அத்தியாயம் – 2
கீதையின் உட்பொருள் சுருக்கம்
ப.கீ 2.1
ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ருபயாவிஷ்டம் அஷ்ரு-பூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தம் இதம் வாக்யம் உவாச மதுஸூதன:

ஸஞ்ஜய உவாச – சஞ்ஜயன் கூறினான்; தம் – அர்ஜுனனிடம்; ததா – இவ்வாறாக; க்ருபயா — இரக்கத்தால்; ஆவிஷ்டம் – நிறைந்து; அஷ்ரு-பூர்ண-ஆகுல — கண்ணீர் நிறைந்து; ஈக்ஷணம் – கண்கள்; விஷீதந்தம் – கவலை கொண்டு; இதம் – இந்த; வாக்யம் — சொற்களை; உவாச – கூறினார்; மது-ஸூதன: – மது எனும் அரக்கனை அழித்தவர்.

சஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன், இரக்கத்தினால் மூழ்கி, மனம் பவவீனமடைந்து, கண்களில் கண்ணீர் மல்கிய நிலையில் இருப்பதைக் கண்ட மதுசூதனரான கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.


ப.கீ 2.2
ஸ்ரீ-பகவான் உவாச குதஸ் த்வா கஷ்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம்
அனார்ய-ஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்த்தி-கரம் அர்ஜுன

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; குத: – எங்கிருந்து; த்வா — உன்னிடம்; கஷ்மலம் – அழுக்கு; இதம் – இந்தக் கவலை; விஷமே – இந்த நெருக்கடி நேரத்தில்; ஸமுபஸ்திதம் – வந்தது, அனார்ய — வாழ்வின் நோக்கமறியாதோர்; ஜுஷ்டம் – பயிற்சி செய்யப்படும்; அஸ்வர்க்யம் — மேலுலகங்களுக்கு கொண்டு செல்லாதது; அகீர்த்தி – அவமானம்; கரம் – காரணம்; அர்ஜுன — அர்ஜுனனே.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தையே கொடுக்கின்றன.


ப.கீ 2.3
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத் த்வய் யுபபத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

க்லைப்யம் — ஆண்மையின்மை; மா ஸ்ம – இல்லை; கம: – அடைதல்; பார்த: – பிருதாவின் மைந்தனே; ந – ஒருபோதும் இல்லை; ஏதத் – இதுபோல; த்வயி – உனக்கு: உபபத்யதே – பொருத்தமானதல்ல; க்ஷுத்ரம் – அற்பமான; ஹ்ருதய – இதயம்; தௌர்பல்யம் – பலவீனம்; த்யக்த்வா – கைவிட்டு; உத்திஷ்ட -எழுவாய்; பரம்-தப – எதிரிகளை தவிக்கச் செய்பவனே.

பிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.


ப.கீ 2.4
அர்ஜுன உவாச
கதம் பீஷ்மம் அஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதன
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவ் அரி-ஸூதன
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; கதம் – எப்படி; பீஷ்மம் – பீஷ்மர்; அஹம் – நான்; ஸங்க்யே – போரில்; த்ரோணம் – துரோணர்: ச – மேலும்; மது-ஸூதன — மது என்னும் அரக்கனைக் கொன்றவரே; இஷுபி — அம்புகளால்; ப்ரதியோத்ஸ்யாமி – எதிர்ப்பேன்; பூஜா-அர்ஹௌ – பூஜைக்கு உரியவர்களை: அரி-ஸூதன – எதிரிகளை அழிப்பவரே.

அர்ஜுனன் கூறினான்: எதிரிகளைக் கொல்பவரே, மது எனும் அரக்கனை அழித்தவரே, எனது பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலியோரை போரில் எவ்வாறு என்னால் எதிர்த்து தாக்க முடியும்?


ப.கீ 2.5
குரூன் அஹத்வா ஹி மஹானுபாவான்
ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே
ஹத்வார்த-காமாம்ஸ் து குரூன் இஹைவ
புஞ்ஜீய போகான் ருதிர-ப்ரதிக்தான்

குரூன் — பெரியோர்; அஹத்வா – கொல்லாமல்; ஹி – உறுதியாக; மஹா-அனுபாவான் — மகாத்மாக்கள்; ஷ்ரேய: – சிறந்தது; போக்தும் — வாழ்வை அனுபவித்தல்; பைக்ஷ்யம் – பிச்சையெடுத்து; அபி – கூட; இஹ – இவ்வாழ்வில்; லோகே – இவ்வுலகில்; ஹத்வா — கொன்று; அர்த: – இலாபம்; காமான் — ஆசைப்பட்டு; து – ஆனால்; குரூன் — பெரியோர்; இஹ – இவ்வுலகில்; ஏவ – நிச்சயமாக; புஞ்ஜீய – அனுபவிக்க வேண்டிய; போகான் — இன்பங்கள்; ருதிர — இரத்தம்; ப்ரதிக்தான் – கறை படிந்த.

மகாத்மாக்களான எனது ஆச்சாரியர்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே மேல், உலக இலாபங்களை விரும்பும்போதிலும், அவர்கள் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால், நாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக் கறை படிந்திருக்கும்.


ப.கீ 2.6
ந சைதத் வித்ம: கதரன் நோ கரீயோ
யத் வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யான் ஏவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்
தே (அ)வஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:

ந – இல்லை: ச – மேலும்; ஏதத் – இந்த; வித்ம: – நமக்குத் தெரியுமா; கதரத் – எது; ந: – நமக்கு; கரீயா – சிறந்தது; யத்வா — எது; ஜயேம: – நாம் வெல்லலாம்; யதி – அதுவாகில்; வா — அல்லது; ந – நாம்; ஜயேயு: – அவர்கள் வெல்லுதல்; யான் — இவர்களை; ஏவ – நிச்சயமாக; ஹத்வா – கொல்வதால்; ந – ஒருபோதும் இல்லை; ஜிஜீவிஷாம: – நாம் வாழ விரும்புவோம்; தே – அவர்களெல்லாம்; அவஸ்திதா: – அமைந்துள்ள; ப்ரமுகே – முன்னிலையில்; தார்தராஷ்ட்ரா: – திருதராஷ்டிரரின் மகன்கள்.

அவர்களை நாம் வெல்வதா அல்லது அவர்களால் வெல்லப்படுவதா, எது சிறந்ததென்று நாம் அறியோம். யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்ப மாட்டோமோ, அந்த திருதராஷ்டிரரின் மகன்கள், இப்பொழுது நம் முன்பு போர்க்களத்தில் நிற்கின்றனர்.


ப.கீ 2.7
கார்பண்ய–தோஷோபஹத-ஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:
யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன் மே
ஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்

கார்பண்ய – கருமித்தனம்; தோஷ – பலவீனம்; உபஹத – தாக்கப்பட்டு; ஸ்வபாவ: – குணங்கள்; ப்ருச்சாமி – வினவுகிறேன்; த்வாம் — உம்மிடம்: தர்ம – தர்மம்; ஸம்மூட – குழம்பி; சேத: – இதயத்தில்; யத் – எதை; ஷ்ரேய: – சாலச் சிறந்தது; ஸ்யாத் – ஆகும்; நிஷ்சிதம் – நிச்சயமாக; ப்ரூஹி – கூறுவீராக; தத் – அதை; மே – எனக்கு; ஷிஷ்ய: – சீடன்; தே – உமது; அஹம் – நான்; ஷாதி – அறிவுறுத்துங்கள்; மாம் – எனக்கு; த்வாம் – உம்மிடம்; ப்ரபன்னம் – சரணடைந்தேன்.

இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.


ப.கீ 2.8
ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத்
யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம்
அவாப்ய பூமாவ் அஸபத்னம் ருத்தம்
ராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம்

ந – இல்லை; ஹி – நிச்சயமாக; ப்ரபஷ்யாமி – காண்கிறேன்; மம – என்னுடைய; அபனுத்யாத் – தீர்க்கக் கூடியது; யத் – எதுவோ அதை; ஷோகம் – சோகம்; உச்சோஷணம் – வறட்டும்; இந்த்ரியாணாம் – புலன்களில்; அவாப்ய – பெற்று; பூமௌ – பூமியில்; அஸபத்னம் – எதிரியற்று; ருத்தம் – வளமான; ராஜ்யம் – ராஜ்ஜியம்; ஸுராணாம் — தேவர்களில்; அபி – கூட; ச – மேலும்; அதிபத்யம் — அதிபதியாக.

என் புலன்களை வறட்டுகின்ற இந்த சோகத்தைப் போக்க ஒரு வழியையும் என்னால் காண முடியவில்லை. மேலுலகில் அதிபதியாக இருக்கும் தேவர்களைப் போல, எவ்வித எதிரியுமில்லாத வளமான ராஜ்ஜியத்தை இப்பூவுலகில் நான் அடையப்பெற்றாலும், இந்த சோக நிலையினை என்னால் அகற்ற முடியாது.


ப.கீ 2.9
ஸஞ்ஜய உவாச ஏவம் உக்த்வா ஹ்ருஷீகேஷம் குடாகேஷ: பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தம் உக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ

ஸஞ்ஜய உவாச – சஞ்ஜயன் கூறினான்; ஏவம் — இவ்வாறு; உக்த்வா – கூறி;ஹ்ருஷீகேஷம் – புலன்களின் அதிபதியான கிருஷ்ணரிடம்; குடாகேஷ: – அறியாமையை வென்றவன், அர்ஜுனன்; பரந்தப: – எதிரிகளைத் தவிக்கச் செய்பவன்; ந யோத்ஸ்யே – போரிடமாட்டேன்; இதி – இவ்வாறு; கோவிந்தம் — புலன்களுக்கு இன்பம் அளிப்பவரான கிருஷ்ணரிடம்; உக்த்வா — கூறி; தூஷ்ணீம் — அமைதி; பபூவ — ஆகிவிட்டான்; ஹ – நிச்சயமாக.

சஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு கூறிய பின், எதிரிகளைத் தவிக்கச் செய்பவனான அர்ஜுனன், “கோவிந்தா, நான் போரிட மாட்டேன்” என்று கூறி அமைதியாகி விட்டான்.


ப.கீ 2.10
தம் உவாச ஹ்ருஷீகேஷ: ப்ரஹஸன்ன் இவ பாரத
ஸேனயோர் உபயோர் மத்யே விஷீதந்தம் இதம் வச:

தம் – அவனிடம்; உவாச – கூறினார்; ஹ்ருஷீகேஷ: – புலன்களின் அதிபதி, கிருஷ்ணர்; ப்ரஹஸன் – புன்சிரிப்புடன்; இவ – இதே போல்; பாரத – பரத குலத் தோன்றலே, திருதராஷ்டிரனே; ஸேனயோ: – படைகளின்; உபயோ: – இரு தரப்பு; மத்யே – மத்தியில்; விஷீதந்தம் – கவலைப்படுபவனிடம்; இதம் – பின்வரும்; வச: – சொற்களை.

பரத குலத் தோன்றலே, அச்சமயத்தில், இரு தரப்புச் சேனைகளுக்கு மத்தியில், துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜுனனிடம், கிருஷ்ணர் புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார்.


ப.கீ 2.11
ஸ்ரீ-பகவான் உவாச அஷோச்யான் அன்வஷோசஸ்த்வம் ப்ரக்ஞா-வாதாம்ஸ் ச பாஷஸே
கதாஸூன் அகதாஸூம்ஷ் ச நானுஷோசந்தி பண்டிதா:

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அஷோச்யான் — கவலைப்பட வேண்டாதவற்றிற்காக; அன்வஷோச: – கவலைப்படுகிறாய்; த்வம் — நீ; ப்ரஜ்ஞா-வாதான் — அறிவாளித்தனமான வாதங்கள்; ச – மேலும்; பாஷஸே – பேசுகையில்; கத – இழந்த; அஸூன் — வாழ்வு; அகத – இழக்காத; அஸூன் – வாழ்வு; ச – மேலும்; ந – ஒருபோதும் இல்லை; அனுஷோசந்தி— கவலைப்படுதல்; பண்டிதா: – அறிஞர்.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில், கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை.


ப.கீ 2.12
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜனாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயம் அத: பரம்

ந – என்றுமில்லை; து- ஆனால்; ஏவ – நிச்சயமாக; அஹம் – நான்; ஜாது —எக்காலத்திலும்; ந – என்றுமில்லை; ஆஸம் – இருந்து; ந – இல்லை; த்வம் – நீ; ந – இல்லை; இமே – இவ்வெல்லா; ஜன-அதிப: – மன்னர்கள்; ந – என்றுமில்லை; ச – மேலும்; ஏவ — நிச்சயமாக; ந – இல்லை; பவிஷ்யாம: – இனி இருப்போம்; ஸர்வே வயம் — நாம் அனைவரும்; அத:பரம் – இனிமேல்.

நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.


ப.கீ 2.13
தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி
தேஹின: – உடல்பெற்றவன்; அஸ்மின் — இந்த; யதா: – அதனால்; தேஹே – உடலில்; கௌமாரம் – சிறுவயது; யௌவனம் – இளமை; ஜரா – முதுமை; ததா – அதுபோலவே; தேஹ-அந்தர — உடல் மாறுவதும்; ப்ராப்தி: – அடைதல்; தீர: – நிதான புத்தியுடையவர்; தத்ர – அதைப்பற்றி; ந – என்றுமில்லை; முஹ்யதி – மயங்குதல்.

தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்து செல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.


ப.கீ 2.14
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய ஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:
ஆகமாபாயினோ (அ)நித்யாஸ் தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத

மாத்ரா-ஸ்பர்ஷா: – புலன்மய உணர்வு; து – மட்டுமே; கௌந்தேய – குந்தியின் மகனே; ஷீத – குளிர்; உஷ்ண – கோடை; ஸுக – சுகம்; து:க — துக்கம்; தா: – தருவது; ஆகம — தோன்றுகின்ற; அபாயின: – மறைகின்ற; அநித்யா: – நிலையற்ற; தான் — அவற்றையெல்லாம்; திதிக்ஷஸ்வ – பொறுத்துக் கொள்ள முயற்சி செய்; பாரத — பரத குலத் தோன்றலே.

குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன, எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.


ப.கீ 2.15
யம் ஹி ந வ்யதயந்த் யேதே புருஷம் புருஷர்ஷப
ஸம-து:க-ஸுகம் தீரம் ஸோ (அ)ம்ருதத்வாய கல்பதே

யம் – எவனொருவன்; ஹி – நிச்சயமாக; ந – என்றுமில்லை; வ்யதயந்தி — கவலை தருவது: ஏதே – இவையெல்லாம்; புருஷம் – ஒருவனுக்கு; புருஷ-ருஷப – மனிதரில் சிறந்தவனே; ஸம – மாறாத; து:க – கவலை; ஸுகம் – மகிழ்ச்சி; தீரம் – பொறுமையாக; ஸ: – அவனே; அம்ருதத்வாய – விடுதலைக்கு; கல்பதே – தகுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்.

மனிதரில் சிறந்தோனே (அர்ஜுனனே), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இவ்விரண்டு நிலைகளிலும் தன்னிலை மாறாது இருப்பவனுமே, நிச்சயமாக விடுதலைக்குத் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.


ப.கீ 2.16
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோர் அபி த்ருஷ்டோ (அ)ந்தஸ் த்வனயோஸ் தத்த்வ–தர்ஷிபி:

ந – என்றுமில்லை; அஸத: – இல்லாத; வித்யதே – உள்ளது; பாவ: – நீடிக்கின்ற; ந – என்றுமில்லை. அபாவ: – மாறுகின்ற குணம்; வித்யதே – இருக்கின்றது: ஸத: – நித்யமானதன்; உபயோ: – இவ்விரண்டில்; அபி – மிகவும்; த்ருஷ்ட: – கண்டுள்ளவன்; அந்த: – முடிவு; து — ஆனால்; அனயோ: — அவற்றில்; தத்த்வ – உண்மையை; தர்ஷிபி: – கண்டவர்களால்.

உண்மையைக் கண்டவர்கள், நிலையற்றதற்கு (உடலுக்கு) நீடிப்பும், நித்தியமானதற்கு (ஆத்மாவிற்கு) மாற்றமும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கையையும் ஆராய்ந்தே அவர்கள் இதைத் தீர்மானித்துள்ளனர்.


ப.கீ 2.17
அவிநாஷி து தத் வித்தி யேன ஸர்வம் இதம் ததம்
வினாஷம் அவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித் கர்தும் அர்ஹதி

அவினாஷி – அழிக்க இயலாதது; து – ஆயின்; தத் – அது; வித்தி – அறிவாய்; யேன – எதனால்; ஸர்வம் – உடல் முழுவதும்; இதம் — இது; ததம் – பரவியுள்ளது; வினாஷம் – அழிவு; அவ்யயஸ்ய — அழிவற்றதன்; அஸ்ய – அதன்; நகஷ்சித் – யாருமில்லை; கர்தும் — செய்ய; அர்ஹதி – கூடியவர்.

உடல் முழுவதும் பரவியிருப்பதை அழிவற்றதென்று நீ அறிய வேண்டும். அந்த அழிவற்ற ஆத்மாவைக் கொல்லக்கூடியவர் எவருமில்லை.


ப.கீ 2.18
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:
அனாஷினோ (அ)ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத

அந்த-வந்த — அழியக்கூடிய; இமே – இவையெல்லாம்; தேஹா: – ஜட உடல்கள்; நித்யஸ்ய – நித்தியமான நிலையுடையவை; உக்தா: – என்று கூறப்பட்ட; ஷரீரிண – உடலில் வாழ்பவர்கள்; அனாஷின: – ஒரு போதும் அழிவற்ற; அப்ரமேயஸ்ய – அளவிட முடியாத; தஸ்மாத் – எனவே: யுத்யஸ்வ – போரிடு; பாரத – பரத குலத் தோன்றலே.

அழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் தோன்றலே போரிடுவாயாக.


ப.கீ 2.19
ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யஷ் சைனம் மன்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே

ய: – எவனொருவன்; ஏனம் – இந்த (ஆத்மாவை); வேத்தி – அறிபவர்; ஹந்தாரம் — கொல்பவன்; ய – எவனொருவன்; ச – மேலும்; ஏனம் – இந்த; மன்யதே- எண்ணுகிறான்; ஹதம் – கொல்லப்படுகின்றது; உபௌ – இருவருமே; தௌ — அந்த; ந – இல்லை; விஜானீத: – அறிவு; ந – என்றுமில்லை; அயம் – இந்த (ஆத்மா); ஹந்தி – கொலை செய்வதோ; ந – இல்லை; ஹன்யதே – கொல்லப்படுவதோ.

ஜீவாத்மாவை, கொல்பவனாக நினைப்பவனும் கொல்லப்படுபவனாக நினைப்பவனும், அறிவில்லாதவன் ஆவான், ஏனெனில், ஆத்மா கொலை செய்வதோ கொல்லப்படுவதோ இல்லை.


ப.கீ 2.20
ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே

ந – என்றுமில்லை; ஜாயதே – பிறப்பு; ம்ரியதே – இறப்பு; வா – அல்லது; கதாசித் – எக்காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர்); ந – என்றுமில்லை; அயம் – இந்த; பூத்வா – தோன்றியது; பவிதா – தோன்றும்; வா – அல்லது; ந -கிடையாது; பூய: – மீண்டும் தோன்றுவது; அஜ: – பிறப்பற்றவன்; நித்ய: – நித்தியமானவன்; ஷாஷ்வத: – என்றும் நிலைத்திருப்பவன்; அயம் – இந்த; புராண: – மிகப் பழமையானவன்; ந – இல்லை; ஹன்யதே – கொல்லப்படுவது; ஹன்யமானே – கொல்லப்படும்போது; ஷரீரே – உடல்.

ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன். உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.


ப.கீ 2.21
வேதாவினாஷினம் நித்யம் ய ஏனம் அஜம் அவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்

வேத – அறிந்த; அவினாஷினம் – அழிவற்றவன்; நித்யம் – நித்தியமானவன்; ய: – யாரொருவன்; ஏனம் — இந்த (ஆத்மா); அஜம் – பிறப்பற்றவன்; அவ்யயம் – மாற்றமில்லாதவன்; கதம் — எப்படி; ஸ: – அந்த; புருஷ: – நபர்; பார்த – பார்த்தனே (அர்ஜுனனே); கம் – யாரை; காதயதி — துன்புறுத்த காரணம்; ஹந்தி – கொலை புரிவது; கம் – யாரை.

பார்த்தனே, ஆத்மா அழிவற்றவன், நித்தயமானவன், பிறப்பற்றவன், மாற்றமில்லாதவன் என்பதை எவனொருவன் அறிந்துள்ளானோ, அவன் கொல்வதோ, கொலை செய்ய காரணமாவதோ எப்படி?


பதம் 2.22
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ (அ)பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-
யன்யானி ஸம்யாதி நவானி தேஹி

வாஸாம்ஸி – உடைகள்; ஜீர்ணானி — பழைய நைந்த; யதா – அதுபோல; விஹாய – புறக்கணித்து; நவானி – புதிய ஆடைகள்; க்ருஹ்ணாதி — ஏற்பது; நர: – மனிதன்; அபராணி – மற்றவை; ததா – அதுபோலவே; ஷரீராணி -உடல்கள்; விஹாய – விட்டு; ஜீர்ணானி – பழைய, பலனற்ற; அன்யானி — வேறு; ஸம்யாதி — ஏற்றுக்கொள்கிறான்; நவானி – புதியவற்றை; தேஹீ – உடல் பெற்றவன்.

பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.


ப.கீ 2.23
நைனம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைனம் க்லேதயந்த்-யாபோ ந ஷோஷயதி மாருத:

ந – என்றுமில்லை; ஏனம் – இந்த ஆத்மாவுக்கு; சிந்தந்தி – துண்டுகளாக வெட்டுதல்; ஷஸ்த்ராணி – ஆயுதங்கள்; ந – என்றுமில்லை; ஏனம் – இந்த ஆத்மாவை; தஹதி – எரித்தல்; பாவக: – நெருப்பு; ந – என்றுமில்லை: ச – மற்றும்; ஏனம் – இந்த ஆத்மாவுக்கு; கலேதயந்தி – ஈரமாகுதல்; ஆப: – நீர்; ந – என்றுமில்லை; ஷோஷயதி – உலர்தல்; மாருத: – வீசும் காற்று.

ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், வீசும் காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.


ப.கீ 2.24
அச்சேத்யோ (அ)யம் அதாஹ்யோ (அ)யம்
அக்லேத்யோ (அ)ஷோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வ-கத: ஸ்தாணுர்
அசலோ (அ)யம் ஸநாதன:

அச்சேத்ய – வெட்ட முடியாதவன்; அயம் – இந்த ஆத்மா; அதாஹ்ய – எரிக்க முடியாதவன்; அயம் – இந்த ஆத்மா; அக்லேத்ய: – கரைக்க முடியாதவன்; அஷோஷ்ய: – உலர்த்த முடியாதவன்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; நித்ய: – நித்தியமானவன்; ஸர்வகத: – எங்கும் நிறைந்தவன்; ஸ்தாணு: – மாற்ற இயலாதவன்; அசல: – அசைக்க முடியாதவன்; அயம் – இந்த ஆத்மா; ஸனாதன: – நித்தியமாக மாற்றமின்றி இருப்பவன்.

ஜீவாத்மா வெட்ட முடியாதவன், கரைக்க முடியாதவன், எரிக்கவோ, உலர்த்தவோ முடியாதவன். அவன் நித்தியமானவன், எங்கும் நிறைந்தவன், மாற்ற இயலாதவன், அசைக்க முடியாதவன், நித்தியமாக மாற்றமின்றி இருப்பவன்.


ப.கீ 2.25
அவ்யக்தோ (அ)யம் அசிந்த்யோ (அ)யம் அவிகார்யோ (அ)யம் உச்யதே
தஸ்மாத் ஏவம் விதித்வைனம் நானுஷோசிதும் அர்ஹஸி

அவ்யக்த: – பார்வைக்கு எட்டாதவன்; அயம் – இந்த ஆத்மா; அசிந்தய: – சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; அயம் — இந்த அத்மா; அவிகார்ய: -மாற்றமில்லாதவன்; அயம் – இந்த ஆத்மா; உச்யதே – கூறப்படுகின்றது; தஸ்மாத் – எனவே; ஏவம் — இதுபோல; விதித்வா — அதை நன்கறிந்து; ஏனம் – இந்த ஆத்மா; ந – இல்லை; அனுஷோசிதும் – கவலைப்பட; அர்ஹஸி – நீ தக்கவன்.

ஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மேலும், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து, நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.


ப.கீ 2.26
அத சைனம் நித்ய-ஜாதம் நித்யம் வா மன்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹா-பாஹோ நைனம் ஷோசிதும் அர்ஹஸி

அத – இருப்பினும்; ச – மேலும்; ஏனம் – இந்த ஆத்மா; நித்ய-ஜாதம் – எப்போதும் பிறந்து கொண்டேயிருப்பவன்; நித்யம் – என்றுமே; வா – அவ்வாறே; மன்யஸே – நீ இவ்வாறு நினைத்து; ம்ருதம் – இறந்து கொண்டேயிருப்பவன்; ததா அபி — ஆனாலும்; த்வம் – நீ; மஹா-பாஹோ-பலம் பொருந்திய புயங்களை உடையோனே; ந – இல்லை; ஏனம் – ஆத்மாவைப் பற்றி; ஷோசிதம் – கவலைப்பட; அர்ஹஸி – தகுதி.

இருப்பினும், ஆத்மா (அல்லது வாழ்வின் அறிகுறிகள்) எப்போதும் பிறந்து இறந்து கொண்டிருப்பதாக நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனே, நீ கவலைப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை.


ப.கீ 2.27
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர் த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தே ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி

ஜாதஸ்ய – பிறந்தவன்; ஹி – நிச்சயமாய்; த்ருவ: – உண்மை; ம்ருத்யு – மரணம்; த்ருவம் – அதுவும் உண்மை; ஜன்ம – பிறப்பு; ம்ருதஸ்ய – இறந்தவனின்; ச – மேலும்; தஸ்மாத் – எனவே; அபரிஹார்யே – தவிர்க்க முடியாதது; அர்தே – பற்றிய பொருளில்; ந – வேண்டாம்; த்வம் – நீ; ஷோசிதும் – கவலைப்பட; அர்ஹஸி – தகுதி.

பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் நீ கவலைப்படக் கூடாது.


ப.கீ 2.28
அவ்யக்தாதீனி பூதானி வ்யக்த–மத்யானி-பாரத
அவ்யக்த–நிதனான்-யேவ தத்ர கா பரிதேவனா

அவ்யக்த-ஆதீனி – ஆரம்பத்தில் தோற்றமற்று; பூதானி — படைக்கப்பட்டவையெல்லாம்; வ்யக்த – தோன்றுகின்றன; மத்யானி – இடையில்; பாரத — பரத குலத் தோன்றலே; அவ்யக்த – தோற்றமற்ற; நிதனானி – அழியும்போது; ஏவ — இவையெல்லாம் அதுபோன்றதே; தத்ர – எனவே; கா – என்ன; பரிதேவனா — கவலை.

படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் தோன்றாமல் இருந்தன, இடையில் தோன்றுகின்றன, இறுதியில் அழிக்கப்படும்போது மீண்டும் மறைகின்றன. எனவே, ஏன் கவலைப்பட வேண்டும்?


ப.கீ 2.29
ஆஷ்சர்ய–வத் பஷ்யதி கஷ்சித் ஏனம்
ஆஷ்சர்ய–வத் வததி ததைவ சான்ய:
ஆஷ்சர்ய–வச் சைனம் அன்ய: ஷ்ருணோதி
ஷ்ருத்வாப் யேனம் வேத ந சைவ கஷ்சித்

ஆஷ்சர்ய-வத் – ஆச்சரியமானதாக; பஷ்யதி – கண்கின்றனர்; கஷ்சித் – சிலர்; ஏனம் – இந்த ஆத்மாவை; ஆஷ்சர்ய-வத் – ஆச்சரியமானதாக; வததி – பேசுகின்றனர்; ததா – இவ்வாறு; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; அன்ய: – பிறர்; ஆஷ்சர்ய-வத் – அதுபோலவே ஆச்சரியமானதாக; ச — மேலும்; ஏனம் – இந்த ஆத்மாவை; அன்ய: – பிறர்; ஷ்ருணோதி – கேட்கின்றனர்; ஷ்ருத்வா — அவ்வாறு கேட்ட; அபி — பின்னும்; ஏனம் – இந்த ஆத்மாவை; வேத – அறிபவர்; ந – ஒரு போதும் இல்லை; ச — மேலும்; ஏவ – நிச்சயமாக; கஷ்சித் – எவருமே.

சிலர் ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அவனை ஆச்சரியமானவனாக வர்ணிக்கின்றனர், மேலும் சிலர் அவனை ஆச்சரியமானவனாகக் கேட்கின்றனர். வேறு சிலரோ, அவனைப் பற்றிக் கேட்ட பின்னும், அவனைப் புரிந்துகொள்ள இயலாதவராக உள்ளனர்.


ப.கீ 2.30
தேஹி நித்யம் அவத்யோ (அ)யம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதானி ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி

தேஹி – பௌதிக உடலின் உரிமையாளன்; நித்யம் – நித்தியமாக; அவத்ய: – கொல்லப்பட முடியாதவன்; அயம் – இவ்வாத்மா; தேஹே – உடலில்; ஸர்வஸ்ய – எல்லோரது; பாரத — பரத குலத் தோன்றலே; தஸ்மாத் – எனவே; ஸர்வாணி – எல்லா; பூதானி – (பிறந்த) உயிர்வாழிகள்; ந – ஒருபோதும் இல்லை; த்வம் – நீ; ஷோசிதும் – கவலைப்பட; அர்ஹஸி — தகுதி.

பரத குலத் தோன்றலே, உடலில் உறைபவன் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவன், எனவே, எந்த உயிர்வாழிக்காகவும் நீ வருந்த வேண்டிய தேவையில்லை.


ப.கீ 2.31
ஸ்வ-தர்மம் அபி சாவேக்ஷ்ய ந விகம்பிதும் அர்ஹஸி
தர்ம்யாத் தி யுத்தாச் ச்ரேயோ (அ)ன்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே

ஸ்வ-தர்மம் – ஒருவனுக்குரிய சுய தர்மங்கள்; அபி – கூட; ச – அவற்றையும்; அவேஷ்ய – எண்ணி; ந – என்றுமில்லை; விகம்பிதும் – தயங்க; அர்ஹஸி – உனக்குத் தகுதி; தர்ம்யாத் – தர்மத்திற்காக; ஹி – நிச்சயமாக; யுத்தாத் – போரிடுதலைக் காட்டிலும்; ஷ்ரேய: – சிறந்த கடமை; அன்யத் – வேறேதும்; க்ஷத்ரியஸ்ய – சத்திரியனுக்கு; ந – இல்லை: வித்யதே – இருப்பது.

சத்திரியன் என்ற முறையில் உனக்கென்று உரிய கடமையைப் பற்றிக் கருதும்போது, தர்மத்தின் கொள்கைகளுக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமை உனக்கில்லை. எனவே, தயங்கத் தேவையில்லை.


ப.கீ 2.32
யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்க-த்வாரம் அபாவ்ருதம்
ஸுகின: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தம் ஈத்ருஷம்

யத்ருச்சயா — தானாகவே; ச – மேலும்; உபபன்னம் — வந்த; ஸ்வர்க — ஸ்வர்கத்தின்; த்வாரம் — வாயில்; அபாவ்ருதம் – திறந்து கிடக்கும்; ஸுகின: – மிக்க மகிழும்; க்ஷத்ரியா: – அரச குலத்தோர்; பார்த – பிருதாவின் மகனே; லபந்தே – பெறுகின்றனர்; யுத்தம் – போர்; ஈத்ருஷம் – இதுபோன்ற.

பார்த்தனே, வலியவரும் போர் வாய்ப்புகள் ஸ்வர்க லோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரச குலத்தோர் மகிழ்கின்றனர்.


ப.கீ 2.33
அத சேத் த்வம் இமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வ-தர்மம் கீர்திம் ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி

அத – எனவே; சேத் – எனில்; த்வம் – நீ; இமம் – இந்த; தர்ம்யம் – அறக்கடமை; ஸங்க்ராமம் – போரிடுதல்; ந – இல்லையெனில்; கரிஷ்யஸி – செய்ய; தத: – பின்; ஸ்வ-தர்மம் – உனது தர்மம்; கீரதிம் — புகழ்; ச – மேலும்; ஹித்வா – இழத்தல்; பாபம் – பாவ விளைவு; அவாப்ஸ்யஸி — அடைவாய்.

எனவே, போரிடுதல் என்னும் இந்த தர்மத்தின் கடமையில் நீ ஈடுபடாவிட்டால், உன்னுடைய கடமையிலிருந்து தவறியதற்கான பாவ விளைவுகளை நிச்சயமாகப் பெறுவதோடு, சிறந்த போர் வீரனெனும் புகழையும் இழப்பாய்.


ப.கீ 2.34
அகீர்திம் சாபி பூதானி கதயிஷ்யந்தி தே (அ)வ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர் மரணாத் அதிரிச்யதே

அகீர்திம் – இகழ்ச்சி; ச – மேலும்; அபி — அதற்கு மேலாக; பூதானி – மக்களெல்லாம்; கதயிஷ்யந்தி – பேசுவர்; தே – உன்னைப் பற்றி; அவ்யயாம் – என்றென்றும்; ஸம்பாவிதஸ்ய – மதிக்கத்தக்க ஒருவனுக்கு; ச – மற்றும்; அகீர்தி: – அவமானம்; மரணாத் – மரணத்தை விட; அதிரிச்யதே – மேற்பட்டது (கொடியது).

மக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு அவமானம் மரணத்தை விட மோசமானது.


ப.கீ 2.35
பயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹா-ரதா:
யேஷாம் ச த்வம் பஹு-மதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்

பயாத் – பயத்தால்; ரணாத் – போர்க்களத்திலிருந்து; உபரதம் – விலகிவிட்டதாக; மம்ஸ்யந்தே – எண்ணுவர்; த்வாம் – நீ; மஹா-ரதா: – மிகச்சிறந்த போர்த்தலைவர்கள்: யேஷாம் – அவர்களில்; ச – மேலும்; த்வம் – நீ; பஹு-மத: – பெருமதிப்பு; பூத்வா – ஆவாய்; யாஸ்யஸி – இழப்பாய்; லாகவம் – மதிப்பிழந்த.

உன்னுடைய பெயரிலும் புகழிலும் பெருமதிப்பு கொண்டிருக்கும் மிகச்சிறந்த போர்த்தலைவர்கள், நீ பயத்தால் போர்க்களத்தை விட்டு விலகிவிட்டதாக எண்ணி, உன்னை முக்கியத்துவமற்றவனாகக் கருதுவர்.


ப.கீ 2.36
அவாச்ய-வாதாம்ஸ் ச பஹூன் வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ் தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்

அவாச்ய – அன்பில்லாத; வாதான் — வார்த்தைகள்; ச – மேலும்; பஹூன் – பல; வதிஷ்யந்தி – கூறுவர்; தவ – உன்னுடைய; அஹிதா: – எதிரிகள்; நிந்தந்த: – நிந்திக்கும்போது; தவ – உன்னுடைய; ஸாமர்த்யம் – திறமை; தத: – அதை விட; து:க-தரம் – மிகத் துன்பம் தரும்; நு – நிச்சயமாக; கிம் – வேறு என்ன உள்ளது.

அன்பில்லாத வார்த்தைகள் பலவற்றைக் கூறி உனது எதிரிகள் உனது திறமையை நிந்திப்பர். அதைவிட மிகுந்த துன்பம் தரக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?


ப.கீ 2.37
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத-நிஷ்சய:

ஹத: வா – கொல்லப்பட்டாலோ; ப்ராப்ஸ்யஸி – அடைவாய்; ஸ்வர்கம் – ஸ்வர்கத்தை; ஜித்வா வா – வெற்றி பெற்றாலோ; போக்ஷ்யஸே – அனுபவிப்பாய்; மஹீம் – இவ்வுலகை; தஸ்மாத் – எனவே; உத்திஷ்ட – எழுவாய்; கௌந்தேய — குந்தியின் மகனே; யுத்தாய – போரிட; க்ருத – உறுதிகொள்; நிஷ்சய – நிச்சயமாக.

குந்தியின் மகனே, போர்க்களத்தில் நீ கொல்லப்பட்டால் ஸ்வர்கத்தை அடையலாம், வெற்றி பெற்றால் இவ்வுலகினை அனுபவிக்கலாம். எனவே, உறுதியுடன் எழுந்து போர் புரிவாயாக.


ப.கீ 2.38
ஸுக-து:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி

ஸுக — இன்பம்; து:கே – துன்பம்; ஸமே – சமமாக; க்ருத்வா — கருதி; லாப- அலாபௌ – இலாப நஷ்டங்களில்; ஜய-அஜயௌ – வெற்றி தோல்விகளில்; தத: – அதன்பின்; யுத்தாய – போருக்காக; யுஜ்யஸ்வ – ஈடுபடு (போரிடுவாய்); ந – என்றுமில்லை; ஏவம் – இவ்வழியில்; பாபம் – பாவ விளைவு; அவாப்ஸ்யஸி – நீ அடைவது.

இன்ப துன்பம், இலாப நஷ்டம், வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக—அவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ பாவ விளைவுகளை அடைய மாட்டாய்.


ப.கீ 2.39
ஏஷா தே (அ)பிஹிதா ஸாங்க்யே புத்திர் யோகே தவிமாம் ஷ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்ம-பந்தம் ப்ரஹாஸ்யஸி

ஏஷா – இவையெல்லாம்; தே – உனக்கு; அபிஹிதா – விவரித்தேன்; ஸாங்க்யே – ஆய்வு அறிவால்; புத்தி – அறிவு; யோகே – பலனை எதிர்பார்க்கமால் செயல்படுதல்; து – ஆனால்; இமாம் — இந்த; ஷ்ருணு — கேள்; புத்த்யா — அறிவால்; யுக்த: – இணைக்கப்பட்ட; யயா – எதனால்; பார்த – பிருதாவின் மகனே: கர்ம-பந்தம் – கர்ம பந்தம்; ப்ரஹாஸ்யஸி – விடுதலை பெறுவாய்.

ஸாங்கிய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுவரை விளக்கினேன். பலனை எதிர்பாராமல் ஒருவன் செய்யும் யோகத்தைப் பற்றிய அறிவை, இப்போது கேள். பிருதாவின் மகனே, இந்த அறிவோடு செயல்பட்டால், கர்ம பந்தத்திலிருந்து நீயே உன்னை விலக்கிக்கொள்ள முடியும்.


ப.கீ 2.40
நேஹாபி க்ரம– நாஷோ (அ)ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்

ந – இல்லை; இஹ – இந்த யோக; அபிக்ரம – முயற்சியில்; நாஷ: – இழப்பு; அஸ்தி — இங்கு; ப்ரத்யவாய: – குறைவு; ந – என்றுமில்லை; வித்யதே – இதில்; ஸ்வல்பம் — சிறிதே; அபி – ஆயினும்; அஸ்ய – இதில்; தர்மஸ்ய – கடமையின்; த்ராயதே – விடுவிக்கிறது; மஹத: – மாபெரும்; பயாத் — பயத்திலிருந்து.

இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.


ப.கீ 2.41
வ்யவஸாயாத்மிகா புத்திர் ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் ச புத்தயோ (அ)வ்யவஸாயினாம்

வ்யவஸாய-ஆத்மிகா – கிருஷ்ண உணர்வில் திடமான உறுதி; புத்தி: – புத்தி; ஏகா – ஒன்றே; இஹ – இவ்வுலகில்; குரு-நந்தன – குருக்களின் செல்வனே; பஹுஷாகா: — பல கிளைகளைக் கொண்ட; ஹி – நிச்சயமாக; அனந்தா: – எல்லையற்ற; ச – மேலும்; புத்தய: – புத்தி; அவ்யவ ஸாயினாம் – கிருஷ்ண உணர்வில்லாதவர்களின்.

இவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர், இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.


ப.கீ 2.42 – 2.43
யாம் இமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்-யவிபஷ்சித:
வேத-வாத-ரதா: பார்த நான்யத் அஸ்தீதி வாதின:

காமாத்மான: ஸ்வர்க-பரா ஜன்ம-கர்ம-பல-ப்ரதாம்
க்ரியா-விஷேஷ-பஹுலாம் போகைஷ்வர்ய-கதிம் ப்ரதி

யாம்-இமாம் – இவ்வெல்லா; புஷ்பிதாம் – மலர் போன்ற; வாசம் – சொற்கள்; ப்ரவதந்தி — கூறுகின்றன; அவிபஷ்சித: – சிற்றறிவுடையோர்; வேத-வாத-ரதா: – வேதங்களை பின்பற்றுவோர் எனக் கூறப்படுபவர்; பார்த: – பிருதாவின் மகனே; ந – என்றுமில்லை; அன்யத் – வேறேதும்; அஸ்தி – உள்ளது; இதி – இவ்வாறாக; வாதின: – வாதிடுபவர்கள்; காம-ஆத்மான: – புலனுகர்ச்சியை விரும்பி; ஸ்வர்க-பரா: – ஸ்வர்கத்தை அடைய எண்ணுவோர்; ஜன்ம-கர்ம-பலப்ரதாம் — நற்பிறவியையும் இதர பலன்களையும் விளைவுகளாக அளிக்கும்; க்ரியா விஷேஷ – ஆடம்பரமான சடங்குகள்; பஹுலாம் – பற்பல; போக — புலனுகர்ச்சியில்; ஐஷ்வர்ய – செல்வம்; கதிம் – முன்னேற்றம்; ப்ரதி — நோக்கி.

சிற்றறிவுடைய மனிதர்கள் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள், ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற்பிறவி அடைதல், பதவி பெறுதல் போன்ற பலன்களை வழங்கும் பற்பல செயல்களைப் பரிந்துரைக்கின்றன. புலனுகர்ச்சியையும் செல்வமிகு வாழ்வையும் விரும்புவர், இதைவிட உயர்ந்தது ஏதுமில்லை என்று கூறுகின்றனர்.


ப.கீ 2.44
போகைஷ்வர்ய-ப்ரஸக்தானாம் தயாபஹ்ருத–சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே

போக – பௌதிக இன்பத்தில்; ஐஷ்வர்ய – செல்வம்; ப்ரஸக்தானாம் — பற்றுதல் உடையவர்களுக்கு; தயா – இது போன்றவற்றால்; அபஹ்ருத-சேதஸாம் – மனம் மயங்கியவர்; வ்யவஸாய-ஆத்மிகா – திடமான உறுதி; புத்தி: – கடவுளின் பக்தித் தொண்டு; ஸமாதௌ – கட்டுப்பட்ட மனதில்; ந – என்றுமில்லை; விதீயதே – உண்டாவது.

புலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.


ப.கீ 2.45
த்ரை-குண்ய-விஷயா வேதா நிஸ்த்ரை-குண்யோ பவார்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய-ஸத்த்வ-ஸ்தோ நிர்யோக-க்ஷேம ஆத்மவான்

த்ரை-குண்ய – ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய; விஷயா: – விஷயங்கள்; வேதா: – வேத இலக்கியங்கள்; நிஸ்த்ரை-குண்ய – ஜட இயற்கையின் மூன்று குணங்களுக்கு மேற்பட்ட; பவ — ஆவாய்; அர்ஜுன – அர்ஜுனனே; நிர்த்வந்த்வ: – இருமைகள் அற்ற; நித்ய-ஸத்த்வ-ஸ்தோ — தூய ஆன்மீக நிலையில்; நிர்யோக-க்ஷேம: – அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்ற; ஆத்ம-வான் – தன்னில் நிலைபெற்ற.

வேதங்கள், பொதுவாக பௌதிக இயற்கையின் முக்குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா, இம்மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஆவாயாக. எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டு, பொருள்களை அடைதல், பாதுகாத்தல் ஆகிய கவலைகளிலிருந்தும் விடுபட்டு, தன்னில் நிலைபெறுவாயாக.


ப.கீ 2.46
யாவான் அர்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
தாவான் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத:

யாவான் – அவை எல்லாம்; அர்த: – பலன்கள்; உத-பானே – நீர்க் கிணற்றில்; ஸர்வத: – எல்லா வகையிலும்; ஸம்ப்லுத-உதகே – ஒரு பெரும் நீர்த்தேக்கத்தில்; தாவான் – அதுபோல; ஸர்வேஷு – எல்லாவற்றிலும்; வேதேஷு – வேத இலக்கியங்கள்; ப்ராஹ்மணஸ்ய – பரபிரம்மனை அறிந்தவர்களில்; விஜானத: – முழு அறிவு பெற்றவன்.

சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அதுபோலவே வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப் பெறும்.


ப.கீ 2.47
கர்மண்யே-வாதிகாரஸ் தே மா பலேஷு கதாசன
மா கர்ம-பல-ஹேதுர் பூர் மா தே ஸங்கோ (அ)ஸ்த்வகர்மணி

கர்மணி – விதிக்கப்பட்ட கடமைகளில்; ஏவ – நிச்சயமாக, அதிகார: – அதிகாரம்; தே – உனக்கு; மா — என்றுமில்லை; பலேஷு — பலன்களில்; கதாசன — எவ்வேளையிலும்; மா – என்றுமில்லை; கர்ம-பல – செயல்களின் பலன்களில்; ஹேது: – காரணம்; பூ: – ஆவது; மா — என்றுமில்லை; தே – உனக்கு; ஸங்க: — பற்றுதல்; அஸ்து — இருப்பது; அகர்மணி – விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல்.

உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு, ஆனால் செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாக ஒருபோதும் எண்ணாதே. கடமையைச் செய்யாமலிருக்க ஒருபோதும் பற்றுதல் கொள்ளாதே.


ப.கீ 2.48
யோக-ஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய
ஸித்த்ய-ஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே

யோகஸ்த: – யோகத்தில் நிலைபெற்று; குரு – செயலாற்று; கர்மாணி – உன்னுடைய கடமைகள்; ஸங்கம் – பற்றுதல்; த்யக்த்வா — கைவிட்டு; தனஞ்ஐய – தனஞ்ஜயனே (அர்ஜுனனே); ஸித்தி-அஸித்த்யோ: – வெற்றி தோல்வியில்; ஸம்: – சமமாக; பூத்வா — ஆகி; ஸமத்வம் – சமத்துவம்; யோக: – யோகம்; உச்யதே – கூறப்படுகின்றது.

அர்ஜுனா, வெற்றி தோல்வியில் பற்றுதல் கொள்ளாமல், உனது கடமையை சமநிலையுடன் செய்வாயாக. இதுபோன்ற சமத்துவமே யோகம் என்று அழைக்கப்படுகின்றது.


ப.கீ 2.49
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தி-யோகாத் தனஞ்ஜய
புத்தௌ ஷரணம் அன்விச்ச க்ருபணா: பல-ஹேதவ:

தூரேண – வெகு தொலைவில் புறக்கணித்து; ஹி – நிச்சயமாய்; அவரம் – மோசமான; கர்ம – செயல்கள்; புத்தி-யோகாத் – கிருஷ்ண உணர்வின் பலத்தில்; தனஞ்ஐய – செல்வத்தை வெல்பவனே; புத்தௌ — அத்தகு உணர்வில்; ஷரணம் – முழு சரணாகதி; அன்விச்ச: – முயற்சிக்கும்; க்ருபணா: – கஞ்சர்கள்; பல-ஹேதவ: – பலனை விரும்புவோர்.

தனஞ்ஜயா, அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியினால் தூரமாக வைத்து விட்டு, சரணடைவாயாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவார்கள்.


ப.கீ 2.50
புத்தி-யுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத-துஷ்க்ருதே
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்

புத்தி-யுக்த: – பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர்; ஜஹாதி – தப்ப இயலும்; இஹ – இவ்வாழ்வில்; உபே – இரண்டிலும்; ஸுக்ருத-துஷ்க்ருதே – நல்ல, தீய விளைவுகள்; தஸ்மாத் – எனவே; யோகாய – பக்தித் தொண்டிற்காக; யுஜ்யஸ்வ – ஈடுபடு; யோக: – கிருஷ்ண உணர்வு; கர்மஸு — எல்லாச் செயல்களிலும்; கௌஷலம் – கலை.

பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்புகின்றான். எனவே, எல்லாச் செயல்களிலும் சிறந்ததான யோகத்திற்காகப் பாடுபடுவாயாக.


ப.கீ 2.51
கர்ம-ஜம் புத்தி -யுக்தா ஹி பலம் த்யக்த்வா மனீஷிண:
ஜன்ம-பந்த-விநிர்முக்தா: பதம் கச்சந்த்-யனாமயம்

கர்ம-ஜம் – பலன்நோக்குச் செயல்களால்; புத்தி-யுக்தா: – பக்தித் தொண்டில் ஈடுபட்டு; ஹி – நிச்சயமாக; பலம் – பலன்களை; த்யக்த்வா – கைவிட்டு; மனீஷிண: – சிறந்த முனிவர்கள் (பக்தர்கள்); ஜனம-பந்த – பிறப்பு இறப்பின் பந்தம்; வினிர்முக்தா: – முக்தி பெற்ற; பதம் – நிலை; கச்சந்தி — அடைகின்றனர்; அனாமயம் – துன்பங்களற்ற.

இவ்விதமாக பக்தித் தொண்டில் ஈடுபட்டு, சிறந்த முனிவர்கள் (பக்தர்கள்), பௌதிக உலகின் செயல்களின் வினைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். இவ்வழியில், அவர்கள் பிறப்பு இறப்பின் பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை (முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வதன் மூலம் ) அடைகின்றனர்.


ப.கீ 2.52
யதா தே மோஹ-கலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச

யதா — எப்பொழுது; தே – உனது; மோஹ – மயக்கமெனும்; கலிலம் – அடர்ந்த காடு; புத்தி: – அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு; வ்யதிதரிஷ்யதி – கடக்கின்றதோ; ததா – அப்போது; கந்தா அஸி – நீ ஆவாய்; நிர்வேதம் – சமநிலை; ஷ்ரோதவ்யஸ்ய – கேட்க வேண்டியவை; ஷ்ருதஸ்ய – முன்னரே கேட்டவை; ச – மற்றும்.

எப்போதும் உன் அறிவு, மயக்கம் எனும் இவ்வடர்ந்த காட்டை தாண்டி விடுகிறதோ, அப்போது, இதுவரை கேட்டவை, இனி கேட்க வேண்டியவை இவற்றின் மீது நீ சமநிலையுடையவனாகி விடுவாய்.


ப.கீ 2.53
ஷ்ருதி-விப்ரதிபன்னா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா
ஸமாதாவ் அசலா புத்திஸ் ததா யோகம் அவாப்ஸ்யஸி

ஷ்ருதி – வேதங்களின்; விப்ரதிபன்னா — பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாத; தே – உனது; யதா – எப்போது; ஸ்தாஸ்யதி – நிலைபெறுகிறதோ; நிஷ்சல – அசைவற்று; ஸமாதௌ – திவ்யமான உணர்வில் (கிருஷ்ண உணர்வில்); அசலா — உறுதியான; புத்தி – அறிவு; ததா — அவ்வேளையில்; யோகம் – தன்னுணர்வை; அவாப்ஸ்யஸி – அடைவாய்.

எப்போது உன் மனம் வேதங்களின் மலர்சொற்களால் கவரப்படாத நிலையை அடைகிறதோ, எப்போது அது தன்னுணர்வின் ஸமாதியில் நிலைத்திருக்கின்றதோ, அப்போது நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாவாய்.


ப.கீ 2.54
அர்ஜுன உவாச ஸ்தித-ப்ரக்ஞஸ்ய கா பாஷா ஸமாதி-ஸ்தஸ்ய கேஷவ
ஸ்தித-தீ: கிம் ப்ரபாஷேத கிம் ஆஸீத வ்ரஜேத கிம்

அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; ஸ்தித-ப்ரஜ்ஞஸ்ய – நிலைத்த கிருஷ்ண உணர்வில் உறுதி பெற்றவன்; கா — என்ன; பாஷா — மொழி; ஸமாதி-ஸ்தஸ்ய – ஸமாதியில் நிலைபெற்றோன்; கேஷவ – கிருஷ்ணர்; ஸ்தித-தீ: – கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றோன்; கிம் – என்ன; ப்ரபாஷேத – பேசுவான்; கிம் – எவ்வாறு; ஆஸீத — இருப்பான்; வ்ரஜேத – நடப்பான்; கிம் – எவ்வாறு.

அர்ஜுனன் வினவினான்: தெய்வீக உணர்வில் இவ்வாறு நிலை பெற்றவனின் அறிகுறிகள் யாவை? அவனது மொழி என்ன? எவ்வாறு பேசுவான்? எப்படி அமருவான், எப்படி நடப்பான்?


ப.கீ 2.55
ஸ்ரீ-பகவான் உவாச ப்ரஜஹாதி யதா காமான் ஸர்வான் பார்த மனோ-கதான்
ஆத்மன்-யேவாத்மனா துஷ்ட: ஸ்தித-ப்ரக்ஞஸ் ததோச்யதே

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கூறினார்; ப்ரஜஹாதி — துறந்து; யதா – எப்போது; காமான் – புலனுகர்ச்சிக்கான ஆசைகள்; ஸர்வான் – எல்லாவிதமான; பார்த – பிருதாவின் மைந்தனே; மன:-கதான் – மனக் கற்பனையின்; ஆத்மனி – ஆத்மாவின் தூய நிலையில்; ஏவ – நிச்சயமாக; ஆத்மனா – தூய்மையான மனதால்; துஷ்ட: – திருப்தியடைந்து; ஸ்தித-ப்ரஜ்ஞ – திவ்யமாக நிலைபெற்ற; ததா – அச்சமயத்தில்; உச்யதே – கூறப்படுகிறான்.

புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கூறினார்: பார்த்தனே, எப்போது ஒருவன் தமது மனக் கற்பனையினால் எழும் புலனுகர்ச்சிக்கான எல்லா ஆசைகளையும் துறந்து, தூய்மையடைந்த மனதுடன் தன்னில் திருப்தியடைகின்றானோ, அப்போது அவன் தெய்வீக உணர்வில் நிலைபெற்றவனாக அறியப்படுகிறான்.


ப.கீ 2.56
து: கேஷ்வ் அனுத்விக்ன-மனா: ஸுகேஷு விகத-ஸ்ப்ருஹ:
வீத-ராக-பய-க்ரோத: ஸ்தித-தீர் முனிர் உச்யதே

து:க்கேஷு – மூவகைத் துன்பங்களில்; அனுத்விக்ன-மனா: – மனதில் பாதிப்படையாமல்; ஸுகேஷு – இன்பத்தில்; விகத-ஸ்ப்ருஹ – விருப்பமின்றி; வீத – விடுபட்டு; ராக – பற்று; பய – பயம்; க்ரோத – கோபம்; ஸ்தித-தீ – மனம் நிலைபெற்றவன்; முனி: – முனிவன்; உச்யதே – அழைக்கப்படுகின்றான்.

மூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன், “நிலைத்த மனமுடைய முனிவன்” என்று அழைக்கப்படுகிறான்.


ப.கீ 2.57
ய: ஸர்வத்ரானபிஸ்நேஹஸ் தத் தத் ப்ராப்ய ஷுபாஷுபம்
நாபி நந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா

ய: – எவனொருவன்; ஸர்வத்ர – எங்கும்; அனபிஸ்னேஹ: – பற்றுதல் இன்றி; தத் – எவை; தத் – அவை; ப்ராப்ய – அடைந்து; ஷுப – நன்மை; அஷுபம் – தீமை; ந – என்றுமில்லை; அபினந்ததி – புகழ்கிறான்; ந – என்றுமில்லை; த்வேஷ்டி – பொறமை கொள்வது; தஸ்ய – அவனுடைய; ப்ரஜ்ஞா — பக்குவ அறிவு; ப்ரதிஷ்டிதா – நிலைபெற்று.

இப்பௌதிக உலகில், எவனொருவன் நன்மை தீமைகளை அடையும்போது அவற்றால் பாதிக்கப்படாமல், அவற்றை புகழாமலும் இகழாமலும் இருக்கின்றானோ, அவன் பக்குவ அறிவில் நிலைபெற்றவனாவான்.


ப.கீ 2.58
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ (அ)ங்கானீவ ஸர்வஷ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா

யதா – எப்போது; ஸம்ஹரதே – இழுத்துக் கொள்கிறது; ச – மேலும்; அயம் – அது; கூர்ம: – ஆமை; அங்கானி — அங்கங்கள்; இவ – போல; ஸர்வஷ – சேர்த்து; இந்த்ரியாணி — புலன்கள்; இந்த்ரிய-அர்த்தேப்ய: – புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து; தஸ்ய — அவனது; ப்ரஜ்ஞா — உணர்வு; ப்ரதிஷ்டிதா — நிலைபெற்றது.

ஆமை தன் அங்கங்களைக் கூட்டிற்குள் இழுத்துக்கொள்வதைப் போல, எவனொருவன் தன் புலன்களைப் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து விலக்கிக்கொள்கிறானோ, அவன் பக்குவ உணர்வில் நிலைபெற்றவனாவான்.


ப.கீ 2.59
விஷயா வினிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹின:
ரஸ-வர்ஜம் ரஸோ (அ)ப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே

விஷயா: – புலனுகர்ச்சிப் பொருட்கள்; வினிவர்தந்தே – விலகியிருக்க பயிற்சி கொண்டு; நிராஹாரஸ்ய – மறுப்பு கட்டுப்பாடுகளால்; தேஹின: – உடலை உடையவன்; ரஸ-வர்ஜம் – சுவையை விட்டொழித்து; ரஸ: – இன்பத்தைப் பற்றிய எண்ணம்; அபி – இருப்பினும்; அஸ்ய – அவனது; பரம் – உயர்ந்தவற்றை; த்ருஷ்ட்வா – அனுபவிப்பதால்; நிவர்த்ததே – முற்றுப் பெறுகின்றது.

உடல் பெற்ற ஆத்மாவை புலனின்பத்திலிருந்து கட்டுப்படுத்தினாலும், புலனுகர்ச்சிப் பொருள்களுக்கான சுவை அப்படியே இருக்கும். ஆனால் புலனின்ப ஈடுபாடுகளை உயர்ந்த சுவையினால் ஒழிப்பவன், தனது உணர்வில் நிலைபெற்றுள்ளான்.


ப.கீ 2.60
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ் சித:
இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸபம் மன:

யதத: – முயற்சி செய்கையில்; ஹி – நிச்சயமாக; அபி — இருந்தும்கூட; கௌந்தேய – குந்தியின் மகனே; புருஷஸ்ய – மனிதனின்; விபஷ்சித: – பகுத்தறிவு நிறைந்த; இந்த்ரியாணி — புலன்கள்; ப்ரமாதீனி — கிளர்ச்சியூட்டும்; ஹரந்தி – பலவந்தமாக; ப்ரஸபம் — வலுக்கட்டாயமாக; மன: – மனதை.

அர்ஜுனா, கட்டுப்படுத்த முயலும் பகுத்தறிவுடைய மனிதனின் மனதையும், பலவந்தமாக இழுத்துச் செல்லுமளவிற்குப் புலன்கள் சக்தி வாய்ந்ததும் அடங்காததுமாகும்.


ப.கீ 2.61
தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத் பர:
வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா

தானி – எவரது புலன்கள்; ஸர்வாணி — அனைத்தும்; ஸம்யம்ய – அடக்கப்பட்டனவோ; யுக்த: – ஈடுபட்டதால்; ஆஸீத – நிலைபெற்று; மத்-பர: — எனது உறவில்; வஷே – முழுமையாக; ஹி – நிச்சயமாக; யஸ்ய – எவனது; இந்த்ரியாணி – புலன்கள்; தஸ்ய — அவனது; ப்ரஜ்ஞா — உணர்வு; ப்ரதிஷ்டிதா – நிலைபெறுகின்றது.

புலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறான்.


ப.கீ 2.62
த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ் தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே

த்யாயத: – சிந்திக்கும் போது; விஷயான் – புலன்நோக்கு பொருள்கள்; பும்ஸ: – மனிதனின்; ஸங்க: – பற்றுதல்; தேஷு – புலன்நோக்குப் பொருட்களில்; உபஜாயதே – வளர்கின்றது; ஸங்காத் – பற்றுதலில் இருந்து; ஸஞ்ஜாயதே — வளர்கின்றது; காம – காமம்; காமாத் – காமத்திலிருந்து; க்ரோத: – கோபம்; அபிஜாயதே – தோன்றுகின்றது.

புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.


ப.கீ 2.63
க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம:
ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதி

க்ரோதாத் – கோபத்திலிருந்து; பவதி — ஏற்படுகிறது: ஸம்மோஹ: – பூரண மயக்கம்; ஸம்மோஹாத் – மயக்கத்தினால்; ஸ்ம்ருதி – நினைவின்; விப்ரம: – நிலை இழப்பு; ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் – நினைவு குழம்பிய பின்; புத்தி-நாஷ: – அறிவு இழப்பு; புத்தி-நாஷாத் – அறிவு இழப்பிலிருந்து; ப்ரணஷ்யதி — வீழ்ச்சியடைகிறான்.

கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நினைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்.


ப.கீ 2.64
ராக–த்வேஷ-விமுக்தைஸ் து விஷயான் இந்த்ரியைஷ் சரன்
ஆத்ம-வஷ்யைர் விதேயாத்மா ப்ரஸாதம் அதி கச்சதி
ராக – விருப்பு; த்வேஷ – வெறுப்பு; விமுக்தை – இவற்றிலிருந்து விடுபட்டவன்; து – ஆனால்; விஷயான் – புலன்நுகர்வுப் பொருள்கள்; இந்த்ரியை: – புலன்களால்; சரன் — செயல்பட்டு; ஆத்ம-வஷ்யை: – அடக்கக் கூடியவன்; விதேய-ஆத்மா – விடுதலைக்கான விதிகளைப் பின்பற்றுபவன்; ப்ரஸாதம் – இறைவனின் கருணை; அதிகச்சதி – அடைகிறான்.

எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கான விதிகளால் புலன்களைக் கட்டுப்படுத்துபவன், கடவுளின் முழுக் கருணையை அடைய முடியும்.


ப.கீ 2.65
ப்ரஸாதே ஸர்வ-து:கானாம் ஹானிர் அஸ்யோபஜாயதே
ப்ரஸன்ன-சேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே

ப்ரஸாதே – இறைவனின் காரணமற்ற கருணையைப் பெற்றால்; ஸர்வ – எல்லாம்; து:கானாம் – துக்கங்கள்; ஹானி: – அழிவு; அஸ்ய – அவனது; உபஜாயதே – உண்டாகிறது; ப்ரஸன்ன-சேதஸ: – சந்தோஷ மனம் கொண்ட; ஹி – நிச்சயமாக; ஆஷு – வெகு விரைவில்; புத்தி: — அறிவு: பரி – போதுமான அளவு; அவதிஷ்டதே — நிலைபெறுகிறது.

இவ்வாறு (கிருஷ்ண உணர்வில்) திருப்தியுற்றவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இத்தகைய திருப்தியுற்ற உணர்வில் அவனது புத்தி வெகு விரைவில் நிலைபெறுகின்றது.


ப.கீ 2.66
நாஸ்தி புத்திர் அயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவனா
ந சாபாவயத: ஷாந்திர் அஷாந்தஸ்ய குத: ஸுக ம்

ந அஸ்தி – இருக்க முடியாது; புத்தி – உன்னத அறிவு; அயுக்தஸ்ய – (கிருஷ்ண உணர்வுடன்) தொடர்பில் இல்லாதவன்; ந – இல்லை; ச – மேலும்; அயுக்தஸ்ய – கிருஷ்ண உணர்வில்லாதவன்; பாவனா – நிலைத்த மனம் (ஆனந்தத்தில்); ந – இல்லை; ச – மேலும்; அபாவயத: – நிலைபெறாதவன்; ஷாந்தி: – அமைதி; அஷாந்தஸ்ய — அமைதியில்லாவிடில்; குத: – எங்கே: ஸுகம் – ஆனந்தம்.

பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?


ப.கீ 2.67
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன் மனோ (அ)னுவிதீயதே
தத் அஸ்ய ஹரதி ப்ரக்ஞாம் வாயுர் நாவம் இவாம்பஸி

இந்த்ரியாணாம் — புலன்களின்; ஹி – நிச்சயமாக; சரதாம் — அலைபாயும் போது; யத் – எதனுடன்; மன: – மனம்; அனுவிதீயதே – நிலையாக ஈடுபடுகிறது; தத் – அது; அஸ்ய — அவனது; ஹரத — இழுத்துச் செல்கிறது; ப்ரஜ்ஞாம் – அறிவு; வாயு: – காற்று; நாவம் – படகு; இவ – போல: அம்பஸி – நீரில்.

நீரின் மீதுள்ள படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் புலன்களில் ஏதேனும் ஒன்றின் மீது மனம் ஈர்க்கப்பட்டு விட்டால், அந்த ஒரே ஒரு புலன் கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.


ப.கீ 2.68
தஸ்மாத் யஸ்ய மஹா-பாஹோ நிக்ருஹீதானி ஸர்வஷ:
இந்த்ரியாணீந்தரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா

தஸ்மாத் – எனவே; யஸ்ய – ஒருவனது; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையவனே; நிக்ருஹீதானி – கட்டுப்படுத்தப்பட்ட; ஸர்வஷ: – முழுவதுமாக; இந்த்ரியாணி – புலன்கள்; இந்த்ரிய-அர்த்தேப்ய: – புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து; தஸ்ய – அவனது; ப்ரஜ்ஞா — அறிவு; ப்ரதிஷ்டிதா — நிலைபெற்றது.

எனவே, பலம் பொருந்திய புயங்களை உடையவனே, எவனுடைய புலன்கள் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து முற்றுமாக விலக்கப்பட்டுள்ளதோ, அவன் நிச்சயமாக நிலைத்த அறிவுடையவனாகின்றான்.


ப.கீ 2.69
யா நிஷா ஸர்வ -பூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமி
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிஷா பஷ்யதோ முனே:

யா – எது; நிஷா – இரவோ; ஸர்வ – எல்லாம்; பூதானாம் – உயிர்வாழிகளுக்கு; தஸ்யாம் – அதில்; ஜாகர்தி – விழித்திருக்கிறான்; ஸம்யமி – சுயக் கட்டுபாடு உள்ளவன்; யஸ்யாம் — எதில்; ஜாக்ரதி — விழித்திருக்கின்றன; பூதானி — எல்லா உயிர்களும்; ஸா — அதுவே; நிஷா — இரவு; பஷ்யத: — ஆய்ந்தறிகின்ற; முனே: – முனிவன்.

எல்லா உயிர்களுக்கும் எது இரவோ, அது சுயக் கட்டுப்பாடு உள்ளவனுக்கு விழித்தெழும் நேரமாகும். எல்லா உயிர்களுக்கும் எது விழித்தெழும் நேரமோ, அது ஆய்வறிவு கொண்ட முனிவனுக்கு இரவாகின்றது.


ப.கீ 2.70
ஆபூர்யமாணம் அசல-ப்ரதிஷ்டம் ஸமுத்ரம் ஆப: ப்ரவிஷந்தி யத் வத் தத் வத் காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே ஸ ஷாந்திம் ஆப்னோதி ந காம-காமீ பொருள் ஆபூர்யமாணம் — என்றும் நிறைந்த; அசல-ப்ரதிஷ்டம் — உறுதியாக நிலைத்த; ஸமுத்ரம் – கடல்; ஆப: – நீர்; ப்ரவிஷந்தி – புகுந்து; யத்வத் – உள்ளபடி; தத்வத் — அதுபோல; காம: – ஆசைகள்; யம் – எவரிடம்; ப்ரவிஷந்தி — புகுந்து; ஸர்வே — எல்லா; ஸ: – அம்மனிதன்; ஷாந்திம் – அமைதி; ஆப்னோதி – அடைகிறான்; ந – அல்ல; காம-காமீ – ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்புபவன். நதிகள் கடலில் வந்து கலந்தாலும், கடல் மாறுவதில்லை. அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும். அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல.


ப.கீ 2.71
விஹாய காமான் ய: ஸர்வான் புமாம்ஷ் சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஷாந்திம் அதிகச்சதி

விஹாய – விட்டுவிட்டு; காமான் — புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகள்; ய: – எவன்; ஸர்வான் – எல்லா; புமான் – ஒருவன்; சரதி — வாழ்கிறான்; நி: ஸ்ப்ருஹ: – ஆசைகளின்றி; நிர்மம: – உரிமையாளன் என்ற உணர்வின்றி; நிரஹங்கார: – அஹங்காரமின்றி; ஸ: – அவன்; ஷாந்திம் – பக்குவமான அமைதி; அதிகச்சதி – அடைகிறான்.

புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.


ப.கீ 2.72
ஏஷா ப்ராஹ்மி ஸ்திதி: பார்த நைனாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாம் அந்த-காலே (அ)பி ப்ரஹ்ம-நிர்வாணம் ருச்சதி

ஏஷா – இந்த; ப்ராஹ்மீ – ஆன்மீக; ஸ்திதி: – நிலை; பார்த: – பிருதாவின் மகனே; ந – என்றுமில்லை; ஏனாம் – இந்த; ப்ராப்ய – அடைந்து; விமுஹ்யதி – ஒருவன் குழம்புகிறான்; ஸ்தித்வா — இவ்வாறு நிலைபெற்று; அஸ்யாம் – இதில்; அந்த-காலே – வாழ்வின் இறுதிக் காலத்தில்; அபி – கூட; ப்ரஹ்ம-நிர்வாணம் – இறைவனின் ஆன்மீகத் திருநாட்டை; ருச்சதி — அடைகிறான்.

இதுவே ஆன்மீகமான தெய்வீக வாழ்விற்கு வழி. இதனை அடைந்த மனிதன் குழப்பமடைவதில்லை. இந்த நிலையை தனது மரணத் தருவாயில் அடைபவனும்கூட, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைகிறான்.


Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare