அத்தியாயம் – 15
புருஷோத்தம யோகம்
பதம் 15.1
ஸ்ரீ-பகவான் உவாச
ஊர்த்வ-மூலம் அத: – ஷாகம் அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ் தம் வேத ஸ வேத-வித்
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஊர்த்வ-மூலம் – மேலே வேர்களுடன்; அத: – கீழ் நோக்கிய; ஷாகம் – கிளைகள்; அஷ்வத்தம் – அரச மரம்; ப்ராஹு: – கூறப்படுகின்றது; அவ்யயம் – நித்தியமான; சந்தாம்ஸி – வேத பதங்கள்; யஸ்ய – அதன்; பர்ணானி – இலைகள்; ய: – எவனொருவன்; தம் – அதை; வேத – அறிகின்றானோ; ஸ: – அவன்; வேத-வித் – வேதங்களை அறிந்தவன்.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: மேல்நோக்கிய வேர்களையும் கீழ்நோக்கிய கிளைகளையும், வேத பதங்களை இலைகளாகவும் கொண்ட ஓர் ஆலமரம் உள்ளது என்று கூறப்படுகின்றது. இம்மரத்தை அறிந்தவன் வேதங்களை அறிந்தவன்.
பதம் 15.2
அதஷ் சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ் தஸ்ய ஷாகா
குண-ப்ரவ்ருத்தா விஷய-ப்ரவாலா:
அதஷ்ச மூலான்-யனுஸந்ததானி
கர்மானுபந்தீனி மனுஷ்ய-லோகே
அத: – கீழ்நோக்கிய; ச – மேலும்; ஊர்த்வம் – மேல்நோக்கிய; ப்ரஸ்ருதா: – விரிந்த; தஸ்ய – அதன்; ஷாகா: – கிளைகள்; குண – ஜட இயற்கையின் குணங்கள்; ப்ரவ்ரு’த்தா: – வளர்கின்றன; விஷய – புலன் விஷயங்கள்; ப்ரவாலா: – சிறு கிளைகள்; அத: – கீழ்நோக்கி; ச – மேலும்; மூலானி – வேர்கள்; அனுஸந்ததானி – விரிந்த; கர்ம – செயலில்; அனுபந்தீனி – பந்தப்படுத்துகின்றன; மனுஷ்ய-லோகே – மானிட உலகில்
இம்மரத்தின் கிளைகள், ஜட இயற்கையின் முக்குணங்களால் வளப்படுத்தப்பட்டு, மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் விரிகின்றன. உபகிளைகள் புலனின்ப விஷயங்களாகும். இம்மரத்திலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள், பலன் நோக்குச் செயல்களால் பந்தப்படுத்தப்பட்டுள்ளன.
பதம் 15.3 – 15.4
ந ரூபம் அஸ்யேஹ ததோபலப்யதே
நான்தோ ந சாதிர் ந ச ஸம்ப்ரதிஷ்டா
அஷ்வத்தம் ஏனம் ஸு-விருட மூலம்
அஸங்க-ஷஸ்த்ரேண த்ருடேன சித்த்வா
தத: பதம் தத் பரிமார்கிதவ்யம்
யஸ்மின் கதா ந நிவர்தந்தி பூய:
தம் ஏவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ
ந – இல்லை; ரூபம் – உருவம்; அஸ்ய – இந்த மரத்தின்; இஹ – இவ்வுலகில்; ததா – மேலும்; உபலப்யதே – காணப்பட கூடியது; ந – இல்லை; அந்த – முடிவு; ச – மேலும்; ஆதி: – ஆரம்பம்; ந – இல்லை; ச – மேலும்; ஸம்ப்ரதிஷ்டா – அஸ்திவாரம்; அஷ்வத்தம் – அரச மரம்; ஏனம் – இந்த; ஸு-விருட – உறுதியாக; மூலம் – வேர்விட்ட; அஸங்க-ஷஸ்த்ரேண – பற்றின்மை எனும் ஆயுதத்தால்; த்ரு’டோன – பலமாக; சித்தவா – அறுப்பதால்; தத: – அதன் பின்; பதம் – நிலை; தத் – அதன்; பரிமார்கிதவ்யம் – தேடப்பட வேண்டும்; யஸ்மின் – எங்கே; கதா: – சென்றபின்; ந – என்றுமில்லை; நிவர்தந்தி – அவர்கள் திரும்பி வருவது; பூய – மீண்டும்; தம் – அவனுக்கு; ஏவ – நிச்சயமாக; ச – கூட; ஆத்யம் – மூல; புருஷம் – புருஷோத்தமரான பகவான்; ப்ரபத்யே – சரணடைந்து; யத: – யாரிடமிருந்து; ப்ரவ்ரு’த்தி: – தொடக்கம்; ப்ரஸ்ரு’தா – விரிவு; புராணீ – மிகப் பழைய.
இம்மரத்தின் உண்மை உருவம் இவ்வுலகில் காணப்படக் கூடியதல்ல. இஃது எங்கே முடிகின்றது, எங்கே தொடங்குகின்றது, அல்லது இதன் அஸ்திவாரம் எங்கே இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை பற்றின்மை எனும் ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டிச் சாய்க்க வேண்டும். அதன் பின்னர், எங்கே செல்வதால் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தை நாடி, அங்கே, யாரிடமிருந்து எல்லாம் தொடங்குகின்றதோ, யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகின்றதோ, அந்த பரம புருஷ பகவானிடம் சரணடைய வேண்டும்.
பதம் 15.5
நிர்மான-மோஹா ஜித-ஸங்க-தோஷா
அத்யாத்ம-நித்யா வினிவ்ருத்த-காமா:
த்வந்த்வைர் விமுக்தா: ஸுக-து:க-ஸம்க்ஞைர்
கச்சந்த்-யமூடா: பதம் அவ்யயம் தத்
நிர் – இன்றி; மான – பொய் கௌரவம்; மோஹா: – மயக்கம்; ஜித – வென்று; ஸங்க: – தொடர்பு; தோஷா: – தோஷங்கள்; அத்யாத்ம – ஆன்மீக அறிவில்; நித்யா: – நித்தியத்தில்; வினிவ்ரு’த்த – தொடர்பின்றி; காமா: – காமத்தின்; த்வந்த்வை: – இருமையிலிருந்து; விமுக்தா: – விடுதலை பெற்று; ஸுக-து:க – இன்ப துன்பம்; ஸம்ஜ்ஞை: – எனப்படும்; கச்சந்தி – அடைகின்றனர்; அமூடா – மயங்காத; பதம் – நிலையை; அவ்யயம் – நித்தியமான; தத் – அந்த.
பொய் கெளரவம், மயக்கம் மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்தைப் புரிந்து கொண்டு, பெளதிக காமத்தை நிறுத்திவிட்டு, இன்ப துன்பம் என்னும் இருமையை ஒழித்து, மயக்கமுறாமல் இருப்பவர்கள், பரம புருஷரிடம் சரணடைவது எவ்வாறு என்பதை அறிந்து, அந்த நித்திய ராஜ்ஜியத்தை அடைகின்றனர்.
பதம் 15.6
ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக:
யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம
ந – இல்லை; தத் – அந்த; பாஸயதே – பிரகாசப்படுத்துவது; ஸூர்ய: – சூரியன்; ந – இல்லை; ஷஷாங்க: – சந்திரன்; ந – இல்லை; பாவக: – நெருப்பு, மின்சாரம்; யத் – எங்கே; கத்வா – சென்றபின்; ந – ஒருபோதும் இல்லை; நிவர்தந்தே – அவர்கள் திரும்பி வருவது; தத் தாம – அந்த இருப்பிடம்; பரமம் – பரமம்; மம – எனது.
எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.
பதம் 15.7
மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி
மம – எனது; ஏவ – நிச்சயமாக; அம்ஷ: – அம்சங்கள்; ஜீவ-லோகே – கட்டுண்ட வாழ்வின் உலகத்தில்; ஜீவ-பூத: – கட்டுண்ட ஆத்மாக்கள்; ஸநாதன: – நித்தியமாக; மன: – மனம்; ஷஷ்டானி – ஆறு; இந்த்ரியாணி – புலன்கள்; ப்ரக்ரு’தி — ஜட இயற்கையில்; ஸ்தானி – நிலைபெற்று; கர்ஷதி – கடினமாகச் சிரமப்படுகின்றனர்.
இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.
பதம் 15.8
ஷரீரம் யத் அவாப்னோதி யச் சாப்-யுத்க்ராமதீஷ்வர:
க்ருஹீத்வைதானி ஸம்யாதி வாயுர் கந்தான் இவாஷயாத்
ஷரீரம் – உடல்; யத் – போல; அவாப்னோதி – அடைகின்றான்; யத் – போல; ச அபி – மேலும்; உத்க்ராமதி – துறந்து; ஈஷ்வர: – உடலின் உரிமையாளன்; க்ரு’ஹீத்வா – பெற்று; ஏதானி – இவையெல்லாம்; ஸம்’யாதி – செல்கின்றது; வாயு: – காற்று; கந்தான் – நறுமணம்; இவ – போல; ஆஷயாத் – அவற்றின் மூலங்களிலிருந்து.
காற்று நறுமணத்தைத் தாங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் இருக்கும் உயிர்வாழி, ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு வாழ்வின் பல்வேறு உணர்வுகளைச் சுமந்து செல்கிறான். இவ்வாறு, ஒருவகையான உடலைப் பெற்று, பின்னர் மீண்டும் வேறொரு உடலை ஏற்பதற்காக இதனைக் கைவிடுகிறான்.
பதம் 15.9
ஷ்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஷனம் ச ரஸனம் க்ராணம் ஏவ ச
அதிஷ்டாய மனஷ் சாயம் விஷயான் உபஸேவதே
ஷ்ரோத்ரம் — காதுகள்; சக்ஷு: – கண்கள்; ஸ்பர்ஷனம் – தொடு உணர்வு; ச – மேலும்; ரஸனம் – நாக்கு; க்ராணம் – நுகரும் சக்தி; ஏவ – மேலும்; ச – மற்றும்; அதிஷ்டாய – நிலைபெற்று; மன: – மனதில்; ச – மேலும்; அயம் – அவன்; விஷயான் – புலனின்ப விஷயங்களை; உபஸேவதே – அனுபவிக்கின்றான்.
இவ்வாறு வேறொரு ஸ்தூல உடலைப் பெறும் உயிர்வாழி, மனதை மையமாகக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட விதமான காது, கண், நாக்கு, மூக்கு, தொடு புலன் ஆகியவற்றை அடைகிறான். இதன் மூலம் குறிப்பிட்ட புலனின்ப விஷயங்களை அவன் அனுபவிக்கின்றான்.
பதம் 15.10
உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜானம் வா குணான்விதம்
விமூடா நானுபஷ்யந்தி பஷ்யந்தி க்ஞான-சக்ஷுஷ:
உத்க்ராமந்தம் – உடலை நீத்து; ஸ்திதம் – உடலில் நிலைபெற்று; வா அபி – அல்லது; புஞ்ஜானம் – அனுபவித்துக்கொண்டு; வா – அல்லது; குண-அன்விதம் – ஜட இயற்கை குணங்களின் மயக்கத்தின் கீழ்; விமூடா: – முட்டாள்கள்; ந – இல்லை; அனுபஷ்யந்தி – காண்பதற்கு; பஷ்யந்தி – காணலாம்; ஜ்ஞான-சக்ஷுஷ: – ஞானத்தின் கண்களைப் பெற்றவர்கள்.
முட்டாள்கள், உயிர்வாழி எவ்வாறு தனது உடலைக் கைவிடுகிறான் என்பதையோ, இயற்கை குணங்களின் மயக்கத்தின் கீழ் எத்தகு உடலை அவன் அனுபவித்துக் கொண்டுள்ளான் என்பதையோ புரிந்து கொள்ள முடியாது. ஆனால் யாருடைய கண்கள் ஞானத்தில் பயிற்சி பெற்றுள்ளதோ அவரால் இவையனைத்தையும் காண முடியும்.
பதம் 15.11
யதந்தோ யோகினஷ் சைனம் பஷ்யந்த்-யாத்மன்-யவஸ்திதம்
யதந்தோ (அ)ப்-யக்ருதாத்மானோ நைனம் பஷ்யந்த-யசேதஸ:
யதந்த: – முயன்று கொண்டு; யோகின: – ஆன்மீகவாதிகள்; ச – மேலும்; ஏனம் — இதை; பஷ்யந்தி – காண இயலும்; ஆத்மனி – ஆத்மாவில்; அவஸ்திதம் — நிலைபெற்று; யதந்த: – முயன்று கொண்டு; அபி – இருந்தாலும்; அக்ரு’த-ஆத்மான: – தன்னுணர்வு இல்லாதவர்கள்; ந – இல்லை; ஏனம் – இதை; பஷ்யந்தி – காண்பது; அசேதஸ: – வளர்ச்சியடையாத மனமுடையோர்.
தன்னுணர்வில் நிலைபெற்று முயற்சி செய்யும் ஆன்மீகவாதிகள் இவற்றையெல்லாம் தெளிவாகக் காண முடியும். ஆனால் வளர்ச்சி பெறாத மனமுடையவர்களும் தன்னுணர்வில் நிலை பெறாதவர்களும், முயற்சி செய்தாலும் கூட என்ன நடக்கின்றது என்பதைக் காண இயலாது.
பதம் 15.12
யத் ஆதித்ய-கதம் தேஜோ ஜகத் பாஸயதே (அ)கிலம்
யச் சந்த்ரமஸி யச் சாக்னெள தத் தேஜோ வித்தி மாமகம்
யத் – எது; ஆதித்ய கதம் – சூரிய ஒளியில்; தேஜ: – பிரகாசம்; ஜகத் – உலகம் முழுவதையும்; பாஸயதே – பிரகாசப்படுத்துகின்றதோ; அகிலம் – முழுமையாக; யத் – எது; சந்த்ரமஸி – சந்திரனில்; யத் – எது; ச – மேலும்; அக்னௌ – நெருப்பில்; தத் – அந்த; தேஜ: – பிரகாசம்; வித்தி — புரிந்துகொள்; மாமகம் – என்னிடமிருந்து.
உலகம் முழுவதிலும் இருளை விலக்குகின்ற சூரியனின் பிரகாசம் என்னிடமிருந்தே வருகின்றது. மேலும், சந்திரனின் பிரகாசமும் நெருப்பின் பிரகாசமும் கூட என்னிடமிருந்தே வருகின்றன.
பதம் 15.13
காம் ஆவிஷ்ய ச பூதானி தாரயாம்-யஹம் ஓஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:
காம் — கிரகங்கள்; ஆவிஷ்ய – நுழைந்து; ச – மேலும்; பூதானி – உயிர்வாழிகள்; தாரயாமி – தாங்கிக் கொண்டுள்ளேன்; அஹம் – நான்; ஓஜஸா – எனது சக்தியால்; புஷ்ணாமி – வளப்படுத்துகின்றேன்; ச – மேலும்; ஒளஷதீ: – காய்கறிகள்; ஸர்வா: – எல்லா; ஸோம: – சந்திரன்; பூத்வா – ஆகி; ரஸ-ஆத்மக: – ரஸத்தை வழங்கி.
நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் நுழைகின்றேன், எனது சக்தியினால் அவை பாதையில் நிலைபெற்றுள்ளன. நான் சந்திரனாகி எல்லாக் காய்கறிகளுக்கும் வாழ்வு ரஸத்தை வழங்குகின்றேன்.
பதம் 15.14
அஹம் வைஷ்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹம் ஆஷ்ரித:
ப்ராணாபான-ஸமாயுக்த: பசாம்-யன்னம் சதுர்-விதம்
அஹம் – நான்; வைஷ்வானர: – ஜீரணிக்கும் நெருப்பான எனது விரிவங்கம்; பூத்வா – ஆகி; ப்ராணினாம் – எல்லா உயிர்வாழிகளின்; தேஹம் – உடலில்; ஆஷ்ரித: – நிலைபெற்று; ப்ராண – வெளியேறும் வாயு; அபான – கீழ்நோக்கிச் செல்லும் வாயு; ஸமாயுக்த: – சமமாகவைத்து; பசாமி – செரிக்கின்றேன்; அன்னம் – உணவை; சது:-விதம் – நான்கு விதமான.
எல்லா உயிர்வாழிகளின் உடலிலும் ஜீரண நெருப்பாக இருக்கும் நான், உட்சுவாசக் காற்றுடனும் வெளிச்சுவாசக் காற்றுடனும் இணைந்து, நான்கு விதமான உணவைச் செரிக்கச் செய்கிறேன்.
பதம் 15.15
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச
வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்
ஸர்வஸ்ய – எல்லா உயிரினங்களின்; ச – கூட; அஹம் – நான்; ஹ்ரு’தி – இதயத்தில்; ஸன்னிவிஷ்ட: – வீற்றுள்ளேன்; மத்த: – என்னிடமிருந்து; ஸ்ம்ரு’தி: – ஞாபக சக்தி; ஜ்ஞானம் – அறிவு; அபோஹனம் – மறதி; ச – மற்றும்; வேதை: – வேதங்களால்; ச – மேலும்; ஸர்வை: – எல்லா; அஹம் – நானே; ஏவ – நிச்சயமாக; வேத்ய: – அறியப்பட வேண்டியவன்; வேதாந்த-க்ரு’த் – வேதாந்தத்தை தொகுத்தவனும்; வேத-வித் – வேதங்களை அறிபவனும்; ஏவ – நிச்சயமாக; ச – கூட; அஹம் – நானே.
நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.
பதம் 15.16
த்வாவ் இமௌ புருஷௌ லோகே க்ஷரஷ் சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதானி கூட-ஸ்தோ (அ)க்ஷர உச்யதே
த்வௌ – இரண்டு; இமௌ – இந்த; புருஷௌ – உயிர்வாழிகள்; லோகே – உலகில்; க்ஷர: – தவறிழைக்கக்கூடிய; ச – மேலும்; அக்ஷர: – தவறிழைக்காத; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; க்ஷர: – தவறிழைக்கக் கூடிய; ஸர்வாணி – எல்லா; பூதானி – உயிர்வாழிகள்; கூட-ஸ்த: – ஒருமையில்; அக்ஷர: – தவறிழைக்காத; உச்யதே – கூறப்படுகின்றது.
தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் என இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளனர். ஜடவுலகில் உள்ள ஜீவன்கள் தவறக்கூடியவர்கள் என்றும், ஆன்மீக உலகில் உள்ளவர்கள் தவறாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பதம் 15.17
உத்தம: புருஷஸ் த்வன்ய: பரமாத்மேத்-யுதாஹ்ருத:
யோ லோக-த்ரயம் ஆவிஷ்ய பிபர்த்-யவ்யய ஈஷ்வர:
உத்தம: – உத்தம; புருஷ: – புருஷர்; து – ஆனால்; அன்ய: – வேறு ஒருவர்; பரம – பரம; ஆத்மா – ஆத்மா; இதி – இவ்வாறு; உதாஹ்ருத: – கூறப்படுகின்றது; ய: – யாரொருவர்; லோக – லோகத்தின்; த்ரயம் – மூன்று பிரிவுகளில்; ஆவிஷ்ய – நுழைந்து; பிபர்தி – காக்கின்றார்; அவ்யய: – முடிவுற்ற; ஈஷ்வர: – இறைவன்.
இந்த இருவருக்கும் அப்பாற்பட்டு உத்தம புருஷரான பரமாத்மா இருக்கின்றார். அழிவற்ற இறைவனான அவர், மூன்று உலகங்களுக்குள் நுழைந்து அவற்றைக் காக்கின்றார்.
பதம் 15.18
யஸ்மாத் க்ஷரம் அதீதோ (அ)ஹம் அக்ஷராத் அபி சோத்தம:
அதோ (அ)ஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம:
யஸ்மாத் – ஏனெனில்; க்ஷரம் – தவறக்கூடியவர்கள்; அதீத: – திவ்யமான; அஹம் – நான்; அக்ஷராத் – தவறாதவர்களுக்கு; அபி – கூட; ச – மேலும்; உத்தம: – உத்தமமானவன்; அத: – எனவே; அஸ்மி – நான்; லோகே – இவ்வுலகில்; வேதே – வேத இலக்கியங்களில்; ச – மேலும்; ப்ரதித: – கொண்டாடப்படுகிறேன்; புருஷ-உத்தம: – உத்தம புருஷனாக.
தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் ஆகிய இருவருக்கும் அப்பாற்பட்டு நான் திவ்யமானவனாக இருப்பதாலும், நானே உத்தமமானவன் என்பதாலும், உலகிலும் வேதங்களிலும் நான் அந்த புருஷோத்தமனாகக் கொண்டாடப்படுகின்றேன்.
பதம் 15.19
யோ மாம் ஏவம் அஸம்மூடோ ஜானாதி புருஷோத்தமம்
ஸ ஸர்வ-வித் பஜதி மாம் ஸர்வ-பாவேன பாரத
ய: – எவனொருவன்; மாம் – என்னை; ஏவம் – இவ்வாறு; அஸம்மூடா: – ஐயமின்றி; ஜானாதி – அறிகின்றானோ; புருஷ-உத்தமம் – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்; ஸ: – அவன்; ஸர்வ-வித் – எல்லாவற்றையும் அறிபவனாகி; பஜதி – பக்தித் தொண்டு ஆற்றுகின்றான்; மாம் – எனக்கு; ஸர்வ-பாவேன – எல்லா விதத்திலும்; பாரத – பரதனின் மைந்தனே.
எவனொருவன் என்னை பரம புருஷ பகவானாக ஐயமின்றி அறிகின்றானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான். எனவே, பரதனின் மைந்தனே, அவன் எனது பக்தித் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றான்.
பதம் 15.20
இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக
ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத் க்ருத-க்ருத்யஷ் ச பாரத
இதி – இவ்வாறு; குஹ்ய-தமம் – மிகமிக இரகசியமான; ஷாஸ்த்ரம் – சாஸ்திரம்; இதம் – இது; உக்தம் – வெளிப்படுத்தப்பட்டது; மயா – என்னால்; அனக – பாவமற்றவனே; ஏதத் – இதை; புத்த்வா – புரிந்து கொண்ட; புத்தி-மான் – புத்தியுடையோன்; ஸ்யாத் – ஆகின்றான்; க்ரு’த-க்ரு’த்ய: – தனது முயற்சிகளில் மிகவும் பக்குவமானவனாக; ச – மேலும்; பாரத – பரதனின் மைந்தனே.
வேத சாஸ்திரங்களின் மிகமிக இரகசியமான பகுதி இதுவே. பாவமற்றவனே, தற்போது என்னால் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் புரிந்துகொள்பவன் அறிஞனாவான், அவனது முயற்சிகள் பக்குவத்தை அறியும்.