அத்தியாயம் – 12
பக்தித் தொண்டு
பதம் 12.1
அர்ஜுன உவாச
ஏவம் ஸ்தத-யுக்தா யே பக்தாஸ் த்வாம் பர்யுபாஸதே
யே சாப்-யக்ஷரம் அவ்யக்தம் தேஷாம் கே யோக-வித்தமா:

அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; ஏவம் – இவ்வாறு; ஸதத — எப்போதும்; யுக்தா – ஈடுபட்டு; யே – எவர்; பக்தா: – பக்தர்கள்; த்வாம்- உம்மை; பர்யுபாஸதே – முறையாக வழிபடுகின்றனர்; யே – அவர்கள்; ச – கூட; அபி – மீண்டும்; அக்ஷரம் — புலன்களுக்கு அப்பாற்பட்ட; அவ்யக்தம் – தோன்றாத; தேஷாம் – அவர்களில்; கே – யார்; யோக-வித்-தமா: – யோகத்தில் மிகவும் பக்குவமானவன்.

அர்ஜுனன் வினவினான்: மிகவும் பக்குவமானவர்களாகக் கருதப்படுபவர்கள் யார்? எப்போதும் உமது பக்தித் தொண்டில் முறையாக ஈடுபட்டிருப்பவர்களா? அல்லது தோன்றாத அருவ பிரம்மனை வழிபடுபவர்களா?

பதம் 12.2
ஸ்ரீ-பகவான் உவாச
மய்யா-வேஷ்ய மனோ யே மாம் நித்ய-யுக்தா உபாஸதே
ஷ்ரத்தயா பரயோபேதாஸ் தே மே யுக்ததமா மதா:

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; மயி – என் மீது; ஆவேஷ்ய – நிலைநிறுத்தி; மன: – மனதை; யே – எவரெல்லாம்; மாம் – என்னிடம்; நித்ய – எப்போதும்; யுக்தா: – ஈடுபட்டு; உபாஸதே – வழிபடுகின்றானோ; ஷ்ரத்தயா – நம்பிக்கையுடன்; பரயா – திவ்யமான; உபேதா: – அளிக்க; தே – அவர்கள்; மே – என்னால்; யுக்த-தமா: – யோகத்தில் மிகவும் பக்குவமானவராக; மதா: – கருதப்படுகிறார்கள்.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனது தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் எப்போதும் எனது வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் பக்குவமானவர்களாக என்னால் கருதப்படுகிறார்கள்.

பதம் 12.3 – 12.4
யே த்வக்ஷரம் அனிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ர-கம் அசிந்த்யம் ச கூட-ஸ்தம் அசலம் த்ருவம்

ஸன்னியம்யேந்த்ரிய-க்ராமம் ஸர்வத்ர ஸம-புத்தய:
தே ப்ராப்னுவந்தி மாம் ஏவ ஸர்வ-பூத-ஹிதே ரதா:

யே – யாரெல்லாம்; து – ஆனால்; அக்ஷரம் – புலன்களுக்கு அப்பாற்பட்ட; அனிர்தேஷ்யம் – நிச்சயமற்ற; அவ்யக்தம் – தோன்றாத; பர்யுபாஸதே – வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுகின்றவர்; ஸர்வத்ர-கம் – எங்கும் நிறைந்த; அசிந்த்யம் – புரிந்துகொள்ள முடியாத; ச – மேலும்; கூட-ஸ்தம் – மாறாத; அசலம் – அசைவற்ற; த்ருவம் – நிலையான; ஸன்னியம்ய – அடக்கிய; இந்த்ரிய-க்ராமம் – எல்லா புலன்கள்; ஸர்வத்ர – எங்கும்; ஸம-புத்தய: – சம நோக்குடையவராய்; தே – அவர்கள்; ப்ராப்னுவந்தி —அடைகின்றனர்; மாம் – என்னை; ஏவ – நிச்சயமாக; ஸர்வ-பூத-ஹிதே – எல்லா உயிர்வாழிகளின் நன்மையில்; ரதா: – ஈடுபட்டு.

ஆனால், தோற்றமளிக்காததும், புலனுணர்விற்கு அப்பாற்பட்டு இருப்பதும், எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு எட்டாததும், மாற்றமில்லாததும், நிலையானதும், அசைவற்றதுமான பூரண உண்மையின் அருவத் தன்மையை முழுமையாக வழிபடுபவர்கள், பல்வேறு புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லோரிடமும் சமநோக்குடன் பழகி, அனைவருக்கும் நன்மை தரும் செயல்களில் ஈடுபட்டு, இறுதியில் என்னை அடைகின்றனர்.

பதம் 12.5
க்லேஷோ (அ)திகதரஸ் தேஷாம் அவ்யக்தாஸக்த-சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர் து: கம் தேஹவத்பிர் அவாப்யதே

கலேஷ: – கடினம்; அதிக-தரஹ: – மிகவும்; தேஷாம் – அவற்றில்; அவ்யக்த – அருவத்தில்; ஆஸக்த – பற்றுக் கொண்டு; சேதஸாம் – எவர்களது மனம்; அவ்யக்தா — அருவத்தில்; ஹி – நிச்சயமாக; கதி: – முன்னேற்றம்; து:கம் – கடினத்துடன்; தேஹ-வத்பி: – உடலை உடையவரால்; அவாப்யதே – அடையப்படுகிறது.

எவரது மனம், பரமனின் தோன்றாத அருவத்தன்மையிடம் பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது உடலை உடையவர்களுக்கு எப்போதும் சிரமமானதாகும்.

பதம் 12.6 – 12.7
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத்-பரா:
அனன்யேனைவ யோகேன மாம் த்யாயந்த உபாஸதே

தேஷாம் அஹம் ஸ்முத்தர்தா ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்
பவாமி ந சிராத் பார்த மய்யாவேஷித-சேதஸாம்

யே – எவரெல்லாம்; து – ஆனால்; ஸர்வாணி – எல்லா; கர்மாணி – செயல்கள்; மயி — என்னிடம்; ஸன்ன்யஸ்ய – துறந்து; மத்-பரா: – என்னிடம் பற்றுதல் கொண்டு; அனன்யேன – பிறழாது; ஏவ — நிச்சயமாக; யோகேன – அத்தகு பக்தி யோகப் பயிற்சியினால்; மாம் – என் மீது; த்யாயந்த: – தியானத்துடன்; உபாஸதே – வழிபடுகிறார்கள்; தேஷாம் – அவர்களை; அஹம் – நான்; ஸமுத்தர்தா – விடுதலை செய்பவன்; ம்ரு’த்யு – மரணம்; ஸம்ஸார – ஜட இருப்பின்; ஸாகராத் – கடலிலிருந்து; பவாமி – ஆகிறேன்; ந – இல்லை; சிராத் – நீண்ட காலத்திற்குப் பிறகு; பார்த – பிருதாவின் மகனே; மயி – என் மீது; ஆவேஷித – நிலைபெற்ற; சேதஸாம் — எவரது மனம்.

ஆனால், தங்களது எல்லா செயல்களையும் எனக்காக துறந்து, பிறழாமல் என் மீது பக்தி செலுத்தி, எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, எப்போதும் என் மீது தியானம் செய்து, தங்களது மனங்களை என்னில் நிறுத்தி, எவரெல்லாம் என்னை வழிபடுகிறார்களோ, பிருதாவின் மகனே, அவர்களை பிறப்பு, இறப்பு என்னும் கடலிலிருந்து உடனடியாக காப்பாற்றுபவனாக நான் இருக்கிறேன்.

பதம் 12.8
மய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஷய:

மயி – என் மீது; ஏவ – நிச்சயமாக; மன: – மனதை; ஆதத்ஸ்வ – நிறுத்தி; மயி – என் மீது; புத்திம் — அறிவு; நிவேஷய – செலுத்தி; நிவஸிஷ்யஸி – நீ வாழ்வாய்; மயி – என்னில்; ஏவ – நிச்சயமாக; அத: ஊர்த்வம் – அதில்; ந – என்றுமில்லை; ஸம்ஷய: – சந்தேகம்.

முழுமுதற் கடவுளான என்மீது உனது மனதை நிறுத்தி, உன்னுடைய முழு அறிவையும் என்னில் ஈடுபடுத்துவாயாக. இவ்வாறு நீ எப்போதும் என்னிலேயே வாழ்வாய் என்பதில் ஐயமில்லை.

பதம் 12.9
அத சித்தம் ஸமாதாதும் ந ஷக்னோஷி மயி ஸ்திரம்
அப்யாஸ-யோகேன ததோ மாம் இச்சாப்தும் தனஞ்ஜய

அத – இருப்பின், எனவே; சித்தம் – மனதை; ஸமாதாதும் – நிலைநிறுத்த; ந – இல்லை; ஷக்னோஷி – இயல; மயி – என் மீது; ஸ்திரம் – ஸ்திரமாக; அப்யாஸ-யோகேன – பக்தித் தொண்டின் பயிற்சியினால்; தத: – பின்னர்; மாம் – என்னை; இச்சா – விருப்பம்; ஆப்தும் – அடைய; தனம்-ஜய – செல்வத்தை வெல்வோனே; அர்ஜுனா.

செல்வத்தை வெல்பவனான எனதன்பு அர்ஜுனா, உனது மனதை என்மீது பிறழாது நிலைநிறுத்த முடியாவிடில், பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவாயாக. என்னை அடைவதற்கான விருப்பத்தினை இதன் மூலம் விருத்தி செய்வாயாக.

பதம் 12.10
அப்யாஸே (அ)ப்யஸமர்தோ (அ)ஸி மத்-கர்ம-பரமோ பவ
மத்-அர்தம் அபி கர்மாணி குர்வன் ஸித்திம் அவாப்ஸ்யஸி

அப்யாஸே – பயிற்சியில்; அபி – இருப்பினும்; அஸமர்த: – இயலாதவனாக; அஸி – நீ; மத்-கர்ம – எனது செயல்; பரம – அர்ப்பணித்து; பவ – ஆவாய்; மத்-அர்தம் – எனக்காக; அபி -இருந்தும்; கர்மாணி – செயல்களை; குர்வன் – செய்வதால்; ஸித்தம் – பக்குவத்தை; அவாப்ஸ்யஸி – அடைவாய்.

பக்தி யோகத்தின் விதிகளை உன்னால் பயிற்சி செய்ய முடியாவிடில், எனக்காக மட்டும் செயலாற்ற முயல்வாயாக. ஏனெனில், எனக்காக செயல்படுவதன் மூலம் நீ பக்குவ நிலைக்கு வந்தடைவாய்.

பதம் 12.11
அதைதத் அப்-யஷக்தோ (அ)ஸி கர்தும் மத்-யோகம் ஆஷ்ரித:
ஸர்வ-கர்ம-பல-த்யாகம் தத: குரு யதாத்மவான்

அத – இருப்பினும்; ஏதத் – இதை; அபி – கூட; அஷக்த – முடியாவிட்டால்; அஸி – உன்னால்; கர்தும் – செய்ய; மத் – என்னிடம்; யோகம் – பக்தித் தொண்டில்; ஆஷ்ரித: – அடைக்கலம் கொண்டு; ஸர்வ-கர்ம – எல்லாச் செயல்களின்; பல – பலன்களையும்; த்யாகம் – தியாகம்; தத: – பின்னர்; குரு – செய்; யத-ஆத்ம-வான் – ஆத்மாவில் நிலைபெற்று.

ஆனால், என்னைப் பற்றிய இத்தகு உணர்விலும் உன்னால் செயலாற்ற முடியாவிடில், உனது செயலின் எல்லா விளைவுகளையும் தியாகம் செய்து, ஆத்மாவில் நிலைபெற முயற்சி செய்.

பதம் 12.12
ஷ்ரேயோ ஹி க்ஞானம் அப்யாஸாஜ் க்ஞானாத் த்யானம் விஷிஷ்யதே
த்யானாத் கர்ம-பல-த்யாகாஸ் த்யாகாச் சாந்திர் அனந்தரம்

ஷ்ரேய: – சிறந்தது; ஹி – நிச்சயமாக; ஜ்ஞானம் – ஞானம்; அப்யாஸாத் – பயில்வதைவிட; ஜ்ஞானாத் – ஞானத்தைவிட; த்யானம் — தியானம்; விஷிஷ்யதே – விசேஷமாகக் கருதப்படுகின்றது; த்யானாத் – தியானத்தை விட; கர்ம-பல-த்யாக – கர்மத்தின் பலன்களை தியாகம் செய்தல்; த்யாகாத் – அத்தகு தியாகத்தினால்; ஷாந்தி – அமைதி; அனந்தரம் – அதன்பின்.

இப்பயிற்சியினை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிடில், ஞானத்தை விருத்தி செய்வதில் உன்னை ஈடுபடுத்திக் கொள். இருப்பினும், ஞானத்தைவிட தியானம் சிறந்தது, மேலும், தியானத்தைவிட செயல்களின் பலன்களைத் தியாகம் செய்தல் சிறந்தது. ஏனெனில், இத்தகு தியாகத்தினால் மன அமைதியை அடைய முடியும்.

பதம் 12.13 – 12.14
அத்வேஷ்டா ஸர்வ-பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸம-து: க-ஸுக: க்ஷமீ

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட-நிஷ்சய:
மய்-யர்பித-மனோ-புத்திர் யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:

அத்வேஷ்டா – பொறாமையற்ற; ஸர்வ-பூதானாம் — எல்லா உயிர்கள் இடத்திலும்; மைத்ர: – நட்புடன்; கருண: – அன்புடன்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; நிர்மம: – உரிமையாளர் என்ற உணர்வின்றி; நிரஹங்கார: – அஹங்காரம் இன்றி; ஸம – சமமாக; து:க – துன்பத்திலும்; ஸுக: – இன்பத்திலும்; க்ஷமீ – மன்னித்து; ஸந்துஷ்ட: – திருபதியுடன்; ஸததம் – எப்போதும்; யோகீ – பக்தியில் ஈடுபட்டுள்ளவன்; யத-ஆத்மா – சுய கட்டுப்பாடு; த்ரு’ட-நிஷ்சய -உறுதியுடன்; மயி – என் மீது; அர்பித – ஈடுபடுத்தி; மன: – மனதை; புத்தி: – புத்தியுடன்; ய: – எவனொருவன்; மத்-பக்த: – எனது பக்தன்; ஸ: – அவன்; மே – எனக்கு; ப்ரிய: – பிரியமானவன்.

எவனொருவன், பொறாமை இல்லாதவனாக, எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக, தன்னை உரிமையாளனாகக் கருதாதவனாக, அஹங்காரத்திலிருந்து விடுபட்டவனாக, இன்ப துன்பங்களில் சம நிலையுடையவனாக, சகிப்புத் தன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயக்கட்டுப்பாடு உடையவனாக, தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலைநிறுத்தி உறுதியுடன் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, என்னுடைய அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

பதம் 12.15
யஸ்மான் நோத்விஜதே லோகோ லோகான் னோத்விஜதே ச ய:
ஹர்ஷாமர்ஷ-பயோத்வேகைர் முக்தோ ய: ஸ ச மே ப்ரிய:

யஸ்மாத் – யாரிடமிருந்து; ந – என்றுமில்லை; உத்விஜதே – சஞ்சலமடைவது; லோக: – மக்கள்; லோகாத் – மக்களிடமிருந்து; ந – என்றுமில்லை; உத்விஜதே – சஞ்சலமடைவது; ச – மேலும்; ய: – யாராயினும்; ஹர்ஷ – இன்பம்; அமர்ஷ – துன்பம்; பய – பயம்; உத்வேகை: – கவலை; முக்த: – விடுபட்டு; ய: – எவன்; ஸ: – யாராயினும்; ச – மேலும்; மே – எனக்கு; ப்ரிய: – மிகவும் பிரியமானவன்.

யாருக்கும் தொல்லை கொடுக்காமல், யாராலும் தொந்திரவு செய்யப்படாமல், இன்பம், துன்பம், பயம் மற்றும் ஏக்கத்தில் சமநிலையுடன் எவனொருவன் இருக்கின்றானோ அவன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

பதம் 12.16
அனபேக்ஷ: ஷுசிர் தக்ஷ உதாஸீனோ கத-வ்யத:
ஸர்வாரம்ப-பரித்யாகீ யோ மத்-பக்த: ஸ மே ப்ரிய:

அனபேக்ஷ: – நடுநிலை; ஷுசி: – தூய்மை; தக்ஷ: – நிபுணன்; உதாஸீன: – கவலையிலிருந்து விடுபட்டு; கத-வ்யத: – எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு; ஸர்வ–ஆரம்ப – எல்லா முயற்சிகளிலும்; பரித்யாகீ – துறப்பவன்; ய: – யாராயினும்; மத்-பக்த: – எனது பக்தன்; ஸ: – அவன்; மே – எனக்கு; ப்ரிய: – மிகவும் பிரியமானவன்.

எவனொருவன், சாதாரண செயல்களைச் சார்ந்து வாழாமல், தூய்மையாக, நிபுணனாக, கவலைகளின்றி, எல்லாவித வலிகளிலிருந்தும் விடுபட்டவனாக, ஏதேனும் பலனுக்காக முயற்சி செய்யாதவனாக உள்ளானோ, எனது அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

பதம் 12.17
யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஷோசதி ந காங்க்ஷதி
ஷுபாஷுப-பரித்யாகீ பக்திமான் ய: ஸ மே ப்ரிய:

ய: – எவனொருவன்; ந – என்றுமில்லை; ஹ்ரு’ஷ்யதி – மகிழ்வதோ; ந – என்றுமில்லை; த்வேஷ்டி – ஆழ்ந்த துக்கமடைவதோ; ந – என்றுமில்லை; ஷோசதி – புலம்புவதோ; ந – என்றுமில்லை; காங்க்ஷதி – ஏங்குவதோ; ஷீப – மங்கலமான; அஷுப – அமங்கலமான; பரித்யாகீ – துறப்பவன்; பக்தி-மான் – பக்திமான்; ய: – எவனொருவன்; ஸ: – அவன்; மே – எனக்கு; ப்ரிய: – பிரியமானவன்.

எவனொருவன் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, துன்பப்படுவதில்லையோ, புலம்புவதில்லையோ, ஆசைப்படுவதில்லையோ, மேலும் எவனொருவன் மங்களமானவை, அமங்களமானவை ஆகிய இரண்டையும் துறக்கின்றானோ—அத்தகு பக்திமான் எனக்கு மிகவும் பிரியமானவன்.

பதம் 12.18 – 12.19
ஸம: ஷத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோ:
ஷீதோஷ்ண-ஸுக-து:கேஷு ஸம: ஸங்க-விவர்ஜித:

துல்ய-நின்தா-ஸ்துதிர் மௌனீ ஸந்துஷ்டோ யேன கேனசித்
அனிகேத: ஸ்திர-மதிர் பக்திமான் மே ப்ரியோ நர:

ஸம: – சமமாக; ஷத்ரௌ – எதிரியிடம்; ச – மேலும்; மித்ரே – நண்பனிடம்; ச – மேலும்; ததா – அவ்வாறு; மான — மானம்; அபமானயோ: – அவமானம்; ஷீத – குளிர்; உஷ்ண – வெப்பம்; ஸுக – இன்பம்; து:கேஷு – துன்பம்; ஸம: – சமமாக; ஸங்க:-விவர்ஜித – எல்லாத் தொடர்புகளிலிருந்தும் விடுபட்டு; துல்ய – சமமான; நிந்தா – இகழ்ச்சி; ஸ்துதி: – புகழ்ச்சி; மௌனீ – மெளனம்; ஸந்துஷ்ட: – திருப்திபெற்ற; யேன கேனசித் — ஏதாவதுடன்; அனிகேத: – தங்குமிடமற்ற; ஸ்திர – நிலையான; மதி: – உறுதி; பக்தி-மான் – பக்தியில் ஈடுபட்டுள்ளவன்; மே – எனக்கு; ப்ரிய: – பிரியமான; நர: – மனிதன்.

எவனொருவன், நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவித்து, மான அவமானம், இன்ப துன்பம், வெப்பம் குளிர், புகழ்ச்சி இகழ்ச்சி, ஆகியவற்றில் நடுநிலை வகித்து, களங்கம் தரும் தொடர்புகளிலிருந்து எப்போதும் விடுபட்டு, மௌனமாக, எதனைக் கொண்டும் திருப்தியுற்று, தங்குமிடத்திற்காகக் கவலைப்படாமல், அறிவில் நிலைபெற்று பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ—அத்தகு மனிதன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

பதம் 12.20
யே து தர்மாம்ருதம் இதம் யதோக்தம் பர்யுபாஸதே
ஷ்ரத்ததானா மத்-பரமா பக்தாஸ் தே (அ)தீவ மே ப்ரியா:

யே – யாரெல்லாம்; து – ஆனால்; தர்ம – தர்மத்தின்; அம்ரு’தம் – அமிர்தம்; இதம் – இந்த; யதா – போல; உக்தம் – கூறப்பட்டுள்ளது; பர்யுபாஸதே – முழுமையாக ஈடுபட்டு; ஷ்ரத்ததானா – நம்பிக்கையுடன்; மத்-பரமா: – முழுமுதற் கடவுளான என்னையே எல்லாமாக ஏற்று; பக்தா: – பக்தர்கள்; தே – அவர்கள்; அதீவ – மிகமிக; மே – எனக்கு; ப்ரியா – பிரியமானவர்கள்.

பக்தித் தொண்டு என்னும் இந்த அழிவற்ற பாதையைப் பின்பற்றி, என்னை பரம இலக்காக வைத்து நம்பிக்கையுடன் தன்னை ஈடுபடுத்துபவர்கள், எனக்கு மிகமிகப் பிரியமானவர்கள்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare