அத்தியாயம் – 16
தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்
பதம் 16.1 – 16.3
ஸ்ரீ-பகவான் உவாச
அபயம் ஸத்த்வ – ஸம்ஷுத்திர் க்ஞான-யோக – வ்யவஸ்திதி:
தானம் தமஷ் ச யக்ஞஷ் ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம்
அஹிம்ஸா ஸத்யம் அக்ரோதஸ் த்யாக: ஷாந்திர் அபைஷுனம்
தயா பூதேஷ்வ் அலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீர் அசாபலம்
தேஜ: க்ஷமா த்ருதி: ஷெளசம் அத்ரோஹோ நாதி-மானிதா
பவந்தி ஸம்பதம் தைவீம் அபிஜாதஸ்ய பாரத
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அபயம் – அச்சமின்மை; ஸத்த்வ-ஸம்’ஷுத்தி: – தனது இருப்பைத் தூய்மைப்படுத்துதல்; ஜ்ஞான – ஞானத்தினால்; யோக – இணைத்தலின்; வ்யவஸ்திதி: – நிலை; தானம் – தானம்; தம: – மனதைக் கட்டுப்படுத்துதல்; ச – மற்றும்; யஜ்ஞ: – யாகம் செய்தல்; ச – மற்றும்; ஸ்வாத்யாய: – வேத இலக்கியங்களைக் கற்றல்; தப: – தவம்; ஆர்ஜவம் – எளிமை; அஹிம்ஸா – அகிம்சை; ஸத்யம் – வாய்மை; அக்ரோத: – கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை; த்யாக: – துறவு; ஷாந்தி: – அமைதி; அபைஷுனம் – குற்றம் காண்பதில் விருப்பமின்மை; தயா – கருணை; பூதேஷு — எல்லா உயிர்களிடத்தும்; அலோலுப்த்வம் – பேராசையிலிருந்து விடுபட்டத்தன்மை; மார்தவம் – கண்ணியம்; ஹ்ரீ: – வெட்கம்; அசாபலம் – மனவுறுதி; தேஜ: – வீரம்; க்ஷமா – மன்னிக்கும் தன்மை; த்ரு’தி: – தைரியம்; ஷௌசம் – தூய்மை; அத்ரோஹ: – பொறாமையின்மை; ந – இல்லாமல்; அதி-மானிதா – மதிப்பை எதிர்பார்த்தல்; பவந்தி — ஆகின்றன; ஸம்பதம் – குணங்கள்; தைவீம் – தெய்வீக இயற்கையில்; அபிஜாதஸ்ய – பிறந்தவனின்; பாரத – பரதனின் மைந்தனே.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அச்சமின்மை, தனது நிலையை தூய்மைப்படுத்துதல், ஆன்மீக ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுதல், தானம், சுயக்கட்டுப்பாடு, யாகம் செய்தல், வேதங்களைக் கற்றல், தவம், எளிமை, அகிம்சை, வாய்மை, கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை, துறவு, சாந்தி, குற்றம் காண்பதில் விருப்பமின்மை, எல்லா உயிர்களின் மீதும் கருணை, பேராசையிலிருந்து விடுபட்ட தன்மை, கண்ணியம், வெட்கம், மனவுறுதி, வீரம், மன்னிக்கும் தன்மை, தைரியம், தூய்மை, பொறாமையின்மை, மரியாதையை எதிர்பார்க்காமல் இருத்தல் ஆகிய தெய்வீக குணங்கள், பரதனின் மைந்தனே, தெய்வீக இயல்புடைய உன்னதமான மனிதரைச் சார்ந்தவை.
பதம் 16.4
தம்போ தர்போ (அ)பிமானஷ் ச க்ரோத: பாருஷ்யம் ஏவ ச
அக்ஞானம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதம் ஆஸுரீம்
தம்ப: – தற்பெருமை; தர்ப: – அகந்தை; அபிமான: – வீண் அபிமானம்; ச – மேலும்; க்ரோத: – கோபம்; பாருஷ்யம் – கொடூரம்; ஏவ – நிச்சயமாக; ச – மற்றும்; அஜ்ஞானம் – அறியாமை; ச – மற்றும்; அபிஜாதஸ்ய – பிறந்தவனின்; பார்த – பிருதாவின் மைந்தனே; ஸம்பதம் – குணங்கள்; ஆஸுரீம் – அசுர இயற்கையின்.
பிருதாவின் மைந்தனே, தற்பெருமை, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும்.
பதம் 16.5
தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா
மா ஷு ச: ஸம்பதம் தைவீம் அபிஜாதோ (அ)ஸி பாண்டவ
தைவீ – தெய்வீகமான; ஸம்பத் – குணங்கள்; விமோக்ஷாய – முக்திக்கானவை; நிபந்தாய – பந்தப்படுத்துபவையாக; ஆஸுரீ – அசுர குணங்கள்; மதா – கருதப்படுகின்றன; மா – வேண்டாம்; ஷுச: – கவலைப்பட; ஸம்பதம் – இயற்கையுடன்; தைவீம் – தெய்வீக; அபிஜாத: – பிறந்து; அஸி – நீ உள்ளாய்; பாண்டவ – பாண்டுவின் மைந்தனே.
தெய்வீக குணங்கள் முக்தி தரக்கூடியவை, அசுர குணங்களோ பந்தப்படுத்துபவை. பாண்டுவின் மைந்தனே, கவலைப்படாதே, நீ தெய்வீக குணங்களுடன் பிறந்திருக்கிறாய்.
பதம் 16.6
த்வெள பூத – ஸர்கெள லோகே (அ)ஸ்மின் தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஷ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஷ்ருணு
த்வௌ – இரண்டு; பூத-ஸர்கௌ: – படைக்கப்பட்ட உயிர்வாழிகள்; லோகே – இவ்வுலகத்தில்; அஸ்மின் – இந்த; தைவ: – தெய்வீகமானவர்கள்; ஆஸுர – அசுரர்கள்; ஏவ – நிச்சயமாக; ச – மற்றும்; தைவ: – தெய்வீகமான; விஸ்தரஷ: – விவரமாக; ப்ரோக்த: – கூறினேன்; ஆஸுரம் – அசுரத்தனமான; பார்த – பிருதாவின் மைந்தனே; மே – என்னிடமிருந்து; ஷ்ரு’ணு – கேட்பாயாக.
பிருதாவின் மைந்தனே, இவ்வுலகிலுள்ள படைக்கப்பட்ட உயிர்வாழிகளில், தெய்வீகமானவர்கள், அசுரர்கள் என இரு வகையினர் உள்ளனர். தெய்வீக குணங்களைப் பற்றி ஏற்கனவே மிக விவரமாக உனக்கு விளக்கியுள்ளேன். இனி அசுரர்களின் குணங்களை என்னிடமிருந்து கேட்பாயாக.
பதம் 16.7
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜனா ந விதுர் ஆஸுரா:
ந ஷெளசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே
ப்ரவரு’த்திம் – முறையான செயல்; ச – மற்றும்; நிவ்ரு’த்திம் – முறையற்ற செயல்; ச – மற்றும்; ஜனா: – நபர்கள்; ந – இல்லை; விது: – அறிவது; ஆஸுரா: – அசுர குணத்தில்; ந – இல்லை; ஷௌசம் – தூய்மை; ந – இல்லை; அபி – கூட; ச – மேலும்; ஆசார: – நடத்தை; ந – இல்லை; ஸத்யம் – வாய்மை; தேஷு – அவர்களில்; வித்யதே – இருப்பது.
அசுரத்தன்மை உடையவர்கள், என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக் கூடாது என்றும் அறிவதில்லை. தூய்மையோ, முறையான நடத்தையோ, வாய்மையோ அவர்களில் காணப்படுவதில்லை.
பதம் 16.8
அஸத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகத் ஆஹுர் அனீஷ்வரம்
அபரஸ்பர – ஸம்பூதம் கிம் அன்யத் காம – ஹைதுகம்
அஸத்யம் – உண்மையற்றது; அப்ரதிஷ்டம் – ஆதாரமற்றது; தே – அவர்கள்; ஜகத் — இந்த பிரபஞ்சம்; ஆஹு: – கூறுகின்றனர்; அனீஷ்வரம் — கட்டுப்படுத்துபவர் இல்லாமல்; அபரஸ்பர – காரணமின்றி; ஸம்பூதம் –தோன்றியது; கிம் அன்யத் – வேறு காரணம் எதுவும் இல்லை; காம-ஹைதுகம் – காமத்தின் காரணத்தினால் மட்டுமே.
அவர்கள், இவ்வுலகம் பொய்யென்றும், அஸ்திவாரம் இல்லாதது என்றும், கட்டுப்படுத்தும் கடவுள் எவரும் இல்லை என்றும் கூறுகின்றனர். காம இச்சையால் உண்டாக்கப்பட்டதாகவும் காமத்தைத் தவிர இதற்கு வேறு காரணம் இல்லை என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
பதம் 16.9
ஏதாம் த்ருஷ்டிம் அவஷ்டப்ய நஷ்டாத்மானோ (அ)ல்ப – புத்தய:
ப்ரபவந்த் – யுக்ர – கர்மாண: க்ஷயாய ஜகதோ (அ)ஹிதா:
ஏதாம் – இந்த; த்ரு’ஷ்டிம் – பார்வையை; அவஷ்டப்ய – ஏற்றுக் கொண்டு; நஷ்ட – இழந்த; ஆத்மான: – தம்மை; அல்ப-புத்தய: – சிற்றறிவு உடையோர்; ப்ரபவந்தி – வளர்கின்றனர்; உக்ர-கர்மாண: – துன்பம் தரும் செயல்களில் ஈடுபட்டு; க்ஷயாய – அழிப்பதற்கான; ஜகத: – உலகத்தின்; அஹிதா: -பலனற்ற.
இத்தகு முடிவுகளைப் பின்பற்றி, அறிவில்லாதவர்களும் தம்மை இழந்தவர்களுமான அசுரர்கள், உலகத்தை அழிப்பதற்கான பலனற்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பதம் 16.10
காமம் ஆஷ்ரித்ய துஷ்பூரம் தம்ப – மான – மதான்விதா:
மோஹாத் க்ருஹீத்வாஸத் – க்ராஹான் ப்ரவர்தந்தே (அ)ஷுசி – வ்ரதா:
காமம் – காமத்திடம்; ஆஷ்ரித்ய – தஞ்சமடைந்து; துஷ்பூரம் – திருப்தியடையாத; தம்ப – தற்பெருமை; மான – பொய் கௌரவத்தின்; மத-அன்விதா: – உயர் அபிப்பிராயத்தில் மூழ்கி; மோஹாத் – மயக்கத்தால்; க்ரு’ஹீத்வா – ஏற்றுக் கொண்டு; அஸத் – நிரந்தரமற்ற; க்ராஹான் –விஷயங்களை; ப்ரவர்தந்தே – வளர்கின்றனர்; அஷுசி – தூய்மையற்ற; வ்ரதா – விரதம் கொண்டு.
அசுரத் தன்மையுடையவர்கள், திருப்தியடையாத காமத்திடம் தஞ்சமடைந்து, கர்வம் மற்றும் பொய் கெளவரத்தின் கவர்ச்சியில் மூழ்கி மயக்கப்பட்டுள்ளனர். எப்போதும் தூய்மையற்ற விரதங்களில் ஈடுபடும் அவர்கள் நிரந்தரமற்ற பொருள்களால் கவரப்படுகின்றனர்.
பதம் 16.11 – 16.12
சின்தாம் அபரிமேயாம் ச ப்ரலயாந்தாம் உபாஷ்ரிதா:
காமோபபோக – பரமா ஏதாவத் இதி நிஷ்சிதா:
ஆஷா – பாஷ – ஷதைர் பத்தா: காம – க்ரோத – பராயணா:
ஈஹந்தே காம – போகார்தம் அன்யாயேனார்த – ஸஞ்சயான்
சிந்தாம் – பயங்களும் கவலைகளும்; அபரிமேயாம் – அளவற்றவை; ச – மற்றும்; ப்ரலய-அந்தம் – மரணம் வரை; உபாஷ்ரிதா: – அடைக்கலம் கொண்டு; காம–உபபோக – புலனுகர்ச்சி; பரமா: – வாழ்வின் மிகவுயர்ந்த குறிக்கோளாக; ஏதாவத் – இவ்வாறு; இதி – இவ்வழியில்; நிஷ்சிதா: -நிச்சயமாக; ஆஷா-பாஷ – ஆசைகள் என்னும் கயிறுகளால்; ஷதை: -நூற்றுக்கணக்கான; பத்தா: – பந்தப்பட்டு; காம – காமம்; க்ரோத: – கோபத்தின்; பராயணா: – மனோநிலையில் எப்போதும் நிலைபெற்று; ஈஹந்தே – அவர்கள் விரும்புகின்றனர்; காம – காமம்; போக: – புலனின்பம்; அர்தம் – நோக்கத்திற்காக; அன்யாயேன – அநியாயமாக; அர்த – செல்வத்தை; ஸஞ்சயான் – சேகரிக்கின்றனர்.
மனித நாகரிகத்தின் முக்கியத் தேவை புலன்களைத் திருப்தி செய்வதே என்று அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறாக வாழ்வின் இறுதிவரையுள்ள அவர்களது கவலைகள் அளக்க முடியாதவை. ஆசைகள் என்னும் நூற்றக்கணக்கான கயிறுகளால் பந்தப்படுத்தப்பட்டு, காமத்திலும் கோபத்திலும் மூழ்கி, அவர்கள் புலனுகர்ச்சிக்காக அநியாயமான வழிகளில் செல்வத்தைச் சேகரிக்கின்றனர்.
பதம் 16.13 – 16.5
இதம் அத்ய மயா லப்தம் இமம் ப்ராப்ஸ்யே மனோரதம்
இதம் அஸ்தீதம் அபி மே பவிஷ்யதி புனர் தனம்
அஸெள மயா ஹத: ஷத்ருர் ஹனிஷ்யே சாபரான் அபி
ஈஷ்வரோ (அ)ஹம் அஹம் போகீ ஸித்தோ (அ)ஹம் பலவான் ஸுகீ
ஆட்யோ (அ)பிஜனவான் அஸ்மி கோ (அ)ன்யோ (அ)ஸ்தி ஸத்ருஷோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத் – யக்ஞான – விமோஹிதா:
இதம் – இந்த; அத்ய – இன்று; மயா – என்னால்; லப்தம் — அடையப்பட்டது; இமம் – இந்த; ப்ராப்ஸ்யே – அடைவேன்; மன:-ரதம் – எனது ஆசைகளுக்கு ஏற்ப; இதம் – இந்த; அஸ்தி – இருக்கின்றது; இதம் – இந்த; அபி – கூட; மே – எனது; பவிஷ்யதி – எதிர்காலத்தில் அது அதிகமாகும்; புன: – மீண்டும்; தனம் – செல்வம்; அஸௌ – அதுவும்; மயா – என்னால்; ஹத: – கொல்லப்பட்டனர்; ஷத்ரு – எதிரி; ஹனிஷ்யே – கொல்வேன்; ச – மேலும்; அபரான் – மற்றவர்கள்; அபி – நிச்சயமாக; ஈஷ்வர: – இறைவன்; அஹம் –நானே; அஹம் – நானே; போகீ: – அனுபவிப்பவன்; ஸித்த: – பக்குவமானவன்; அஹம் – நானே; பல-வான் – பலமுடையவன்; ஸுகீ – மகிழ்ச்சியானவன்; ஆட்ய: – செல்வமுடையவன்; அபிஜன-வான் – செல்வச் செழிப்புமிக்க உறவினர்களால் சூழப்பட்டவன்; அஸ்மி – நானே; க: – யார்; அன்ய – வேற்று நபர்; அஸ்தி – இருக்கின்றனர்; ஸத்ரு’ஷ: – போல; மயா – என்னை; யக்ஷ்யே – யாகம் செய்வேன்; தாஸ்யாமி – தானம் செய்வேன்; மோதிஷ்ய – இன்பமாக இருப்பேன்; இதி – இவ்வாறு; அஜ்ஞான – அறியாமையால்; விமோஹிதா: – மயக்கப்பட்டு.
அசுரத் தன்மையுடையவன் எண்ணுகின்றான்: “இன்று என்னிடம் இவ்வளவு சொத்து உள்ளது, எனது திட்டங்களின் படி நான் நிறைய இலாபம் அடையப் போகின்றேன். தற்போது இவ்வளவு என்னுடையதாக இருக்கின்றது, எதிர்காலத்தில் இது மேன்மேலும் பெருகும். அவன் என்னுடைய எதிரி, அவனை நான் கொன்றுவிட்டேன், என்னுடைய மற்ற எதிரிகளும் கொல்லப்படுவர். நானே எல்லாவற்றின் இறைவன். நானே அனுபவிப்பாளன். நானே பக்குவமானவனும், பலமுடையவனும், மகிழ்ச்சியானவனும் ஆவேன். செல்வாக்கு மிக்க உறவினர்களால் சூழப்பட்ட மிகப்பெரிய செல்வந்தன் நானே. என்னைப் போன்று சக்தியுடையவனும் மகிழ்பவனும் வேறு யாரும் இல்லை. நான் யாகங்கள் செய்வேன், தானங்கள் கொடுப்பேன், இவ்வாறு இன்பமாக இருப்பேன்.” இவ்விதமாக, அத்தகு மக்கள் அறியாமையினால் மயக்கப்பட்டுள்ளனர்.
பதம் 16.16
அனேக – சித்த – விப்ரான்தா மோஹ – ஜால – ஸமாவ்ருதா:
ப்ரஸக்தா: காம – போகேஷு பதன்தி நரகே (அ)ஷுசெள
அனேக – எண்ணற்ற; சித்த – கவலைகளால்; விப்ராந்தா: – குழப்பமுற்று; மோஹ – மோகத்தின்; ஜால – வலையினால்; ஸமாவ்ரு’தா: – சூழப்பட்டு; ப்ரஸக்தா: – பற்றுதல் கொண்டு; காம-போகேஷு – புலனுகர்ச்சியில்; பதந்தி – இழிகின்றனர்; நரகே – நரகத்திற்கு; அஷுசௌ – தூய்மையற்ற.
இவ்வாறு அநேக கவலைகளால் குழப்பமுற்று மோகத்தின் வலையினால் சூழப்பட்ட அவர்கள், புலனின்பத்தில் பலமான பற்றுடையவர்களாகி நரகத்தில் வீழ்ச்சியுறுகின்றனர்.
பதம் 16.17
ஆத்ம-ஸம்பாவிதா: ஸ்தப்தா தன-மான-மதான்விதா:
யஜன்தே நாம-யக்ஞைஸ் தே தம்பேனாவிதி–பூர்வகம்
ஆத்ம-ஸம்பாவிதா: – தன்னில் திருப்தியுற்று; ஸ்தப்தா – திமிர் கொண்டு; தன-மான – செல்வம் மற்றும் பொய்க் கௌரவத்தின்; மத – மயக்கத்தில்; அன்விதா – மூழ்கி; யஜந்தே – யாகங்கள் செய்கின்றனர்; நாம – பெயரளவில் மட்டுமே; யஜ்ஞை: – யாகங்களுடன்; தே – அவர்கள்; தம்பேன – தற்பெருமையால்; அவிதி –பூர்வகம் – எந்த விதிகளையும் பின்பற்றாமல்.
செல்வத்தாலும் பொய் கெளவரத்தாலும் மயக்கப்பட்டு, தன்னில் திருப்தியுற்று எப்போதும் திமிருடன் விளங்கும் இவர்கள், சில சமயங்களில் எந்த சட்டதிட்டத்தையும் பின்பற்றாமல் பெயரளவில் கர்வத்துடன் யாகங்களைச் செய்கின்றனர்.
பதம் 16.18
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஷ்ரிதா:
மாம் ஆத்ம – பர – தேஹேஷு ப்ரத்விஷந்தோ (அ)ப்யஸூயகா:
அஹங்காரம் – அஹங்காரம்; பலம் – பலம்; தர்பம் – தற்பெருமை; காமம் – காமம்; க்ரோதம் – கோபம்; ச – மேலும்; ஸம்ஷ்ரிதா: – அடைக்கலம் கொண்டு; மாம் – என்னை; ஆத்ம – அவர்களது சொந்த; பர – இதர; தேஹேஷு – உடல்களில்; ப்ரத்விஷந்த: – நிந்திக்கின்றனர்; அப்ய–ஸூயகா: — பொறாமை.
அஹங்காரம், பலம், தற்பெருமை, காமம், மற்றும் கோபத்தில் மயங்கியுள்ள அசுரர்கள், தங்களது சொந்த உடல்களிலும் பிறருடைய உடல்களிலும் வீற்றுள்ள பரம புருஷ பகவானிடம் பொறாமை கொண்டு, உண்மை மதத்தினை நிந்திக்கின்றனர்.
பதம் 16.19
தான் அஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான்
க்ஷிபாம் – யஜஸ்ரம் அஷுபான் ஆஸுரீஷ்வ் ஏவ யோனிஷு
தான் — அவர்கள்; அஹம் – நான்; த்விஷத: – பொறாமை; க்ரூரான் – கருணையற்ற; ஸம்’ஸாரேஷு – ஜட வாழ்க்கை என்னும் கடலுக்குள்; நர-ஆதமான் – மனித இனத்தின் தாழ்ந்த வகுப்பில்; க்ஷிபாமி – வைக்கின்றேன்; அஜஸ்ரம் – நிரந்தரமாக; அஷுபான் — அமங்கலமான; ஆஸுரீஷு – அசுரத்தனமான; ஏவ – நிச்சயமாக; யோனிஷு – கர்ப்பங்களில்.
பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை, ஜட வாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகின்றேன்.
பதம் 16.20
ஆஸுரீம் யோனிம் ஆபன்னா மூடா ஜன்மனி ஜன்மனி
மாம் அப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த் – யதமாம் கதிம்
ஆஸுரீம் – அசுரத்தனமான; யோனிம் – இனங்களை; ஆபன்னா: – பெற்று; மூடா: – முட்டாள்கள்; ஜன்மனி ஜன்மனி – பிறவி பிறவியாக; மாம் – என்னை; அப்ராப்ய – அடையாமல்; ஏவ – நிச்சயமாக; கௌந்தேய – குந்தியின் மகனே; தத: – அதன்பின்; யாந்தி – செல்கின்றனர்; அதமாம் – இழிவான; கதிம் – இலக்கு.
குந்தியின் மகனே, அசுரத்தனமான வாழ்வினங்களில் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் இத்தகையவர்கள், என்றுமே என்னை அடைய முடியாது. படிப்படியாக அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்வினங்களில் முழ்குகின்றனர்.
பதம் 16.21
த்ரி – விதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷனம் ஆத்மன:
காம: க்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத்
த்ரி-விதம் – மூன்று விதமான; நரகஸ்ய – நரகத்தின்; இதம் – இந்த; த்வாரம் – கதவு; நாஷனம் – அழிக்கக்கூடிய; ஆத்மன: – ஆத்மாவை; காம: – காமம்; க்ரோத: – கோபம்; ததா – அதுபோன்றே; லோப: – பேராசை; தஸ்மாத் – எனவே; ஏதத் – இந்த; த்ரயம் – மூன்றையும்; த்யஜேத் – ஒருவன் துறக்க வேண்டும்.
காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டு செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப்பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும்.
பதம் 16.22
ஏதைர் விமுக்த: கெளந்தேய தமோ – த்வாரைஸ் திரிபிர் நர:
ஆசரத் – யாத்மன: ஷ்ரேயஸ் ததோ யாதி பராம் கதிம்
ஏதை: – இவற்றிலிருந்து; விமுக்த – முக்தி பெற்ற; கௌந்தேய – குந்தியின் மகனே; தம:-த்வாரை: – அறியாமையின் கதவுகளிலிருந்து; த்ரிபி: – மூன்று விதமான; நர: – மனிதன்; ஆசரதி – ஆற்றுகின்றான்; ஆத்மன: – தனக்கு; ஷ்ரேய: – நன்மைதரும்; தத: – அதன்பின்; யாதி – அவன் செல்கின்றான்; பராம் – பரம; கதிம் – இலக்கை.
குந்தியின் மகனே, நரகத்தின் இந்த மூன்று கதவுகளிலிருந்து தப்பிய மனிதன், தன்னுணர்விற்கு அனுகூலமான செயல்களைச் செய்து படிப்படியாக பரம இலக்கை அடைகின்றான்.
பதம் 16.23
ய: ஷாஸ்த்ர – விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம – காரத:
ந ஸ ஸித்திம் அவாப்னோதி ந ஸுகம் ந பராம் கதிம்
ய: – எவனொருவன்; ஷாஸ்த்ர-விதிம் – சாஸ்திரங்களின் விதிகளை; உத்ஸ்ரு’ஜ்ய – புறக்கணித்து; வர்ததே – இருப்பவன்; காம-காரத: – காமத்தினால் மனம்போன போக்கில் செயற்பட்டு; ந – இல்லை; ஸ: – அவன்; ஸித்திம் – பக்குவத்தை; அவாப்னோதி – அடைவது; ந – இல்லை; ஸுகம் – இன்பம்; ந – இல்லை; பராம் – பரம; கதிம் – பக்குவமான நிலை.
சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.
பதம் 16.24
தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய – வ்யவஸ்திதெள
க்ஞாத்வா ஷாஸ்த்ர – விதானோக்தம் கர்ம கர்தும் இஹார்ஹஸி
தஸ்மாத் – எனவே; ஷாஸ்த்ரம் – சாஸ்திரங்கள்; ப்ரமாணம் – சாட்சி; தே – உன்னுடைய; கார்ய – கடமை; அகார்ய – செய்யக் கூடாத செயல்கள்; வ்யவஸ்திதௌ – முடிவு செய்வதில்; ஜ்ஞாத்வா – அறிந்து; ஷாஸ்த்ர – சாஸ்திரத்தின்; விதான – விதிகள்; உக்தம் – உரைக்கப்பட்டுள்ளபடி; கர்ம – செயல்; கர்தும் – செய்ய; இஹ – இவ்வுலகில்; அர்ஹஸி – வேண்டும்.
எது கடமை என்றும் எது கடமையல்ல என்றும் சாஸ்திரங்களின் விதிகளால் ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும். படிப்படியாக ஏற்றம் பெறுவதற்கு இத்தகு சட்டதிட்டங்களை அறிந்து அவன் செயல்படவேண்டும்.