விக்ரஹ வழிபாடு செய்யும் முறை

ஆரம்ப நிலையில் உள்ள பக்தர்கள் கடைபிடிக்கும் வகையில் எளிய முறையில் முழுமையான விக்ரஹ வழிபாட்டு முறை.

ஒருவரின் தினசரி வழக்கத்திற்கு எந்தவிதமான சிரமமும் இன்றி விக்ரஹ வழிபாட்டை முறையாக செய்ய உதவும் ஒவ்வொரு சேவையின் விவரங்களும் வழிமுறைகளும்.

காலையில் விக்ரஹங்களை எழுப்புதல்

  • காலையில் எழுந்து குளித்துவிட்டு சுவாமிக்கு நமஸ்காரம் செய்யவும்.
  • ஆசமனம் செய்யவும்
  • குரு பிரணாம்

ஸ்ரீல பிரபுபாதர் பிரணிதி

நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்தாய பூ-தலே

ஸ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே

நமஸ்தே ஸரஸ்வதி தேவே கௌர-வாணி-பிரசாரிணே

நிர்விசேஷ-ஷுன்யவாதி-பாஸ்சாத்ய-தேஷ-தாரிணே

  • பூஜையறையில் விளக்குகளை ஏற்றி விட்டு, மணியை ஒலிக்கவும்
  • பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எழுப்பிய பிறகு மற்ற தெய்வங்களை எழுப்பவும்.
  • புகைப்படங்களை சுத்தம் செய்யவதெற்கென்றே தனி துணியைப் பயன்படுத்தவும்.
  • ஆச்சமனா பாத்திரத்திலிருந்து சிறிது தண்ணீர் எடுத்து துணியினை ஈரப்படுத்தி புகைப்படங்களை சுத்தம் செய்யவும்

ஆரத்தி செய்யும் முறை

ஒரு மேஜையில் ஆரத்தி செய்வதற்குத் தேவையான பொருட்களை தயார் நிலையில் வைக்கவும். ஆச்சமனா பாத்திரத்திலிருந்து சிறிது நீர் தெளித்து ஆரத்திக்குத் தேவையான பொருட்களை தூய்மைப்படுத்திக் கொள்ளவும்.

  • மூன்று அகர்பத்திகள
  • ஒரு திரியுடன் கூடிய நெய் தீபம்
  • மலர்கள் ஒரு சிறிய தட்டில்
  • கவனத்தை விக்ரஹத்திடம் பதித்து, இடது கையால் மணி அடித்துக் கொண்டே, ஒவ்வொன்றாக இடமிருந்து வலமாக வட்டமாக ஏழு முறை சுற்றி ஆர்த்தி காட்ட வேண்டும்
  • பிறகு நமஸ்காரம் செய்யவும்.

குறிப்பு: ஆரத்தி சேவையின் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மஹாமந்திர கீர்த்தனம் செய்வது சிறப்பு.

பகவானுக்கு நைவேத்தியம் செய்யும் முறை

  • பகவானுக்கென்று ஒரு தட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவையும், புதியதாக தண்ணீரை ஒரு டம்ப்ளரிலும் வைக்கவும். (இந்தத் தட்டும் டம்ப்ளரும் பகவானுக்கு நைவேத்தியம் வைப்பதற்கென்றே பயன்படுத்தப்பட வேண்டும்)
  • சைவ உணவாக இருக்கவேண்டும். (வெங்காயம், பூண்டு தவிர்த்து) ஒவ்வொரு உணவிலும், நீரிலும் துளசி இலை சேர்க்கவும்.
  • உணவு வைக்குமிடத்தைச் சிறிது நீரைத் தெளித்து துணியால் துடைக்கவும். உணவு(போகா) மற்றும் நீர் வைத்து விட்டு, ஆச்சமனா பாத்திரத்திலிருந்து சிறிது தண்ணீரை நைவேத்திய உணவில் தெளிக்கவும். சுவாமியை(வாய்ப்பு இருப்பின்) திரையிட்டு மூடவும்
  • நீங்கள் ஒரு பாயில் அமர்ந்து, மணி அடித்துக்கொண்டே பின்வரும் மந்திரங்களை 3 முறை உச்சரிக்கவும்.

நைவேத்தியம் செய்யும்பொழுது கூறவேண்டிய மந்திரங்கள்

ஸ்ரீல பிரபுபாதா பிரணாம மந்திரம்

நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்தாய பூ-தலே

ஸ்ரீமதே பக்திவேதாந்த-ஸ்வாமின் இதி நாமினே

நமஸ்தே ஸரஸ்வதி தேவே கௌர-வாணி-பிரசாரிணே

நிர்விசேஷ-ஷுன்யவாதி- பாஸ்சாத்ய-தேஷ-தாரிணே

ஸ்ரீ கெளரங்க பிரணாம மந்திரம்

நமோ மஹா-வதான்யாய

க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே

க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய

நாம்னே கௌர-த்விஷே நம:

ஸ்ரீ கிருஷ்ண பலராம பிரணாம மந்திரம்

நமோ பிரம்மன் ய தேவாய

கோ பிராமண ஹிதாய ச

ஜகத் தி தாய கிருஷ்ணாய

கோவிந்தாய நமோ நமஹ

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

5 – 10 நிமிடங்கள் காத்திருக்கவும் (ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஒரு மாலை ஜபிக்கவும்) பிறகு, மணியை ஒலித்துவிட்டு, நமஸ்காரம் செய்து, பிரசாத தட்டை எடுத்து பிரசாதத்தை வீட்டில் உள்ள மற்ற உணவுடன்  சேர்க்கவும்.  உடனே பிரசாதம் வைத்த இடத்தை நீரால் சுத்தம் செய்யவும்

குறிப்பு: பிரணாம் மந்திரங்கள் நம்முடைய தமிழ் கீதா யு ட்யூப் சேனலில் உள்ளது.  https://www.youtube.com/watch?v=fOvA4lnQ1Xc

விக்ரஹங்களை ஓய்வெடுக்கச் செய்யும் வழிமுறை

  • இரவு அர்ப்பணித்த அனைத்து மலர்களையும் அகற்றவும்.
  • ஆச்சமனா பாத்திரத்திலிருந்து சிறிது தண்ணீர் எடுத்து துணியினை ஈரப்படுத்திப் புகைப்படங்களை சுத்தம் செய்யவும்.
  • சேவைகளின் போது அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக்  கோரவும்.
  • பகவானை ஓய்வெடுக்கக் கோரி பிரார்த்தனை செய்துவிட்டு, விளக்குகளை அணைத்துவிட்டு, நமஸ்காரம் செய்து பூஜையறையை மூடிவைக்கவும்

  **  ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare