அத்தியாயம் – 14
புரூரவஸ் மகாராஜன் ஊர்வசிக்கு
வசியமாதல்
பதம் 9.14.1
ஸ்ரீ-சுக உவாச
அதாத: ஸ்ரூயதாம் ராஜன் வம்ச: ஸோமஸ்ய பாவன:
யஸ்மின் ஐலாதயோ பூபா: கீர்த்யத்தே புண்ய-கீர்தய:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—இப்பொழுது (சூரிய வம்சத்தைப் பற்றி கேட்டபின்); அத:—எனவே; ஸ்ரூயதாம்—நான் கூறுவதைக் கேளும்; ராஜன்—அரசே (பரீட்சித்து மகாராஜனே); வம்ச:—வம்சம்; ஸோமஸ்ய—சந்திர தேவனின்; பவான:—புண்ணியம் வாய்ந்த; யஸ்மின்—எதில் (வம்சத்தில்); ஐல-ஆதய:—ஐலர் (புரூரவஸ்) முதலிய; பூபா:—அரசர்கள்; கீர்த்யந்தே—விவரிக்கப்படுகின்றனர்; புன்ய-கீர்தய:—யாரைப் பற்றி கேட்பது புண்ணியமோ அவர்கள்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார்: அரசே! இதுவரை ஆரிய வம்ச வர்ணணையை நீர் கேட்டீர், இனி பெரும் புகழ் பெற்ற சந்திர வம்சத்தின் புண்ணிய கதையைக் கேளும். இவ்விவரணையில், ஐலனைப் (புரூரவஸ்) போன்ற புனித அரசர்கள் இடம் பெறுகின்றனர்.
பதம் 9.14.2
ஸஹஸ்ர-சிரஸ: பும்ஸோ நாபி-ஹ்ரத-ஸரோருஹாத்
ஜாதஸ்யாஸீத் ஸுதோ தாதுர் அத்ரி: பித்ரு-ஸமோ குணை:
ஸஹஸ்ர-சிரஸ:—ஆயிரக்கணக்கான தலைகள் உடையவரான; பும்ஸ:—பகவான் விஷ்ணுவின் (கர்போதகசாயி விஷ்ணு); நாபி-ஹ்ரத-ஸரோருஹாத்—நாபிக்குளத்திலிருந்து உற்பத்தியான தாமரையிலிருந்து; ஜாதஸ்ய—தோன்றியவர்; ஆஸீத்—வந்தார்; ஸுத:—ஒரு மகன்; தாது:—பிரம்ம தேவனின்; அத்ரி—அத்ரி என்னும் பெயர் கொண்ட; பித்ரு-ஸம:—அவரது தந்தையைப் போலவே; குணை:—தகுதியுடையவர்.
பகவான் விஷ்ணு (கர்போதகசாயி விஷ்ணு) சஹஸ்ர-சீர்ஷ புருஷர் என்று அழைக்கப்படுகிறார். அவரது நாபியாகிய மடுவில் தோன்றிய தாமரையில் பிரம்ம தேவர் பிறந்தார். பிரம்ம தேவரின் புத்திரரான அத்ரி தந்தையைப் போலவே தகுதி பெற்றிருந்தார்.
பதம் 9.14.3
தஸ்ய த்ருக்ப்யோ ‘பவத் புத்ர: ஸோமோ ‘ம்ருதமய:கில
விப்ரௌஷதி-உடு-கணானாம் ப்ரஹ்மனா கல்பித: பதி:
தஸ்ய—அவரின், பிரம்ம புத்திரரான அத்ரியின்; த்ருக்ப்ய:—ஆனந்தக் கண்ணீரிலிருந்து; அபவத்—பிறந்தார்; புத்ர:—ஒரு மகன்; ஸோம:—சந்திரதேவன்; அம்ருத-மய:—குளிர்ச்சியான கதிர்கள் நிறைந்த; கில—உண்மையில்; விப்ர—பிராமணர்களின்; ஓஷதி—மூலிகைகளின்; உடு-கணானாம்—மற்றும் நட்சத்திரங்களின்; ப்ரஹ்மணா—பிரம்ம தேவரால்; கல்பித:—நியமிக்கப்பட்டார்; பதி:—அதிபதியாக.
அத்ரியின் ஆனந்தக் கண்ணீரிலிருந்து சோமன் என்று சந்திரதேவன் பிறந்தார். அவர் குளுமையான ஒளிக்கதிர்கள் நிறைந்தவராக இருந்தார். பிரம்மதேவர் அவரை பிராமணர்களுக்கும், மூலிகைகளுக்கும் மற்றும் நட்சத்திரங்களுக்கும் அதிபதியாக்கினார்.
பதம் 9.14.4
ஸோ ‘யஜத் ராஜஸூயேன விஜித்ய புவன-த்ரயம்
பத்னீம் ப்ரஹஸ்பதேர் தர்பாத் தாராம் நாமாஹரத் பலாத்
ஸ:—அவர், சோமன்; அயஜத்—செய்தார்; ராஜஸூயேன—ராஜசூயம் என்ற யாகத்தை; விஜித்ய—வென்ற பின்; புவன-த்ரயம்—மூவுலகங்களையும் (சுவர்க்க லோகம், மத்திய லோகம், பாதாள லோகம்); பத்னீம்—மனைவி; ப்ருஹஸ்பதே:—தேவ குருவான பிருஹஸ்பதியின்; தர்பாத்—கர்வத்தால்; தாராம்—தாரை; நாம—என்பவளை; அஹரத்—தூக்கிச் சென்றார்; பலாத்—பலாத்காரமாக.
மூவுலகங்களையும் வென்ற பின், சந்திர தேவனான சோமன், ராஜ சூய யக்ஞம் எனப்படும் பெரும்யாகம் ஒன்றைச் செய்தார். அவர் மிகவும் திமிர்பிடித்தவராக இருந்ததால், பிருஹஸ்பதியின் மனைவியான தாரையை பலாத்காரமாக தூக்கிச் சென்றார்.
பதம் 9.14.5
யதா ஸ தேவ-குருணா யாசிதோ ‘பீக்ஷ்ணசோ மதாத்
நாத்யஜத் தத்-க்ருதே ஜக்ஞே ஸுர-தானவ-விக்ரஹ:
யதா—எப்பொழுது; ஸ:—அவர் (சோமன்); தேவ-குருணா—தேவ குருவான பிருஹஸ்பதியால்; யாசித:—யாசிக்கப்பட்டாள்; அபீக்ஷ்ணச:—திரும்பத் திரும்ப; மதாத்—பொய் அகங்காரத்தினால்; ந—இல்லை; அத்யஜத்—ஒப்படைத்தார்; தத்-க்ருதே—இதனால்; ஜக்ஞே—ஏற்பட்டது; ஸுர-தானவ—தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில்; விக்ரஹ:—ஒரு போர்.
தேவ குருவான பிருஹஸ்பதி, தாரையை திருப்பிக் கொடுத்துவிடும்படி திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்ட போதிலும், பொய் அகங்காரத்தினால் சோமன் அதைச் செய்யவில்லை. அதன் விளைவாக தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது.
பதம் 9.14.6
சுக்ரோ ப்ருஹஸ்பதேர் த்வேஷாத் அக்ரஹீத் ஸாஸுரோடுபம்
ஹரோ குரு-ஸுதம் ஸ்நேஹாத் ஸர்வ-பூத-கணாவ்ருத:
சுக்ர:—சுக்கிரன் என்ற தேவர்; ப்ருஹஸ்பதே:—பிருஹஸ்பதியிடம்; த்வேஷாத்—கொண்ட விரோதத்தால்; அக்ரஹீத—ஏற்றார்; ஸ-அஸுர—அசுரர்களுடன்; உடுபம்—சந்திர தேவனின் பக்கம்; ஹர:—சிவபெருமான்; குரு-ஸுதம்—அவரது குரு புத்திரரின் பக்கம்; ஸ்நேஹாத்—சிநேகத்தால்; ஸர்வ-பூத-கண-ஆவ்ருத:—எல்லா வகையான பூத கணங்களாலும் சூழப்பட்டவராய்.
பிருஹஸ்பதியிடம் கொண்ட விரோதத்தால் சுக்கிரன் சந்திர தேவனின் பக்கம் சேர்ந்தார். அசுரர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் தன் குரு புத்திரனிடமிருந்த பாசத்தால், சிவபெருமான், பூத கணங்களால் சூழப்பட்டவராய் பிருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்து கொண்டார்.
பதம் 9.14.7
ஸர்வ-தேவ-கனோபேதோ மஹேந்ரோ குரும் அன்வயாத்
ஸுராஸுர-வினாசோ ‘பூத் ஸமரஸ் தாரகாமய:
ஸர்வ-தேவ-கண—எல்லா வகையான தேவர்களாலும்; உபேத:—சேர்ந்து கொண்டார்; மஹேந்ர:—மகேந்திரன், சுவர்க்க ராஜனான இந்திரன்; குரும்—அவரது ஆன்மீக குரு; அன்வயாத்—பின் தொடர்ந்தனர்; ஸுர—தேவர்களின்; அஸுர—மேலும் அசுரர்களின்; வினாச:—நாசம் விளைவிக்கும்; அபூத்—மூண்டது; ஸமர:—ஒரு போர்; தாரகா-மய:—ஒரு பெண்ணால், பிருஹஸ்பதியின் மனைவியான தாரையின் காரணத்தால்.
தேவேந்திரன் எல்லா வகையான தேவர்களாலும் சூழப்பட்டவராய் பிருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்து கொண்டார். இவ்வாறாக பிருஹஸ்பதியின் மனைவியான தாரையின் பொருட்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டு இரு பிரிவினரும் சேதமடைந்தனர்.
பதம் 9.14.8
நிவேதிதோ ‘தாங்கிரஸா ஸோமம் நிர்பர்த்ஸ்ய விஸ்வ-க்ருத்
தாராம் ஸ்வ-பர்த்ரே ப்ரயச்சத் அந்தர்வத்னீம் அவைத் பதி:
நிவேதித:—முழுமையாக அறிவிக்கப்பட்ட போது; அத—இவ்வாறாக; அங்கிரஸா—அங்கிரஸ முனிவரால்; ஸோமம்—சந்திர தேவனை; நிர்பர்த்ஸ்ய—கடுமையாக தண்டித்து; விஸ்வ-க்ருத்—பிரம்மதேவர்; தாராம்—பிருஹஸ்பதியின் மனைவி தாரை; ஸ்வ-பர்த்ரே—அவளது கணவரிடம்; ப்ராயச்சத்—ஒப்படைக்கப்பட்டாள்; அந்தர்வத்னீம்—கர்ப்பிணி; அவைத்—புரிந்து கொள்ள முடிந்தது; பதி:—கணவரால் (பிருஹஸ்பதியால்).
முழு சம்பவமும் அங்கிரரால் பிரம்மதேவருக்கு முழுமையாக அறிவிக்கப்பட்டபோது, அவர் சந்திர தேவனான சோமனைக் கடுமையாக தண்டித்தார். இவ்வாறாக பிரம்மா தாரையை அவளது கணவரிடம் ஒப்படைத்தார். அவரும் அவள் கர்ப்பிணியாக இருப்பதை பிறகு புரிந்து கொண்டார்.
பதம் 9.14.9
த்யஜ த்யஜாசு துஷ்ப்ரக்ஞே மத்-க்ஷேத்ராத் ஆஹிதம் பரை:
நாஹம் த்வாம் பஸ்மஸாத் குர்யாம் ஸ்த்ரியம் ஸாந்தானிகே ‘ஸதி
த்யஜ—பெற்றுவிடு; த்யஜ—பெற்றுவிடு; ஆசு—உடனே; துஷ்ப்ரக்ஞே—முட்டாள் பெண்ணே; மத்-க்ஷேத்ராத்—நான் கருத்தரிக்கச் செய்வதற்காக இருந்த கர்ப்பத்திலிருந்து; ஆஹிதம்—பெறப்பட்டது; பரை:—பிறரால்; ந—இல்லை; அஹம்—நான்; த்வாம்—உன்னை; பஸ்மஸாத்—எரித்து சாம்பலாக; குர்யாம்—ஆக்கப்போகிறேன்; ஸ்த்ரியம்—நீ ஒரு பெண்ணென்பதால்; ஸாந்தானிகே—ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு; அஸதி—கற்பை இழந்த போதிலும்.
பிருஹஸ்பதி கூறினார்: முட்டாள் பெண்ணே, நான் கருத்தரிக்கச் செய்வதற்காக இருந்த உன் கர்ப்பப்பை வேறொருவனால் கருத்தரிக்கச் செய்யப்பட்டது. உடனடியாக குழந்தையைப் பெற்றுவிடு! உடனடியாக அதைப் பெற்றுவிடு! குழந்தை பிறந்ததும் உன்னை நான் எரித்துச் சாம்பலாக்க மாட்டேன். இதை நீ நம்பலாம். ஒரு மகனுக்கு ஆசைப்பட்டு நீ கற்பை இழந்தாய் என்பதை நானறிவேன். எனவே உன்னை நான் தண்டிக்கப் போவதில்லை.
பதம் 9.14.10
தத்யாஜ வ்ரீடிதா தாரா குமாரம் கனக-ப்ரபம்
ஸ்ப்ருஹாம் ஆங்கிரஸஸ் சக்ரே குமாரே ஸோம ஏவ ச
தத்யாஜ—பெற்றெடுத்தாள்; வ்ரீடிதா—மிகவும் வெட்கப்பட்டு; தாரா—பிருஹஸ்பதியின் மனைவியான தாரை; குமாரம்—ஒரு குழந்தையை; கனக-ப்ரபம்—தங்கத்தைப் போல் பிரகாசிக்கும் உடலைக் கொண்ட; ஸ்ப்ருஹாம்—விருப்பம்; ஆங்கிரஸ:—பிருஹஸ்பதி; சக்ரே—கொண்டார்; குமாரே—குழந்தை மீது; ஸோம:—சந்திரதேவன்; ஏவ—உண்மையில்; ச—கூட.
சுகதேவ தொடர்ந்து கூறினார்: பிருஹஸ்பதியின் கட்டளையால் மிகவும் வெட்கமடைந்த தாரை, தங்க நிற மேனியுடன் கூடிய மிகவும் அழகான ஒரு குழந்தையை உடனே பெற்றெடுத்தாள். பிருஹஸ்பதி, சந்திரதேவனான சோமன் ஆகிய இருவருமே அழகிய அக்குழந்தையை அடைய விரும்பினர்.
பதம் 9.14.11
மமாயம் ந தவேதி உச்சைஸ் தஸ்மின் விவதமானயோ:
பப்ரச்சுர் ரிஷயோ தேவா நைவோசே வ்ரீடிதா துஸா
மம—என்னுடையது; அயம்—இது (குழந்தை); ந—இல்லை; தவ—உன்னுடையது; இதி—இவ்வாறாக; உச்சை:—உரத்த குரலில்; தஸ்மின்—குழந்தைக்காக; விவதமானயோ:—இருதரப்பினரும் சண்டை செய்யும் போது; பப்ரச்சு:—(தாரையிடம்) வினவினர்; ரிஷய:—எல்லா ரிஷிகளும்; தேவா:—எல்லா தேவர்களும்; ந—இல்லை; ஏவ—உண்மையில்; உசே—எதையும் கூறினாள்; வ்ரீடிதா—வெட்கத்தால்; து—உண்மையில்; ஸா—தாரை.
பிருஹஸ்பதியும், சந்திர தேவனும், “இது என் குழந்தை, உன்னுடையதல்ல!” என்று இருவருமே உரிமை கொண்டாடினர். எல்லா ரிஷிகளும், தேவர்களும் தாரையைப் பார்த்து இது உண்மையில் யாருடைய குழந்தை என்று கேட்டனர். ஆனால் வெட்கத்திற்குள்ளான அவளாள் உடனே பதில் கூற இயலவில்லை.
பதம் 9.14.12
குமாரோ மாதரம் ப்ராஹ குபிதோ ‘லீக-லஜ்ஜயா
கிம் ந வசஸி அஸத்-வ்ருத்தே ஆத்மாவத்யம் வதாசு மே
குமார:—குழந்தை; மாதரம்—அதன் தாயிடம்; ப்ராஹ—கூறியது; குபித:—மிகவும் கோபங் கொண்டு; அலீக—தேவையற்ற; லஜ்ஜயா—வெட்கத்துடன்; கிம்—ஏன்; ந—இல்லை; வசஸி—நீ கூற; அஸத்வ்ருத்தே—கற்பிழந்த பெண்ணே; ஆத்ம-அவத்யம்—நீ செய்த குற்றத்தை; வத—சொல்; ஆசு—உடனே; மே—என்னிடம்.
குழந்தை பிறகு மிகவும் கோபப்பட்டு, தன் தாயிடம் உடனே உண்மையைக் கூறும்படி கேட்டது. குழந்தை கூறியது, “கற்பிழந்த பெண்ணே தேவையற்ற உன்னுடைய வெட்கத்தினால் என்ன பயன்? உன் குற்றத்தை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறாய்? உன்னுடைய ஒழுக்கக்கேட்டைப் பற்றி உடனே என்னிடம் சொல்.”
பதம் 9.14.13
ப்ரஹ்மா தாம் ரஹ ஆஹூய ஸமப்ராக்ஷீச் ச ஸாந்த்வயன்
ஸோமஸ்யேதி ஆஹ சனகை: ஸோமஸ் தம் தாவத் அக்ரஹீத்
ப்ரஹ்மா—பிரம்ம தேவர்; தாம்—அவளிடம், தாரையிடம்; ரஹ:—தனிமையான ஓரிடத்தில்; ஆஹூய—அவளை நிறுத்தி; ஸமப்ராக்ஷீத்—விளக்கமாக விசாரித்தார்; ச—மேலும்; ஸாந்த்வயன்—அமைதிப்படுத்தி; ஸோமஸ்ய—இக்குழந்தை சந்திரதேவனான சோமனுக்குச் சொந்தம்; இதி—இவ்வாறு; ஆஹ—அவள் பதிலளித்தாள்; சனகை:—மிகவும் மெதுவாக; ஸோம:—சோமன்; தம்—குழந்தையின்; தாவத்—உடனே; அக்ரஹீத்—பொறுப்பை ஏற்றார்.
பிரம்ம தேவர் பிறகு தாரையை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, அவளைச் சாந்தப்படுத்திய பின், குழந்தை உண்மையில் யாருக்குச் சொந்தம் என்று கேட்டார். அவளும், “இவன் சந்திர தேவனான சோமனின் மகன்” என்று மெதுவாக பதிலளித்தாள். சந்திரதேவனும் உடனே குழந்தையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.
பதம் 9.14.14
தஸ்யாத்ம-யோனிர் அக்ருத புத இதி அபிதாம் ந்ருப
புத்யா கம்பீரயா யேன புத்ரேணாபோடுராண் முதம்
தஸ்ய—குழந்தையின்; ஆத்ம-யோனி:—பிரம்ம தேவர்; அக்ருத்—செய்தார்; புத:—புதன்; இதி—இவ்வாறாக; அபிதாம்—என்ற பெயரை; ந்ருப—அரசே; புத்யா—புத்தியால்; கம்பீரயா—ஆழ்ந்திருந்ததை; யேன—யாரால்; புத்ரேண—இத்தகைய ஒரு மகனால்; ஆப—அவர் பெற்றார்; உடூராட்—சந்திர தேவன்; முதம்—ஆனந்தம்.
பரீட்சித்து மகாராஜனே, குழந்தை ஆழ்ந்த புத்திசாலியாக இருப்பதைக் கண்ட பிரம்ம தேவர், குழந்தைக்கு புதன் என்று பெயர் சூட்டினார். நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரதேவன் இம்மகனால் ஆனந்தக் களிப்படைந்தார்.
பதங்கள் 9.14.15 – 9.14.16
தத: புரூரவா ஜக்ஞே இளாயாம் ய உதாஹ்ருத:
தஸ்ய ரூப-குணௌதார்ய-சீல-த்ரவிண-விக்ரமான்
ஸ்ருத்வோர்வசீந்ர-பவனே கியமானான் ஸுரர்ஷிணா
தத்-அந்திகம் உபேயாய தேவீ ஸ்மர-சரார்திதா
தத:—அவரிலிருந்து (புதனிலிருந்து); புரூரவா:—புரூரவஸ் என்ற மகன்; ஜக்ஞே—பிறந்தார்; இளாயாம்—இளையின் கர்ப்பத்தில்; ய:—யாரொருவர்; உதாஹ்ருத:—(ஒன்பதாம் காண்டத்தின் துவக்கத்தில்) விவரிக்கப்பட்டுவிட்டது; தஸ்ய—அவரது (புரூரவஸ்ஸின்); ரூப—அழகு; குண—குணம்; ஔதார்ய—பெருந்தன்மை; சீல—ஒழுக்கம்; த்ரவிண—செல்வம்; விக்ரமான்—சக்தி; ஸ்ருத்வா—கேட்டதால்; ஊர்வசீ—ஊர்வசி என்ற தேவ மங்கை; இந்ர-பவனே—இந்திரனின் சபையில்; கீயமானான்—அவை விவரிக்கப்படும்போது; ஸுர-ரிஷிணா—நாரதரால்; தத்-அத்திகம்—அவருக்கருகில்; உபேயாய—அணுகினாள்; தேவீ—ஊர்வசி; ஸ்மர-சர—மன்மதனின் அம்புகளால்; அர்திதா—தாக்கப்பட்டு
அதன்பிறகு, புதனிலிருந்து இளையின் கர்பத்தில் புரூரவஸ் என்ற ஒரு மகன் பிறந்தார். இவரைப் பற்றி ஒன்பதாம் காண்டத்தின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது அழகு, இயல்புகள், தாராள குணம், ஒழுக்கம், செல்வம் மற்றும் சக்தி ஆகியவை நாரதரால் இந்திரனின் சபையில் விவரிக்கப்பட்டபோது, தேவ மங்கையான ஊர்வசி அவரால் கவரப்பட்டாள். இவ்வாறாக அவள் காமனின் கணைகளால் துளைக்கப்பட்டு அவரை அணுகினாள்.
பதங்கள் 9.14.17 – 9.14.18
மித்ரா-வருணயோ: சாபாத் ஆபன்னா நர-லோகதாம் நிசம்ய புருஷ-ஸ்ரேஷ்டம் கந்தர்பம் இவ ரூபிணம்
த்ருதிம் விஷ்டப்ய லலனா உபதஸ்தே தத்-அந்திகே
ஸ தாம் விலோக்ய ந்ருபதிர் ஹர்ஷேணோத்ஃபுல்ல-லோசன:
உவாச ஸ்லக்ஷ்ணயா வாசா தேவீம் ஹ்ருஷ்ட-தனூருஹ:
மித்ரா-வருணயோ:—மித்திர, வருணரின்; சாபாத்—சாபாத்தால்; ஆபன்னா—அடைந்ததால்; நர-லோகதாம்—மானிட பழக்கங்கள்; நிசம்ய—இவ்வாறாக கண்டு; புருஷ-ஸ்ரேஷ்டம்—ஆண்களிலேயே சிறந்தவர்; கந்தர்பம் இவ—மன்மதனைப் போல்; ரூபிணம்—அழகைப் பெற்றுள்ள; த்ருதிம்—பொறுமையை; விஷடப்ய—கடைபிடித்து; லலனா—அப்பெண்; உபதஸ்தே—அணுகினாள்; தத்-அந்திகே—அவருக்கருகில்; ஸ:—அவர், புரூரவஸ்; தாம்—அவளை; விலோக்ய—கண்டதால்; ந்ருபதி:—அரசர்; ஹர்ஷேண—பேரானந்தத்துடன்; உத்ஃபுல்ல-லோசன:—யாருடைய கண்கள் ஒளி பெற்றனவோ; உவாச—கூறினார்; ஸ்லஷ்ணயா—மிகவும் சாந்தமான; வாசா—வார்த்தைகளால்; தேவீம்—தேவ மங்கையிடம்; ஹ்ருஷ்ட-தனூருஹ:—ஆனந்தத்தால் உடல் சிலிர்த்தது.
மித்திர, வருணர்களின் சாபத்தால் தேவ மங்கையான ஊர்வசி மானிட இயல்புகளைப் பெற்றாள், எனவே, மன்மதனின் அழகையொத்த, மிகச்சிறந்த ஆண்மகனான புரூரவஸ்ஸைக் கண்டதும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரை அணுகினாள். புரூரவஸ் மகாராஜன் ஊர்வசியைக் கண்டதும், ஆனந்தப் பரவசத்தால் அவரது கண்கள் ஜொலித்தன, மெய் சிலிர்த்தது. இன்பமூட்டும் சாந்தமான வார்த்தைகளால், பின்வருமாறு அவளிடம் அவர் பேசலானார்.
பதம் 9.14.19
ஸ்ரீ-ராஜோவாச
ஸ்வாகதம் தே வராரோஹே ஆஸ்யதாம் கரவாம கிம்
ஸம்ரமஸ்வ மயா ஸாகம் ரதிர் நௌ சாஸ்வதீ: ஸமா:
ஸ்ரீ-ராஜா உவாச—அரசர் (புரூரவஸ்) கூறினார்; ஸ்வாகதம்—வரவேற்கிறேன்; தே—உன்னை; வராரோஹே—அழகு மங்கையருள் சிறந்தவளே; ஆஸ்யதாம்—தயவுசெய்து இங்கு உட்கார்; கரவாம-கிம்—உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்; ஸம்ரமஸ்வ—என்னுடைய தோழியாக இரு; மயா ஸாகம்—என்னுடன்; ரதி:—சிற்றின்ப உறவு; நௌ—நமக்கிடையில்; சாஸ்வதீ: ஸமா:—பல ஆண்டுகளுக்கு.
புரூரவஸ் மகாராஜன் கூறினார்: பேரழகுப் பெண்மணியே, உன்னை வரவேற்கின்றேன். தயவுசெய்து இங்கமர்ந்து, உனக்காக நான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் சொல், உன் விருப்பம்போல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னுடன் நீ சுகம் அனுபவிக்கலாம். சிற்றின்ப உறவில் நாம் சந்தோஷமாக வாழ்வைக் கழிப்போம்.
பதம் 9.14.20
ஊர்வசி உவாச
கஸ்யாஸ் த்வயி ந ஸஜ்ஜேத மனோ த்ருஷ்டிஸ் ச ஸுந்தர
யத்-அங்காந்தரம் ஆஸாத்ய ச்யவதே ஹ ரரிம்ஸயா
ஊர்வசீ உவாச—ஊர்வசி பதிலளித்தாள்; கஸ்யா:—எந்த பெண் தான்; த்வயி—உம்மால்; ந—மாட்டாள்; ஸஜ்ஜத—கவரப்பட; மன:—மனம்; த்ருஷ்டி: ச—மற்றும் பார்வை; ஸுந்தர—ஆணழகனே; யத்-அங்காந்தரம்—யாருடைய மார்பு; ஆஸாத்ய—அனுபவிப்பதை; சீயவதே—கைவிடுவாள்; ஹ—உண்மையில்; ரிரம்ஸயா—சிற்றின்ப சுகத்தை.
ஊர்வசி பதிலளித்தாள்: ஆணழகனே, எந்த பெண்ணின் மனமும், பார்வையும் உம்மால் கவரப்படாமல் இருக்க முடியும்? உமது மார்பைப் புகலிடம் கொள்ளும் ஒரு பெண்ணால் உம்முடன் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்காமல் இருக்க முடியாதே!
பதம் 9.14.21
ஏதாவ் உரணகென ராஜன் ன்யாஸௌ ரக்ஷஸ்வ மானத
ஸம்ரம்ஸ்யே பவதா ஸாகம் ஸ்லாக்ய: ஸ்த்ரீணாம் வர: ஸ்ம்ருத:
ஏதௌ—இவ்விரு; உரணகௌ—செம்மறி ஆட்டுக் குட்டிகளுக்கும்; ராஜன்—புரூரவஸ் மகாராஜனே; ன்யாஸௌ—விழுந்து விட்ட; ரக்ஷஸ்வ—தயவுசெய்து பாதுகாப்புக் கொடுங்கள்; மான-த—விருந்தினருக்குச் சகல மரியாதைகளையும் அளிப்பவரே; ஸம்ரம்ஸ்யே—நான் சிற்றின்ப உறவை அனுபவிப்பேன்; பவதா ஸாகம்—உங்களுடன்; ஸ்லாக்ய:—உயர்ந்த; ஸ்த்ரீணாம்—ஒரு பெண்ணின்; வர:—கணவர்; ஸ்ம்ருத:—என்று கூறப்படுகிறது.
அன்புள்ள புரூரவஸ் மகாராஜனே, என்னுடன் கீழே விழுந்த இவ்விரு செம்மறி ஆட்டுக் குட்டிகளுக்கும் நீங்கள் அடைக்கலம் தந்தருள வேண்டுகிறேன். நான் சுவர்க்க லோகங்களைச் சேர்ந்தவளாகவும், நீங்கள் மண்ணுலகைச் சேர்ந்தவராகவும் இருந்த போதிலும், உங்களுடன் நான் சிற்றின்ப சுகத்தை நிச்சயமாக அனுபவிப்பேன். எல்லா வகையிலும் நீங்கள் உயர்ந்தவராக இருப்பதால், உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை.
பதம் 9.14.22
க்ருதம் மே வீர பக்ஷ்யம் ஸ்யான் நேக்ஷே த்வான்யத்ர மைதுனாத்
விவாஸஸம் தத் ததேதி ப்ரதிபேதே மஹாமனா:
க்ருதம்—நெய் அல்லது அமுதம்; மே—எனது; வீர—வீரரே; பக்ஷ்யம்—உணவாக; ஸ்யாத்—இருக்கும்; ந—கூடாது; ஈக்ஷே—நான் பார்க்க; த்வா—உங்களை; அன்யத்ர—வேறெந்த நேரத்திலும்; மைதுனாத்—புணரும் நேரத்தைத் தவிர; விவாஸஸம்—நிர்வாணமாக; தத்—அது; ததா இதி—அப்படியே ஆகட்டும்; ப்ரதிபேதே—என்று வாக்களித்தார்; மஹாமனா:—புரூரவஸ் மகாராஜன்.
ஊர்வசி கூறினாள்: “எனதன்பிற்குரிய வீரரே, நெய்யால் சமைக்கப்பட்டவை மட்டுமே என் உணவாக இருக்கும். மேலும் புணரும் நேரத்தைத் தவிர வேறெந்த நேரத்திலும் உங்களை நிர்வாணமாகக் காண நான் விரும்பவில்லை.” மகா மனம் படைத்தவரான புரூரவஸ் மகாராஜனும் இத்தீர்மானங்களை ஏற்றுக்கொண்டார்.
பதம் 9.14.23
அஹோ ரூபம் அஹோ பாவோ நர-லோக-விமோஹனம்
கோ ந ஸேவேத மனுஜோ தேவீம் த்வாம் ஸ்வயம் ஆகதாம்
அஹோ—அற்புதம்; ரூபம்—அழகும்; அஹோ—அற்புதம்; பாவ:—தோரணைகளும்; நர-லோக—மனித சமூகத்தில் அல்லது மண்ணுலகில்; விமோஹனம்—மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாய்; க—யார்தான்; ந—மாட்டார்; ஸேவேத—ஏற்றுக்கொள்ள; மனுஜ:—மனிதருக்கிடையில்; தேவிம்—ஒரு தேவதையை; த்வாம்—உன்னைப் போன்ற; ஸ்வயம் ஆகதாம்—சுய விருப்பத்துடன் வந்துள்ள.
புரூரவஸ் பதிலளித்தார்: அழகு மங்கையே, உன்னுடைய அழகு அற்புதம். உன் தோரணைகளும் அற்புதம். உண்மையில் மனித குலத்திற்கே நீ கவர்ச்சி மிக்கவளாக விளங்குகிறாய். எனவே, உன் சொந்த விருப்பத்தினால் நீ சுவர்க்க லோகத்திலிருந்து வந்திருப்பதால், உன்னைப் போன்ற ஒரு தேவதைக்குப் பணிவிடை செய்ய பூமியில் யார்தான் சம்மதிக்க மாட்டார்?
பதம் 9.14.24
தயா ஸ புருஷ-ஸ்ரேஷ்டோ ரமயந்த்யா யதார்ஹத:
ரேமே ஸுர-விஹாரேஷு காமம் சைத்ரரதாதிஷு
தயா—அவளுடன்; ஸ:—அவர்; புருஷ-ஸ்ரேஷ்ட:—மனிதரிலேயே மிகச் சிறந்தவர் (புரூரவஸ்); ரமயந்த்யா—அனுபவித்து; யதா-அர்ஹத:—இயன்றளவு; ரேமே—அனுபவித்தார்; ஸுர-விஹாரேஷு—சுவர்க்க லோக பூங்காக்களை ஒத்த இடங்களில்; காமம்—அவரது விருப்பம் போல்; சைத்ரரத-ஆதிஷு—சைத்ரரதம் முதலான மிகச்சிறந்த பூங்காக்களில்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: மனிதரிலேயே மிகச் சிறந்தவரான புரூரவஸ் ஊர்வசியுடன் சுதந்திரமாக சுகம் அனுபவிக்கத் துவங்கினார். ஊர்வசியும், தேவர்கள் சுகம் அனுபவிக்கும் சைத்ரரதம் மற்றும் நந்தனகானம் முதலான பல சுவர்க்கம் போன்ற இடங்களில் அவருடன் சிற்றின்பச் செயல்களில் ஈடுபட்டு வந்தாள்.
பதம் 9.14.25
ரமமாணஸ் தயா தேவ்யா பத்ம கிஞ்சல்க கந்தயா
தன் முகாமோத முஷிதோ முழுதே ‘ஹர் கணான் பஹூன்
ரமமாண:—புணர்ச்சியை அனுபவித்து; தயா—அவளுடன்; தேவ்யா—தேவதை; பத்ம—தாமரையின்; கிஞ்சல்க—குங்குமப் பொடியைப் போல்; கந்தயா—யாருடைய நறுமணம்; தத்-முக—அவளது அழகு முகம்; ஆமோத—நறுமணத்தால்; முஷித:—மென்மேலும் உற்சாகப்படுத்தப்பட்டு; முமுதே—வாழ்வை அனுபவித்தார்; அஹ:-கணான்—நாட்களாக; பஹூன்—பல.
ஊர்வசியின் உடல் தாமரையின் குங்குமப் பொடிபோல் நறுமணம் வீசியது. அவளது முகம் மற்றும் தேகத்தின் நறுமணத்தால் உற்சாகமடைந்த புரூரவஸ், பெரும் ஆனந்தத்துடன் பல நாட்களாக அவளுடன் சுகம் அனுபவித்து வந்தார்.
பதம் 9.14.26
அபஸ்யன் உர்வசீம் இந்ரோ கந்தர்வான் ஸமசோதயத்
உர்வசீ-ரஹிதம் மஹ்யம் ஆஸ்தானம் நாதிசோபதே
அபஸ்யன்—காணாமல்; உர்வசீம்—ஊர்வசியை; இந்ர:—சுவர்க்க லோக அரசர்; கந்தர்வான்—கந்தர்வர்களிடம்; ஸமசோதயத்—கட்டளையிட்டார்; உர்வசீ-ரஹிதம்—ஊர்வசி இல்லாமல்; மஹ்யம்—என்; ஆஸ்தானம்—அவை; ந—இல்லை; அதிசோபதே—அழகாக காணப்படுகிறது.
சுவர்க்க ராஜனான இந்திரன் தன் அரண்மனையில் ஊர்வசியைக் காணாது, “ஊர்வசி இல்லாமல் என் அரண்மனை பொலிவிழந்து கிடக்கிறது.” என்று கூறினார். இதனால் அவளை மீண்டும் சுவர்க்க லோகத்திற்கு அழைத்து வரும்படி கந்தர்வர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
பதம் 9.14.27
தே உபேத்ய மஹா-ராத்ரே தமஸி ப்ரத்யுபஸ்திதே
உர்வஸ்யா உரணௌ ஜஹ்ருர் ன்யஸ்தௌ ராஜனி ஜாயயா
தே—அவர்கள், கந்தர்வர்கள்; உபேத்ய—அங்கு சென்று; மஹாராத்ரே—நடுஇரவில்; தமஸி ப்ரத்யுபஸ்திதே—இருளடர்ந்த சமயத்தில்; உர்வஸ்யா—ஊர்வசியால்; உரணௌ—இரு செம்மறி ஆட்டுக்குட்டிகளை; ஜஹ்ரு:—திருடிக்கொண்டு சென்றனர்; ன்யஸ்தௌ—பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட; ராஜனி—அரசரிடம்; ஜாயயா—அவரது மனைவி ஊர்வசியால்.
இவ்வாறாக பூமிக்கு வந்த கந்தவர்கள், இருளடர்ந்து நள்ளிரவு நேரத்தில், புரூரவஸ்ஸின் வீட்டிற்குள் தோன்றி, அரசரின் மனைவியான ஊர்வசியால் ஒப்படைக்கப்பட்ட இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் திருடிச் சென்றனர்.
பதம் 9.14.28
நிசம்யாக்ரந்திதம் தேவீ புத்ரயோர் நீயமானயோ:
ஹதாஸ்மி அஹம் குணாதேன நபும்ஸா வீர-மானினா
நிசம்ய—கேட்டதால்; ஆக்ரந்திதம்—(திருடப்படுவதால்) கதறலை; தேவீ—ஊர்வசி; புத்ரயோ:—மகன்களாகப் பாவித்த இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளின்; நீயமானயோ:—அவை தூக்கிச் செல்லப்படும் போது; ஹதாஸ்மி அஹம்—நான் கொல்லப்படுகிறேன்; கு-நாதேன—கெட்ட கணவரின் பாதுகாப்பின் கீழ்; ந-பும்ஸா—அலியால்; வீர-மானினா—தன்னை ஒரு வீரராக கருதிய போதிலும்.
இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் ஊர்வசி தன் சொந்த மகன்களைப் போல் பாவித்தாள். எனவே, கந்தர்வர்களால் தூக்கிச் செல்லப்படும்போது அவை கத்தத் துவங்கின. அதைக் கேட்ட ஊர்வசி பின்வருமாறு தன் கணவரைத் திட்டினாள், “ஒரு கோழையாகவும், ஓர் அலியாகவும் இருந்தாலும் தன்னை ஒரு சிறந்த வீரர் என்று நினைக்கும் தகுதியற்ற ஒரு கணவரின் பாதுகாப்பிலுள்ள நான் இப்பொழுது கொல்லப்படுகிறேன்.”
பதம் 9.14.29
யத் விஸ்ரம்பாத் அஹம் நஷ்டா ஹ்ருதாபத்யா ச தஸ்யுபி:
ய: சேதே நிசி ஸந்த்ரஸ்தோ யதா நாரீ திவா புமான்
யத்-விஸ்ரம்பாத்—யாரை நம்பியிருந்ததன் காரணத்தால்; அஹம்—நான்; நஷ்டா—இழந்தேன்; ஹ்ருத-அபத்யா—என் இரு மகன்களான ஆட்டுக்குட்டிகளை இழந்து; ச—தவிரவும்; தஸ்யுபி:—கொள்ளைக்காரர்களால்; ய:—அவர் (பெயரளவேயான என் கணவர்); சேதே—படுத்துக்கிடக்கிறார்; நிசி—இரவில்; ஸந்த்ரஸ்த:—அச்சத்தால்; யதா—போல்; நாரீ—ஒரு பெண்; திவா—பகலில்; புமான்—ஆண்.
“அவரையே நான் நம்பியிருந்ததால், கொள்ளைக்காரர்கள் என் இரு மகன்களாக உள்ள ஆட்டுக் குட்டிகளை தூக்கிக் கொண்டு போய்விட்டனர். எனவே இப்பொழுது என்னையே நான் இழந்தேன். பகலில் என் கணவர் ஓர் ஆணைப்போல் காணப்பட்டாலும், இரவில் அவர் ஒரு பெண்ணைப் போல் அச்சத்துடன் படுத்துக் கிடக்கிறார்.
பதம் 9.14.30
இதி வாக்-ஸாயகைர் பித்த: ப்ரதோத்ரைர் இவ குஞ்சர:
நிசி நிஸ்த்ரிம்சம் ஆதாய விவஸ்த்ரோ ‘ப்யத்ரவத் ருஷா
இதி—இவ்வாறாக; வாக்-ஸாயகை:—அம்புபோன்ற கடினமான வார்த்தைகளால்; பித்த:—துளைக்கப்பட்டு; ப்ரதோத்ரை:—அங்குசகங்களால்; இவ—போல்; குஞ்சர:—ஒரு யானையை; நிசி—இரவில்; நிஸ்த்ரிம்சம்—ஒரு வாளை; ஆதாய—எடுத்துக்கொண்டு; விவஸ்த்ர:—நிர்வாணமாக; அப்யத்ரவத்—வெளியே சென்றார்; ருஷா—கோபத்துடன்.
யானை, ஒரு யானைப்பாகனால் அங்குசத்தைக் கொண்டு குத்தப்படுவதைப் போலவே, ஊர்வசியின் கூர்மையான சொற்களால் குத்தப்பட்ட புரூரவஸ் கடுங்கோபமடைந்தார். உடைகூட அணியாமல், வாளை எடுத்துக் கொண்டு நிர்வாணமாக இரவில், ஆட்டுக் குட்டிகளை திருடிச்சென்ற கந்தர்வர்களைப் பின்தொடர்ந்து வெளியே சென்றார்.
பதம் 9.14.31
தே விஸ்ருஜ்யோரணௌ தத்ர வ்யத்யோதந்த ஸ்ம வித்யுத:
ஆதாய மேஷௌ ஆயாந்தம் நக்னம் ஐக்ஷத ஸா பதிம்
தே—அவர்கள், கந்தர்வர்கள்; விஸ்ருஜ்ய—விட்டபின்; உரணௌ—இரு ஆட்டுக் குட்டிகளையும்; தத்ர—அங்கேயே; வ்யத்யோதந்த ஸ்ம—ஒளிமயமாக்கினர்; வித்யுத:—மின்னலைப் போல் பிரகாசித்து; ஆதாய—கையில் எடுத்துக்கொண்டு; மேஷௌ—இரு ஆட்டுக்குட்டிகளையும் ஆயாந்தம்—திரும்புவதை; நக்னம்—நிர்வாணமாக; ஐக்ஷத—கண்டாள்; ஸா—ஊர்வசி; பதிம்—அவளது கணவர்.
இரு ஆட்டுக்குட்டிகளையும் கீழே விட்டதும், கந்தவர்கள் மின்னலைப் போல் பிரகாசித்து, புரூரவஸ்ஸின் வீட்டை ஒளிமயமாக்கினர். பிறகு தன் கணவர் ஆட்டுக்குட்டிகளுடன் திரும்பி வருவதையும், ஆனால் நிர்வாணமாக இருப்பதையும் கண்டதால் ஊர்வசி அங்கிருந்து சென்றுவிட்டாள்.
பதம் 9.14.32
ஐலோ ‘பி சயனே ஜாயாம் அபஸ்யன் விமனா இவ
தச்-சித்தோ விஹ்வல: சோசன் பப்ராமோன்மத்தவன் மஹீம்
ஐல:—புரூரவஸ்; அபி—கூட; சயனே—கட்டிலில்; ஜாயாம்—தன் மனைவியை; அபஸ்யன்—காணாமல்; விமனா:—வருந்தினார்; இவ—அதைப் போல்; தத்-சித்த:—அவளிடம் கொண்ட அளவுக்கதிகமான பற்றினால்; விஹ்வல:—மனக்கஷ்டமடைந்து; சோசன்—வருத்தத்துடன்; பப்ராம—பிரயாணம் செய்தார்; உன்மத்த-வத்—ஒரு பித்தனைப்போல்; மஹீம்—பூமியில்.
கட்டிலில் ஊர்வசியைக் காணாததால் புரூரவஸ் மிகவும் வருந்தினார். அவளிடம் கொண்ட பெரும் கவர்ச்சியின் காரணத்தால், மிகவும் மனவருத்தமடைந்தார். இவ்வாறு வருத்தப்பட்ட அவர், ஒரு பித்தனைப்போல் பூமியில் சஞ்சரிக்கத் துவங்கினார்.
பதம் 9.14.33
ஸ தாம் வீக்ஷ்ய குருக்ஷேத்ரே ஸரஸ்வத்யாம் ச தத்-ஸகீ:
பஞ்ச ப்ரஹ்ருஷ்ட-வதன: ப்ராஹ ஸூக்தம் புரூரவா:
ஸ:—அவர், புரூரவஸ்; தாம்—ஊர்வசியை; வீக்ஷ்ய—கண்டு; குருக்ஷேத்ரே—குருட்சேத்திரம் என்ற இடத்தில்; ஸரஸ்வத்யாம்—சரஸ்வதி நதிக் கரையில்; ச—கூட; தத்-ஸ்கீ:—அவளது தோழிகளும்; பஞ்ச—ஐந்து; ப்ரஹ்ருஷ்ட-வதன:—மகிழ்ச்சியால் புன்னகை செய்து; ப்ராஹ—கூறினார்; ஸூக்தம்—இனிய சொற்களை; புரூரவா:—புரூரவஸ் மகாராஜன்.
உலக முழுவதிலும் பிரயாணம் செய்தபோது, ஒருமுறை குருட்சேத்திரத்திலுள்ள சரஸ்வதி நதிக்கரையில், ஐந்து தோழிகளுடன் ஊர்வசி இருந்ததைக் கண்டார். பிறகு அவர் முகத்தில் ஆனந்தம் தவழ, இனிய வார்த்தைகளால் அவளிடம் பின்வருமாறு பேசலானார்.
பதம் 9.14.34
அஹோ ஜாயே திஷ்ட திஷ்ட கோரே ந த்யக்தும் அர்ஹஸி
மாம் த்வம் அத்யாபி அனிர்வ்ருத்ய வசாம்ஸி க்ருணவாவஹை
அஹோ—’ஒ’; ஜாயே—எனதன்புள்ள மனைவியே; திஷ்ட திஷ்ட—தயவுசெய்து பொறுத்திரு, பொறுத்திரு; கோரே—இரக்கமற்றவளே; ந—இல்லை; த்யக்தும் அர்ஹஸி—நீ கைவிட நினைத்தாலும்; மாம்—என்னை; த்வம்—நீ; அத்ய அபி—இன்றுவரை; அனிர்வ்ருத்ய—என்னிடமிருந்து எந்த சுகத்தையும் பெறாததால்; வசாம்ஸி—சில வார்த்தைகளை; க்ருணவாவஹை—சிறிது நேரம் பேசுவோம்.
எனதன்புள்ள மனைவியே, இரக்கமற்றவளே, தயவுசெய்து பொறுத்திரு, பொறுத்திரு. இன்றுவரை உன்னை நான் மகிழ்ச்சிப்படுத்தியதே இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அக்காரணத்திற்காக என்னை நீ கைவிட்டு விடக் கூடாது. அது சரியல்ல. என்னுடைய உறவையே விட்டுவிடுவதென நீ முடிவு செய்திருந்தாலும், நாம் சிறிது நேரம் பேசலாமே.
பதம் 9.14.35
ஸுதேஹோ ‘யம் பததி அத்ர தேவி தூரம் ஹ்ருதஸ் த்வயா
காதந்தி ஏனம் வ்ருகா க்ருத்ராஸ் த்வத்-ப்ரஸாதஸ்ய நாஸ்பதம்
ஸு-தேஹ:—மிகவும் அழகான உடல்; அயம்—இந்த; பததி—இப்பொழுது விழுந்து விடும்; அத்ர—இந்த இடத்திலேயே; தேவி—ஓ ஊர்வசி; தூரம்—வெகு தூரம்; ஹ்ருத:—எடுத்துச் சென்று; த்வயா—உன்னால்; காதந்தி—அவை தின்றுவிடும்; ஏனம்—இதை (உடலை); வ்ருகா:—நரிகள்; க்ருத்ரா:—கழுகுகள்; த்வத்—உன்; ப்ரஸாதஸ்ய—கருணையில்; ந—இல்லை; ஆஸ்பதம்—பொருத்தமாக.
ஓ தேவதையே, இப்பொழுது நீ என்னை ஏற்க மறுத்துவிட்டாய். இதனால் என்னுடைய அழகிய உடல் இங்கேயே விழுந்துவிடும். இவ்வுடல் உன் சுகத்திற்குப் பொருத்தமற்றதாக இருப்பதால், இது நரிகளாலும், கழுகுகளாலும் தின்னப்படும்.
பதம் 9.14.36
ஊர்வசி உவாச
மா ம்ருதா: புருஷோ ‘ஸி த்வம் மா ஸ்ம த்வாத்யுர் வ்ருகா இமே
க்வாபி ஸக்யம் ந வை ஸ்த்ரீணாம் வ்ருகாணாம் ஹ்ருதயம் யதா
ஊர்வசி உவாச—ஊர்வசி கூறினாள்; மா—வேண்டாம்; ம்ருதா:—உங்கள் உயிரை விட்டுவிட; புருஷ:—ஆண்; அஸித்வம்—நீர்; மாஸ்ம—அதை அனுமதிக்க வேண்டாம்; த்வா—உங்களை; அத்யு:—தின்று விடக்கூடும்; வ்ருகா:—நரிகள்; இமே—இப்புலன்கள் (புலன்களுக்கு அடிமையாகாதீர்); க்வ அபி—எங்கும்; ஸக்யம்—நட்பு; ந—இல்லை; வை—உண்மையில்; ஸ்த்ரீணாம்—பெண்களின்; வ்ருகாணாம்—நரிகளின்; ஹ்ருதயம்—இதயம்; யதா—போன்றது.
ஊர்வசி கூறினாள்: அன்புள்ள அரசே, நீங்கள் ஓர் ஆண், வீரர். பொறுமையிழந்து உயிர் துறக்க வேண்டாம். நிதானமாக இருங்கள். நரிகளைப் போல், உமது புலன்களே உம்மை வென்றுவிட அனுமதிக்க வேண்டாம். நரிகள் உம்மைத் தின்றுவிடும்படி செய்யாதீர். மாறாக, பெண்ணின் இதயம் நரியைப் போன்றது என்பதை நீர் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுடன் நட்புக் கொள்வதில் பயனில்லை.
பதம் 9.14.37
ஸ்த்ரியோ ஹி அகருணா: க்ரூரா துர்மர்ஷா: ப்ரிய-ஸாஹஸா:
க்னந்தி அல்பார்தே ‘பி விஸ்ரப்தம் பதிம் ப்ராதரம் அபி உத
ஸ்த்ரிய:—பெண்கள்; ஹி—உண்மையில்; அகருணா:—இரக்கமற்றவர்கள்; க்ரூரா:—கபடமுள்ளவர்கள்; துர்மர்ஷா:—பொறுமையற்றவர்கள்; ப்ரிய-ஸாஹஸா:—தங்களுடைய சொந்த சுகத்திற்காக எதையும் செய்யக் கூடியவர்கள்; க்னந்தி—அவர்கள் சென்று விடுவார்கள்; அல்ப-அர்தே—அற்ப காரணத்திற்காகவும்; அபி—உண்மையில்; விஸ்ரப்தம்—விசுவாசமுள்ள; பதிம்—கணவனையும்; ப்ராதரம்—சகோதரனையும்; அபி—கூட; உத—என்று கூறப்படுகிறது.
பெண்கள் பிரிவினர் இரக்கமற்றவர்களும், கபடமுள்ளவர்களுமாவர். சிறு பிழையையும் அவர்களால் பொறுக்க முடியாது. தங்களுடைய சொந்த சுகத்திற்காக அவர்கள் எந்த அதர்மத்தையும் செய்யக் கூடியவர்கள் என்பதால், விசுவாசமுள்ள ஒரு கணவனையோ அல்லது சகோதரனையோ கூட அவர்கள் கொல்லத் தயங்கமாட்டார்கள்.
பதம் 9.14.38
விதாயாலீக-விஸ்ரம்பம் அக்ஞேஷு த்யக்த-ஸௌஹ்ருதா:
நவம் நவம் அபீப்ஸந்த்ய: பும்ஸ்சல்ய: ஸ்வைர-விருத்தய:
விதாய—ஏற்படுத்திக் கொள்வதால்; அலீக—பொய்யான; விஸ்ரம்பம்—விசுவாசத்தை; அக்ஞேஷு—முட்டாள்களிடம்; த்யக்த-ஸௌஹ்ருதா:—நண்பர்களின் உறவைத் துறந்தவர்கள்; நவம்—புது; நவம்—புது; அபீப்ஸந்த்ய:—விரும்பி; பும்ஸ்சல்ய:—பிற ஆண்களால் சுலபமாக வசியப்படுத்தப்படும் பெண்கள்; ஸ்வைர—சுதந்திரமாக; வ்ருத்தய:—தொழிலாக.
ஆண்களால் பெண்கள் மிகவும் சுலபமாக நெறிதவறச் செய்யப்படுகின்றனர். எனவே நெறி கெட்ட பெண்கள், அவர்களுடைய நலனில் அக்கறை கொண்டுள்ள ஒருவனின் நட்பைத் துறந்து, முட்டாள்களுக்கிடையில் பொய்யான நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவராக புதுப்புது நண்பர்களை தேடிச் செல்கின்றனர்.
பதம் 9.14.39
ஸம்வத்ஸராந்தே ஹி பவான் ஏக-ராத்ரம் மயேஸ்வர:
ரம்ஸ்யதி அபத்யானி ச தே பவிஷ்யந்தி அபராணி போ:
ஸம்வத்ஸர-அந்தே—ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும்; ஹி—உண்மையில்; பவான்—நீங்கள்; ஏக-ராத்ரம்—ஓரிரவு மட்டுமே; மயா—என்னுடன்; ஈஸ்வர:—என் கணவராக; ரம்ஸ்யதி—சிற்றின்ப வாழ்வை அனுபவிப்பீர்கள்; அபத்யானி—குழந்தைகள்; ச—கூட; தே—உங்களுடைய; பவிஷ்யந்தி—உற்பத்தியாவார்கள்; அபராணி—ஒவ்வொருவராக; போ:—அரசே.
அரசே, ஒவ்வோராண்டின் இறுதியிலும், ஓரிரவு மட்டுமே என்னுடைய கணவராக என்னுடன் நீங்கள் சுகம் அனுபவிக்க இயலும். இவ்வாறாக, ஒருவர் பின் ஒருவராக மற்ற குழந்தைகளும் உங்களுக்குக் கிடைப்பார்கள்.
பதம் 9.14.40
அந்தர்வத்னீம் உபாலக்ஷ்ய தேவீம் ஸ ப்ரயயௌ புரீம்
புனஸ் தத்ர கதோ ‘ப்தாந்தே உர்வசீம் வீர-மாதரம்
அந்தர்வத்னீம்—கர்ப்பிணி; உபாலக்ஷ்ய—என்பதைக் கண்டதால்; தேவீம்—ஊர்வசி; ஸ:—அவர், புரூரவஸ் மகாராஜன்; ப்ரயயௌ—திரும்பிச் சென்றார்; புரீம்—தன் அரண்மனைக்கு; புன:—மீண்டும்; தத்ர—அதே இடத்தில்; கத:—சென்றார்; அப்த-அந்தே—ஆண்டு முடிவில்; உர்வசீம்—ஊர்வசி; வீர-மாதரம்—ஒரு க்ஷத்திரிய மகனின் தாய்.
ஊர்வசி கர்ப்பிணியாக இருப்பதைப் புரிந்து கொண்ட புரூரவஸ் தன் அரண்மனைக்குத் திரும்பினார். ஆண்டுக் கடைசியில், குருட்சேத்திரத்தில், மீண்டும் ஊர்வசியின் சகவாசத்தை அவர் பெற்றார். அப்போது அவள் ஒரு வீர மகனுக்குத் தாயாக இருந்தாள்.
பதம் 9.14.41
உபலப்ய முதா யுக்த: ஸமுவாஸ தயா நிசாம்
அதைனம் ஊர்வசீ ப்ராஹ க்ருபாணம் விரஹாதுரம்
உபலப்ய—சகவாசத்தைப் பெற்று; மூதா—பெரு மகிழ்ச்சியுடன்; யுக்த:—இணைந்து; ஸமுவாஸ—புணர்ச்சியில் அவளது உறவை அனுபவித்தார்; தயா—அவளுடன்; நிசாம்—அன்றிரவு; அத—அதன்பிறகு; ஏனம்—புரூரவஸ் மகாராஜனிடம்; ஊர்வசி—ஊர்வசி என்ற பெண்; ப்ராஹ—கூறினாள்; க்ருபணம்—ஏழை மனம் படைத்தவரிடம்; விரஹ-ஆதுரம்—பிரிவை பற்றிய எண்ணத்தால் துன்புற்று.
வருடக் கடைசியில் ஊர்வசியை மறுபடியும் அடைந்த புரூரவஸ் மகாராஜன் பெரு மகிழ்ச்சியடைந்து, ஓரிரவு அவளுடன் சிற்றின்ப உறவை அனுபவித்தார். ஆனால் அவளது பிரிவைப்பற்றி எண்ணியதும் அவர் மனவருத்தமடைந்தார். எனவே ஊர்வசி அவரிடம் பின்வருமாறு பேசினாள்.
பதம் 9.14.42
கந்தர்வான் உபதாவேமாம்ஸ் துப்யம் தாஸ்யந்தி மாம் இதி
தஸ்ய ஸம்ஸ்துவதஸ் துஷ்டா அக்னி-ஸ்தாலிம் ததுர் ந்ருப
உர்வசீம் மன்யமானஸ் தாம் ஸோ ‘புத்யத சரன் வனே
கந்தர்வான்—கந்தர்வர்களிடம்; உபதாவ—தஞ்சமடையுங்கள்; இமான்—இவர்கள்; துப்யம்—உங்களிடம்; தாஸ்யந்தி—ஒப்படைப்பார்கள்; மாம் இதி—என்னைப் போலவே, அல்லது உண்மையாக என்னையே; தஸ்ய—அவரால்; ஸம்ஸ்துவத:—பிரார்த்திக்கப்பட்டு; துஷ்டா:—திருப்தியடைந்ததால்; அக்னி-ஸ்தாலீம்—நெருப்பிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு பெண்; தது:—ஒப்படைத்தனர்; ந்ருப—அரசே; உர்வசீம்—ஊர்வசி; மன்யமான:—நினைத்து; தாம்—அவளை; ஸ:—அவர் (புரூரவஸ்); அபுத்யத—உண்மையாகப் புரிந்து கொண்டார்; சரன்—நடந்து செல்லும் பொழுது; வனே—வனத்தில்.
ஊர்வசி கூறினாள்: “அன்புள்ள அரசே, கந்தர்வர்களால் என்னை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க முடியும் என்பதால் அவர்களைத் தஞ்சமடையுங்கள்.” இவ்வார்த்தைகளுக்கேற்ப, அரசரும் பிரார்த்தனைகளால் கந்தர்வர்களைத் திருப்திப்படுத்தினார். அவரிடம் திருப்தியடைந்த கந்தர்வர்கள், ஊர்வசியைப் போலவே காணப்பட்ட ஓர் அக்னிஸ்தாலிப் பெண்ணை அவருக்குக் கொடுத்தனர். அவள் ஊர்வசி தான் என்ற நினைப்புடன் அரசர் அவளுடன் வனத்தில் நடக்கத் துவங்கினார். ஆனால் பிறகு அவள் ஊர்வசியல்ல, அக்னிஸ்தாலி என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
பதம் 9.14.43
ஸ்தாலீம் ன்யஸ்ய வனே கத்வா க்ருஹான் ஆத்யாயதோ நிசி
த்ரேதாயாம் ஸம்ப்ரவ்ருத்தாயாம் மனஸி த்ரய் அவர்தத
ஸ்தலீம்—அக்னிஸ்தாலீ என்ற பெண்ணை; நஸ்ய—உடனே கைவிட்டு; வனே—வனத்தில்; கத்வா—திரும்பியதும்; க்ருஹான்—வீடு; ஆத்யாயத:—ஆழ்ந்து சிந்திக்கத் துவங்கினார்; நிசி—இரவு முழுவதும்; த்ரேதாயாம்—திரேதாயுகம்; ஸம்ப்ரவ்ருத்தாயாம்—ஆரம்பமாகும் தறுவாயில் இருந்தபோது; மனஸி—மனதில்; த்ரயீ—மூன்று வேதங்களின் கோட்பாடுகள்; அவர்தத—வெளிப்பட்டன.
பிறகு அக்னிஸ்தாலியை வனத்திலேயே விட்டுவிட்டு வீடு திரும்பிய புரூரவஸ் மகாராஜன் இரவு முழுவதும் ஊர்வசியைப் பற்றியே தியானித்தார். இவ்வாறு அவர் தியானம் செய்து வந்த நேரத்தில், திரேதாயுகம் துவங்கியது. இதனால் பலன்கருதும் செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய யாகத்தைச் செய்யும் முறை உட்பட, மூவேதக் கோட்பாடுகளும் அவருடைய இதயத்தில் தோன்றின.
பதங்கள் 9.14.44 – 9.14.45
ஸ்தாலீ-ஸ்தானம் கதோ ‘ஸ்வத்தம் சமீ-கர்பம் விலக்ஷ்ய ஸ:
தேன த்வே அரணீ க்ருத்வா உர்வசீ-லோக-காம்யயா
உர்வசீம் மந்த்ரதோ த்யாயன் அதராரணிம் உத்தராம்
ஆத்மானம் உபயோர் மத்யே யத் தத் ப்ரஜனனம் ப்ரபு:
ஸ்தாலீ-ஸ்தானம்—அக்னிஸ்தாலி விட்டுச் செல்லப்பட்ட இடத்திற்கு; கத:—அங்கு சென்று; அஸ்வத்தம்—ஓர் அஸ்வத்த மரத்தை; சமீ-கர்பம்—ஒரு சமீ மரத்தின் கர்ப்பத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட; விலக்ஷ்ய—கண்டு; ஸ:—அவர், புரூரவஸ்; தேன—அதிலிருந்து; த்வே—இரு; அரணீ—யாகத் தீயை மூட்டுவதற்குத் தேவையான குச்சிகளை; க்ருத்வா—செய்து; உர்வசிலோக-காம்யயா—ஊர்வசி வசிக்கும் லோகத்திற்குச் செல்ல விரும்பி; உர்வசீம்—ஊர்வசியை; மந்த்ரத:—தேவையான மந்திரத்தை உச்சரித்து; த்யாயன்—தியானித்து; அதர—கீழுள்ளதை; அரணி—குச்சி; உத்தராம்—மேலுள்ளதை; ஆத்மானம்—தானாகவும்; உபயோ: மத்யே—இரண்டிற்கும் நடுவில்; யத் தத்—எதை (அவர் தியானித்தாரோ); ப்ரஜனனம்—ஒரு மகனாக; ப்ரபு:—அரசர்.
கர்ம-காண்டத்தைச் செய்யும் முறை தன் இதயத்தில் தோன்றியதும், புரூரவஸ் மகாராஜன், தான் அக்னிஸ்தாலியை விட்டுச் சென்ற அதே இடத்திற்குச் சென்றார். அங்குள்ள ஒரு சமீ மரத்தின் கர்ப்பத்திலிருந்து, ஓர் அஸ்வத்த மரம் முளைத்திருப்பதை அவர் கண்டார். பிறகு அவர் அம்மரத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து அதை இரு அரணிகளாகச் செய்தார். ஊர்வசி வசிக்கும் கிரகத்திற்குச் செல்ல விரும்பிய அவர், ஊர்வசியைக் கீழே உள்ள குச்சியாகவும், தன்னை மேலே உள்ள குச்சியாகவும், இரண்டிற்கும் நடுவிலுள்ள குச்சியை தன் மகனாகவும் தியானித்து மந்திரங்களை உச்சரித்தார். இவ்விதமாக அவர் ஒரு தீயை மூட்டத் துவங்கினார்.
பதம் 9.14.46
தஸ்ய நிர்மந்தனாஜ் ஜாதோ ஜாத-வேதா விபாவஸு:
த்ரய்யா ஸ வித்யயா ராஜ்ஞா புத்ரத்வே கல்பிதஸ் த்ரி-வ்ருத்
தஸ்ய—புரூரவஸ்ஸின்; நிர்மந்தனாத்—உராய்வினால்; ஜாத:—பிறந்தான்; ஜாத-வேதா:—வேதக் கோட்பாடுகளின்படி பெளதிக சுகத்திற்குரிய; விபாவஸு:—ஒரு தீ; த்ரய்யா—வேதக் கொள்கைகளைப் பின்பற்றி; ஸ:—தீ; வித்யயா—அத்தகைய ஒரு முறையால்; ராஜ்ஞா—அரசரால்; புத்ரத்வே—ஒரு மகன் பிறந்தான்; கல்பித:—அது அப்படியானது; த்ரி-வ்ருத்—ஓம் என்ற பிரணவத்தைக் குறிக்கும் அ-உ-ம் என்ற அக்ஷரங்களின் சேர்க்கை.
புரூரவஸ்ஸால் தேய்க்கப்பட்ட அரணிகளிலிருந்து ஒரு தீ வந்தது. அத்தகைய ஒரு தீயால் பெளதிக சுகபோகத்தில் சர்வ வெற்றியை அடைய முடியும். மேலும் பௌதிக, ஆன்மீக பிறப்புகளில் தூய்மையடைய முடியும். அத்துடன் அ-உ-ம் என்ற அக்ஷரங்களின் சேர்க்கையால் ஆரம்பிக்கப்படும் யாகத்தைச் செய்வதிலும் வெற்றி பெற முடியும்.
பதம் 9.14.47
தேனாயஜத யக்ஞேசம் பகவந்தம் அதோக்ஷஜம்
உர்வசீ-லோகம் அன்விச்சன் ஸர்வ-தேவமயம் ஹரிம்
தேன—அத்தகைய ஒரு தீயை உண்டாக்கியதன் மூலம்; அயஜத—அவர் வழிபட்டார்; யக்ஞ-ஈசம்—யாகத்தின் அதிபதியான அல்லது அதை அனுபவிப்பவரான; பகவந்தம்—பரமபுருஷரை; அதோக்ஷஜம்—புலன்களின் உணர்வுக்கு அப்பாற்பட்ட; உர்வசீ-லோகம்—ஊர்வசி வாழ்ந்து வந்த கிரகத்திற்கு; அன்விச்சன்—செல்ல விரும்பிய போதிலும்; ஸர்வ-தேவ-மயம்—அனைத்து தேவர்களுக்கும் பிறப்பிடமான; ஹரிம்—பரமபுருஷர்.
ஊர்வசி வசிக்கும் கிரகத்திற்குச் செல்ல விரும்பிய புரூரவஸ், அத்தீயினால் ஒரு யாகத்தைச் செய்து, யாகப் பலன்களை அனுபவிப்பவரான பரமபுருஷ பகவான் ஹரியை திருப்திப்படுத்தினார். இவ்வாறாக, புலன்களால் உணர முடியாதவரும், அனைத்து தேவர்களுக்கும் பிறப்பிடமுமான பகவானை அவர் வழிபட்டார்.
பதம் 9.14.48
ஏக ஏவ புரா வேத: ப்ரணவ: ஸர்வ-வாங்மய:
தேவோ நாராயணோ நான்ய ஏகோ ‘க்னிர் வர்ண ஏவ ச
ஏக:—ஒன்று மட்டுமே; ஏவ—உண்மையில்; புரா—முன்பு; வேத:—வேதம்; ப்ரணவ:—ஒம்காரம்; ஸர்வ-வாக்-மய:—எல்லா வேத மந்திரங்களையும் கொண்ட; தேவ:—இறைவன், பகவான்; நாராயண:—நாராயணர் மட்டுமே (கலியுகத்தில் வழிபடப்பட்டார்); ந அன்ய:—வேறுயாருமல்ல; ஏக:-அக்னி:—அக்னிக்கு ஒரு பிரிவு மட்டுமே; வர்ண:—சமூகப் பிரிவு; ஏவ ச—மேலும் நிச்சயமாக.
முதல் யுகமான சத்திய யுகத்தில், எல்லா வேத மந்திரங்களும் ஒரே பிரணவ மந்திரத்தில் அடங்கியிருந்தன. எல்லா வேத மந்திரங்களுக்கும் வேர் இப்பிரணவ மந்திரமே அதாவது, அதர்வ வேதம் மட்டுமே எல்லா வேத அறிவிற்கும் மூலமாகும். பரமபுருஷரான நாராயணர் மட்டுமே வழிபாட்டுக்குரிய தெய்வமாக இருந்தார்; தேவர்களின் வழிபாடு சிபாரிசு செய்யப்படவில்லை. நெருப்பும் ஒன்றாகவே இருந்தது. மேலும் மனித சமுதாயத்திலிருந்த ஒரே பிரிவு ஹம்ஸம் எனப்பட்டது.
பதம் 9.14.49
புரூரவஸ ஏவாஸீத் த்ரயீ த்ரேதா-முகே ந்ருப
அக்னினா ப்ரஜயா ராஜா லோகம் காந்தர்வம் ஏயிவான்
புரூரவஸ:—புரூரவஸ் மகாராஜனிடமிருந்து; ஏவ—இவ்வாறாக; ஆஸீத்—இருந்து; த்ரயீ—கர்மம், ஞானம் மற்றும் உபாஸனா என்ற வேதக்கொள்கைகள்; த்ரேதா-முகே—திரேதா யுகத்தின் ஆரம்பத்தில்; ந்ரப—பரீட்சித்து மகாராஜனே; அக்னினா—யாகத்தீயை உண்டாக்கியதாலேயே; ப்ரஜயா—அவரது மகனால்; ராஜா—புரூரவஸ் மகாராஜன்; லோகம்—கிரகத்தை; காந்தர்வம்—கந்தர்வர்களின்; ஏயிவான்—அடைந்தார்.
பரீட்சித்து மகாராஜனே, திரேதா யுகத்தின் ஆரம்பத்தில், புரூரவஸ் மகாராஜன் ஒரு கர்ம-காண்ட யாகத்தைத் துவக்கி வைத்தார். இவ்வாறாக யாகத்தீயை தன் மகனாகக் கருதிய புரூரவஸ்ஸால், அவரது விருப்பப்படியே கந்தர்வ லோகத்திற்குச் செல்ல முடிந்தது.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “புரூரவஸ் மகாராஜன் ஊர்வசிக்கு வசியமாதல்” எனும் தலைப்பை கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.