அத்தியாயம் – 3
நாபி மனைவி மேருதேவியிடம் ரிஷப தேவர் பிறத்தல்
பதம் 5.3.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் ஆக்னீதர மன்னன் தனக்குப் புதல்வர்கள் பிறக்கவேண்டுமென்று விரும்பினார். அதனால் அவர் அவைத்து வேள்விகளின் நாயகராகவும், அனுபவிப்பவராகவும் விளங்கும் பகவான் விஷ்ணுவை மணப்பூர்வமாகப் பிரார்த்தித்து வழிபடலானார். குழந்தைகள் ஏதும் பெற்றெடுக்காத நாபி மன்னரின் மனைவியான மேருதேவியும் அவருடன் சேர்ந்து பகவான் விஷ்ணுவை வழிபட்டு வந்தார்.
பதம் 5.3.2 : வேள்வி செய்யும்பொழுது முழுமுதற் கடவுளின் கருணையைப் பெறுவதற்கு ஏழு வழிகள் உள்ளன: (1) உயர்ந்த உண்ணும் பொருட்களை நிவேதனம் செய்தல்; (2) இடத்திற்குத் தகுந்தாற்போல் செயல்கள் ஓதுதல்; (3) காலத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுதல்; (4) மந்திரங்கள் ஓதுதல்; (5) புரோகிதர்களின் மூலம் செய்ய வைத்தல்; (6) புரோகிதர்களுக்குத் தட்சணை வழங்குதல்; (7) ஒழுங்கு முறை விதிகளைப் பின்பற்றுதல் என்பவையே அவை ஏழும் ஆகும். ஆயினும் இம்முறைகளினால் ஒருவன் எப்போதும் முழுமுதற் கடவுளை எய்த முடியாது. இருந்தபோதிலும் பகவான் தன் பக்தன் மீது மிகவும் பாசமுடையவராவார்; ஆகையினால் நாபி மன்னன் முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும், மாசுமருவற்ற தூய இதயத்துடனும், பிரவர்க்ய முறைப்படி வெளிப்படையாக வேள்விகள் செய்தபொழுது, அன்புக்கடலான முழுமுதற் கடவுள் தன் பக்தன் மீது கொண்ட பாசத்தினால், யாராலும் வெல்ல முடியாத, மயங்கச் செய்யும் தனது நாற்கரக் கோலத்தில் நாபி மன்னரின் முன்னர் தோன்றினார். தன் பக்தனின் விருப்பத்தினை நிறைவேற்றும் பொருட்டு முழுமுதற் கடவுள் தனது அழகிய வடிவத்தில் தன் பக்தனின் முன்பு காட்சியளித்தார். அவர் உருவம் பக்தர்களின் மனங்களையும் விழிகளையும் கொள்ளை கொண்டது.
பதம் 5.3.3 : பகவான் விஷ்ணு நாபி மன்னரின் முன் நான்கு கரங்களுடன் தோன்றினார். அவர் ஒளிமிக்கவராகவும், புருஷோத்தமராகவும் தோன்றினார். அவர் தனது இடுப்பில் மஞ்சள் வண்ணப் பட்டாடை உடுத்தியிருந்தார். அவருடைய மார்பில் எப்போதும் அழகு செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ வத்ஸ சின்னம் இருந்தது. அவர் சங்கு, தாமரை மலர், சக்கரம், கதாயுதம் போன்றவற்றை வைத்திருந்தார். அவர் வனத்திலுள்ள மலர்களினாலான மாலையும் கௌத்துப மணியும் அணிந்திருந்தார். அவர் வைரங்கள் பதிக்கப் பெற்ற மணிமகுடம், செவிக்குண்டலம், கைவளைகள், ஒட்டியாணம், முத்துமாலை, கடகங்கள், காற்சலங்கைகள் போன்ற பொன்னாபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தங்கள் முன் பகவான் அளித்த காட்சி நாபி மன்னருக்கும் புரோகிதர்களுக்கும், அவர்கள் அடியவர்களுக்கும், தாம் ஏழைகளாக இருந்து திடீரென்று பெருஞ்செல்வம் பெற்றதைப் போன்றிருந்தது. அவர்கள் பகவானை வரவேற்று, வழிபாட்டுக்குரிய பொருட்களை அர்ப்பணித்து தலை குனிந்து மரியாதையுடன் அவரை வழிபட்டனர்.
பதங்கள் 5.3.4 – 5.3.5 : பகவானுக்குத் தங்கள் பிரார்த்தனைகளை புரோகிதர்கள் கூறினார்; ஒ மிகுந்த வணக்கத்திற்குரியவரே, யாம் உமது தொண்டர்கள். நீர் நிறைவுற்றவர். ஆதலினால் உமது அளவற்றக் கருணையினால் உமது நித்தியத் தொண்டர்களான எம் சிறிய சேவையினை ஏற்றுக் கொள்வீராக. உமது உன்னத வடிவத்தினை உண்மையில் நாங்கள் அறிந்தோமில்லை. ஆயினும் வேத உபதேசங்கள், ஆச்சாரியர்களின் அறிவுரைகளுக்கேற்ப நாங்கள் மீண்டும் மீண்டும் உமக்கு எமது ஆழ்ந்த வணக்கங்களைச் செலுத்துகிறோம். உலகில் உயிர்கள் மிகுந்த பற்றுடையவர்களாக இல்லை. ஆனால் நீரோ மனித சிந்தனைகளை எல்லாம் கடந்தவராக இருக்கின்றீர். உமது நாம், ரூப, குணங்கள் எல்லாம் உன்னதமானவை என்பதோடு அனுபவ அறிவிற்கு அப்பாற்பட்டவையாகும். உண்மையில் உம்மை உணர யாரேவல்லார்? உலகிலுள்ள எங்களால் பௌதீக நாமங்களையும், வடிவங்களையும் மட்டுமே உணரமுடியும். உம் போன்ற உன்னதமானவருக்கு எங்களது ஆழ்ந்த வந்தனங்களையும், வழிபாடுகளையும் அர்ப்பணிப்பதைத் தவிர வேறெந்த ஆற்றலும் எங்களிடம் கிடையாது. உமது மங்களகரமான உயர்ந்த குணங்களைப் பேசுவதனால் மனிதகுலத்தின் பாவமெல்லாம் மறைகிறது. இதுவே எங்களுக்கு மிகுந்த புண்ணியச் செயலாகும். எங்களால் உமது இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிலையின் ஒரு பகுதியினை மட்டுமே அறிய முடிகிறது.
பதம் 5.3.6 : ஒ, பரமபுருஷ பகவானே, நீர் எல்லாம் நிறைந்தவர் ஆவீர், உமது பக்தர்கள் தம்மை மறந்த நிலையில், நடுங்கும் குரலுடன் துளசி இலை, நீர், புதிய இலைகளுடன் கூடிய மிலார்கள், புதிதாக வளர்ந்த புற்கள் போன்றவற்றைக் கொண்டு உம்மை வழிபடுதல் நீர் உறுதியாக மகிழ்வீர்!.
பதம் 5.3.7 : பல்வேறு பொருட்களைக் கொண்டும், வேள்விகளை உமக்குச் செய்து உமது வழிபாட்டில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். ஆயினும் மேலாண்மைமிக்க உம்மைத் திருப்திப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் தேவையில்லை என்றும் கருதுகிறோம்.
பதம் 5.3.8 : வாழ்க்கையின் லட்சியங்களும், வளங்களும் உம்மிடம் நேரடியாகவும், நிறைவாகவும் தங்கு தடையின்றியும், அளவில்லாமலும் அதிகரிக்கின்றன. உண்மையில் நீரே, உம்மில் அளவற்ற மகிழ்ச்சி மற்றும், ஆனந்தமாக இருக்கின்றீர். நாங்களோ எப்போதும் இன்பத்தின் பின்னே அலைந்து கொண்டிருக்கின்றோம். இது போன்ற வேள்விகள் எல்லாம் உமக்குத் தேவையற்றதாகும். ஆயினும் மேலாண்மைமிக்க உம்மிடமிருந்து வரங்கள் பெறுவதற்கு இவையே எமக்கு வழிகளாக இருக்கின்றன. இவ்வேள்விகள் அனைத்தும் எங்களின் பயன்களுக்காகவே செய்யப்படுகின்றன. உண்மையில் இவைகள் உமக்குத் தேவைப்படுவதில்லை.
பதம் 5.3.9 : ஒ, தேவதேவனே, விடுதலை பெறுவதற்கான அறம், பொருள், இன்பம் வீடுபேறு என்பவற்றை முற்றிலும் அறியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். வாழ்க்கையின் லட்சியம் என்னவென்பதை உண்மையில் நாங்கள் அறியவில்லை. வணங்கப்பட வேண்டும் என விரும்பும் மனிதனைப் போல் நீர் எங்கள் முன் வந்துள்ளீர். நாங்கள் காண வேண்டும் என்பதற்காகவே இங்கே காட்சிதருகின்றீர். எமது நோக்கம் நிறைவேறவும் எமது நன்மை கருதியும் உமது சுய மகிமையான “அபவர்க” எனப்படும் விடுதலையின் பயனை எங்களுக்கு அருளவும், உமது அளவற்ற கருணையினால் இங்கே நீர் எழுந்தருளியிருக்கின்றீர். எமது அறியாமையினால் நீர் முறையாக வழிபடவில்லையென்ற போதிலும் கூட நீர் இங்கே எழுந்தருளியிருக்கின்றீர்.
பதம் 5.3.10 : ஒ. வணங்கப்படுவோர் அனைவரினும் சிறந்தவரே, வரம் அளிக்கும் அனைவரினும் நீரே சிறந்தவர். ராஜரிஷி நாபியின் வேள்விச் சாலையில் நீர் எழுந்தருளியிருப்பது எங்களின் நன்மைக்கேயாகும். உம்மைக் காணும் பேற்றினை எமக்கு அருளியதின் மூலம் எங்களுக்கு மிகவுயர்ந்த வரத்தினை நீர் அருளியிருக்கின்றீர்.
பதம் 5.3.11 : போற்றுதற்குரிய பகவானே, சிந்தனை மிகுந்த மாமுனிவர்களும், மகான்களும் தொடர்ந்து உமது ஆன்மீக குணங்களைப் போற்றுகின்றனர். இம்முனிவர்கள் தங்களிடமிருந்த ஏராளமான அழுக்குகளை உலகின் மீதான பற்றின்மையினை வலுப்படுத்தியதின் மூலமும், ஞானத்தீயினாலும் சுட்டுச் சாம்பலாக்கி விட்டனர். இவ்வாறு அவர்கள் உமது குணங்கள் எய்தப் பெற்றவர்களாகவும் சுயதிருப்தியுடையவர்களாகவும் இருக்கின்றனர். உமது பண்புநலன்களை ஓதி பெருமகிழ்வு அடைந்தவர்கள் முன்பு கூட பகவான் எழுந்தருள்வது மிக மிக அரிய செயலாகும்.
பதம் 5.3.12 : போற்றுதற்குரிய பகவானே, தடுமாற்றம், பசி, தவறி வீழ்தல், வாயினால் சுவாசித்தல் அல்லது மரண வேளையில் ஏற்படும் கடுமையான காய்ச்சலில் வீழ்தல் போன்றவற்றினால் உமது பெயர் தோற்றம் குணம் முதலியவற்றை எம்மால் நினைக்க முடியாது போகலாம். ஆகையினால் பக்தர்கள் மீது அளவற்ற அன்புடைய பகவானே உம்மை நாங்கள் வழிபடுகிறோம். எங்களது பாவச் செயல்கள் அனைத்தையும் நீக்கவல்ல உமது புனித நாமங்கள், குணங்கள் மற்றும் செயல்களை எப்போதும் நாங்கள் சிந்தித்திருக்க எங்களுக்கு உதவுவீராக.
பதம் 5.3.13 : போற்றுதற்குரிய பகவானே, இதோ நிற்கும் நாபி மன்னர் உம்மைப் போன்ற ஒரு மைந்தனைப் பெறுவதையேத் தனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாகக் கொண்டிருக்கிறார். மேலாண்மை மிக்க இறைவரே அவரது நிலை சிறிதளவு தானியம் வேண்டி பெரும் செல்வந்தனை அணுகியது போன்றதாகும். நாபி மன்னனுக்கு நீர், விடுதலை பெறுதல், வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைதல் போன்ற மேன்மைமிக்க நிலை எது அளித்த போதிலும் அவர் விருப்பம் என்னவோ ஒரு மைந்தன் வேண்டும் என்பதே, அதனாலே அவர் உம்மை வணங்கி நிற்கின்றார்.
பதம் 5.3.14 : போற்றுதற்குரிய பகவானே, உயர்ந்த தொண்டர்களின் தாமரைத் திருவடிகளை ஒருவன் வழிபடவில்லையென்றால் அவன் மாயா சக்தியினால் வெல்லப்படுவான் என்பதோடு அவனது புத்தியும் குழப்பமடைந்துவிடும். உண்மையில் நஞ்சினைப் போன்ற இன்ப அலைகடலினால் யாரே அடித்துச் செல்லப்படாதவர்? உமது மாயா சக்திவெல்ல முடியாத ஒன்றாகும். இந்த சக்தியின் பாதையினைக் கண்டவரும் இல்லை. அது எவ்வாறு செயல்படுகிறது என்று விண்டவரும் இல்லை.
பதம் 5.3.15 : ஓ, பகவானே! நீர் அதிசயிக்கத்தக்கச் செயல்கள் பலவற்றைச் செய்கின்றீர் எங்களது ஒரே லட்சியம் இம்மாபெரும் வேள்வியினைச் செய்வதின் மூலம் ஒரு மைந்தனைப் பெற வேண்டும் என்பதேயாகும் ஆகையினால் எமது புத்தி அத்துணைக் கூர்மையுடையதாக இல்லை. வாழ்க்கை லட்சியத்தில் உறுதியாக இருப்பதில் நாங்கள் இன்றும் அனுபவம் பெறவில்லை. எந்தவிதச் சிறப்புமில்லாத இந்த வேள்விக்கு சில உலகப் பற்றினை ஒட்டி உம்மை அழைத்ததின் மூலம் நாங்கள் உமது தாமரைத் திருவடிகளுக்கு மிகப் பெரிய தவறிழைத்துவிட்டோம். ஆகையினால் தேவதேவனே! உமது அளவற்ற கருணையினாலும், சம நிலையுடைய மனதினாலும் எங்களது குற்றத்தினை மன்னித்தருள்வீராக.
பதம் 5.3.16 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார் பாரத நாட்டின் நாபி மன்னரால் வணங்கப்படுகின்ற புரோகிதர்கள் தங்கள் வழிபாட்டினை உரைநடையில் (பொதுவாக அவை செய்யுள் வடிவில் இருக்கும்) கூறி அவரது திருவடித் தாமரைகளை தங்கள் தலைகளினால் வணங்கினர். தேவர்களை ஆளும் தேவதேவன் அவர்கள் மீது மகிழ்ச்சி கொண்டு பின்வருமாறு கூறத் தொடங்கினார்.
பதம் 5.3.17 : முழுமுதற்கடவுள் பதில் கூறினார் ஒ, மாமுனிவர்களே, உங்களது வழிபாட்டினால் யான் மிக்க மனம் மகிழ்ந்தேன். நீங்கள் அனைவரும் உண்மையானவர்கள். நீங்கள் அனைவரும் நாபி மன்னருக்கு என்னைப் போல் புதல்வன் பிறக்க வேண்டுமென்று வேண்டினீர்கள். ஆனால் அச்செயல் மிகவும் அரியது. யான் ஒரே முழுமுதற் கடவுள் எனக்கு இணையானவர் எவருமிலர், என்னைப் போல் ஒருவரைக் காண்பதும் அரிது. இருந்தபோதிலும் நீவிர் தகுதியுள்ள அந்தணர்களாதலின் நீங்கள் ஓதிய மந்திரங்கள் பொய்த்துவிடக் கூடாது. அந்தணத்தன்மைகள் நிறைந்த தகுதியுள்ள அந்தணர்களை நான் எனது வாயாகக் கருதுகிறேன்.
பதம் 5.3.18 : எனக்கு இணையாக எவருமிலர். ஆதலினால் நான் என்னையே எனது இயல்புகளின் ஒரு பகுதியாக்கி ஆக்னீதரனின் புதல்வன் நாபி மன்னனின் மனைவி மேருதேவியின் வயிற்றில் பிறப்பேன்.
பதம் 5.3.19 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் இவ்வாறு கூறிய பின்னர் பகவான் அங்கிருந்து மறைந்தார். நாபி மன்னரின் மனைவி மேருதேவியும் தன் கணவனின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அதனால் இறைவன் கூறியதை அவளால் கேட்க முடிந்தது.
பதம் 5.3.20 : ஒ, விஷ்ணு தத்த, பரீட்சித்து மகாராஜாவே, வேள்விச் சாலையில் இருந்த மாமுனிவர்களினால் முழுமுதற் கடவுள் மகிழ்ச்சியடையுமாறு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பகவான் சமய தர்மங்களை பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்பிரஸ்தன், சந்நியாசி போன்றோர் சடங்குகளில் ஈடுபடுவதின் மூலம் பின்பற்றுவதைத் தானே தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்திக் காட்டவும், நாபி மன்னனின் விருப்பத்தினை நிறைவேற்றுவதென்றும் தீர்மானித்தார். இதனைத் தொடர்ந்து அவர், இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தனது உண்மையான ஆன்மீக வடிவத்தில் மேருதேவியின் மைந்தனாகப் பிறப்பெடுத்தார்.