26. கோபேஷ்வர் மகாதேவர் திருக்கோயில்
நோக்கங்கள்:
நோக்கம் 1: கோபேஸ்வர மகாதேவின் மகிமைகளை அறிதல்.
நோக்கம் 2: சிவபெருமானுக்கும் பகவான் விஷ்ணுவிற்கும் இடையிலான உறவினைப் புரிந்துகொள்ளுதல்.
நோக்கம் 4: கோபேஸ்வர மகாதேவின் கதையை அறிதல்.
நோக்கம் 5: விருந்தாவன தாமத்தில் கோபீஸ்வரரை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுதல்
நோக்கம் 6: ஹங்கேரியில் உள்ள கோபேஸ்வரரைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
நோக்கம் 1: கோபேஸ்வர மகாதேவின் மகிமைகளை அறிதல்.

சிவபெருமானைப் பின்பற்றுபவர்களும் பகவான் கிருஷ்ணரைப் பின்பற்றுபவர்களும் வெவ்வேறு ஆன்மிகப் பாதைகளில் செல்வதைப்போல தோன்றினாலும், ஆழமான உண்மை ஒன்று அழகான இணக்கத்தை வெளிப்படுத்துகிறது. விருந்தாவனத்தில்,, ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் ராசலீலை மற்றும் புனித தாமத்தின் தெய்வீக காவலராக கோபேஸ்வர மகாதேவராக சிவபெருமான் மிக உயர்ந்த ஒரு பாத்திரத்தை ஏற்கிறார்.
கோபேஸ்வர மகாதேவ்: விருந்தாவனத்தின் பாதுகாவலர்
ஸ்ரீ சைதன்ய சரிதாமிர்தத்தின் ஆசிரியரான ஸ்ரீல கிருஷ்ணதாஸ் கவிராஜ் கோஸ்வாமி, ஸ்ரீ வ்ரஜதாம மஹிமாமிர்தம் என்னும் புகழ்பெற்ற பஜனை பாடலை இயற்றியுள்ளார். அதில் அவர் பாடுகிறார்:
“ஜய ஜய கோபீஸ்வர விருந்தாவன மஜ்”
“விருந்தாவனத்தில் உறையும் கோபேஸ்வர சிவபெருமானுக்கு கோடி நமஸ்காரம், கோடி நமஸ்காரம்!”
இந்த ஸ்லோகம், கோபேஸ்வரராகிய சிவபெருமானிடம் கௌடிய வைஷ்ணவர்கள் செலுத்தும் ஆழ்ந்த மரியாதையை தொகுத்து வழங்குகிறது. அவர் விருந்தாவன லீலைகளுக்கு ஒரு பார்வையாளர் மட்டுமல்ல அதற்குப் பாதுகாவலரும் ஆவார்.தூய பக்தியுடன் மட்டுமே ராச லீலையின் ரகசியத் தலத்துக்குள் நுழைய முடியும் என்பதை அவர் உறுதி செய்கிறார்.
கோவில் மற்றும் அதன் முக்கியத்துவம்
விருந்தாவனத்தில் உள்ள பண்டைய கோபேஸ்வர மகாதேவ் கோவில், ஒரு புனிதஸ்தலமாகும். இது ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் பிற வைஷ்ணவ ஆசார்யர்களின் படைப்புகளில் பெரிதும் போற்றப்பட்டுள்ளது.
ஒருவர் உண்மையாக விருந்தாவனத்தின் ஆன்மீக நிலைக்கு நுழைய விரும்பினால், முதலில் கோபேஸ்வர மகாதேவரின் ஆசீர்வாதத்தையும் அனுமதியையும் பெறவேண்டும் என்று பக்தர்கள் நன்கு உணர்கின்றனர்.
அவருடைய சன்னிதி, நமக்கு ராதா-கிருஷ்ணரின் லீலாமிர்தத்தை அனுபவிக்க, பணிவு, தூய்மை மற்றும் மனமார்ந்த ஆர்வம் ஆகியவை அடிப்படை தேவைகள் என்கிற உண்மையை நினைவூட்டுகிறது.
பக்தி ஒருமைப்பாட்டின் ஒரு பாடம்:
சிவபெருமான் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாடு தனித்ததாக இல்லாமல், விருந்தாவனத்தில் ஒரு ஆன்மிக ஒருமைப்பாடாகக் காணப்படுகிறது.
கோபேஷ்வர மகாதேவ் தன்னலம் இல்லாமல், முழுமையாக இறைவன் சேவைக்காக வாழும் ஒரு சிறந்த பக்தராக இருக்கிறார். அவர் தெய்வ தம்பதியான ஶ்ரீ ராதா-கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்புடனும் பணிவுடனும் சேவை செய்கிறார்.
நோக்கம் 2: சிவபெருமானுக்கும் பகவான் விஷ்ணுவிற்கும் இடையிலான உறவினைப் புரிந்துகொள்ளுதல்

சிவபெருமான் எப்போதும் ஆச்சரியப்படத்தக்க சிறந்த ஒரு பக்தராகவே திகழ்கிறார். ஶ்ரீகிருஷ்ணரும் சிவபெருமானும் கொண்டிருக்கும் அந்த நெருக்கமான உறவினைப் புரிந்து கொள்ளுவதும், அதை மதிப்பதும் மிகவும் முக்கியமானதாகும். பகவத்கீதையில் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் நாம் பௌதீக இலாபத்திற்காக தேவதைகளை வழிபட வேண்டாம் என அறிவுறுத்துகிறார், இதில் அனைத்து தேவர்களுக்கு இடையில் தலைசிறந்தவரான மகாதேவர் சிவபெருமானும் அடங்குகிறார்.
ஆனால், சைதன்ய சரிதாம்ருதம் என்ற புனித நூலை எழுதிய கவிராஜ கோஸ்வாமி பகவான் சைதன்யர் சிவபெருமானை ஒரு சிறந்த வைஷ்ணவராக மதித்து, வராணாசியில் தங்கியிருந்தபோது விஸ்வேஸ்வரர் (சிவபெருமான்) கோயிலுக்கு முறையாகப் பூஜை செய்து வந்ததை குறிப்பிடுகிறார். மேலும், கவிராஜக் கோஸ்வாமியும், பகவான் சைதன்யர் தம் தென் னிந்திய பயணத்தின் போது முக்கியமான அனைத்து சிவஸ்தலங்களுக்கும் சென்றதை விவரிக்கிறார்.
இதிலிருந்து, சிவபெருமானுக்கும் ஶ்ரீகிருஷ்ணருக்கும் இடையில் உள்ள ஆழமான ஆன்மிக உறவையும், அவர் ஒரு சிறந்த பக்தராகவும், வைஷ்ணவராகவும் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
நோக்கம் 3: ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் ரகசிய ப்ரேம உறவினை, கோபீஸ்வரர் சிவபெருமானின் ஆன்மிக ஸ்வரூபத்தின் மூலம் ஆழமாக உணர்வது.
ஶ்ரீ கிருஷ்ணரும் சிவபெருமானும் இடையே உள்ள இந்த மர்மமான உறவினைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ‘கோபீஸ்வரர்’ எனும் அதிசயமான சிவ ஸ்வரூபத்தின் ரகசியங்களை ஆராய்வதே ஆகும். இந்த சிறப்பு மிக்க சிவ ஸ்வரூபம், ஶ்ரீராதா-கிருஷ்ணருடன் ஒரு மிக நெருக்கமான மற்றும் ரகசியமான உறவைக் கொண்டிருக்கின்றது.
ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையுடைய சிவலிங்கமாக, கோபீஸ்வரர் விருந்தாவனத்தின் மையப்பகுதியில் நீண்ட காலமாக வசித்துவருகிறார், மற்றும் அவர் ஒளிமயமான திகைப்பூட்டும் ஆன்மிக சக்தியுடன் அங்கு திகழ்கிறார்.
இன்றும் கோபீஸ்வரர் முக்கியத்துவம் வாய்ந்தவராகவே உள்ளார்.மேலும் எதிர்காலத்தில் வரும் அனைத்து கௌடிய வைஷ்ணவர்களுக்குமான ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்வார்.
கிருஷ்ண உணர்வு என்பது ஒரு உயர்ந்த புனிதமான ப்ரேமத்தை வளர்ப்பது போன்றதாகும். கோபீஸ்வர சிவபெருமானை உணர்வது என்பது இத்தகையதொரு கிருஷ்ண உணர்வை உணர்தலுக்கு ஈடானது.
தெய்வீக ப்ரேம நடனமாக அறியப்படும் ராசலீலையை விவரிக்கும் ஐந்து அதிகாரங்களும் ஶ்ரீமத் பாகவதத்தில் உள்ள மிகச் சிறப்பான, மையமான பகுதிகள் ஆகும்.
உயர்ந்த ப்ரேமத்தின் தேவியாக விளங்கும் ஸ்ரீமதிராதாராணியுடன் சேர்ந்து நடனமாட, பகவான் கிருஷ்ணர் தாமே எண்ணற்ற ரூபங்களாக விரிகின்றார்.
அதேபோல், ராதாராணியும் தம்மை எண்ணற்ற கோபிகைகளாக, பலவிதமான தன்மைகளுடனும் விரித்து, பகவானின் நிரந்தரமான ப்ரேம பரிமாற்ற ஆசையை நிறைவேற்றுகிறாள்.

1973 ஆம் ஆண்டு மே மாதத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் கோயிலுக்கு வந்தபோது ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்:
நீங்கள் மீண்டும் உங்கள் வீட்டிற்குத் திரும்பி, ஶ்ரீகிருஷ்ணரை அடையும்போது.எல்லையற்ற ஆனந்தத்தை நீங்கள் அடையலாம். கிருஷ்ணர் நித்தியர்; அவருடைய லீலைகளும் நித்தியமானவை. கிருஷ்ணருடன் சேருங்கள் — அவரது ராசலீலை கோபாலர்களுடன் ஆடும் விளையாட்டுகள், விருந்தாவனத்தில் தந்தை மற்றும் தாயாருடன் கொண்ட உறவுகள் — இவையெல்லாம் நம்முடைய இயக்கத்தின் நோக்கம். நம்முடைய இந்த இயக்கம், கிருஷ்ணரின் லீலைகளில் சேர்வதற்காக.
ஹரே கிருஷ்ண இயக்கம் என்பது, கடவுளுடன் உள்ள ஆழமான, தனிப்பட்ட ப்ரேம உறவின் பல்வேறு அம்சங்களை தீவிரமாக ஆராயும் ஒரு பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. கடவுளை நேசிப்பதின் நுணுக்கங்கள் மற்றும் அதிலுள்ள ஆழமான உணர்வுகளை விளக்கும் வகை ஆகியவற்றை உலகில் வேறெந்த தத்துவமும் இத்தனைத் தெளிவாக கூறியதில்லை.
பக்தி யோகத்தின் நிலையான பயிற்சிகள் மூலம், கிருஷ்ணரையும் அவரது உடனுறைபவர்களயும் சேர கோலோக விருந்தாவனத்தின் நித்திய ஆன்மீக உலகத்திற்குத் திரும்பிச் செல்லும் விருப்பத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு பக்தர், தெய்வீக அன்பின் இந்த பிரத்யேக ஆழ்நிலை உலகத்திற்குள் நுழைவதற்கு முழுமையான இதயத் தூய்மை தேவை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்
விருந்தாவனத்தின் நியமிக்கப்பட்ட பாதுகாவலராக கோபீஸ்வர சிவபெருமான் அனைத்து நேர்மையான பக்தர்களின் தனிப்பட்ட உள்ளத்தூய்மைக்கு உதவும் சிறப்புவாய்ந்த சேவையை செய்கிறார்.
நோக்கம் 4: கோபேஸ்வர மகாதேவின் கதையை அறிதல்.
கோபேஸ்வரரின் கதை வைஷ்ணவ நூலான கர்க சம்ஹிதையில் காணப்படுகிறது.மேலும் இது அனைத்து கிருஷ்ண பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு பாடமாகத் திகழ்கிறது.இந்தக் கதை பின்வருமாறு கூறப்படுகிறது.
ஒரு காலத்தில், கைலாச மலையில் ஆழமான தியானத்தில் இருந்த சிவபெருமான், ஶ்ரீ கிருஷ்ணரின் வேணுகானத்தின் இனிமையான ஒலியைக் கேட்டார். அந்த அதிசயமான இசையில் முழுமையாக ஈடுபட்டு, சிவபெருமான் ஆழமான சமாதியில் மேலும் அதிகமாகச் சென்றார், இதன் காரணமாக அவருடைய உள்ளம் நேரடியாக விருந்தாவனத்தின் தெய்வீக உலகிற்கு இழுக்கப்பட்டது.
விருந்தாவனத்தின் புனித தலத்தில் நுழைந்ததும், சிவபெருமான் அங்கு கோபிநாதராக இருந்த ஶ்ரீகிருஷ்ணரை ராசலீலை நடனத்திற்காக தயார் ஆகிக்கொண்டிருப்பதைக் காண்கிறார். அந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பேராசையில் சிவபெருமான் மிகுந்த உற்சாகத்துடன் ராசமண்டலத்திற்குள் நுழைய முயன்றார். ஆனால் வம்சி வட்டத்திற்கு அருகில் உள்ள அந்தப் பகுதியில் நுழைய அவரை யோகமாயா (ஸ்ரீமதி ராதாராணியின் விரிவாக விளங்கும் சக்தி) தடுத்தார்.
யோகமாயா கூறினார்:
“நீங்கள் ராசலீலையில் பங்கேற்க விரும்புகிறீர்களானால், முதலில் விருந்தாதேவியிடம் அனுமதி பெற வேண்டும்.”
அதன்பிறகு யோகமாயா, சிவபெருமானை விருந்தா தேவியை (துளசி என்றும் அழைக்கப்படுபவர்) சந்திக்க அழைத்துச் சென்றார். விருந்தாதேவி சிவபெருமானிடம்,
“நீங்கள் ஆண் உருவில் உள்ளீர்கள், எனவே ராசலீலையில் பங்கேற்க முடியாது,” என விளக்கினார்.
இந்த உன்னதமான லீலையில் பங்கேற்பதற்கு, பெண்கள் குறிப்பாக கோபியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணர் பரம போக்தாவாக இருக்கிறார்; அவரே பிரேம லீலையில் பங்கேற்கும் ஒரே நபர். கோபியர்கள், ஸ்ரீமதி ராதாராணியின் ப்ரகிருதி விரிவுகளாக, பிரேம பாகங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் ஆண் உருவத்தில் இருப்பதால், சிவபெருமான் இயல்பாகவே அனுபவிக்க விரும்பும் மனப்பான்மையுடன் இருந்தார், அதேசமயம் கோபிகைகள் தங்களை பரம போக்தாவால் என்றும் அனுபவிக்கப்படுகிறவர்களாகக் கருதுகிறார்கள்.
சிவபெருமான் விருந்தாதேவியிடம் கேட்டார்:
“ஒரு கோபியின் உருவத்தையும், மனநிலையையும் பெற நான் என்ன செய்ய வேண்டும்?”
விருந்தாதேவி, ஒரு தற்காலிக குருவாக செயல்பட்டார். அவர் செய்ய வேண்டியது என்ன என்பதைத் துல்லியமாக அறிந்திருந்தார். அவர் சிவபெருமானை மானஸரோவர் குளத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு புனித நீரில் ஆழ்ந்த ஸ்நானம் செய்ய அறிவுறுத்தினார்.
அந்த நீரில் மூழ்கியதும், சிவபெருமான் அதிசயமாக ஒரு அழகிய கோபிகையாக நகை, மஸ்காரா மற்றும் அழகிய புடவையுடன் வெளிவந்தார். பின்னர், விருந்தாதேவி, அந்த கோபி உருவத்தில் இருந்த சிவபெருமானை ராசலீலா நடக்கும் அரங்கத்தின் ஓரமாக அழைத்துச் சென்றார், அங்கு அவர்/அவள் ஸ்ரீ ராதா-கிருஷ்ணரிடம் பரம ப்ரேம பக்திக்காக மனமார்ந்த பிரார்த்தனை செய்தார்.
(இந்த பிரார்த்தனையின் நிலைமை, ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைச் ஜபிக்கும் போது ஒரு உண்மையான பக்தனின் மனநிலையை பிரதிபலிக்கிறது.)
ஶ்ரீமத் பாகவதத்தில், ராசலீலை என்பது பரமபுருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான லீலையாக கருதப்படுகிறது.
ஒரு பக்தன், தகுதியான ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ், படிப்படியாக பத்தாவது ஸ்கந்தத்திற்கு செல்லுகிறான், அங்கு அவர் இந்த தெய்வீக பிரேம நடனத்தை அறிகிறான்.
பக்தர்களிடம் ஒரு எச்சரிக்கை கூறப்படுகிறது — கிருஷ்ணரின் மற்றும் கோபிகைகளின் பிரேம பாவங்களை, உலகியலான காதல் கதைகளாக எண்ணி, பத்தாவது ஸ்கந்தத்தை நேரடியாகப் படிக்க வேண்டாம் என்று. கோபிகைகள், தனிப்பட்ட அனுபவ ஆசைகளோ, உணர்ச்சிக் கவர்ச்சிகளோ இல்லாமல், முழுமையான தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் கிருஷ்ணருக்கு பேரன்பை வழங்குபவர்களாக இருக்கிறார்கள்.
ஸ்ரீமதி ராதாராணி, ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் கோபிகைகள்—வசீகரிக்கும் நிலவொளி நிறைந்த காடுகளில் நடனமாடும் போது, ஒரு அற்புதமான பக்தி சூழ்நிலை உருவாகிறது. இந்த தெய்வீக பிரேமத்தின் உணர்வுக்கு இத்தகைய மனதைக் கவரும் சூழ்நிலை அவசியம்.
இந்த சந்தர்ப்பத்தில், சிவபெருமான், கோபி உருவத்தில், யாருக்கும் தெரியாமல் ராசமண்டலத்தில் நுழைந்து, மற்ற கோபிகைகள் போலவே ஆனந்தமாக கிருஷ்ணருடன் நடனமாட ஆரம்பித்தார்.
(பகவானின் புனித நாமங்களை முறையாக ஜபிப்பது, இந்த புனித பிரேம நடனத்தின் ஒலி வடிவமாகவே கருதலாம்.)
அனேக நேரம் கழிந்த பிறகு, கிருஷ்ணர் சிறிது ஓய்வு எடுத்தார். ஓய்வெடுக்கும் போது அவர் கூறினார்,நான் முன்னால் அனுபவித்ததைப்போல் இப்போது அந்த அளவிலான ஆனந்தம் இல்லை. எப்படியோ ஒரு விசித்திரமான ஆண் இங்கு இருப்பதை போல் உணர்கிறேன்.
பின்பு கிருஷ்ணர் லலிதாதேவியிடம் கேட்டார்
“இங்கே யாராவது ஆண் இருக்கிறாரா என்பதைப் பார்த்து சொல்ல முடியுமா?” என்று.
இது ஒரு குறிப்பிட்ட ராசலீலை நிகழ்வு — இது நித்தியமாக தொடரும். அந்த வேளையில் பரமாத்மா அனுபவத்தில் ஒரு வித்தியாசம் உணர்ந்தார்.
லலிதா தேவி ஒவ்வொரு கோபியையும் ஆராயத் தொடங்கினார், ஆனால் எந்த ஆணும் உள்ளதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் கிருஷ்ணரிடம் சென்று,
“எனது பார்வைக்கு எந்த ஆணும் இல்லை. ஆனால் ஒரு புதிய, மிகவும் அழகான கோபி இருக்கிறார், அவருக்கு மூன்று கண்கள் இருக்கின்றன!” என்று சொன்னாள்.
“அந்த கோபியை என்னிடம் அழைத்து வாருங்கள்,” என்றார் கிருஷ்ணர்.
அந்த மூன்று கண்கள் கொண்ட கோபியை பார்த்ததும், கிருஷ்ணர் பரபரப்பாக சிரிக்கத் தொடங்கினார்.
கோபி உருவில் இருந்த சிவபெருமானைப் பார்த்து, கிருஷ்ணர் கேட்டார்:
“ஓ போலேநாதா (எளியோரின் அதிபதி), நீ இங்கே என்ன செய்கிறாய்?”
கிருஷ்ணர், மிகுந்த மகிழ்ச்சியுடன், ஆண் தத்துவத்தின் உச்சமாக விளங்கும் சிவபெருமான் ஒரு கோபியாக மாறியதைப் பார்த்து தொடர்ந்து சிரித்தார்.
பின்பு கிருஷ்ணர் அமைதியடைந்து கூறினார்:
“ஓ கோபீஸ்வரா (கோபிகைகளின் தலைவர்), உன்னை கோபி உருவத்தில் பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீ இன்று முதல் மற்ற அனைத்து கோபிகைகளிடமிருந்தும் மரியாதையும், பூஜையும் பெறுவாய்.”
இதை கேட்டதும், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராகிய ஸ்ரீமதி ராதாராணி, தன் எதிர்மறையான (contrary) இயல்பினால் சற்று கோபமடைந்து,
“இந்த புதிய கோபி யார்? இதுவரை நீ என்னை ‘கோபீஸ்வரா’ என்று அழைத்தில்லை. ஆனால் இப்போது இந்த அறிமுகம் இல்லாதவளை அந்தப்பெயரால் அழைத்து ஆசீர்வாதங்களை வழங்குகிறாய்! இது ஒரு பெரிய அவமதிப்பு! இப்போது நான் உன்னையும் ராசலீலையையும் விட்டு விலக விரும்புகிறேன்!” என்று கூறினாள்.
அவளது கரத்தை பிடித்தபடி, கிருஷ்ணர் சமாதானமாக கூறினார்:
“நீ கோபப்படாதே. இந்த புதிய கோபி உண்மையில் சிவபெருமானே! அவர் பிரேம பரிமாற்றங்களை அனுபவிக்க, ராசமண்டலத்திற்கு வந்திருக்கிறார். இன்று முதல், நான் கோபீஸ்வரருக்கு ஒரு உன்னத சேவையை , விருந்தாவனத்திற்கும், ராசலீலைக்கும் தெய்வீக பாதுகாவலராக இருப்பதற்கான நிலையை வழங்குகிறேன்
உங்களில் ஒவ்வொருவரும், தூய பிரேம பக்தியை அடைய தினசரி கோபீஸ்வரரை பூஜிக்க வேண்டும், என்றார் கிருஷ்ணர்.
பிறகு கிருஷ்ணர் சிவபெருமானை நோக்கி கூறினார்:
“நீங்கள் ராசலீலையில் பங்கேற்றுள்ளதால், உங்களுக்கு மிக முக்கியமான ஒரு சேவை இருக்கிறது. விருந்தாவனத்தின் திசைப் பாலகராக, தங்களை ஆன்மிக ரீதியாக தூய்மை படுத்திக்கொள்ள விரும்பும் பக்தர்களை வழிநடத்தவேண்டும். அவர்கள் தங்களை ‘புருஷன்’ எனக் கருதும் பொய்யான அஹங்காரத்தையும், அனுபவிக்க நினைக்கும் மனநிலையையும் விட்டுவிடவேண்டும்.
“நீங்கள் விருந்தாவனத்தின் வாசலிலே, ராசலீலையின் தூய்மையையும் புனிதத்தையும் காத்து நிற்கும் ஆன்மிக காவலராக இருக்க வேண்டும். பல தகுதி இல்லாத யோகிகள், போலியான பக்தர்கள் மற்றும் மனப்பூர்வமாக எண்ணுவோர், ராசலீலைவயில் கலந்துகொள்ள ஆசைபடுவார்கள். ஆனால் அவர்கள் சரியான தகுதியின்றி இருப்பதால், அவர்களை வெளியே நிறுத்தவேண்டும்.”
“இந்த இந்தியாவில் உள்ள புனித விருந்தாவனத்தில் அவர்கள் உடல் ரீதியாக நுழையலாம், ஆனால் உண்மையான ஆன்மிக விருந்தாவனத்தை உணர முடியாது. தன்னை முழுமையாக சேவைக்கே அர்ப்பணித்த தூய பக்தர்கள் மட்டுமே அந்த ரகசிய உலகிற்குள் நுழையலாம்.”
கிருஷ்ணர் மேலும் கூறினார்:
“தங்களுடைய தனி அனுபவ ஆசையைத் துறந்த, பொய்யான அஹங்காரமின்றி, எப்போதும் சேவைக்குத் தயார் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே ராசமண்டலத்தில் நுழைவதற்கான அனுமதி கிடைக்கும்.”
இதைக் கேட்ட சிவபெருமான், மகிழ்ச்சியுடன் அந்த ஆசீர்வாதத்தையும் சேவையையும் ஏற்றுக் கொண்டார்.
உயர்ந்த வைஷ்ணவராக, ராதா-கிருஷ்ணருடன் தொடர்புடைய அனைத்து வகையான பக்தர்களும் தங்கள் குறிப்பிட்ட நித்திய பரிபூரணத்தை அடைவதில் தொடர்ந்து உதவுவதே அவரது விருப்பம்.
நோக்கம் 5: விருந்தாவன தாமத்தில் கோபீஸ்வரரை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுதல்
ஒரு தூய ஆன்மிக குருவின் பாதங்களை பின்பற்றி, உண்மையான பக்தர்கள் விருந்தாவனத்திற்கு பயணம் செய்யும் போது கோபீஸ்வரரை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக்கொள்கிறார்கள். பக்தர்கள் விருந்தாவன-தாமத்திற்குள் நுழைந்து அங்கு தங்க முடிந்தாலும், அந்த பரம ஆனந்த நிலையை உணர்வது அவர்கள் பொய்யான அகந்தையை எவ்வளவு வென்றிருக்கிறார்கள் என்பதையே சார்ந்திருக்கும்.
அகந்தையின் காரியங்களில் சிவபெருமான் சிறப்பு பெற்றவர்; அவர் அறியாமையின் குணத்தின் தலைவராக இருப்பதால், மாயையான பொருட்களால் ஏற்படும் ஆசைகளை அழிக்க பக்தர்களுக்கு உதவுகிறார். அழிவுத்தொழில் ஆண்டவனாக, அவர் இந்த பொய்யான அகந்தையை அழிக்க உதவுகிறார். பக்தர் ஒருவர் பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடைய நிஜமான ஆன்மீக அகந்தையை அடைய வேண்டுமானால், பொய்யான அகந்தையை முற்றிலும் அழிக்க வேண்டும்
இன்றைய விருந்தாவனத்தில், பழமையான கோபீஸ்வர சிவலிங்கம் காலை நேரத்தில் ஆணாக வழிபடப்படுகிறார். பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில், அவர் சேலையணிந்து, அலங்காரப் பொருட்கள் மற்றும் நகைகள் அணிந்து வழிபடப்படுகிறார். ஆண் (சிவன்) மற்றும் பெண் (சக்தி) ஆகிய இரு ரூபங்களையும் ஒரே உருவில் கொண்ட இந்த தனித்துவமான சிவ வடிவம் அர்த்தநாரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
கோபீஸ்வரர் ஒரு தத்துவப் பாடத்தை எடுத்துரைக்கிறார்: ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஒரு பக்தர் தன்னை மறந்து, அகந்தையிலிருந்து விடுபட்டு, பரிசுத்தமான ப்ரேமத்தை (கிருஷ்ணருக்கான தூய அன்பை) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீல ரூப கோஸ்வாமி, தனது மதுரா மஹாத்மியம் நூலில், புனித தாமத்தில் நுழைவதற்கான இரண்டு கட்ட வழிமுறையை பரிந்துரைத்துள்ளார். விருந்தாவன் நகருக்குள் ஆன்மீக நுழைவு நாடும் ஒரு உண்மையான யாத்திரிகன், முதலில் மதுரா நகரில் உள்ள பூதேஷ்வர மகாதேவருக்கு பிரார்த்தனைகள் செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும்.
கோபீஷ்வரருடன் இணைந்து, இந்த பழமையான தெய்வம் ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பகவான் கிருஷ்ணரின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபாவால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக, பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் விருந்தாவனம் ஆகிய புனித ஸ்தலத்திற்கான யாத்திரையில் ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் இரண்டு கட்ட வழிமுறையை பின்பற்றி வந்துள்ளனர் — முதலில் மதுராவில் உள்ள பூதேஷ்வரருக்கு சென்று பிரார்த்தனை செய்வதும், பின்னர் விருந்தாவனத்தில் உள்ள கோபீஷ்வரருக்கு சென்று வழிபடுவதும்.
ஸ்ரீ விருந்தாவன தாமத்திற்குபயணிக்கும் அனைத்து உறுதியான பக்தர்களுக்கும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி வழங்கிய இந்த உயர்ந்த ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. சிவபெருமான் அருளில்லாமல், ஒரு பக்தர் புனித தாமத்தில் இருந்தாலும், அவர் அதை ஒரு சுற்றுலாப் பயணியாக மட்டுமே அனுபவிக்கலாம் — உண்மையான பக்தி-யாத்திரிகன் அனுபவிக்கக்கூடிய ஆழமான புனித உணர்வுகளை உணர முடியாமல் போகலாம்.
நோக்கம் 6: ஹங்கேரியில் உள்ள கோபேஸ்வரரைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
ஹங்கேரியில் உள்ள இஸ்கான் விவசாயக் கிராமம் மற்றும் கோயிலான நியூ வ்ரஜ தாமத்தில், கோபீஸ்வரர் ஒரு புதிய உருவத்தில் காணப்படுகிறார். இந்த விரிவாக வளர்ந்து வரும் ஆன்மீக சமுதாயம், கோமாதாவைப்பாதுகாத்தல், இயற்கை விவசாயம், எளிமையான வாழ்வு, உயர்ந்த சிந்தனை மற்றும் சுயபோதியத்தைக் கொண்டு அமைந்த வேதகால தெய்வ வார்ணாஸ்ரமத் திட்டத்தைக் வளர்க்க கடுமையாக உழைத்து வருகிறது.
2007ஆம் ஆண்டு, இச் சமுதாயத்தின் ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ சிவராம சுவாமிகள், கோபீஸ்வரருக்காக ஒரு வெண்கல வெளிப்புற சன்னதியை நிறுவினார். இது பக்தர்களுக்கு அங்கு நிலைபெற்ற தெய்வங்களான ராதா-ஷ்யாமசுந்தரர் மீது உள்ள அன்பையும், அவர்களுக்கு செய்யப்படும் அழகான வழிபாட்டையும் ஆழமாக உணர உதவுகிறது.
கோபீஸ்வரர் வெறும் ஐயாயிரம் ஆண்டுகளாக விருந்தாவனத்தில் நிலை கொண்டிருக்கும் சிவலிங்கமாக மட்டும் இல்லாமல், பொய்யான அகந்தையை அழிக்கும் ஒரு பரமாத்மீக மாற்றத்தைக் குறிக்கும் தத்துவத்தின் உருவகமாக கூட விளங்குகிறார்.
இந்த காரணத்தினாலேயே, கோபீஸ்வர மகாதேவரின் ஆராதனை, ராதா-கிருஷ்ண பூஜை நிரந்தரமாக நடைபெறும் எந்த ஒரு பக்தர்கள் கொண்ட சமுதாயத்திலும் பின்பற்றலாம், மற்றும் அது அந்த சமுதாயத்திற்கு ஆன்மீக ரீதியாக ஒரு ஆழ்ந்த மாற்றத்தைக் கொண்டு வரும்.

நியூ வ்ரஜ தாமத்தில், கோபேஸ்வர சிவபெருமான் எளிமையான ஆனால் விளைவான முறையில் கங்கை நீரால் ஆராதனை செய்யப்படுகிறார்.
திருமால் ஆகிய வாமன தேவர், தமது திருவடிகளில் கங்கையை ஏற்றுக் கொண்டார்; அந்த புனித நீர் பின்னர் சிவபெருமானின் தலையில் விழுந்தது.
அதேபோல், நியூ வ்ரஜ தாமத்திலும், ராதா-ஷ்யாமசுந்தரரின் அபிஷேகத் திருநீரால் (சரணாமிர்தம்) கோபீஸ்வரருக்கு அன்போடு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தியுடன் பூஜிக்கப்படுகிறது.

