அத்தியாயம் – 2
அஜாமிளன் விஷ்ணு தூதர்களால்
விடுவிக்கப்படுதல்
பதம் 6.2.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, பகவான் விஷ்ணுவின் சேவகர்கள் எப்பொழுதும் நியாயத்திலும், தர்க்க வாதத்திலும் மிகவும் திறமைசாலிகளாவர். யமதூதர்களின் கூற்றுக்களைக் கேட்டபின், அவர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்.
பதம் 6.2.2 : விஷ்ணுதூதர்கள் கூறினர்: ஐயோ தர்மம் காக்கப்பட வேண்டிய ஒரு சபையில் அதர்மம் அறிமுகப்படுத்தப்படுவது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்! உண்மையில், தர்மத்தைக்காக்கும் பொறுப்புடையவர்கள் பாவமற்ற, தண்டிக்கப்படக்கூடாத ஒருவனை அநாவசியமாக தண்டிக்கிறார்களே!
பதம் 6.2.3 : அரசன் அல்லது அரசாங்க அதிகாரியொருவன், பிரஜைகளுக்குத் தந்தை போலவும், காவலர் போலவும் இருந்து, அன்புடனும், பாசத்துடனும் அவர்களைக் காத்து இரட்சிக்கக்கூடிய அளவுக்குச் சிறந்த தகுதிமுறைகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் வேத சாஸ்திரங்களுக்கேற்ப பிரஜைகளுக்கு நல்ல அறிவுரைகளையும், உபதேசங்களையும் அளித்து, எல்லோரிடமும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். இதைத்தான் யமராஜன் செய்கிறார். ஏனெனில் அவர் நேர்மை தவறாத பரம நீதிமானாவார். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களும் அப்படித்தான். ஆனால் இத்தகையவர்கள் ஊழல் நிறைந்தவர்களாகி குற்றமற்ற அப்பாவிகளைத் தண்டிப்பதன் மூலம் பராபட்சம் காட்டுவார்களாயின், பிரஜைகள் தங்களுடைய பராமரிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் அடைக்கலம் தேடி எங்கு செல்வார்கள்?
பதம் 6.2.4 : பொதுமக்கள், சமூகத்திலுள்ள ஒரு தலைவனின் உதாரணத்தைப் பின்பற்றி, அவனுடைய நடத்தைப்படியே தாங்களும் நடப்பர். அத்தலைவன் ஏற்றுக் கொள்வதையெல்லாம் பிரமாணமாக தாங்களும் ஏற்றுக் கொள்வர்.
பதங்கள் 6.2.5 – 6.2.6 : பாமர மக்கள், எது தர்மம், எது அதர்மம் என்று பிரித்தறியக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சியடையாதவர்களாக உள்ளனர். கள்ளங்கபடமற்றவனும், தேர்ந்த அறிவு இல்லாதவனுமான ஒரு குடிமகன், தன் எஜமானன் தன்னைக் காப்பாற்றுவான் என்ற உறுதியான நம்பிக்கையுடன், அவனது மடியில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கும் அறிவற்ற ஒரு மிருகத்தைப் போன்றவனாவான். ஒரு தலைவன் உண்மையில் இரக்க மனமுடையவனாகவும், ஒரு ஜீவராசியின் நம்பிக்கைக்குத் தகுதியுடைவனாகவும் இருந்தால், உயர்ந்த நம்பிக்கையும் நட்பும் கொண்டு முழுமையாகச் சரணடைந்துள்ள ஒரு பாமரனை அவன் எவ்வாறு தண்டிக்கலாம் அல்லது கொல்லலாம்?
பதம் 6.2.7 : அஜாமிளன் தன் பாவச் செயல்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்துவிட்டான். உண்மையில், ஒரு பிறவியில் செய்த பாவங்களுக்கு மட்டுமின்றி, கோடிக்கணக்கான பிறவிகளில் செய்த பாவங்களுக்கும் அவன் பிராயச்சித்தம் செய்தவனாகிறான். ஏனெனில், கதியற்ற ஒரு நிலையில் நாராயணரின் திருநாமத்தை அவன் ஜபித்ததுவே அதற்குக் காரணம். அவன் தூய்மையாக ஜபிக்கவில்லை என்றாலும், குற்றமில்லாமல் ஜபித்திருக்கிறான். எனவே இப்பொழுது அவன் தூய்மையடைந்து முக்திக்குத் தகுதியுடைவன் ஆகிவிட்டான்.
பதம் 6.2.8 : விஷ்ணுதூதர்கள் தொடர்ந்து கூறினார்: இதற்கு முன்பு கூட, உண்ணும் பொழுதும் மற்ற சமயங்களிலும் இந்த அஜாமிளன் தன் மகனை “நாராயணா இங்கு வா” என்று அழைத்து வந்தான். இவ்வாறு அவன் தன் மகனின் பெயரைத் தான் அழைத்தான் என்றாலும், நா—ரா—ய—ண என்ற நான்கு அட்சரங்களை உச்சரித்திருக்கிறான். நாராயணா என்ற நாமத்தை இவ்வாறு ஜபித்ததனாலேயே, கோடிக்கணக்கான பிறவிகளில் செய்த பாவங்களுக்குப் போதுமான பிராயச்சித்தத்தை அவன் செய்தவனாகிறான்.
பதங்கள் 6.2.9 – 6.2.10 : பகவான் விஷ்ணுவின் புனித நாமத்தை ஜபிப்பதுதான், தங்கம் முதலான விலையுயர்ந்த பொருட்களைத் திருடுபவனுக்கும், குடிகாரனுக்கும், ஒரு நண்பன் அல்லது உறவினனுக்குத் துரோகம் செய்பவனுக்கும், பிராமணனைக் கொல்பவனுக்கும், பெண்களை, அரசரை அல்லது தன் தந்தையைக் கொல்பவனுக்கும், பசுக்களைக் கொன்றவனுக்கும், மற்றெல்லா பாவ ஆத்மாக்களுக்கும் மிகச் சிறந்த பிராயச்சித்த முறையாகும். பகவான் விஷ்ணுவின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே, இத்தகைய பாவிகள் பரமபுருஷரின் கவனத்தைக் கவர்ந்து விடுகின்றனர். ஆகவே, “இவன் எனது புனித நாமத்தை ஜபித்திருக்கிறான் என்பதால், இவனுக்குப் பாதுகாப்பளிப்பது என் கடமையாகும்” என்று பகவான் கருதுகிறார்.
பதம் 6.2.11 : பாவிகள், பகவான் ஹரியின் புனித நாமத்தை ஒரே ஒரு தடவை ஜபிப்பதால் எவ்வளவு பரிசுத்தமடைகிறார்களோ, அவ்வளவு பரிசுத்தத்தை, வேத சம்ஸ்காரங்களைப் பின்பற்றுவதாலோ, பிராயச்சித்தம் செய்வதாலோ அடைவதில்லை. சமஸ்காரப் பிராயச்சித்தம் ஒருவனைப் பாவ விளைவுகளிலிருந்து விடுவிக்கும் என்றாலும், இது பக்தித் தொண்டை எழுப்புவதில்லை. ஆனால் பகவானின் நாமங்களை ஜபிப்பதானது பாவ விளைவுகளைப் போக்கி, பக்தித் தொண்டை எழுப்புவதுடன், பகவானின் புகழ், குணங்கள், விசேஷ பண்புகள், லீலைகள் மற்றும் உபகரணங்களையும் ஒருவனுக்கு ஞாபகப்படுத்துகிறது.
பதம் 6.2.12 : சமய சாஸ்திரங்களில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பிராயச்சித்த சடங்கு முறையில் இதயத்தை தூய்மைப்படுத்துவதற்குப் போதுமானவையல்ல. ஏனெனில் பிராயச்சித்தம் செய்த பிறகும், மனம் மீண்டும் பெளதிகச் செயல்களை நோக்கியே ஓடுகிறது. அதனால்தான், பெளதிக செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட விரும்புபவனுக்கு, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஜபிப்பது அல்லது பகவானின் நாமம், புகழ், மற்றும் லீலைகளைத் துதித்துப் போற்றுவது, பரிபூரண பிராயச்சித்த முறையாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய நாம ஜபமும், துதியும் ஒருவனது இதயத்திலுள்ள அழுக்கை முழுமையாகப் போக்கிவிடுகிறது.
பதம் 6.2.13 : இறக்கும் பொழுது, இந்த அஜாமிளன் பகவான் நாராயணரின் புனித நாமத்தை கதியற்ற நிலையில், உரக்க ஜபித்தான். அந்த ஜபம் ஒன்றே அவனது எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் அவனை விடுவித்துவிட்டது. ஆகவே, யமதூதர்களே, நரக சூழ்நிலைகளில் தண்டிப்பதற்காக, இவனை உங்கள் எஜமானரிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டாம்.
பதம் 6.2.14 : பகவானின் புனித நாமத்தை ஒருவன் (வேறொன்றைக் குறிப்பதற்காக) மறைமுகமாகவோ, விளையாட்டாகவோ, இசை விருந்தாகவோ அல்லது அலட்சியமாகவோ ஜபித்திருந்தால் கூட, அவன் எண்ணற்ற பாவ விளைவுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான். எல்லா வேத வல்லுனர்களாலும் இது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
பதம் 6.2.15 : ஒருவன் ஹரியின் புனித நாமத்தை உச்சரித்த பின், வீட்டின் மேலிருந்து விழுந்தோ, வழுக்கி விழுந்தோ, சாலையின் விபத்தினால் எலும்புமுறிவு ஏற்பட்டோ, பாம்பு கடித்தோ, வலியினால் அல்லது கடும் ஜுரத்தினால் பாதிக்கப்பட்டோ அல்லது ஏதேனும் ஆயுதத்தால் காயமடைந்தோ மரணமடைய நேரிட்டால், அவன் பாவியாக இருப்பினும், அவன் நரக வாழ்வில் புகுவதிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.
பதம் 6.2.16 : பெரிதும், சிறிதுமான பாவங்களுக்குப் பெரிதும் சிறிதுமான பிராயச்சித்த முறைகளை ஒருவன் மேற்கொள்ள வேண்டும் என்று வேத வல்லுனர்களாலும், முனிவர்களாலும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஹரே கிருஷ்ண மந்திர ஜபமானது, பெரிதும் சிறிதுமான பாவங்களின் எல்லா விளைவுகளையும் அழித்துவிடுகிறது.
பதம் 6.2.17 : ஒருவன் தவம், தானம், விரதங்கள் முதலான முறைகளினால் பாவ விளைவுகளை முறியடிக்க இயலும் என்றாலும், இப்புண்ணியச் செயல்களால் இதயத்திலுள்ள பௌதிக ஆசைகளை அவனால் வேருடன் களையமுடியாது. ஆனால் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் சேவை செய்வதால் அவன் இத்தகைய மாசுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.
பதம் 6.2.18 : நெருப்பு எவ்வாறு காய்ந்த சருகுகளை எரித்துச் சாம்பலாக்குகிறதோ, அவ்வாறே அறிந்தோ, அறியாமலோ ஜபிக்கப்படும் பகவானின் புனித நாமம் கூட ஒருவனுடைய எல்லாப் பாவ விளைவுகளையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது.
பதம் 6.2.19 : ஒரு குறிப்பிட்ட மருந்தின் நல்ல பலனளிக்கும் சக்தியை அறியாத ஒருவன், அந்த மருந்தை உட்கொண்டால், அல்லது வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்யப்பட்டால் கூட, அவனுக்குத் தெரியாமலேயே அது செயற்படுகிறது. ஏனெனில், அதன் ஆற்றல் நோயாளிக்குத் தெரியுமா, தெரியாதா என்பதைப் பொறுத்ததல்ல. அதுபோலவே, பகவானின் புனித நாம ஜபத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும், அறிந்தோ, அறியாமலோ அதை அவன் ஜபித்தாலும், அந்த ஜபம் நற்பயன் அளிக்கும் என்பது நிச்சயம்.
பதம் 6.2.20 : ஸ்ரீ சுகதேவர் தொடர்ந்து கூறினார்: அரசே, பக்தித் தொண்டின் கோட்பாடுகளைத் தக்க வாதங்களுடனும், நியாயங்களுடனும் இவ்வாறு பூரணமாக ஆராய்ந்த விஷ்ணுதூதர்கள், பிராமணனான அஜாமிளனை யமதூதர்களின் பிடியிலிருந்து விடுவித்து, சமீபித்திருந்த மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றினர்.
பதம் 6.2.21 : எதிரிகளை அடக்குபவரான பரீட்சித்து மகாராஜனே, யம தூதர்களுக்கு விஷ்ணுதூதர்களால் விடையளிக்கப்பட்டபின் அவர்கள் யமராஜனிடம் சென்று நடந்ததையெல்லாம் விவரித்தனர்.
பதம் 6.2.22 : யமதூதர்களின் பாசங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராமணனான அஜாமிளன் இப்பொழுது பயத்திலிருந்து விடுபட்டு, தன் சுயநினைவுக்கு வந்தான். பிறகு உடனேயே விஷ்ணுதூதர்களின் தாமரைப் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கினான். அவர்களுடைய வருகையால் அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், அவர்கள் யமதூதர்களின் கைகளிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றியதை அவன் நேரில் கண்டிருந்தான்.
பதம் 6.2.23 : பாவமற்ற பரீட்சித்து மகாராஜனே, பரமபுருஷரின் சேவகர்களான விஷ்ணுதூதர்கள், அஜாமிளன் ஏதோ சொல்ல முயல்வதைக் கண்டு திடீரென்று அங்கிருந்து மறைந்து விட்டனர்.
பதங்கள் 6.2.24 – 6.2.25 : யமதூதர்களுக்கும், விஷ்ணுதூதர்களுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைக் கேட்ட அஜாமிளனால், மூன்று ஜட இயற்கைக் குணங்களின் கீழ் செயற்படுபவையும், மூன்று வேதங்களில் குறிப்பிட்டுள்ளவையுமான மதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டவையும், ஜீவராசி மற்றும் பரமபுருஷர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுமுறையைப் பற்றியவையுமான உன்னதமான சமயக் கோட்பாடுகளையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அத்துடன் பரமபுருஷரின் நாமம், புகழ், குணங்கள் மற்றும் லீலைகளைப் பற்றியும் அஜாமிளன் கேள்விப்பட்டான். இவ்விதமாக அவன் ஒரு தூய பக்தனானான். பிறகு அவனால் தனது முக்கிய பாவச் செயல்களை நினைவுகூற முடிந்தது. அவற்றைச் செய்ததற்காக அவன் மிகவும் வருத்தப்பட்டான்.
பதம் 6.2.26 : அஜாமிளன் கூறினான்: ஐயோ, என் புலன்களுக்கு அடிமையான நான் எவ்வளவு இழிந்தவனாக ஆகிவிட்டேன்! உயர்ந்த தகுதியுடைய ஒரு பிராமணனின் நிலையிலிருந்து விழுந்து, ஒரு விலைமகளிடம் நான் குழந்தைகளைப் பெற்றேனே!
பதம் 6.2.27 : ஐயகோ, நான் மிகவும் பாவகரமாக செயற்பட்டு என் குலப்பெருமையைக் கெடுத்துவிட்டேனே. உண்மையில் பதிவிரதையான என் அழகிய இளம் மனைவியைக் கைவிட்டு, குடிகாரியான இழிவடைந்த ஒரு வேசியுடன் உடலுறவு கொண்டவனும், நல்லோர்களால் இகழப்பட்டவனுமான என்னை வெறுக்க வேண்டும்.
பதம் 6.2.28 : வயதான என் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேறெந்த மகனோ அல்லது நண்பனோ இல்லை. நானும் அவர்களை கவனித்துக்கொள்ளாததால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஐயோ, இழிகுலத்து நீசனைப்போல், நன்றி கெட்டதனமாக நான் அவர்களை அந்நிலையில் விட்டு வந்தேனே!
பதம் 6.2.29 : பாவம் செய்தவனும், சமயக் கோட்பாடுகளை மீறியவனுமான என்னைப் போன்ற ஒருவன், இத்தகைய செயல்களின் பலனாக, நரகச் சூழ்நிலைகளில் தள்ளப்பட்டு, கடும் வேதனைகளை அனுபவிக்க வேண்டும் என்பது இப்பொழுது தெளிவாகிறது.
பதம் 6.2.30 : இப்பொழுது நான் கண்டது கனவா அல்லது நனவா? பயங்கரமான மனிதர்கள் என்னைக் கட்டி இழுத்துச் செல்வதற்காக தங்கள் கைகளில் கயிறுகளுடன் வந்ததை நான் கண்டேனே, அவர்கள் எங்கு சென்று விட்டனர்?
பதம் 6.2.31 : கயிற்றால் கட்டப்பட்டு, நரகத்தை நோக்கின் கீழே இழுத்துச் செல்லப்பட்ட என்னை விடுவித்தவர்களும், அழகு மிக்கவர்களுமான அந்நான்கு முக்தர்களும் எங்கே சென்று விட்டனர்?
பதம் 6.2.32 : பாவச் செயல்களெனும் கடலில் மூழ்கியிருந்த நான் மிகவும் வெறுக்கத்தக்கவனும், துரதிர்ஷ்டசாலியும் ஆவேன் என்பதில் ஐயமில்லை. ஆயினும், என்னுடைய பூர்வ ஆன்மீகச் செயல்களின் பலனாக, என்னைக் காப்பாற்ற வந்த நான்கு உத்தம பக்தர்களை என்னால் தரிசிக்க முடிந்தது. அவர்களது வருகையால் நான் இப்பொழுது பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பதம் 6.2.33 : எனது பூர்வ பக்தித்தொண்டு இல்லையெனில், சாகும் தறுவாயில் உள்ளவனும், அசுத்தமானவனும், ஒரு வேசியின் கணவனுமான நான் எப்படி வைகுண்ட நாதரின் புனித நாமத்தை உச்சரிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கக் கூடும்? நிச்சயமாக அது சாத்தியமேயல்ல.
பதம் 6.2.34 : அஜாமிளன் தொடர்ந்து கூறினான்: வஞ்சகனும், பாவமே உருவானவனும், பிராமண தர்மத்தைக் கொன்றவனும், வெட்கங்கெட்டவனுமான நான் எங்கே? நாராயணா என்ற பரம மங்களகரமான பரமபுருஷரின் புனித நாமம் எங்கே?
பதம் 6.2.35 : நான் பெரும் பாவியாவேன். ஆனால் இப்பொழுது இந்த அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியிருப்பதால், நான் எனது மனம், பிராணவாயு, புலன்கள் ஆகியவற்றை நன்கு அடக்கி எப்பொழுதும் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதனால் பெளதிக வாழ்வெனும் ஆழமான இருளிலும், அறியாமையிலும் மீண்டும் விழுந்து விடாமல் இருக்க முடியும்.
பதங்கள் 6.2.36 – 6.2.37 : ஒருவன் தன்னை தன் உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், புலன் நுகர்வு ஆசைகளுக்கு உள்ளாகி, பலவகைப் பாவ, புண்ணியச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இது தான் பந்தப்பட்ட பௌதிக வாழ்வு எனப்படுகிறது. இப்பொழுது, ஒரு பெண்ணின் வடிவில், பரமபுருஷரின் மாயா சக்தியால் விளைவிக்கப்பட்ட பெளதிக பந்தத்திலிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ளப் போகிறேன். மிகவும் இழிவடைந்த ஆத்மாவாக இருந்த காரணத்தால், நான் மாயா சக்திக்கு பலியாகி, ஒரு பெண்ணின் கையால் ஆட்டி வைக்கப்பட்ட ஒரு விளையாட்டு மிருகம் போல் ஆனேன். இப்பொழுது நான் காம இச்சைகளைத் துறந்து, இந்த மாயையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளப் போகிறேன். நான் எல்லா ஜீவராசிகளிடமும் கருணையுள்ள ஓர் உற்ற நண்பனாக இருந்து, எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் என்னை ஆழ்த்திக் கொள்வேன்.
பதம் 6.2.38 : பக்தர்களின் சகவாசத்தில் பகவானின் புனித நாமத்தை நான் ஜபித்ததனாலேயே என் இதயம் இப்பொழுது தூய்மையடைந்து வருகிறது. எனவே பெளதிக புலன் நுகர்வின் பொய்யான வசீகரத்திற்கு மீண்டும் நான் பலியாக மாட்டேன். இப்பொழுது நான் என் மனதை பரப்பிரம்மத்தில் நிலை நிறுத்தி விட்டதால், என்னை என் உடலுடன் இனி அடையாளப்படுத்த மாட்டேன். “நான், எனது” என்ற பொய்யான எண்ணங்களைக் கைவிட்டு, என் மனதை ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நான் பதிக்கப்போகிறேன்.
பதம் 6.2.39 : பக்தருடனான (விஷ்ணுதூதர்கள்) கணப்பொழுது சகவாசத்தின் காரணத்தினால், அஜாமிளன் பெளதிக அபிமானத்திலிருந்து வைராக்கியத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டான். இவ்வாறு எல்லா பௌதிக கவர்ச்சிகளிலிருந்தும் விடுபட்ட அவன் உடனே ஹரித்வாரத்தை நோக்கிச் சென்றான்.
பதம் 6.2.40 : ஹரித்வாரில் அஜாமிளன் ஒரு விஷ்ணு ஆலயத்தில் புகலிடம் ஏற்று, பக்தியோக முறையை மேற்கொண்டான். அவன் தன் புலன்களை அடக்கி அவனது மனதை பகவானின் சேவையில் முழுமையாக ஈடுபடுத்தினான்.
பதம் 6.2.41 : அஜாமிளன் முழுமையாக பக்தித் தொண்டில் ஈடுபட்டான். இவ்விதமாக அவன் தன் மனதைப் புலன் நுகர்விலிருந்து விலக்கி, பகவானின் ரூபத்தைச் சிந்திப்பதில் முழுமையாக ஆழ்ந்துவிட்டவனானான்.
பதம் 6.2.42 : அஜாமிளனின் புத்தியும், மனதும் பகவானின் ரூபத்தில் நிலை நிறுத்தப்பட்டதும், அந்த பிராமணன் நான்கு திவ்ய புருஷர்களை மீண்டும் தன்முன் கண்டான். அவர்கள், முன்பு தான் கண்ட அதே நபர்கள்தான் என்பதைப் புரிந்து கொண்ட அவன், தன் சிரம் தாழ்த்தி அவர்களை வணங்கினான்.
பதம் 6.2.43 : விஷ்ணு தூதர்களைப் பார்த்தவுடன் அஜாமிளன் தன் ஜட உடலை, ஹரித்துவரின் கங்கைக் கரையில் விட்டுவிட்டான். பிறகு பகவானின் சகாக்களுக்கே உரித்தான, அவனது உண்மையான மூல ஆன்மீக உடலைப் பெற்றான்.
பதம் 6.2.44 : அஜாமிளன் விஷ்ணுதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு தங்க விமானத்தில் ஏறினான். அவன் ஆகாய மார்கமாக, ஸ்ரீதேவியின் கணவரான பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்திற்கு நேராகச் சென்றான்.
பதம் 6.2.45 : ஒரு பிராமணனாக இருந்த அஜாமிளன் கெட்ட சகவாசத்தினால் பிராமண பண்பாட்டையும், சமயக் கோட்பாடுகளையும் அவனே கைவிட்டான். மிகவும் வீழ்ச்சியுற்றவனான அவன் திருடுவதிலும், குடிப்பதிலும், வெறுக்கத்தக்க மற்ற செயல்களிலும் ஈடுபட்டான். ஒரு விலைமகளைக் கூட அவன் வைத்திருந்தான். இவ்வாறாக, அவன் யமதூதர்களால் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதாக இருந்தான். ஆனால் நாராயணரின் புனித நாம ஜபத்தினால் உடனடியாக காப்பாற்றப்பட்டான்.
பதம் 6.2.46 : எனவே பௌதிக பந்தத்திலிருந்து விடுபட விரும்புபவர்கள், எல்லாப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் உறைவிடமாக விளங்கும் பரமபுருஷரின் நாமம், புகழ், ரூபம் மற்றும் லீலைகளைப் பாடுவதும், துதிப்பதுமான முறையை மேற்கொள்ள வேண்டும். புண்ணிய பிராயச்சித்தம், கற்பனா ஞானம், அஷ்டாங்க யோக தியானம் முதலான வேறு வழிமுறைகளால் சரியான நன்மையை ஒருவனால் அடையமுடியாது. ஏனெனில், இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும், ரஜோ மற்றும் தமோ ஆகிய இயற்கையின் அடிப்படைக்குணங்களால் களங்கப்பட்டுள்ள மனதை அடக்க முடியாமல், ஒருவன் மீண்டும் பலன் கருதும் செயல்களிலேயே ஈடுபடுகிறான்.
பதங்கள் 6.2.47 – 6.2.48 : மிகவும் இரகசியமான இந்த சரித்திர வர்ணணைக்கு, எல்லாப் பாவ விளைவுகளையும் அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. ஆகவே எவனொருவன் இதை பக்தி சிரத்தையுடன் கேட்கிறானோ அல்லது சொல்கிறானோ, அவன் ஒரு பௌதிக உடலைப் பெற்றிருப்பினும் அல்லது எவ்வளவு பெரிய பாவியாக இருந்திருப்பினும், அவன் இனி நரக வாழ்வுக்குத் தள்ளப்பட மாட்டான். உண்மையில் அவனைப் பார்க்கக்கூட யமதூதர்கள் அவனை நெருங்கமாட்டார்கள். அவன் தன்னுடைய உடலை விட்டபின், ஆன்மீக உலகை அடைகிறான். அங்கு அவன் மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, பூஜிக்கப்படுகிறான்.
பதம் 6.2.49 : மரணத் தறுவாயில் மரண வேதனைக்குள்ளான அஜாமிளன், பகவானின் புனித நாமத்தை ஜபித்தான். தன் மகனுக்குப் பெயராக அமைந்த ஹரிநாமத்தை அவன் ஜபித்து பரமபதம் அடைந்தான். எனவே ஒருவன் சிரத்தையுடனும், குற்றமில்லாமலும் பகவானின் புனித நாமத்தை ஜபிப்பானாயின், அவன் பரமபதம் அடைவான் என்பதில் சந்தேகமேது?