அத்தியாயம் – 3
இரண்யகசிபு சாகாவரம் பெறும் திட்டம்
பதம் 7.3.1 : நாரத முனி யுதிஷ்டிரரிடம் கூறினார்: அசுர ராஜனான இரண்யகசிபு பிறரால் ஜெயிக்க முடியாதவனாகவும், மூப்பும், மரணமும் இல்லாதவனாகவும், ஆக விரும்பினான். மரணமற்றவனாக வாழ்வதற்கு. அணிமா, லகிமா போன்ற யோக சித்திகளையெல்லாம் அவன் பெற விரும்பினான். மேலும் பிரம்மலோகம் உட்பட பிரபஞ்சம் முழுவதற்கும் தானே அரசனாக வேண்டும் என்றும் விரும்பினான்.
பதம் 7.3.2 : இரண்யகசிபு கைகளை உயரத் தூக்கி, கண்களால் வானத்தை நோக்கிக் கொண்டு, கால் கட்டை விரல்களால் பூமியில் நின்று கொண்டு, மந்தரமலைச் சாரலில் கடுந்தவங்களைச் செய்யலானான். இந்த நிலை மிகமிக கடினமான ஒன்றாகும். ஆனால் பூரணத்துவம் அடைவதற்குரிய ஒரு மார்க்கமாக இதை அவன் ஏற்றுக் கொண்டான்.
பதம் 7.3.3 : இரண்யகசிபுவின் தலையிலுள்ள முடியிலிருந்து ஊழிக்காலத்தில் ஏற்படுவது போன்ற, சூரியனின் சகிக்க முடியாத, பிரகாசமான கதிர்களைப் போன்ற ஒர் ஒளி வெளிப்பட்டது. இத்தகைய கடுந்தவங்களைக்கண்டு, எல்லாக் கிரகங்களிலும் சஞ்சரித்து வந்த தேவர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
பதம் 7.3.4 : இரண்யகசிபுவின் கடுந்தவத்தின் காரணத்தால், அவனது தலையிலிருந்து நெருப்பு வெளிப்பட்டது. அந்த நெருப்பும், அதன் புகையும் ஆகாயம் முழுவதிலும் பரவி, உயர்ந்த மற்றும் தாழ்ந்த கிரகங்களைச் சூழ்ந்து கொண்டு, அவற்றை மிகவும் வெப்பமடையச் செய்தது.
பதம் 7.3.5 : இக்கடுந்தவத்தின் வலிமையினால், எல்லா நதிகளும், சமுத்திரங்களும் கொந்தளிப்படைந்தன. மலைகளுடனும், தீவுகளுடனும் கூடிய பூமி அதிரத் துவங்கியது. நட்சத்திரங்களும் கிரகங்களும் கீழே விழுந்தன. எல்லாத் திசைகளும் கொழுந்துவிட்டு எரிந்தன.
பதம் 7.3.6 : இரண்யகசிபுவின் கடுந்தவங்களினால் மிகவும் தொல்லைக்குள்ளாகி கட்டெரிக்கப்பட்ட எல்லா தேவர்களும் தாங்கள் வசிக்கும் கிரகங்களை விட்டு வெளியேறி பிரம்மதேவரின் கிரகத்திற்குச் சென்று, அவரிடம் பின்வருமாறு அறிவித்தனர்: தேவர்களின் தலைவரே, பிரபஞ்ச நாயகரே, இரண்யகசிபுவின் கடுந்தவங்களின் பலனாக அவனது தலையிலிருந்து வெளிப்படும் தீயினால் நாங்கள் மிகவும் தொல்லைக்குள்ளாகியுள்ளோம். இதனால் நாங்கள் எங்களுடைய கிரகங்களில் வகிக்க முடியாமல் உங்களிடம் வந்துள்ளோம்.
பதம் 7.3.7 : ஓ மகிமைவாய்ந்தவரே, இப்பிரபஞ்சத்தின் தலைவரே, தாங்கள் சரியென்று நினைத்தால், உங்களுக்குக் கீழ்படிந்த பிரஜைகள் அனைவரும் அழிக்கப்படுவதற்கு முன்பாக, அனைத்தையும் அழித்து விடுவதற்காக ஏற்பட்ட இத்தொல்லைகளை தயவுசெய்து நிறுத்தி விடுங்கள்.
பதம் 7.3.8 : இரண்யகசிபு மிகவும் கடுமையான தவத்தை மேற்கொண்டான். அவனுடைய திட்டத்தைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும், அவனுடைய நோக்கங்கள் என்னவென்பதை நாங்கள் கூறுகிறோம், தயவு செய்து கேளுங்கள்.
பதங்கள் 7.3.9-7.3.10 : இப்பிரபஞ்சத்திற்குள் பரம அதிகாரம் உள்ளவரான பிரம்மதேவர், அவரது உயர்ந்த பதவியை கடுந்தவங்கள். யோக சக்தி, சமாதி ஆகியவற்றின் வலிமையால் பெற்றுள்ளார். அதன் பயனாக பிரபஞ்சத்தைப் படைத்த பிறகு, அவர் பிரபஞ்சத்திற்குள் மிகவும் பூஜிக்கத்தக்க தேவராக ஆகியுள்ளார். நான் நித்தியமானவன், காலமும் நித்தியமானது என்பதால், நானும் இத்தகைய தவம், அஷ்ட சித்தி, சமாதி ஆகியவற்றையடைய முயன்று, பற்பல பிறவிகளுக்கு பிரம்மதேவரால் அனுபவிக்கப்படும் அதே பதவியை ஆக்கிரமிக்கப்போகிறேன்.
பதம் 7.3.11 : “என்னுடைய கடுந்தவங்களின் வலிமையால் பாவ புண்ணியச் செயல்களின் பலன்களை நான் தலைகீழாக மாற்றுவேன். இவ்வுலகில் நிலைநாட்டப்பட்டுள்ள எல்லாப் பழக்க வழக்கங்களையும் நான் தலைகீழாக மாற்றியமைப்பேன். யுக முடிவில் துருவலோகம் கூட அழிக்கப்பட்டுவிடும். ஆகவே அதனால் என்ன பயன்? பிரம்மனின் பதவியை அடையவே நான் விரும்புகிறேன்.
பதம் 7.3.12 : பிரபுவே, உங்களுடைய பதவியை அடைவதற்காக இரண்யகசிபு இப்பொழுது கடுந்தவத்தில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த இடங்களிலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். தாங்கள் மூவுலகிற்கும் தலைவராவீர். தயவு செய்து எது சரி என்று தோன்றுகிறதோ அதைத் தாமதமின்றி செய்யவும்.
பதம் 7.3.13 : பிரம்மதேவரே, இப்பிரபஞ்சத்திலுள்ள தங்களுடைய பதவி அனைவருக்கும், குறிப்பாக பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. பிராமணப் பண்பாட்டையும், பசு பராமரிப்பையும் அதிகமாக பேணிக்காத்து போற்றப்பட வேண்டும். இதனால் எல்லாவகையான பௌதிக இன்பங்களும், ஐஸ்வரியங்களும், நல்லதிர்ஷ்டமும் தானாகவே வளர்ச்சியடையும். ஆனால் துரதிஷ்டவசமாக, இரண்யகசிபு உங்களுடைய பதவியை ஆக்கிரமித்துக் கொண்டால் அனைத்தும் நாசமாகிவிடும்.
பதம் 7.3.14 : அரசே, தேவர்களால் இவ்வாறு அறிவிக்கப்பட்டதும், மிகவும் சக்தி வாய்ந்தவரான பிரம்மதேவர், பிருகு, தட்சன் மற்றும் வேறு மாமுனிவர்களால் பின் தொடரப்பட்டவராய், உடனடியாக இரண்யகசிபு தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டார்.
பதங்கள் 7.3.15 – 7.3.16 : ஓர் அன்ன விமானத்தால் சுமந்து செல்லப்பட்ட பிரம்மதேவரால் இரண்யகசிபு இருந்த இடத்தை முதலில் கண்டு பிடிக்க இயலவில்லை. ஏனெனில், இரண்யகசிபுவின் உடல் ஓர் எறும்புப் புற்றினாலும், புல்லாலும், மூங்கில் புதர்களாலும் மூடுப்பட்டிருந்தது. இரண்யகசிபு நீண்ட காலமாக அங்கேயே இருந்ததால், எறும்புகள் அவனது தோல், கொழுப்பு, சதை, இரத்தம் ஆகியவற்றைத் தங்களுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தன. பின்னர் பிரம்மதேவரும் மற்ற தேவர்களும், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல், தன் தவ வலிமையால் உலகம் முழுவதையும் உஷ்ணப்படுத்திக் கொண்டிருந்த அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தனர். அதைக் கண்டு ஆச்சரியமடைந்த பிரம்மதேவர், புன்னகை செய்து பின்வருமாறு அவனிடம் கூறலானார்.
பதம் 7.3.17 : பிரம்மதேவர் கூறினார்: கஸ்யப முனிவரின் மகனே எழுந்திரு, தயவு செய்து எழுந்திரு. உனக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும். இப்பொழுது நீ உனது தவங்களில் பூரணத்துவம் அடைந்துவிட்டாய். ஆகவே உனக்கு நான் வரமளிக்கிறேன். இப்பொழுது உனக்கு வேண்டிய வரத்தை நீ கேட்கலாம். உன் விருப்பத்தை நான் நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.
பதம் 7.3.18 : உன்னுடைய சகிப்புத் தன்மையைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப் படுகிறேன். புழு பூச்சிகளாலும், எறும்புகளாலும் அரிக்கப்பட்டு உண்ணப்பட்ட போதிலும், நீ உன் எலும்புக்கிடையில் உனது பிராண வாயுவை இன்னும் சுழல விட்டுக் கொண்டிருக்கிறாய். உண்மையிலேயே இது அற்புதமான செயல்தான்.
பதம் 7.3.19 : உனக்கு முன் பிறந்த பிருகு போன்ற முனிவர்களால் கூட இத்தகைய கடுத்தவங்களைச் செய்ய முடியாது. எதிர்காலத்திலும் எவராலும் இவ்வாறு செய்ய முடியாது. நூறு தேவ ஆண்டுகளுக்கு நீர் கூட பருகாமல் உயிர் வாழக் கூடியவர் இந்த மூவுலகங்களிலும் யாரிருக்கிறார்?
பதம் 7.3.20 : என்னருமை திதியின் மைந்தனே, உன்னுடைய கடும் தவத்தினாலும் மன உறுதியினாலும் சிறந்த முனிவர்களால் கூட செய்ய முடியாததை நீ செய்து விட்டாய். இவ்வாறாக நிச்சயமாக உன்னால் நான் வெற்றி கொள்ளப்பட்டேன்.
பதம் 7.3.21 : அசுரர்களில் சிறந்தவனே, இக்காரணத்திற்காக உன் விருப்பப்படி உனக்கு வேண்டிய வரங்களையெல்லாம் அளிக்க நான் தயாராக உள்ளேன். நான், மனிதர்களைப்போல் சாகாதவர்களான தேவர்களின் சுவர்க்கலோகத்தைச் சேர்ந்தவன். ஆகவே நீ மரணத்திற்குட்பட்டவன் என்ற போதிலும், உனக்கு என் தரிசனம் வீண்போகாது.
பதம் 7.3.22 : ஸ்ரீ நாரத முனி தொடர்ந்து கூறினார்: இப்பிரபஞ்சத்தின் முதல் ஜீவராசியும், மிகவும் சக்தி வாய்ந்தவருமான பிரம்மதேவர் இரண்யகசிபுவிடம் இவ்வார்த்தைகளைக் கூறியபின், தமது கமண்டலத்திலுள்ள உன்னதமான, நிச்சயம் பலனளிக்க கூடிய, ஆன்மீகமான நீரை எடுத்து, எறும்புகளாலும் பூச்சிகளாலும் அரிக்கப்பட்டிருந்த இரண்யகசிபுவின் உடல் மீது தெளித்தார். இவ்வாறாக அவர் இரண்யகசிபுவுக்குப் புத்துணர்வு அளித்தார்.
பதம் 7.3.23 : பிரம்மதேவரின் கமண்டலத்திலுள்ள நீர் அவன் மீது தெளிக்கப் பட்டவுடனேயே, இரண்யகசிபு வஜ்ரத்தின் தாக்குதலையும் தாங்கக் கூடிய, மிகவும் சக்தி வாய்ந்த அவயவங்களுடன் கூடிய முழுமையான ஓருடலுடன் கூடியவனாய் எழுந்து நின்றான். விறகிலிருந்து நெருப்பு வெளிப்படுவது போல், தேக பலத்துடனும், பொன்னிறமான ஒரு உடலுடனும், முற்றிலும் இளமையான ஒரு மனிதனாக அவன் எறும்புப் புற்றிலிருந்து வெளிவந்தான்.
பதம் 7.3.24 : பிரம்ம தேவர் தமது அன்ன விமானத்தில் தன் முன் ஆகாயத்தில் இருப்பதைக் கண்ட இரண்யகசிபு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன் உடனே தன் தலை பூமியில் படும்படியாக விழுந்து வணங்கி, அவருக்குத் தான் கடமைப் பட்டிருப்பதை வெளிப்படுத்தத் துவங்கினான்.
பதம் 7.3.25 : பிறகு தரையிலிருந்து எழுந்து பிரம்மதேவரைத் தன் முன் கண்ட அந்த தைத்தியர்களின் தலைவன், ஆனந்தத்தால் பூரிப்படைந்தான். அவன் கண்களில் கண்ணீருடன், முழு உடலும் நடுநடுங்க, பிரம்மதேவரை திருப்திப்படுத்துவதற்காக கூப்பிய கரங்களுடனும், தழுதழுத்த குரலுடனும், பணிவுடன் பின்வருமாறு பிரார்த்திக்கத் துவங்கினான்.
பதங்கள் 7.3.26-7.3.27 : இப்பிரபஞ்சத்தின் பரம அதிகாரிக்கு எனது பணிவான வணக்கங்கள். அவரது ஒவ்வொரு பகலின் முடிவிலும் பிரபஞ்சமானது, காலத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அடர்ந்த இருளினால் முழுமையாக மூடப்பட்டு விடுகிறது. பிறகு மீண்டும் சுயப் பிரகாசமுடையவரான அந்த பிரபு தன் சொந்த பிரகாசத்தினால், மூன்று ஜட இயற்கைக் குணங்களுடன் கூடிய ஜட சக்தியின் மூலமாக முழு பிரபஞ்ச தோற்றத்தையும் படைத்து, காத்து, அழிக்கிறார். சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய அந்த இயற்கைக் குணங்களுக்கு பிரம்ம தேவரே புகலிடமாவார்.
பதம் 7.3.28 : பிரம்மதேவர் அறிவாற்றல் உடையவரும், இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைப்பதில் தன் மனதையும், தெளிவாக உணர்ந்த புத்தியையும் செலுத்தக் கூடியவரும் ஆவார். அவரது செயல்களின் காரணத்தால்தான் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் கண்ணுக்குப் புலப்படுகின்றன. எனவே அவரே எல்லாத் தோற்றங்களுக்கும் காரணமாவார். இவ்வாறாக இப்பிரபஞ்சத்தின் மூல புருஷராக விளங்கும் அவருக்கு எனது வணக்கங்கள்.
பதம் 7.3.29 : இந்த ஜட உலகைச் சேர்ந்த ஜீவன்களின் பிறப்பிடமான தாங்களே அசைவன, அசையாதன ஆகிய ஜீவராசிகளை ஆள்பவரும், அவற்றின் உணர்வுகளை உற்சாகப்படுத்துபவரும் ஆவீர். நீரே மனதையும், செயல் மற்றும் அறிவுப் புலன்களையும் பராமரிக்கிறீர். எனவே தாங்களே எல்லா பௌதிக மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகியவற்றின் உயர்ந்த ஆளுனரும், அனைத்து விருப்பங்களையும் ஆள்பவரும் ஆவீர்.
பதம் 7.3.30 : பிரபுவே, வேத சொரூபமாக உள்ள தங்களுடைய ரூபத்தினாலும், யாகம் செய்யும் அனைத்து பிராமணர்களின் செயல்களைப் பற்றிய அறிவின் மூலமாகவும், அக்னிஷ்டோமம் முதலான ஏழு வகையான யக்ஞங்களைக் கொண்ட வேதகிரியைகளைத் தாங்கள் பரப்புகிறீர்கள். உண்மையில், மூன்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரிகைகளைச் செய்யும்படி யக்ஞ பிராமணர்களைத் தாங்கள் உற்சாகப்படுத்துகிறீர்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மா என்ற முறையில் தாங்கள் ஆதியும், அந்தமும் இல்லாதவரும், காலம் மற்றும் வெளி ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவருமாவீர்.
பதம் 7.3.31 : பிரபுவே நித்திய காலமாக விழித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் நித்திய காலமாக இருந்துகொண்டு, நொடிகள், வினாடிகள், நிமிடங்கள், மணிகள் போன்ற உங்களுடைய வெவ்வேறு பகுதிகளின் மூலமாக அனைத்து ஜீவராசிகளின் ஆயுட் காலத்தையும் குறைக்கிறீர்கள். எனினும், தாங்கள் மாற்றமில்லாதவரும், பரமாத்மாவாக ஒரே இடத்தில் இருப்பவரும், சாட்சியும், பரமபுருஷரும், பிறப்பற்றவரும், மற்றும் உயிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் காரணமாக உள்ள எங்கும் நிறைந்துள்ள ஆளுனரும் ஆவீர்.
பதம் 7.3.32 : ஒன்று உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ, அசைவதாகவோ அல்லது அசையாததாகவோ இருப்பினும், எதுவுமே தங்களிடமிருந்து பிரிந்திருப்பதில்லை. உபநிஷதங்களைப் போன்ற வேத இலக்கியங்களிலிருந்து பெறப்படும் அறிவும், மூல வேத ஞானத்தின் துணை அங்கங்களிலிருந்து வரும் அறிவும் சேர்ந்ததே உங்களுடைய புற உடலாகும். தாங்கள் பிரபஞ்சத்தின் பிறப்பிடமான ஹிரண்யகர்பர் ஆவீர். எனினும், தாங்கள் பரம ஆளுனராக இருப்பதால், தாங்கள் மூன்று ஜட இயற்கைக் குணங்களைக் கொண்ட பௌதிக உலகிற்கு மேற்பட்டவராக இருக்கிறீர்கள்.
பதம் 7.3.33 : பிரபுவே, உங்களுடைய சொந்த இருப்பிடத்தில் மாற்றமில்லாதவராக இருக்கும் தாங்கள், இப்பிரபஞ்ச தோற்றத்திற்குள் தங்களுடைய விஸ்வரூபத்தை விரிவடையச் செய்வதன் மூலமாக இந்த ஜட உலகை அனுபவிப்பவராக காணப்படுகிறீர்கள். தாங்கள் பிரம்மனும், பரமாத்மாவும், பழமையானவரும், பரம புருஷருமாவீர்.
பதம் 7.3.34 : எந்த பரமன் அவரது எல்லையற்ற, தோன்றா உருவில் இப்பிரபஞ்ச தோற்றத்திற்குள் பிரபஞ்சத்தின் மொத்த ரூபமாகப் பரந்து விரிந்துள்ளாரே, அவருக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். அவர் பகிரங்க மற்றும் அந்தரங்க சக்திகளையும், அனைத்து ஜீவராசிகளும் அடங்கிய நடுத்தரசக்தி என்று அழைக்கப்படும் கலப்படமான சக்தியையும் உடையவராவார்.
பதம் 7.3.35 : பிரபுவே, வரமளிப்பவர்களில் சிறந்தவரே, நான் விரும்பும் வரத்தை நீங்கள் அளிப்பீர்கள் என்றால், தங்களால் படைக்கப்பட்ட எந்த ஜீவராசியாலும் எனக்கு மரணம் ஏற்படாதிருக்கட்டும்.
பதம் 7.3.36 : என் வசிப்பிடத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ, பகலிலோ அல்லது இரவிலோ, தரையிலோ அல்லது ஆகாயத்திலோ தங்களால் படைக்கப்பட்ட எந்த ஜீவராசியினாலோ, அல்லது எந்த ஆயுதத்தினாலோ, அல்லது எந்த மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ எனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்ற வரத்தை அருள்வீராக.
பதங்கள் 7.3.37- 7.3.38 : உயிருள்ள அல்லது உயிரற்ற எந்த ஜீவராசியாலும், எந்த தேவராலும், எந்த அரசனாலும் அல்லது கீழுலகங்களிலுள்ள எந்த பாம்பினாலும் நான் கொல்லப்படக்கூடாது என்ற வரத்தையும் எனக்கு அளியுங்கள். யுத்தகளத்தில் உங்களைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை என்பதால், உங்களோடு போட்டியிடுபவர் எவருமில்லை. ஆகவே என்னுடன் போட்டியிடுபவரும் எவரும் இருக்கக் கூடாது என்ற வரத்தை எனக்குக் கொடுங்கள். அனைத்து ஜீவராசிகள் மற்றும் அதி தேவதைகளின் மீதான முழு அதிகாரத்தையும், அப்பதவியினால் அடையப்படும் எல்லாப் புகழையும் எனக்கு அருள்வீராக. மேலும், நீண்ட தவங்களாலும், யோகப் பயிற்சிகளாலும் அடையப்படக் கூடிய யோக சக்திகள் எக்காலத்திலும் அழியாதவை என்பதால் அவற்றையும் எனக்கு அருள்வீராக.