அத்தியாயம் – 4
முழுமுதற்கடவுளான ரிஷப தேவரின் குண நலன்கள்
பதம் 5.4.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார் மகாராஜா நாபி மன்னரின் புதல்வர் பிறந்தவுடன், தனது உள்ளங்காலில் அடையாளங்களைப் (கொடி, வஜ்ராயுதம்) பெற்றிருந்தார். அவர் அனைவர்க்கும் பொதுவாகவும் மிகவும் அமைதியுடனும் விளங்கினார். அவர் தனது மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தக் கூடியவராகவும் எல்லாச் செல்வங்களும் உடையவராகவும் விளங்கினார். அவர் உலகியல் இன்பத்தைத் தேடி அலையவில்லை. இக்குணங்கள் அனைத்தும் கொண்டு விளங்கிய நாபி மன்னரின் மைந்தர், தமது ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரிக்கப் பெற்றார். இதன் காரணமாக அந்தணர்களும், தேவர்களும், அமைச்சர்களும், குடிமக்களும் ரிஷபதேவர் மன்னராகி உலகினை ஆளவேண்டுமென்று விரும்பினார்.
பதம் 5.4.2 : நாபி மன்னரின் புதல்வர் வெளிப்பட்ட பொழுது அவர் கவிஞர்களால் பாராட்டப்படும் முழுமுதற் கடவுளின் அடையாளங்களுடன் கூடிய உடல் உறுதி, வீரம், பலம், அழகு, பெயர், புகழ், செல்வாக்கு, ஊக்கமுடைமை போன்ற நற்குணங்கள் அனைத்தும் வாய்க்கப்பெற்றிருந்தார். தன் மைந்தனின் இக்குணங்களைக் கண்டு நாபி மன்னர், மனிதருள் தன் மகனே சிறந்தவர் என்று கருதினார். ஆகையினால் தன் மைந்தனுக்கு “ரிஷப” என்னும் பெயர் சூட்டினார்.
பதம் 5.4.3 : செல்வச்சிறப்புடன் விளங்கிய தேவேந்திரன், மன்னர் ரிஷபதேவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டான். பாரதவர்ஷம் என்றறியப்படும் உலகின் மீது மழை பொழியாதிருக்குமாறும் செய்தான். அப்போது பரமபுருஷ பகவானும் யோகேஷ்வரனுமாகிய ரிஷபதேவர் தேவேந்திரனின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு சிறிது புன்னகை புரிந்தார். பிறகு அவர் தனது யோகமாயையினால் (அவரது அகச்சக்தி) தனது இருப்பிடமான அஜநாபம் என்னும் இடத்தின் மீது ஏராளமாக மழை பெய்யச் செய்தார்.
பதம் 5.4.4 : தான் விரும்பிய வண்ணமே நாபி மன்னர் ஒரு நிறைவான புதல்வனைப் பெற்றதினால் எப்போதும் உன்னத ஆனந்தத்தினால் உணர்ச்சி வயப்பட்டவராகவும் தன் புதல்வன் மீது மிகுந்த பாசமுடையவராகவும் திகழ்ந்தார். மெய்மறந்த நிலையில், நடுங்கும் குரலில் அவர் தன் மைந்தனை எப்போதும் அன்பு மகனே என் உயிரே என்று அழைத்தார். இம்மனப்பான்மையினை அவர் பரமபுருஷபகவானான பரம பிதாவினைத் தன் மைந்தனாக ஏற்றுக் கொண்டதினால் விளைந்த யோக மாயையினால் ஏற்பட்டதாகும். பகவான் தனது முழு நல்லெண்ணத்தினால் ஒருவரது புதல்வனானார் அனைவரிடமும் ஒரு சாதாரண மனிதனைப் போன்றே பழகினான். இவ்வாறு மன்னர் நாபி தன் உன்னத மைந்தனை மிகுந்த பாசத்துடன் வளர்க்கத் தொடங்கினார். மேலும் அவர் உன்னத ஆனந்தம், மகிழ்ச்சி மற்றும் பக்தியினால் உணர்ச்சிவயப்பட்டவராகத் திகழ்ந்தார்.
பதம் 5.4.5 : நாபி தன் மைந்தன் ரிஷப தேவருக்குக் குடிமக்கள், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். தன் மைந்தனுக்கிருந்த செல்வாக்கினைப் புரிந்து கொண்ட மன்னர் நாபி, வேத நெறிமுறைகளுக்கேற்ப இவ்வுலகிலுள்ள பொது மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தன் மைந்தனை இவ்வுலகின் மாமன்னனாக முடி சூட்டினார். இதனைச் செய்வதற்கு அவர் தன் மைந்தனை அரசு நிர்வாகத்தில் வழி காட்டக்கூடிய கற்றறிந்த அந்தணர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் மன்னர் நாபி தன் மனைவி மேருதேவியுடன் இமயமலைப் பகுதியிலுள்ள பத்திரிகாஸ்ரமம் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தவம் மட்டும் துறவறங்களை மேற்கொண்டார். மேலும் அவர் முழு சமாதி நிலையில் முழுமுதற் கடவுளான நாராயணரை வழிபட்டார். இவரே தமது சுயாம்ஸ விரிவில் கிருஷ்ணராக இருக்கின்றார். இதனைச் செய்ததின் மூலம் மகாராஜா நாபி உரிய காலத்தில் வைகுண்டம் என்றறியப்படும் ஆன்மீக உலகிற்கு உயர்வுபெற்றார்.
பதம் 5.4.6 : ஒ, பரீட்சித்து மன்னரே! மகாராஜா நாபியினைப் புகழ்ந்து பழங்கால முனிவர்கள் இரண்டு சுலோகங்களைப் பாடியுள்ளனர். அவற்றுள் ஒன்று “நாபி மன்னரது மன நிறைவினை யாரே அடைய முடியும்? யாரே அவர்தம் செயல்களைச் செய்தற் கூடும்? அவரது பக்தித் தொண்டு காரணத்தினாலேயே முழுமுதற் கடவுள் அவர் மைந்தனாகப் பிறக்கச் சம்மதித்தார்.
பதம் 5.4.7 : (இரண்டாவது வழிபாடு இதுவாகும்) “மகாராஜா நாபியை விட அந்தணர்களைச் சிறப்பாக வழிபட்டோர் யாரே உளர்? தகுதி வாய்ந்த அந்தணர்களை, அவர்களுக்குத் திருப்தி ஏற்படும் வண்ணம் அவர் வழிபட்டக் காரணத்தினால், அந்தணர்கள் தமது ஆற்றலினால் மகாராஜா நாபிக்கு முழுமுதற் கடவுளான நாராயணரை தனிப்பட்ட முறையில் காட்டினர்.
பதம் 5.4.8 : பத்ரிகாஸ்ரமத்திற்கு மகாராஜா நாபி புறப்பட்டுச் சென்ற பிறகு பகவான் ரிஷப தேவர் தனது நாடே தனது செயற்களம் என்று கண்டு கொண்டார். ஆகையினால் அவர்தான் ஆடவருள் முன்னோடியாக விளங்க வேண்டுமென்பதற்காகவும், இல்லறத்தார்க்குரிய கடமைகள் என்னவென்று உபதேசிப்பதற்காகவும் முதலில் தனது ஆன்மீக குருக்களின் கட்டளையின்படி பிரம்மச்சரியத்தினை மேற்கொண்டார். அதற்காக அவர் ஆன்மீக குருவின் இருப்பிடமான குருகுலத்திற்குச் சென்றார். அங்கே அவரது கல்விப் பயிற்சி முடிவுற்ற பின்னர் அவர் தனது ஆன்மீகக் குருக்களுக்கு குரு தட்சணை அளித்துவிட்டு இல்லற வாழ்க்கையினை மேற்கொண்டார். பின்னர் அவர் இந்திரனால் அளிக்கப்பட்ட ஜெயந்தி என்னும் பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்டு அவளிடம் நூறு புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அந்நூறு புதல்வர்களும் அவரைப் போன்றே ஆற்றல்மிக்கவர்களாக விளங்கினார்கள். ரிஷப தேவரும், ஜெயந்தியும் தங்கள் இல்லற வாழ்வினை மிகவும் சிறந்த முறையில், ஷ்ருதி மற்றும் ஸ்மிருதி சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள சமயச் சடங்குகளை நிறைவேற்றியபடி வாழ்ந்தனர்.
பதம் 5.4.9 : ரிஷபதேவரின் நூறு புதல்வர்களில் மூத்தவர் பரதன் என்று அழைக்கப்பட்டார். நற்குணங்கள் அனைத்தும் நிரம்பிய அவர் சிறந்த பக்தர். அவரது சிறப்பின் காரணமாகவே இப்பூமி பாரதவர்ஷம் எனப்படுகிறது.
பதம் 5.4.10 : பரதனுக்குப் பின்னால் தொண்ணூற்றொன்பது புதல்வர்கள் இருந்தனர். அவர்களுள் மூத்தவர்கள் குஷாவர்தன், இலாவர்தன், பிரம்மதேவன், மலயன், கேது, பத்ரசேனன், இந்த்ரஸ்ப்ருக், விதர்பன், கீகடன் என்போர்.
பதங்கள் 5.4.11 – 5.4.12 : இம்மைந்தர்களில் கவி, ஹவி, அந்தரிக்ஷன், பிரபுத்தன், பிப்பலாயனன், ஆவிர் ஹோர்தன, துருமிலன், சமஸன், கராபஜனன் என்று ஒன்பது பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் மேன்மை மிக்கவர்கள், வளர்ச்சி பெற்ற பக்தர்கள் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தினை உபதேசிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர். முழுமுதற் கடவுளான வாசுதேவரின் மீது கொண்ட அசைக்க முடியாத பக்தியினால் இப்பக்தர்கள் புகழ்மிக்கவர்களாக விளங்கினர். இதனால் அவர்கள் மேன் மக்களாகத் திகழ்ந்தனர். மனதினை நிறைவாகத் திருப்திப்படுத்துவதற்காக நான் (சுகதேவ கோஸ்வாமி) நாரதருக்கும், வாசுதேவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைப் பற்றி விவாதிக்கும் பொழுது இவ்வொன்பது பக்தர்களின் பண்பு நலன்களைப் பற்றித் தெளிவாக விளக்குவேன்.
பதம் 5.4.13 : மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தொன்பது மைந்தர்களைத் தவிர ரிஷப தேவருக்கும் ஜெயந்திக்கும் மேலும் எண்பத்தியோரு புதல்வர்கள் பிறந்தனர். தங்கள் தந்தையின் கட்டளைக்கேற்ப அவர்கள் அனைவரும் நற்குணம், நற்பழக்கம், செயல்களில் தூய்மை வேதச் சடங்குகள் செய்து வேத ஞானத்திலும் மேன்மை மிக்கவர்களாக விளங்கினர். இவ்வாறு இவர்கள் அனைவரும் தகுதியுடைய சிறந்த அந்தணர்களாயினர்.
பதம் 5.4.14 : முழுமுதற் கடவுளின் மறுபிறப்பெனவே பகவான் ரிஷபதேவர் முற்றிலும் சுதந்திரமுடையவராக இருந்தார். ஏனெனில் அவரது உருவம், ஆன்மீக, நித்திய, உன்னத ஆனந்தம் நிரம்பியதாகும். அவருக்கு நால்வகைத் துன்பங்களோடு (பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு) நித்தியமாக எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவர் உலகப் பற்றுடையவருமல்லர். அவர் எப்போதும் எல்லோரிடத்தும் சமமாக நடந்து கொண்டார். எல்லோரையும் ஒரே நிலையிலேயே நோக்கினார். பிறர் துன்பத்தைக் கண்டு வருந்தினார். அவர் அனைத்து உயிர்களின் நலனை விரும்பினார். அவர் மிக்க நிறைவுடையவராகவும், பரம புருஷபகவானாகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக இருந்தபோதிலும் அவர் ஒரு சாதாரண ஆத்மாவினைப் போலவே நடந்து கொண்டார். அதனால் அவர் வர்ணாசிரம தர்மத்தினைக் கடுமையாகப் பின்பற்றி அதற்கேற்ப நடந்து கொண்டார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் வர்ணாஷ்ரம தர்மக் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆகையினால் அவர் தனது தனிப்பட்டப் பண்பினாலும் செயலினாலும் வர்ணாசிரம் தர்மத்தின் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை அறியாத பொது மக்களுக்குக் கற்பித்தார். இவ்வழியே அவர் தர்மம், பொருளாதாரம், புகழ், புத்திர, புத்திரிகள் பெறுதல், உலக இன்பம் இறுதியில் நித்திய வாழ்க்கை போன்றவற்றில் வளர்ச்சி பெறுவதற்கான திறனுடையவர்களாக்கினார். அவரது உபதேசங்களின் மூலம் அவர் மக்களை இல்லறத்தில் இருக்கச் செய்ததோடு வர்ணாஷ்ரம தர்மங்களைப் பின்பற்றுவதின் மூலம் அவர்களை நிறைவுடையவர்களாகவும் மாற்றினார்.
பதம் 5.4.15 : உயர்ந்தவன் எதனைச் செய்தாலும் அதனைச் சாதாரண மனிதர்கள் பின்பற்றுவர்.
பதம் 5.4.16 : எல்லா அறங்களைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கிய இரகசிய வேத ஞானம் அனைத்தையும் அறிந்தவராக பகவான் ரிஷப தேவர் இருந்தபோதிலும் அவர் தன்னை எப்போதும் ஒரு சத்திரியராகவே பாவித்து மன அடக்கம், புலனடக்கம், பொறுமை ஆகிய அந்தணர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். இவ்வாறு அவர் மக்களை வர்ணாசிரம தர்ம முறையின்படி ஆட்சி செய்தார். வர்ணாஷ்ரம தர்மம், அந்தணர்கள் சத்திரியர்களுக்கு உபதேசிக்க, அவ்வுபதேசங்களின் கீழ் சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் மூலம் நாட்டை ஆள வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
பதம் 5.4.17 : பகவான் ரிஷப தேவர் எல்லாவகையான வேள்விகளையும் வேத இலக்கியங்களின் நெறிமுறைகளுக்கேற்ப நூறு தடவைகள் செய்தார். இவ்வாறு அவர் பகவான் விஷ்ணுவை எல்லா வழியிலும் வழிபட்டார். எல்லாச் சடங்குகளும் முதல்தரமானப் பொருட்களினால் வளப்படுத்தப்பட்டன. இவையனைத்தும் நம்பிக்கையும், இளமையும் கொண்ட புரோகிதர்களால் புனித இடங்களில் பொருத்தமான நல்ல நேரத்தில் நடத்தப்பட்டன. இவ்வாறு பகவான் விஷ்ணு வழிபடப்பட்டு, பிரசாதம் அனைத்துத் தேவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டன. இவ்வாறு சடங்குகளும், விழாக்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
பதம் 5.4.18 : கொள்ளிவாய்ப் பிசாசு அல்லது ஆகாயத் தாமரை போன்றவற்றைச் சொந்தம் கொள்ள எவரும் விரும்புவதில்லை. ஏனெனில் இவையெல்லாம் உண்மையில்லை. பரத கண்டத்தை பகவான் ரிஷப தேவர் ஆண்டபொழுது ஒரு சாதாரண மனிதன் எதையும், எக்காலத்திலும், எந்த வழியிலும் கேட்க விரும்பியதில்லை. கொள்ளிவாய்ப் பிசாசினை எவரும் எப்போதும் கேட்பதில்லை. அதாவது அனைவரும் அனைத்தையும் பெற்றிருந்ததினால் முழுத் திருப்தியடைந்திருந்தனர். ஆதலினால் அவர்கள் எதையும் கேட்டுப் பெறும் நிலையில் இல்லை எனலாம். மக்கள் அனைவரும் மன்னர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்தனர். மேலும் இப்பாசம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போனதினால் அவர்கள் எதையும் மன்னரிடம் கேட்க விரும்பியதில்லை.
பதம் 5.4.19 : ஒரு முறை பகவான் ரிஷப தேவர் பிரம்மாவர்தம் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கே கற்றறிந்த அந்தணர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும் மன்னரின் அனைத்துப் புதல்வர்களும் அந்தணர்களின் உபதேசங்களை மிகவும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தில் ரிஷப தேவர் தமது மைந்தர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே நன்னடத்தையும், பக்தியும், நற்குணமும் உடையவர்களாக இருந்தபோதிலும், நல்லுரைகளை உபதேசித்தார். எதிர்காலத்தில் அவர்கள் இவ்வுலகினை நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டும் எனக்கருதியே அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.