விபாவரீஷேஷ
(கல்யாண கல்ப-தருலிலிருந்து)

(1)
விபா4வரீஷே2ஷ ஆலோக-ப்ரவேஷ2
நித்3ரா சா2ரி உடோ2 ஜீவ
போ3ல ஹரி ஹரி, முகுந்த3 முராரி
ராம க்ருஷ்ண ஹயக்3ரீவ

விபாவரீ -இரவு, சேஷ – முடிவுக்கு வந்துவிட்டது, ஆலோக-ப்ரவேச – விடியலின் ஒளி நுழைகிறது, நித்ரா சாரி – உங்கள் தூக்கத்தை கைவிடுதல், உடோ – எழும், ஜீவ – ஓ ஆன்மா, போலோ ஹரிஹரி – ஹரி கடவுளின் புனித நாமங்களை உச்சரிக்கவும், முகுந்த – விடுதலையளிப்பவர், முராரி – முர அரக்கனின் எதிரி, ராம – மிக உயர்ந்த அனுபவிப்பாளர், கிருஷ்ண – அனைவரையும் கவர்ந்திழுப்பவர், ஹயக்ரீவ – குதிரை தலை அவதாரம்.

இருள் முடிந்து அதிகாலைப் பொழுது விடிகிறது. ஓ ஜீவனே (ஆத்மா) தூக்கத்தை விட்டு எழுந்திரு. முக்தியைக் கொடுப்பவரும், முர என்ற அசுரனின் விரோதியும் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்த பகவான் ஹரியின் புனித நாமங்களை உச்சரி.


(2)
ந்ருஸிம்ஹ வாமன, ஸ்ரீ-மது4ஸூத3
வ்ரஜேந்த3ர-நந்த3ன ஷ்2யாம
பூதனா-கா4தன, கைடப4-ஷா2தன
ஜய தா32 ரதி2-ராம

ந்ருஸிம்ஹ – அரை மனிதன், அரை சிங்கம், வாமன – குள்ள பிராமனன், ஸ்ரீ-மதுசூதன – மது அரக்கனை அழித்தவர், ப்ரஜேந்ர-நந்தன – வ்ராஜா ராஜாவின் அன்பு மகன், ஸ்யாம – கருப்பு நிறமுடையவர், பூதன-காதன – பூதனா அரக்கியை அழித்தவர், கைடப-சாதன – கைடப அரக்கனை அழித்தவர், ஜய – அனைத்து மகிமைகளும், தாசரதி-ராம – பகவான் ராமர், தசரத மன்னரின் மகன்.

பகவான் ஹரி (க்ருஷ்ணர்) பாதி மனிதனாகவும், பாதி சிங்கமாகவும் உலகில் நரசிம்மராக அவதரித்தார். வாமன என்ற பெயர் கொண்ட குள்ள பிராமணனனாகவும். மது என்ற அசுரனைக் கொல்பவராகவும் அவதரித்துள்ளார். வ்ரஜ பூமியின் அரசரான நந்த மகாராஜாவின் மகனான அவர், அரசரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். கருமை நிறம் உள்ளவர். அரக்கி பூதனாவை வதம் செய்து, கைடப என்ற அசுரனையும் அழித்தவர். அரசர் தசரதருக்கு மகனாக, ராமராக தோன்றிய பகவான் ஹரிக்கு என்றும் புகழும் உண்டாவதாக.


(3)
3ஷோ2தா3 து3லால, கோ3விந்த3 கோ3பால
வ்ருந்தா3வன புரந்த3
கோ3பீ-ப்ரிய-ஜன, ராதி4கா-ரமண
பு4வன-ஸுந்த3ர-வர

யசோதா துலால – தாய் யசோதாவின் செல்லம், கோவிந்த – பசுக்களுக்கு இன்பம் தருபவர், கோபால – பசுக்களின் பாதுகாவலர், வ்ருந்தாவன புரந்தர – விருந்தாவன வனத்தின் மன்னன், கோபி-ப்ரிய-ஜன – கோபிகளின் பிரியமானவர், ராதிகா-ரமண – ராதிகாவின் காதலன், புவன-சுந்தர-பர – அனைத்து உலகங்களிலும் மிக அழகான ஆளுமை.

அன்னை யசோதையால் மிகவும் நேசிக்கப்படுபவர். ஆன்மீக புலன்கள், பூமி, பசுக்கள், ஆகியவைகளுக்கு இன்பத்தையும், பசுக்களுக்கு பாதுகாப்பையும் கொடுப்பவர். விருந்தாவன காட்டின் பிரபு அவரே. கோபிகைகளால் நேசிக்கப்படும் ராதிகாவின் அன்பிற்கு உகந்தவருமான அவர் அனைத்து உலகங்களிலும் அதி உன்னத அழகான நபராவார்.


(4)
ராவாணாந்தகர, மாக2ன-தஸ்கர
கோ3பீ -ஜன-வஸ்த்ர-ஹாரீ
வ்ரஜேர ராகா2ல கோ3ப-வ்ருந்த3-பால
சித்த-ஹாரீ வம்ஷீ2-தா4ரீ

ராவாணாந்தகர – ராவணன் என்ற அரக்கனின் முடிவைக் கொண்டு வந்தவர், மாகன-தஸ்கர – பழைய கோபியரின் வெண்ணையைத் திருடியவர், கோபி-ஜன-வஸ்த்ர-ஹாரி – இளைய கோபியரின் ஆடைகளைத் திருடியவர், ப்ரஜேர ராகால – வ்ராஜாவின் மாடு மேய்க்கும் பையன், கோப-வ்ருந்த-பால – மாடு மேய்க்கும் சிறுவர்களின் பாதுகாவலர், சித்த-ஹாரி – அனைவரின் இதயங்களையும் திருடுபவர், பம்சீ-தாரீ – எப்போதும் புல்லாங்குழல் வைத்திருப்பவர்.

ராமச்சந்திரராக வந்து அசுர அரசரான ராவணனுக்கு ஒரு முடிவு கட்டினார். கிருஷ்ணர் வயதான கோபிகளின் வீட்டில் உள்ள வெண்ணெயையும், யமுனா நதியில் குளித்துக் கொண்டிருந்த இள வயது கோபிகைகளின் ஆடைகளையும் திருடினார். விருந்தாவனத்தில் பசுக்களை மேய்க்கும் சிறுவனாகவும், பசுக்களை மேய்க்கும் சிறுவர்களுக்கு பாதுகாப்பாளராகவும் இருக்கிறார். அனைவருடைய இதயங்களையும் திருடும் அவர் எப்போதும், ஒரு புல்லாங்குழலை ஏந்தியுள்ளார்.


(5)
ஜோ2கே3ந்த்3ர-வந்த3ன, ஸ்ரீ-நந்த3-நந்த3
வ்ரஜ-ஜன-ப4ய-ஹாரீ
நவீன நீரத3 ரூப மனோஹர
மோஹன- வம்’ஷீ2-பி3ஹாரீ

யோகேந்த்ர-வந்தன – சிறந்த யோகிகளால் வணங்கப்பட்டவர், ஸ்ரீ-நந்த-நந்தன – நந்தாவின் மகிழ்ச்சியான மகன், ப்ரஜ-ஜன-பய-ஹாரி – வ்ராஜாவில் வசிப்பவர்களின் அனைத்து அச்சங்களையும் நீக்குபவர், நவீன நிரத – புதிய மழை மேகத்தின் நிறமுடையவர், ருப மனோஹர -மயக்கும் வடிவம் கொண்டவர், மோஹன-பம்சீ-பிஹாரீ – அவர் தனது புல்லாங்குழல் வாசிப்பதில் மிகவும் அழகாக அலைந்து திரிகிறார்.

மிகச்சிறந்த யோகிகளால் வணங்கப்படும் கிருஷ்ணர், நந்த மகாராஜாவின் புதல்வராவார். விருந்தாவன வாசிகளின் எல்லா பயங்களையும் அகற்றுகிறார். நீலமேக வர்ணத்தை உடைய அவரது உடல் மனதை கவர்ந்திழுக்கிறது. தனது புல்லாங்குழலை அவர் ஊதும் பொழுது மிகவும் வசீகரமாக காட்சியளிக்கிறார்.


(6)
3ஷோ2தா3-நந்த3ன கம்’ஸ-நிஸூத3
நிகுஞ்ஜ-ராஸ-வீலாஸீ
கத3ம்ப3-கனான, ராஸ-பராயண
வ்ருந்த3-விபன்ன-நிவாஸீ

யசோதா-நந்தன – யசோதாவின் மகிழ்ச்சியான மகன், கம்ஸ-நிஸுதன – கம்ஸன் என்னும் அரசனை அழித்தவர், நிகுஞ்ஜ-ராஸ-வீலாஸீ – தோட்டத் தோப்புகளுக்கு மத்தியில் ராச நடனம் ஆடுபவர், கதம்ப- கனான ராஸ-பராயண – கடம்ப மரங்களுக்கு அடியில் ராச நடனத்தில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவர், ப்ருந்த-விபன்ன-நிவாஸி – வ்ருந்தா தேவியின் காட்டில் வசிப்பவர்.

கிருஷ்ணர் யசோதையின் புதல்வர், கம்சனை வதம் செய்தவர், விருந்தாவன தோப்புகளில் அவர் ராச நடனம் புரிகின்றார். கதம்ப மரங்களுக்குக் கீழே இத்தகைய ராச நடனத்தை கிருஷ்ணர் நடத்தி, விருந்தாவன காட்டில் அவர் வசிக்கின்றார்.


(7)
ஆனந்த3-வர்த4ன, ப்ரேம-நிகேதன
பு2ல-ஷ2ர ஜோ3 ஜக காம
கோ3பாங்க3னா-க3ண, சித்த-வினோத3
ஸமஸ்த-கு3ண-க3ண-தா4

ஆனந்த-வர்தன – தனது பக்தர்களின் பரவசத்தை அதிகரிப்பவர், ப்ரேம-நிகேதன – அனைத்து அன்பின் நீர்த்தேக்கம், புல-சர – மலர்ந்த அம்புகள், ஜோஜக – பயன் படுத்துபவர், காம – ஆழ்நிலை மன்மதன், கோபாங்கனா-கண சித்த-வினோதன மாடு மேய்க்கும் பெண்களின் இதயங்களின் மகிழ்ச்சி, ஸமஸ்த-குண-கண-தாம – அனைத்து அற்புதமான குணங்களின் இருப்பிடம்.

தனது பக்தர்களுக்கு பரவச நிலையை உண்டு பண்ணும் அவர், எல்லாவித அன்பிற்கும் இருப்பிடமாவார். கோபியர்களின் அன்பை அதிகரிக்க மலர்க்கணையை விடும் தெய்வீக மன்மதன் அவர். கோபியர்களின் ஆனந்தமும், எல்லா அற்புதமான தன்மைகளின் இருப்பிடமும் கிருஷ்ணரே.


(8)
ஜா3முன-ஜீவன, கேலி-பராயண
மானஸ-சந்த3ர-சகோர
நாம- ஸுதா4-ரஸ, கா3 ஓ க்ருஷ்ண-ஜ32
ராகோ2 வசன மன மோர

ஜாமுன-ஜீவன – யமுனா நதியின் வாழ்க்கை, கேலி-பராயண – எப்போதும் காமப் பொழுதுகளில் மூழ்கியவர், மானஸ-ஸ்ந்தர-சகோர – கோபியரின் மனதில் சந்திரன், இது சகோரா பறவைகளைப் போன்றது (நிலவொளியில் மட்டுமே வாழ்வது), நாம-ஸீதா-ரஸ – தேனினும் மதுரமான புனித பெயர், காவோ – தயவுசெய்து பாடு, க்ருஷ்ண-ஜச – ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகள், ராகோ வசன – தயவுசெய்து இந்த ஆலோசனையை பின்பற்றவும், மன மோர – என் அன்பு மனமே!.

பகவான் கிருஷ்ணர் யமுனா நதியின் ஜீவ நாடியாவார், தெய்வீக அன்பில் எப்பொழுதும் மனம் லயித்தவராக இருக்கிறார். சந்திர ஒளியின் கீழ் மட்டுமே உயிர் வாழும் சகோரா பறவைகள் போல, கிருஷ்ணர் கோபிகளுடைய மனங்களுக்கு சந்திரனாவார்.ஓ மனமே என்னுடைய இந்த வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு முழுவதும் அமிர்தரசமாகிய இத்தகைய புனித பெயர்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளை மட்டுமே பாடு.

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare