அத்தியாயம் – 18
முடிவு - துறவின் பக்குவம்
பதம் 18.1
அர்ஜுன உவாச
ஸந்ந்யாஸஸ்ய மஹா-பாஹோ தத்த்வம் இச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ ப்ருதக் கேஷி – நிஷூதன:
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; ஸந்ந்யாஸஸ்ய – துறவறத்தின்; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையவரே; தத்த்வம் — உண்மை; இச்சாமி – விரும்புகின்றேன்; வேதிதும் – புரிந்துகொள்ள; த்யாகஸ்ய – துறவின்; ச – மற்றும்; ஹ்ரு’ஷீகேஷ – புலன்களின் அதிபதியே; ப்ரு’தக் – வெவ்வேறாக; கேஷி-நிஷூதன – கேசி அசுரனைக் கொன்றவரே.
அர்ஜுனன் கூறினான்: பலம் பொருந்திய புயங்களை உடையவரே, தியாகம் மற்றும் சந்நியாசத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள நான் விரும்புகிறேன், கேசி அசுரனைக் கொன்றவரே, புலன்களின் அதிபதியே.
பதம் 18.2
ஸ்ரீ-பகவான் உவாச
காம்யானாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது:
ஸர்வ-கர்ம-பல-த்யாகம் ப்ராஹுஸ் த்யாகம் விசக்ஷணா:
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; காம்யானாம் – ஆசையுடன்; கர்மணாம் – செயல்களின்; ந்யாஸம் – துறவு; ஸந்ந்யாஸம் – சந்நியாசம்; கவய: – சான்றோர்; விது: – அறிவர்; ஸர்வ – எல்லா; கர்ம – செயல்களின்; பல – பலன்களை; த்யாகம் – துறப்பது; ப்ராஹு: – அறியப்படுகின்றது; த்யாகம் – தியாகம்; விசக்ஷணா: – அனுபவசாலிகள்.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: ஜட ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத் துறத்தல், சந்நியாசம் என்று சான்றோர்களால் அழைக்கப்படுகின்றது. மேலும், எல்லாச் செயல்களின் பலன்களைத் துறப்பதை தியாகம் என்ற அறிஞர்கள் அழைக்கின்றனர்.
பதம் 18.3
த்யாஜ்யம் தோஷ-வத் இத்-யேகே கர்ம ப்ராஹுர் மனீஷிண:
யக்ஞ-தான-தப:-கர்ம ந த்யாஜ்யம் இதி சாபரே
த்யாஜ்யம் – துறக்கப்படுதல் அவசியம்; தோஷ-வத் – தோஷமாக; இதி – இவ்வாறு; ஏகே: – ஒரு பிரிவினர்; கர்ம – செயல்; ப்ராஹு: – கூறுகின்றனர்; மனீஷிண: – சிறந்த சிந்தனையாளர்கள்; யஜ்ஞ – யாகம்; தான – தானம்; தப: – மற்றும் தவத்தின்; கர்ம – செயல்கள்; ந – என்றுமில்லை; த்யாஜ்யம் – துறக்கப்படுவது; இதி – இவ்வாறு; ச – மேலும்; அபரே – பிறர்.
எல்லாவிதமான பலன்நோக்குச் செயல்களையும் தோஷமாக எண்ணி, அவற்றை துறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் அறிவிக்கின்றனர்; இருப்பினும் யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே கைவிடக் கூடாது என்று சில சாதுக்கள் கூறுகின்றனர்.
பதம் 18.4
நிஷ்சயம் ஷ்ருணு மே தத்ர த்யாகே பரத-ஸத்தம
த்யாகோ ஹி புருஷ-வ்யாக்ர த்ரி-வித: ஸம்ப்ரகீர்தித:
நிஷ்சயம் – நிச்சயமானதை; ஷ்ரு’ணு – கேள்; மே – என்னிடமிருந்து; தத்ர – அங்கே; த்யாகே – துறவின் விஷயத்தில்; பரத-ஸத்-தம – பாரதர்களில் சிறந்தவனே; த்யாக: – துறவு; ஹி – நிச்சயமாக; புருஷ-வ்யாக்ர – மனிதர்களில் புலியைப் போன்றவனே; த்ரி-வித: – மூன்று விதமாக; ஸம்ப்ரகீர்தித: – அறிவிக்கப்படுகின்றன.
பாரதர்களில் சிறந்தவனே, தியாகத்தைப் பற்றிய எனது முடிவை தற்பொழுது கேள். மனிதர்களில் புலி போன்றவனே, சாஸ்திரங்களில் மூன்று விதமான தியாகம் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதம் 18.5
யக்ஞ-தான-தப:-கர்ம ந த்யாஜ்யம் கார்யம் ஏவ தத்
யக்ஞோ தானம் தபஷ் சைவ பாவனானி மனீஷிணாம்
யஜ்ஞ – யாகம்; தான – தானம்; தப: – மற்றும் தவத்தின்; கர்ம – செயல்கள்; ந – என்றுமில்லை; த்யாஜ்யம் – துறக்கப்பட வேண்டியது; கார்யம் – செய்யப்பட வேண்டும்; ஏவ – நிச்சயமாக; தத் – அந்த; யஜ்ஞ: – யாகம்; தானம் – தானம்; தப: – தவம்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; பாவனானி – தூய்மைப்படுத்துகின்ற; மனீஷிணாம் – சிறந்த ஆத்மாக்களைக்கூட.
யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே துறக்கக் கூடாது; அவற்றை செய்ய வேண்டியது அவசியம். உண்மையில் யாகம், தானம், தவம் ஆகியவை மிகச்சிறந்த ஆத்மாக்களையும்கூட தூய்மைப்படுத்துகின்றன.
பதம் 18.6
ஏதான்-யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலானி ச
கர்தவ்யானீதி மே பார்த நிஷ்சிதம் மதம் உத்தமம்
ஏதானி – இவையெல்லாம்; அபி – நிச்சயமாக; து – ஆனால்; கர்மாணி – செயல்கள்; ஸங்கம் – தொடர்பு; த்யக்த்வா — துறந்து; பலானி – விளைவுகளை; ச – மேலும்; கர்தவ்யானி – கடமையாக; இதி – இவ்வாறு; மே – எனது; பார்த -பிருதாவின் மகனே; நிஷ்சிதம் – நிச்சயமான; மதம் – அபிப்பிராயம்; உத்தமம் – மிகச்சிறந்த.
இத்தகு செயல்கள் அனைத்தும், பற்றுதலின்றி, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் செய்யப்படவேண்டும். இவற்றை ஒரு கடமையாகச் செய்ய வேண்டும், பிருதாவின் மைந்தனே, இதுவே எனது முடிவான அபிப்பிராயம்.
பதம் 18.7
நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத் தஸ்ய பரித்யாகஸ் தாமஸ: பரிகீர்தித:
நியதஸ்ய: – விதிக்கப்பட்டவை; து – ஆனால்; ஸந்ந்யாஸ: – துறவு; கர்மண: – செயல்களின்; ந – என்றுமில்லை; உபபத்யதே – தகுதியுடைய; மோஹாத் – மயக்கத்தால்; தஸ்ய – அவற்றின்; பரித்யாக: – துறவு; தாமஸ: – தமோ குணத்தில்; பரிகீர்தித: – அறிவிக்கப்படுகிறது.
விதிக்கப்பட்ட கடமைகளை என்றுமே துறக்கக் கூடாது. ஆனால், மயக்கத்தினால் ஒருவன் தன்னுடைய கடமைகளைத் துறந்தால், அத்தகு துறவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.8
து:கம் இத்-யேவ யத் கர்ம காய-க்லேஷ-பயாத் த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாக-பலம் லபேத்
து:கம் – துக்கம்; இதி – இவ்வாறு; ஏவ – நிச்சயமாக; யத் – எந்த; கர்ம – செயல்; காய – உடலுக்கு; க்லேஷ – தொல்லை; பயாத் – பயத்தால்; த்யஜேத் – துறக்கப்படுவது; ஸ: – அவன்; க்ரு’த்வா – செய்தபின்; ராஜஸம் – ரஜோ குணத்தில்; த்யாகம் – துறவு; ந – இல்லை; ஏவ – நிச்சயமாக; த்யாக — துறவின்; பலம் — பலன்களை; லபேத் – அடைவது.
தொல்லை நிறைந்தவை என்று கருதியோ, உடல் அசெளகரியத்திற்கான பயத்தினாலோ, விதிக்கப்பட்ட கடமைகளைத் துறப்பவன், ரஜோ குணத்தில் துறப்பதாக கூறப்படுகின்றது. அத்தகு செயல், துறவின் பலனை ஒருபோதும் வழங்க இயலாது.
பதம் 18.9
கார்யம் இத்-யேவ யத் கர்ம நியதம் க்ரியதே (அ)ர்ஜுன
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:
கார்யம் – அது செய்யப்படவேண்டும்; இதி – என்று; ஏவ – நிச்சயமாக; யத் – எந்த; கர்ம – செயல்; நியதம் – விதிக்கப்பட்ட; க்ரியதே – ஆற்றப்பட்டு; அர்ஜுன – அர்ஜுனனே; ஸங்கம் — தொடர்பு; த்யக்த்வா – துறந்து; பலம் – பலன்களை; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; ஸ: – அந்த; த்யாக: — துறவு; ஸாத்த்விக: – ஸத்வ குணத்தில்; மத: – எனது அபிப்பிராயம்.
ஓ, அர்ஜுனா, ஒருவன் தனது விதிக்கப்பட்ட கடமையை, செய்யப்பட வேண்டும் என்பதற்காகச் செய்து, பெளதிக சங்கத்தையும் பலனுக்கான பற்றுதலையும் முழுமையாக துறக்கும்போது, அவனது துறவு ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.10
ந த்வேஷ்ட்-யகுஷலம் கர்ம குஷலே நானுஷஜ்ஜதே
த்யாகீ ஸத்த்வ-ஸமாவிஷ்டோ மேதாவீ சின்ன-ஸம்ஷய:
ந – என்றுமில்லை; த்வேஷ்டி – வெறுப்பது; அகுஷலம் – அமங்கலமான; கர்ம – செயல்; குஷலே – மங்கலமான; ந – இல்லை; அனுஷஜ்ஜதே – பற்றுதல் கொண்டவனாக; த்யாகீ – துறவி; ஸத்த்வ – ஸத்வ குணத்தில்; ஸமாவிஷ்ட: – ஆழ்ந்து; மேதாவீ – அறிஞன்; சின்ன – துண்டிக்கப்பட்டு; ஸம்’ஷய: – எல்லா சந்தேகங்களும்.
ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருக்கும் புத்திசாலி துறவிகள், அமங்களமான செயல்களை வெறுப்பதில்லை, மங்களமான செயல்களில் பற்றுக் கொள்வதும் இல்லை, செயலைப் பற்றிய ஐயங்களும் அவர்களிடம் இல்லை.
பதம் 18.11
ந ஹி தேஹ-ப்ருதா ஷக்யம் த்யக்தும் கர்மாண்-யஷேஷத:
யஸ் து கர்ம-பல-த்யாகீ ஸ த்யாகீத்-யபிதீயதே
ந – என்றுமில்லை; ஹி – நிச்சயமாக; தேஹ-ப்ரு’தா – உடலை உடையவனின்; ஷக்யம் – சாத்தியம்; த்யக்தும் — துறக்கப்பட வேண்டும்; கர்மாணி – செயல்கள்; அஷேஷத: – மொத்தமாக; ய: – யாரேனும்; து – ஆனால்; கர்ம – செயலின்; பல – பலனை; த்யாகீ – துறப்பவன்; ஸ: – அவன்; த்யாகீ – துறவி; இதி – இவ்வாறு; அபிதீயதே – கூறப்படுகிறது.
உடலை உடையவன் எல்லாச் செயல்களையும் துறப்பது என்பது உண்மையில் அசாத்தியம். ஆனால் செயலின் பலன்களைத் துறப்பவன் உண்மையான துறவி என்று கூறப்படுகின்றான்.
பதம் 18.12
அனிஷ்டம் இஷ்டம் மிஷ்ரம் ச த்ரி-விதம் கர்மண: பலம்
பவத்-யத்யாகினாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸினாம் க்வசித்
அனிஷ்டம் – நரகத்திற்குக் கொண்டு செல்லும்; இஷ்டம் – ஸ்வர்கத்திற்கு கொண்டுச் செல்லும்; மிஷ்ரம் – கலந்த; ச – மற்றும்; த்ரி-விதம் – மூன்று விதமான; கர்மண: – செயல்களின்; பலம் — பலன்; பவதி — ஆகின்றது; அத்யாகினாம் — தியாகம் செய்யாதவர்கள்; ப்ரேத்ய – மரணத்திற்குப்பின்; ந – இல்லை; து – ஆனால்; ஸந்ந்யாஸினாம் – சந்நியாசிகளுக்கு; க்வசித் – எல்லா நேரத்திலும்.
இவ்வாறு தியாகம் செய்யாதவர்கள் தங்களது மரணத்திற்குப் பின், விரும்புவை, விரும்பாதவை, இரண்டும் கலந்தவை என மூன்று விதமான கர்ம விளைவுகளை சேகரித்துக் கொள்கின்றனர். ஆனால் அத்தகு இன்ப துன்பத்திற்கான பலன்கள் சந்நியாசிகளுக்குக் கிடையாது.
பதம் 18.13
பஞ்சைதானி மஹா-பாஹோ காரணானி நிபோத மே
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தானி ஸித்தயே ஸர்வ-கர்மணாம்
பஞ்ச – ஐந்து; ஏதானி – இவை; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையவனே; காரணானி – காரணங்கள்; நிபோத – புரிந்துகொள்; மே – என்னிடமிருந்து; ஸாங்க்யே – வேதாந்தத்தின்; க்ரு’த-அந்தே – முடிவில்; ப்ரோக்தானி – கூறப்படுகின்றது; ஸித்தயே – பக்குவத்திற்காக; ஸர்வ – எல்லா; கர்மணாம் – செயல்கள்.
பலம் பொருந்திய புயங்களையுடைய அர்ஜுனா, செயல்கள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கு வேதாந்தத்தின்படி ஐந்து காரணங்கள் உள்ளன. அவற்றை தற்போது என்னிடமிருந்து அறிந்துகொள்.
பதம் 18.14
அதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்-விதம்
விவிதாஷ் ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்
அதிஷ்டானம் — இடம்; ததா – கூட; கர்தா – செய்பவன்; கரணம் – கருவிகள்; ச – கூட; ப்ரு’தக்-விதம் — வெவ்வேறு விதமான; விவிதா: – பல்வேறு; ச – மற்றும்; ப்ரு’தக் – தனித்தனியான; சேஷ்டா: – முயற்சிகள்; தைவம் – பரமன்; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; அத்ர – இங்கே; பஞ்சமம் – ஐந்து.
செயலுக்கான இடம் (உடல்), செய்பவன், பல்வேறு புலன்கள், பலதரப்பட்ட முயற்சிகள், இறுதியாக பரமாத்மா—இவையே செயலுக்கான ஐந்து காரணங்களாகும்.
பதம் 18.15
ஷரீர-வாங்-மனோபிர் யத் கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ:
ஷரீர – உடல்; வாக் – பேச்சு; மனோபி: – மற்றும் மனதால்; யத் – எந்த; கர்ம – செயலை; ப்ராரபதே – தொடங்குகின்றானோ; நர: – மனிதன்; ந்யாய்யம் – சரியான; வா – அல்லது; விபரீதம் – எதிரான; வா – அல்லது; பஞ்ச – ஐந்து; ஏதே – இவையெல்லாம்; தஸ்ய – அதன்; ஹேதவ: – காரணங்கள்.
மனிதன் தன்னுடைய உடல், மனம், அல்லது வார்த்தைகளால், நல்லதோ கெட்டதோ, எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு இந்த ஐந்தும் காரணங்களாகும்.
பதம் 18.16
தத்ரைவம் ஸதி கர்தாரம் ஆத்மானம் கேவலம் து ய:
பஷ்யத்-யக்ருத-புத்தித்வான் ந ஸ பஷ்யதி துர்மதி:
தத்ர – அங்கே; ஏவம் – இவ்வாறாக; ஸதி – இருந்து; கர்தாரம் – செய்பவன்; ஆத்மானம் – தன்னை; கேவலம் – மட்டுமே; து – ஆனால்; ய: – எவனொருவன்; பஷ்யதி – காண்கின்றான்; அக்ரு’த-புத்தித்வாத் – அறிவின்மையால்; ந – என்றுமில்லை; ஸ: – அவன்; பஷ்யதி – காண்பது; துர்மதி: – முட்டாள்.
எனவே, இந்த ஐந்து காரணங்களைக் கருதாமல், தன்னை மட்டுமே செயலாற்றுபவனாகக் கருதுபவன் விஷயங்களை உள்ளபடி காண முடியாது, அவன் நிச்சயமாக அறிவுடையவன் அல்ல.
பதம் 18.17
யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர் யஸ்ய ந லிப்யதே
ஹத்வாபி ஸ இமாங்ல் லோகான் ந ஹந்தி ந நிபத்யதே
யஸ்ய – எவனொருவனின்; ந – என்றுமில்லை; அஹங்க்ரு‘தே – அஹங்காரத்தின்; பாவ: – இயற்கை; புத்தி: – அறிவு; யஸ்ய – எவனொருவனின்; ந – என்றுமில்லை; லிப்யதே – பற்றுதல் கொள்வது; ஹத்வா – கொல்வது; அபி – கூட; ஸ: – அவன்; இமான் – இந்த; லோகான் – உலகில்; ந – என்றுமில்லை; ஹந்தி – கொல்வது; ந – என்றுமில்லை; நிபத்யதே – பந்தப்படுவது.
எவனுடைய நோக்கம் அஹங்காரமின்றி உள்ளதோ, எவனுடைய புத்தி பற்றுதலிலிருந்து விடுபட்டுள்ளதோ, அவன் இவ்வுலகிலுள்ள மனிதர்களைக் கொலை செய்தாலும் கொல்பவன் அல்ல. தனது செயல்களால் அவன் பந்தப்படுவதும் இல்லை.
பதம் 18.18
க்ஞானம் க்ஞேயம் பரிக்ஞாதா த்ரி-விதா கர்ம-சோதனா
கரணம் கர்ம கர்தேதி த்ரி-வித: கர்ம-ஸங்க்ரஹ:
ஜ்ஞானம் – அறிவு; ஜ்ஞேயம் – அறியப்படும் பொருள்; பரிஜ்ஞாதா – அறிபவன்; த்ரி-விதா – மூன்றுவிதமான; கர்ம – செயல்; சோதனா – ஊக்கம்; கரணம் – புலன்கள்; கர்ம – செயல்; கர்தா – செய்பவன்; இதி – இவ்வாறு; த்ரிவித: – மூன்றுவிதமான; கர்ம – செயலின்; ஸங்க்ரஹ: – சேர்ப்பு.
அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றும் செயலைத் தூண்டுபவை; புலன்கள், செயல், செய்பவன் ஆகிய மூன்றும் செயலை உண்டாக்குபவை.
பதம் 18.19
க்ஞானம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குண-பேதத:
ப்ரோச்யதே குண-ஸங்க்யானே யதாவச் ச்ருணு தான்-யபி
ஜ்ஞானம் – அறிவு; கர்ம – செயல்; ச – மற்றும்; கர்தா – செய்பவன்; ச – மற்றும்; த்ரிதா – மூன்று விதமான; ஏவ – நிச்சயமாக; குண-பேதத: – ஜட இயற்கையின் வேறுபட்ட குணங்களின் அடிப்படையில்; ப்ரோச்யதே – கூறப்படுகின்றது; குண-ஸங்க்யானே – வேறுபட்ட குணங்களுக்கு ஏற்ப; யதா-வத் – அவற்றை உள்ளபடி; ஷ்ரு’ணு – கேள்; தானி – அவை எல்லாவற்றையும்; அபி – கூட.
ஜட இயற்கையின் மூன்று வேறுபட்ட குணங்களுக்கு ஏற்ப, அறிவு, செயல், செய்பவன் ஆகியவற்றிலும் மூன்று வகைகள் உள்ளன. தற்போது அவற்றை என்னிடமிருந்து கேட்பாயாக.
பதம் 18.20
ஸர்வ-பூதேஷு யேனைகம் பாவம் அவ்யயம் ஈக்ஷதே
அவிபக்தம் விபக்தேஷு தஜ் க்ஞானம் வித்தி ஸாத்த்விகம்
ஸர்வ-பூதேஷு – எல்லா உயர்வாழிகளிலும்; யேன – எதனால்; ஏகம் – ஒன்று; பாவம் – நிலை; அவ்யயம் – அழிவற்ற; ஈக்ஷதே – காண்கின்றான்; அவிபக்தம் – பிரிவில்லாத; விபக்தேஷு – எண்ணற்ற பிரிவுகளாக்கப்பட்ட; தத் – அந்த; ஜ்ஞானம் – அறிவு; வித்தி – அறிவாய்; ஸாத்த்விகம் – ஸத்வ குணத்தில்.
உயிர்வாழிகள் எண்ணற்ற உருவமாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை பிரிக்கப்படாத ஆன்மீக இயற்கையாக, எந்த அறிவின் மூலம் ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ஸத்வ குணத்தில் இருக்கும் அறிவாகும்.
பதம் 18.21
ப்ருதக்த்வேன து யஜ் க்ஞானம் நானா-பாவான் ப்ருதக்-விதான்
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ் க்ஞானம் வித்தி ராஜஸம்
ப்ரு’தக்த்வேன – பிரிவின் காரணத்தால்; து – ஆனால்; யத் – எந்த; ஜ்ஞானம் – அறிவு; நானா-பாவான் – வேறுபட்ட நிலைகள்; ப்ரு’தக்-விதான் – வெவ்வேறாக; வேத்தி – அறிபவன்; ஸர்வேஷு – எல்லா; பூதேஷு – உயிர்வாழிகளிலும்; தத் – அந்த; ஜ்ஞானம் – அறிவு; வித்தி – அறியப்பட வேண்டும்; ராஜஸம் – ரஜோ குணத்தைச் சார்ந்ததாக.
எந்த அறிவின் மூலம், வெவ்வேறு உடல்களில் வெவ்வேறு விதமான உயிர்வாழிகள் இருப்பதாக ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ரஜோ குணத்தில் இருப்பதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
பதம் 18.22
யத் து க்ருத்ஸ்ன–வத் ஏகஸ்மின் கார்யே ஸக்தம் அஹைதுகம்
அதத்த்வார்த-வத் அல்பம் ச தத் தாமஸம் உதாஹ்ருதம்
யத் – எது; து – ஆனால்; க்ரு’த்ஸ்ன-வத் – எல்லாமாக; ஏகஸ்மின் – ஒன்றில்; கார்யே – செயல்; ஸக்தம் – பற்றுக் கொண்டு; அஹைதுகம் – காரணமின்றி; அதத்த்வ-அர்த-வத் – உண்மையின் அறிவின்றி; அல்பம் – அற்பமான; ச – மற்றும்; தத் – அது; தாமஸம் – தமோ குணத்தில்; உதாஹ்ரு’தம் – இருப்பதாகக் கூறப்படுகின்றது.
எந்த அறிவின் மூலம், உண்மையைப் பற்றிய அறிவின்றி, ஒரே விதமான செயலில் பற்றுதல் கொண்டு அதையே எல்லாமாக அறிகின்றானோ, அந்த அற்பமான அறிவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.23
நியதம் ஸங்க-ரஹிதம் அராக-த்வேஷத: க்ருதம்
அபல-ப்ரேப்ஸுனா கர்ம யத் தத் ஸாத்த்விகம் உச்யதே
நியதம் — ஒழுங்கான; ஸங்க-ரஹிதம் – பற்றுதலின்றி; அராக-த்வேஷத: – விருப்பு வெறுப்பின்றி; க்ரு’தம் – செய்யப்படும்; அபல-ப்ரேப்ஸுனா – பலன்நோக்குச் செயல்களில் விருப்பம் இல்லாதவனால்; கர்ம – செயல்; யத் – எதுவோ; தத் – அது; ஸாத்த்விகம் — ஸத்வ குணத்தில்; உச்யதே – கூறப்படுகின்றது.
எந்தவொரு செயல், ஒழங்குபடுத்தப்பட்டு, பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படுகின்றதோ, அது ஸத்வ குணத்தின் செயல் எனப்படுகிறது.
பதம் 18.24
யத் து காமேப்ஸுனா கர்ம ஸாஹங்காரேண வா புன:
க்ரியதே பஹுலாயாஸம் தத் ராஜஸம் உதாஹ்ருதம்
யத் — எந்த; து – ஆனால்; காம-ஈப்ஸுனா — பலனுக்கு ஆசைப்படுபவனால்; கர்ம – செயல்; ஸ-அஹங்காரேண – அஹங்காரத்துடன்; வா – அல்லது; புன: – மீண்டும்; க்ரியதே – செய்யப்படுகின்றதோ; பஹுல-ஆயாஸம் — பெரும் முயற்சியுடன்; தத் – அந்த; ராஜஸம் – ரஜோ குணத்தில்; உதாஹ்ருதம் – இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், எந்தவொரு செயல், ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக பெரும் முயற்சியுடனும் அஹங்காரத்துடனும் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் ரஜோ குணத்தின் செயல் என்று கூறப்படுகின்றது.
பதம் 18.25
அனுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாம் அனபேக்ஷ்ய ச பெளருஷம்
மோஹாத் ஆரப்யதே கர்ம யத் தத் தாமஸம் உச்யதே
அனுபந்தம் — எதிர்கால பந்தம்; க்ஷயம் – அழிவு; ஹிம்ஸாம் – துன்புறுத்துதல்; அனபேக்ஷ்ய – விளைவுகளைக் கருதாமல்; ச – மற்றும்; பௌருஷம் – சுய அனுமதியுடன்; மோஹாத் – மயக்கத்தால்; ஆரப்யதே – ஆரம்பிக்கப்பட்ட; கர்ம – செயல்; யத் – எது; தத் – அது; தாமஸம் – தமோ குணத்தில்; உச்யதே – இருப்பதாகக் கூறப்படுகின்றது.
எந்தவொரு செயல், எதிர்கால பந்தத்தையும் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தையும் கருத்தில் கொள்ளாமல், சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து, மயக்கத்தில் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் தமோ குணத்தின் செயலாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.26
முக்த-ஸங்கோ (அ)னஹம்-வாதீ த்ருத்-யுத்ஸாஹ-ஸமன்வித:
ஸித்த் –யஸித்த்யோர் நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே
முக்த-ஸங்க: – எல்லா பௌதிக உறவிலிருந்தும் விடுபட்டு; அனஹம்-வாதீ – அஹங்காரம் இன்றி; த்ரு’தி – மன உறுதி; உத்ஸாஹ – பெரும் உற்சாகத்துடன்; ஸமன்வித: – தகுதிபெற்று; ஸித்தி – வெற்றியில்; அஸித்தயோ: – தோல்வியில்; நிர்விகார: – மாற்றமின்றி; கர்தா – செய்பவன்; ஸாத்த்விக: – ஸத்வ குணத்தில்; உச்யதே – இருப்பதாகக் கூறப்படுகின்றான்.
எவனொருவன், இயற்கை குணங்களின் தொடர்பின்றி, அஹங்காரமின்றி, உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன், வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது கடமைகளைச் செய்கின்றானோ, அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பதம் 18.27
ராகீ கர்ம-பல-ப்ரேப்ஸுர் லுப்தோ ஹிம்ஸாத்மகோ (அ)ஷுசி:
ஹர்ஷ-ஷோகான்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:
ராகீ – மிகுந்த பற்றுக் கொண்டு; கர்ம-பல – செயலின் பலனை; ப்ரேப்ஸு: – விரும்பி; லுப்த: – பேராசை கொண்டு; ஹிம்’ஸா-ஆத்மக: – எப்போதும் பொறாமையுடன்; அஷுசி: – தூய்மையற்ற; ஹர்ஷ-ஷோக-அன்வித: – இன்ப துன்பங்களுக்கு உட்பட்டு; கர்தா – அத்தகு செயலாளி; ராஜஸ: – ரஜோ குணத்தில்; பரிகீர்தித: – அறிவிக்கப்படுகின்றான்.
எவனொருவன், தனது உழைப்பின் பலன்களில் பற்றுதல் கொண்டு, அந்த பலன்களை அனுபவிக்க விரும்பி, பேராசை கொண்டு, எப்போதும் பொறாமையுடன், தூய்மையின்றி, இன்ப துன்பங்களால் பாதிக்கப்படுகின்றானோ, அத்தகு செயலாளி ரஜோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.28
அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஷடோ நைஷ்க்ருதிகோ (அ)லஸ:
விஷாதீ தீர்க-ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே
அயுக்த: – சாஸ்திர விதிகளைக் கண்டுகொள்ளாது; ப்ராக்ரு’த: – பௌதிகமான; ஸ்தப்த: – பிடிவாதமுள்ள; ஷட: – ஏமாற்றுகின்ற; நைஷ்க்ரு’திக: – பிறரை அவமதிப்பதில் நிபுணத்துவம்; அலஸ: – சோம்பேறித்தனம்; விஷாதீ – வருத்தம் தோய்ந்தபடி; தீர்க-ஸூத்ரீ – காலந்தாழ்த்துகின்ற; ச – மேலும்; கர்தா – செய்பவன்; தாமஸ: – தமோ குணத்தில்; உச்யதே – இருப்பவனாகக் கூறப்படுகின்றான்.
எவனொருவன், சாஸ்திர விதிகளுக்கு எதிரான செயலில் எப்போதும் ஈடுபட்டு, பெளதிகவாதியாக, பிடிவாதக்காரனாக, ஏமாற்றுபவனாக, பிறரை அவமதிப்பதில் நிபுணனாக, சோம்பேறியாக, எப்போதும் வருத்தம் தோய்ந்தவனாக, மற்றும் காலந்தாழ்த்துபவனாக உள்ளானோ, அத்தகு செயலாளி தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.29
புத்தேர் பேதம் த்ருதேஷ் சைவ குணதஸ் த்ரி-விதம் ஷ்ருணு
ப்ரோச்யமானம் அஷேஷேண ப்ருதக்த்வேன தனஞ்ஜய
புத்தே: – அறிவின்; பேதம் – வேறுபாடுகள்; த்ரு’தே: – மனவுறுதியின்; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; குணத: – ஜட இயற்கை குணங்களால்; த்ரி-விதம் – மூன்று விதமான; ஷ்ரு’ணு – கேட்பாயாக; ப்ரோச்யமானம் – என்னால் விவரிக்கப்பட்டபடி; அஷேஷேண – விவரமாக; ப்ரு’தக்த்வேன – வெவ்வேறாக; தனஞ்ஜய – செல்வத்தை வெல்வோனே.
செல்வத்தை வெல்வோனே, ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு ஏற்ப பலதரப்பட்ட புத்தியையும் உறுதியையும் பற்றி விவரமாக நான் தற்போது உனக்குக் கூறுவதைக் கேட்பாயாக.
பதம் 18.30
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ
ப்ரவ்ரு’த்திம் – முறையான; ச – மற்றும்; நிவ்ரு’த்திம் – முறையற்ற; ச – மற்றும்; கார்ய – செய்யத்தக்க; அகார்யே – செய்யத்தகாத; பய – பயம்; அபயே – பயமின்மை; பந்தம் – பந்தம்; மோக்ஷம் – விடுதலை; ச – மற்றும்; யா —எதுவென்று; வேத்தி – அறிகின்றானோ; புத்தி: – புத்தி; ஸா — அந்த; பார்த – பிருதாவின் மைந்தனே; ஸாத்த்விகீ – ஸத்வ குணத்தில்.
பிருதாவின் மைந்தனே, செய்யத்தக்கது எது, செய்யத்தகாதது எது, பயப்படத்தக்கது எது, பயப்படத்தகாதது எது, பந்தப்படுத்துவது எது, விடுதலை செய்வது எது, ஆகியவற்றை அறியக்கூடிய புத்தி, ஸத்வ குணத்தில் இருப்பதாகும்.
பதம் 18.31
யயா தர்மம் அதர்மம் ச கார்யம் சாகார்யம் ஏவ ச
அயதாவத் ப்ரஜானாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ
யயா – எதனால்; தர்மம் – தர்மம்; அதர்மம் – அதர்மம்; ச – மற்றும்; கார்யம் – செய்யத்தக்க செயல்; ச – மேலும்; அகார்யம் – செய்யத்தகாத செயல்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; அயதா-வத் – பக்குவமின்றி; ப்ரஜானாதி — அறியும்; புத்தி: – புத்தி; ஸா – அந்த; பார்த – பிருதாவின் மைந்தனே; ராஜஸீ – ரஜோ குணத்தில்.
பிருதாவின் மகனே, தர்மம், அதர்மம், செய்யத்தக்க செயல், செய்யத்தகாத செயல் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை அறிய இயலாத புத்தி, ரஜோ குணத்தில் இருக்கின்றது.
பதம் 18.32
அதர்மம் தர்மம் இதி யா மன்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தான் விபரீதாம்ஷ் ச புத்தி: ஸா பார்த தாமஸீ
அதர்மம் – அதர்மம்; தர்மம் – தர்மம்; இதி – இவ்வாறு; யா — எது; மன்யதே – எண்ணுகின்றதோ; தமஸா – அறியாமையால்; ஆவ்ரு’தா – கவரப்பட்டு; ஸர்வ-அர்தான் — எல்லா விஷயங்களையும்; விபரீதான் – தவறான வழியில்; ச – மேலும்; புத்தி: – புத்தி; ஸா – அது; பார்த – பிருதாவின் மைந்தனே; தாமஸீ – தமோ குணத்தில்.
அறியாமை மற்றும் இருளின் மயக்கத்தின் கீழ், தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தை தர்மமாகவும் அறிந்து, எப்போதும் தவறான வழியில் முயற்சி செய்யும் புத்தி, பார்த்தனே, தமோ குணத்தில் இருப்பதாகும்.
பதம் 18.33
த்ருத்யா யயா தாரயதே மன:-ப்ராணேந்த்ரிய–க்ரியா:
யோகேனாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ
த்ரு’தயா – மனவுறுதி; யயா – எதனால்; தாரயதே – காக்கப்படுகின்ற; மன: – மனம்; ப்ராண – வாழ்வு; இந்த்ரிய – மற்றும் புலன்கள்; க்ரியா: – செயல்கள்; யோகேன – யோகப் பயிற்சியால்; அவ்யபிசாரிண்யா – இடையறாத; த்ரு’தி: – மனவுறுதி; ஸா – அந்த; பார்த – பிருதாவின் மைந்தனே; ஸாத்த்விகீ – ஸத்வ குணத்தில்.
பிருதாவின் மைந்தனே, உடைக்க முடியாததும், யோகப் பயிற்சியால் நிலையாக பாதுகாக்கப்படுவதும், மனம், வாழ்வு மற்றம் புலன்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமான மனவுறுதி ஸத்வ குணத்தைச் சார்ந்ததாகும்.
பதம் 18.34
யயா து தர்ம-காமார்தான் த்ருத்யா தாரயதே (அ)ர்ஜுன
ப்ரஸங்கேன பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ
யயா — எதனால்; து – ஆனால்; தர்ம – அறம்; காம – புலனுகர்ச்சி; அர்தான் – பொருளாதார முன்னேற்றம்; த்ரு’த்யா – மனவுறுதியால்; தாரயதே – ஒருவன் காக்கப்படுகிறான்; அர்ஜுன – அர்ஜுனா; ப்ரஸங்கேன – பற்றுதலின் காரணத்தால்; பல-ஆகாங்க்ஷீ — பலன்களை விரும்பும்; த்ரு’தி: – மனவுறுதி; ஸா – அந்த; பார்த – பிருதாவின் மைந்தனே; ராஜஸீ – ரஜோ குணத்தில்.
எந்த மனவுறுதியின் மூலம், ஒருவன், அறம், பொருள், மற்றும் இன்பத்தின் பலன்களின் மீது பற்றுதல் கொண்டுள்ளானோ, ஓ அர்ஜுனா, அத்தகு மனவுறுதி ரஜோ குணத்தைச் சார்ந்தது.
பதம் 18.35
யயா ஸ்வப்னம் பயம் ஷோகம் விஷாதம் மதம் ஏவ ச
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ
யயா – எதனால்; ஸ்வப்னம் – கனவு; பயம்: – பயம்; ஷோகம் – கவலை; விஷாதம் – வருத்தம் தோய்ந்த; மதம் – மயக்கம்; ஏவ – நிச்சயமாக; ச – மற்றும்; ந – என்றுமில்லை; விமுஞ்சதி – கைவிடுகிறான்; துர்மேதா – அறிவற்ற; த்ரு’தி: – மனவுறுதி; ஸா – அந்த; பார்த – பிருதாவின் மைந்தனே; தாமஸீ – தமோ குணத்தில்.
பிருதாவின் மைந்தனே, கனவு, பயம், கவலை, வருத்தம் தோய்ந்த நிலை, மயக்கம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டுச் செல்ல இயலாத, அறிவற்ற மனவுறுதி, தமோ குணத்தில் இருப்பதாகும்.
பதம் 18.36
ஸுகம் த்விதானீம் த்ரி-விதம் ஷ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத் ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி
ஸுகம் — சுகம்; து – ஆனால்; இதானீம் – இப்போது; த்ரி-விதம் – மூன்று விதமான; ஷ்ரு’ணு – கேட்பாயாக; மே – என்னிடமிருந்து; பரத-ருஷப – பாரதர்களில் சிறந்தவனே; அப்யாஸாத் — பயிற்சியினால்; ரமதே – சுகிப்பவன்; யத்ர – எங்கு; து:க – துக்கத்தின்; அந்தம் – முடிவு; ச – மேலும்; நிகச்சதி – அடைகின்றான்.
பாரதர்களில் சிறந்தவனே, மூன்று விதமான சுகத்தை அனுபவிக்கக்கூடிய கட்டுண்ட ஆத்மா, சில சமயங்களில் அதன் மூலம் துன்பத்தின் முடிவை அடைகின்றான். இவற்றைப் பற்றி தற்போது என்னிடமிருந்து கேட்பாயாக.
பதம் 18.37
யத் தத் அக்ரே விஷம் இவ பரிணாமே (அ)ம்ருதோபமம்
தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் ஆத்ம-புத்தி-ப்ரஸாத-ஜம்
யத் — எந்த; தத் — அந்த; அக்ரே – ஆரம்பத்தில்; விஷம் இவ – விஷத்தைப் போன்று; பரிணாமே – இறுதியில்; அம்ரு’த – அமிர்தம்; உபமம் – ஒப்பிடப்படுகிறது; தத் – அந்த; ஸுகம் – சுகம்; ஸாத்த்விகம் – ஸத்வ குணத்தில்; ப்ரோக்தம் – கூறப்படுகின்றது; ஆத்ம – தன்னில்; புத்தி – அறிவு; ப்ரஸாத-ஜம் – திருப்தியினால் பிறந்த.
ஆரம்பத்தில் விஷத்தைப் போன்று இருந்தாலும் இறுதியில் அமிர்தத்தைப் போன்றதும், தன்னுணர்விற்கு ஒருவனை எழுப்புவதுமான சுகம், ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.38
விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் தத் அக்ரே (அ)ம்ருதோபமம்
பரிணாமே விஷம் இவ தத் ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்
விஷய – புலன் விஷயங்கள்; இந்த்ரிய – மற்றும் புலன்களின்; ஸம்’யோகாத் – சேர்க்கையினால்; யத் – எந்த; தத் – அந்த; அக்ரே – ஆரம்பத்தில்; அம்ரு’த-உபமம் – அமிர்தத்தைப் போன்று; பரிணாமே – இறுதியில்; விஷம் இவ – விஷத்தைப் போன்று; தத் – அந்த; ஸுகம் – சுகம்; ராஜஸம் – ரஜோ குணத்தில்; ஸ்ம்ரு’தம் – கருதப்படுகின்றது.
எந்த சுகம், புலன்களும் புலனின்பப் பொருள்களும் தொடர்பு கொள்வதால் அடையப்படுகின்றதோ, ஆரம்பத்தில் அமிர்தம் போன்று தோன்றினாலும் இறுதியில் விஷமாகிவிடுகின்றதோ, அந்த சுகம், ரஜோ குணத்தின் தன்மையைக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.39
யத் அக்ரே சானுபந்தே ச ஸுகம் மோஹனம் ஆத்மன:
நித்ராலஸ்ய-ப்ரமாதோத்தம் தத் தாமஸம் உதாஹ்ருதம்
யத் – எது; அக்ரே – ஆரம்பத்தில்; ச – மேலும்; அனுபந்தே – இறுதியில்; ச – கூட; ஸுகம் — சுகம்; மோஹனம் – மயக்கம்; ஆத்மன: – ஆத்மாவின்; நித்ரா – உறக்கம்; ஆலஸ்ய – சோம்பேறித்தனம்; ப்ரமாத – மயக்கம்; உத்தம் – ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட; தத் – அந்த; தாமஸம் – தமோ குணத்தில்; உதாஹ்ருதம் – இருப்பதாகக் கூறப்படுகின்றது.
தன்னுணர்வைக் காண இயலாத, ஆரம்பம் முதல் இறுதி வரை மயக்கமாக இருக்கின்ற, உறக்கம், சோம்பல், மற்றும் மாயையினால் வருகின்ற சுகம், தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பதம் 18.40
ந தத் அஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புன:
ஸத்த்வம் ப்ரக்ருதி-ஜைர் முக்தம் யத் ஏபி: ஸ்யாத் த்ரிபிர் குணை:
ந – இல்லை; தத் – அந்த; அஸ்தி – இருப்பது; ப்ரு’திவ்யாம் – பூமியில்; வா – அல்லது; திவி – உயர் உலகங்களில்; தேவேஷு – தேவர்களிடையே; வா – அல்லது; புன: – மீண்டும்; ஸத்த்வம் – இருப்பு; ப்ரக்ரு’தி-ஜை: – பௌதிக இயற்கையிலிருந்து பிறந்த; முக்தம் – விடுபட்ட; யத் – அந்த; ஏபி: – இவற்றின் தாக்கத்திலிருந்து; ஸ்யாத் – ஆகின்றது; த்ரிபி: – மூன்று; குணை: – ஜட இயற்கையின் குணங்கள்.
இவ்வுலகிலோ, உயர்லோகத்திலுள்ள தேவர்களின் மத்தியிலோ, ஜட இயற்கையிலிருந்து பிறந்த இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்கள் எவருமில்லை.
பதம் 18.41
ப்ராஹ்மண-க்ஷத்ரிய-விஷாம் ஷூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ-ப்ரபவைர் குணை:
ப்ராஹ்மண – பிராமணர்கள்; க்ஷத்ரிய – சத்திரியர்கள்; விஷாம் – வைசியர்கள்; ஷூத்ராணாம் — சூத்திரர்களின்; ச – மற்றும்; பரந்தப – எதிரிகளை அடக்குபவனே; கர்மாணி – செயல்கள்; ப்ரவிபக்தானி – பிரிக்கப்பட்டுள்ளன; ஸ்வபாவ – சுபாவத்தில்; ப்ரபவை: – இருந்து தோன்றிய; குணை: – ஜட இயற்கையின் குணங்களால்.
எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, தங்களது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ற தன்மையின் அடிப்படையில், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேறுபடுத்தப்படுகின்றனர்.
பதம் 18.42
ஷமோ தமஸ் தப: ஷெளசம் க்ஷாந்திர் ஆர்ஜவம் ஏவ ச
க்ஞானம் விக்ஞானம் ஆஸ்திக்யம் ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம்
ஷம: – அமைதி; தம: – சுயக்கட்டுப்பாடு; தப: – தவம்; ஷௌசம் – தூய்மை; க்ஷாந்தி: – சகிப்புத்தன்மை; ஆர்ஜவம் – நேர்மை; ஏவ – நிச்சயமாக; ச – மற்றும்; ஜ்ஞானம் – அறிவு; விஜ்ஞானம் – பகுத்தறிவு; ஆஸ்திக்யம் – ஆத்திகம்; ப்ரஹ்ம – பிராமணனின்; கர்ம – கடமை; ஸ்வபாவ-ஜம் – சுபாவத்திலிருந்து பிறந்த.
அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்.
பதம் 18.43
ஷெளர்யம் தேஜோ த்ருதிர் தாக்ஷ்யம் யுத்தே ச சாப்-யபலாயனம்
தானம் ஈஷ்வர-பாவஷ் ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவ-ஜம்
ஷௌர்யம் – சூரத்தனம்; தேஜ: – வலிமை; த்ரு’தி: – மனவுறுதி; தாக்ஷ்யம் – வளமை; யுத்தே – போரில்; ச – மற்றும்; அபி – கூட; அபலாயனம் – புறங்காட்டாமை; தானம் – கொடை; ஈஷ்வர – தலைவனுக்கான; பாவ: – இயற்கை; ச – மற்றும்; க்ஷாத்ரம் – சத்திரியரின்; கர்ம – கடமை; ஸ்வபாவ-ஜம் – சுபாவத்திலிருந்து தோன்றும்.
சூரத்தனம், வலிமை, மனவுறுதி, வளமை, போரில் தைரியம், கொடை, ஆளும் தன்மை ஆகியவை சத்திரியர்களின் சுபாவத்திலிருந்து பிறந்த செயல்கள்.
பதம் 18.44
க்ருஷி-கோ-ரக்ஷ்ய-வாணிஜ்யம் வைஷ்ய-கர்ம ஸ்வபாவ-ஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவ-ஜம்
க்ரு’ஷி – உழுதல்; கோ: – பசுக்களை; ரஷ்ய – காத்தல்; வாணிஜ்யம் – வியாபாரம்; வைஷ்ய – வைசியரின்; கர்ம – கடமை; ஸ்வபாவ-ஜம் – சுபாவத்திலிருந்து தோன்றிய; பரிசர்ய – சேவை; ஆத்மகம் — கொண்ட; கர்ம – கடமை; ஷூத்ரஸ்ய – சூத்திரரின்; அபி – கூட; ஸ்வபாவ-ஜம் – சுபாவத்திலிருந்து தோன்றிய.
விவசாயம், பசுக்களைப் பராமரித்தல், வியாபாரம் ஆகியவை வைசியர்களின் இயற்கையான செயல்கள். உழைப்பாளிகளான சூத்திரர்களின் சுபாவம் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதாகும்.
பதம் 18.45
ஸ்வே ஸ்வே கர்மண்-யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வ-கர்ம-நிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு
ஸ்வே ஸ்வே – ஒவ்வொருவரும் தங்களது சுய; கர்மணி – செயலை; அபிரத: – பின்பற்றி; ஸம்’ஸித்திம் — பக்குவத்தை; லபதே – அடைகின்றனர்; நர: – மனிதன்; ஸ்வ-கர்ம – தனது சுயக் கடமையில்; நிரத: – ஈடுபட்டு; ஸித்திம் — பக்குவம்; யதா – போல; விந்ததி – அடைகின்றான்; தத் – அதை; ஷ்ரு’ணு – கேட்பாயாக.
தனது குணத்திற்குத் தகுந்த கடமைகளைப் பின்பற்றுவதால் ஒவ்வொரு மனிதனும் பக்குவமடைய முடியும். அதை எவ்வாறு செயலாற்றுவது என்பதை தற்போது என்னிடமிருந்து கேட்பாயாக.
பதம் 18.46
யத: ப்ரவ்ருத்திர் பூதானாம் யேன ஸர்வம் இதம் ததம்
ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ:
யத: – யாரிடமிருந்து; ப்ரவ்ரு’த்தி: – தோன்றினரோ; பூதானாம் — எல்லா உயிர்வாழிகளும்; யேன – யார்; ஸர்வம் – எல்லா; இதம் – இந்த; ததம் – பரவியுள்ளாரோ; ஸ்வ-கர்மணா – தனது சுயக் கடமையில்; தம் – அவரை; அப்யர்ச்ய – வழிபடுவதால்; ஸித்திம் – பக்குவத்தை; விந்ததி – அடைகின்றான்; மானவ: – மனிதன்.
யாரிடமிருந்து எல்லா உயிர்வாழிகளும் தோன்றினரோ, யார் எல்லா இடங்களிலும் பரவியுள்ளாரோ, அந்த இறைவனை தனது சொந்த கடமையைச் செய்வதால் வழிபட்டு மனிதன் பக்குவத்தை அடைய முடியும்.
பதம் 18.47
ஷ்ரேயான் ஸ்வ–தர்மோ விகுண: பர-தர்மாத் ஸ்வனுஷ்டிதாத்
ஸ்வபாவ–நியதம் கர்ம குர்வன் நாப்னோதி கில்பிஷம்
ஷ்ரேயான் – சிறந்தது; ஸ்வ-தர்ம: – தனது சொந்தக் கடமை; விகுண: – முறையின்றி செய்யப்பட்டாலும்; பர-தர்மாத் – பிறரது கடமையைவிட; ஸு-அனுஷ்டிதாத் – பக்குவமாக செய்வது; ஸ்வபாவ-நியதம் – ஒருவனது இயற்கைக்கு ஏற்ப விதிக்கப்பட்ட; கர்ம – செயலை; குர்வன் – செய்வதால்; ந – ஒருபோதும் இல்லை; ஆப்னோதி — அடைவது; கில்பிஷம் – பாவத்தின் விளைவுகளை.
மற்றவரது கடமையை ஏற்று அதனைப் பக்குவமாகச் செய்வதை விட, முறையாக செய்யாவிட்டாலும் தனது சொந்த கடமையில் ஈடுபட்டிருப்பதே சிறந்தது. ஒருவனது இயற்கைக்கு ஏற்ப விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பாவ விளைவுகளால் என்றும் பாதிக்கப்படுவதில்லை.
பதம் 18.48
ஸஹ-ஜம் கர்ம கெளந்தேய ஸ-தோஷம் அபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேனாக்னிர் இவாவ்ருதா:
ஸஹ-ஜம் – உடன் தோன்றிய; கர்ம – செயல்; கௌந்தேய – குந்தியின் மகனே; ஸ-தோஷம் – தோஷத்துடன்; அபி – இருப்பினும்; ந – என்றுமில்லை; த்யஜேத் – துறக்கப்படுவது; ஸர்வ-ஆரம்பா: – எல்லா முயற்சிகளும்; ஹி – நிச்சயமாக; தோஷேண – தோஷத்துடன்; தூமேன – புகையுடன்; அக்னி: – நெருப்பு; இவ – போல; ஆவ்ரு’தா: – மூடப்பட்டு.
நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே, குந்தியின் மகனே, முழுவதும் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது.
பதம் 18.49
அஸக்த-புத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகத-ஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்ய-ஸித்திம் பரமாம் ஸன்ன்யாஸேனாதிகச்சதி
அஸக்த புத்தி – பற்றற்ற புத்தி; ஸர்வத்ர – எங்கும்; ஜித-ஆத்மா – மனதைக் கட்டுப்படுத்தி; விகத-ஸ்ப்ரு’ஹ: – பௌதிக ஆசைகள் இன்றி; நைஷ்கர்ம்ய-ஸித்திம் – பலனற்ற கர்மத்தின் பக்குவம்; பரமம் – பரம; ஸந்ந்யாஸேன – துறவினால்; அதிகச்சதி – அடைகிறான்.
சுயக் கட்டுப்பாடுடைய, பற்றற்ற, மற்றும் எல்லா பெளதிக சுகத்தையும் புறக்கணிக்கக்கூடிய ஒருவன், துறவைப் பயிற்சி செய்வதால், ‘கர்ம விளைவுகளிலிருந்து விடுதலை’ என்னும் மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைகிறான்.
பதம் 18.50
ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்னோதி நிபோத மே
ஸமாஸேனைவ கெளந்தேய நிஷ்டா க்ஞானஸ்ய யா பரா
ஸித்திம் — பக்குவம்; ப்ராப்த: – அடைந்து; யதா – போல; ப்ரஹ்ம – பிரம்மன்; ததா – அவ்வாறு; ஆப்னோதி — அடைகின்றான்; நிபோத – புரிந்துகொள்ள முயற்சி செய்; மே – என்னிடமிருந்து; ஸமாஸேன – சுருக்கமாக; ஏவ – நிச்சயமாக; கௌந்தேய – குந்தியின் மகனே; நிஷ்டா – நிலையான; ஜ்ஞானஸ்ய – ஞானத்தின்; யா – எந்த; பரா – தெய்வீகமான.
குந்தியின் மகனே, இந்த பக்குவத்தை அடைந்தவன், பிரம்மன் எனப்படும் ஞானத்தின் மிகவுயர்ந்த நிலையினை, திவ்யமான பக்குவநிலையினை எவ்வாறு அடைய முடியும் என்பதை நான் தற்போது சுருக்கமாக கூறுகிறேன், இதனை என்னிடமிருந்து கேட்பாயாக.
பதம் 18.51 – 18.53
புத்த்யா விஷுத்தயா யுக்தோ த்ருத்யாத்மானம் நியம்ய ச
ஷப்தாதீன் விஷயாம்ஸ் த்யக்த்வா ராக-த்வேஷெள வ்யுதஸ்ய ச
விவிக்த–ஸேவீ லக்வாஷீ யத-வாக்-காய-மானஸ:
த்யான–யோக–பரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஷ்ரித:
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஷாந்தோ ப்ரஹ்ம-பூயாய கல்பதே
புத்த்யா – புத்தியால்; விஷுத்தயா – முழுவதும் தூய்மைபடுத்தப்பட்டு; யுக்த: – ஈடுபட்டு; த்ரு’த்ய – மனவுறுதியால்; ஆத்மானம் – ஆத்மா; நியம்ய – நெறிப்படுத்தப்பட்டு; ச – மற்றும்; ஷப்த-ஆதீன் – ஒலியைப் போன்ற; விஷயான் – புலனின்ப பொருட்களை; த்யக்த்வா – துறந்து; ராக – பற்றுதல்; த்வேஷௌ – வெறுப்பு; வ்யுதஸ்ய – புறமே வைத்து; ச – மற்றும்; விவிக்த-ஸேவீ – தனியிடத்தில் வாழ்கின்ற; லகு-ஆஷீ – மிகவும் குறைவாக உண்கின்ற; யத – கட்டுப்படுத்தி; வாக் – பேச்சு; காய – உடல்; மானஸ: – மனதை; த்யான-யோக-பர: – தியானத்தில் ஆழ்ந்த; நித்யம் – இருபத்துநான்கு மணி நேரமும்; வைராக்யம் – பற்றின்மை; ஸமுபாஷ்ரித: – அடைக்கலம் கொண்டு; அஹங்காரம் – அஹங்காரம்; பலம் – பொய்யான வலிமை; தர்பம் – பொய்யான பெருமை; காமம் – காமம்; க்ரோதம் – கோபம்; பரிக்ரஹம் – ஜடப் பொருட்களை ஏற்றல்; விமுச்ய – விடுபட்டு; நிர்மம: – உரிமையின் உணர்வின்றி; ஷாந்த: – அமைதி; ப்ரஹ்ம-பூயாய — தன்னுணர்விற்கு; கல்பதே – தகுதியுடையவன்.
தனது புத்தியினால் தூய்மையடைந்து, உறுதியுடன் மனதைக் கட்டுப்படுத்தி, புலனுகர்ச்சிப் பொருள்களைத் துறந்து, விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டு, தனியிடத்தில் வாழ்ந்து, குறைவாக உண்டு, உடல், மனம் மற்றும் பேச்சினைக் கட்டுப்படுத்தி, எப்போதும் தியானத்தில் ஆழ்ந்து, பற்றுதலின்றி, அஹங்காரம், பொய்யான வலிமை, பொய்யான பெருமை, காமம், கோபம் மற்றும் ஜடப் பொருள்களை ஏற்பதிலிருந்து விடுபட்டு, உரிமை உணர்வின்றி, அமைதியாக இருக்கும் மனிதன், தன்னுணர்வின் நிலைக்கு நிச்சயமாக உயர்த்தப்படுகின்றான்.
பதம் 18.54
ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம் லபதே பராம்
ப்ரஹ்ம-பூத: – பூரணத்துடன் ஒன்றிணைந்து; ப்ரஸன்ன-ஆத்மா – இன்பம் நிறைந்து; ந – என்றுமில்லை; ஷோசதி – கவலைப்படுவது; ந – என்றுமில்லை; காங்க்ஷதி – விருப்பப்படுவது; ஸம: – சமநோக்குடன்; ஸர்வேஷு – எல்லா; பூதேஷு – உயிர்வாழிகளிடமும்; மத்-பக்திம் – எனது பக்தித் தொண்டை; லபதே – அடைகிறான்; பராம் – தெய்வீகமான.
இவ்வாறு தெய்வீகமாக நிலைபெற்றவன், உடனடியாக பரபிரம்மனை உணர்ந்து இன்பம் நிறைந்தவனாகின்றான். அவன் என்றும் கவலைப்படுவதில்லை, எதையும் அடைய வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எல்லா உயிர்வாழிகளிடமும் அவன் சமநோக்கு கொள்கிறான். அத்தகு நிலையில் அவன் எனது தூய பக்தித் தொண்டை அடைகின்றான்.
பதம் 18.55
பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ க்ஞாத்வா விஷதே தத்-அனந்தரம்
பக்த்யா – தூய பக்தித் தொண்டினால்; மாம் – என்னை; அபிஜானாதி – அறிந்துகொள்ள முடியும்; யாவான் – முடிந்த வரை; ய: ச அஸ்மி – நான் இருப்பதுபோல; தத்த்வத: – உண்மையில்; தத: – அதன் பின்னர்; மாம் – என்னை; தத்த்வத: – உண்மையில்; ஜ்ஞாத்வா – அறிந்து; விஷதே – நுழைகின்றான்; தத்-அனந்தரம் – அதன் பின்னர்.
பக்தித்தொண்டால் மட்டுமே என்னை, முழுமுதற் கடவுளாக, உள்ளது உள்ளபடி, அறிந்துகொள்ள முடியும். என்னைப் பற்றிய முழுமையான உணர்வை அத்தகு பக்தியினால் அடையும்போது, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைய முடியும்.
பதம் 18.56
ஸர்வ-கர்மாண்-யபி ஸதா குர்வாணோ மத்-வ்யாபாஷ்ரய:
மத்-ப்ரஸாதாத் அவாப்னோதி ஷாஷ்வதம் பதம் அவ்யயம்
ஸர்வ – எல்லா; கர்மாணி – செயல்கள்; அபி – இருந்தாலும்; ஸதா – எப்போதும்; குர்வாண: – செய்து கொண்டு; மத்-வ்யபாஷ்ரய: – எனது பாதுகாப்பின் கீழ்; மத்-ப்ரஸாதாத் – எனது கருணையால்; அவாப்னோதி – அடைகின்றான்; ஷாஷ்வதம் – நித்தியமான; பதம் – இடத்தை; அவ்யயம் – அழிவற்ற.
எல்லாவிதமான செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், எனது தூய பக்தன், எனது பாதுகாப்பின் கீழ், எனது கருணையால், நித்தியமான அழிவற்ற இடத்தை அடைகிறான்.
பதம் 18.57
சேதஸா ஸர்வ-கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத்-பர:
புத்தி-யோகம் உபாஷ்ரித்ய மச்-சித்த: ஸததம் பவ
சேதஸா – அறிவால்; ஸர்வ-கர்மாணி – எல்லாவிதச் செயல்களையும்; மயி – என்னிடம்; ஸந்ந்யஸ்ய – துறந்து; மத்-பர: – எனது பாதுகாப்பில்; புத்தி-யோகம் – பக்திச் செயல்கள்; உபாஷ்ரித்ய – அடைக்கலம் கொண்டு; மத்-சித்த: – என் உணர்வில்; ஸததம் – இருபத்துநான்கு மணி நேரமும்; பவ – ஆகிவிடு.
எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து, எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக. இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு.
பதம் 18.58
மச்-சித்த: ஸர்வ-துர்காணி மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸி
அத சேத் த்வம் அஹங்காரான் ந ஷ்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி
மத் – எனது; சித்த – உணர்வில்; ஸர்வ – எல்லா; துர்காணி – தடங்கல்களை; மத்-ப்ரஸாதாத் – எனது கருணையால்; தரிஷ்யஸி – நீ கடந்துவிடுவாய்; அத – ஆனால்; சேத் – எனில்; த்வம் – நீ; அஹங்காராத் — அஹங்காரத்தினால்; ந – இல்லை; ஷ்ரோஷ்யஸி – கேட்கவில்லை; வினங்க்ஷ்யஸி – அழிந்து போவாய்.
நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால், எனது கருணையின் மூலம், கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல்களையும் கடந்துவிடுவாய். ஆனால், அத்தகு உணர்வின்றி, அஹங்காரத்துடன், நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால், நீ அழிந்துவிடுவாய்.
பதம் 18.59
யத் அஹங்காரம் ஆஷ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மன்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ் தே ப்ரக்ருதிஸ் த்வாம் நியோக்ஷ்யதி
யத் – எனில்; அஹங்காரம் – அஹங்காரத்தில்; ஆஷ்ரித்ய – அடைக்கலம் கொண்டு; ந யோத்ஸ்ய – போரிட மாட்டேன்; இதி – என்று; மன்யஸே – நீ எண்ணினால்; மித்யா ஏஷ: – அவையனைத்தும் பொய்; வ்யவஸாய: – மனவுறுதி; தே – உனது; ப்ரக்ரு’தி: – ஜட இயற்கை; த்வாம் – உன்னை; நியோக்ஷ்யதி – ஈடுபடுத்தும்.
நீ எனது வழிகாட்டுதலின்படி போரிட வேண்டும்; இல்லையேல் தவறாக வழிநடத்தப்படுவாய். உனது இயற்கையின்படி நீ போரில் ஈடுபட வேண்டியவனே.
பதம் 18.60
ஸ்வபாவ-ஜேன கௌந்தேய நிபத்த: ஸ்வேன கர்மணா
கர்தும் நேச்சஸி யன் மோஹாத் கரிஷ்யஸ்-யவஷோ (அ)பி தத்
ஸ்வபாவ-ஜேன – உனது சுபாவத்திலிருந்து பிறந்த; கௌந்தேய – குந்தியின் மகனே; நிபத்த: – கட்டுண்ட; ஸ்வேன – உனது சுய; கர்மணா – செயல்களால்; கர்தும் – செய்வதற்கு; ந – இல்லை; இச்சஸி – நீ விரும்புவது; யத் – அந்த; மோஹாத் – மயக்கத்தால்; கரிஷ்யஸி – நீ செய்வாய்; அவஷ: – சுய விரும்பமின்றி; அபி – கூட; தத் – அதை.
மயக்கத்தின் காரணத்தால் எனது வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்பட நீ மறுக்கின்றாய். ஆனால், குந்தியின் மகனே, உனது சுபாவத்தினால் வற்புறுத்தப்பட்டு, நீ அதன்படியே செயல்படுவாய்.
பதம் 18.61
ஈஷ்வர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்-தேஷே (அ)ர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் ஸர்வ-பூதானி யந்த்ராரூடானி மாயயா
ஈஷ்வர: – முழுமுதற் கடவுள்; ஸர்வ-பூதானாம் — எல்லா உயிர் வாழிகளின்; ஹ்ரு’த்-தேஷே – இதயத்தில்; அர்ஜுன – அர்ஜுனா; திஷ்டதி – வாழ்கின்றார்; ப்ராமயன் – பயணத்திற்கு காரணமாகி; ஸர்வ-பூதானி – எல்லா உயிர்வாழிகள்; யந்த்ர – இயந்திரம்; ஆரூடானி – வைக்கப்பட்டு; மாயயா – ஜட சக்தியின் மயக்கத்தின் கீழ்.
ஓ அர்ஜுனா, ஜட சக்தியால் செய்யப்பட்ட இயந்திரத்தில் அமர்ந்துள்ள எல்லா உயிர்வாழிகளின் பயணங்களையும், அவரவர் இதயத்தில் வீற்றுள்ள முழுமுதற் கடவுளே வழிநடத்துகின்றார்.
பதம் 18.62
தம் ஏவ ஷரணம் கச்ச ஸர்வ-பாவேன பாரத
தத் ப்ரஸாதாத் பராம் ஷாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்
தம் – அவரிடம்; ஏவ – நிச்சயமாக; ஷரணம் கச்ச – சரணடைவாய்; ஸர்வ-பாவேன – எல்லாவிதத்திலும்; பாரத – பரதனின் மகனே; தத்-ப்ரஸாதாத் – அவரது கருணையால்; பராம் – தெய்வீகமான; ஷாந்திம் – அமைதி; ஸ்தானம் – இருப்பிடம்; ப்ராப்ஸ்யஸி – அடைவாய்; ஷாஷ்வதம் – நித்தியமான.
பரத வழித் தோன்றலே, அவரிடம் முழுமையாக சரணடைவாயாக. அவரது கருணையால் தெய்வீக அமைதியையும், உன்னதமான நித்திய இடத்தையும் நீ அடைவாய்.
பதம் 18.63
இதி தே க்ஞானம் ஆக்யாதம் குஹ்யாத் குஹ்யதரம் மயா
விம்ருஷ்யைதத் அஷேஷேண யதேச்சஸி ததா குரு
இதி – இவ்வாறு; தே – உனக்கு; ஜ்ஞானம் – ஞானம்; ஆக்யாதம் – விவரிக்கப்பட்டது; குஹ்யாத் – இரகசியமானதைக் காட்டிலும்; குஹ்ய-தரம் – மிகவும் இரகசியமான; மயா – என்னால்; விம்ரு’ஷ்ய – கவனமாக சிந்தித்து; ஏதத் — இதனை; அஷேஷேண – முழுமையாக; யதா – போல; இச்சஸி – நீ விரும்புவதை; ததா – அதை; குரு – செய்வாயாக.
இவ்வாறு இரகசியமானதைக் காட்டிலும் மிகவும் இரகசியமான ஞானத்தை உனக்கு நான் விளக்கியுள்ளேன். இதனை முழுமையாக கவனமாகச் சிந்தித்து, நீ செய்ய விரும்புவதைச் செய்.
பதம் 18.64
ஸர்வ-குஹ்யதமம் பூய: ஷ்ருணு மே பரமம் வச:
இஷ்டோ (அ)ஸி மே த்ருடம் இதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்
ஸர்வ-குஹ்ய-தமம் – எல்லாவற்றிலும் மிகமிக இரகசியமான; பூய: – மீண்டும்; ஷ்ரு’ணு – கேட்பாயாக; மே – என்னிடமிருந்து; பரமம் – மிகவும் உன்னதமான; வச: – அறிவுரை; இஷ்ட: அஸி – நீ பிரியமானவன்; மே – எனக்கு; த்ரு’டம் – மிகவும்; இதி – இவ்வாறு; தத: – எனவே; வக்ஷ்யாமி – கூறுகின்றேன்; தே – உனது; ஹிதம் – நன்மைக்காக.
நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், என்னுடைய அறிவுரைகளில் மிகவும் உன்னதமான, எல்லாவற்றிலும் மிகமிக இரகசியமான ஞானத்தை நான் உனக்குக் கூறுகின்றேன். இஃது உனது நன்மைக்காக என்பதால் என்னிடமிருந்து கேட்பாயாக.
பதம் 18.65
மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ (அ)ஸி மே
மத்-மனா: – என்னைப் பற்றி எண்ணிக் கொண்டு; பவ – ஆவாயாக; மத்-பக்த: – எனது பக்தனாக; மத்-யாஜீ – என்னை வழிபட்டு; மாம் – என்னிடமே; நமஸ்குரு – வணக்கங்களை சமர்ப்பிப்பாயாக; ஏவ – நிச்சயமாக; ஏஷ்யஸி – வருவாய்; ஸத்யம் – உண்மையாக; தே – உனக்கு; ப்ரதிஜானே – வாக்குறுதி அளிக்கின்றேன்; ப்ரிய: – பிரியமானவனாக; அஸி — நீ இருக்கின்றாய்; மே – எனக்கு.
எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன்.
பதம் 18.66
ஸர்வ–தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ–பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:
ஸர்வ-தர்மான் — எல்லாவித தர்மங்களையும்; பரித்யஜ்ய – துறந்து; மாம் – என்னிடம்; ஏகம் – மட்டுமே; ஷரணம் – சரணாகதி; வ்ரஜ – அடைவாய்; அஹம் – நான்; த்வாம் – உன்னை; ஸர்வ – எல்லா; பாபேப்ய: – பாவ விளைவுகளிலிருந்தும்; மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கின்றேன்; மா – வேண்டாம்; ஷுச: – கவலைப்பட.
எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே.
பதம் 18.67
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன
ந சாஷுஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ (அ)ப்யஸூயதி
இதம் – இதனை; தே – உன்னால்; ந – என்றுமில்லை; அதபஸ்காய – தவம் புரியாதவர்களுக்கு; ந – என்றுமில்லை; அபக்தாய – பக்தனல்லாதவனுக்கு; கதாசன – எந்த நேரத்திலும்; ந – என்றுமில்லை; ச – மேலும்; அஷுஷ்ரூஷவே – பக்தித் தொண்டில் ஈடுபடாதவனுக்கு; வாச்யம் – கூறப்படுவது; ந – என்றுமில்லை; ச – மேலும்; மாம் – என்னிடம்; ய: – யாரொருவன்; அப்யஸூயதி — பொறாமையுள்ளவனோ.
இந்த இரகசிய ஞானம், தவமில்லாதவருக்கோ, பக்தியில்லாதவருக்கோ, பக்தித் தொண்டில் ஈடுபடாதவருக்கோ, என் மீது பொறாமையுள்ளவருக்கோ ஒருபோதும் விளக்கப்படக் கூடாது.
பதம் 18.68
ய இதம் பரமம் குஹ்யம் மத்-பக்தேஷ்-வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாம் ஏவைஷ்யத்-யஸம்ஷய:
ய: – யாரொருவன்; இதம் – இந்த; பரமம் – பரம; குஹ்யம் — இரகசியம்; மத் – எனது; பக்தேஷு – பக்தர்களிடையே; அபிதாஸ்யதி – விளக்குகின்றானோ; பக்திம் – பக்தித் தொண்டு; மயி – என்னிடம்; பராம் – தெய்வீகமான; க்ரு’த்வா – செய்து; மாம் – என்னிடம்; ஏவ – நிச்சயமாக; ஏஷ்யதி – வருகின்றான்; அஸம்’ஷய: – ஐயமின்றி.
இந்த பரம இரகசியத்தை எனது பக்தர்களிடம் விளக்குபவனுக்கு, தூய பக்தித் தொண்டு உறுதிப்படுத்தப்படுவதோடு, அவன் இறுதியில் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருகின்றான்.
பதம் 18.69
ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஷ்சின் மே ப்ரிய–க்ருத்தம:
பவிதா ந ச மே தஸ்மாத் அன்ய: ப்ரியதரோ புவி
ந – என்றுமில்லை; ச – மற்றும்; தஸ்மாத் – அவனைவிட; மனுஷ்யேஷு – மனிதர்களில்; கஷ்சித் – யாரும்; மே – எனக்கு; ப்ரிய-க்ரு’த்-தம: – மிகவும் பிரியமான; பவிதா – ஆவது; ந – என்றுமில்லை; ச – மேலும்; மே – எனக்கு; தஸ்மாத் – அவனைவிட; அன்ய: – இதர; ப்ரிய-தர: – மிகவும் பிரியமானவர்கள்; புவி — இந்த உலகில்.
அவனைவிட எனக்கு பிரியமான தொண்டன் இவ்வுலகில் யாரும் இல்லை. அவ்வாறு அவனைவிட பிரியமானவனாக யாரும் ஆகவும் முடியாது.
பதம் 18.70
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதம் ஆவயோ:
க்ஞான–யக்ஞேன தேனாஹம் இஷ்ட: ஸ்யாம் இதி மே மதி:
அத்யேஷ்யதே – கற்பவன்; ச – மேலும்; ய: – யாரொருவன்; இமம் – இந்த; தர்ம்யம் – புனிதமான; ஸம்’வாதம் – உரையாடல்; ஆவயோ: – நமது; ஜ்ஞான – அறிவு; யஜ்ஞேன – யாகத்தால்; தேன – அவனால்; அஹம் – நான்; இஷ்ட: – வழிபடுபவனாக; ஸ்யாம் – ஆவேன்; இதி – இவ்வாறு; மே – எனது; மதி: – அபிப்பிராயம்.
மேலும், நமது இந்தப் புனிதமான உரையாடலைக் கற்பவன், தனது அறிவால், என்னை வழிபடுவான் என்று நான் அறிவிக்கின்றேன்.
பதம் 18.71
ஷ்ரத்தாவான் அனஸூயஷ் ச ஷ்ருணுயாத் அபி யோ நர:
ஸோ (அ)பி முக்த: ஷுபாங்ல் லோகான் ப்ராப்னுயாத் புண்ய–கர்மணாம்
ஷ்ரத்தாவான் – நம்பிக்கையுடன்; அனஸூய: – பொறாமையின்றி; ச – மற்றும்; ஷ்ரு’ணுயாத் – கேட்பவன்; அபி – நிச்சயமாக; ய: – யாரொருவன்; நர: – மனிதன்; ஸ: – அவனும்; அபி – கூட; முக்த: – முக்தி பெற்று; ஷுபான் – மங்கலமான; லோகான் – உலகங்களை; ப்ராப்னுயாத் – அடைகின்றான்; புண்ய-கர்மணாம் – புண்ணியம் செய்தவர்களின்.
மேலும், நம்பிக்கையுடனும் பொறாமையின்றியும் இதனை யாரொருவன் கேட்கின்றானோ, அவன் பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியம் செய்தவர்கள் வாழும் மங்களகரமான லோகங்களை அடைகின்றான்.
பதம் 18.72
கச்சித்-ஏதச் ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா
கச்சித் அக்ஞான-ஸம்மோஹ: ப்ரணஷ்டஸ் தே தனஞ்ஜய
கச்சித் – அல்லவா; ஏதத் – இந்த; ஷ்ருதம் – கேட்கப்பட்டது; பார்த – பிருதாவின் மைந்தனே; த்வயா – உன்னால்; ஏக-அக்ரேண – முழு கவனத்துடன்; சேதஸா – மனதால்; கச்சித் – அல்லவா; அஜ்ஞான – அறியாமை; ஸம்மோஹ – மயக்கம்; ப்ரணஷ்ட – நீங்கியது; தே – உனது; தனஞ்ஜய – செல்வத்தை வெல்பவனே (அர்ஜுனா).
பிருதாவின் மகனே, செல்வத்தை வெல்வோனே, நீ இதனை கவனமான மனதுடன் கேட்டாயா? உனது அறியாமையும் மயக்கமும் தற்போது நீங்கிவிட்டதா?
பதம் 18.73
அர்ஜுன உவாச
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்தா த்வத்-ப்ரஸாதான் மயாச்யுத
ஸ்திதோ (அ)ஸ்மி கத-ஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ
அர்ஜுன உவாச – அர்ஜுனன் கூறினான்; நஷ்ட: – நீங்கியது; மோஹ: – மயக்கம்; ஸ்ம்ரு’தி: – நினைவு; லப்தா – மீண்டும் அடையப்பட்டது; த்வத்-ப்ரஸாதாத் – தங்களது கருணையால்; மயா – என்னால்; அச்யுத – என்றும் வீழ்ச்சியுறாத கிருஷ்ணரே; ஸ்தித: – நிலைபெற்றுள்ளேன்; அஸ்மி – நான்; கத – நீங்கி; ஸந்தேஹ: – எல்லா ஐயங்களும்; கரிஷ்யே – நிறைவேற்றுவேன்; வசனம் – கட்டளையை; தவ – தங்களது.
அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, வீழ்ச்சியடையாதவரே, எனது மயக்கம் தற்போது நீங்கிவிட்டது. தங்களது கருணையால் நான் எனது நினைவை மீண்டும் பெற்று விட்டேன். எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு, நான் தற்பொழுது உறுதியுடன் உள்ளேன், தங்களது உபதேசங்களின்படிச் செயல்பட தயாராக உள்ளேன்.
பதம் 18.74
ஸஞ்ஜய உவாச
இத்-யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மன:
ஸம்வாதம் இமம் அஷ்ரெளஷம் அத்புதம் ரோம–ஹர்ஷணம்
ஸஞ்ஜய: உவாச – சஞ்சயன் கூறினான்; இதி – இவ்வாறு; அஹம் – நான்; வாஸுதேவஸ்ய – கிருஷ்ணரது; பார்தஸ்ய – அர்ஜுனனது; ச – மேலும்; மஹா-ஆத்மன: – மஹாத்மாக்களின்; ஸம்’வாதம் – உரையாடல்; இமம் – இந்த; அஷ்ரௌஷம் – கேட்டு; அத்புதம் – அற்புதமான; ரோம-ஹர்ஷணம் – மயிர்கூச்செரிகின்றது.
சஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு, கிருஷ்ணர், அர்ஜுனன் என்னும் இரு மஹாத்மாக்களுக்கு இடையிலான உரையாடலை நான் கேட்டேன். அதன் அற்புதமான விஷயங்களினால் எனக்கு மயிர்கூச்சம் ஏற்படுகின்றது.
பதம் 18.75
வ்யாஸ-ப்ராஸாதாச் ச்ருதவான் ஏதத் குஹ்யம் அஹம் பரம்
யோகம் யோகேஷ்வராத் க்ருஷ்ணாத் ஸாக்ஷாத் கதயத: ஸ்வயம்
வ்யாஸ-ப்ரஸாதாத் – வியாஸதேவரின் கருணையால்; ஷ்ருதவான் – கேட்ட; ஏதத் – இந்த; குஹ்யம் – இரகசியம்; அஹம் – நான்; பரம் – பரம; யோகம் – யோகம்; யோக-ஈஷ்வராத் – யோகிகளின் இறைவனான; க்ரு’ஷ்ணாத் – கிருஷ்ணரிடமிருந்து; ஸாக்ஷாத் – நேரடியாக; கதயத: – கூறப்பட்ட; ஸ்வயம் – தாமாகவே.
வியாசரின் கருணையால், யோகங்களின் இறைவனான கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தாமே நடத்திய இந்த மிகமிக இரகசியமான உரையாடலை நான் நேரடியாகக் கேட்டேன்.
பதம் 18.76
ராஜன் ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதம் இமம் அத்புதம்
கேஷவார்ஜுனயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர் முஹு:
ராஜன் – மன்னனே; ஸம்ஸ்ம்ரு’த்ய – நினைத்து; ஸம்ஸ்ம்ரு’த்ய – நினைத்து; ஸம்’வாதம் – உரையாடல்; இமம் – இந்த; அத்புதம் – அற்புதமான; கேஷவ – பகவான் கிருஷ்ணர்; அர்ஜுனயோ: – அர்ஜுனனின்; புண்யம் – புண்ணியம்; ஹ்ரு’ஷ்யாமி – இன்பமடைகின்றேன்; ச – மேலும்; முஹு: முஹு: – மீண்டும் மீண்டும்.
மன்னனே, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்குமிடையில் நடந்த இந்த அற்புதமான புனித உரையாடலை மீண்டும் மீண்டும் நினைத்து, ஒவ்வொரு கணமும் உணர்ச்சிவசப்பட்டு நான் இன்பமடைகின்றேன்.
பதம் 18.77
தச் ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபம் அத்-யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹான் ராஜன் ஹ்ருஷ்யாமி ச புன: புன:
தத் – அந்த; ச – மேலும்; ஸம்’ஸ்ம்ரு’த்ய – நினைத்து; ஸம்ஸ்ம்ரு’த்ய – நினைத்து; ரூபம் – உருவம்; அதி – சிறந்த; அத்புதம் – அற்புதமான; ஹரே: – பகவான் கிருஷ்ணருடைய; விஸ்மய: – வியக்கின்றேன்; மே – எனது; மஹான் – சிறந்த; ராஜன் – மன்னனே; ஹ்ரு‘ஷ்யாமி – இன்பமடைகின்றேன்; ச – மேலும்; புன: புன: – மீண்டும் மீண்டும்.
மன்னனே, பகவான் கிருஷ்ணருடைய அந்த அற்புத ரூபத்தை நினைத்து நினைத்து, நான் மேன்மேலும் வியப்பில் மூழ்கி, மீண்டும் மீண்டும் இன்பமடைகிறேன்.
பதம் 18.78
யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்-தர:
தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம
யத்ர – எங்கு; யோகேஷ்வர: – யோகிகளின் இறைவனான; க்ரு’ஷ்ண: – பகவான் கிருஷ்ணர்; யத்ர – எங்கு; பார்த: – பிருதாவின் மைந்தனே; தனு: தர: – வில்லையும் அம்புகளையும் ஏந்திய; தத்ர – அங்கு; ஸ்ரீ: – செல்வம்; விஜய: – வெற்றி; பூதி: – அசாதாரணமான வலிமை; த்ருவ: – நிச்சயம்; நீதி: – நீதி; மதி: மம – எனது அபிப்பிராயம்.
யோகிகளின் இறைவனான கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கின்றாரோ, உன்னத வில்லாளியான அர்ஜுனன் எங்கெல்லாம் இருக்கின்றானோ, அங்கெல்லாம் நிச்சயமாகச் செல்வமும் வெற்றியும் அசாதாரணமான வலிமையும் நியாயமும் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.