அத்தியாயம் – 20
பூரு வம்சம்
பதம் 9.20.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
பூரோர் வம்சம் ப்ரவக்ஷ்யாமி யத்ர ஜாதோ ‘ஸி பாரத
யத்ர ராஜர்ஷயோ வம்ஸ்யா ப்ரஹ்ம-வம்ஸ்யாஸ் ச ஜக்ஞிரே
ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பூரோ: வம்சம்—பூரு மகாராஜனின் வம்சத்தை; ப்ரவக்ஷ்யாமி—இப்பொழுது நான் விவரிக்கிறேன்; யத்ர—எந்த வம்சத்தில்; ஜாத: அஸி—நீர் பிறந்தீரோ; பாரத—பாரத மகாராஜனின் வம்சத்தில் வந்த பரீட்சித்து மகாராஜனே; யத்ர—எந்த வம்சத்தில்; ராஜ ரிஷய:—எல்லா அரசர்களும் புனிதர்களாக இருந்தனரோ: வம்ஸ்யா:—ஒன்றன் பின் ஒன்றாக; ப்ரஹ்ம-வம்ஸ்யா:—பல பிராமண வம்சங்களும்; ச—கூட; ஜக்ஞிரே—வளர்ந்தனவோ.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரத மகாராஜனின் வம்சத்தில் வந்த பரீட்சித்து மகாராஜனே, எந்த வம்சத்தில் நீர் பிறந்தீரோ, எதில் பல புனித அரசர்கள் தோன்றினரோ, எதிலிருந்து பல பிராமண வம்சங்கள் துவங்கினவோ, அந்த பூரு வம்சத்தை இப்பொழுது நான் விவரிக்கிறேன்.
பதம் 9.20.2
ஜனமேஜயோ ஹி அபூத் பூரோ: ப்ரசின்வாம்ஸ் தத்-ஸுதஸ் தத:
ப்ரவீரோ ‘த மனுஷ்யுர் வை தஸ்மாச் சாரூபதோ ‘பவத்
ஜனமேஜய:—ஜனமேஜய மகாராஜன்; ஹி—உண்மையில்; அபூத்—தோன்றினார்; பூரோ:—பூருவிலிருந்து; ப்ரசின்வான்—பிரசின்வான்; தத்—அவரது (ஜனமேஜயனின்); ஸுத:—மகன்; தத:—அவரிலிருந்து (பிரசின்வானிலிருந்து); ப்ரவீர:—பிரவீரன்; அத—அதன்பிறகு; மனுஷ்யு:—பிரவீரரரின் மகன் மனுஷ்யு; வை—உண்மையில்; தஸ்மாத்—அவரிலிருந்து (மனுஷ்யுவிலிருந்து); சாருபத:—சாருபத மகாராஜன்; அபவத்—தோன்றினார்.
இந்த பூரு வம்சத்திலிருந்து ஜனமேஜய மகாராஜன் பிறந்தார். ஜனமேஜயனின் மகன் பிரசின்வான். அவரது மகன் பிரவீரன். அதன் பிறகு, பிரவீரனின் மகன் மனுஷ்யு. மனுஷ்யுவிலிருந்து சாருபதன் என்ற மகன் வந்தார்.
பதம் 9.20.3
தஸ்ய ஸுத்யுர் அபூத் புத்ரஸ் தஸ்மாத் பஹுகவஸ் தத:
ஸம்யாதிஸ் தஸ்யாஹம்யாதீ ரௌத்ராஸ்வஸ் தத்-ஸுத: ஸ்ம்ருத:
தஸ்ய—அவருடைய (சாருபதனுடைய); ஸுத்யு:—சுத்யு என்ற பெயருடைய; அபூத்—தோன்றினார்; புத்ர:—ஒரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (சுத்யுவிலிருந்து); பஹுகவ:—பஹுகவன் என்ற ஒரு மகன்; தத:—அவரிலிருந்து; ஸம்யாதி:—சம்யாதி என்ற ஒரு மகன்; தஸ்ய—அவரிலிருந்து; அஹம்யாதி:—அஹம்யாதி என்ற ஒரு மகன்; ரௌத்ராஸ்வ:—ரௌத்ராஸ்வன்; தத்-ஸுத:—அவரது மகன்; ஸ்ம்ருத:—புகழ்பெற்ற.
சாருபதனின் மகன் சுத்யு. சுத்யுவின் மகன் பஹுகவன். பஹுகவனின் மகன் சம்யாதி. சம்யாதியிலிருந்து அஹம்யாதி என்ற ஒரு மகன் வந்தார். அவரிலிருந்து ரௌத்ராஸ்வன் பிறந்தார்.
பதங்கள் 9.20.4 – 9.20.5
ரிதேயுஸ் தஸ்ய கக்ஷேயு: ஸ்தண்டிலேயு க்ருதேயுக:
ஜலேயு: ஸன்னதேயுஸ் ச தர்ம-ஸத்ய-வ்ரதேயவ:
தசைதே ‘ப்ஸரஸ: புத்ரா வனேயுஸ் சாவம: ஸ்ம்ருத:
க்ருதாச்யாம் இந்ரியாணீவ முக்யஸ்ய ஜகத்-ஆத்மன:
ரிதேயு:—ரிதேயு; தஸ்ய—அவருடைய (ரௌத்ராஸ்வனுடைய); கக்ஷேயு:—கக்ஷேயு; ஸதண்டிலேயு:—ஸ்தண்டிலேயு; க்ருதேயுக:—கிருதேயுகன்; ஜலேயு:—ஜலேயு; ஸன்னதேயு:—சன்னதேயு; ச—கூட; தர்ம—தர்மேயு; ஸத்ய—சத்தேயு; வ்ரதேயவ—மற்றும் விரதேயு; தச—பத்து; எதே—அவர்களனைவரும்; அப்ஸரஸ:—ஓர் அப்ஸரஸ்ஸிலிருந்து பிறந்த; புத்ரா:—மகன்கள்; வனேயு:—வனேயு என்ற பெயருடைய மகன்; ச—மேலும்; அவம:—இளையவன்; ஸ்ம்ருத:—எனப்படும்; க்ருதாச்யாம்—கிருதாசீ; இந்ரியாணி இவ—பத்து புலன்களைப் போலவே; முக்யஸ்ய—உயிர்ச் சக்தியின்; ஜகத்-ஆத்மன:—முழு பிரபஞ்சத்திற்கும் உயிர்ச் சக்தியான.
ரௌத்ராஸ்வனுக்கு ரிதேயு, கக்ஷேயு, ஸ்தண்டிலேயு, கிருதேயுகன், ஜலேயு, சன்னதேயு, தர்மேயு, சத்யேயு, விரதேயு மற்றும் வனேயு என்ற மகன்கள் இருந்தனர் வனேயு இளையவர். பிரபஞ்ச உயிரிலிருந்து உற்பத்தியாகும் பத்து புலன்களைப் போலவே, ரெள்த்ராஸ்வரின் இப்பத்து மகன்களும் அவரது முழு கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட்டனர். அவர்களனைவரும் கிருதாசி என்ற பெயருடைய அப்ஸரஸ்ஸிற்குப் பிறந்தவர்களாவர்.
பதம் 9.20.6
ருதேயோ ரந்தினாவோ ‘பூத் த்ரயஸ் தஸ்யாத்மஜா ந்ருப ஸுமதிர் த்ருவோ ‘ப்ரதிரத: கண்வோ ‘ப்ரதிரதாத்மஜ:
ருதேயோ:—ரிதேயு என்ற மகனிலிருந்து; ரந்திநவ:—ரந்திநவர் என்ற மகன்; அபூத்—தோன்றினார்; த்ரய:—மூன்று; தஸ்ய—அவரது (ரந்திதேவரின்); ஆத்மஜ:—மகன்கள்; ந்ருப—அரசே; ஸுமதி:—சுமதி; த்ருவ:—துருவன்; அப்ரதிரத:—அப்ரதிரதன்; கண்வ:—கண்வன்; அப்ரதிரத-ஆத்மஜ:—அப்ரதிரதனின் மகன்.
ரிதேயுவிற்கு ரந்திதேவர் என்றொரு மகன் இருந்தார். அவருக்கு சுமதி, துருவன், அப்ரதிரதன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அப்ரதிரதனுக்கு கண்வன் என்ற ஒரே ஒரு மகன் இருந்தார்.
பதம் 9.20.7
தஸ்ய மேதாதிதிஸ் தஸ்மாத் ப்ரஸ்கன்னாத்யா த்விஜாதய:
புத்ரோ ‘பூத் ஸுமதே ரேபிர் துஷ்மந்தஸ் தத்-ஸுதோ மத:
தஸ்ய—அவருடைய (கண்வருடைய); மேதாதிதி:—மேதாதிதி என்றொரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (மேதாதிதியிலிருந்து); ப்ரஸ்கன்ன-ஆத்யா:—பிரஸ்கன்னன் முதலான மகன்கள்; த்விஜாதய:—எல்லோரும் பிராமணர்கள்; புத்ர:—ஒரு மகன்; அபூத்—இருந்த; ஸுமதே:—சுமதியிலிருந்து; ரேபி:—ரேபி; துஷ்மந்த—துஷ்மந்த மகாராஜன்; தத்-ஸுத:—ரேபியின் மகனான; மத:—பிரபலமானவராவார்.
கண்வரின் மகன் மேதாதிதி, பிரஸ்கன்னன் முதலான அவருடைய மகன்கள் எல்லோரும் பிராமணர்களாவர். ரந்திநாவரின் மகனான சுமதிக்கு, ரேபி, என்றொரு மகன் இருந்தார். துஷ்மந்த மகாராஜன் ரேபியின் மகன் என்று பிரசித்தி பெற்றவர்.
பதங்கள் 9.20.8 – 9.20.9
துஷ்மந்தோ ம்ருகயாம் யாத: கண்வாஸ்ரம-பதம் கத:
தத்ராஸீனம் ஸ்வ-ப்ரபயா மண்டயந்தீம் ரமாம் இவ
விலோக்ய ஸத்யோ முமுஹே தேவ-மாயாம் இவ ஸ்த்ரியம்
பபாஷே தாம் வராரோஹாம் படை: கதிபயைர் வ்ருத:
துஷ்மந்த:—துஷ்மந்த மகாராஜன்; ம்ருகயாம் யாத:—வேட்டையாடச் சென்ற போது; கண்வ-ஆஸ்ரம-பதம்—கண்வரின் ஆசிரமத்திற்கு; கத:—அவர் வந்தார்; தத்ர—அங்கு; ஆஸீனாம்—ஒரு பெண் அமர்ந்திருந்தாள்; ஸ்வ-ப்ரபயா—அவளது அழகினால்; மண்டயந்தீம்—பிரகாசித்துக் கொண்டு; ரமாம் இவ—ரமாதேவி (அதிர்ஷ்ட தேவதை) போல்; விலோக்ய—கண்டதும்; ஸத்ய:—உடனே; முமுஹே—அவர் கவரப்பட்டார்; தேவ-மாயாம் இவ—பகவானுடைய மாயா சக்தியைப் போலவே; ஸ்த்ரியம்—ஓர் அழகிய பெண்; பபாஷே—அவர் கூறினார்; தாம்—அவளை; வர-ஆரோஹாம்—அழகுப் பெண்களிலேயே சிறந்தவள்; படை:—படை வீரர்களால்; கதிபயை:—ஒரு சில; வ்ருத:—சூழப்பட்டு.
ஒரு சமயம் துஷ்மந்த மகாராஜன் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது, மிகவும் களைத்துப் போய் கண்வ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு ரமா தேவியைப் போல் மிகவும் அழகான ஒரு பெண்ணைக் கண்டார். அங்கு அவள் தன் பிரபையால் முழு ஆசிரமத்தையும் பிரகாசப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். இயல்பாகவே அவளது அழகால் கவரப்பட்ட அரசர், சில படை வீரர்களால் சூழப்பட்டபடி அவளிடம் சென்றார்.
பதம் 9.20.10
தத்-தர்சன-ப்ரமுதித: ஸன்னிவ்ருத்த-பரிஸ்ரம:
பப்ரச்ச காம-ஸந்தப்த: ப்ரஹஸஞ் ஸ்லக்ஷ்ணயா கிரா
தத்-தர்சன-ப்ரமுதித:—அந்த அழகிய பெண்ணைக் கண்டு புத்துணர்வு பெற்றவராய்; ஸன்னிவ்ருத்த-பரிஸ்ரம:—வேட்டையாடிய களைப்பு நீங்கி; பப்ரச்ச—அவர் அவளிடம் வினவினார்; காம-ஸந்தப்த:—காமக் கிளர்ச்சியடைந்து; ப்ரஹஸன்—பரிகாசமாக; ஸ்லக்ஷ்ணாய—மிகவும் அழகிய, இனிய; கிரா—வார்த்தைகளால்.
அந்த அழகிய பெண்ணைக் கண்ட அரசர், வேட்டையாடிய களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்றவரானார். காம வேட்கையின் காரணத்தால் அவளால் மிகவும் கவரப்பட்ட அவர், பரிகாசமாக பின்வருமாறு அவளிடம் வினவினார்.
பதம் 9.20.11
கா த்வம் கமல-பத்ராக்ஷி கஸ்யாஸி ஹ்ருதயந்-கமே
கிம் ஸ்விச் சிகீர்ஷிதம தத்ர பவத்யா நிர்ஜனே வனே
கா—யார்; த்வம்—நீ; கமல-பத்ர-அக்ஷி—தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய அழகுப் பெண்ணே; கஸ்ய அஸி—உன் உறவினர் யார்; ஹ்ருதயம்-கமே—இதயத்தை மகிழ்ச்சிப்படுத்தும் பேரழகியே; கிம் ஸ்வித்—என்ன வேலையை; சிகீர்ஷிதம்—நினைத்திருக்கிறாய்; தத்ர—அங்கு; பவத்யா:—உன்னால்; நிர்ஜனே—தனிமையான; வனே—வனத்தில்.
தாமரைக் கண்களையுடைய அழகியே, நீ யார்? நீ யாருடைய மகள்? தனிமையான இந்த வனத்தில் உனக்கென்ன வேலை? நீ ஏன் இங்கு தங்கியிருக்கிறாய்?
பதம் 9.20.12
வ்யக்தம் ராஜன்ய-தனயம் வேத்மி அஹம் த்வாம் ஸுமத்யமே
ந ஹி சேத: பௌரவாணாம் அதர்மே ரமதே க்வசித்
வ்யக்தம்—என்று தெரிகிறது; ராஜன்ய-தனயாம்—ஒரு க்ஷத்திரியரின் மகள் என்பதை; வேத்மி—உணர முடியும்; அஹம்—நான்; த்வாம்—நீ: ஸு-மத்யமே—பேரழகியே; ந—இல்லை; ஹி—உண்மையில்; சேத—மனம்; பௌரவாணாம்—பூரு வம்சத்தில் பிறந்தவர்களின்; அதர்மே—அதர்மமான முறையில்; ரமதே—அனுபவிப்பது; க்வசித்—எச்சமயத்திலும்.
ஓ பேரழகியே, நீ ஒரு க்ஷத்திரியரின் மகளாக இருக்க வேண்டுமென்று என் மனத்திற்குத் தோன்றுகிறது. நான் பூரு வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதால், என் மனம் எதையும் அதர்மமான முறையில் அனுபவிக்க முயன்றதேயில்லை.
பதம் 9.20.13
ஸ்ரீ-சகுந்தலோவாச
விஸ்வாமித்ராத்மஜைவாஹம் த்யக்தா மேனகயா வனே
வேதைதத் பகவான் கண்வோ வீர கிம் கரவாம தே
ஸ்ரீ-சகுந்தலா உவாச—ஸ்ரீ சகுந்தலை பதிலளித்தாள்; விஸ்வாமித்ர-ஆத்மஜா—விஸ்வாமித்திரரின் மகள்; ஏவ—உண்மையில்; அஹம்—நான்; த்யக்தா—விடப்பட்டேன்; மேனகயா—மேனகையால்; வனே—வனத்தில்; வேத—அறிவார்; ஏதத்—இச்சம்பவங்களை எல்லாம்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த அம்முனிவர்; கண்வ:—கண்வமுனி; வீர—வீரரே; கிம்—என்ன; கரவாம—நான் செய்ய முடியும்; தே—உங்களுக்கு.
சகுந்தலை கூறினாள்: நான் விஸ்வாமித்திரரின் மகளாவேன். என் தாய் மேனகை என்னை வனத்தில் விட்டுச் சென்றுவிட்டாள். வீரரே, மிகவும் சக்தி வாய்ந்த கண்வமுனிவர் இதைப்பற்றிய அனைத்தையும் அறிவார். இப்பொழுது நான் உங்களுக்கு எவ்வாறு சேவை செய்யக்கூடும் என்பதைக் கூறுங்கள்.
பதம் 9.20.14
ஆஸ்யதாம் ஹி அரவிந்தாக்ஷ க்ருஹ்யதாம் அர்ஹணம் ச ந:
புஜ்யதாம் ஸந்தி நீவாரா உஷ்யதாம் யதி ரோசதே
ஆஸ்யதாம்—தயவுகூர்ந்து இங்கு வந்து அமர்ந்து; ஹி—உண்மையில்; அரவிந்த-அக்ஷ—தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய மாவீரரே; க்ருஹ்யதாம்—அன்புடன் ஏற்றுக் கொள்ளுங்கள்; அர்ஹணம்—எளிய உபசரணையை; ச—கூட; ந:—எங்கள்; புஜ்யதாம்—தயவு செய்து சாப்பிடுங்கள்; ஸந்தி—மிஞ்சியிருப்பதை; நீவாரா:—நீவாரா சாதத்தை; உஷ்யதாம்—இங்கு தங்கலாம்; யதிரோசதே—நீங்கள் விரும்பினால்.
தாமரை இதழ்கள் போன்ற கண்களையுடைய அரசே, தயவு செய்து இங்கு வந்து அமர்ந்து எங்களால் அளிக்க முடிந்த உபசரணையை ஏற்றுக் கொள்ளுங்கள். எங்களிடம் “நீவாரா” சாதம் இருக்கிறது. அன்புடன் இதை ஏற்றுக் கொள்வீராக. மேலும் நீங்கள் விரும்பினால், தயக்கமின்றி இங்கு தங்கலாம்.
பதம் 9.20.15
ஸ்ரீ-துஷ்மந்த உவாச
உபபன்னம் இதம் ஸுப்ரு ஜாதாயா: குசிகான்வயே ஸ்வயம் ஹி
வ்ருணுதே ராஜ்ஞாம் கன்யகா: சத்ருசம் வரம்
ஸ்ரீ துஷ்மந்த:உவாச—துஷ்மந்த மகாராஜன் கூறினார்; உபபன்னம்—உன் அந்தஸ்திற்கு ஏற்றதாக உள்ளது; இதம்—இந்த; ஸு-ப்ரு—அழகிய புருவங்களுடைய சகுந்தலையே; ஜாதாயா:—உன் பிறப்பின் காரணத்தால்; குசிக-அன்வயே—விஸ்வாமித்திரரின் குடும்பத்தில்; ஸ்வயம்—சுயமாக; ஹி—நிச்சயம்; வ்ருணுதே—தேர்ந்தெடுக்கின்றனர்; ராஜ்ஞாம்—அரசகுடும்பத்து; கன்யகா:—கன்னிப் பெண்கள்; ஸத்ருசம்—சம நிலையிலுள்ள; வரம்—கணவன்களை.
துஷ்மந்த மகாராஜன் பதில் கூறினார்: அழகிய புருவங்களுடைய சகுந்தலையே, நீ மாமுனிவரான விஸ்வாமித்திரரின் குடும்பத்தில் பிறந்திருக்கிறாய். உன்னுடைய வரவேற்பு உன் குலப் பெருமைக்குத் தகுதியுடையதாக உள்ளது. இதைத்தவிர, அரச குமாரிகள் பொதுவாக தங்களுடைய கணவன்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் வழக்கம்.
பதம் 9.20.16
ஓம் இதி உக்தே யதா-தர்மம் உபயேமே சகுந்தலாம்
காந்தர்வ-விதினா ராஜா தேச-கால-விதானவித்
ஓம் இதி உத்தே—திருமணத்திற்குச் சாட்சியாக பரமபுருஷரை எழுந்தருளச் செய்யும் வேத பிரணவத்தை உச்சரித்து; யதா-தர்மம்—சமய விதிகளுக்கேற்ப (ஏனெனில், சாதாரண திருமணத்தில்கூட நாராயணரே சாட்சியாகிறார்); உபயேமே—அவர் மணந்தார்; ஸகுந்தலாம்—சகுந்தலை என்ற பெண்ணை; காந்தர்வ-விதினா—தர்மத்திலிருந்து விலகாமல்; காந்தர்வ—விதிமுறைப்படி; ராஜா—துஷ்மந்த மகாராஜன்; தேச-கால-விதான-வித்—காலம், நிலை, நோக்கம் ஆகியவற்றிற்கேற்ப கடமையை முற்றிலும் அறிந்திருந்த.
துஷ்மந்த மகாராஜனின் திருமணப் பேச்சிற்கு பதிலாக சகுந்தலை மௌனம் சாதித்ததால், சம்மதம் பூர்த்தியடைந்தது. பிறகு, திருமண விதிகளை அறிந்திருந்த அந்த அரசர், கந்தர்வர்களுக்கு இடையில் நடைபெறும் திருமணச் சடங்கிற்கேற்ப, வேத பிரணவத்தை (ஓம்காரத்தை) உச்சரித்து உடனே அவளை மணந்து கொண்டார்.
பதம் 9.20.17
அமோக-வீர்யோ ராஜர்ஷிர் மஹிஷ்யாம் வீர்யம் ஆததே
ஸ்வோ-பூதே ஸ்வ-புரம் யாத: காலேனாஸூத ஸா ஸுதம்
அமோக-விர்ய:—தோல்வியில்லாமல் விந்தைப் பாய்ச்சக் கூடியவர், அல்லது ஒரு குழந்தையை நிச்சயமாகப் பெற வேண்டியவர்; ராஜ-ரிஷி:—ராஜரிஷியான துஷ்மந்தர்; மஹிஷ்யாம்—ராணியான சகுந்தலைக்குள் (திருமணத்திற்குப் பிறகு சகுந்தலை ராணியானாள்); வீர்யம்—விந்தை; ஆததே—வைத்தார்; ஸ்வ:-பூதே—காலையில்; ஸ்வ-புரம்—அவரது சொந்த இடத்திற்கு; யாத:—திரும்பிச் சென்றார்; காலேன—உரிய காலத்தில்; அஸூத—பெற்றெடுத்தாள்; ஸா—அவள் (சகுந்தலை); ஸுதம்—ஒரு மகனை.
பயனின்றி தன் வீரியத்தைச் செலவிடாத துஷ்மந்த மகாராஜன், இரவில் தன் ராணியான சகுந்தலையின் கர்பத்தில் தன் விந்துவைப் பாய்ச்சினார். காலையில் அவர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார். அதன் பிறகு உரிய காலத்தில் சகுந்தலை ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
பதம் 9.20.18
கண்வ: குமாரஸ்ய வனே சக்ரே ஸமுசிதா: க்ரியா:
பத்வா ம்ருகேந்ரம் தரஸா க்ரீடதி ஸ்ம ஸ பாலக:
கண்வ:—கண்வ முனிவர்; குமாரஸ்ய—சகுந்தலைக்குப் பிறந்த மகனின்; வனே—வனத்தில்; சக்ரே—செய்தார்; ஸமுசிதா:—விதிக்கப்பட்ட; க்ரியா:—வேதக் கிரியைகளை; பத்வா—பிடித்து; ம்ருக-இந்ரம்—ஒரு சிங்கத்தை; தரஸா—பலவந்தமாக; க்ரீடதி—விளையாடும்; ஸ்ம—முன்பு; ஸ:—அவன்; பாலக:—அச்சிறுவன்.
அந்த வனத்தில் கண்வமுனிவர், புதிதாகப் பிறந்த குழந்தைக்குச் செய்ய வேண்டிய வேதச் சடங்குகளையெல்லாம் செய்தார். பின்னர் அச்சிறுவன் ஒரு சிங்கத்தைப் பிடித்து அதனுடன் விளையாடும் அளவிற்கு மிகுந்த சக்திசாலியாக மாறினான்.
பதம் 9.20.19
தம் துரத்யய-விக்ராந்தம் ஆதாய பரமதோத்தமா
ஹரேர் அம்சாம்ச-ஸம்பூதம் பர்துர் அந்திகம் ஆகமத்
தம்—அவரை; துரத்யய-விக்ராந்தம்—ஜெயிக்க முடியாத பலமுடையவர்; ஆதாய—அவளுடன் அழைத்துக்கொண்டு; ப்ரமதா-உத்தமா—மங்கையர் திலகமான சகுந்தலை; ஹரே:—பகவானின்; அம்ச-அம்ச-ஸம்பூதம்—ஓர் அம்சத்தின் அம்சமுமான; பர்து: அந்திகம்—அவளது கணவரை; ஆகமத்—அணுகினாள்.
அழகிய பெண்களிலேயே மிகச் சிறந்தவளான சகுந்தலை, ஜெயிக்க முடியாத பலமுடையவரும், பரமபுருஷரின் ஓர் அம்சமுமான தன் மகனுடன் தன் கணவரான துஷ்மந்தரை அணுகினாள்.
பதம் 9.20.20
யதா ந ஜக்ருஹே ராஜா பார்யா-புத்ராவ் அனிந்திதௌ
ஸ்ருண்வதாம் ஸர்வ-பூதானாம் கே வாக் ஆஹாசரீரிணீ
யதா—அப்பொழுது: ந—இல்லை; ஜக்குஹே—ஏற்றுக்கொள்ள: ராஜா—அந்த அரசர் (துஷ்மந்தர்); பார்யா-புத்ரௌ—அவரது உண்மையான மகனையும், மனைவியையும்; அனிந்திதௌ—வெறுக்கத்தகாத, எவராலும் குற்றம் சுமத்தப்படாத; ஸ்ருண்வதாம்—கேட்கும் பொழுது; ஸர்வ-பூதானாம்—எல்லோரும்; கே—ஆகாயத்தில்; வாக்—ஒரு ஓசை; ஆஹ—கூறியது; அசரீரி—உடலற்ற.
அந்த அரசர் குற்றமற்றவர்களான அவரது மனைவியையும் மகனையும் ஏற்க மறுத்துவிட்டார். அப்பொழுது, அங்கிருந்த அனைவரும் கேட்கும்படியாக ஓர் அசரீரி ஆகாயத்தில் ஒலித்தது.
பதம் 9.20.21
மாதா பஸ்த்ரா பிது: புத்ரோ யேன ஜாத: ஸ ஏவ: ஸ:
பரஸ்வ புத்ரம் துஷ்மந்த மாவமம்ஸ்தா: சகுந்தலாம்
மாதா—தாய்; பஸ்த்ரா—காற்று நிரம்பிய ஒரு துருத்தியைப் போன்றவள்; பிது:—தந்தையின்; புத்ர:—மகன்; யேன—யாரால்; ஜாத:—ஒருவன் பிறக்கிறான்; ஸ:—அந்த தந்தை; ஏவ—உண்மையில்; ஸ:—அந்த மகனை; பரஸ்வ—பராமரித்துவா; புத்ரம்—உனது மகனை; துஷ்மந்த—துஷ்மந்த மகாராஜனே; மா—வேண்டாம்; அவமம்ஸ்தா:—அவமதிக்க; சகுந்தலாம்—சகுந்தலையை.
அந்த அசரீரி கூறியது: துஷ்மந்த மகாராஜனே, ஒரு மகன் உண்மையில் அவனது தந்தைக்குச் சொந்தமானவன். ஆனால் அந்த தாயோ, ஒரு துருத்தியின் பையைப் போன்ற ஒரு பை மட்டுமே ஆவாள். தந்தையே மகனாகப் பிறக்கிறான் என்பது வேத வாக்காகும். எனவே சகுந்தலையை அவமதிக்காமல் உன் சொந்த மகனை நீ பராமரிக்க வேண்டும்.
பதம் 9.20.22
ரேதோ-தா: புத்ரோ நயதி நரதேவ யம-க்ஷயாத்
த்வம் சாஸ்ய தாதா கர்பஸ்ய ஸத்யம் ஆஹ சகுந்தலா
ரேத:-தா:—விந்தைப் பாய்ச்சுபவன்; புத்ர:—அந்த மகன்; நயதி—காப்பாற்றுகிறான்; நர-தேவ—அரசே (துஷ்மந்த மகாராஜனே); யம-க்ஷயாத்—யமராஜனின் தண்டனையிலிருந்து அல்லது பிடியிலிருந்து; த்வம்—நீ; ச—மேலும்; அஸ்ய—இச்சிறுவனை; தாதா—படைத்தவன்; கர்பஸ்ய—கர்பத்தின்; ஸத்யம்—உண்மையையே; ஆஹ—கூறுகிறாள்; சகுந்தலா—உன் மனைவியான சகுந்தலை.
துஷ்மந்த மகாராஜனே, எவன் விந்தைப் பாய்ச்சுகிறானோ அவனே உண்மையான தந்தையாவான். அவனுடைய மகன் அவனை யமராஜனின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான். இச்சிறுவனை உண்டு பண்ணியவன் உண்மையில் நீதான். சகுந்தலை உண்மையைத்தான் பேசுகிறாள்.
பதம் 9.20.23
பிதரி உபரதே ஸோ ‘பி சக்ரவர்த்தீ மஹா-யசா:
மஹிமா கீயதே தஸ்ய ஹரேர் அம்ச-புவோ புவி
பிதரி—அவரது தந்தை; உபரதே—இறந்ததும்; ஸ:—அந்த அரசரின் மகன்; அபி—கூட; சக்ரவர்த்தீ—சக்கரவர்த்தியாக; மஹா-யசா:—மிகவும் புகழ் பெற்ற; மஹிமா—மகிமைகள்; கீயதே—பாடப்படுகின்றன; தஸ்ய—அவரது; ஹரே:—பரமபுருஷரின்; அம்ச-புவ:—ஓர் அம்சமாவார்; புவி—இவ்வுலகில்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: துஷ்மந்த மகாராஜன் மண்ணுலகை விட்டுப் பிரிந்ததும், அவரது மகன் ஏழு தீவுகளுக்கும் உரிமையாளராக, உலகச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார். அவர் இவ்வுலகில் பரமபுருஷரின் ஓர் அம்சமாகக் குறிப்பிடப்படுகிறார்.
பதங்கள் 9.20.24 – 9.20.26
சக்ரம் தக்ஷிண-ஹஸ்தே ‘ஸ்ய பத்ம-கோசோ ‘ஸ்ய பாதயோ:
ஈஜே மஹாபிஷகேண ஸோ ‘பிஷிக்தோ ‘திராட் விபு:
பஞ்ச-பஞ்சாசதா மேத்யைர் கங்காயாம் அனு வாஜிபி:
மாமதேயம் புரோதாய யமுனாம் அனு ச ப்ரபு:
அஷ்ட-ஸப்ததி-மேத்யாஸ்வான் பபந்த ப்ரததத் வஸு
பரதஸ்ய ஹி தௌஷ்மந்தேர் அக்னி: சாசீ-குணே சித:
ஸஹஸ்ரம் பத்வஸோ யஸ்மின் ப்ராஹ்மணா கா விபேஜிரே
சக்ரம்—கிருஷ்ணருடைய சக்கரத்தின் அடையாளம்; தக்ஷிண-ஹஸ்தே—வலது உள்ளங்கையில்; அஸ்ய—அவருடைய (பரதனுடைய); பத்ம-கோச:—ஒரு தாமரை வட்டத்தின் அடையாளம்; அஸ்ய—அவருடைய; பாதயோ:—உள்ளங்கால்களில்; ஈஜே—பரமபுருஷரை வழிபட்டார்; மஹா-அபிஷேகேண—கோலாகலமான ஓர் அபிஷேகச் சடங்கினால்; ஸ:—அவர் (பரத மகாராஜன்); அபிஷிக்த:—உயர்த்தப்பட்டு; அதிராட்—ஏகச் சக்கரவர்த்தியாக; விபு:—அனைத்திற்கும் எஜமானராக; பஞ்ச-பஞ்சாசதா—ஐம்பத்தைந்து; மேத்யை:—யாகங்களுக்குத் தகுதியான; கங்காயாம் அனு—கங்கையின் முகத்துவாரத்திலிருந்து அதன் உற்பத்தி ஸ்தானம் வரை; வாஜிபி—குதிரைகளால்; மாமதேயம்—மாமுனிவரான பிருகுவை; புரோதாய—முக்கிய புரோகிதராகச் செய்து; யமுனாம்—யமுனைக் கரையில்; அனு—ஒழுங்காக; ச—கூட; ப்ரபு:—உயர்ந்த தலைவரான பரத மகாராஜன்; அஷ்ட-ஸப்ததி—எழுபத்தெட்டு; மேத்ய-அஸ்வான்—யாகத்திற்குத் தகுதியுள்ள குதிரைகளை; பபந்த—அவர் கட்டினார்; ப்ரததத்—அவர் தானம் செய்தார்; வஸு—செய்வதை; பரதஸ்ய—பரத மகாராஜனின்; ஹி—உண்மையில்; தௌஷ்மந்தே:—துஷ்மந்த மகாராஜனின் மகனான; அக்னி:—யாகத்தீயை; சாசீ-குணே—மிகச்சிறந்த ஓரிடத்தில்; சித:—ஸ்தாபித்தார்; ஸஹஸ்ரம்—ஆயிரங்கள்; பத்வச:—ஒரு பத்வம் என்ற எண்ணிக்கையால் (13,084 கொண்டது ஒரு பத்வமாகும்); யஸ்மின்—எந்த யாகங்களில்; ப்ராஹ்மணா:—கூடியிருந்த எல்லா பிராமணர்களும்; கா:—பசுக்களை; விபேஜிரே—அவரவர் பங்கைப் பெற்றனர்.
துஷ்மந்தரின் புத்திரரான பரத மகாராஜனின் வலது உள்ளங்கையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய சக்கரத்தின் அடையாளமும், அவரது உள்ளங்கால்களில் தாமரை வட்டத்தின் அடையாளமும் இருந்தன. மிகச் சிறந்த வேதக் கிரியைகளைச் செய்து பரம புருஷரை வழிபட்டதால் அவர் முழு உலகிற்கும் சக்கரவர்த்தியாகவும், எஜமானராகவும் ஆனார். பிறகு பிருகு முனிவரை புரோகிதராகக் கொண்டு, கங்கையின் முகத்துவாரத்திலிருந்து அதன் உற்பத்தி ஸ்தானம் வரையுள்ள கங்கைக் கரையில் அவர் ஐம்பத்தைந்து அசுவமேத யாகங்களைச் செய்தார். பிரயாகையில் நதிகள் கூடுமிடத்திலிருந்து, உற்பத்தி ஸ்தானம் வரையுள்ள யமுனைக்கரையில் அவர் எழுபத்தெட்டு அசுவமேத யாகங்களைச் செய்தார். அவர் மிகச் சிறந்த ஓரிடத்தில் யாக பீடத்தை அமைத்து, ஏராளமான செல்வத்தை பிராமணர்களுக்கு விநியோகித்தார். அவர் ஆயிரக்கணக்கான பிராமணர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்வம் (13,084) பசுக்களை தானமாகக் கொடுத்தார்.
பதம் 9.20.27
த்ரயஸ்-த்ரிம்சச்-சதம் ஹி அஸ்வான் பத்வா விஸ்மாபயன் ந்ருபான்
தெளஷ்மந்திர் அத்யகான் மாயாம் தேவானாம் குரும் ஆயயௌ
த்ரய:—மூன்று; த்ரிம்சத்—முப்பது; சதம்—நூறு; ஹி—உண்மையில்; அஸ்வான்—குதிரைகளை; பத்வா—யக்ஞத்தில் கைப்பற்றி; விஸ்மாபயன்—ஆச்சரியத்தில் ஆழ்த்தி; ந்ருபான்—மற்றெல்லா அரசர்களையும்; தௌஷ்மந்தி:—துஷ்மந்த மகாராஜனின் மகன்; அத்யகாத்—மிஞ்சியது; மாயாம்—பௌதிக ஐசுவரியங்கள்; தேவானாம்—தேவர்களின்; குரும்—பரம ஆன்மீக குருவை; ஆயயௌ—அடைந்து.
இவ்வாறாக துஷ்மந்த மகாராஜனின் மகனான பரதன், அந்த யாகங்களுக்காக மூவாயிரத்து முன்னூறு குதிரைகளைச் சேகரித்து மற்றெல்லா அரசர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் பரம குருவான ஸ்ரீ ஹரியை அடைந்தவராக இருந்ததால், அவருடைய ஐசுவரியம் ஐசுவரியத்தையும் மிஞ்சியதாக இருந்தது.
பதம் 9.20.28
ம்ருகான் சுக்ல-தத: க்ருஷ்ணான் ஹிரண்யேன பரீவ்ருதான்
அதாத் கர்மணி மஷ்ணாரே நியுதானி சதுர்தச
ம்ருகான்—முதல்தர யானைகளை; சுக்ல-தத:—மிகவும் வெண்மையான தந்தங்களுடனும்; க்ருஷ்ணான்—கருமைநிற உடல்களுடனும்; ஹிரண்யேன—தங்க ஆபரணங்களுடனும்; பரீவ்ருதன்—முற்றிலும் மூடப்பட்ட; அதாத்—தானம் செய்தார்; கர்மணி—யாகத்தில்; மஷ்ணாரே—மஷ்ணாரம் என்ற பெயருடைய, அல்லது மஷ்ணாரம் என்ற இடத்தில்; நியுதானி—இலட்சங்கள்; சதுர்தச—பதினான்கு.
மஷ்ணாரம் என்ற யாகத்தை (அல்லது மஷ்ணாரம் என்ற இடத்தில் செய்யப்படும் ஒரு யாகத்தை) பரத மகாராஜன் செய்த போது, அவர் வெண் தந்தங்களுடனும், கருமை நிற உடல்களுடனும் கூடிய தங்க ஆபரணங்களால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பதினான்கு இலட்சம் மிகச் சிறந்த யானைகளை தானம் செய்தார்.
பதம் 9.20.29
பரதஸ்ய மஹத் கர்ம ந பூர்வே நாபரே ந்ருபா:
நைவாபுர் நைவ ப்ராப்ஸ்யந்தி பாஹுப்யாம் த்ரிதிவம் யதா
பரதஸ்ய—துஷ்மந்தரின் மகனான பரத மகாராஜனின்; மஹத்—மிகச் சிறந்த; கர்ம—செயல்களை; ந—இல்லை; பூர்வே—முன்பு; ந—அல்லது; அபரே—அவர் காலத்திற்குப் பிறகு; ந்ருபா:—அரச பிரிவினர்; ந—இல்லை; ஏவ—நிச்சயமாக; ஆபு:—அடைந்தனர்; ந—அல்லது; ஏவ—நிச்சயமாக; ப்ராப்ஸ்யந்தி—பெறுவார்; பஹீப்யாம்—தன் கைகளின் வலிமையால்; த்ரி-திவம்—சுவர்க்க லோகங்கள்; யதா—அவ்வாறு.
(யாராலும் தன் கைகளால் சுவர்க்க லோகங்களைத் தொட முடியாது என்பதால்) எப்படி ஒருவனால் தன் சொந்த கரங்களின் பலத்தினாலேயே சுவர்க்க லோகங்களை அணுக முடியாதோ அப்படியே, பரத மகாராஜனின் அற்புதச் செயல்களை யாராலும் செய்து காட்ட முடியாது. இத்தகைய செயல்களைக் கடந்த காலத்தில் எவராலும் செய்ய இயலவில்லை, எதிர்காலத்திலும் எவராலும் செய்யமுடியாது.
பதம் 9.20.30
கிராத-ஹூணான் யவனான்
பௌண்ட்ரான் கங்கான் கசாஞ் சகான்
அப்ரஹ்மண்ய-ந்ருபாம்ஸ் சாஹன்
ம்லேச்சான் திக்-விஜயே ‘கிலான்
கிராத—கிராதர்கள் என்ற கருப்பர்கள் (பெரும்பாலும் ஆப்பிரிக்கர்கள்); ஹூணான்—வடப்பிரதேசத்து மலைவாசிகளான ஹூணர்கள்; யவனான்—மாமிசம் உண்பவர்கள்; பௌண்ட்ரான்—பௌண்ட்ரர்கள்; கங்கான்—கங்கர்கள்; கசான்—மங்கோலியர்கள்: சகான்—சகர்கள்; அப்ரஹ்மண்ய—பிராமண பண்பாட்டிற்கு எதிரான; ந்ருபான்—அரசர்கள்; ச—மற்றும்; அஹன்—அவர் கொன்றார்; மலேச்சான்—வேத நாகரீகத்தை மதிக்காத இத்தகைய நாஸ்திகர்கள்; திக்-விஜயே—எல்லாத் திசைகளையும் வெற்றி கொள்ளும் வேளையில்; அகிலான்—அவர்களனைவரும்.
பரத மகாராஜன் தமது சுற்றுப்பிரயாணத்தின் போது, கிராதர்கள், ஹூணர்கள், யவனர்கள், பௌண்ட்ரகரர்கள், கங்கர்கள், கசர்கள், சகர்கள் மற்றும் வேதக் கொள்கையான பிராமண பண்பாட்டை எதிர்த்த அரசர்கள் ஆகிய அனைவரையும் வென்றார் அல்லது கொன்றார்.
பதம் 9.20.31
ஜித்வா புராஸுரா தேவான் யே ரஸௌகாம்ஸி பேஜிரே
தேவ-ஸ்த்ரியோ ரஸாம் நீதா: ப்ராணிபி: புனர் ஆஹரத்
ஜித்வா—வென்று; புரா—முன்பு; அஸுரா:—அசுரர்கள்; தேவான்—தேவர்களை; யே—அவர்களனைவரும்; ரஸ-ஓகாம்ஸி—ராஸாதளம் என்ற கீழான கிரக அமைப்பில்; பேஜிரே—தஞ்சமடைந்தவர்; தேவ-ஸ்த்ரிய:—தேவர்களின் மனைவிகளையும், புதல்விகளையும்; ரஸாம்—கீழான கிரக அமைப்பிற்கு; நீதா:—கொண்டு வரப்பட்டனர்; ப்ராணிபி:—அவர்களது பிரிய சகாக்களுடன்; புன:—மீண்டும்; ஆஹரத்—அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்து வந்தார்.
முன்பு, தேவர்களை வெற்றி கொண்ட அசுரர்கள், ரஸாதளம் என்ற கீழுலகங்களைத் தஞ்சமடைந்தனர். பிறகு தேவர்களின் மனைவிகளையும், புதல்விகளையும் கூட அங்கு கொண்டு வந்தனர். ஆனால் பாத மகாராஜன் அப்பெண்களையெல்லாம் அவர்களது சகாக்களுடன் அசுரர்களின் பிடியிலிருந்து விடுவித்து, அவர்களை தேவர்களிடம் ஒப்படைத்தார்.
பதம் 9.20.32
ஸர்வான் காமான் துதுஹது: ப்ரஜானாம் தஸ்ய ரோதஸீ
ஸமாஸ் த்ரி-நவ-ஸாஹஸ்ரீர் திக்ஷு சக்ரம் அவர்தயத்
ஸர்வான் காமான்—எல்லாத் தேவைகளையும் அல்லது விரும்பத்தகுந்த பொருட்களையும்; துதுஹது:—நிறைவேற்றினார்; ப்ரஜானாம்—பிரஜைகளின்; தஸ்ய—அவரது; ரோதஸீ—இந்த மண்ணுலகம் மற்றும் விண்ணுலகின்; ஸமா:—ஆண்டுகளுக்கு; த்ரி-நவ-ஸாஹஸ்ரீ:—மூன்று பெருக்கல் ஒன்பதாயிரம் (அதாவது, இருபத்தேழாயிரம்); திக்ஷு—எல்லாத் திசைகளிலும்; சக்ரம்—படைகளை அல்லது உத்தரவுகளை; அவர்த்தயத்—பரப்பினார்.
பரத மகாராஜன் இருபத்தேழாயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான அனைத்தையும், இந்த மண்ணுலகிலும், சுவர்க்கலோகங்களிலும் உள்ள தமது பிரஜைகளுக்கு வழங்கினார். அவர் தமது உத்தரவுகளைப் பரப்பி, தமது வீரர்களை எல்லாத் திசைகளிலும் பிரித்தனுப்பினார்.
பதம் 9.20.33
ஸ ஸம்ராட் லோக-பாலாக்யம் ஐஸ்வர்யம் அதிராட் ஸ்ரியம்
சக்ரம் சாஸ்கலிதம் ப்ராணான் ம்ருஷேதி உபரராம ஹ
ஸ:—அவர் (பரத மகாராஜன்); ஸம்ராட்—சக்கரவர்த்தியான; லோக-பால-ஆக்யம்—அகில லோகங்களுக்கும் அதிபதி எனப்படும்; ஐஸ்வர்யம்—இத்தகைய ஐசுவரியங்களை; அதிராட்—முழு அதிகாரமுள்ள; ஸ்ரியம்—இராஜ்யம்; சக்ரம்—வீரர்கள் அல்லது உத்தரவுகள்; ச—கூட; அஸ்கிலிதம்—தோல்வியின்றி; ப்ராணான்—வாழ்வு அல்லது மகன்கள் மற்றும் குடும்பம்; ம்ருசா—எல்லாம் பொய்; இதி—என்றெண்ணி; உபரராம—அனுபவிப்பதை நிறுத்திவிட்டார்; ஹ—கடந்த காலத்தில்.
பரத மகாராஜன் முழு பிரபஞ்சத்திற்கும் சக்கரவர்த்தி என்பதால், அவர் பேரரசுக்குரிய ஐசுவரியங்களையும், வெல்லுதற்குரிய வீரர்களையும் பெற்றிருந்தார். அவருக்கு அவரது குடும்பமும், மகன்களுமே வாழ்வில் அனைத்துமாகத் தெரிந்தது. ஆனால் இறுதியில் ஆன்மீக முன்னேற்றத்திற்கு இவையெல்லாம் வெறும் தடைக்கற்களே என்று அவர் எண்ணியதால் அவற்றை அனுபவிப்பதை நிறுத்திவிட்டார்.
பதம் 9.20.34
தஸ்யாஸன் ந்ருப வைதர்ப்ய: பத்ன்யஸ் திஸ்ர: ஸுஸம்மதா:
ஜக்னுஸ் த்யாக-பயாத் புத்ரான் நானுரூபா இதீரிதே
தஸ்ய—அவருடைய (பரத மகாராஜனுடைய); ஆஸன்—இருந்தனர்; ந்ருப—அரசே (பரீட்சித்து மகாராஜனே); வைதர்ப்ய:—விதர்பரின் புதல்விகள்; பத்ன்ய:—மனைவிகள்; திஸ்ர:—மூன்று; ஸு-ஸமதா:—இனிமையான, பொருத்தமான; ஜக்னு:—கொன்றுவிட்டனர்; த்யாக-பயாத்—விலக்கப்படுவோம் என்றஞ்சி; புத்ரான்—அவர்களது மகன்களை; ந அனுரூபா:—அவர்களது தந்தையைப் போல் இல்லை; இதி—என்று; ஈரிதே—கருதி.
பரீட்சித்து மகாராஜனே, பரத மகாராஜனுக்கு விதர்ப தேசத்து அரசரின் புதல்விகளான மூன்று பிரியமான மனைவிகள் இருந்தனர். அம்மூவரும் குழந்தைகள் பெற்று, அக்குழந்தைகள் அரசரை ஒத்திருக்காததால், அரசர் தங்களை நேர்மை கெட்ட ராணிகள் என்று கருதி தங்களை விலக்கிவிடுவாரோ என்றெண்ணியதால் அவர்கள் தங்களுடைய சொந்த மகன்களையே கொன்றுவிட்டனர்.
பதம் 9.20.35
தஸ்யைவம் வித்தே வம்சே தத்-அர்த்தம் யஜந:
ஸுதம் மருத்-ஸ்தோமேன மருதோ பரத்வாஜம் உபாதது:
தஸ்ய—அவருடைய (பரத மகாராஜனுடைய); ஏவம்—இவ்வாறு; விததே—ஏமாற்றமடைந்து; வம்சே—வம்ச உற்பத்தியில்; தத்-அர்த்தம்—மகன்கள் பெறுவதற்கு; யஜத:—யாகங்கள் செய்து; ஸுதம்—ஒரு மகனை; மருத்-ஸ்தோமேன—மருத்-ஸ்தோமம் என்ற யாகத்தைச் செய்ததன் மூலமாக; மருத:—மருத்துகள் என்ற தேவர்கள்; பரத்வாஜம்—பரத்வாஜனை; உபாதது:—அளித்தனர்.
குழந்தை பெறும் தமது முயற்சி தோல்வியடைந்ததைக் கண்ட அரசர், ஒரு மகனைப் பெறுவதற்கு மருத்-தோமம் என்ற யாகத்தை நடத்தினார். அவரிடம் பூரணத் திருப்தியடைந்து மருக்கள் எனப்படும் தேவர்கள், அவருக்கு பரத்வாஜர் என்ற பெயருடைய ஒரு மகனை அளித்தனர்.
பதம் 9.20.36
அந்தர்வத்ன்யாம் ப்ராத்ரு-பத்ன்யாம் மைதுனாய ப்ருஹஸ்பதி:
ப்ரவ்ருத்தோ வாரிதோ கர்பம் சப்த்வா வீர்யம் உபாஸ்ருஜத்
அந்த: வத்ன்யாம்—கர்பவதியான; ப்ராத்ரு-பத்ன்யாம்—சகோதரனின் மனைவியுடன்; மைதுனாய—உடலுறவு கொள்ள விரும்பி; ப்ருஹஸ்பதி:—பிருஹஸ்பதி என்ற தேவர்; ப்ரவ்ருத்த:—அவ்வாறு எண்ணம் கொண்டு; வாரித:—அதைத் தடுத்தபொழுது: கர்பம்—கர்பத்திலிருந்த மகன்; சப்த்வா—சபித்துவிட்டு; வீர்யம்—விந்துவை; உபாஸ்ருஜத்—பாய்ச்சினார்.
பிருஹஸ்பதி என்ற தேவர், கர்பவதியாக இருந்த தன் சகோதரனின் மனைவியான மமதாவினால் கவரப்பட்டு, அவளுடன் உடலுறவு கொள்ள விரும்பினார். அவளது கர்பத்திலிருந்த மகன் இதைத்தடுத்ததால், பிருஹஸ்பதி அவனைச் சபித்துவிட்டு பலவந்தமாக மமதாவின் கர்பத்திற்குள் விந்துவைப் பாய்ச்சினார்.
பதம் 9.20.37
தம் த்யக்து-காமாம் மமதாம் பார்துஸ் த்யாக-விசங்கிதாம்
நாம-நிர்வாசனம் தஸ்ய ஸ்லோகம் ஏனம் ஸுரா ஜகு:
தம்—அந்த பச்சிளங்குழந்தையை; த்யக்து-காமாம்—தவிர்க்க விரும்பிய; மமதாம்—மமதாவிற்கு; பர்து: த்யாக-விசங்கிதாம்—ஒரு மகனை முறைதவறிப் பெற்றதால், தன் கணவரால் நிராகரிக்கப்படுவோமோ என்று மிகவும் அஞ்சி; நாம-நிர்வாசனம்—ஒரு பெயர் சூட்டும் விழாவை; தஸ்ய—குழந்தைக்கு; ஸ்லோகம்—சுலோகத்தை; ஏனம்—இந்த; ஸுரா:—தேவர்கள்; ஜகு:—சூட்டி.
மமதா முறைதவறிப் பிறந்த ஒரு மகனைப் பெற்றதற்காக, தன் கணவரால் நிராகரிக்கப்படுவோமோ என்று மிகவும் அஞ்சினாள். எனவே அக்குழந்தையை விட்டு விடுவதென்று அவள் முடிவு செய்தாள். ஆனால் அக்குழந்தைக்கு ஒரு பெயரைச் சூட்டி அந்த பிரச்சினையை தேவர்கள் தீர்த்து வைத்தனர்.
பதம் 9.20.38
மூடே பர த்வாஜம் இமம் பர த்வாஜம் ப்ருஹஸ்பதே
யாதௌ யத் உக்த்வா பிதரென பரத்வாஜஸ் ததஸ் து அயம்
மூடே—முட்டாள் பெண்ணே; பர—பராமரிக்க வேண்டும்; த்வாஜம்—தவறான உறவினால் பிறந்த போதிலும்; இமம்—இக்குழந்தையை; பர—பராமரிக்க வேண்டும்; த்வாஜம்—இருவரின் தவறான உறவினால் பிறந்த போதிலும்; ப்ருஹஸ்பதே—பிருஹஸ்பதியே; யாதெள—சென்றுவிட்டனர்; யத்—என்பதால்; உக்த்வா—என்று கூறி; பிதரௌ—தாய், தந்தை இருவரும்; பரத்வாஜ:—பரத்வாஜன் என்ற பெயரால்; தத:—அதன்பிறகு; து—உண்மையில்; அயம்—இக்குழந்தை.
பிருஹஸ்பதி மமதாவிடம் பின்வருமாறு கூறினார்: “முட்டாள் பெண்ணே இக்குழந்தை ஒரு மனிதனின் மனைவியிலிருந்து மற்றொரு மனிதனின் விந்துவின் மூலமாகப் பிறந்தது என்றாலும், நீதான் இக்குழந்தையைப் பராமரிக்க வேண்டும்”. இதைக்கேட்ட மமதா, ‘ஓ பிருஹஸ்பதி, நீங்கள்தான் இவனைப் பராமரிக்க வேண்டும்!” என்று பதிலளித்தாள். இவ்வாறு பேசியபின் பிருஹஸ்பதியும், மமதாவும் அங்கிருந்து சென்று விட்டனர். இவ்வாறாக அக்குழந்தை பரத்வாஜன் என்று அறியப்பட்டது.
பதம் 9.20.39
சோத்யமானா ஸுரைர் ஏவம் மத்வா விததம் ஆத்மஜம்
வ்யஸ்ருஜன் மருதோ ‘பிப்ரன் தத்தோ ‘யம் விததே ‘ன்வயே
சோத்யமானா—(குழந்தையை வளர்க்கும்படி) மமதா தூண்டப்பட்ட போதிலும்; ஸுரை:—தேவர்களால்; ஏவம்—இவ்வாறு; மத்வா—எண்ணி; விததம்—உபயோகமற்றவன்; ஆத்மஜம்—அவளது சொந்த குழந்தையை; வ்யஸ்ருஜத்—ஒதுக்கினாள்; மருத:—மருத்கள் என்ற தேவர்கள்; அபிப்ரன்—(குழந்தையை) வளர்த்து வந்தனர்; தத்த:—அதே குழந்தை கொடுக்கப்பட்டது; அயம்—இது; விததே—ஏமாற்றமடைந்தபொழுது; அன்வயே—பரத மகாராஜனின் வம்சம்.
அக்குழந்தையைப் பராமரிக்கும்படி தேவர்களால் மமதா தூண்டப்பட்ட போதிலும், அக்குழந்தையின் தகாத பிறப்பின் காரணத்தால் அவனை உபயோகமற்றவனாக அவள் கருதினாள். எனவே அவள் அக்குழந்தையை விட்டுச் சென்றுவிட்டாள். இதனால் மருத்கள் எனப்படும் தேவர்கள் அக்குழந்தையைப் பராமரித்து வந்தனர். பிறகு பரத மகாராஜன் ஒரு குழந்தை இல்லாமல் ஏமாற்றமடைந்த பொழுது இக்குழந்தை அவருடைய மகனாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “பூரு வம்சம்” எனும் தலைப்பை கொண்ட இருபதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.