ஸ்ரீ துளசி ஆரத்தி

விருந்தா3யை துளசி-தே3வ்யாயை ப்ரியாயை கேஷவஸ்ய ச
விஷ்ணு-ப4க்தி-ப்ரதே3 தேவி ஸத்ய வத்யை நமோ நம: (3 times)

வ்ருந்தே3 தே3வி ப4க்தி தே3வி துளஸி மஹாராணி கீ ஜெய் !

(1). நமோ நம துளசி கிருஷ்ண-ப்ரேயஸி நமோ நம

ராதா4-கிருஷ்ண-சேவா பாபோ3 ஏயி அபி4லாஷி
துளசி கிருஷ்ண-ப்ரேயஸி நமோ நம.

(2). யே தொமார ஷரண லோய் தாரா வாஞ்சா பூர்ண ஹோய்
கிருபா கோரி கோரோ தாரே பிருந்தா3வன-வாஸி
துளசி கிருஷ்ண-ப்ரேயஸி நமோ நம.

(3). மோரா ஏயி அபி4லாஷ் பி3லாஸ் குஞ்ஜே தி3யோ வாஸ்
நயன ஹே ரிபோ3 ஸதா3 யுக3ல-ரூப-ராஸி
துளசி கிருஷ்ண-ப்ரேயஸி நமோ நம.

(4). ஏயி நிவே த3ன த4ர, ஸகீ2 ரனு க3த கோரோ
ஸேவா-அதி4கார் தி3யே கோரோ நிஜ தா3ஸி
துளசி கிருஷ்ண-ப்ரேயஸி நமோ நம.

(5). தீ3ன கிருஷ்ண-தா3ஸே கோய், ஏயி யேன மோரா ஹோய்
ஸ்ரீ ராதா4 கோ3விந்த ப்ரேமே ஸதா3 யேன பா4ஸி
துளசி கிருஷ்ண-ப்ரேயஸி நமோ நம.


விளக்க உரை

(1). கிருஷ்ணனுக்கு பிரியமான துளசி தேவியே, மீண்டும் மீண்டும் உங்கள் முன்னால் நான் வணங்குகிறேன். ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் சேவையைப் பெறுவதே எனது
விருப்பமாகும்.

(2). உங்களிடம் தஞ்சமடையும் அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்படுகின்றன. உங்களது கருணையை அவர்கள் மேல் பொழிந்து, விருந்தாவன வாசியாக மாற்றுகிறீர்கள்.

(3). இன்பம் கொழிக்கும் விருந்தாவன தாமில் எனக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இவ்வாறு என் மனக் கண்ணில் ராதாகிருஷ்ணரின் அழகிய லீலைகளை எப்பொழுதும் நான் காண்பேன்.

(4). விருந்தாவனத்தில் பசுக்களை மேய்க்கும் இடைச்சிறுவர்களில் ஒருவனாக என்னையாக்குங்கள். பக்தி சேவையில் என்னை ஈடுபடுத்தி, உங்களது சேவகனாக என்னை மாற்றுங்கள்.

(5). இந்த தாழ்ந்த கிருஷ்ண சேவகனை எப்போதும் ஸ்ரீ ராதா கோவிந்தனுடைய பிரேம சாகரத்தில் நீந்தச் செய்யும்படி உங்களை வேண்டுகிறேன்.


ஸ்ரீ துளசி ப்ரதக்ஷிணா மந்திரம்

யானி கானி ச பாபானி ப்ரம்ம ஹத்யாதி3காநி ச
தாநி தாநி ப்ரணஷ் யந்தி ப்ரத3க்ஷிண பதே3 பதே3  (1 time slow)

யானி கானி ச பாபானி ப்ரம்ம ஹத்யாதி3காநி ச
தாநி தாநி ப்ரணஷ் யந்தி ப்ரத3க்ஷிண பதே3 பதே(2 times fast)

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!

துளசி தேவியை வலம் வரும் ஒவ்வொரு அடியும் அனைத்து வகையான பாவங்களையும் அழித்து விடுகிறது. பிராமணரை கொல்லும் பாவம் உட்பட இதில் அடங்கும்.

வ்ருந்தே3 தே3வி ஜய துளசி மஹாராணி |
ஜய வ்ருந்தே3 தே3வி ஜய துளசி மஹாராணி |

ஜய ஜய பிரபு4பாத்3 … பிரபு4பாத்3
பிரபு4பாத்3 … ஜய ஜய பிரபு4பாத்3

வ்ருந்தே3 தே3வி ப4க்தி தே3வி துளஸி மஹாராணி கீ ஜெய் !


ஸ்ரீ துளசி ப்ரணமா

விருந்தா3யை துளசி-தே3வ்யாயை ப்ரியாயை கேஷவஸ்ய ச
விஷ்ணு-ப4க்தி-ப்ரதே3 தேவி ஸத்ய வத்யை நமோ நம: (3 times)

பகவான் கேசவரின் அன்புக்கு பாத்திரமான ஸ்ரீமதி துளசிதேவிக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள். பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டை வாரி வழங்கி, மிக உயர்ந்த உண்மையின் உறைவிடமாய் இருக்கிறீர்கள்.


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே!

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare