனாத் – துறவால்: ஏவ – வெறுமே; ஸித்திம் – வெற்றி; ஸமதிகச்சதி — அடைகிறான்.
செயல்களிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து ஒருவன் விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாததாகும்.
ப.கீ 3.5
ந ஹி கஷ்சித் க்ஷணம் அபி ஜாது திஷ்டத்-யகர்ம-க்ருத்
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதி-ஜைர் குணை:
ந – இல்லை; ஹி— நிச்சயமாக; கஷ்சித் – யாருமே; க்ஷணம் – ஒரு கணம்; அபி — கூட; ஜாது — எவ்வேளையிலும்; திஷ்டதி — இருப்பது; அகர்ம-க்ரு’த் – ஒன்றும் செய்யாமல்; கார்யதே – வற்புறுத்துப்படுகின்றனர்; ஹி – நிச்சயமாக; அவஷ: — சுதந்திரமின்றி; கர்ம – செயல்; ஸர்வ: – எல்லாம்; ப்ரக்ரு’தி-ஜை: – பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய; குணை: – குணங்களால்.
பௌதிக இயற்கையிடமிருந்து பெறப்பட்ட குணங்களுக்குத் தகுந்தாற் போல, ஒவ்வொருவரும் சுதந்திரம் ஏதுமின்றி செயல்படுவதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். எனவே, ஒரு கணம்கூட செயல்கள் எதையும் செய்யாமல் இருப்பது எவருக்கும் சாத்தியமல்ல.
ப.கீ 3.6
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன்
இந்த்ரியார்தான் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே
கர்ம-இந்த்ரியாணி – ஐந்து செயற் புலன்களை; ஸம்யம்ய – கட்டுப்படுத்தி; ய: – எவனொருவன்; ஆஸ்தே – இருக்கிறானோ; மனஸா — மனதால்; ஸ்மரன் — எண்ணிக்கொண்டு; இந்த்ரிய-அர்தான் — புலனுகர்ச்சிப் பொருள்கள்; விமூட – முட்டாள்; ஆத்மா – ஆத்மா; மித்யா-ஆசார: – பொய்யான நடத்தையுடையவன் (போலி மனிதன்); ஸ: – அவன்; உச்யதே – அழைக்கப்படுகின்றான்.
புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனின்பப் பொருள்களில் மனதை அலைபாய விடுபவன், தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகின்றான்.
ப.கீ 3.7
யஸ் த்விந்த்ரியாணி மனஸா நியம்யாரபதே (அ)ர்ஜுன
கர்மேந்த்ரியை: கர்ம-யோகம் அஸக்த: ஸ விஷிஷ்யதே
ய: – யாரெருவன்; து – ஆனால்; இந்த்ரியாணி – புலன்களை; மனஸா — மனதால்; நியம்ய – நியமங்களுக்கு உட்படுத்துகின்றானோ; ஆரபதே – தொடங்குகிறான்; அர்ஜுன — அர்ஜுனனே: காம-இந்த்ரியை: – செயற்புலன்களால்; கர்ம-யோகம் — பக்தி; அஸக்த: – பற்றின்றி; ஸ: – அவன்; விஷிஷ்யதே – மிக உயர்ந்தவன்.
அதே சமயத்தில், செயலாற்றும் புலன்களை மனதால் கட்டுப்படுத்தி, பற்றின்றி கர்ம யோகத்தில் (கிருஷ்ண உணர்வில்) செயல்படும் நேர்மையான மனிதன், மிக உயர்ந்தவனாவான்.
ப.கீ 3.8
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஷரீர-யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத் அகர்மண:
நியதம் – நியமிக்கப்பட்ட; குரு – செய்; கர்ம – கடமைகள்; த்வம் – நீ; கர்ம – செயல்; ஜ்யாய – சிறந்தது; ஹி – நிச்சயமாக; அகர்மண: – செயலற்ற நிலையை விட; ஷரீர – உடலின்; யாத்ரா – பராமரிப்பு; அபி – ஆயினும்; ச – மேலும்; தே – உனது; ந – என்றுமில்லை; ப்ரஸித்யேத் — நடப்பதில்லை; அகர்மண: – செயலின்றி.
உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதைவிட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலைக் கூடப் பாதுகாக்க முடியாது.
ப.கீ 3.9
யக்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர லோகோ (அ)யம் கர்ம-பந்தன:
தத் அர்தம் கர்ம கௌந்தேய முக்த-ஸங்க: ஸமாசர
யஜ்ஞ-அர்தாத் — யாகத்திற்காக (விஷ்ணுவிற்காக) மட்டும் செய்யப்படும்; கர்மண: – செயல்கள்; அன்யத்ர – மற்றபடி; லோக: – உலகம்; அயம் – இந்த; கர்ம-பந்தன: – செயல்களினால் பந்தப்படுதல்; தத் – அவரது; அர்தம் — திருப்திக்காக; கர்ம – செயல்; கௌந்தேய – குந்தியின் மகனே; முக்த-ஸங்க: – இணைப்பிலிருந்து விடுதலையடைந்து; ஸமாசர — பக்குவமாகச் செய்.
விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் மட்டுமே நிறைவேற்றப்படலாம், மற்ற செயல்கள் இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய். இவ்விதமாக நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.
ப.கீ 3.10
ஸஹ-யக்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அனேன ப்ரஸவிஷ்யத்வம் ஏஷ வோ (அ)ஸ்த்விஷ்ட-காம-துக்
ஸஹ – கூட; யஜ்ஞ: – யாகங்கள்: ப்ரஜா: – குலங்கள்; ஸ்ரு’ஷ்ட்வா — படைத்து; புரா – பழங்காலத்தில்; உவாச – கூறினார்; ப்ரஜாபதி: – உயிர்வாழிகளின் இறைவன்; அனேன — இதனால்; ப்ரஸவிஷ்யத்வம் — மேன்மேலும் செல்வச் செழிப்புடன் இருக்க; ஏஷ: – இந்த; வ: – உங்களது; அஸ்து – இருக்கட்டும்; இஷ்ட- எல்லா விருப்பங்களையும்; காம-துக் – அளிப்பவர்.
படைப்பின் ஆரம்பத்தில், மனித குலங்களையும் தேவர்களையும் விஷ்ணுவிற்கான யாகங்களுடன் சேர்த்து அனுப்பிய பிரஜாபதி, “யாகங்களைச் செய்து சுகமாக இருங்கள்; ஏனெனில், மகிழ்ச்சியான வாழ்விற்கும் முக்திக்கும் தேவையான அனைத்தும் இந்த யாகங்களால் அடையப்பெறும்” என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தார்.
ப.கீ 3.11
தேவான் பாவயதானேன தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரம் அவாப்ஸ்யத
தேவான் – தேவர்கள்; பாவயதா — மகிழ்வடைந்து; அனேன — இந்த யாகங்களால்; தே – அந்த; தேவா: – தேவர்கள்; பாவயந்து — மகிழ்விப்பர்; வ: – உங்களை; பரஸ்பரம் – ஒருவரையொருவர்; பாவயந்த – மகிழ்வித்து; ஷ்ரேய – நலத்தை; பரம் – உயர்ந்த; அவாப்ஸ்யத: – நீங்கள் அடைவீர்கள்.
யாகங்களால் மகிழ்ச்சியடையும் தேவர்கள் உங்களையும் மகிழ்விப்பர். மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடையேயான இத்தகு ஒத்துழைப்பினால், அனைவரும் உயர்ந்த நலமுடன் வாழலாம்.
ப.கீ 3.12
இஷ்டான் போகான் ஹி வோ தேவா தாஸ்யந்தே யக்ஞ-பாவிதா:
தைர் தத்தான் அப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ஸ:
இஷ்டான் — ஆசைப்பட்ட; போகான் — வாழ்க்கைத் தேவைகள்; ஹி – நிச்சயமாக; வ: – உங்களுக்கு; தேவ: – தேவர்கள்; தாஸ்யந்தே – அளிப்பர்; யஜ்ஞ-பாவிதா: – யாகங்களால் திருப்தியடைந்து; தை: – அவர்களால்; தத்தான் – அளிக்கப்பட்டதை; அப்ரதாய — படைக்காமல்; ஏப்ய: – அந்த தேவர்களுக்கு; ய: – எவனொருவன்; புங்க்தே – அனுபவிக்கின்றானோ; ஸ்தேன: – திருடன்; ஏவ – நிச்சயமாக; ஸ: – அவன்.
பல்வேறு வாழ்க்கைத் தேவைகளின் அதிகாரிகளான தேவர்கள், யாகங்களால் திருப்தியடைந்து உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் அளிக்கின்றனர். இத்தகு அன்பளிப்புகளை பதிலுக்கு அவர்களுக்குப் படைக்காமல் அனுபவிப்பவன் நிச்சயமாக திருடனேயாவான்.
ப.கீ 3.13
யக்ஞ-ஷிஷ்டாஷின: ஸந்தோ முச்யந்தே ஸர்வ-கில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசன்த்-யாத்ம-காரணாத்
யஜ்ஞ-ஷிஷ்ட – யாக மீதியை; அஷின: – உண்போர்; ஸந்த: – பக்தர்கள்; முச்யந்தே – விடுபடுகின்றனர்; ஸர்வ – எல்லாவிதமான, கில்பிஷை: -பாவங்களிலிருந்து; புஞ்ஜதே – அனுபவிக்கும்; தே – அவர்கள்; து – ஆனால்; அகம் – கொடிய பாவங்கள்; பாபா: – பாவிகள்; யே – யார்; பசந்தி – உணவு தயாரிப்பவர்; ஆத்ம-காரணாத் — புலனின்பத்திற்காக.
யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்பதால், பகவானின் பக்தர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்களது சுய புலனின்பத்திற்காக உணவு தயாரிப்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள்.
ப.கீ 3.14
அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன்யாத் அன்ன-ஸம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்ம-ஸமுத்பவ:
அன்னாத் – தானியங்களிலிருந்து; பவந்தி – வளர்கின்றன; பூதானி — பௌதிக உடல்கள்; பர்ஜன்யாத் – மழையிலிருந்து; அன்ன – உணவுத் தானியங்கள்; ஸம்பவ: – உண்டாக்கப்படுகின்றன; யஜ்ஞாத் — யாகங்களைச் செய்வதிலிருந்து; பவதி – சாத்தியமாகிறது; பர்ஜன்ய – மழை; யஜ்ஞ: – யாகங்கள்; கர்ம – விதிக்கப்பட்ட கடமைகள்; ஸமுத்பவ: – பிறந்த.
மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. யாகத்தால் மழையும், விதிக்கப்பட்ட கடமைகளால் யாகமும் உண்டாக்கப் படுகின்றன.
ப.கீ 3.15
கர்ம ப்ரஹ்மோத் பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர-ஸமுத்பவம்
தஸ்மாத் ஸர்வ-கதம் ப்ரஹ்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம்
கர்ம – செயல்; ப்ரஹ்ம – வேதங்களிலிருந்து; உத்பவம் — உண்டாகிறது; வித்தி – நீ அறிய வேண்டும்; ப்ரஹ்ம – வேதங்கள்; அக்ஷர – பரபிரம்மனிலிருந்து (முழுமுதற் கடவுளிடமிருந்து); ஸமுத்பவம் – நேரடியாகத் தோன்றுகின்றன; தஸ்மாத் – எனவே; ஸர்வ-கதம் – எங்கும் நிறைந்துள்ள; ப்ரஹ்ம – உன்னதம்; நித்யம் – நித்தியமாக; யஜ்ஞே – யாகத்தில்; ப்ரதிஷ்டிதம் — வீற்றுள்ளார்.
விதிக்கப்பட்ட கடமைகள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. வேதங்கள் நேரடியாக முழுமுதற் கடவுளிடமிருந்து தோன்றியவை. எனவே, எங்கும் பரவியுள்ள முழுமுதற் கடவுள், எல்லா யாகங்களிலும் நித்தியமாக வீற்றுள்ளார்.
ப.கீ 3.16
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நானுவர்தயதீஹ ய:
அகாயுர் இந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி
ஏவம் – இவ்வாறாக; ப்ரவர்திதம் – வேதங்களில் நிலைநாட்டப்பட்ட; சக்ரம் — சக்கரம்; ந – இல்லை; அனுவர்தயதி – கடைப்பிடித்தல்; இஹ – இவ்வாழ்வில்; ய: – யாரொருவர்; அக-ஆயு: – பாவம் நிறைந்த வாழ்வு வாழ்பவன்; இந்த்ரிய-ஆராம: – புலனுகர்ச்சியில் திருப்தியுற்று; மோகம் – பலனின்றி; பார்த – பிருதாவின் மகனே (அர்ஜுனா); ஸ: — அவன்; ஜீவதி – வாழ்கிறான்.
எனதன்பு அர்ஜுனா, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள இத்தகைய யாக சக்கரத்தை இம்மனித வாழ்வில் கடைப் பிடிக்காதவன், முற்றிலும் பாவகரமான வாழ்க்கை வாழ்கிறான். புலன்களின் திருப்திக்காக மட்டும் வாழ்பவனின் வாழ்வு பலனற்றதாகும்.
ப.கீ 3.17
யஸ் த்வாத்ம-ரதிர் ஏவ ஸ்யாத் ஆத்ம-த்ருப்தஷ் ச மானவ:
ஆத்மன்-யேவ ச ஸந்துஷ்டஸ் தஸ்ய கார்யம் ந வித்யதே
ய: – யாரெருவன்; து – ஆனால்; ஆத்ம-ரதி – தன்னில் மகிழ்கிறானோ; ஏவ – நிச்சயமாக; ஸ்யாத் – இருக்கிறான்; ஆத்ம-திரு’ப்த: – ஆத்ம திருப்தியுற்று; ச – மேலும்; மானவ: – மனிதன்; ஆத்மனி – தன்னில்; ஏவ – மட்டும்; ச – மேலும்; ஸந்துஷ்ட: – பூரணமாக இருத்தல்; தஸ்ய – அவனுக்கு; கார்யம் – கடமை; ந -இல்லை; வித்யதே – இருப்பது.
ஆனால், மனிதப் பிறவியை தன்னுணர்விற்காக உபயோகித்து, தன்னில் மகிழ்ந்து தன்னிலே திருப்தி கொண்டு, தன்னில் பூரணமாக இருப்பவனுக்குக் கடமைகள் ஏதுமில்லை.
ப.கீ 3.18
நைவ தஸ்ய க்ருதேனார்தோ நாக்ருதேனேஹ கஷ்சன
ந சாஸ்ய ஸர்வ-பூதேஷு கஷ்சித் அர்த-வ்யபாஷ்ரய:
ந – என்றுமில்லை; ஏவ – நிச்சயமாக; தஸ்ய – அவனது; க்ரு’தேன — கடமையைச் செய்வதால்; அர்த: – நோக்கம்; ந – இல்லை; அக்ருதேன கடமையைச் செய்யாதிருத்தல்; இஹ – இவ்வுலகில்; கஷ்சன — ஏதாயினும்; ந – என்றுமில்லை; ச – மேலும்; அஸ்ய — அவனது; ஸர்வ-பூதேஷு – எல்லா உயிர்களிலும்; கஷ்சித் – ஏதாவது; அர்த – நோக்கம்; வ்யபாஷ்ரய: – அடைக்கலம் புகுதல்.
தன்னை உணர்ந்தவனுக்கு, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதால் அடைய வேண்டிய நோக்கம் ஏதுமில்லை, இத்தகைய கடமைகளைச் செய்யாதிருக்கும் அவசியமும் இல்லை. மற்ற ஜீவன்களை எதற்கும் நம்பியிருக்க வேண்டியதும் இல்லை.
ப.கீ 3.19
தஸ்மாத் அஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரன் கர்ம பரம் ஆப்னோதி பூருஷ:
தஸ்மாத் – எனவே; அஸக்த: – பற்றின்றி; ஸததம் — எப்போதும்; கார்யம் – கடமையாக: கர்ம – செயலை; ஸமாசர – செய்வாயாக; அஸக்த: – பற்றின்மையோடு; ஹி – நிச்சயமாக; ஆசரன் – செய்வதால்; கர்ம – செயல்; பரம் — பரத்தை; ஆப்னோதி — அடைகிறான்; பூருஷ: – மனிதன்.
எனவே, செயலின் பலன்களில் பற்றுதல் கொள்ளாமல், கடமைக்காகச் செயல்படுவாயாக. பற்றின்றிச் செயலாற்றுவதால் ஒருவன் பரத்தை அடைகிறான்.
ப.கீ 3.20
கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய:
லோக-ஸங்க்ரஹம் ஏவாபி ஸம்பஷ்யன் கர்தும் அர்ஹஸி
கர்மணா – செயலால்; ஏவ – கூட; ஹி – நிச்சயமாக; ஸம்’ஸித்திம் — பக்குவத்தில்; ஆஸ்திதா: – நிலைபெற்றனர்; ஜனக-ஆதய: – ஜனகரைப் போன்ற மன்னர்கள்; லோக-ஸங்க்ரஹம் – பொதுமக்கள்; ஏவ அபி – மேலும்; ஸம்பஷ்யன் — கருதி; கர்தும் – செயல்பட; அர்ஹஸி – வேண்டியவன் நீ.
ஜனகரைப் போன்ற மன்னர்களும் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்ததன் மூலமாகவே பக்குவமடைந்தனர். எனவே, பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காகவாவது நீ உன்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும்.
ப.கீ 3.21
யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ் தத் தத் ஏவேதரோ ஜன:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்ததே
யத் யத் – எதையெல்லாம்; ஆசரதி – செய்கின்றானோ; ஷ்ரேஷ்ட: – மரியாதைக்குரிய தலைவர்; தத் – அதையே; தத் – அதை மட்டுமே; ஏவ – நிச்சயமாக; இதர: — பொது; ஜன: – மக்கள்; ஸ: – அவன்; யத் – எதனை; ப்ரமாணம் – உதராணமாக; குருதே – செய்கின்றானோ; லோக: – உலகம் முழுவதும்; தத் – அதையே; அனுவர்ததே – பின்பற்றுகிறது.
பெரிய மனிதன் எத்தகைய செயல்களைச் செய்கின்றானோ, அதையே பொதுமக்களும் பின்பற்றுகின்றனர். தன் செயல்களால் எந்தத் தரத்தை அவன் உவமை அமைத்துக் காட்டுகின்றானோ அதையே உலகம் முழுதும் பின்பற்றுகின்றது.
ப.கீ 3.22
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன
நானவாப்தம் அவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி
ந – ஏதுமில்லை; மே – எனது; பார்த: – பிருதாவின் மகனே; அஸ்தி – இருக்கிறது; கர்தவ்யம் – விதிக்கப்பட்ட கடமை; த்ரிஷு – மூன்று; லோகேஷு — உலகங்களிலும்; கிஞ்சன – எதுவும்; ந – இல்லை; அனவாப்தம் – தேவையானது; அவாப்தவ்யம் – அடைய வேண்டியது; வர்தே – நான் ஈடுபட்டுள்ளேன்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்: கர்மணி – விதிக்கப்பட்ட கடமையில்.
பிருதாவின் மகனே, மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்.
ப.கீ 3.23
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்-யதந்த்ரித:
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வஷ:
யதி – ஆயினும்; ஹி – நிச்சயமாய்; அஹம் – நான்; ந – இல்லையேல்; வாதேயம் – ஈடுபட; ஜாது — எப்போதும்; கர்மணி — விதிக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில்; அதந்த்ரித: – பெரும் கவனத்தோடு; மம – என்னுடைய; வர்த்ம – பாதை; அனுவர்தந்தே – பின்புற்றும்; மனுஷ்யா – மனிதரெல்லாம்; பார்த — பிருதாவின் மகனே; ஸர்வஷ: – எல்லாவிதத்திலும்.
ஏனெனில், விதிக்கப்பட்ட கடமைகளை கவனத்துடன் செயலாற்ற நான் எப்பொழுதாவது தவறினால், மனிதரெல்லாம் நிச்சயமாக என் பாதையையே பின்பற்றுவர்.
ப.கீ 3.24
உத்ஸீதேயுர் இமே லோகா ந குர்யாம் கர்ம சேத் அஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாம் உபஹன்யாம் இமா: ப்ரஜா:
உத்ஸீதேயு: – சீரழிந்துவிடும்; இமே – இவ்வெல்லா; லோகா: – உலகங்கள்; ந – இல்லை; குர்யாம் — நான் செய்ய; கர்ம – விதிக்கப்பட்ட கடமைகள்; சேத் —ஆயின்; அஹம் – நான்; ஸங்கரஸ்ய — தேவையற்ற ஜனத்தொகையை; ச – மேலும்; கர்தா — படைப்பவன்; ஸ்யாம் – ஆவேன்; உபஹன்யாம் – அழிந்துவிடும்; இமா: – இவ்வெல்லா; ப்ரஜா: – உயிர்வாழிகள்.
நான் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாவிடில், இந்த உலகங்களெல்லாம் சீரழிந்துவிடும். தேவையற்ற ஜனங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடுவேன். அதன் மூலம் எல்லா உயிர்வாழிகளின் அமைதியையும் அழித்தவனாகி விடுவேன்.
ப.கீ 3.25
ஸக்தா: கர்மண்-யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத் வித்வாம்ஸ் ததா ஸக்தஷ் சிகீர்ஷுர் லோக-ஸங்க்ரஹம்
ஸக்தா: – பற்றுக்கொண்டு; கர்மணி — விதிக்கப்பட்ட கடமைகளில்; அவித்வாம்’ஸ: – அறியதோர்; யதா – அதுபோல; குர்வந்தி – செய்கின்றனர்; பாரத – பரத குலத் தோன்றலே; குர்யாத் – செய்தாக வேண்டும்; வித்வான் — அறிஞர்; ததா – இவ்வாறே; அஸக்த: – பற்றற்று; சிகீர்ஷு: — வழிநடத்தும் விருப்பத்துடன்; லோக-ஸங்க்ரஹம் — பொதுமக்களை.
பலனில் பற்றுதல் கொண்டுள்ள அறிவற்றவன் தனது கடமையைச் செய்வதைப் போலவே, அறிஞரும் கடமையைச் செயலாற்றலாம்; ஆனால் பற்றுதல் ஏதுமின்றி, பொதுமக்களை சரியான பாதையில் வழிநடத்துவதற்காகவே அது செய்யப்படுகிறது.
ப.கீ 3.26
ந புத்தி-பேதம் ஜனயேத் அக்ஞானாம் கர்ம-ஸங்கினாம்
ஜோஷயேத் ஸர்வ-கர்மாணி வித்வான் யுக்த: ஸமாசரன்
ந – இல்லை; புத்தி-பேதம் – அறிவைக் குழப்புதல்; ஜனயேத் – அவன் செய்ய வேண்டும்; அஜ்ஞானாம் – முட்டாளின்; கர்ம-ஸங்கினாம் – பலன் நோக்குச் செயல்களில் பற்றுள்ளோர்; ஜோஷயேத் – அவன் இணைக்க வேண்டும்; ஸர்வ – எல்லா; கர்மாணி — செயல்; வித்வான் – வித்வான்; யுக்த: – ஈடுபடுத்தி; ஸமாசரன் – பயின்று.
விதிக்கப்பட்ட கடமைகளின் பலன்களில் பற்றுக் கொண்டுள்ள அறிவற்றவர்களின் மனதை, அறிஞர்கள் குழப்பக் கூடாது, செயலிலிருந்து விலகுவதற்கு ஊக்குவிக்கக் கூடாது. மாறாக, பக்தி உணர்வுடன் செயல்படுவதன் மூலம், எல்லாவித செயல்களிலும் (கிருஷ்ண உணர்வின் படிப்படியான முன்னேற்றத்திற்காக) அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
ப.கீ 3.27
ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷ:
அஹங்கார–விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே
ப்ரக்ருதே: – ஜட இயற்கையின்; க்ரியமாணானி — செய்யப்படும்; குணை: – குணங்களினால்; கர்மாணி – செயல்கள்; ஸர்வஷ: – எல்லா விதமான; அஹங்கார-விமூட – அஹங்காரத்தினால் குழம்பிய; ஆத்மா – ஆன்மீக ஆத்மா; கர்தா – செய்பவன்; அஹம் – நானே; இதி – என்று; மன்யதே – எண்ணுகிறான்.
அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா, பௌதிக இயற்கையின் முக்குணங்களால் நடைபெறும் செயல்களுக்குத் தன்னையே கர்த்தா என்று எண்ணிக் கொள்கிறான்.
ப.கீ 3.28
தத்த்வ-வித் து மஹா-பாஹோ குண-கர்ம-விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே
தத்த்வ-வித் – பூரண சத்தியத்தை அறிந்தவர்; து – ஆனால்; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையோனே; குண-கர்ம – பௌதிக தாக்கத்திற்கு உட்பட்ட செயல்கள்; விபாகயோ: – வேறுபாடுகள்; குணா — புலன்கள்; குணேஷு – புலனுகர்ச்சியில்; வர்தந்தே – ஈடுபடுத்தப்பட்டுள்ளது; இதி – இவ்வாறாக; மத்வா – எண்ணி; ந – ஒரு போதும் இல்லை; ஸஜ்ஜதே – பற்றுக்கொள்வது.
பலம் பொருந்திய புயங்களை உடையோனே, பக்தியில் செயல்படுதல் மற்றும் பலனை நோக்கிச் செயல்படுதல் இவற்றின் வேறுபாட்டை நன்கு அறிந்திருப்பதால், பூரண உண்மையின் ஞானமுடையவன், புலன்களிலும் புலனுகர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.
ப.கீ 3.29
ப்ரக்ருதேர் குண-ஸம்மூடா: ஸஜ்ஜந்தே குண-கர்மஸு
தான் அக்ருத்ஸ்ன-விதோ மன்தான் க்ருத்ஸ்ன-வின் ந விசாலயேத்
ப்ரக்ருதே: – ஜட இயற்கையின்; குண — குணங்களால்; ஸம்மூடா: – பௌதிக அடையாளத்தால் முட்டாளானவன்; ஸஜ்ஜந்தே – அவர்கள் ஈடுபடுவர்களாகின்றனர்; குண-கர்மஸு – ஜடச் செயல்களில்; தான் – அந்த; அக்ரு’த்ஸ்ன-வித: – சிற்றறிவினர்; மந்தான் – தன்னுணர்வை அறிவதில் சோம்பல்படுபவர்; க்ரு’த்ஸ்ன-வித் – உண்மை ஞானத்தில் இருப்பவன்; ந -கூடாது; விசாலயேத் – கிளர்ச்சியடைய முயற்சி செய்ய.
ஜட இயற்கையின் குணங்களால் மதிமயங்கிய அறிவற்றோர், லௌகீகச் செயல்களில் முழுமையாக ஈடுபட்டு பற்றுடையோராகின்றனர். குறைவான அறிவுடன் செய்யப்படுவதால் இத்தகைய கடமைகள் கீழ்த்தரமானவை என்றபோதிலும், அறிவுடையோர் அவர்களை நிலைபிறழச் செய்யக் கூடாது.
ப.கீ 3.30
மயி ஸர்வாணி கர்மாணி ஸன்ன்யஸ்யாத் யாத்ம-சேதஸா
நிராஷீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகத-ஜ்வர:
மயி – என்னிடம்; ஸர்வாணி — எல்லா விதமான; கர்மாணி – செயல்கள்; ஸன்ன்யஸ்ய – முழுவதுமாக விட்டொழித்து; அத்யாத்ம — தன்னைப் பற்றிய முழு அறிவுடன்; சேதஸா – உணர்வினால்; நிராஷீ: – பலனில் விருப்பம் இல்லாமல்; நிர்மம: – உரிமை உணர்வின்றி; பூத்வா – இவ்வாறாக; யுத்யஸ்வ – போரிடுவாய்; விகத-ஜ்வர: – மனத்தளர்ச்சியை விட்டு.
எனவே, அர்ஜுனா, என்னைப் பற்றிய முழு அறிவுடன், உனது எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, பலனில் ஆசைகளின்றி, உரிமையுணர்வையும், மனத்தளர்ச்சியையும் கைவிட்டுப் போரிடுவாயாக.
ப.கீ 3.31
யே மே மதம் இதம் நித்யம் அனுதிஷ்டந்தி மானவா:
ஷ்ரத்தாவந்தோ (அ)னஸூயந்தோ முச்யந்தே தே (அ)பி கர்மபி:
யே – எவனொருவன்; மே – என்னுடைய; மதம் – கட்டளைகளை; இதம் – இந்த; நித்யம் – நித்திய செயலாக; அனுதிஷ்டந்தி – நிறைவேற்றுகிறானோ; மானவா: – மனிதர்கள்; ஷ்ரத்தா-வந்த: – நம்பிக்கையுடனும், பக்தியுடனும்; அனஸூயந்த: – பொறாமையின்றி; முச்யந்தே – விடுதலை பெறுவான்; தே – அவையனைத்தும்; அபி – கூட; கர்மபி: – பலன்நோக்குச் செயல்களின் பந்தத்திலிருந்து.
யாரெல்லாம் என்னுடைய இந்த அறிவுரைகளின்படி தங்களது கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ, யாரெல்லாம் இவற்றை பொறாமையின்றி நம்பிக்கையுடன் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் பலன்நோக்குச் செயல்களின் பந்தத்திலிருந்து விடுதலை அடைகின்றனர்.
ப.கீ 3.32
யே த்வேதத் அப்யஸூயந்தோ நானுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வ-க்ஞான-விமூடாம்ஸ் தான் வித்தி நஷ்டான் அசேதஸ:
யே – எவர்; து – இருப்பினும்; ஏதத் – இந்த; அப்யஸூயந்த: — பொறாமையால்; ந – இல்லையோ; அனுதிஷ்டந்தி — முறையாகச் செய்வது; மே – என்னுடைய; மதம் – அறிவுரைகள்: ஸர்வ-ஜ்ஞான – எல்லா வகை ஞானத்திலும்; விமூடான் — அடிமட்ட முட்டாள்; தான் — அவர்கள்; வித்தி – தெளிவாக அறிவாயாக; நஷ்டான் – நஷ்டமடைந்து; அசேதஸ: – கிருஷ்ண உணர்வின்றி.
ஆனால், யாரெருவன் பொறாமையினால் இந்த அறிவுரைகளை அவமதித்து, அவற்றை முறையாகப் பின்பற்றத் தவறுகிறானோ, அவன், எவ்வித ஞானமும் இல்லாதவனாக, முட்டாளாக, பக்குவமடைவதற்கான முயற்சிகள் அனைத்திலும் நஷ்டமடைந்தவனாகக் கருதப்படுகிறான்.
ப.கீ 3.33
ஸத்ருஷம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர் க்ஞானவான் அபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி
ஸத்ருஷம் – தகுந்தாற்போல; சேஷ்டதே – முயல்கிறான்; ஸ்வஸ்யா: – சுயமாக; ப்ரக்ருதே: – இயற்கையின் குணங்கள்; ஜ்ஞான-வான் – சான்றோன்; அபி — இருந்தாலும்; ப்ரக்ரு’திம் – இயற்கை; யாந்தி – கீழ்ப்பட்டு; பூதானி – எல்லா உயிரினங்களும்; நிக்ரஹ: – அடக்குமுறை; கிம் – என்ன; கரிஷ்யதி — செய்யக்கூடும்.
ஒவ்வொருவரும் முக்குணங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கையையே பின்பற்றுவதால், அறிவுசான்ற ஞானியும் தனது சுய இயற்கையின்படியே செயல்படுகிறான். அடக்கு முறையினால் எதனைச் சாதிக்க முடியும்?
ப.கீ 3.34
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராக-த்வேஷெள வ்யவஸ்திதௌ
தயோர் ந வஷம் ஆகச்சேத் தௌ ஹ்யஸ்ய பரிபந்தினெள
இந்த்ரியஸ்ய – புலன்களின்; இந்த்ரியஸ்ய அர்தே – புலனுகர்ச்சிப் பொருள்களில்; ராக – விருப்பு; த்வேஷௌ – வெறுப்பு; வ்யவஸ்திதௌ – கட்டுப்பாட்டில் உட்படுத்தப்பட்டு; தயோ: – அவற்றில்; ந – என்றுமில்லை; வஷம் – கட்டுப்பாடு; ஆகச்சேத் – ஒருவன் வந்துவிடுவது; தௌ – அவை; ஹி – நிச்சயமாக; அஸ்ய — அவனது; பரிபந்தினௌ – தடைக்கற்களாக.
புலன்கள் மற்றும் புலனுகர்ச்சிப் பொருள்களின் மீதான விருப்பு வெறுப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு விதிமுறைகள் உள்ளன. அத்தகு விருப்பு வெறுப்புகளின் கட்டுப்பாட்டில் ஒருவன் வந்து விடக்கூடாது; ஏனெனில், தன்னுணர்வுப் பாதையில் இவை தடைக் கற்களாகும்.
ப.கீ 3.35
ஷ்ரேயான் ஸ்வ-தர்மோ விகுண: பர-தர்மாத் ஸ்வனுஷ்டிதாத்
ஸ்வ-தர்மே நிதனம் ஷ்ரேய: பர-தர்மோ பயாவஹ:
ஷ்ரேயான் – மிக நன்று; ஸ்வ-தர்ம: – ஒருவனுக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகள்; விகுண: – குற்றங்கள் இருந்தாலும்; பர-தர்மாத் – மற்றவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை விட; ஸு-அனுஷ்டிதாத் – நன்றாகச் செய்வதில்; ஸ்வ-தர்மே – ஒருவனுக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளில்; நிதனம் – அழிவு; ஷ்ரேய: – நன்று; பர-தர்ம: – பிறருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள; பய-ஆவஹ – அபாயகரமானது.
பிறருடைய கடமைகளை நன்றாகச் செய்வதைவிட, குற்றங்கள் இருப்பினும் தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வது சிறந்தது. பிறருடைய பாதையைப் பின்பற்றுதல் அபாயகரமானது என்பதால், பிறரது கடமைகளில் ஈடுபடுவதைவிட, தனக்கென்று உள்ள கடமையைச் செய்யும் போது அழிவடைவதும் சிறந்ததாகும்.
ப.கீ 3.36
அர்ஜுன உவாச
அத கேன ப்ரயுக்தோ (அ)யம் பாபம் சரதி பூருஷ:
அனிச்சன்ன் அபி வார்ஷ்ணேய பலாத் இவ நியோஜித:
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; அத — இருப்பின்; கேன – எதனால்; ப்ரயுக்த: – தூண்டப்படுகிறான்; அயம் – ஒருவன்; பாபம் — பாவங்கள்; சரதி —செய்கிறான்; பூருஷ: – மனிதன்; அனிச்சன் – விருப்பமின்றி; அபி – இருந்தாலும்; வார்ஷ்ணேய – விருஷ்ணி குலத்தவரே; பலாத் – பலவந்தமாக; இவ — போல; நியோஜித: – ஈடுபடுத்தப்படுவது.
அர்ஜுனன் கூறினான்: விருஷ்ணி குலத்தவரே, விருப்பமில்லாவிட்டாலும், பலவந்தமாக ஈடுபடுத்தப்படுவதுபோல, ஒருவன் பாவ காரியங்களைச் செய்ய எதனால் தூண்டப்படுகிறான்?
ப.கீ 3.37
ஸ்ரீ-பகவான் உவாச
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ-குண-ஸமுத்பவ:
மஹாஷனோ மஹா-பாப்மா வித்த்-யேனம் இஹ வைரிணம்
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; காம: – காமம்; ஏஷ: – இந்த; க்ரோத – கோபம்; ஏஷ: – இந்த; ரஜ: குண – ரஜோ குணம்; ஸமுத்பவ:- பிறக்கும்; மஹா-அஷன: – எல்லாவற்றையும் அழிக்கும்; மஹா- பாப்மா – மகா பாவம்; வித்தி – அறிவாய்; ஏனம் — இது; இஹ – பௌதிக உலகில்; வைரிணம் — மிகப்பெரிய விரோதி.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அர்ஜுனா, காமமே இதற்குக் காரணம். ரஜோ குணத்தில் உற்பத்தியாகி, பின்னர் கோபமாக உருவெடுக்கும் இஃது இவ்வுலகின் எல்லாவற்றையும் அழிக்கும் பாவகரமான விரோதியாகும்.
ப.கீ 3.38
தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதா தர்ஷோ மலேன ச
யதோல்பேனாவ்ருதோ கர்பஸ் ததா தேனேதம் ஆவ்ருதம்
தூமேன – புகையால்; ஆவ்ரியதே – மறைக்கப்படுவது; வஹ்னி: – நெருப்பு; யதா – போலவே; ஆதர்ஷ: – கண்ணாடி; மலேன – தூசியால்; ச – மேலும்; யதா – போலவே; உல்பேன – கருப்பையால்; ஆவ்ரு’த: – மறைக்கப்படுவது; கர்ப: – கரு; ததா – அதே போல; தேன – இந்தக் காமத்தால்; இதம் – இது; ஆவ்ரு’தம் – மறைக்கப்படுகிறது.
எவ்வாறு நெருப்பு புகையாலும் கண்ணாடி தூசியாலும் கரு கருப்பையாலும் மறைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே, காமத்தின் பல்வேறு நிலைகளினால் உயிர்வாழிகளும் மறைக்கப்பட்டுள்ளனர்.
ப.கீ 3.39
ஆவ்ருதம் க்ஞானம் ஏதேன க்ஞானினோ நித்ய–வைரிணா
காம-ரூபேண கௌந்தேய துஷ்பூரேணானலேன ச
ஆவ்ருதம் – மறைக்கப்பட்ட; ஜ்ஞானம் – தூய உணர்வு; ஏதேன – இதனால்; ஜ்ஞானின: – அறிபவனின்; நித்ய-வைரிணா — நித்திய எதிரியால்; காம-ரூபேண — காமத்தின் வடிவில்; கௌந்தேய – குந்தி மகனே; துஷ்பூரேண – என்றும் திருப்தி பெறாத; அனலேன – நெருப்பால்; ச – மேலும்.
இவ்வாறாக அறிவுடைய ஜீவனின் தூய உணர்வு, என்றும் திருப்தியடையாததும் நெருப்பு போன்று எரிவதுமான காமத்தின் உருவிலான அவனது நித்திய எதிரியால் மறைக்கப்படுகின்றது.
ப.கீ 3.40
இந்த்ரியாணி மனோ புத்திர் அஸ்யாதிஷ்டானம் உச்யதே
ஏதைர் விமோஹயத்-யேஷ க்ஞானம் ஆவ்ருத்ய தேஹினம்
இந்த்ரியாணி — புலன்கள்; மன: – மனம்; புத்தி: — புத்தி; அஸ்ய — இந்த காமத்தின்; அதிஷ்டானம் — அமரும் இடம்; உச்யதே – அழைக்கப்படுகின்றது; ஏதை: – இவ்வெல்லாவற்றினால்; விமோஹயதி – மயக்குகின்றன; யேஷ: – இந்த காமம்; ஜ்ஞானம் – அறிவு; ஆவ்ரு’த்ய – மறைக்கின்ற; தேஹினம் – உடலை உடையவனின்.
புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும். இவற்றின் மூலம், ஜீவனின் உண்மையறிவை மறைத்து காமம் அவனை மயக்குகின்றது.
ப.கீ 3.41
தஸ்மாத் த்வம் இந்த்ரியாண்-யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் க்ஞான-விக்ஞான-நாஷனம்
தஸ்மாத் – எனவே; த்வம் – நீ; இந்த்ரியாணி — புலன்கள்; ஆதௌ — ஆரம்பத்தில்; நியம்ய – ஒழுங்குபடுத்தி; பரத-ரு’ஷப – பரத குலத்தோரில் தலைசிறந்தவனே; பாப்மானம் — பாவத்தின் பெரும் சின்னம்; ப்ரஜஹி – களைந்துவிடு; ஹி – நிச்சயமாக; ஏனம் — இந்த; ஜ்ஞான — அறிவின்; விஜ்ஞான – தூய ஆத்மாவின் விஞ்ஞானத்தையும்; நாஷனம் – அழிப்பவர்.
எனவே, பரத குலத்தோரில் தலைசிறந்த அர்ஜுனா, புலன்களை ஒழுங்குபடுத்துவதால் பாவத்தின் பெரும் சின்னமான இந்த காமத்தை ஆரம்பத்திலேயே அடக்கி, ஞானத்தையும் தன்னுணர்வையும் அழிக்கும் இந்த எதிரியை அறவே ஒழித்து விடுவாயாக.
ப.கீ 3.42
இந்த்ரியாணி பராண்-யாஹுர் இந்த்ரியேப்ய: பரம் மன:
மனஸஸ் து பரா புத்திர் யோ புத்தே: பரதஸ் து ஸ:
இந்தரியாணி — புலன்கள்; பராணி — உயர்ந்தவை; ஆஹு: – கூறப்படுகின்றது; இந்த்ரியேப்ய: – புலன்களைவிட; பரம் – உயர்ந்தது; மன: – மனம்; மனஸ: -மனதை விட; து – மேலும்; பரா – உயர்ந்தது; புத்தி: – புத்தி; ய: — யார்; புத்தே -புத்தியைவிட; பரத: — உயர்ந்தது; து — ஆனால்; ஸ: – அவன்.
செயலாற்றக்கூடிய புலன்கள், ஜடப்பொருளைவிட உயர்ந்தவை, மனம் புலன்களைவிட உயர்ந்தது; புத்தி மனதைவிடவும் உயர்ந்தது; மேலும், அவனோ (ஆத்மாவோ) புத்தியை விடவும் உயர்ந்தவன்.
ப.கீ 3.43
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மானம் ஆத்மனா
ஜஹி ஷத்ரும் மஹா-பாஹோ காம-ரூபம் துராஸதம்
ஏவம் – இவ்வாறு; புத்தே – புத்தியை விட; பரம் – உயர்ந்தவை; புத்த்வா – அறிந்து; ஸம்ஸ்தப்ய – நிலைநிறுத்தி; ஆத்மானம் – மனம்; ஆத்மனா — தெளிவான புத்தியினால்; ஜஹி – வெற்றிக்கொள்; ஷத்ரும் – எதிரி; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையோனே; காம-ரூபம் – காமத்தின் உருவிலுள்ள; துராஸதம் – வெல்ல முடியாத.
இவ்வாறாக, ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை விட உயர்ந்தவனாக தன்னை உணர்ந்து, பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, தெளிவான ஆன்மீக புத்தியினால் (கிருஷ்ண உணர்வினால்) மனதை உறுதிப்படுத்தி, காமம் எனப்படும் திருப்திப்படுத்த முடியாத எதிரியை ஆன்மீக பலத்தினால் வெற்றிக் கொள்ள வேண்டும்.