கல்யாண பேரிகை அடித்தார் ஜனகன்
(1)
கல்யாண பேரிகை அடித்தார் – ஜனகன்
சொல்லிய வார்த்தையை படித்தார்
கல்யாண பேரிகை அடித்தார் – ஜனகன்
சொல்லிய வார்த்தையை படித்தார்
எல்லோரும் ஆனந்தம் கூட்டினார் – அவர்
எங்கெங்கும் நின்று கூத்தாடினார்
எல்லோரும் ஆனந்தம் கூட்டினார் – அவர்
எங்கெங்கும் நின்று கூத்தாடினார்
(2)
பொன்னரி மாலைகள் விக்கினார்
முத்தும், பொன்னும், பவளமும் தூக்கினார்
பொன்னரி மாலைகள் விக்கினார்
முத்தும், பொன்னும், பவளமும் தூக்கினார்
கின்னரி வீணைகள் பாடினார்
மெத்த கேளிக்கை மாதர்கள் ஆடினார்
கின்னரி வீணைகள் பாடினார்
மெத்த கேளிக்கை மாதர்கள் ஆடினார்
(3)
மாணிக்க தீபங்கள் ஏற்றினார்
நல்ல வாடை கஸ்தூரிகள் தீட்டினார்.
மாணிக்க தீபங்கள் ஏற்றினார்
நல்ல வாடை கஸ்தூரிகள் தீட்டினார்.
ஆனி பொன் ஆடைகள் சாற்றினார்
பனி நீராலே தெருவெங்கும் ஊற்றினார்.
ஆனி பொன் ஆடைகள் சாற்றினார்
பனி நீராலே தெருவெங்கும் ஊற்றினார்.
(4)
முத்தான தண்டுலம் விரித்தார்
வேத முறையில் சடங்கெல்லாம் தரித்தார்.
முத்தான தண்டுலம் விரித்தார்
வேத முறையில் சடங்கெல்லாம் தரித்தார்.
உத்தம மந்திரம் விளித்தார்
முனிவர் ஹோம அக்கினியை வளர்த்தார்.
உத்தம மந்திரம் விளித்தார்
முனிவர் ஹோம அக்கினியை வளர்த்தார்.
(5)
மத்தளம், மல்லரி தாளங்கள்
பஞ்ச வாத்ய நரகஜ மேளங்கள்
மத்தளம், மல்லரி தாளங்கள்
பஞ்ச வாத்ய நரகஜ மேளங்கள்
தீர்த்திகளால் சக்ர வாளமும் – திக்கும்
செவி படுமே அண்ட கோளமும்
தீர்த்திகளால் சக்ர வாளமும் – திக்கும்
செவி படுமே அண்ட கோளமும்
(6)
அய்யனும் தையல் கை பிடித்தார்
கலியாண விதியெல்லாம் முடித்தார்.
அய்யனும் தையல் கை பிடித்தார்
கலியாண விதியெல்லாம் முடித்தார்.
செய்யவளும் திருமாலே போல
சேர்ந்தெழுந்தாரே மென் மேலே
செய்யவளும் திருமாலே போல
சேர்ந்தெழுந்தாரே மென் மேலே.
செய்யவளும் திருமாலே போல
சேர்ந்தெழுந்தாரே மென் மேலே.
** ஹரே கிருஷ்ணா **

