கோவிந்த கோவிந்த ராதா முகுந்த

(ஸ்ரீ வில்வ மங்கல தாக்கூர்)

(1)
கோவிந்த கோவிந்த ராதா முகுந்த
முரளீதரா நந்தசந்த்ர மதுஸூதன கோகுலேந்த்ர
கோலாஹலாகண்ட ப்ருந்தாவனானந்த
கோபீஜனாம்போதி சந்த்ர

(2)
காயத்தினை நொந்து கர்மம் கழித்த பின்
கதியினை தேடத்தகாதே – அதை
கருத்தினில் கொள்ளப் புகாதே – சாகும்
காலத்தினை சொல்லி நேரத்தில் பாதியை
கனவென்று விட்டுவிடாதே – இந்த

(3)
கண்ணால் அவனை நீ நாடு – நல்ல
பண்ணால் அவன் புகழ் பாடு – இரு
கையால் தாளங்கள் போடு -இரு
காலால் அடவொன்று ஆடு – அந்த
காலன் வந்தாலென்ன நேரில் அவன் கையில்
தாளத்தை கொண்டு போய் போடு
(அவன் கையில்) தாளத்தை கொண்டு போய்ப் போடு

(4)
நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போ போ பார்க்க
நேரம் எனக்கேது இப்போ – எங்கள்
நீலமலர்க் கண்ணன் நாமத்தைப் பாடும்
ஆனந்தத்திற் கீடில்லை இப்போ – இந்த

(5)
நேரம் தகும் என்று சொல்லு – இந்த
நெஞ்சில் தகும் என்று சொல்லு – பல
கோடிப் பழவினைத் தள்ளு – இன்னும்
கூட ஒரு முறை சொல்லு – பல
கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள்
கூடக் கிடைக்குமோ சொல்லி

(6)
பச்சை சிறந்துற்ற மேனித்தடம் கண்டு
பாடிக் கலந்திட்ட போதே – எம்மை
பழவினை ஒன்றும் செய்யாதே – இங்கு
பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்தது
பாடிட வாரும் தப்பாதே – நமக்கு

(7)
பாடக்கிடைத்த நாவொன்று – தாளம்
போட கிடைத்த கை இரண்டு – இன்னும்
கூடும் கரணங்கள் மூன்று – வேதம்
கோடி எனப்பாரும் நான்கு – அந்த
குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால்
கொள்ளைதான் போகாதோ ஐந்து

(8)
கையில் கிடைத்திட்ட கனிச்சோற்றை
மெய்யச் சுவைக்கப் படாதோ – வெறும்
கணக்குப் பார்த்தவர் போலே
காலங்கள் கோள் அவை இவை என்று சொல்லிப் போய்
காலனில் வசப்படாதே – எங்கும்

(9)
காணக்கிடைக்காத தங்கம் – இங்கு
கண்டு களிக்க ஸத்ஸங்கம் – இங்கு
வேண்டியது அருள் பொங்கும் – எங்கும்
மிகையில்லை என்றிங்கு தங்கும்
கோணக் கோணச் சொல்லி
கோவிந்த னென்றாலும்
கூட அருள்தானே பொங்கும்

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare