ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம்

(1)
ஸம்ஸார-தாவா3நல-லீட4-லோகா
த்ராணாய காருண்ய-க4னாக4னத்வம்
ப்ராப்தஸ்ய கல்யாண-கு3ணார்ணவஸ்ய
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்

(2)
மஹாப்ரபோ4 கீர்தன-ந்ருத்ய-கீ3தா
வாதி3த்ர-மாத்3யன்-மனஸோ ரஸேனா
ரோமாஞ்ச-கம்பா ஸ்ருதரங்க-பா4ஜோ
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்

(3)
ஸ்ரீ-விக்3ர ஹாரா த4ன-நித்ய-நாநா
ஸ்ருங்கா3ர-தன்-மந் தி3ர-மார்ஜ னாதௌ3
யுக்தஸ்ய ப4க்தாம்ஶ் ச நியுஞ்ஜ தோ பி
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்

(4)
சதுர்-வித4-ஸ்ரீ-ப4கவத்-பிரஸாதோ3
ஸ்வாத்3வன்ன-த்ருப்தான் ஹரி-ப4க்த-ஸங்கா4ன்
க்ருத்வைவ திருப்திம்-ப4ஜத: ஸதைவா
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்

(5)
ஸ்ரீ-ராதி4கா-மா-த4வயோர பாரா
மாது4ர்ய-லீலா-கு3ண-ரூப-நாம் நாம்
ப்ரதிக்ஷணா-ஸ்வா-தன-லோலுபஸ்ய
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்

(6)
நிகுஞ்ச-யூனோ ரதி கேளி-ஸித்34யை
யா-யாலிபி4ர் யுக் திர் அபேக்ஷணீயா
தத்ராதி-தாக்ஷ்யாத்3 அதி-வல்லப4ஸ்ய
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்

(7)
ஸாக்ஷாத்3-த4ரித்வேன சமஸ்த-சாஸ்த்ரைர்
யுக்தஸ் ததா2பா4வ்யத ஏவ ஸத்பி4:
கிந்து ப்ரபோ4ர்ய ப்ரிய ஏவ தஸ்ய
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்

(8)
யஸ்ய ப்ரஸாதா3த் ப4கவத்-ப்ரஸாதோ3
யஸ்யா ப்ரஸாதா3ன் ந க3தி குதோ பி
த்4யாயன் ஸ்துவம்ஸ் தஸ்ய யஶஸ் திரி-ஸந்த்4யம்
வந்தே3 கு3ரோ ஸ்ரீ-சரணாரவிந்த3ம்


மொழிபெயர்ப்பு

1. மேகங்கள் எவ்வாறு மழையை பொழிந்து காட்டுத் தீயை அணைக்கின்றதோ அவ்வாறே கருணைக் கடலாகிய ஆன்மீக குருவானவர் பௌதிக விவகாரங்களினால் தகிக்கப்படும் இவ்வுலகை காப்பாற்றுகிறார். மங்களகரமான குணங்களை உடைய அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

2. ஸ்ரீ சைதன்ய மஹாப்பிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் புனித நாமத்தை ஜெபித்து, நடனமாடி, பாடி, இசை கருவிகளை இசைத்து ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் ஆனந்தமடைகிறார். சில நேரங்கள் மயிர் கூச்செரிந்து, உடல் நடுங்க, கண்களில் நீர் மல்க தனது தூய பக்தியை வெளிப்படுத்துகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

3. கிருஷ்ணரை வழிபட்டு, தனது சிஷ்யர்களையும் இந்த வழிபாட்டில் ஈடுபடுத்துகிறார். அவர்கள் அழகிய ஆடை, நகைகளால் தெய்வங்களை அலங்கரித்து, கோவிலை சுத்தம் செய்து சேவை புரிகிறார்கள். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

4. நான்கு வகையான அறுகளை உணவுகளை கிருஷ்ணருக்கு படைத்து, அந்த பகவத் பிரசாதத்தை சாப்பிடும் பக்தர்களைக் கண்டு தான் திருப்தி அடைகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

5. ஸ்ரீ ராதிகா மாதவரின் எல்லையற்ற மாதுர்ய லீலைகளை கேட்டும், நினைத்தும் அவர்களின் நாம, ரூபங்களில் ஆர்வம் கொண்டும், எந்த நொடியிலும் இவைகளை வெளியிட பேராவல் மிக்கவராய் இருக்கிறார் ஆன்மீக குருவானவர். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

6. வ்ருந்தாவனத்தில் ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் மாதுர்ய விலைகளுக்கு வெவ்வேறு வகையான ஏற்பாடுகளை செய்வதில் அனுபவமிக்கவரான ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

7. குரு என்பவர் உண்மையில் பகவத் ஸ்வருபமாக ஆராதிக்கப்பட வேண்டியவர், ஏனென்றால் அவர் பகவானுடைய அந்தரங்க தாஸன் என்பதை சாஸ்த்திரங்களும்,எல்லா ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கிறார்கள். அப்பேர்ப்பட்ட ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

8. குருவின் கிருபை இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. ஆகவே குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று முறையாவது குருவை நினைத்து அவரை போற்ற வேண்டும். எனது ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

** ஹரே கிருஷ்ணா ** 

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare