அத்தியாயம் – 5
இரண்யகசிபுவின் தெய்வப் புதல்வரான
பக்தப் பிரகலாதர்
பதம் 7.5.1 : மாமுனிவரான நாரதர் கூறினார்: இரண்யகசிபுவை தலைமையாகக் கொண்ட அசுரர்கள், சுக்ராச்சாரியாரைத் தங்களுடைய கிரிகைகளுக்குப் புரோகிதராக ஏற்றுக் கொண்டனர். சுக்ராச்சாரியரின் இரு மகன்களான சண்டனும் அமர்க்கனும் இரண்யகசிபுவின் அரண்மனைக்கருகில் வசித்தனர்.
பதம் 7.5.2 : பிரகலாத மகாராஜன் முன்பே பக்தி வாழ்வில் கற்பிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது தந்தை, சுக்ராச்சாரியரின் இரு மகன்களிடம் கல்வி கற்பிக்கப்பட அவரை அனுப்பிய போது, அவர்கள் தங்கள் பள்ளிக் கூடத்தில் மற்ற அசுரக் குழந்தைகளுடன் பிரகலாதரையும் ஏற்றுக் கொண்டனர்.
பதம் 7.5.3 : பிரகலாதர் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட அரசியல், பொருளாதாரம் பற்றிய விசயங்களைக் கேட்டும், திருப்பிச் சொல்லியும் வந்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அரசியல் தத்துவமானது, ஒருவரை நண்பராகவும், மற்றொருவரைப் பகைவராகவும் நினைக்கச் செய்கிறது என்பதால் அதை அவர் விரும்பவில்லை.
பதம் 7.5.4 : யுதிஷ்டிர மகாராஜனே, ஒரு சமயம் அசுர ராஜனான இரண்யகசிபு. தன் மகனான பிரகலாதரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, மிகவும் அன்புடன் பின்வருமாறு வினவினான்: குழந்தாய் உன் ஆசிரியரிடமிருந்து நீ கற்றறிந்த விஷயங்களில் எது சிறந்ததென்று நினைக்கிறாயோ அதைக் கூறு.
பதம் 7.5.5 : பிரகலாத மகாராஜன் பதிலளித்தார்: அசுரர்களில் சிறந்தவராகிய அசுர வேந்தே, எனது ஆன்மீக குருவிடமிருந்து நான் கற்றிருப்பதைப் பொறுத்தவரை, எவன் நிலையற்ற ஒரு உடலையும், நிலையற்ற குடும்ப வாழ்வையும் ஏற்றுக் கொண்டுள்ளானோ அவன் கவலைகளால் கலவரமடைவது நிச்சயம். ஏனெனில், அது நீரில்லாத, துன்பம் மட்டுமே உள்ள இருண்ட கிணற்றினுள் விழுந்துவிட்ட நிலைக்கு ஒப்பாகும். ஒருவன் இந்த நிலையை விட்டு விட்டு வனத்திற்குச் செல்லவேண்டும். இன்னும் தெளிவாகக் கூறுமிடத்து, எங்கு கிருஷ்ண உணர்வு மட்டுமே காணப்படுகிறதோ, அந்த பிருந்தாவனத்திற்கு ஒருவன் சென்று, பரம புருஷரிடம் தஞ்சமடைய வேண்டும்.
பதம் 7.5.6 : நாரதமுனி தொடர்ந்து கூறினார்: பிரகலாத மகாராஜன் பக்தித் தொண்டின் மூலமாக தன்னுணர்வைப் பெறும் மார்க்கத்தைப் பற்றி பேசி, எதிரிகளிடம் தனக்குள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தியதைக் கேட்ட அசுர ராஜனான இரண்யகசிபு, “இவ்வாறுதான் சிறுவர்களின் புத்தி பகைவர்களின் வார்த்தைகளால் கெட்டுப்போகிறது” என்று கூறிச் சிரித்தான்.
பதம் 7.5.7 : இரண்யகசிபு தன் சேவகர்களிடம் கூறினான்: அசுரர்களே, இச்சிறுவனுக்குக் கல்வி கற்பிக்கப்படும் இடமான குருகுலத்தில் இவனுக்கு முழு பாதுகாப்புக் கொடுங்கள். இதனால் மாறுவேடத்தில் அங்கு செல்லக்கூடிய வைஷ்ணவர்களால் இவனது புத்தி பேதலிக்காதிருக்கட்டும்.
பதம் 7.5.8 : இரண்யகசிபுவின் சேவகர்கள் சிறுவனான பிரகலாதரை மீண்டும் குருகுலத்திற்கு அழைத்து வந்தபோது, அசுர புரோகிதர்களான சண்டனும், அமர்க்கனும் அவரை சமாதானப்படுத்தினர். அவர்கள் மிகவும் மென்மையான குரல்களுடனும், அன்பான வார்த்தைகளுடனும் அவரிடம் பின்வருமாறு வினவினர்.
பதம் 7.5.9 : மகனே பிரகலாதா, உனக்குச் சகல நன்மைகளும், சாந்தியும் உண்டாகட்டும். அன்புடன் பொய்யுரைக்காமல், உண்மையாக பதிலுரைப்பாயாக. நீ காணும் இச்சிறுவர்கள் உன்னைப் போன்றவர்கள் அல்ல. ஏனெனில், இவர்கள் வேறுவிதமாகப் பேசவில்லை. இந்த உபதேசங்களை நீ எவ்வாறு கற்றுக் கொண்டாய்? உன்னுடைய புத்தி எவ்வாறு இப்படி பேதலித்துப் போனது?
பதம் 7.5.10 : உன் குலத்தில் சிறந்தவனே, உனது மனக்கறை பகைவர்களால் ஏற்பட்டதா அல்லது உனக்கு நீயே ஏற்படுத்திக் கொண்டதா? உன் ஆசிரியர்களான நாங்கள் இதைப்பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளோம், தயவு செய்து எங்களிடம் உண்மையைக் கூறு.
பதம் 7.5.11 : பிரகலாத மகாராஜன் விடையளித்தார்: பரமபுருஷரின் பகிரங்க சக்தியானது? மனிதர்களின் புத்தியை மயக்கி, “என் நண்பன்”, “என் பகைவன்” என்ற வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், இதை நான் முன்பு வேத வல்லுனர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன் என்றாலும், இப்பொழுது நான் இதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.
பதம் 7.5.12 : ஒரு ஜீவராசியின் பக்தித் தொண்டின் காரணத்தால், பரமபுருஷர் அவனிடம் திருப்தியடையும் பொழுது, அவன் ஒரு பண்டிதனாகி விடுகிறான். இவ்வாறாக அவன் நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும், தனக்கும் இடையில் வேறுபாடுகளைக் காண்பதில்லை. பிறகு புத்திசாலித்தனமாக அவன் “நம்மில் ஒவ்வொருவரும் பகவானின் நித்தியத் தொண்டர்களாவோம். எனவே நமக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை” என்று நினைக்கிறான்.
பதம் 7.5.13 : எப்பொழுதும் “எதிரி”, “நண்பன்” என்றே நினைத்துக் கொண்டிருப்பவர்களால், தங்களுக்குள் உள்ள பரமாத்மாவைக் கண்டறிய முடியாது. அவர்களைச் சொல்வானேன், வேத இலக்கியங்களில் நன்கு பரிச்சயம் உடையவர்களும், உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுமான பிரம்மதேவரைப் போன்றவர்கள் கூட சிலசமயங்களில் பக்தித் தொண்டின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் குழப்பமடைகின்றனர். இச்சூழ்நிலையை உருவாக்கியுள்ள அதே பரமபுருஷர்தான், பெயரளவேயான உங்களுடைய எதிரியின் பக்கம் சேரும்படி எனக்கு புத்தியைக் கொடுத்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
பதம் 7.5.14 : பிராமணர்களே (ஆசிரியர்களே) ஒரு காந்தக் கல்லினால் ஈர்க்கப்பட்டு இரும்பு தானாகவே காந்தத்தை நோக்கி நகர்வதுபோலவே, என்னுடைய உணர்வும் பகவான் விஷ்ணுவின் விருப்பத்தால் மாற்றப்பட்டு, சக்ரபாணியான அவரால் ஈர்க்கப்பட்டுள்ளது. இவ்விதமாக எனக்கு எந்த சுதந்திரமும் இல்லை.
பதம் 7.5.15 : மாமுனிவரான நாரதர் தொடர்ந்து கூறினார்: மகாத்மாவான பிரகலாத மகாராஜன், தன் ஆசிரியர்களும், சுக்ராச்சாரியரின் மகன்களுமான சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம் இவ்வாறு கூறியபின் மௌனமானார். இதனால் பெயரளவேயான அந்த பிராமணர்கள் அவரிடம் கோபம் கொண்டனர். அவர்கள் இரண்யகசிபுவின் சேவகர்களாக இருந்ததால் மிகவும் மனம் வருந்தி, பிரகலாத மகாராஜனைத் தண்டிக்கும் வகையில் பின்வருமாறு பேசலாயினர்.
பதம் 7.5.16 : அடேய் கொண்டுவா பிரம்பை! இந்த பிரகலாதன் நம்முடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறான். இவனுடைய துர்புத்தியினால், இவன் குலத்தைப் பொசுக்கும் தீப்போல் ஆகிவிட்டான். இப்பொழுது இவனுக்கு நான்கு வகையான அரசியல் தந்திரங்களில் நான்காவது உபாயமாகிய தண்டனையே தகுதியெனக் கூறப்பட்டுள்ளது.
பதம் 7.5.17 : இந்த துரோகி சந்தன வனத்தில் முளைத்த ஒரு முள் மரத்தைப் போல் தோன்றியுள்ளான். சந்தன மரங்களை வெட்டித் தள்ளுவதற்கு ஒரு கோடரி தேவைப்படுகிறது. இத்தகைய ஒரு கோடாரியின் கைப்பிடிக்கு இந்த முள் மரத்தின் தண்டு மிகவும் பொருத்தமானதாகும். சந்தன மரமாகிய அசுர குலத்தை வெட்டி வீழ்த்துவதற்கு பகவான் விஷ்ணு கோடாரியாக உள்ளான். இந்த பிரகலாதனோ அந்த கோடாரியின் கைப்பிடியாக உள்ளான்.
பதம் 7.5.18 : பிரகலாத மகாராஜனின் ஆசிரியர்களான சண்டனும், அமர்க்கனும் தங்கள் சீடனான அவரைப் பலவழிகளில் தண்டித்தும், பயமுறுத்தியும் அவருக்கு தர்மவழி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலனின்பம் ஆகியவைகளைப் பற்றி போதிக்க ஆரம்பித்தனர். இவ்வாறுதான் அவருக்கு அவர்கள் கல்வி போதித்தனர்.
பதம் 7.5.19 : சிறிது காலத்திற்குப் பிறகு, ஆசிரியர்களான சண்டனும், அமர்க்கனும், பொது ஜனத் தலைவர்களை சமாதானப்படுத்துதல், அவர்களுக்கு இலாபகரமான பதவிகளைக் கொடுத்து அவர்களை சாந்தப்படுத்துதல், அவர்களைப் பிரித்து ஆளுதல், அடிபணிய மறுக்கும் பொழுது தண்டித்தல் ஆகிய இராஜ தந்திரங்களில் பிரகலாத மகாராஜனுக்குப் போதுமான கல்வியை அளித்து விட்டதாக எண்ணினர். பிறகு ஒரு நாள் பிரகலாதரின் தாய் தானே அவரைக் குளிப்பாட்டி போதுமான ஆடை ஆபரணங்களால் அவரை நன்கு அலங்கரித்தபின், அவரை அவரது தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.
பதம் 7.5.20 : தன் பாதங்களில் விழுந்து வணங்கிய தன் மகனைக் கண்ட இரண்யகசிபு, பாசமுள்ள ஒரு தந்தையாக உடனே அவரை இருகைகளாலும் தழுவிக்கொண்டு குழந்தையை ஆசிர்வதித்தான். ஒரு தந்தை இயல்பாகவே தன் மகனை அணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி யடைகிறார். இவ்விதமாக இரண்யகசிபுவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
பதம் 7.5.21 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார் : யுதிஷ்டிர மகாராஜனே, இரண்யகசிபு பிரகலாதரைத் தன் மடியில் வைத்து உச்சி முகர்ந்தான். அன்பு மேலீட்டால் அவனது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் குழந்தையின் புன்னகை பூத்த முகத்தை நனைக்க, தன் மகனிடம் அவன் பின்வருமாறு பேசினான்.
பதம் 7.5.22 : இரண்யகசிபு கூறினான்: என் அன்பு மகனே பிரகலாதா, நீண்ட ஆயுளை உடையவனே, இவ்வளவு காலமாக நீ உன் ஆசிரியர்களிடமிருந்து பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறாய். அந்த அறிவில் எது சிறந்ததென்று நீ நினைக்கிறாயோ அதை இப்பொழுது கூறு.
பதங்கள் 7.5.23 – 7.5.24 : பிரகலாத மகாராஜன் கூறினார்: பகவான் விஷ்ணுவின் உன்னதமான நாமம், ரூபம், குணங்கள், உபகரணங்கள், மற்றும் லீலைகள் ஆகிய வற்றைப் பற்றி கேட்டல் மற்றும் பாடுதல், அவற்றை நினைத்துக் கொண்டிருத்தல், பகவானின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்தல், பகவானுக்குப் பதினாறு வகையான உபசாரத்தைச் செய்தல், பகவானைத் துதித்தல், அவரது சேவகனாய் இருத்தல், பகவானைத் தனது உற்ற நண்பராக நினைத்தல், அனைத்தையும் அவருக்கு அர்ப்பணம் செய்தல் (அதாவது, மனோ, வாக்கு, காயம் ஆகியவற்றினால் அவருக்கு சேவை செய்தல்) ஆகிய இந்த ஒன்பது முறைகள் தூய பக்தித் தொண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ்வொன்பது முறைகளின் மூலமாக தன் வாழ்வையே ஸ்ரீ கிருஷ்ணரின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளவன் பூரண அறிவைப் பெற்றிருப்பதால், அவன் மிகவும் கற்றறிந்தவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பதம் 7.5.25 : இரண்யகசிபு தன் மகன் பிரகலாதரின் வாயிலிருந்து பக்தித் தொண்டைப் பற்றிய இவ்வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபமடைந்தான். தன் உதடுகள் துடிதுடிக்க, தன் குரு சுக்ராச்சாரியரின் மகனான சண்டனிடம் பின்வருமாறு அவன் கூறலானான்.
பதம் 7.5.26 : அடேய்! ஒரு பிராமணரின் தகுதியற்ற, மிகவும் வெறுக்கத்தக்க புத்திரனே, நீ என் எதிரிகளின் பக்கம் சேர்ந்து கொண்டு என் கட்டளையை மீறிவிட்டாய். ஒன்றும் அறியாத இச்சிறுவனுக்கு நீ பக்தித்தொண்டைப் பற்றி கற்பித்திருக்கிறாய்! இதென்ன அபத்தம்?
பதம் 7.5.27 : பாவம் செய்தவர்களிடம் காலப்போக்கில் பல்வேறு வகையான நோய்கள் உண்டாகின்றன. அதுபோலவே, இவ்வுலகில் பொய்யுடை தரித்த பல போலியான நண்பர்கள் உள்ளனர். ஆனால் இறுதியில் பொய்யான நடத்தையின் காரணத்தால், அவர்களுடைய உண்மையான விரோதம் வெளிப்பட்டு விடுகிறது.
பதம் 7.5.28 : இரண்யகசிபுவின் குரு புத்திரன் கூறினான்: தேவேந்திரனின் எதிரியே, அரசே, உங்களுடைய மகன் பிரகலாதன் கூறியதில் எதுவும், என்னாலோ, வேறு எவராலோ கற்பிக்கப்படவில்லை. இயற்கையான பக்தித் தொண்டு தன்னிச்சையாக அவனுள் எழுந்துள்ளது. ஆகவே தயவு செய்து உங்களுடைய கோபத்தை விடுங்கள். எங்களையும் அநாவசியமாக கோபிக்காதீர்கள். ஒரு பிராமணனை இவ்வாறு அவமதிப்பது நல்லதல்ல.
பதம் 7.5.29 : ஸ்ரீ நாரதமுனி தொடர்ந்து கூறினார்: ஆசிரியரிடமிருந்து இந்த பதிலைப் பெற்ற இரண்யகசிபு, தன் மகன் பிரகலாதனிடம் பின் வருமாறு கூறினான்: அயோக்கியனே, நம் குடும்பத்திலேயே மிகவும் இழிவடைந்தவனே, இதை உன் ஆசிரியர்களிடமிருந்து பெறவில்லையாயின் வேறு எங்கிருந்து பெற்றாய்?
பதம் 7.5.30 : பிரகலாத மகாராஜன் பதிலளித்தார்: கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தால் பௌதிக வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், நரகச் சூழ்நிலைகளை நோக்கி முன்னேறிச் சென்று, மென்றதையே திரும்பத்திரும்ப மென்று கொண்டே இருக்கின்றனர். மற்றவர்களின் உபதேசங்களாலோ, அவர்களது சொந்த முயற்சியாலோ, அல்லது இவ்விரண்டின் சேர்க்கையாலோ கிருஷ்ணரிடம் அவர்களுக்கு நாட்டம் ஏற்படுவதே இல்லை.
பதம் 7.5.31 : பௌதிக வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வில் உறுதியாக சிக்கிக் கொண்டிருப்பவர்களும், புறப் புலன் பொருட்களில் பற்றுக் கொண்டுள்ள அவர்களைப் போன்ற ஒரு குருடனைத் தங்களது தலைவனாக அல்லது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளவர்களுமான மனிதர்களால், ஆன்மீக உலகிற்கு திரும்பிச் சென்று, பகவான் விஷ்ணுவின் சேவையில் ஈடுபடுவதுதான் வாழ்வின் இலட்சியம் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. ஒரு குருடனால் வழிகாட்டப்படும் மற்ற குருடர்கள் சரியான வழியை விட்டு விலகிச் சென்று ஒரு சாக்கடையில் விழுவது போல், பௌதிக பற்றுடைய ஒருவனால் வழிகாட்டப்படும் பௌதிக பற்றுடைய மற்றவர்கள், பலன் கருதும் செயல்களெனும் மிகவும் உறுதியான கயிறுகளால் பிணைக்கப்படுகின்றனர். இவ்வாறாக அவர்கள் மூவகைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு பௌதிக வாழ்வைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே போகின்றனர்.
பதம் 7.5.32 : பௌதிக களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ள ஒரு வைஷ்ணவருடைய தாமரைப் பாதங்களின் புழுதியைத் தங்கள் உடல்களின் மேல் பூசிக் கொண்டல்லாது, பௌதிக வாழ்வில் அதிக நாட்டம் கொண்டுள்ளவர்களால், தமது அசாதாரணமான செயல்களுக்காக புகழப்படுபவரான பகவானின் தாமரைப் பாதங்களில் பற்றுக் கொண்டவர்கள் ஆக முடியாது. கிருஷ்ண உணர்வினர் ஆகி, அவரது தாமரைப் பாதங்களில் இவ்வாறு சரணடைவதால் மட்டுமே ஒருவனால் பெளதிக களங்கத்திலிருந்து விடுபட முடியும்.
பதம் 7.5.33 : பிரகலாத மகாராஜன் இவ்வாறு பேசிமுடித்து மெளனமானதும், கோபத்தால் குருடனாகி விட்ட இரண்யகசிபு பிரகலாதரைத் தன் மடியிலிருந்து தரையில் தள்ளினான்.
பதம் 7.5.34 : கோபமும் வெறுப்பும் கொண்ட இரண்யகசிபு, உருக்கிய தாமிரம் போல் கண்கள் சிவக்க, தன் சேவகர்களைப் பார்த்து கூறினான்: அசுரர்களே, இச்சிறுவனை என்னிடமிருந்து எடுத்துச் செல்லுங்கள். இவன் கொல்லப்பட வேண்டியவன். உடனே இவனைக் கொன்று விடுங்கள்!.
பதம் 7.5.35 : சிறுவனான இந்த பிரகலாதன் என் சகோதரனைக் கொன்றவனாவான். ஏனெனில் என் பகைவனான பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஓர் அடிமை போல் சேவை செய்வதற்காக இவன் தன் குடும்பத்தையே விட்டுவிட்டான்.
பதம் 7.5.36 : பிரகலாதன் ஐந்து வயதே நிரம்பிய பாலகனாக இருந்தபோதிலும், அந்த இளம் வயதிலேயே இவன் தன் தந்தையுடனும், தாயுடனும் உள்ள பாசப் பிணைப்பை விட்டுவிட்டான். எனவே நிச்சயமாக இவன் நம்பத் தகுந்தவனல்ல. இவன் விஷ்ணுவிடம் விசுவாசமாக நடந்து கொள்வான் என்பதும் சந்தேகம்தான்.
பதம் 7.5.37 : வனத்தில் தோன்றும் ஒரு மூலிகை மானிட இனத்தைச் சேர்ந்ததல்ல என்றாலும், அது மனிதனுக்கு நன்மை பயப்பதால் அதை கவனமாகப் பாதுகாக்கிறோம். அதுபோலவே மருந்து போல் நன்மை பயப்பவன் அயலானாக இருப்பினும், அவனுக்கு மகனைப் போல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மற்றொருபுறம், ஒருவனது உடலிலுள்ள ஓர் அங்கம் நோயினால் பீடிக்கப்படுமானால், அதை நீக்கிவிட வேண்டும். இதனால் மீதியுள்ள உடல் சுகமாக இருக்கும். அதுபோலவே, ஒருவனது சொந்த மகன் தன்னுடைய சொந்த உடலிலிருந்து பிறந்தவனாக இருப்பினும், கெடுதல் விளைவிப்பவனாக இருந்தால், அவனை விலக்கிவிட வேண்டும்.
பதம் 7.5.38 : ஆன்மீக முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ள யோகிகளுக்கெல்லாம், அடங்காப் புலன்கள் எதிரிகளாக இருப்பது போலவே, ஒரு நண்பன் போல் காணப்படும் இந்த பிரகலாதன் எனக்கு அடங்காதவனாக இருப்பதால், இவன் எனது எதிரியாவான். எனவே இந்த எதிரி சாப்பிட்டுக் கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ அல்லது உறங்கிக் கொண்டோ இருந்தாலும், எவ்வாறாயினும் உடனே கொல்லப்பட வேண்டியவன் ஆவான்.
பதங்கள் 7.5.39 – 7.5.40 : இவ்வாறாக இரண்யகசிபுவின் சேவகர்களான அசுரர்கள் பிரகலாத மகாராஜனுடைய உடலின் மென்மையான பகுதிகளைத் தங்கள் சூலங்களால் தாக்கத் துவங்கினர். அந்த அசுரர்கள் எல்லோரும் அச்சமூட்டும் முகங்களுடனும், கூரிய பற்களுடனும் தாமிரம் போல் சிவந்த தாடிகளுடனும், சிவந்த கேசத்துடனும் இருந்தனர். இவ்வாறாக அவர்கள் மிகவும் அச்சமூட்டும் தோற்றங்களுடன் காணப்பட்டனர். அவர்கள், அவனை வெட்டுங்கள்! அவனைக் குத்துங்கள்! என்று முழக்கமிட்டபடி. பரமபுருஷரை தியானித்தப்படி மௌனமாக அமர்ந்திருந்த பிரகலாத மகாராஜனை தாக்கத் துவங்கினர்.
பதம் 7.5.41 : புண்ணிய பலன்கள் இல்லாத ஒருவன் சில நல்ல கர்மங்களைச் செய்தாலும் அது பலனளிக்காது. இவ்வாறாக பிரகலாத மகாராஜன் ஒரு பக்தர் என்பதால், அவர் மீது அசுரர்களால் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் எந்த கணிசமான விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவர், பௌதிக புலன்களால் உணரமுடியாதவரும், மாற்றமற்றவரும், முழு பிரபஞ்சத்திற்கும் ஆத்மாவும் ஆகிய பரமபுருஷருக்குச் சேவை செய்து கொண்டு, பௌதிக சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் அவரது தியானத்தில் முழுமையாக ஆழ்ந்திருந்தார்.
பதம் 7.5.42 : எனது பிரியமுள்ள யுதிஷ்டிர மகாராஜனே, பிரகலாத மகாராஜனைக் கொல்ல அசுரர்கள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போனதால், அசுரராஜனான இரண்யகசிபு, மிகவும் அச்சமடைந்து, அவரைக் கொல்ல வேறு திட்டங்களை தீட்டத் துவங்கினான்.
பதங்கள் 7.5.43 – 7.5.44 : பெரிய யானைகளின் பாதங்களுக்கடியில் தள்ளியும் பெரிய பயங்கரமான பாம்புக்களுக்கிடையில் தள்ளியும், ஜால வித்தைகளைப் பிரயோகித்தும், மலையுச்சியிலிருந்து உருட்டித் தள்ளியும், துஷ்ட மந்திரங்களைப் பிரயோகித்தும், விஷம் கொடுத்தும், பட்டினி போட்டும், கடுங்குளிர், காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றில் அவரை உட்படுத்தியும், அவர் மீது பெரிய பாறைகளை வீசியும் தன் மகனை இரண்யகசிபுவால் கொல்ல முடியவில்லை. முற்றிலும் பாவமற்றவரான பிரகலாதருக்குத் தன்னால் எவ்விதத்திலும் பாதகம் செய்ய முடியாததைக் கண்ட இரண்யகசிபு, அடுத்து என்ன செய்வது என்று பெருங்கவலையில் மூழ்கினான்.
பதம் 7.5.45 : இரண்யகசிபு எண்ணினான்: நான் இந்த பிரகலாதனை தண்டிப்பதில் பல கெட்ட வார்த்தைகளை உபயோகித்து, அவனைக் கொல்ல பல வழிகளைக் கையாண்டு எவ்வளவோ முயற்சிகளைச் செய்தும் அவனை என்னால் கொல்ல முடியவில்லை. உண்மையில், இந்த கொடூரமான, வெறுக்கத்தக்க செயல்களால் அவன் சிறிதும் பாதிப்படையாமல், தனது சொந்த சக்தியினால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.
பதம் 7.5.46 : இவன் ஒரு பச்சிளம் பாலகன். எனக்கு மிக அருகில் இருக்கிறான். இருந்தும் சிறிதும் அச்சமற்ற நிலையில் இருக்கிறான். இவன், ஒரு போதும் நிமிர்த்த முடியாத நாயின் வளைந்த வாலைப் போல் இருக்கிறான். ஏனெனில் இவன் ஒருபோதும் எனது துர் நடத்தையை மறப்பதில்லை. மேலும் எஜமானராகிய பகவான் விஷ்ணுவுடன் தனக்கிருக்கும் சம்பந்தத்தையும் இவன் மறப்பதில்லை.
பதம் 7.5.47 : இச்சிறுவன் என்னுடைய எந்த தண்டனைக்கும் அஞ்சாதவனாக இருப்பதால், இவனுக்கு எல்லையற்ற பலம் இருப்பதாகத் தெரிகிறது. இவன் மரணமற்றவனைப் போல் காணப்படுகிறான். எனவே இவனிடம் கொண்ட பகைமையின் காரணத்தால் நான்தான் மடியப் போகிறேன். அல்லது ஒருவேளை இது நடக்காமலும் இருக்கலாம்.
பதம் 7.5.48 : இவ்வாறு எண்ணிய அசுரராஜன் வாடிய முகத்துடன், உடலின் காந்தியை இழந்து, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மௌனமாக இருந்தான். பிறகு சுக்ராச்சார்யரின் இரு மகன்களான சண்டனும், அமர்க்கனும் ரகசியமாக அவனிடம் பேசினர்.
பதம் 7.5.49 : தலைவரே, தங்களுடைய புருவங்கள் அசைவதைக் காண்பதற்கே லோக பாலகர்கள் எல்லோரும் மிகவும் அஞ்சுவதை நாங்கள் அறிவோம். யாருடைய உதவியும் இல்லாமல் மூவுலகங்களையும் நீங்கள் வென்றிருக்கிறீர்கள். எனவே உங்களுடைய வருத்தத்திற்கோ, பயத்திற்கோ எந்த ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரகலாதனைப் பொருத்தவரை, அவன் ஒரு பாலகனாவான். உங்களுடைய கவலைக்கு அவன் ஒரு காரணமே அல்ல. அவனுடைய நல்ல அல்லது கெட்ட குணங்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது.
பதம் 7.5.50 : நம்முடைய குரு சுக்ராச்சாரியர் வரும்வரையில் இச்சிறுவனை வருணப் பாசத்தால் கட்டி வைத்து விடுங்கள். அதனால் இவன் பயந்து ஓடிவிடாமல் இருப்பான். எப்படியும், காலத்தால் இவன் சிறிது வளர்ந்தவனாகி, நமது உபதேசங்களை கிரகித்துக் கொண்டு அல்லது நமது குருவிற்குச் சேவை செய்து கொண்டு இருந்தால், இவன் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்வான். எனவே கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.
பதம் 7.5.51 : தன் குருபுத்திரர்களான சண்டன் மற்றும் அமர்க்கனின் இவ்வுபதேசங்களைக் கேட்ட இரண்யகசிபு அதற்குச் சம்மதித்து, ராஜ குடும்பத்தினரால் பின்பற்றப்படும் தர்ம விதிமுறைகளைப் பற்றி பிரகலாதருக்கு உபதேசிக்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டான்.
பதம் 7.5.52 : அதன்பிறகு சண்டனும், அமர்க்கனும், பௌதிக தர்மம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகியவற்றைப் பற்றி, பணிவும் அடக்கமும் மிக்க பிரகலாத மகாராஜனுக்கு இடையறாதும், கிரமம் படியும் கற்பித்தனர்.
பதம் 7.5.53 : சண்டனும், அமர்க்கனும் பிரகலாத மகாராஜனுக்கு, தர்மம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகிய மூன்று வகையான பௌதிக முன்னேற்றங்களைப் பற்றி உபதேசித்தனர். ஆனால் இத்தகைய உபதேசங்களைவிட மேலான நிலையில் இருந்த பிரகலாதர் அவற்றை விரும்பவில்லை. ஏனெனில் இத்தகைய உபதேசங்கள் பௌதிக விவகாரங்களின் இருமையை அடிப்படையாகக் கொண்டவையாகும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பௌதிகமான வாழ்வு முறையில் இவை ஒருவனை அழைத்துச் செல்கின்றன.
பதம் 7.5.54 : ஆசிரியர்கள் குடும்ப விவகாரங்களை கவனிப்பதற்காக வீட்டிற்குப் போயிருந்தபோது, விளையாட அவகாசம் பெற்ற, பிரகலாத மகாராஜனுக்குச் சம வயதுடைய மாணவர்கள் அவரை விளையாட அழைத்தனர்.
பதம் 7.5.55 : அப்போது மகா புத்திமானும், பண்டிதருமாகிய பிரகலாத மகாராஜன், தமது வகுப்பறைத் தோழர்களைப் பார்த்து, சிரித்துக் கொண்டு, இனிய மொழியில், பௌதிக வாழ்வு முறையின் பயனற்ற தன்மையைப்பற்றி அவர்களுக்கு போதிக்கத் துவங்கினார். அவர்களிடம் மிகவும் இரக்கம் கொண்ட அவர், பின்வருமாறு அவர்களுக்கு உபதேசிக்கலானார்.
பதங்கள் 7.5.56 – 7.5.57 : என் அருமை யுதிஷ்டிர மகாராஜனே, எல்லாச் சிறுவர்களும் பிரகலாத மகாராஜனிடம் அதிக அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களுடைய இளம் வயதின் காரணத்தால், வெறுக்கத்தகுந்த இருமையிலும், உடல் சுகத்திலும் நாட்டம் கொண்டுள்ள அவர்களுடைய ஆசிரியர்களின் செயல்களாலும், போதனைகளாலும் அவர்கள் அவ்வளவாக களங்கம் அடைந்திருக்கவில்லை. இவ்வாறாக அச்சிறுவர்கள் தங்களுடைய விளையாட்டுப் பொருட்களை விட்டுவிட்டு, பிரகலாத மகாராஜன் கூறுவதைக் கேட்பதற்காக அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். அவர்களது மனமும், கண்களும் பிரகலாதர் மீது நன்கு லயித்திருக்க, அவர்கள் மிகவும் ஆவலுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். பிரகலாத மகாராஜன் ஓர் அசுர குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், சிறந்த பக்தராக இருந்ததால், அந்த அசுரர்களின் நலனையே அவர் நாடினார். இவ்வாறாக அவர் பௌதிக வாழ்வின் பயனற்ற தன்மையைப் பற்றி அவர்களுக்கு உபதேசிக்கத் துவங்கினார்.