ஸ்ரீ சௌகரிய சரண்ய புருஷாஷ்டகம்

(ஸ்ரீ வில்வ மங்கல தாக்கூர்)

(1)
வ்ரஜே ப்ரஸித்43ம் நவநீத சௌரம்
கோ3பாங்க3நாநாம் ச து3கூல சௌரம்
அநேக ஜன்மார்ஜித பாப சௌரம்
சௌரா3க்ர க3ண்யம் புருஷம் நமாமி

பிரஜாவின் வெண்ணை திருடன்: கோபியர்களின் ஆடை திருடன்: தன்னை அடைக்கலம் புகுந்தவர்களின் பாவங்களை திருடும் திருடன் என, திருடர்களின் முதன்மையாக விளங்கும் பகவானுக்கு, எனது பிரணாமத்தை என்றும் அர்ப்பணிக்கிறேன்.

(2)
ஸ்ரீ ராதி4காயா ஹ்ருத3யஸ்ய சௌரம்
நவாம்பு33 ஶ்யாமல காந்தி சௌரம்
பதாஸ்ரீதாநாம் ச ஸமஸ்த சௌரம்
சௌரா3க்ர க3ண்யம் புருஷம் நமாமி

ஸ்ரீமதி ராதிகாவின் இதயத்தைத் திருடுபவர்: ஒரு புதிய மழைமேகத்தின் இருண்ட பிரகாசத்தைத் திருடுபவர்: அவருடைய பாதக் கமலங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் பாவங்களையும் துன்பங்களையும் திருடுபவர், என, திருடர்களின் முதன்மையாக விளங்கும் பகவானுக்கு, எனது பிரணாமத்தை என்றும் அர்ப்பணிக்கிறேன்.

(3)
அகிஞ்சனீ க்ருத்ய பதா3ஸ்ரீதம் ய: (ஹ)
கரோதி பி4க்ஷும் பதி2 கே3ஹ ஹீனம்
கேனாப்யஹோ பீ4ஷண சௌர ஈத்3ருக்3
த்3ருஷ்ட்:(ஶ்) ஶ்ருதோ வா ந ஜகத் த்ரயே’பி

தன்னை சரணடைந்த பக்தர்களை, அவர், ஏழைகளாகவும், வீடற்று அலைந்து திரியும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றுகின்றார். ஆஹா! இப்படி ஒரு பயங்கரமான திருடனை மூன்று உலகங்களிலும் கேள்விப்பட்டதுவும் இல்லை பார்த்ததுவும் இல்லை.

(4)
யதீ3ய நாமாபி ஹரத்யஶேஷம்
கி3ரி பிரஸாரான் அபி பாப ராஷீன்
ஆஷ்சர்ய ரூபோ நனு சௌர ஈத்3ருக்3
த்3ருஷ்ட்:(ஶ்) ஶ்ருதோ வா ந மயா கதா3பி

அவருடைய பெயரை உச்சரிப்பதால் மட்டுமே மலை போன்ற பாவங்கள் நீங்கி சுத்திகரிக்கப்படுகின்றது – இப்படிப்பட்ட ஒரு அற்புதமான திருடனை நான் எங்கும் பார்த்ததோ கேள்விபட்டதோ இல்லை.

(5)
4னம் ச மானம் ச ததே2ந்த்3ரியாணி
ப்ராணம்ஶ்ச ஹ்ருத்3வா மம ஸர்வ மேவ
பலாயஸே குத்ர த்4ருதோத்3ய சௌர
த்வம் ப4க்தி-தா3ம்நாஸீ மயா நிருத்43: (ஹ)

ஓ திருடனே! என் செல்வம், என் மானம், என் புலன்கள், என் உயிர் மற்றும் என் அனைத்தையும் திருடிவிட்டு, நீ எங்கே ஓட முடியும்? என் பக்தி என்ற கயிற்றால் உன்னைப் பிடித்து விட்டேன்.

(6)
சி2னத்ஸி கோ4ரம் யம-பாஶ-ப3ந்த4ம்
பி4னத்ஸி பீ4மம் ப4வ-பாஶ-ப3ந்த4ம்
சி2னத்ஸி ஸர்வஸ்ய ஸமஸ்த ப3ந்த4ம்
நைவாத்மனோ ப4க்த-க்ருதம் து ப3ந்த4ம்

யமராஜரின் கயிறு, ஜட வாழ்வின் பற்று என்னும் பௌதிக அடிமைத்தனத்தின் பயங்கரமான கயிறு, இவற்றையெல்லாம், எளிதில் தாங்கள் வெட்டி எரிந்து விடுகிறீர்கள். ஆனால் தங்கள் பக்தர்கள் அன்பால் கட்டும் கயிற்றை உங்களால் வெட்ட இயலவில்லை.

(7)
மன்மானஸே தாமஸ ராஶி கோ4ரே
காராக்3ருஹே து3(ஹ்க்)க2-மயே நிப3த்4: (ஹ)
லப4ஸ்வ ஹே சௌர! ஹரே சிராய
ஸ்வ சௌர்ய தோ3ஷோசித மேவ த4ண்ட4ம்

ஓ திருடனே! என் அனைத்தையும் திருடியவனே! இன்று நான் உங்களை, என் அறியாமையின் பயங்கரமான இருளால், மிகவும் பயமுறுத்தும், என் இதயத்தின், துன்பகரமான சிறைச்சாலையில், அடைத்துள்ளேன். மேலும் நீண்ட காலம் நீங்கள் அங்கேயே இருப்பீர்கள். உங்கள் திருட்டுக் குற்றங்களுக்கு உரிய தண்டனையைப் பெறுவீர்கள்!

(8)
காரா க்3ருஹே வஸ ஸதா3 ஹ்ருத3யே மதீ3யே
மத்-ப4க்தி-பாஶ த்3ருட43ந்த4ன நிஷ்ச்சல(ஸ்) ஸன்
த்வாம் கிருஷ்ண ஹே! பிரளய-கோடி-ஶதாந்தரே’பி
ஸர்வஸ்வ-சௌர! ஹ்ருத3யான் ந ஹி மோசயாமி

ஓ கிருஷ்ணா, என்னிடமிருந்து அனைத்தையும் திருடிய திருடனே! என் பக்தியின் கயிறு என்றென்றும் இறுக்கமாக உள்ளது. எனவே நீங்கள் என் இதயத்தின் சிறையில் தொடர்ந்து வசிப்பீர்கள்; ஏனென்றால், நான் உங்களை மில்லியன் கணக்கான யுகங்களுக்கு விடுவிக்க மாட்டேன்.

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare