ஏகாதசி- சில கட்டுப்பாடுகள்

ஏகாதசி அன்று பயன்படுத்தக் கூடிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

ஏகாதசி அன்று அனுசரிக்கும் விரத முறைகள்

1. நிர்ஜல்: நீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பது.
2. சஜலா: நீர், பால், பழச்சாறு, இளநீர், மோர், தயிர் மற்றும் பழங்கள் உட்கொள்வது.
3. ஃபராலி: தானியங்களை தவிர்த்து, கிழங்குகள், காய்கறிகள், தேங்காய்,
வேர்க்கடலை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது.

பயன்படுத்தக்கூடிய பொருட்கள்

பால் பொருட்கள்

  • பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், பன்னீர்

கிழங்கு வகைகள்

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு
  • கேரட், பீட்ரூட், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு
  • வேர்க்கடலை (நிலக்கடலை)

பழ வகைகள்

  • வாழைப்பழம், மா, பலா, கொய்யா, ஆப்பிள், மாதுளை
  • ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, தர்பூசணி, வெள்ளரிப்பழம்
  • பேரிக்காய், சீம எலந்தைப்பழம், சப்போட்டா, திராட்சை

உலர் பழங்கள்

  • முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை, அத்தி, வால்நட், பேரீட்சை

இனிப்பு வகைகள்

  • நாட்டுச் சர்க்கரை, வெல்லம், பனங்கற்கண்டு, பனைவெல்லம்

அரிசி / தானியத்திற்கு மாற்றுகள்

  • சாமை, ஜவ்வரிசி, கின்வா (Quinoa), Buckwheat

காய்கறிகள்

  • பூசணி, பரங்கி, சுரைக்காய், சௌ-சௌ, வாழைக்காய்
  • வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலங்காய், பீர்க்கங்காய், கோவைக்காய்
  • கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், வெள்ளரிக்காய்
  • பச்சைமிளகாய், இஞ்சி, முட்டைக்கோஸ், புரோக்கலி, காலிப்ளவர்
  • குடமிளகாய், முள்ளங்கி, எலுமிச்சை, மல்லி, புதினா, கருவேப்பிலை

எண்ணெய் வகைகள்

  • சுத்தமான நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்

தாளிப்பு / மசாலா வகைகள்

  • சீரகம், மிளகு, சோம்பு, மல்லி, ஏலக்காய், கிராம்பு
  • பட்டை, பிரிஞ்சி இலை, வரமிளகாய்
  • மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா

தவிர்க்கப்பட வேண்டியவை

  • காபி, டீ, க்ரீன் டீ, சீனி (White Sugar)
  • அரிசி, கோதுமை, அவல், சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, திணை, குதிரைவாலி
  • ரவை, சேமியா, ஓட்ஸ், மைதா, அரிசி மாவு, கடலை மாவு
  • அனைத்து பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகள்
  • பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, பட்டாணி, பயறு வகை காய்கறிகள்
  • காளான், பூண்டு, வெங்காயம், அனைத்து கீரை வகைகள்
  • எள் எண்ணெய், ரிஃபைண்ட் ஆயில், பாமாயில், கடுகு எண்ணெய்
  • கடுகு, எள், வெந்தயம், கருஞ்சீரகம், பெருங்காயம்

குறிப்பு

தேன் மருத்துவ தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கடையில் சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் கடையில் வாங்கிய மசாலா பொருட்கள் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புள்ளதால் தவிர்ப்பது சிறந்தது.

** ஹரே கிருஷ்ணா ** 

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare