3. காபி, டீக்கு மாற்று பானமான
புதினா டீ

காபி / டீக்கு மாற்று பானம் (தலைவலி நீக்கவல்லது)
தேவையான பொருட்கள்
- புதினா இலை – ஒரு கைப்பிடி
- ஏலக்காய் – 1
- இஞ்சி – சிறிய துண்டு
- தண்ணீர் – 1 கப்
- தேன் (விருப்பப்படி) – தேவையான அளவு
செய்முறை
- ஒரு துண்டு தோல் சீவிய இஞ்சியை எடுத்து கொள்ளவும்.
- ஒரு ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் இவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாக கொதித்த பிறகு வடிகட்டவும்.
- தேவைப்பட்டால் தேன் சேர்க்கவும்.

