வந்ததுவும் போனதுவும்

பல்லவி
வந்ததுவும் போனதுவும் இமைப்பொழுது ஆனாலும்
மனமன்றோ களவானதே தயிரொடு நவநீதம் களவிட(3)

அனுபல்லவி
நந்தகோபன் செய்த தவம் நல்லதொரு பயனாகி
நந்தகோபன் செய்த தவம் நல்லதொரு பயனாகி
இந்த விதமாக வந்து இன்ப முழுக்காட்டுதடி.
நந்தகோபன் செய்த தவம் நல்லதொரு பயனாகி
இந்த விதமாக வந்து இன்ப முழுக்காட்டுதடி.
( வந்ததுவும் – 2)

சரணம்
காலினில் வழிந்த தயிர் கமல மலர் கோலமிட
காலினில் வழிந்த தயிர் கமல மலர் கோலமிட
கையின் வழி வாரும் வெண்ணெய் கானக் குழல் மூடியிட
காலினில் வழிந்த தயிர் கமல மலர் கோலமிட
கையின் வழி வாரும் வெண்ணைய் கானக் குழல் மூடியிட

நீல வண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நீல வண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட
நீலவண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட
(வந்ததுவும் -2)

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare