அத்தியாயம் – 10
மானுட பரதருக்கும் மன்னர் ரகூகணருக்கும் நிகழ்ந்த உரையாடல்
பதம் 5.10.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, அதன் பிறகு, சிந்து மற்றும் சௌவீர பகுதிகளை ஆண்ட மன்னர் ரகூகணன் கபிலாஸ்ரமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். மன்னரின் தலைமைப் பல்லக்குத் தூக்கிகள் இட்சுமதி நதியின் கரையினை அடைந்தபொழுது அவர்களுக்கு மற்றொரு பல்லக்குத் தூக்கி தேவைப்பட்டான். அதனால் அவர்கள் யாராவது ஒருவன் கிடைப்பானா என்று தேடினர். சந்தர்ப்பத்தினால் அவர்கள் மானுட பரதர் இருக்கும் இடத்திற்கு வந்தனர். ஜடபரதரின் இளமை, வலிமை மற்றும் உறுதியுடைய அங்கங்களைப் பார்த்தனர். மாடுகளைப் போன்றும், கழுதைகளைப் போன்றும் அவரும் பாரம் தூக்குவதற்குப் பொருத்தமாக இருந்தார். மகாத்மா மானுட பரதர் இச்செயலுக்குப் பொருத்தமானவர் இல்லை என்றபோதிலும், பல்லக்குத் தூக்கிகள் அவரை கட்டாயமாகப் பல்லக்கைத் தூக்க வைத்தனர்.
பதம் 5.10.2 : மானுட பரதர் வன்முறை ஏதும் இல்லாதவர். ஆயினும் பல்லக்கை ஒழுங்கின்றி சுமந்து கொண்டிருந்தார். அவர் பல்லக்கைத் தூக்கி நடந்து கொண்டிருக்கும் பொழுது மூன்றடிகளுக்கு ஒருதரம் நின்று தான் எறும்பு போன்ற சிற்றுயிர்களை மிதித்து விட்டோமா என்று பார்ப்பார். எனவே இதனால் பிற பல்லக்குத் தூக்கிகளின் நடை வேகத்தோடு அவரது நடை இணையவில்லை. இதன் காரணமாகப் பல்லக்கு தூக்கிப் போட்டது. அதனுள்ளிருந்த மன்னர் ரகூகணன் பல்லக்குத் தூக்கிகளிடம் “ஏன் பல்லக்கினை ஒரே சீராகத் தூக்கமாட்டேனென்கிறீர்கள்? ஒழுங்காகத் தூக்குங்கள்” என்று கூறினார்.
பதம் 5.10.3 : மகாராஜா ரகூகணனின் கடிந்துரையினைக் கேட்ட பல்லக்குத் தூக்கிகள் அவர் அளிக்கும் தண்டனையினை நினைத்து மிக்க அச்சங்கொண்டு அவரிடம் கூறத் தொடங்கினர்.
பதம் 5.10.4 : பிற பல்லக்குத் தூக்கிகள் சூத்திரர்கள். ஆனால் மானுட பரதரோ ஓர் உயர்ந்த அந்தணர் சிறந்த பக்தரும் ஆவார். சூத்திரர்கள் பிற உயிர்களின் மீது கருணை காட்டுவதில்லை. ஆனால் ஒர் வைணவன் சூத்திரனைப் போல் நடக்க முடியாது. ஒரு சூத்திரனும், அந்தண வைணவனும் இணைந்தால் அவர்களது செயல் நிச்சயம் சீராக இருக்காது. பல்லக்கைத் தூக்கும் சூத்திரர்கள் வழியில் உள்ள எறும்புகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார். ஆனால் பரதரோ அச்சூத்திரர்களைப் போன்று செயல்பட முடியாது. அதனால் இடையூறு நேர்ந்தது.
பதம் 5.10.5 : தண்டனைக்காளாவோம் என்று அஞ்சிய பல்லக்குத் தூக்கிகளின் வார்த்தைகளை மன்னர் ரகூகணனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு மனிதன் செய்யும் தவறினால் பல்லக்கு சீராக சுமக்கப்படவில்லை என்பதையும் அவர் அறிந்தார். இதனை நன்கு அறிந்துகொண்டதினாலும் அவர்களது வேண்டுகோளைக் கேட்டதினாலும் அவரது சினம் சிறிது தணிந்தது. அவர் அரசியல் முதிர்ச்சி பெற்றவர். நல்ல அனுபவசாலியும் ஆவார். உண்மையில் மன்னர் ரகூகணனின் மனம் இரஜோ குணத்தினால் மூடப்பட்டிருந்தது. ஆகையினால், சாம்பலினால் மூடப்பட்டிருக்கும் நெருப்புப் போன்று பரதரின் பிரம்ம ஜோதியும் தெளிவாகத் தெரியாததினால் அவரிடம் மன்னர் பின்வருமாறு கூற ஆரம்பித்தார்.
பதம் 5.10.6 : மானுட பரதரிடம் மன்னர் ரகூகணன் கூறினார்: எத்தனை துன்பகரமானது இது, எனது சகோதரனே, நீ மிகவும் களைப்படைத்திருக்கிறாய், ஏனென்றால் நீ யாருடைய துணையுமின்றி நீண்ட நேரமாக இந்தப் பல்லக்கைத் தனியே சுமந்து வந்திருக்கிறாய். மேலும் உனது முதுமையினால் நீ மிகவும் இடர்ப்படுகின்றாய். அன்பு நண்பனே! வலிமை உடையவனாக, உறுதி, திடகாத்திரம் உடையவனாக நீ எனக்குத் தோன்றவில்லை. உடன் வரும் பல்லக்குத் தூக்கிகள் உனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லையா? இவ்வாறு மன்னர் மானுட பரதரைக் கேலியானப் பேச்சுக்களினால் வினவினார். இவ்வாறு விமர்சிக்கப்பட்டபோதிலும் அச்சூழ்நிலையில் உலகியற் கருத்து ஜட பரதரிடம் கிஞ்சிற்றும் இல்லை. அவர் தனது ஆன்மீக நிலையில் எய்தியிருந்தமையினால், அவர் தான் இந்த உடல் அல்ல என்பதை நன்கறிவார். தோற்றத்தில் பருமனாகவோ, மெலிந்தவராகவோ இல்லை. பஞ்சபூதங்கள் மற்றும் மூன்று நுண் பொருட்களினாலான இந்த பரு உடலில் அவர் செய்ய வேண்டியதும் எதுவும் இல்லை. உடலோடு இணைந்திருக்கும் இரு கரங்கள், இரு கால்களுடனும் அவர் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. அவர் முற்றிலும் தனது ஆன்மீக நிலையை உணர்ந்தவராக விளங்கினார். (அஹம் ப்ரஹ்மாஸ்மி) ஆகையினால் மன்னர் செய்த கேலியான விமர்சனத்தினால் அவர் பாதிக்கப்படவில்லை. அவர் எதுவும் பதில் கூறாது முன்பு போலவே பல்லக்கைத் தொடர்ந்து சுமந்தார்.
பதம் 5.10.7 : இதன் பின்னரும், பல்லக்கு முன்பு போல் சீராக இன்றி தூக்கிப் போடுதல் கண்டு மன்னர் மிகுந்த சினமுற்றார். ஏய், முட்டாள், என்ன செய்துகொண்டிருக்கின்றாய்? உடலில் உயிர் இருந்தும் நீ இறந்துவிட்டாயா? நீ எனது கட்டளையை நிறைவேற்றாமல் என்னை அவமதித்து விட்டாய். மரண தேவனான யம ராஜன் எவ்வாறு பாவிகளைத் தண்டிப்பாரோ அதுபோல் பணிவில்லாத உன்னையும் நான் தண்டிக்கப்போகிறேன். இப்போது உனக்கு நான் அளிக்கும் சிகிச்சையினால் நீ உன்னை உணர்ந்து சரியாகச் செய்யப் போகிறாய் பார்.
பதம் 5.10.8 : அரசன் என்று தன்னைக் கருதிய மன்னர் ரகூகணன் உடற்கருத்துடையவராகவும், இயற்கையின் இரஜோ மற்றும் தமோ குணங்களினால் பாதிக்கப்பட்டவராகவும் விளங்கினார். புத்தியில்லாத காரணத்தினால் அவர் மானுட பரதரை வழக்கில்லாத முரண்பட்ட வார்த்தைகளினால் திட்டினார். மானுட பரதர் பக்தரின் உயர்ந்த பக்தரும் அவரது உறைவிடமும் ஆவார். தான் பெரிய அறிவாளி என்று நினைத்த காரணத்தினால் மன்னர், பக்தித் தொண்டில் நிலைபெற்றிருக்கும் ஒரு உயர்ந்த பக்தனின் நிலைமை என்னவென்று அறியவில்லை. அதுபோல் அவரது தன்மைகளும் என்னவென்று அறியவில்லை. மானுட பரதர் முழுமுதற் கடவுளின் இருப்பிடமாவார். அவருக்கு எப்போதும் பகவானின் வடிவத்தைத் தன் இதயத்தில் சுமந்தார். அவர் எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பராக இருந்தார், மேலும் அவர்தன் உடற்கருத்திற்குச் சிறிதும் இடம் தராதவர். ஆகையினால் அவர் பின்வரும் மொழிகளைக் கூறினார்.
பதம் 5.10.9 : ஓர் உயர்ந்த அந்தணராகிய பரதர் கூறினார்: அன்பார்ந்த மன்னன் மற்றும் சிறந்த வீரனே, நீ கேலியாகக் கூறியவை எல்லாம் நிச்சயம் உண்மையே ஆகும். உடல் சுமப்பவனாக இருக்கும்போது இவ்வார்த்தைகள் எல்லாம் உண்மையில் நிந்தனைக்குரியவையன்று. உடலினால் சுமக்கப்படும் பாரம் என்னைச் சேர்ந்ததல்ல. நான் ஆத்மா ஆவேன். உனது கூற்றுக்களில் முரண்பாடுகள் இல்லை. ஏனென்றால் நான் உடலிலிருந்து வேறானவன். பல்லக்கை உண்மையில் தூக்குபவன் நான் அல்லன்; எனது உடலேயாகும். நீ கோடிட்டுக் காட்டியபடி பல்லக்கைத் தூக்குவதினால் நான் சிரமப்படவில்லை. நான் உடலிலிருந்து தனியே பிரிந்திருக்கிறேன். நான் திடகாத்திரமும் உறுதியும் இல்லாதவன் என்று நீ கூறினாய். இவ்வார்த்தைகள் உடலிற்கும் ஆத்மாவிற்கும் வேறுபாடு தெரியாதவனுக்குப் பொருந்துவதாகும். உடல் பெருத்தோ, மெலிந்தோ இருக்கலாம். ஆனால் கற்றறிந்தவன் இவை ஆத்மாவிற்கானது என்று ஒருபோதும் கூறமாட்டான். ஆத்மாவைப் பொறுத்த மட்டில் நான் தடித்தவனுமல்லன் மெலிந்தவனுமல்லன்; ஆகையினால் நான் பருத்தவன் இல்லையென்று நீ கூறியது உண்மையேயாகும். மேலும் இப்பயணத்தின் இலட்சியமும், அதை அடையும் பாதையும் எனக்குரியதென்றால், எனக்குப் பல துன்பங்கள் நேரிடக் கூடும். ஆயினும் அத்துன்பங்கள் எனக்குத் தொடர்புடையனவல்ல. உடலிற்கு மட்டுமே தொடர்புடையன. ஆதலினால் துன்பம் என்பதே எனக்கு இல்லை.
பதம் 5.10.10 : பருத்தல், மெலிதல், உடல் மற்றும் மனத் துன்பங்கள், தாகம், பசி, அச்சம், கருத்து வேற்றுமை, உடல் இன்பத்திற்கான ஆசை, முதுமை, நித்திரை, பௌதீக உடமைகளின் மீதான பற்று, சினம், சோகம், மதம் மற்றும் தன்னோடு காணும் உடலின் அடையாளம் போன்றவை எல்லாம் ஆத்மாவை மூடியிருக்கும் உடலின் மாறுபாடுகளாகும். உடற் கருத்தில் ஆழ்ந்திருப்பவன் இவைகளினால் பாதிக்கப்படுகிறான். ஆனால் நானோ உடற்கருத்துக்களிலிருந்து விடுதலை பெற்றவன். அதனால் நீ குறிப்பிட்டபடி நான் மெலிந்தவனோ அல்லது தடித்தவனோ, வேறெதுவுமோ அல்லன்.
பதம் 5.10.11 : அன்பிற்குரிய மன்னனே, உயிரோடு இருந்தும் இறந்தவனாக இருக்கிறேன் என்று நீ என்னைக் குற்றம் சாட்டினாய். இது குறித்து நான் கூறுவது என்னவென்றால் எங்கும் இதே நிலைதான் என்பதுவே. ஏனெனில் உலகியல் ரீதியான எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் உண்டு அதுபோல் முடிவும் உண்டு. உன்னை அரசனாகவும் எஜமானனாகவும் நினைத்துக் கொண்டு நீ எனக்குக் கட்டளையிட முயற்சிக்கும் வரை, இதுவும் தவறாகவே முடியும் காரணம். இந்நிலைமைகள் நிரந்தரமானவையன்று. இன்று நீ அரசன், நான் சேவகன், நாளை இந்நிலை மாறலாம். நீ எனது சேவகனாகவும் நான் உனக்குத் தலைவனாகவும் ஆகலாம். இவை தெய்வத்தினால் உருவாக்கப்படும் தற்காலிகச் சூழ்நிலைகளேயாகும்.
பதம் 5.10.12 : அன்பார்ந்த மன்னனே, நீ இன்னும் உன்னை அரசனாகவும், என்னை அடிமையாகவும் கருதினாயென்றால் நீ எனக்குக் கட்டளையிடலாம். நானும் உனது கட்டளைக்குக் கீழ்ப்படிவேன். இந்த வேறுபாடு தற்காலிகமானது. மரபாக வருகின்ற ஒன்று என்றும் என்னால் கூற முடியும். இதைத் தவிர வேறு எந்தவொரு காரணமும் நான் காணவில்லை. அப்படியாயின் யார் எஜமானன் யார் வேலைக்காரன்? அனைவருமே இயற்கை விதிகளினால் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இருந்தும் நீ உன்னை எஜமானனாகவும் என்னை வேலைக்காரனாகவும் நினைத்தால் அதனை ஏற்றுக் கொள்கிறேன். எனக்குக் கட்டளையிடு. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?
பதம் 5.10.13 : அன்பார்ந்த மன்னனே, நீ என்னைப் பார்த்து “ஒ மூடனே, ஜடமே, பைத்தியக்காரனே நான் உன்னைத் தண்டிக்கப்போகிறேன் அப்போதுதான் உனக்குப் புத்தி வரும்” என்று கூறினார். இது தொடர்பாக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் ஜடமாகவும் செவிட்டு ஊமையாகவும் இருந்தபோதிலும் உண்மையில் நான் தன்னுணர்வு பெற்ற மனிதனாவேன் என்பதுவேயாகும். என்னைத் தண்டிப்பதால் நீ அடையும் நன்மை என்ன? உனது கணக்கின்படி நான் பைத்தியக்காரன் என்பது உண்மையானால் பிறகு உனது தண்டனை செத்த குதிரையை அடிப்பது போன்றதாகும். அதனால் பயனொன்றுமில்லை. ஒரு பைத்தியக்காரனைத் தண்டிக்கும்பொழுது, அவனது பைத்தியம் நீங்கிவிடுவதில்லை.
பதம் 5.10.14 : சுகதேவ கோஸ்வாமி கூறினார் பரீட்சித்து மன்னரே! மன்னர் ரகூகனன் மிகச் சிறந்த பக்தரான மானுட பரதரைக் கடுமையான மொழிகளால் கண்டித்தபோது அமைதிமிக்க அம்மாமுனிவர் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு முறையாகப் பதில் கூறினார். அறியாமை என்பது உட்கருத்தின் விளைவாக வருவது, பரதர் இத்தவறானக் கருத்தினால் பாதிக்கப்படவில்லை. அவரது இயற்கையான பணிவினால் அவர் தன்னை ஒருபோதும் உயர்ந்த பக்தனாகக் கருதியதே இல்லை. மேலும் அவர் தனது முன்னையக் கர்மவினைப் பயன்களை அனுபவிப்பதற்கும் தயாரகவே இருந்தார். பல்லக்கைத் தூக்குவதின் மூலம் தனது கடந்தகால தவறான செயல்களின் பலன்களைத் தான் அழித்துவிட்டதாக ஒரு சாதாரண மனிதனைப் போல் அவர் எண்ணினார். இவ்வாறு நினைத்தபடி அவர் அப்பல்லக்கைத் தூக்கிச் சென்றார்.
பதம் 5.10.15 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; ஒ, பாண்டவ குலத்தில் சிறந்தவனே! (பரீட்சித்து மன்னனே!) சிந்து மற்றும் சௌவீரப் பகுதியின் மன்னர் (மகாராஜா ரகூகணன்) முழு மெய்ப்பொருளைப் பற்றிய கலந்துரையாடலில் மிகுந்த விருப்பமுடையவர். இத்தகுதி கொள்கை உடைமையினால், பரதரிடமிருந்து, யோகஸித்தி முறைக்கான அனைத்து சாத்திரங்களினாலும் அங்கீகரிக்கப்பட்ட தத்துவார்த்தக் கொள்கைகளைக் கேட்டறிந்தார். இவையே இதயத்திலுள்ள முடிச்சின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. தன்னை மன்னனாகக் கருதிய அவரது உலகியல் உணர்வு அழிந்தது. அவர் உடனே தனது பல்லக்கிலிருந்து விரைந்து இறங்கி, தான் ஒரு சிறந்த அந்தணருக்கு எதிராகக் கூறிய கடுமையான மொழிகளுக்கு இரங்கி மன்னிப்பு பெறுவதற்காக பரதரின் தாமரைத் திருவடிகளில் தனது தலை படுமாறு நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். பின்னர் அவர் பின்வருமாறு வழிபட்டார்.
பதம் 5.10.16 : மன்னர் ரகூகணன் கூறினார் ஒ, அந்தணரே பிறருக்கு யாரென்று தெரியா வண்ணம் நீர் உம்மை நன்கு மறைத்துக் கொண்டு இந்த உலகில் திரிந்து கொண்டிருக்கின்றீர். நீவிர் யாவர்? நீர் ஒரு கற்றறிந்த பிராமணரா? அல்லது முனிவரா? உமது மார்பில் முப்புரிநூல் உள்ளது. நீர் விடுதலை பெற்ற உயர்ந்த தத்தாத்ரேயர் மற்றும் அவரைப் போன்ற அறிஞர்களுள் ஒருவரா? நீர் யாருடைய சீடர் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? நீர் எங்கே இருக்கின்றீர்? எதற்காக இங்கு வந்தீர்? உமது இலட்சிய பயணம் எமக்கு நன்மை அளிப்பதற்காகவா? அருள் கூர்ந்து நீர் யாரென்பதை எனக்கு அறிவிப்பீராக.
பதம் 5.10.17 : போற்றுதற்குரிய ஐயனே, இந்திரனின் வச்சிராயுதத்திற்கோ அல்லது பாம்புபோல் வளைந்த கூர்மையான முனைகளையுடைய சிவபெருமானின் சூலாயுதத்திற்கோ நான் அஞ்சுவதில்லை. அதுபோல் மரண தேவனான யமராஜனின் தண்டனைக்கோ, தீ, காற்று, சூரியன், சந்திரன் மற்றும் குபேரனின் ஆயுதங்களுக்கோ கூட நான் அஞ்சுவதில்லை. ஆனால் ஒரு அந்தணரிடத்துக் குற்றம் செய்வதற்கே நான் மிகவும் அஞ்சுகிறேன்.
பதம் 5.10.18 : வணங்குதற்குரிய ஐயனே, உமது மிகச் சிறந்த ஆன்மீக ஞானத்தின் பாதிப்பானது மறைத்து வைக்கப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. உண்மையில் நீர் உலகத் தொடர்புகள் அனைத்தையும் தொலைத்து விட்டு இறைச் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கின்றீர். இதனைத் தொடர்ந்து ஆன்மீக ஞானத்தில் நீர் அளவற்று வளர்ந்திருக்கின்றீர். அப்படியிருக்க ஏன் ஒரு ஜடத்தைப் போல் அலைந்து கொண்டிருக்கின்றீர் என்பதை எனக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக. ஓ மாமுனிவரே யோக ஸித்திகள் அங்கீகரிக்கும் வார்த்தைகளையே நீர் பேசியிருக்கின்றீர். ஆயினும் நீர் கூறியவற்றை அறிந்து கொள்வது எமக்கு சாத்தியமல்ல. அதனால் அருள்கூர்ந்து அவற்றை விளக்குவீராக.
பதம் 5.10.19 : யோக ஸித்திகளின் தலைவராக நான் உம்மையே கருதுகிறேன். ஆன்மீக அறிவியலை நீர் நன்றாக அறிந்திருக்கின்றீர். கற்றறிந்த முனிவர்களுள் நீரே மிகச் சிறந்தவர். மனித சமுதாயம் அனைத்தின் நன்மைக்காகவும் நீவிர் பிறந்து ஆன்மீக ஞானத்தை அருள்வதற்காகவே நீர் வந்திருக்கின்றீர். நீரே கடவுளின் அவதாரமும், ஞானத்தின் அம்சமுமான கபில தேவரின் நேரடியான தூதரும் ஆவீர். ஆகையினால் நான் கேட்கின்றேன், ஒ, ஆன்மீக குருவே இவ்வுலகில் மிகவும் பாதுகாப்பான அடைக்கலம் எது?
பதம் 5.10.20 : முழுமுதற் கடவுளின் அவதாரமான கபிலதேவரின் நேரடிப் பிரதிநிதியாக நீர் இருப்பது உண்மையில்லையா? மக்களில் உண்மையான உண்மையற்ற மனிதர் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே நீர் உம்மை ஒரு செவிட்டு, ஊமை போல் ஆக்கிக் கொண்டுள்ளீர். இவ்வழியில் நீர் உலகில் திரிவதில்லையா? நான் இல்லற வாழ்வு மற்றும் உலகச் செயல்களில் மிகுந்த பற்றோடும் ஆன்மீக ஞானத்தில் குருடனாகவும் இருக்கிறேன். இப்போது ஒளி பெற வேண்டும் என்பதற்காக நான் உமது முன்னே நிற்கின்றேன். ஆன்மீக வாழ்வில் நான் எவ்வாறு வளர்ச்சி பெற முடியும்?
பதம் 5.10.21 : நீர் கூறியிருக்கின்றீர் “நான் இவ்வேளையினால் சிரமப்படவில்லை என்று. ஆத்மா உடலிலிருந்து வேறானதாக இருந்த போதிலும், உடல் உழைப்பினால் சிரமம் இருக்கத்தான் செய்யும். அதனால் அது ஆத்மாவின் சிரமமாகத் தோன்றுகிறது. நீர் பல்லக்கைத் தூக்கும்பொழுது ஆத்மாவிற்கும் நிச்சயம் உழைப்பு இருக்கிறது. இது எனது யூகமாகும். மேலும் எஜமானனுக்கும், சேவகனுக்கும் இடையே வெளிப்படும் புறத்தன்மைகள் உண்மையானதன்று என்றும் நீர் கூறியிருக்கின்றீர். அதனால் நடப்பு உலகத்தில் இவை உண்மையாக இல்லை என்ற போதிலும் இயலுலகின் உற்பத்திகள் உண்மையில் பாதிக்கக் கூடியவையே ஆகும். இது காணவும் உணரவும்படுகின்றது. புற உலகச் செயல்கள் நிலையற்றவை என்றாலும் அவை உண்மையல்ல என்று கூற முடியாது.
பதம் 5.10.22 : ரகூகணன் தொடர்ந்து கூறினார்: போற்றுதற்குரிய பெரியீரே, உடலின் பருமன், மெலிவு போன்ற இயல்புகள் ஆத்மாவின் தன்மைகள் அல்ல என்று நீர் கூறியிருக்கின்றீர். இது சரியன்று. ஏனெனில் வேதனை, இன்பம் என்னும் இயல்புகள் ஆத்மாவினால் நிச்சயம் உணரப்படுகிறது. ஒரு பானையில் பால் ஊற்றி அதில் அரிசியைப் போட்டு நெருப்பில் வைத்தால் ஒன்றையடுத்து மற்றொன்று தானே சூடேறுகிறது. அதுபோல் உடலின் வேதனை, சுகம் ஆகியவற்றால் புலன்கள், மனம், ஆத்மா போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையிலிருந்து ஆத்மா முற்றிலும் தனித்து இருக்க முடியாது.
பதம் 5.10.23 : போற்றுதற்குரியப் பெரியவரே, நீர் அரசனுக்கும் குடிமகனுக்கும் உள்ள உறவு அல்லது எஜமானனுக்கும் சேவகனுக்கும் இடையிலுள்ள உறவு நிரந்தரமானதன்று என்கிறீர். ஆனால் அவ்வுறவு தற்காலிகமானதே எனினும், ஒருவன் அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவனது கடமை மக்களை ஆட்சி செய்து சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களை தண்டிப்பதாக இருக்கிறது. இவர்களைத் தண்டிப்பதன் மூலம் அவன் குடிமக்களை சட்டத்திற்குக் கீழ்படிய வைக்கிறான். மேலும், செவிட்டு ஊமையாக இருக்கும் ஒருவனை தண்டிப்பது தின்றதையே மீண்டும் தின்னுவது போலும், அரைத்த மாவையே அரைத்தது போலும் என்றும் அதனால் பயன் ஒன்றுமில்லையென்றும் முழுமுதற் கடவுளின் கட்டளைக் கிணங்க ஒருவன் அவனது சுதர்மத்தில் ஈடுபடும் பொழுது அவனது பாவச் செயல்கள் நிச்சயம் குறையும், ஆகையினால் ஒருவன் அவனது சுதர்மத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட போதிலும் அவன் நன்மையே அடைகிறான். ஏனென்றால் அவன் தனது பாவச் செயல்கள் அனைத்தையும் இவ்வழியே வென்று விடுகிறான்.
பதம் 5.10.24 : ஒ, துன்புற்றோரின் சிறந்த நண்பரே, நீர் கூறிய அனைத்தும் எனக்கு முரண்பாடாகவே தோன்றுகின்றது. உம்மை அவமதித்ததின் மூலம் மாபெரும் குற்றம் செய்துள்ளேன். ஒர் அரசனின் உடலைப் பெற்ற காரணத்தினால் நான் வீண் பெருமை, கர்வத்தோடு இருந்தேன். இதனால் நான் நிச்சயம் குற்றவாளியே ஆவேன். ஆகையினால் உமது அளவற்றக் கருணை நிறைந்த பார்வையினைக் காட்ட வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். எனக்காக இதனைச் செய்தால் உம்மை அவமதித்ததினால் விளைந்த பாவத்திலிருந்து நான் விடுதலை பெறுவேன்.
பதம் 5.10.25 : போற்றுதற்குரிய பெருந்தகையீர், நீரே, அனைத்து உயிர்களின் நண்பராக விளங்கும் முழுமுதற் கடவுளின் நண்பராவீர். நீர் அனைவரிடத்தும் சமநோக்குடையவர் என்பதோடு உடற்கருத்திலிருந்தும் விடுதலை பெற்றிருக்கின்றீர். உம்மை அவமதித்ததின் மூலம் நான் பெருங்குற்றம் செய்திருக்கின்றேன். உம்மை அவமதித்ததினால் நீர் எந்தவிதமான நன்மையோ அல்லது தீமையோ அடைந்துவிட மாட்டீர். நீர் உமது தீர்மானத்தில் உறுதியுடன் இருக்கின்றீர். ஆனால் நானோ ஒரு குற்றம் இழைத்திருக்கின்றேன். ஒரு வைணவனின் தாமரைத் திருவடிகளுக்கு இழைத்த குற்றத்தின் காரணமாக நான் சிவபிரானை ஒத்த ஆற்றல் பெற்றிருந்தாலும், தங்கள் முன் தோற்று விடுவேன்.