என்னோடு விளையாட வா.. வா.... கண்ணா
என்னோடு விளையாட, வா.. வா…. கண்ணா!
என்னோடு விளையாட, வா.. வா…. கண்ணா!
என்னோடு விளையாட வா… வா….
இப்போதும்; எப்போதும்,
இசையோடும், அன்போடும்!
என்னோடு விளையாட வா… வா….
கண்ணா…
என்னோடு விளையாட வா… வா….
முத்துச்சரக் கொண்டை இடுவேன் !
முத்துச்சரக் கொண்டை இடுவேன் !
மயிலின் முடியொன்றெடுத்து,
நான் சொருகியும் விடுவேன் !!
முத்துச்சரக் கொண்டை இடுவேன் !
மயிலின் முடியொன்றெடுத்து,
நான் சொருகியும் விடுவேன் !!
சத்தச் சலங்கை ஒன்றிடுவேன் !
சத்தச் சலங்கை ஒன்றிடுவேன்,
அதன் சந்தத்தில் நெஞ்சை
கிடத்திக் களிப்பேன் !!
சத்தச் சலங்கை ஒன்றிடுவேன்,
அதன் சந்தத்தில் நெஞ்சை
கிடத்திக் களிப்பேன் !!
என்னோடு விளையாட வா.. வா….
கண்ணா…
என்னோடு விளையாட வா.. வா….
பொன்மணி சரமொன்று பூட்டி !
பொன்மணி சரமொன்று பூட்டி !
வண்ண பூம்பட்டை
அழகாக இடையினில் உடுத்தி !!
பொன்மணி சரமொன்று பூட்டி !
வண்ண பூம்பட்டை
அழகாக இடையினில் உடுத்தி !!
சின்னக் கரம் தடவி ஊத
சின்னக் கரம் தடவி ஊத
மூங்கில் தேடிக்குழல் ஒன்று
செய்து, நான் தருவேன் !!!
சின்னக் கரம் தடவி ஊத
சின்னக் கரம் தடவி ஊத
மூங்கில் தேடிக்குழல் ஒன்று
செய்து, நான் தருவேன் !!!
என்னோடு விளையாட வா.. வா… கண்ணா!
என்னோடு விளையாட வா.. வா… கண்ணா!
என்னோடு விளையாட வா.. வா…
இப்போதும்; எப்போதும் !
இசைவோடும், அன்போடும்
என்னோடு விளையாட வா.. வா…
என்னோடு விளையாட வா.. வா…
கண்ணா!
என்னோடு விளையாட வா.. வா…
** ஹரே கிருஷ்ணா **

