பகவானுக்கு நெய்வேத்யம் செய்யும்பொழுது கூற வேண்டிய மந்திரம்
 

ஸ்ரீல பிரபுபாதர் பிரணாம்
நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்தாய பூ-தலே
ஸ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே ஸரஸ்வதி தேவே கௌர-வாணி-பிரசாரிணே
நிர்விசேஷ-ஷுன்யவாதி-பாஸ்சாத்ய-தேஷ-தாரிணே

பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும், அவரது தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்தவருமான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை செலுத்துகின்றேன். மாயாவாதமும், சூன்யவாதமும் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை கருணையோடு பிரச்சாரம் செய்கிறீர்கள். சரஸ்வதி கோஸ்வாமியின் சேவகரே, ஆன்மீக குருவே எங்களது மரியாதை கலந்த வணக்கங்களை உங்களுக்கு செலுத்துகின்றோம்.

ஸ்ரீ கௌராங்க பிரணாம்
நமோ மஹா-வதான்யாய
க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே
க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய
நாம்னே கௌர-த்விஷே நம:

ஓ கருணையின் அவதாரமே! க்ருஷ்ணராகிய நீங்கள் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்பிரபுவாக தோன்றியுள்ளீர்கள். ஸ்ரீமதி ராதா ராணியின் தங்க நிறத்தை ஏற்றுள்ளீர்கள், கிருஷ்ணரின் தூய அன்பை கடல் அளவு விநியோகிக்கிறீர்கள், எங்களது மரியாதை கலந்த வணக்கங்களை உங்களுக்குச் செலுத்துகிறோம்.

ஸ்ரீ கிருஷ்ண பலராம பிரணாம்
நமோ பிரம்மன் ய தேவாய
கோ பிராமண ஹிதாய ச
ஜகத் தி தாய கிருஷ்ணாய
கோவிந்தாய நமோ நமஹ

உயர்ந்த இயல்புடைய இறைவனுக்கும், பசுக்கள் மற்றும் பிராமணர்களின் நண்பரும் பயனாளியும், முழு உலகத்தின் நண்பரும், இறைவனுமான ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஸ்ரீ கோவிந்தருக்கும் மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

ஸ்ரீ பஞ்சதத்வ மஹாமந்திரம்
ஜய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த
ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கௌர பக்த விருந்த

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், பிரபு நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், கதாதரர், ஸ்ரீவாஸர் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்

ஹரே கிருஷ்ணா மஹாமந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare