ஆதியுமாகி அனாதியுமாய்

(1)
ஆதியுமாகி அனாதியு மாய்
இந்த அகிலம் மெங்கும் நிறைந்தாயே
போதகம் இல்லாமல் ஆலம் தளிர் ளுள்ளே
பிள்ளையாகி உறைந்தாயே
(ரகுராமா-பரந்தாமா)

(2)
உன்தன் பதத்தை வேண்டித் தவம் செய்வார்கள்
இந்த உலகத்தி லே உள்ள ஞாயம்
எந்த பதத்தை வேண்டி நீ தவம் செய்யவந்தாய்
ஈதென்ன கண்கட்டு மாயம்
(ரகுநாதா-ஜகன்னாதா)

(3)
முலையானது மில்லை கர்பக்குறியுமில்லை
முளைத்தாயே – ஒரு தூணில் மலையாய்
உலகத்தோர் இறந்தான் பிறந்தான் என்பார்கள்
வாய்க்குண்டோ – என் வார்த்தை வீணில் வேனோ
(ரகு வீரா- ரணதீரா)

(4)
என்னை அறியாத அரக்கன் என்றாயே நீ
இரண்டு செய்த பிரிவேனோ
உன்னை நீதானும் அறியாயே சாமி நான்
உன்னை எப்படி அறி வேனோ
(ரகுராமா – பரந்தாமா)

(5)
காட்டுவானும் நீயே – காணுவானும் நீயே
கற்றாயே இந்திர ஜாலம்
போட்டு விட்டுத் தேடித் தவிப்பார் – போல்
தவிக்கிறாய் போதும் இந்த கோலம்
(ரகுநாதா – ஜகன் நாதா)

(6)
சூரிய காந்தம் தரும் தீபத்தைக் கொண்டந்த
சூரியனைப் பணிவது போல் அறியேன்
சூரியனே உன்தன்னை அனுக்ரஹம் கொண்டு
நான் அறிந்ததை சொல்வேன்
(ரகுவீரா – ரணதீரா)

(7)
எனது சாபந்தீர்த்தாய் அது போல சபரி
இங்கிருக் கிறவளைக் காண வேணும்
தனதவள் சொல்வாள் சும்மா இருந்தால்
ஒன்றும் சாதிக்க லாமோ சொல்லாய் காணும்
(ரகுராமா – பரந்தாமா)

(8)
திடமாயவள் சொன்ன படியே சுக்ரீவனைச்
சேரும் அவனுடனே கடல் போல்
வானரங்கள் வருமே ஜானகியை கணத்தில்
கொண்டு வர சொல்லு
(ரகுநாதா – ஜகன்நாதா)

(9)
தடுக்காமல் கேளாய் ஓர் சிற்றன் எட்டாளுக்குச்
சரியல்லோ அறியாயோ நீயே
திடுக்கென்று செய்யலாமோ பதராதே
காரியம் சிதராதென் வார்த்தை அறியாயோ
ரகுராமா – பரந்தாமா
ரகுநாதா-ஜகன்நாதா
ரகுவீரா – ரணதீரா


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare