ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால்

பிரபுபாதா…. ஜெய பிரபுபாதா…(2)

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

1.
கலியுகக்கடலில் மூழ்கிய என்னை
யார் இங்கு கரையேற்ற வருவார்?
கண்ணனின் பெருமையை அறியாத எனக்கு
ஹரிநாமம் யார் சொல்லித் தருவார்?

உம் குரு தந்த போதனை அதன் வழிவந்த சோதனை
உமையின்றி யார் வெற்றி பெறுவார்?
தள்ளாத வயதிலும் பொல்லாத மனிதர்க்கு
தன்னுணர்வு யார் இங்கு தருவார்?

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

2.
மனித நிலையிலே தாழ்ந்த மிருகம் போல்
வாழ்ந்த மக்களை யார் வந்து காப்பார்?
மத பேதங்கள் நீக்கி மஹா மந்திரத்தால் தாக்கி
வீழ்ந்தோரை யார் மீட்டு தருவார்?

மாயாவாதிகள் மிரள சூன்யவாதிகள் சிதற
உம் வார்த்தைகள் இன்றி யார் விரட்ட முடியும்?
பல பாவத்திலே பக்தி ஹரி நாமத்தில் உள்ள சக்தி
உமையின்றி யார் விளக்க முடியும்?

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

3.
ஹரி நாமம் உலகில் சொல்ல கண்ணன் புகழ் உலகை வெல்ல
உமையன்றி யார் உறக்கம் வெல்வார்?
உணவில் கட்டுப்பாடு தீய பழக்கங்கள் சுட்டுப்போடு
என்றுண்மை வழியில் யார் நடத்தி செல்வார்?
ஜெகந்நாதர் தேர்விழா ஜென்மாஷ்டமி திருவிழா
என்றுலகை யார் வழிநடத்தி செல்வார்?
கௌரங்கரின் பெருமை நித்தியானந்தரின் அருமை
யார் வந்து உண்மைகள் சொல்வார்?

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

4.
ஹரிநாமத்தின் தேவை வைஷ்ணவரின் சேவை
யார் எங்கள் அறிவுக்கண் திறப்பார்?
ஆலயங்கள் திறப்பு பக்தர்களின் சிறப்பு
யார் இந்த ஆன்மீகம் பகிர்வார்?
பிருந்தாவனத்தின் பெருமை மாயாப்பூரின் மகிமை
யார் வந்து கண்ணன் கதை சொல்வார்?
திருத்தலங்கள் மகிமை பக்தியில் நம் கடமை
யார் இந்த ஞானங்கள் தருவார்?

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

5.
அன்பு ராதையின் காதல் கண்ணனுடன் மோதல்
யார் இந்த லீலைகள் சொல்வார்?
ராசலீலை சிறப்பு கோலோக வாசல் திறப்பு
யார் இந்த நுணுக்கங்கள் அறிவார்?
அந்த கோபியரின் நேசம் கண்ணன் கோபர் உண்மைபாசம்
யார் இந்த தகவல்கள் சொல்வார்?
நீர் கூறும் கண்ணன் விளக்கம் என் ஐயங்களை விளக்கும்
யார் உந்தன் வார்த்தைகள் வெல்வார்?

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

6.
வாழ்வில் ஒழுங்குமுறைகள் கண்ணன் பக்தர்க்கில்லை குறைகள்
யாரன்பு கட்டளைகள் விடுப்பார்?
இல்லம் கோயிலாக மாற்ற அதில் கண்ணன் வந்து வீற்ற
யாரிந்த அதிசயங்கள் புரிவார்?
கலியுகம் என்னை மிரட்ட என் வாழ்வின் இருளை விரட்ட
யார் வந்து ஒளியேற்றி வைப்பார்?
மஹா மந்திரத்தின் விளக்கம் அதை ஜெபிப்பவர்க்கில்லை கலக்கம்
யார் எந்தன் பக்தியை இங்கு வளர்ப்பார்?

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

7.
நான் பக்தி படகில் மெல்ல அந்த கோலோகம் செல்ல
யார் அந்த படகில் திசை சொல்வார்?
நான் இறப்பை வெற்றிகொள்ள இந்த பிறவிக் கடலை வெல்ல
யார் எந்தன் துணையாக வருவார்?
கண்ணன் கீதையின் சாரம் பாகவதத்தின் கீதம்
யார் இங்கு உள்ளபடி தொகுப்பார்? உம் புத்தகத்தின் தொகுப்பு
அது ஆன்மீக வகுப்பு
இனி யார் உங்கள் சாதனைகள் செய்வார்?

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், யாரின்று என் ஜீவன் காப்பார்? (2)

8.
நீர் கண்ணனின் கைப்பிள்ளை, உந்தன் அன்பிற்குண்டோ எல்லை
நீர் சீர் செய்த பாதையில் நான் செல்வேன்..
உம் பேச்சு உலகை வெல்லும் உங்கள் வேத ஞானம் சொல்லும்
உம் வார்த்தைகள் பின்பற்றி வாழ்வேன்…
உம் கருணை கொண்ட பார்வை அது நீக்கும் எந்தன் சோர்வை
உம் புத்தகங்கள் படித்து உம்மைக் காண்பேன்…
நீர் இல்லாத உலகும் உயிர் இல்லாத உடலும்
என் கண்கள் சமமாக நோக்கும்…

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், என் வாழ்வு இருள் கடலில் மூழ்கும். (2)

9.
கண்ணன் என் புலம்பல் கேட்க, உமை அனுப்பி, எனைக் காக்க,
சைதன்யரின் தளபதியாய் வந்தீர்…
இவர் என் கீதை தூதுவர் சரிதாம்ருத போதகரென்று
கண்ணன் உள்ளம் உமை புகழ்ந்து சொல்லும்…
உம் வார்த்தையில் உள்ளம் உருக, அதன் பொருளை அள்ளிப் பருக
என் வாழ்வினி மூழ்காமல், கரை செல்லும்…
நீர் துவங்கிய பக்தி இயக்கம் இந்த அண்டமே கண்டு வியக்கும்
இது தன்னுணர்வு பெற்றவரின் இல்லம்…

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், என் வாழ்வு இருள் கடலில் மூழ்கும். (2)

10.
கண்ணனுடன் எந்தன் உறவு, வ்ரஜ பூமியில் என் பிரிவு
என் உண்மையான இருப்பிடம் நான் அறிந்தேன்…
உம் வார்த்தையின் தாக்கம், அதில் தெரிந்தது என் நோக்கம்
கோலோகம் செல்ல உம் திருவடி அடைந்தேன்…
பக்தியின் கடலே, கண்ணன் புகழேந்திய மடலே
உம் திருவடியில் சமர்ப்பணங்கள் ஏற்பீர்…
சாதுவின் உருவே எனை ஆளும் ஜகத்குருவே
என் பக்திபாதை பிறழாமல் காப்பீர்…

ஒருவேளை பிரபுபாதர் தோன்றாமல் இருந்தால், என் வாழ்வு இருள் கடலில் மூழ்கும். (2)

அது பொற்காலம் பிரபுபாதர் நம்மிடையே தோன்றி
நம் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்………
பொற்காலம் பிரபுபாதர் நம்மிடையே தோன்றி,
நம் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் (2)

ஹரே… கிருஷ்ணா ஹரே… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே…
ஹரே… ராமா ஹரே… ராமா ராமா ராமா ஹரே ஹரே (3)

ஜெயஸ்ரீல பிரபுபாத், ஜெயஸ்ரீல பிரபுபாத், ஜகத்குரு ஸ்ரீல பிரபுபாத்…. (3)

அது பொற்காலம் பிரபுபாதர் நம்மிடையே தோன்றி
நம் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்………
பொற்காலம் பிரபுபாதர் நம்மிடையே தோன்றி,
நம் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்

நம் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் (2)

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare