அத்தியாயம் – 5
தட்சனின் வேள்வி தடைப்படுதல்
பதம் 4.5.1 : மைத்ரேயர் கூறினார்: சிவபெருமான் தன் மனைவி சதீ அவளது தந்தை தட்சன் செய்த அவமதிப்பினால் மாண்டதையும், அவளது காவலர்கள் அனைவரும் ரிபுக்கள் என்னும் தேவர்களினால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்பதையும் நாரதர் வழிக் கேள்வியுற்று மிகுந்த ஆத்திரத்திற்குள்ளானார்.
பதம் 4.5.2 : சிவபெருமான் தனது ஆத்திரத்தின் விளைவாகத் தனது உதடுகளைப் பற்களினால் கடித்தபடி தனது தலையிலுள்ள முடிகளில் இருந்து ஒரு முடியினைப் பிடுங்கி எடுத்தார். அது மின் சக்தி அல்லது நெருப்பினைப் போல் ஒளிர்ந்தது. அவர் எழுந்து நின்று ஒரு பித்தனைப் போல் சிரித்தபடியே அம்முடியினை நிலத்தில் வீசி எறிந்தார்.
பதம் 4.5.3 : மிகப் பயங்கரமானத் தோற்றமுடைய ஓர் அசுரன் வானைத் தொடும் உயரத்தில், மூன்று சூரியன்களின் ஒளி நிறைந்தவனாகத் தோன்றினான். அவனது பற்கள் வாளைப் போல் அச்சந்தரும் வகையில் கூர்மையாகவும், அவன் தலையில் இருந்த முடிகள் எரிகின்ற நெருப்பாகவும் ஒளிவீசின. அவன் ஆயிரம் கரங்களில் ஆயுதம் ஏந்தியவனாக நின்றான். மனிதர்களின் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருந்தான்.
பதம் 4.5.4 : அப்பயங்கரமான அசுரன் கூப்பிய கரங்களுடன் கேட்டான், “நான் என்ன செய்ய வேண்டும் பகவானே” என்று. பூத நாதர் என்றறியப்படும் சிவபெருமான் நேரடியாகக் கட்டளையிட்டார், “எனது உடலில் இருந்து தோன்றியதினால் நீயே எனது துணைவர்கள் அனைவருக்கும் தலைவனாகிறாய். ஆகையினால் தட்சனையும் வேள்விச் சாலையில் உள்ள அவரது படைவீரர்களையும் கொல்வாயாக”.
பதம் 4.5.5 : மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: எனதன்பிற்குரிய விதுரனே, அக்கருமை நிற அசுரன் உண்மையில் முழுமுதற் கடவுளின் ஆத்திரமே உருவாக இருந்தான். சிவபெருமானின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அக்கணமே தயாராக நின்றான். எந்த எதிர் சக்திகளையும் சமாளிக்கும் திறம் பெற்றவனான அவன் சிவபெருமானைச் சுற்றி வந்தான்.
பதம் 4.5.6 : சிவபெருமானின் ஏனைய படைவீரர்களும் ஆரவாரமாகக் கூச்சலிட்டுக்கொண்டே இப்பயங்கரமான உருவத்தினைத் தொடர்ந்தனர். மரணத்திற்கும் சாவு அளிக்கத்தகும் பயங்கரமான திரிசூலத்தினை அவ்வசுரன் ஏந்தியிருந்தான். அவன் காலில் அணிந்திருந்த தண்டைகளோ இடிபோல் ஒலித்தன.
பதம் 4.5.7 : அப்போது அவ்வேள்விச் சாலையில் இருந்தப் புரோகிதர்கள், வேள்வித் தலைவன், அந்தணர்கள் மற்றும் அவர்களது மனைவியர் திடீரென்று இந்த இருள் எங்கிருந்து சூழ்ந்தது என்று ஆச்சரியமுற்றனர். பிறகு அது புழுதிப்புயல் என அறித்து எல்லோரும் கவலையில் ஆழ்ந்தனர்.
பதம் 4.5.8 : அப்புயலின் காரணத்தை யூகித்தவராகச் சிலர் கூறினர். “காற்றும் அடிக்கவில்லை, பசுக்களும் கூட்டங்கூட்டமாக ஓடவில்லை. கொள்ளையர்களாலும் இப்புழுதி கிளம்ப முடியாது. ஏனெனில் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் பர்ஹி மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். அப்படியிருக்க எங்கிருந்து இப்புழுதிப்புயல் வருகிறது? உலக அழிவு என்பது இப்போது ஏற்படப் போகிறதா?”.
பதம் 4.5.9 : பிரசூதி என்பவள் தட்சனின் மனைவியாவாள். அவள் தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த பெண்களிடம் கூறினாள் “இந்தப் பேரழிவு தட்சனாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒன்றும் அறியாத அப்பாவியான சதீ தன் சகோதரிகள் முன்னிலையில் உயிர்துறப்பதற்கு அவர்தான் காரணம்”.
பதம் 4.5.10 : யுக அழிவுக் காலத்தில் சிவபெருமானின் சடை முடி அவிழ்ந்து பரந்திருக்கும். அவர் தனது கூர்மையான திரிசூலத்தினால் எண்திசைகளையும் ஆண்டு கொண்டிருக்கும் மன்னர்கள் அனைவரையும் குத்திக் கொல்வார். இடி எவ்வாறு மேகங்களை உலகமெங்கும் சிதறடிக்கிறதோ அது போல் அவர்கள் கைகளை கொடிகளைப் போல் தமது கைகளால் சிதறடித்துப் பயங்கரமான சிரிப்புடன் ஊழித் தாண்டவம் ஆடுவார்.
பதம் 4.5.11 : அக்கருமையான அசுரனின் கோரமானப் பற்கள் வெளியே நீண்டு கொண்டிருந்தன. இரு புருவங்களின் அசைவினாலேயே அவன் விண்ணில் சுழலும் உடுக் கூட்டங்களைச் சிதறடித்ததோடு தனது ஒளியினால் அவற்றை மறைத்தான். தக்கனின் தவறான நடத்தையின் காரணமாக அவனது தந்தையான பிரம்மதேவனால் கூட அச்சினத்தின் அதீத வெளிப்பாடுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
பதம் 4.5.12 : வேள்விச் சாலையில் குழுமியிருந்தோர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் பொழுது, வானம், பூமி மற்றும் அனைத்துத் திசைகளிலும் தீக்குறிகள் தோன்றுவதை தட்சன் கண்டார்.
பதம் 4.5.13 : எனதன்பிற்குரிய விதுரனே, சிவபெருமானின் அனைத்து வீரர்களும் வேள்விச் சாலையினைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் குள்ளமானவர்களாகவும், கைகளில் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் இருந்தனர். கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ணம் கொண்ட சுறா மீன்களைப் போன்று அவர்கள் உடல்கள் காட்சியளித்தன. அவர்கள் வேள்விச் சாலையில் அங்கும் இங்கும் ஓடி இடைஞ்சல் செய்தனர்.
பதம் 4.5.14 : சில வீரர்கள் வேள்விச் சாலையில் போடப்பட்டிருந்த பந்தலின் கால்களை வெட்டிச் சாய்த்தனர். பெண்களின் பகுதியில் நுழைந்து சிலர் கலகம் செய்தனர். சிலர் வேள்விக் குண்டத்தினை அழித்தனர். சிலர் சமையல் செய்யும் இடங்களையும், சிலர் அவர்களின் இல்லங்களையும் தாக்கினர்.
பதம் 4.5.15 : அவர்கள் வேள்விக்குப் பயன்படுத்தப்படும் கலசங்களை உடைத்தனர், சிலர் யாக குண்டத்தினை அழித்தனர். வேள்விச் சாலையினைச் சுற்றியிருந்த எல்லைக் கோட்டினைச் சிலர் அழித்தனர். மேலுஞ் சிலர் யாககுண்டத்தினுள் சிறுநீர் கழித்தனர்.
பதம் 4.5.16 : தப்பி ஓட முயன்ற முனிவர்களின் வழியினைச் சிலர் மறித்தனர். சிலர் அங்கே குழுமியிருந்த பெண்களைப் பயமுறுத்தினர், சிலர் பந்தலை விட்டு வெளியே ஓடிய தேவர்களைக் கைது செய்தனர்.
பதம் 4.5.17 : சிவபெருமானின் படைவீரர்களில் ஒருவரான மணிமான் என்பவர் பிருகு முனிவரைக் கைது செய்தார். கறுப்பு அசுரனான வீரபத்திரன் பிரஜாபதி தட்சனைக் கைது செய்தான்; பூஷனை மற்றொரு வீரரான சண்டேசர் கைது செய்தார், நந்தியம் பெருமான் பகன் என்னும் தேவனைக் கைது செய்தார்.
பதம் 4.5.18 : வேள்விச் சாலையினுள் கல்மழை தொடர்ந்து பெய்தது. அதனால் அங்கு குழுமி இருந்தவர்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளானார்கள். உயிருக்குப் பயந்து அவர்கள் பல்வேறு திக்குகளில் சிதறி ஓடினார்கள்.
பதம் 4.5.19 : வேள்வித்தீயில் வேள்விப் பொருட்களைத் தன்னுடைய கைகளினால் அர்ப்பணித்துக் கொண்டிருந்த பிருகு முனிவரின் மீசையினைப் பிய்த்தெடுத்தான் வீரபத்திரன்.
பதம் 4.5.20 : பிருகு முனிவர் இதனால் சிவபெருமானை சபித்துக் கொண்டிருந்தபொழுது தனது இரு புருவங்களையும் ஆத்திரத்தினால் நெறித்துப் பார்த்தப் பகனை வீரபத்திரன் எட்டிப் பிடித்து நிலத்தில் தள்ளி மிகுந்த ஆவேசத்துடன் அவனது இரு கண்களையும் பிடுங்கி வெளியே எடுத்தான்.
பதம் 4.5.21 : எவ்வாறு அநிருத்தனின் திருமண வைபவத்தின்போது நடைபெற்ற சூதுப் போட்டியின் பொழுது கலிங்க மன்னன் தந்தவக்கிரனின் பற்களை பலதேவர் பிடுங்கினாரோ அதுபோன்று சிவபெருமானைச் சபித்த பொழுது தட்சன் காட்டிய பற்களையும், அதைப் பார்த்து புன்னகைத்தபொழுது பூஷான் காட்டிய பற்களையும் வீரபத்திரன் பிடுங்கி எறிந்தான்.
பதம் 4.5.22 : இதன் பின்னர் வீரபத்திரன் தட்சனின் மார்பின் மீது அமர்ந்து கொண்டு கொடுவாளினால் அவரது தலையினைத் துண்டிக்க முயன்றான். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
பதம் 4.5.23 : அவன் மந்திரங்களை ஜெபித்து கொடிய ஆயுதங்களினால் தட்சனின் தலையினைத் துண்டிக்க முயன்றும், அவைகளால் தோலின் மேற்பகுதியினைக் கூட வெட்டமுடியவில்லை. இதைக் கண்டு வீரபத்திரன் மிகுந்த குழப்பமடைந்தான்.
பதம் 4.5.24 : அதன் பிறகு வீரபத்திரன் அங்கே வேள்வியில் விலங்குகளைப் பலியிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரத்தினாலான ஆயுதத்தினைக் கண்டான். அதன் மூலம் அவன் தட்சனின் தலையினைத் துண்டிக்கும் வாய்ப்பினைப் பெற்றான்.
பதம் 4.5.25 : வீரபத்திரனின் செயலைக் கண்டு சிவபெருமானின் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். பூதங்களும், பேய்களும், பிசாசுகளும் ஆரவாரக் கூச்சலிட்டன. இதற்கு மாறாக தட்சனின் வேள்விக்குப் பொறுப்பேற்றிருந்த அந்தணர்கள் அனைவரும், அவர் மறைவு கண்டு துயர் கொண்டு கதறி அழுதனர்.
பதம் 4.5.26 : மிகுந்த ஆத்திரத்துடன் வீரபத்திரன் தட்சனின் தலையினை எடுத்து வேள்வித் தீயின் தென்பகுதியில் எறிந்து அதனை ஒரு வேள்விப் பொருளாக அர்ப்பணித்தான். இவ்வாறு சிவபெருமானின் வீரர்கள் வேள்விக் களத்தினை அழித்தனர். வேள்விச்சாலை முழுவதும் தீப்பற்றி எரிவதைக் கண்டு திருப்தியுற்று அவர்கள் தங்கள் தலைவரின் இருப்பிடமான கயிலாயத்திற்குப் புறப்பட்டனர்.