1. கேரட் கீர்

தேவையான பொருட்கள்
- கேரட் – தேவையான அளவு
- பால் – தேவையான அளவு
- ஏலக்காய் – 1
- நாட்டு சர்க்கரை / வெல்லம் – தேவையான அளவு
- முந்திரி – சில
- நெய் – சிறிதளவு
செய்முறை
- கேரட்டை தோல் சீவி நன்றாக கழுவி மிருதுவாக வேக வைத்து கொள்ளவும்.
- வேக வைத்த கேரட்டுடன் ஒரு ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் அரைத்த கேரட் விழுதை சேர்க்கவும்.
- மிதமான தீயில் தொடர்ந்து கிளறி, பால் மற்றும் கேரட் விழுது நன்றாக சேரும்வரை காய்ச்சவும்.
- நாட்டு சர்க்கரை / வெல்லம் சேர்த்து கரையும்வரை நன்றாக கலக்கவும்.
- ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரியை பொன்னிறமாக வறுத்து கீரில் சேர்க்கவும்.
- சூடாக அல்லது வெதுவெதுப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

