அத்தியாயம் – 11
ஸ்ரீ ராம:ராஜ்யம்
பதம் 9.11.1
ஸ்ரீ-சுக உவாச
பகவான் ஆத்மனாத்மானம் ராம உத்தம-கல்பகை:
ஸர்வ-தேவமயம் தேவம் ஈஜே ‘தாசார்யவான் மகை:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பகவான்—பரமபுருஷர்; ஆத்மனா—அவராலேயே; ஆத்மானம்—அவரே; ராம:—பகவான் ராமச்சந்திரர்; உத்தம-கல்பகை:—செல்வம் கொழிக்கும் பொருட்களுடன்; ஸர்வ-தேவ-மயம்—எல்லா தேவர்களுக்கும் உயிரும், உடலுமான; தேவம்—பரமபுருஷர் தாமாகவே; ஈஜே—வழிபட்டார்; அத—இவ்வாறாக; ஆசார்யவான்—ஓர் ஆசார்யரின் வழிகாட்டலின் கீழ்; மகை:—யாகங்களைச் செய்வதன் மூலமாக.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அதன்பிறகு, பரமபுருஷரான பகவான் ராமச்சந்திரர் ஓர் ஆசார்யரை ஏற்று, செல்வச் சிறப்புள்ள கொழிக்கும் பொருட்களைக் கொண்ட யாகங்களைச் செய்தார். இவ்வாறாக அனைத்து தேவர்களுக்கும் தாம் பரமபுருஷரென்பதால், பகவான் தம்மைத் தாமே வழிபட்டார்.
பதம் 9.11.2
ஹோத்ரே ‘ததாத் திசம் ப்ராசீம் ப்ரஹ்மணே தக்ஷிணாம் ப்ரபு:
அத்வர்யவே ப்ரதீசீம் வா உத்தராம் ஸாமகாய ஸ:
ஹோத்ரே—யாகத்தில், நிவேதனம் செய்பவரான; ஹோதா—புரோகிதருக்கு; அததாத்—கொடுத்தார்; திசம்—திசையை; ப்ராசீம்—கிழக்குப் பக்கம் முழுவதையும்; ப்ரஹ்மனே—யாக அரங்கில் என்ன செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிப்பவரான ப்ரஹ்மா புரோகிதருக்கு; தக்ஷிணாம்—தெற்குப் பக்கத்தை; ப்ரபு:—பகவான் ராமச்சந்திரர்; அத்வர்யவே—அத்வர்யு புரோகிதருக்கு; பீரதீசீம்—மேற்குப் பக்கம் முழுவதையும்; வா—தவிரவும்; உத்தராம்—வடக்குப் பக்கத்தை; ஸாம-காய—சாம வேதத்தைப் பாடுபவரான உத்காதா புரோகிதருக்கு; ஸ:—அவர் (பகவான் ராமச்சந்திரர்).
பகவான் ராமச்சந்திரர் கிழக்குத் திசை முழுவதையும் ஹோதா புரோகிதருக்கும், தென்திசை முழுவதையும் ப்ரஹ்மா புரோகிதருக்கும், மேற்குத்திசையை அத்வர்யு புரோகிதருக்கும், வட திசையை சாம வேதம் ஒதுபவரான உத்காத புரோகிதருக்குமாக தமது இராஜ்யத்தையே வெகுமதியாகக் கொடுத்துவிட்டார்.
பதம் 9.11.3
ஆசார்யாயா ததௌ சேஷாம் யாவதீ பூஸ் தத்-அந்தரா
மன்யமான இதம் க்ருத்ஸ்னம் ப்ராஹ்மணோ ‘ர்ஹதி நிஹ்ஸ்ப்ருஹ:
ஆசார்யாய—ஆசார்யாருக்கு (ஆன்மீக குரு); ததௌ—கொடுத்தார்; சேஷாம்—மிச்சத்தை; யாவதீ—எல்லா; பூ:—நிலத்தையும்; தத்-ந்தரா—கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்குத் திசைகளுக்கு இடையிலுள்ள; மன்யமான:—என்றெண்ணி; இதம்—இதெல்லாம்; க்ருத்ஸ்னம்—முழுவதும்; ப்ராஹ்மண:—பிராமணர்கள்; அர்ஹதி—பெறத்தகுந்தது; நிஹ்ஸ்ப்ருஹ:—விருப்பற்றவர்கள் என்பதால்.
அதன்பிறகு, பிராமணர்களுக்கு பெளதிக ஆசைகள் இல்லையென்பதால், முழு உலகமும் அவர்களுக்குத்தான் உடைமையாக இருக்க வேண்டும் என்றெண்ணிய பகவான் ராமச்சந்திரர், கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு ஆகிய திசைகளுக்கு இடைப்பட்ட நிலத்தை ஆசார்யருக்குக் கொடுத்தார்.
பதம் 9.11.4
இதி அயம் தத்-அலங்கார-வாஸோப்யாம் அவசேஷித:
ததா ராஜ்ஞி அபி வைதேஹீ ஸௌமங்கள்யாவசேஷிதா
இதி—இவ்வாறாக (அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்த பின்); அயம்—பகவான் ராமச்சந்திரர்; தத்—அவரது; அலங்கார-வாஸோப்யாம்—சொந்த ஆடை, ஆபரணங்களுடன்; அவசேஷித—இருந்தார்; ததா—அத்துடன்; ராஜ்ஞீ—ராணியும் (சீதாதேவியும்); அபி—கூட; வைதேஹீ—விதேஹ தேசத்து ராஜபுத்திரியான; ஸெளமங்கல்யா—மூக்குத்தியுடன் மட்டுமே; அவசேஷிதா—இருந்தாள்.
இவ்வாறாக அனைத்தையும் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்ட பகவான் ராமச்சந்திரர், தமது உடை, அணிகலன்களை மட்டுமே தம்முடன் வைத்திருந்தார். அதைப்போலவே ராணி சீதையும் கூட தமது மூக்குத்தியை மட்டுமே வைத்திருந்தாள்.
பதம் 9.11.5
தே து ப்ராஹ்மண-தேவஸ்ய வாத்ஸல்யம் வீக்ஷ்ய ஸம்ஸ்துதம்
ப்ரீதா: க்லின்ன-தியஸ் தஸ்மை ப்ரத்யர்ப்யேதம் பபாஷிரே
தே—ஹோதா, ப்ரஹ்மா முதலான புரோகிதர்கள்; து—ஆனால்; ப்ராஹ்மண-தேவஸ்ய—பிராமணர்களை மிகவும் நேசித்த பகவான் ராமச்சந்திரரின்; வாத்ஸல்யம்—தந்தைப் பாசத்தை; வீக்ஷ்ய—கண்டு; ஸம்ஸ்துதம்—பிரார்த்தனைகள் செய்து வழிபட்டனர்; ப்ரீதா:—மிகவும் திருப்தியடைந்து; க்ளின்ன-திய:—இளகிய மனதுடன்; தஸ்மை—அவருக்கு (பகவான் ராமச்சந்திரருக்கு); ப்ரத்யர்ப்ய—திருப்பிக் கொடுத்து; இதம்—இதை (அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா நிலத்தையும்); பபாஷிரே—பேசிவர்.
வெவ்வேறு யாகக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் அனைவரும், தங்களிடம் பாசமாகவும், தங்களுக்கு ஆதரவாகவும் இருந்த பகவான் ராமச்சந்திரரிடம் மிகவும் திருப்தியடைந்தனர். இவ்வாறாக அவரிடமிருந்து பெற்ற வெகுமதிகளை எல்லாம் இளகிய மனங்கொண்டு அவரிடமே திருப்பிக் கொடுத்த அவர்கள் பின்வருமாறு பேசலாயினர்.
பதம் 9.11.6
அப்ரத்தம் நஸ் த்வயா கிம் நு பகவன் புவனேஸ்வர
யன் நோ ‘ந்தர்-ஹ்ருதயம் விஸ்ய தமோ ஹம்ஸி ஸ்வ-ரோசிஷா
அப்ரத்தம்—கொடுக்கப்படவில்லை; ந:—எங்களுக்கு; த்வயா—தங்களால்; கிம்—என்ன; நு—உண்மையில்; பகவன்—பரமபுருஷரே; புவன-ஈஸ்வர—முழு பிரபஞ்சத்திற்கும் ஈசுவரரே; யத்—என்பதால்; ந—எங்களுடைய; அந்த:-ஹ்ருதயம்—இதய மத்தியில்; விஸ்ய—புகுந்து; தம:—அறியாமை இருள்; ஹம்ஸி—அழித்துவிட்டீர்கள்; ஸ்வ-ரோசிஷா—தங்களுடைய சுயப்பிரகாசத்தால்.
பகவானே, முழு பிரபஞ்சத்திற்கும் தாங்கள் ஈஸ்வரர். தாங்கள் எங்களுக்குக் கொடுக்காதது என்ன இருக்கிறது? எங்களுடைய இதய மத்தியில் புகுந்து, உங்களுடைய சுயப்பிரகாசத்தினால் எங்களுடைய அறியாமை இருளை சிதறடித்து விட்டீர்கள். இதுவே மிக உயர்ந்த பரிசாகும். பெளதிக நன்கொடை எங்களுக்குத் தேவையில்லை.
பதம் 9.11.7
நமோ ப்ரஹ்மண்ய-தேவாய ராமாயாகுண்ட-மேதஸே
உத்தமஸ்லோக-துர்யாய ன்யஸ்த-தண்டார்பிதாங்ரயே
நம:—தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்; ப்ரஹ்மண்ய-தேவாய—பிராமணர்களைத் தமது வழிபாட்டுக்குரியவர்களாக ஏற்ற பகவானுக்கு; ராமாய—பகவான் ராமச்சந்திரருக்கு; அகுண்ட-மேதஸே—அவருடைய ஞாபக சக்தியும், அறிவும் கவலையால் பாதிப்படைவதே இல்லை; உத்தமஸ்லோக-துர்யாய—புகழ் பெற்றவர்களிலேயே மிகச் சிறந்தவர்; ன்யஸ்த-தண்ட-அர்பித-அங்ரயே—அவருடைய தாமரைப் பாதங்கள் தண்டனைகளுக்கு அப்பாற்பட்ட முனிவர்களால் வணங்கப்படுகின்றன.
பகவானே, தாங்கள் பிராமணர்களை உங்களுடைய வழிபாட்டுக்குரியவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுடைய அறிவும், ஞாபகசக்தியும் ஒருபோதும் கவலையால் பாதிக்கப்படுவதேயில்லை. இவ்வுலகில் புகழ் பெற்றவர்கள் தாங்கள் முதலிடம் வகிக்கிறீர்கள். தங்களுடைய தாமரைப் பாதங்கள் தண்டனைகளுக்கு அப்பாற்பட்ட முனிவர்களால் வழிபடப்படுகின்றன. பகவான் ராமச்சந்திரரே, தங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.
பதம் 9.11.8
கதாசில் லோக-ஜிக்ஞாஸுர் கூடோ ராத்ரியாம் அலக்ஷித:
சரன் வாசோ ‘ஸ்ருணோத் ராமோ பார்யாம் உத்திஸ்ய கஸ்யசித்
கதாசித்—ஒரு சமயம்; லோக-ஜிக்ஞாஸு:— பொதுமக்களைப் பற்றி அறிய விரும்பி; கூட:—மாறுவேடத்தில் தம்மை மறைத்துக்கொண்டு; ராத்ரியாம்—இரவில்; அலக்ஷித:—யாரும் அறியாதபடி; சரன்—நடந்து சென்றார்; வாச:—பேசுவதை; அஸ்ருணோத்—கேட்டார்; ராம:—பகவான் ராமச்சந்திரர்; பார்யாம்—அவரது மனைவியை; உத்திஸ்ய—சுட்டிக் காட்டி; கஸ்யசித்—யாரோ ஒருவரின்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஒருசமயம் பகவான் ராமச்சந்திரர், தம்மைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து வருவதற்காக, மாறு வேடம் பூண்டு யாருமறியாமல் இரவில் நடந்து செல்லும் போது, தம் மனைவி சீதாதேவிக்கு விரோதமாக ஒருவன் பேசுவதைக் கேட்டார்.
பதம் 9.11.9
நாஹம் பிபர்மி த்வாம் துஷ்டாம் அஸதீம் பர-வேஸ்ம-காம்
ஸ்த்ரைணோ ஹி பிப்ருயாத் ஸீதாம் ராமோ நாஹம் பஜே புன:
ந—முடியாது; அஹம்—நான்; பிபர்மி—காப்பாற்ற முடியும்; த்வாம்—உன்னை; துஷ்டாம்—ஏனெனில் நீ களங்கப்பட்டு விட்டாய்; அஸதீம்—கற்பிழந்து; பர-வேஸ்ம-காம்— வேறொருவனின் வீட்டிற்குச் சென்று விபச்சாரம் செய்தவள்; ஸ்த்ரைண:—மனைவிக்கு அடங்கி நடப்பவர்; ஹி—உண்மையில்; பிப்ருயாத்—ஏற்றுக் கொள்ள முடியும்; ஸீதாம்—சீதையைக் கூட; ராம:—பகவான் ராமச்சந்திரரைப் போன்று; ந—மாட்டேன்; அஹம்—நான்; பஜே—ஏற்றுக்கொள்ள; புன:—மீண்டும்.
(நெறி தவறிய தன் மனைவியிடம் பேசிய அந்த மனிதன் கூறினான்) வேறொரு மனிதனின் வீட்டிற்குச் சென்றதால் நீ கற்பிழந்து தூய்மையற்றவளானாய். இனி உன்னை நான் பராமரிக்க மாட்டேன். வேறொருவரின் வீட்டிற்குச் சென்ற சீதையைப் போன்ற ஒரு மனைவியை, மனைவிக்கு அடங்கிய பகவான் ராமரைப் போன்ற ஒரு கணவர் ஏற்றுக் கொள்ளக் கூடும். அவரைப்போல் நானும் மனைவியின் கைப்பாவையல்ல. எனவே உன்னை நான் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பதம் 9.11.10
இதி லோகாத் பஹு-முகாத் துராராத்யாத் அஸம்வித:
பத்யா பீதேன ஸா த்யக்தா ப்ராப்தா ப்ராசேதஸாஸ்ரமம்
இதி—இவ்வாறாக; லோகாத்—அவர்களிடமிருந்து; பஹு-முகாத்—பலவகையான அர்த்தமற்ற பேச்சுகளை பேசகூடியவர்கள்; துராராத்யாத்—யாரைத் தடுப்பது மிகக் கடினமோ; அஸம்வித:—முழு அறிவற்றவர்கள்; பத்யா—கணவரால்; பீதேன—அஞ்சி; ஸா—சீதா தேவியை; த்யக்தா—கைவிட்டார்; ப்ராப்தா—சென்றாள்; ப்ராசேதஸ-ஆஸ்ரமம்—பிராதேசஸரின் (வால்மீகி முனிவரின்) ஆசிரமத்திற்கு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அறிவீனர்களும், துர்நடத்தை உள்ளவர்களும் அர்த்தமற்ற பேச்சுக்களைப் பேசுவார்கள். அத்தகைய அயோக்கியர்களுக்குப் பயந்த பகவான் ராமச்சந்திரர், மனைவி சீதை கர்ப்பிணியாயிருந்தபோதிலும் அவளைக் கைவிட்டார். இதனால் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றாள்.
பதம் 9.11.11
அந்தர்வத்னி ஆகதே காலே யமௌ ஸா ஸுஷுவே ஸுதௌ
குசோ லவ இதி க்யாதெள தயோஸ் சக்ரே க்ரியா முனி:
அந்தர்வத்னீ—கர்ப்பிணியான மனைவி; ஆகதே—வந்ததும்; காலே—நாளடைவில்; யமெள—இரட்டைப் பிள்ளைகளை; ஸா—சீதாதேவி; ஸுஷுவே—பெற்றாள்; ஸுதெள—இரு மகன்கள்; குச:—குசன்; லவ:—லவன்; இதி—என்று; க்யாதெள—புகழப்பட்டனர்; தயோ:—அவர்களுடைய; சக்ரே—செய்தார்; க்ரியா:—பிறப்புக் கிரியைகளை; முனி:—மாமுனிவரான வால்மீகி.
நாளடைவில் கர்ப்பிணியாயிருந்த சீதாதேவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். இவர்கள் பிறகு லவன் மற்றும் குசன் என்று பிரசித்தி பெற்றனர். இவர்களுடைய பிறப்புக் கிரியைகள் வால்மீகி முனிவரால் செய்யப்பட்டன.
பதம் 9.11.12
அங்கதஸ் சித்ரகேதுஸ் ச லக்ஷ்மணஸ்யாத்மஜௌ ஸ்ம்ருதௌ
தக்ஷ: புஷ்கல இதி ஆஸ்தாம் பரதஸ்ய மஹீபதே
அங்கத:—அங்கதன்; சித்ரகேது:—சித்ரகேது; ச—கூட; லக்ஷ்மணஸ்ய—பகவான் லக்ஷ்மணரின்; ஆத்மஜௌ—இரு புத்திரர்கள்; ஸ்ம்ருதௌ—எனப்பட்டனர்; தக்ஷ:—தக்ஷன்; புஷ்கல:—புஷ்கலன்; இதி—இவ்வாறாக; ஆஸ்தாம்—இருந்தனர்; பரதஸ்ய—பகவான் பரதரின்; மஹீபதே—பரீட்சித்து மகாராஜனே.
பரீட்சித்து மகாராஜனே, பகவான் லக்ஷ்மணருக்கு அங்கதன், சித்ரகேது என்ற இரு புத்திரர்கள் இருந்தனர். பகவான் பரதருக்கும் தக்ஷன், புஷ்கலன் என்ற இரு புத்திரர்கள் இருந்தனர்.
பதங்கள் 9.11.13 – 9.11.14
ஸுபாஹு: ஸ்ருதஸேனஸ் ச சத்ருக்னஸ்ய பபூவது:
கந்தர்வான் கோடிசோ ஜக்னே பரதோ விஜயே திசாம்
ததீயம் தனம் ஆனீய ஸர்வம் ராஜ்ஞே ன்யவேதயத்
சத்ருக்னஸ் ச மதோ: புத்ரம் லவனம் நாம ராக்ஷஸம்
ஹத்வா மதுவனே சக்ரே மதுராம் நாம வை புரீம்
ஸுபாஹு:—சுபாஹு; ஸ்ருதஸேன:—சுருதசேனன்; ச—கூட; சத்ருக்னஸ்ய—பகவான் சத்ருக்னரின்; பபூவது:—பிறந்தனர்; கந்தர்வான்—கந்தர்வர்களின் உறவினர்கள், பெரும்பாலும் கந்தர்வர்களைப் போல் பாசாங்கு செய்பவர்கள்; கோடிச:—கோடிக் கணக்கில்; ஐக்னே—கொன்றார்; பரத:—பகவான் பரதர்; விஜயே—வெற்றி கொள்ளும் போது; திசம்—எல்லாத் திசைகளையும்; ததீயம்—கந்தர்வர்களின்; தனம்—செல்வங்களை; ஆனீய—கொண்டுவந்து; ஸர்வம்—அனைத்தையும்; ராஜ்ஞே—அரசருக்கு (பகவான் ராமச்சந்திரருக்கு); ன்யவேதயத்—கொடுத்தார்; சத்ருக்ன:—சத்ருக்னர்; ச—மேலும்; மதோ:—மதுவின்; புத்ரம்—புத்திரன்; லவணம்—லவணன்; நாம—எனும் பெயர் கொண்ட; ராக்ஷஸம்—இராட்சஸன்; ஹத்வா—கொன்றதன் மூலமாக; மதுவனே—மதுவனம் என்ற சிறந்த வனத்தில்; சக்ரே—நிர்மானித்தார்; மதுராம்—மதுரா; நாம—என்ற; வை—உண்மையில்; புரீம்—மிகச்சிறந்த நகரத்தை.
சத்ருக்னருக்கு சுபாஹு, சுருதசேனன் என்ற இரு புத்திரர்கள் இருந்தனர். எல்லாத் திசைகளையும் வென்று வருவதற்குச் சென்ற பகவான் பரதர், பொதுவாக கந்தர்வகளைப்போல் பாசாங்கு செய்த கோடிக்கணக்கானவர்களைக் கொன்றார். அவர்களது செல்வங்களை எல்லாம் திரட்டி பகவான் ராமச்சந்திரரிடம் ஒப்படைத்தார். சத்ருக்னரும் கூட லவணன் என்ற இராட்சஸனைக் கொன்றார். இவன் மது எனும் இராட்சஸனின் மகனாவான். இவ்வாறாக மதுவனம் என்ற வனத்தில், மதுராபுரி என்ற நகரை அவர் நிர்மாணித்தார்.
பதம் 9.11.15
முனௌ நிக்ஷிப்ய தனயெள ஸீதா பர்த்ரா விவாஸிதா
த்யாயந்தீ ராம-சரணௌ விவரம் ப்ரவிவேச ஹ
முனௌ—வால்மீகி மாமுனிவரிடம்; நிக்ஷிப்ய—பொறுப்பைக் கொடுத்துவிட்டு; தனயெள—லவன், குசன் என்ற மகன்களையும்; ஸீதா—சீதாதேவி; பர்த்ரா—அவளது கணவரால்; விவாஸிதா—கைவிடப்பட்டு; த்யாயந்தீ—தியானித்து; ராம-சரணெள—பகவான் ராமச்சந்திரரின் தாமரைப் பாதங்களை; விவரம்—பூமிக்குள்; ப்ரவிவேச—பிரவேசித்தாள்; ஹ—உண்மையாகவே.
தம் கணவரால் கைவிடப்பட்ட சீதாதேவி, தம் இரு புத்திரர்களையும் வால்மீகி முனிவரிடம் ஒப்படைத்தாள். பிறகு, பகவான் ராமச்சந்திரரின் தாமரைப் பாதங்களை தியானித்து, பூமிக்குள் புகுந்து மறைந்தாள்.
பதம் 9.11.16
தச் ச்ருத்வா பகவான் ராமோ
ருந்தன் அபி தியா கச:
ஸ்மரம்ஸ் தஸ்யா குணாம்ஸ் தாம்ஸ் தான்
நாசக்னோத் ரோத்தும் ஈஸ்வர:
தத்—இதை (சீதாதேவி பூமிக்குள் புகுந்த செய்தியை); ஸ்ருத்வா—கேட்ட; பகவான்—பரமபுருஷரான; ராம:—பகவான் ராமச்சந்திரர்; ருந்தன்—விலக்க முயன்ற; அபி—போதிலும்; தியா—புத்தியால்; சுச:—துக்கம்; ஸ்மரன்—நினைந்து; தஸ்யா:—அவளுடைய; குணான்—குணங்களை; தான் தான்—வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ்; ந—இல்லை; அசக்னோத்—முடிந்தது; ரோத்தும்—அடக்க; ஈஸ்வர—ஈஸ்வரர் என்ற போதிலும்.
சீதாதேவி பூமிக்குள் பிரவேசித்த செய்தியைக் கேட்ட பகவான் உண்மையாகவே துக்கப்பட்டார். அவர் பரமபுருஷர் என்ற போதிலும், சீதாதேவியின் சீரிய குணங்களை நினைத்துப் பார்த்த அவரால், உன்னத அன்பினால் எழுந்த பிரிவுத் துயரை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
பதம் 9.11.17
ஸ்த்ரீ-பும்-ப்ரஸங்க ஏதாத்ருக் ஸர்வத்ர த்ராஸம்-ஆவஹ:
அபீஸ்வராணாம் கிம் உத க்ராம்யஸ்ய க்ருஹ-சேதஸ:
ஸ்த்ரீ-பும்-ப்ரஸங்க:—கணவன், மனைவிக்கு அல்லது ஆண், பெண்ணுக்கு இடையிலுள்ள கவர்ச்சி; ஏதாத்ருக்—இதைப்போன்ற; ஸர்வத்ர—எல்லா இடங்களிலும்; த்ராஸம்-ஆவஹ:—பயத்தின் காரணம்; அபி—கூட; ஈஸ்வராணாம்—ஈஸ்வரர்களின்; கிம் உத—பற்றி என்னென்று சொல்வது; க்ராம்யஸ்ய—சாதாரண ஜட உலக மனிதர்களைப் பற்றி; க்ருஹ-சேதஸ:—பெளதிக குடும்ப வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள.
எல்லா இடங்களிலும் காணப்படும் ஆண் பெண் கவர்ச்சி; எல்லோரையும் எப்பொழுதுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய உணர்வுகள் பிரம்மதேவர் மற்றும் சிவபெருமானைப் போன்ற ஈஸ்வரர்களுக்கு இடையிலும் உள்ளது. இதுவே அவர்களின் பயத்திற்கும் காரணமாகும். எனவே, இந்த ஜட உலகின் குடும்ப வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள பிறரைப்பற்றி என்னென்று சொல்வது.
பதம் 9.11.18
தத ஊர்த்வம் ப்ரஹ்மசர்யம் தார்யன் அஜுஹோத் ப்ரபு:
த்ரயோதசாப்த-ஸாஹஸ்ரம் அக்நிஹோத்ரம் அகண்டிதம்
தத:—அதன்பிறகு; ஊர்த்வம்—சீதாதேவி பூமிக்குள் புகுந்த பின்; ப்ரஹ்மசர்யம்—பிரம்மச்சரிய விரதம்; தாரயன்—பூண்டு; அஜு-ஹோத்—கிரியையும், யாகத்தையும் செய்தார்; ப்ரபு:—பகவான் ராமச்சந்திரர்; த்ரயோதச-அப்த-ஸாஹஸ்ரம்—பதின்மூன்றாயிரம் ஆண்டுகள்; அக்நிஹோத்ரம்—”அக்நிஹோத்ர-யக்ஞம்” என்ற யாகத்தை; அகண்டிதம்—விடாமல்.
சீதாதேவி பூமிக்குள் புகுந்த பின், பகவான் ராமச்சந்திரர் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் விடாமல் அக்நிஹோத்ர யக்ஞத்தைச் செய்தார்.
பதம் 9.11.19
ஸ்மரதாம் ஹ்ருதி வின்யஸ்ய வித்தம் தண்டக-கண்டகை
ஸ்வ-பாத-பல்லவம் ராம ஆத்ம-ஜ்யோதிர் அகாத் தத:
ஸ்மரதாம்—அவரைப்பற்றி எப்பொழுதும் நினைப்பவர்களின்; ஹ்ருதி—இதய மத்தியில்; வின்யஸ்ய—வைத்து; வித்தம்—தைக்கப்பட்டன; தண்டக-கண்டகை:—(பகவான் அங்கு வாழ்ந்து வந்த போது) தண்டகாரண்ய வனத்தின் முற்களால்; ஸ்வ-பாத-பல்லவம்—அவரது பாத தாமரையின் இதழ்கள்; ராம:—பகவான் ராமச்சந்திரர்; ஆத்ம-ஜ்யோதி:—பிரம்மஜோதி எனப்படும் அவரது உடலிலிருந்து வெளிப்படும் காந்தி; அகாத்—புகுந்தார்; தத:—பிரம்மஜோதிக்கு அப்பால், அல்லது அவரது சொந்த வைகுண்ட லோகத்தில்.
யாருடைய தாமரைப் பாதங்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்த போது சிலசமயங்களில் முட்களால் தைக்கப்பட்டனவோ, அந்த பகவான் ராமச்சந்திரர் யாகத்தைப் பூர்த்தி செய்தபின், தம்மையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் இதயங்களில் அத்தாமரைப் பாதங்களை வைத்தார். பிறகு பிரம்மஜோதிக்கும் அப்பாலுள்ள, தமது சொந்த வசிப்பிடமான வைகுண்ட லோகத்தில் புகுந்தார்.
பதம் 9.11.20
நேதம் யசோ ரகுபதே: ஸுர-யாச்ஞயாத்த-
லீலா-தனோர் அதிக-ஸாம்ய-விமுக்த-தாம்ன:
ரக்ஷோ-வதோ ஜலதி-பந்தனம் அஸ்த்ர-பூகை:
கிம் தஸ்ய சத்ரு-ஹனனே கபய: ஸஹாயா:
ந—இல்லை; இதம்—இவ்வெல்லா; யச:—புகழ்; ரகு-பதே:—பகவான்-ராமச்சந்திரரின்; ஸுர-யாச்ஞயா—தேவர்களின் பிராத்தனைகளால்: ஆத்த-லீலா-தனோ:—அவரது ஆன்மீக உடல் எப்பொழுதும் பற்பல லீலைகளில் ஈடுபட்டிருக்கிறது; அதிக-ஸாம்ய-விமுக்த-தாம்ன:—அவரை விட உயர்ந்தவரோ, அவருக்குச் சமமானவரோ ஒருவரும் இல்லை; ரக்ஷ:-வத:—இராட்சஸனை (இராவணனை) கொன்று; ஜலதி-பந்தனம்—சமுத்திரத்தில் பாலம் அமைத்து; அஸ்த்ர-பூகை:—வில்லுடனும் அம்புகளுடனும்; கிம்—அல்லது; தஸ்ய—அவரது; சத்ரு-ஹனனே—எதிரிகளைக் கொல்வதில்; கபய:—வானரங்கள்; ஸஹாயா:—உதவியாளர்கள்.
தேவர்களின் வேண்டுகோளின்படி, அம்பு மழையால் இராவணனைக் கொன்றதாலும், சமுத்திரத்தில் பாலம் அமைத்ததாலும் பகவான் ராமச்சந்திரருக்குக் கிடைத்த புகழ், பரமபுருஷராகிய பகவான் ராமச்சந்திரருடைய உண்மையான புகழைக் குறிப்பிடுவதாகாது. அவரது ஆன்மீக உடல் எப்பொழுதும் பற்பல லீலைகளில் ஈடுபட்டுள்ளது. பகவான் ராமச்சந்திரருக்கு இணையானவரோ அல்லது அவரை விட உயர்ந்தவரோ ஒருவரும் இல்லை. எனவே இராவணனை ஜெயிக்க வானரர்களின் உதவியை ஏற்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை.
பதம் 9.11.21
யஸ்யாமலம் ந்ருப-ஸதஹ்ஸு யசோ ‘துனாபி
காயந்தி அக-க்னம் ரிஷயோ திக்-இபேந்ர-பட்டம்
தம் நாகபால-வஸுபால-கிரீட-ஜுஷ்ட-
பாதாம்புஜம் ரகுபதிம் சரணம் ப்ரபத்யே
யஸ்ய—யாருடைய (பகவான் ராமச்சந்திரரின்); அமலம்—பெளதிக குணங்களிலிருந்து விடுபட்டு, களங்கமில்லாமல்; ந்ருப-ஸதஹ்ஸு—யுதிஷ்டிர மகாராஜனைப் போன்ற சிறந்த பேரரசர்களின் சபையில்; யச:—புகழ்பெற்ற பெருமைகள்; அதுனாஅபி—இன்றும் கூட; காயந்தி—புகழ்கின்றனர்; அக-க்னம்—எல்லாப் பாவ விளைவுகளையும் அழித்துவிடும்; ரிஷய:—மார்க்கண்டேயரைப் போன்ற சிறந்த ரிஷிகள்; திக்-இப-இந்ர-பட்டம்—பட்டத்து யானையை அலங்கரிக்கும் துணி போல்; தம்—அந்த; நாக-பால—சுவர்க்க லோக தேவர்களின்; வஸு-பால—மண்ணுலக அரசர்களின்; கிரீட—கிரீடங்களால்; ஜுஷ்ட—வழிபடப்படுகின்றன; பாத-அம்புஜம்—யாருடைய தாமரைப் பாதங்கள்; ரகு-பதிம்—பகவான் ராமச்சந்திரருக்கு; சரணம்—சரணாகதியை; ப்ரபத்யே—நான் சமர்ப்பிக்கிறேன்.
பகவான் ராமச்சந்திரரின் பெயரும், புகழும், எல்லாத் திசைகளையும் வெல்லும் பட்டத்து யானையின் அலங்காரத் துணிபோல், எல்லாத் திசைகளிலும் பிரசித்தி பெற்றவையாகும். மார்க்கண்டேய ரிஷியைப் போன்ற மாமுனிவர்கள், யுதிஷ்டிர மகாராஜனைப் போன்ற சிறந்த பேரரசர்களின் சபையில் இன்னமும் அவரது குணங்களைப் புகழ்கின்றனர். அவ்வாறே, சிவபெருமான் மற்றும் பிரம்மதேவர் உட்பட எல்லா ராஜரிஷிகளும், தேவர்களும் தங்களுடைய கிரீடங்களுடன் சிரம் தாழ்த்தி பகவானை வணங்குகின்றனர். அவரது தாமரைப் பாதங்களில் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
பதம் 9.11.22
ஸ யை: ஸ்ப்ருஷ்டோ ‘பித்ருஷ்டோ வா
ஸம்விஷ்டோ ‘நுகதோ ‘பி வா
கோஸலாஸ் தே யயு: ஸ்தானம்
யத்ர கச்சந்தி யோகின:
ஸ:—அவர், பகவான் ராமச்சந்திரர்; யை:—யாரால்; ஸ்ப்ருஷ்ட:—தொட்டவர்கள்; அபித்ருஷ்ட:—கண்டவர்கள்; வா—அல்லது; ஸம்விஷ்ட:—ஒன்றாக உண்ணும், ஒன்றாக உறங்கும்; அநுகத:—தொண்டர்களாகப் பின்தொடர்ந்தவர்கள்; அபி வா—கூட; கோஸலா:—அந்த கோசல வாசிகள் அனைவரும்; தே—அவர்கள்; யயு:—சென்றனர்; ஸ்தானம்—இடத்திற்கு; யத்ர—எங்கு; கச்சந்தி—அவர்கள் செல்லும்; யோகின:—எல்லா பக்தி யோகிகளும்.
எந்த இடத்திற்கு பக்தி-யோகிகள் உயர்த்தப்படுகிறார்களோ, தம்முடைய அந்த வசிப்பிடத்திற்கு பகவான் ராமச்சந்திரர் திரும்பிச் சென்றார். பகவானுடைய லீலைகளின்போது, அவரை வணங்கியும், அவரது தாமரைப் பாதங்களைத் தொட்டும், தந்தையைப் போன்ற ஓரரசராக உண்மையாகவே அவரை ஏற்றும், அவருக்குச் சமமானவர்களைப் போல் அவருடன் அமர்ந்தும், படுத்துறங்கியும், நண்பனைப் போல் அவருடன் சென்றும் அவருக்குப் பணிவிடை செய்த அயோத்திவாசிகள் அனைவரும் அந்த இடத்திற்குத்தான் சென்றனர்.
பதம் 9.11.23
புருஷோ ராம-சரிதம் ஸ்ரவணைர் உபதாரயன்
ஆன்ருசம்ஸ்ய-பரோ ராஜன் கர்ம-பந்தைர் விமுச்யதே
புருஷ:—எவரும்; ராம-சரிதம்—பரமபுருஷரான பகவான் ராமச்சந்திரரின் சரிதத்தை; ஸ்ரவணை:—கேட்பதால்; உபதாரயன்—இப்படி கேட்கும் முறையினாலேயே; ஆன்ருசம்ஸ்ய-பர:—பொறாமையிலிருந்து முற்றிலும் விடுபடுகிறார்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; கர்ம-பந்தை:—கர்ம பந்தத்தால்; விமுச்யதே—ஒருவர் முக்தியடைகிறார்.
பரீட்சித்து மகாராஜனே, பகவான் ராமச்சந்திரரின் லீலா விநோதங்களைப் பற்றி கேட்பவர் எவரும் இறுதியில் பொறாமை எனும் நோயிலிருந்தும், கர்ம பந்தத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைவார்.
பதம் 9.11.24
ஸ்ரீ-ராஜோவாச
கதம் ஸ பகவான் ராமோ ப்ராத்ரூன் வா ஸ்வயம் ஆத்மன:
தஸ்மின் வா தே ‘ன்வவர்தந்த ப்ரஜா: பௌராஸ் ச ஈஸ்வரே
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் வினவினார்; கதம்—எப்படி; ஸ:—அவர், பகவான்; பகவான்—பரமபுருஷர்; ராம:—பகவான் ராமச்சந்திரர்; ப்ராத்ரூன்—தம்பிகளுடன் (லக்ஷ்மணர், பரதர் மற்றும் சத்ருக்னர்); வா—அல்லது; ஸ்வயம்—சுயமாக; ஆத்மன:—அவரது அம்சங்கள்; தஸ்மின்—பகவானிடம்; வா—அல்லது; தே—அவர்கள் (பிரஜைகளும், தம்பிகளும்); அன்வவர்தந்த—நடந்து கொண்டனர்; ப்ரஜா:—பிரஜைகள் அனைவரும்; பௌரா:—பிரஜைகள்; ச—மேலும்; ஈஸ்வரே—பரமபுருஷரிடம்.
பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். பகவான் எப்படி நடந்து கொண்டார்? மேலும் தமது சொந்த அம்சங்களான தம்பிமார்களுடன் அவர் எப்படி நடந்து கொண்டார்? அவரது தம்பிகளும், அயோத்தி வாசிகளும் அவரை எப்படி நடத்தினர்?
பதம் 9.11.25
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
அதாதிசத் திக்-விஜயே பிராத்ரூம்ஸ் த்ரி-புவனேஸ்வர:
ஆத்மானம் தர்சயன் ஸ்வானாம் புரீம் ஐக்ஷத ஸானுக:
ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—அதன்பிறகு; ஆதிசத்—கட்டளையிட்டார்; திக்-விஜயே—எல்லாத் திசைகளிலும் சென்று உலகை வெல்லும்படி; பீராத்ரூன்—அவரது தம்பிகளை; த்ரி-புவன-ஈஸ்வர:—அகில லோக நாயகர்; ஆத்மானம்—தாமாகவே, சொந்தமாக; தர்சயன்—தரிசனம் அளிப்பதற்காக; ஸ்வானாம்—குடும்ப அங்கத்தினர்களுக்கும், பிரஜைகளுக்கும்; புரீம்—நகரத்தை; ஐக்ஷத—கண்காணித்தார்; ஸ-அனுக:—பிற உதவியாளர்களுடன்.
சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: தம்பி பரதனின் தீவிர வேண்டுகோளின்படி அரியாசனத்தை ஏற்றபின், எல்லாத் திசைகளுக்கும் சென்று உலகை வென்று வரும்படி பகவான் ராமச்சந்திரர் தம் தம்பிகளுக்குக் கட்டளையிட்டார். அச்சமயத்தில், எல்லா பிரஜைகளுக்கும். அரண்மனை வாசிகளுக்கும் தரிசனம் அளிப்பதற்காகவும், அரசாங்க விவகாரங்களைக் கண்காணிப்பதற்காகவும், பிற உதவியாளர்களுடன் பகவான் தலைநகரிலேயே தங்கினார்.
பதம் 9.11.26
ஆஸிக்த-மார்காம் கந்தோதை: கரிணாம் மத சீகரை:
ஸ்வாமினம் ப்ராப்தம் ஆலோக்ய மத்தாம் வா ஸுதராம் இவ
ஆஸிக்த-மார்காம்—வீதிகள் தெளிக்கப்பட்டிருந்தன; கந்த-உதை:—பன்னீரால்; கரிணாம்—யானைகளின்; மத-சிகரை:—வாசனைத் தைல துளிகளால்; ஸ்வாமினம்—எஜமானர் அல்லது உரிமையாளர்; ப்ராப்தம்—இருப்பதை; ஆலோக்ய—தாங்களாகக் கண்டு; மத்தாம்—செல்வ மிகுதி; வா—அல்லது; ஸுதராம்—உயர்வாக; இவ—போல்.
பகவான் ராமச்சந்திரரின் ஆட்சிக் காலத்தில் அயோத்தியின் வீதிகள் பன்னீராலும், வாசனைத் தைலங்களாலும், யானைகளின் தும்பிக்கைகளைக் கொண்டு தெளிக்கப்பட்டிருந்தன. நகர விவகாரங்களை பசுவானே நேரடியாக கண்காணித்து செல்வச் சிறப்புடன் நடத்துவதைக் கண்ட பிரஜைகள், இச்செல்வ மிகுதியை வெகுவாகப் போற்றினார்.
பதம் 9.11.27
ப்ராஸாத-கோபுர-ஸபா சைத்ய-தேவ-க்ருஹாதிஷு
வின்யஸ்த-ஹேம-கலசை: பதாகாபிஸ் ச மண்டிதாம்
ப்ராஸாத—ராஜ மாளிகைகளில்; கோபுர—மாளிகை வாயில்கள்; ஸபா—சபைக் கூடங்கள்; சைத்ய—உயர்ந்த மேடைகள்; தேவ-க்ருஹ—விக்கிரக வழிபாடு செய்யப்படும் ஆலயங்கள்; ஆதிஷு—முதலியவை; வின்யஸ்த—வைக்கப்பட்டிருந்தன; ஹேம-கலசை:—தங்கக் கலசங்களால்; பதாகாபி:—கொடிகளால்; ச—கூட; மண்டிதாம்—அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
ராஜ மாளிகைகள், மாளிகை வாயில்கள், சபைக் கூடங்கள், சந்திப்பு மேடைகள், மற்றும் ஆலயங்கள் போன்ற எல்லா இடங்களும் தங்கக் கலசங்களாலும், பலவகையான கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பதம் 9.11.28
பூகை:-ஸவ்ருன்தை ரம்பாபி: பட்டிகாபி: ஸுவாஸஸாம்
ஆதர்சைர் அம்சுகை ஸ்ரக்பி: க்ருத-கௌதுக-தோரணாம்
பூகை:—பாக்கு மரங்களால்; ஸ-வ்ருன்தை:—மலர் மற்றும் பழக்கொத்துகளுடன்; ரம்பாபி:—வாழை மரங்களால்; பட்டிகாபி:—கொடிகளால்; ஸு-வாஸஸாம்—பல நிறங்களுடைய துணிகளால் அலங்கரிக்கப்பட்ட; ஆதர்சை:—கண்ணாடிகளால்; அம்சுகை:—துணிகளால்; ஸ்ரக்பி:—மாலைகளால்; க்ருத-கௌதுக—மங்களத்தை உண்டாக்கின; தோரணாம்—வரவேற்பு வாயில்களைக் கொண்ட.
பகவான் ராமச்சந்திரர் பார்வையிடச் சென்ற இடங்களிலெல்லாம், வாழை மரங்களுடனும், பாக்கு மரங்களுடனும், ஏராளமான மலர்களுடனும், பழங்களுடனும் கூடிய மங்களகரமான வரவேற்பு வாயில்கள் அமைக்கப்பட்டன. மேலும் அந்த வாயில்கள் பல வர்ணங்களைக் கொண்ட கொடிகளாலும், அலங்காரச் சீலைகளாலும், கண்ணாடிகளாலும் மற்றும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பதம் 9.11.29
தம் உபேயுஸ் தத்ர தத்ர பௌரா அர்ஹண-பாணய:
ஆசிஷோ யுயுஜுர் தேவ பாஹீமாம் ப்ராக் த்வயோத்ருதாம்
தம்—அவரை, பகவான் ராமச்சந்திரரை; உபேயு:—அணுகினர்; தத்ர தத்ர—அவர் பார்வையிடச் சென்ற இடங்களுக்கெல்லாம்; பௌரா:—அயலூர்வாசிகள்; அர்ஹண-பாணய:—பகவானை வழிபடுவதற்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு; ஆசிஷ:—பகவானிடமிருந்து ஆசீர்வாதங்களை; யுயுஜு:—இறங்கி வந்து; தேவ—பகவானே; பாஹி—காப்பாற்றுங்கள்; இமாம்—இந்த பூமியை; ப்ராக்—முன்பு செய்ததைப் போலவே; த்வயா—உங்களால்; உத்ருதாம்—(தங்களுடைய வராஹ அவதாரத்தில் கடலுக்கடியிலிருந்து) காப்பாற்றியது.
பகவான் ராமச்சந்திரர் பார்வையிடச் சென்ற இடங்களிலெல்லாம். மக்கள் வழிபாட்டுக்குரிய பொருட்களுடன் அவரை அணுகி, பகவானின் ஆசிர்வாதங்களை வேண்டினர். “பகவானே, தங்களுடைய வராஹ அவதாரத்தில் பூமியை கடலுக்கடியிலிருந்து தாங்கள் காப்பாற்றியதைப் போலவே, இப்பொழுதும் இதைத் தாங்கள் காத்து இரட்சித்து எங்களுக்கு அருள் புரியவேண்டும்.
பதம் 9.11.30
தத: ப்ரஜா வீக்ஷ்ய பதிம் சிராகதம்
தித்ருக்ஷயோத்ஸ்ருஷ்ட-க்ருஹா: ஸ்த்ரியோ நரா:
ஆருஹ்ய ஹர்ம்யாணி அரவிந்த-லோசனம்
அத்ருப்த-நேத்ரா: குஸுமைர் அவாகிரன்
தத—அதன்பிறகு; ப்ரஜா:—பிரஜைகள்; வீக்ஷ்ய—கண்டு; பதிம்—அரசர்; சிர-ஆகதம்—நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பியதை; தித்ருக்ஷயா—காண விரும்பி; உத்ஸ்ருஷ்ட-க்ருஹா:—தங்களது வசிப்பிடங்களை விட்டு; ஸ்த்ரிய:—பெண்களும்; நரா:—ஆண்களும்; ஆருஹ்ய—மேலேறி; ஹர்ம்யாணி—உயரமான மாளிகைகளின்; அரவிந்த-லோசனம்—தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய பகவான் ராமச்சந்திரர்; அத்ருப்த-நேத்ரா:—யாருடைய கண்கள் பூரண திருப்தியடையவில்லையோ; குஸுமை:—மலர்களை; அவாகிரன்—பகவான் மீது பொழிந்தனர்.
அதன்பிறகு, பகவானை நீண்ட நாட்களாகக் காணாததால், ஆண்களும், பெண்களுமாகிய பிரஜைகள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி, அவரைக் காணும் ஆவலுடன் மாளிகைகளின் மேலுள்ள கூரைகளுக்கு ஏறிச் சென்றனர். தாமரைக் கண்களையுடைய பகவான் ராமச்சந்திரரின் திருமுகத்தைக் கண்டும் முற்றிலும் திகட்டப் பெறாத அவர்கள் அவர் மீது மலர்களைப் பொழிந்தனர்.
பதங்கள் 9.11.31 – 9.11.34
அத ப்ரவிஷ்ட: ஸ்வ-க்ருஹம் ஜுஷ்டம் ஸ்வை: பூர்வ-ராஜபி:
அனந்தாகில-கோஷாட்யம் அனர்க்யோருபரிச்சதம்
வித்ருமோ தும்பர-த்வாரைர் வைதூர்ய-ஸ்தம்ப-பங்க்திபி:
ஸ்தலைர் மாரகதை: ஸ்வச்சைர் ப்ராஜத்-ஸ்படிக-பித்திபி:
சித்ர-ஸ்ரக்பி: பட்டிகாபிர் வாஸோ-மணி-கணாம்சுகை:
முக்தா-ஃபலைஸ் சித்-உல்லாஸை: காந்த-காமோபபத்திபி:
தூப-தீபை: ஸுரபிபிர் மண்டிதம் புஷ்ப-மண்டனை:
ஸ்த்ரீ-பும்பி: ஸுர-ஸங்காசைர் ஜூஷ்டம் பூஷண-பூஷணை:
அத—அதன்பிறகு; ப்ரவிஷ்ட:—அவர் புகுந்தார்; ஸ்வ-க்ருஹம்—அவரது சொந்த அரண்மனையில்; ஜூஷ்டம்—ஆக்கிரமிக்கப்பட்டிருந்த; ஸ்வை:—அவரது சொந்த குடும்ப அங்கத்தினரால்; பூர்வ-ராஜபி:—பூர்வ ராஜ குடும்பத்தினரால்; அனந்த—எல்லையற்ற; அகில—எல்லா இடங்களிலும்; கோஷ—பொக்கிஷம்; ஆட்யம்—செழிப்புடைய; அனர்க்ய—விலை மதிப்பற்ற; ஊரு—உயர்ந்த; பரிச்சதம்—பொருட்கள்; வித்ரும—பவளத்தாலான; உதும்பர-த்வாரை:—இரு பக்கத்து கதவுகளுடன்; வைதூர்ய-ஸதம்ப—வைடூரிய மணிகளைக் கொண்ட தூண்களுடன்; பங்க்திபி:—வரிசையாக; ஸ்தலை:—தரைகளுடன்; மாரகதை:—மரகத மணிகளாலான; ஸ்வச்சை:—மிகவும் பளபளப்பாக சுத்தம் செய்யப்பட்டு; ப்ராஜத்—ஜொலிக்கும்; ஸ்ஃபடிக—சலவைக்கல்; பித்திபி:—அஸ்திவாரம்; சித்ர-ஸ்ரக்பி:—பலவகையான மலர் மாலைகளுடன்; பட்டிகாபி:—கொடிகளுடன்; வாஸ:—உடை; மணி-கண-அம்சுகை:—பல பிரகாசமான, விலையுயர்ந்த கற்களால்; முக்தா-ஃபலை:—முத்துக்களுடன்; சித்-உல்லாஸை:—சுவர்க்கலோக இன்பத்தை அதிகரித்து; காந்தகாம—ஒருவரது ஆசையை நிறைவேற்றும்; உபபத்திபி:—அத்தகைய பொருட்களால்; தூப தீபை:—தூப, தீபங்களுடன்; ஸுரபிபி:—மிகவும் நறுமணமுள்ள; மண்டிதம்—அலங்கரிக்கப்பட்டிருந்த; புஷ்ப மண்டனை:—பல வகையான மலர்க் கொத்துகளால்; ஸ்த்ரீ-பும்பி:—ஆண் பெண்களால்; ஸுர-ஸங்காசை:—தேவர்களைப் போல் தோற்றமளிக்கும்; ஜுஷ்டம்—நிரப்பப்பட்டுள்ள; பூஷண-பூஷணை:—யாருடைய ஆபரணங்களை அவர்களுடைய உடல்கள் அழகுபடுத்தினவோ.
அதன்பிறகு, பகவான் ராமச்சந்திரர் அவரது முன்னோர்களின் அரண்மனைக்குள் புகுந்தார். அரண்மனைக்குள் பல்வேறு பொக்கிஷங்களும், விலையுயர்ந்த அலமாரிகளும் இருந்தன. நுழைவாயிலின் இரு புறத்திலும் இருந்த இருக்கைகள் பவளத்தால் செய்யபட்டிருந்தன. முற்றங்கள் வைடூர்ய மணி பதித்த தூண்களால் சூழப்பட்டிருந்தன. தரை, மிகவும் பளபளப்பாக்கப்பட்ட மரகத மணியால் செய்யப்பட்டிருந்தது. அஸ்திவாரம் சலவைக் கல்லால் செய்யப்பட்டிருந்தது. அரண்மனை முழுவதுமே கொடிகளாலும், மாலைகளாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக ஒளி வீசியது. தூப, தீபங்களால் சூழப்பட்டிருந்த அரண்மனை, முற்றிலும் முத்துக்களாலேயே அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அரண்மனைக்குள் இருந்த ஆண்களும், பெண்களும் தேவர்களை ஒத்திருந்தனர். அவர்கள் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர். அவர்களது உடல்களின் மேல் இருந்ததால் அவை அழகு பெற்று விளங்கின.
பதம் 9.11.35
தஸ்மின் ஸ பகவான் ராம: ஸ்னிக்தயா ப்ரியயேஷ்டயா
ரேமே ஸ்வாராம-தீராணாம் ரிஷப: ஸீதயா கில
தஸ்மின்—தெய்வீகமான அந்த அரண்மனையில்; ஸ:—அவர்; பகவான்—பரமபுருஷர்; ராம:—பகவான் ராமச்சந்திரர்; ஸ்னிக்தயா—அவளது நடத்தையில் எப்பொழுதும் திருப்தியடைந்திருந்தார்; ப்ரியயா இஷ்டயா—அவரது பிரிய மனைவியிடம்: ரேமே—அனுபவித்தார்; ஸ்வ-ஆராம—சுய இன்பம்; தீராணாம்—மிகச்சிறந்த மேதாவிகளின்; ரிஷப:—தலைமையானவர்; ஸீதயா—சீதா தேவியுடன்; கில—உண்மையில்.
மிகச் சிறந்த மேதாவிகளில் தலைமையானவரும், பரமபுருஷருமாகிய பகவான் ராமச்சந்திரர், தமது இன்ப ஆற்றலாகிய சீதாதேவியுடன் அந்த அரண்மனையில் வாழ்ந்து, பூரண அமைதியை அனுபவித்தார்.
பதம் 9.11.36
புபுஜே ச யதா-காலம் காமான் தர்மம் அபீடயன்
வர்ஷ-பூகான் பஹூன் ந்ரூணாம் அபித்யாதாங்ரி-பல்லவ:
புபுஜே—அவர் அனுபவித்தார்; ச—கூட; யதா-காலம்—தேவையான காலம் வரை; காமான்—எல்லா இன்பங்களையும்; தர்மம்—மதக் கோட்பாடுகளை; அபீடயன்—மீறாமல்; வர்ஷ-பூகான்—ஆண்டு காலம்; பஹூன்—பல; ந்ரூணாம்—பொது மக்களின்; அபித்யாத—தியானிக்கப்பட்டு; அங்ரி-பல்லவ:—அவரது தாமரைப் பாதங்கள்.
யாருடைய தாமரைப் பாதங்கள் பக்தர்களால் தியானிக்கப்படுகின்றனவோ, அந்த பகவான் ராமச்சந்திரர் மதக் கோட்பாடுகளை மீறாமல், தேவையான கால அளவிற்கு, உன்னத ஆனந்தத்தை அளிக்கக்கூடிய எல்லாப் பொருட்களுடனும் சுகத்தை அனுபவித்து வந்தார்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “ஸ்ரீ ராம-ராஜ்யம்” எனும் தலைப்பை கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.