2. சாமை - ஜீரா புலாவ்

தேவையான பொருட்கள்
- சாமை (Little Millet) – 1 கப்
- பட்டை – 1 சிறிய துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 1
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நெய் / எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
செய்முறை
- சாமையை நன்றாக கழுவி, 20 நிமிடம் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.
- வாணலியில் நெய் சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- ஊற வைத்த சாமையை சேர்த்து 2–3 நிமிடம் லேசாக வதக்கவும்.
- தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மூடி வைத்து, மிதமான தீயில் சாமை நன்றாக வெந்து உதிரியாக வரும் வரை சமைக்கவும்.

