b. கிரீன் பீஸ் மசாலா

தேவையான பொருட்கள்
- முந்திரி 10 – 12 – வென்னீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்
- தக்காளி – 4 ( அரைத்துக் கொள்ளவும்)
- பட்டாணி – 1கப் வேக வைத்தது
- இஞ்சி – 1 துண்டு
- பிரியாணி இலை – 2
- லவங்கம் – 2
- பட்டை – 1 சிறிய துண்டு
- ஏலக்காய் – 2
- இவை அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
செய்முறை:
- முதலில் கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிறகு மிதமான சூட்டில் 2 பிரியாணி இலை, 2 லவங்கம், 1 சிறிய பட்டை , 2 ஏலக்காய், சிறு ஜாதிபத்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 1 இன்ச் இஞ்சி, 2 பச்சை மிளகாய் மற்றும் 1 சிட்டிகைப் பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் இதில் அரைத்து வைத்த தக்காளி மற்றும் முந்திரி பேஸ்டை சேர்க்கவும்.
- அவை நன்றாக கொதித்த பிறகு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீ ஸ்பூன் சீரகத்தூள், 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இரண்டு டீஸ்பூன் அளவு தயிர் (அடித்து வைத்ததை) சேர்க்கவும்.
- அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, பின் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.

