திருமாலை
(தொண்டரடிப் பொடியாழ்வார் அருளியது)
மற்றொன்றும் வேண்டா மனமே!* மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் * உற்ற
திருமாலை பாடுஞ்சீர்த் தொண்டரடிப் பொடி எம்
பெருமானை* எப்பொழுதும் பேசு.
(1)
காவலில் புலனை வைத்துக்*
கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்*
நமன் தமர் தலைகள் மீதே,*
மூவுலகு உண்டு உமிழ்ந்த*
முதல்வ நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்*
அரங்கமா நகர் உளானே. (2 times)
(2)
பச்சை மாமலைபோல் மேனி*
பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!*
ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்*
இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்*
அரங்கமா நகர் உளானே! (2 times)
(3)
மற்றுமோர் தெய்வம் உண்டே*
மதியிலா மானி டங்காள்,*
உற்றபோது அன்றி நீங்கள்*
ஒருவன் என்று உணர மாட்டீர் ,*
அற்றம்மேல் ஒன்று அறியீர் *
அவனல்லால் தெய்வ மில்லை,*
கற்றினம் மேய்த்த எந்தை*
கழலிணை பணிமின் நீரே. (2 times)
(4)
நாட்டினான் தெய்வம் எங்கும்*
நல்லதோர் அருள் தன்னாலே.*
காட்டினான் திருவரங்கம்*
உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பிமீர்காள்!*
கெருட வாகனனும் நிற்க,
சேட்டை தன் மடியகத்துச்*
செல்வம் பார்த்து இருக்கின்றீரே. (2 times)
(5)
வண்டினம் முரலும் சோலை*
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீதுஅணவும் சோலை*
குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோன் அமரும் சோலை*
அணி திருவரங்கம் என்னா,
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி*
நாய்க்கு இடுமின்நீரே. (2 times)
(6)
குடதிசை முடியை வைத்துக்*
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்*
தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தை*
அரவணைத் துயிலுமா கண்டு,
உடல்எனக்கு உருகுமாலோ*
என்செய்கேன் உலகத்தீரே! (2 times)
(7)
பாயும் நீர் அரங்கந்தன்னுள்*
பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்வும்*
மரகத உருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும்*
துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும்*
அடியரோர்க்கு அகலல்ஆமே? (2 times)
(8)
பணிவினால் மனமதுஒன்றிப்*
பவளவாய் அரங்கனார்க்குத்,
துணிவினால் வாழமாட்டாத்*
தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,
அணியினார் செம்பொன்னாய*
அருவரை அனைய கோயில்,
மணியனார் கிடந்த ஆற்றை*
மனத்தினால் நினைக்கலாமே? (2 times)
(9)
ஊரிலேன் காணி யில்லை *
உறவுமற் றொருவ ரில்லை,*
பாரில்நின் பாத மூலம்*
பற்றிலேன் பரம மூர்த்தி,*
காரொளி வண்ண னே!*
கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களை கண் அம்மா!*
அரங்கமா நகரு ளானே! (2 times)
(10)
மனத்திலோர் தூய்மை யில்லை*
வாயிலோர் இன்சொல் இல்லை,*
சினத்தினால் செற்றம் நோக்கித்*
தீவிளி விளிவன் வாளா,*
புனத்துழாய் மாலை யானே!*
பொன்னிசூழ் திருவ ரங்கா,*
எனக்கினிக் கதியென் சொல்லாய்*
என்னையா ளுடைய கோவே! (2 times)
(11)
உள்ளத்தே யுறையும் மாலை*
உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்*
தொண்டுக்கே கோலம் பூண்டு*
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்*
உடனிருந் தறிதி யென்று,*
வெள்கிப்போ யென்னுள் ளேநான்*
விலவறச் சிரித்திட் டேனே! (2 times)
(12)
மேம்பொருள் போக விட்டு*
மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
ஆம்பரிசு அறிந்து கொண்டு*
ஐம்புல னகத்த டக்கி*
காம்பறத் தலைசிரைத்து* உன்
கடைத்தலை யிருந்து* வாழும்
சோம்பரை உகத்தி போலும்*
சூழ்புனல் அரங்கத் தானே! (2 times)
(13)
வானுளா ரறிய லாகா*
வானவா! என்பர் ஆகில்,*
தேனுலாந் துளப மாலைச்*
சென்னியாய்! என்பர் ஆகில்,*
ஊனமா யினகள் செய்யும்*
ஊனகா ரகர்க ளேலும்,*
போனகம் செய்த சேடம்*
தருவரேல் புனிதம் அன்றே? (2 times)
(14)
பெண்ணுலாம் சடையி னானும்*
பிரமனும் உன்னைக் காண்பான்,*
எண்ணிலா ஊழி ஊழி*
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப*
விண்ணுளார் வியப்ப வந்து*
ஆனைக்கு அன்று அருளை ஈந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ*
களைகணாக் கருது மாறே! (2 times)
(15)
வளவெழும் தவள மாட*
மதுரைமா நகரந் தன்னுள்,*
கவளமால் யானை கொன்ற*
கண்ணனை அரங்க மாலை,*
துளவத்தொண் டாய தொல்சீர்த்*
தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்*
எம்பிராற் கினிய வாறே! (2 times)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
** ஹரே கிருஷ்ணா **

