திருமொழி - பண்டை நான் மறை
(ஸ்ரீ ராமன் அருளியது)
ஸக்ருதே³வ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அப⁴யம் ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யே தத்³ வ்ரதம் மம ||
பண்டை நான் மறையும், வேள்வியும் கேள்விப்
பதங்களும் – பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த, பிறங்கு ஒளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும், குரைகடல் ஏழும்
ஏழுமா மலைகளும், விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற, எம்பெருமான்
அரங்கமா நகர் அமர்ந்தானே.
அண்டமும் தானாய் நின்ற, எம்பெருமான்
அரங்கமா நகர் அமர்ந்தானே.
இந்திரன் பிரமன் ஈசன், என்று இவர்கள்
எண்ணில், பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும், மிக்க
சுற்றமும் – சுற்றி நின்று அகலாப்
பந்தமும்
பந்தம் அறுப்பது ஓர், மருந்தும்
பான்மையும் – பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்
அரங்கமா நகர், அமர்ந்தானே.
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்
அரங்கமா நகர். அமர்ந்தானே.
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவர் உலகும்
துன்னு மாஇருளாய்த், துலங்கு ஒளி சுருங்கித்
தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும், முனிவர்க்கும் நல்கிப்
பிறங்கிருள், நிறங்கெட ஒருநாள்
அன்னமாய் அன்றங்கு, அருமறை பயந்தான்
அரங்கமா நகர், அமர்ந்தானே.
அன்னமாய் அன்றங்கு, அருமறை பயந்தான்
அரங்கமா நகர். அமர்ந்தானே.
மாஇருங் குன்றம் ஒன்று, மத்தாக
மாசுணம் அதனொடும் அளவி
பா இரும் பௌவம், பகடு விண்டலறப்
படுதிரை விசும்பிடைப் படர
சேய் இரு விசும்பும், திங்களும் சுடரும்
தேவரும், தாம் உடன் திசைப்ப
ஆயிரந்தோளால், அலைகடல் கடைந்தான்
அரங்கமா நகர், அமர்ந்தானே.
ஆயிரந்தோளால், அலைகடல் கடைந்தான்
அரங்கமா நகர். அமர்ந்தானே.
சுரிகுழல் கனிவாய்த், திருவினைப் பிரித்த
கொடுமையில் கடுவிசை அரக்கன்
எரிவிழித்து இலங்கு மணிமுடி பொடிசெய்து
இலங்கை, பாழ் படுப்பதற்கு எண்ணி
வரிசிலை வளைய, அடுசரம் துரந்து
மறிகடல் நெறிபட மலையால்
அரிகுலம் பணிகொண்டு, அலைகடல் அடைத்தான்
அரங்கமா நகர், அமர்ந்தானே.
அரிகுலம் பணிகொண்டு, அலைகடல் அடைத்தான்
அரங்கமா நகர். அமர்ந்தானே.
ஊழியாய், ஓமத்து உச்சியாய்
ஒரு கால் உடைய, தேர் ஒருவனாய்
உலகில் சூழிமால் யானத்
துயர் கெடுத்து இலங்கை
மலங்க அன்று அடுசரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப்
பகலவன் ஒளி கெட பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்
அரங்கமா நகர், அமர்ந்தானே.
ஹரே கிருஷ்ணா

