அத்தியாயம் – 13
துருவ மகாராஜனின் வம்சாவளி
பதம் 4.13.1
ஸுத உவாச
நிஸம்ய கௌஸாரவிணோபவர்ணிதம்
த்ருவஸ்ய வைகுண்ட-பதாசி ரோஹ்ணம்
ப்ரரூட-பாவோ பகவதி அதோக்ஷஜே
ப்ரஷ்டும் புனஸ் தம் விதுர: ப்ரசக்ரமே
ஸுத: உவாச—சூத கோஸ்வாமி கூறினார்; நிஸம்ய—கேட்ட பின்னர்; கௌஸாரவிணா—மைத்ரேய முனிவரால்; வைகுண்ட-பத—பகவான் விஷ்ணுவின் இருப்பிடம்; அரிராஹணம்—ஏறுதல்; ப்ரடே—அதிகரித்தது; பாவ:—பக்தி உணர்ச்சி; பகவதி—முழுமுதற் கடவுளிடத்து; அதோக்ஷஜே—நேரடியாக உணர்வதற்கு அரியவர்; ப்ரஷ்டும்—வினவுவதற்கு; புன:—மீண்டும்; தம்—மைத்ரேயரிடம்; விதுர:—விதுரன்; ப்ரசக்ரமே—முயன்றார்.
சௌனக முனிவரின் தலைமையின் கீழுள்ள அனைத்து முனிவர்களிடமும் சூத கோஸ்வாமி தொடர்ந்து கூறலானார். மைத்ரேய முனிவர் பகவான் விஷ்ணுவின் உறைவிடத்தை துருவர் அடைந்தார் என்று கூறியவுடன் விதுரர் பக்தியின் உணர்ச்சிப் பெருக்கினால் மைத்ரேயரிடம் பின்வருவனவற்றைக் கேட்கலானார்.
பதம் 4.13.2
விதுர உவாச
கே தே ப்ரசேதஸோ நாம கஸ்யாபத்யானி சுவ்ரதா
கஸ்யான்வவாயே ப்ரக்யாதா: ருத்ர வா ஸத்ரம் ஆஸத
விதுர: உவாச—விதுரர் வினவினார்; கே—யார்; தே—அவர்கள்; ப்ரசேதஸ:—பிரசேதர்கள்; நாம—என்னும் பெயரில்; கஸ்ய—எவருடைய; அப்தயானி—புத்திரர்கள்; ஸு-வ்ரத—மங்கலவிரதம் பூண்டிருக்கும் ஓ, மைத்ரேயரே; கஸ்ய—எவரது; அன்வவாயே—குடும்பத்தில்; ப்ரக்யாதா:—புகழ்மிக்க; குர்த—அங்கே; வா—மேலும்; ஸத்ரம்—வேள்வி; ஆஸத—நிறைவேற்றப்பட்டது.
விதுரர் மைத்ரேயரிடம் வினவினார்: ஓ பக்தர்களிற் சிறந்தோரே, பிரசேதர்கள் என்பவர் யாவர்? அவர்கள் எக்குலத்தைச் சேர்ந்தவர்கள்? யாருடைய மைந்தர்கள், மேலும் அவர்கள் சிறந்த வேள்விகளை எங்கு நிறைவேற்றினார்கள்.
பதம் 4.13.3
மன்யே மஹா-பாகவதம் நாரதம் தேவ-தர்ஸனம்
யேன ப்ரோக்த: க்ரியா-யோக: பரிசர்யா-விதிர் ஹரே:
மன்யே—நான் கருதுகிறேன்; மஹத-பாகவதம்—அனைத்துப் பக்தர்களிலும் சிறந்தவர்; நாரதம்—நாரத முனிவர்; தேவ—முழுமுதற் கடவுள்: தர்ஸனம்—சந்தித்தவர்; யேன—எவரால்; ப்ரோக்த:—அருளப்பட்ட; க்ரியா-யோக:—பக்தித் தொண்டு; பரிசர்யா—தொண்டு செய்வதற்காக; விதி:—விதிகள்; ஹரே:—முழுமுதற் கடவுளுக்கு;
விதுரர் தொடர்ந்து கூறினார்: முனிபுங்கவர்கள் அனைவரினும் நாரத முனிவரே மிகவும் சிறந்தவர் என்பதை நான் நன்கறிவேன். பக்தித் தொண்டிற்கான விதிகளைக் கூறும் “பாஞ்சராத்ரிகம்” என்னும் நூலை யாத்தவர் அவரே. மேலும் அவர் முழுமுதற் கடவுளை நேரில் கண்ட பாக்கியசாலியும் ஆவார்.
பதம் 4.13.4
ஸ்வ-தர்ம-ஸீலை: புருஷைர் பகவான் யஜ்ஞா-பூருஷ:
இஜ்யமானோ பக்திமதா நாரதேனேரித: கில
ஸ்வ-தர்ம-ஸீலை:——வேள்விகளைச் செய்யும் கடமைகளை நிறைவேற்றுதல்; புருஷை:—புருஷர்களால்; பகவான்—முழுமுதற் கடவுள்; யஜ்ஞா-பூஷே:—வேள்விகளை அனுபவிப்பவர்; இஜ்யமான:—தொழப்பட்டு; பக்திமதா—பக்தர்களினால்; நாரதேன—நாரதரால்; ரீரித:—விளக்கப்பட்டு; கில—உண்மையில்.
அனைத்துப் பிரசேதர்களும், முழுமுதற் கடவுளின் திருப்திக்காக, சமயச் சடங்குகளையும், வேள்விகளையும் செய்து அவரை வழிபட்டுக் கொண்டிருந்தபோது நாரதர் துருவ மன்னரின் உன்னதச் செயல்களை விளக்கிக் கூறினார்.
பதம் 4.13.5
யாஸ் தேவர்ஷிணா தத்ர வர்ணிதா பகவத்-கதா:
மஹ்ம் ஸுஸ்ரூஷவே ப்ரஹ்மன் கார்த்ஸுன்யேனாசஷ்டும் அர்ஹஸி
யா:—எவை; தா—நடந்ததனைத்தும்; தேவர்ஷிணா—நாரத முனிவரால்; தத்ர—அங்கே; வர்ணிதா:—உரைக்கப்பெற்ற; பகவத்-கதா:—பகவானின் செயல்களைப் பற்றிய போதனைகள்; மஹ்யம்—எனக்கு; ஸுஸ்ரூஷவே—கேட்பதற்கு ஆர்வம் அதிகரிக்கிறது; ப்ரஹ்மன்—மரியாதைக்குரிய அந்தணரே; கார்த்ஸுன்-யேன— முழுவதும்; ஆசஷ்டும்-அர்ஹஸி—அருள் கூர்ந்து விளக்குவீராக.
போற்றுவதற்குரிய அந்தணரே, அவ்வேள்விச் சாலையில் நாரத முனிவர் முழுமுதற் கடவுளை எங்ஙனம் போற்றினார், அவரது எத்திருவிளையாடல்களை அவர் விளக்கிக் கூறினார்? அவற்றை அறிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமுடையோனாயிருக்கிறேன். பகவானின் பெருமைகளை எனக்கு முழுவதும் விளக்கி அருள்வீராக
பதம் 4.13.6
மைத்ரேய உவாச
த்ருவஸ்ய சோத்கல: புத்ர: பிதரி ப்ரஸ்திதே வனம்
ஸார்வபெளம-ஸ்ரியம் நைச்சத் அதிராஜாஸனம் பிது:
மைத்ரேய: உவாச—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; த்ருவஸ்ய—துருவ மகாராஜனின்; ச—மேலும்; உத்கல:—உத்கலன்: புத்ர:—புத்திரன்; பிதரி—தன் தந்தைக்குப் பின்; ப்ரஸ்திதே—சென்றார்; வனம்—வனத்திற்கு; ஸார்வபௌம—அனைத்து நிலப்பகுதிகளும் உள்ளடங்கிய; ஸ்ரியம்—வளம்; ந ஐச்சத்—விரும்பவில்லை; அதிராஜ—ராஜ; ஆஸனம்—சிம்மாசனம்; பிது:—தந்தையின்.
மாமுனிவர் மைத்ரேயர் விடையிறுத்தார்: அன்பார்ந்த விதுரனே, துருவர் வனம் சென்றபிறகு அவர் மைந்தன் உத்கலன் தன் தந்தையின் அரியாசனத்தில் அமர்வதற்கு மறுத்துவிட்டான். அதாவது பூவுலகில் அனைத்து நிலப் பகுதிகளையும் ஆள்வதற்குரிய ஆட்சிக் கட்டில் அது.
பதம் 4.13.7
ஸ ஜன்மனோ பஸாந்தாத்மா நி:ஸங்க: ஸம-தர்ஸன:
ததர்ஸ லோகே விததம் ஆத்மானம் லோகம் ஆத்மனி
ஸ:—அவர் மைந்தன் உத்கலன்; ஜன்மனா—அவர் பிறந்த ஆரம்ப காலத்திலிருந்தே; உபஸாந்த—மிகவும் நன்கு திருப்தியடைதல்; ஆத்மா—ஆத்ம; நி: ஸங்க:—எந்தவிதப் பற்றுமின்றி; ஸம-தர்ஷண—சமபார்வையுடையவராய்; ததர்ஸ—பார்த்தவர்; லோகே—உலகில்; விததம்—பரந்த; ஆத்மானம்—பரமாத்மா; லோகம்—எல்லா உலகும்; ஆத்மனி—பரமாத்மா.
உத்கலன் பிறந்ததிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்றவராகவே விளங்கினார். அனைத்துயிர்களையும் தாங்குபவர் பரமாத்மாவே என்றும், அனைத்து உயிர்களின் இதயத்தினுள்ளும் தங்குபவரும் பரமாத்மாவே என்றும், அவர் நன்கு உணர்ந்திருந்ததினால் அவர் அனைவரையும் சமமாகவே பார்த்தார்.
பதங்கள் 4.13.8 – 4.13.9
ஆத்மானம் ப்ரஹ்ம நிர்வாணம் ப்ரத்யஸ்தமித-விக்ரஹம்
அவபோத-ரஸைகாத்மியம் ஆனந்தம் அனுஸந்ததம்
அவ்யவச்சின்ன-யோகாக்னி தக்த-கர்ம-மலாஸய:
ஸ்வரூபம் அவருந்தானோ நாத்மனோ ‘ன்யம் ததைக்ஷத
ஆத்மானம்—ஒருவன்; ப்ரஹ்ம—பிரம்மம்; நிர்வாணம்—ஜட வாழ்விலிருந்து ஒடுங்குதல்; ப்ரத்யஸ்தமித—அறுதல்; விக்ரஹம்—தனித்து வேறாதல்; அவபோத-ரஸ—ஞான ரசத்தினால்; ஏக-ஆத்மியம்—ஒருமைநிலை; ஆனந்தம்—ஆனந்தம்; அனுஸந்ததம்—விரிதல், அவ்யவச்சின்ன—தொடர்ந்து; யோக—யோகத்தினால்; அக்னி—நெருப்பு; தந்த—எரிதல்; கர்ம—பலன்மீது ஆசை; மல—மலம்; ஆஸய:—அவன் மனதில்; ஸ்வரூபம்—உண்மை நிலை; அவருந்தான:—உணர்ந்து; ந—இல்லை; ஆத்மன:—பரமாத்மாவை விட; அன்யம்—வேறெதுவும்; ததா—பின்னர்; ஜக்ஷத—பார்த்தல்.
பரப்பிரம்மத்தைப் பற்றிய அறிவு விருத்தியினால் அவர் ஏற்கெனவே உடலின் கட்டிலிருந்து விடுதலை பெற்றிருந்தார். இவ்விடுதலையே நிர்வாணம் எனப்படுகிறது. அவர் உன்னதமான ஆனந்த நிலையிலேயே இருந்தார். மேலும் மேலும் விரிவடையும் இவ்வானந்த வாழ்விலேயே அவர் எப்போதும் தொடர்ந்து இருந்து வந்தார். தொடர்ந்து செய்து வந்த பக்தியோகப் பயிற்சினாலேயே இது அவருக்குச் சாத்தியமாயிற்று. இப்பக்தி யோகத்தை நெருப்புடன் ஒப்பிடுவர். ஏனெனில் அது அசுத்தமயமான பொருட்கள் அனைத்தையும் எரித்து சுத்தம் செய்கிறது. அவர் எப்போதும் தனது உண்மையான தன்னுணர்வு நிலையிலேயே வாழ்ந்தார். அவரால் பரமபுருஷ பகவானைத் தவிர வேறெதனையும் காணமுடியவில்லை. பக்தித் தொண்டை மட்டுமே அவர் எப்போதும் செய்து வந்தார்.
பதம் 4.13.10
ஜடாந்த-பதி ரோன்மத்த மூகாக்ருதிர் அதன்-மதி:
லோகிஷ்ட: பதி பாலானாம் ப்ரஸாந்தார்சிர் இவாநல:
ஜட—மூடன்; அந்த—குருடன்; பதிர—செவிடன்; உன்மத்த—உன்மத்தன்; மூக—ஊமை; ஆக்ரிதி:—தோற்றம்; அ-தத்—அது போன்றதல்ல; மதி:—அவர் புத்திசாலித்தனம்; லக்ஷித:—காணப்பட்டார்; பதி—வழியில்; பாலானாம்—மதி குறைந்தோரால்; ப்ரஸாந்த—அமைதியான, அர்சி:—பிழம்புகளுடன்; இது—போன்று; அனல:—தீ.
மூடர்களின் கண்களுக்கு, சக்தியற்றவராகவும், குருடராகவும், ஊமையாகவும், செவிடராகவும், மற்றும் பித்துப் பிடித்தவராகவும் உத்கலன் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவன்று. அவர் நீறுபூத்த நெருப்பாக வெளியே தீப்பிழம்பு தெரியாமல் உள்ளே கனன்று கொண்டிருந்தார்.
பதம் 4.13.11
மத்வா தம் ஜடம் உன்மத்தம் குல-வ்ருத்தா ஸமந்த்ரிண:
வத்ஸரம் பூபிதம் சக்ருர் யவீயாம்ஸம ப்ரமே: ஸுதம்
மத்வா—கருதி; தம்—உத்கலன்; ஜடம்—புத்தியில்லாதவன்; உன்மத்தம்—உன்மத்தன்; குல-வ்ருத்தா:—குடும்பத்தின் மூத்தவர்கள்; ஸமந்த்ரிண:—அமைச்சர்களுடன்; வத்ஸரம்—வத்ஸரன்; பூ-பதிம்—உலகை ஆள்பவராக; சக்ரு:—அவர்கள் ஆக்கினர்; யவீயாம்ஸம்—இளைய; ப்ரமே—பிரமியின்; ஸுதம்—மைந்தன்.
இக்காரணங்களினால் அக்குடும்பத்திலுள்ள பெரியோர்களும், அமைச்சர்களும் உத்கலனை புத்தியற்றவரென்றும், உண்மையில் உன்மத்தன் என்றும் முடிவு செய்தனர். அதனால் அவரது இளைய சகோதரனும் பிரமியின் புத்திரனுமான வத்ஸரன் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வுலகை ஆளும் மன்னரானார்.
பதம் 4.13.12
ஸ்வர்வீதிர் வத்ஸரஸ்யேஷ்டா பார்யாஸுத ஷட்-ஆத்மஜான்
புஷ்பார்ணம் திக்ம கேதும் ச இஷம் ஊர்ஜம் வஸும் ஜயம்
ஸ்வர்வீதி:—சுவர்வீதி; வத்ஸரஸ்ய—வத்ஸர மன்னனின்; இஷ்டா—பிரியமான; பார்யா—மனைவி; அஸுத—பெற்றெடுத்தாள்; ஷட்—ஆறு; ஆத்மஜான்—மைந்தர்கள்; புஷ்பார்ணம்—புஷ்பாரணன்; திக்ம கேதும்—திக்மகேது; ச—மேலும்; இஷம்—இஷன்; ஊர்ஜம்—ஊர்ஜன்; வஸும்—வசு; ஜய—ஜயன்.
சுவர்வீதி என்னும் அழகிய மனைவியினை அடைந்த மன்னன் வத்ஸரன் அவள் மீது மிகவும் அன்புடையவனாக இருந்தான். அவள் ஆறு ஆண்குழந்தைகளை ஈன்றெடுத்தாள். அவர்கள் பெயர்கள் வருமாறு புஷ்பாரணன், திக்மகேது, இஷன், ஊர்ஜன், வசு மற்றும் ஜயன்.
பதம் 4.13.13
புஷ்பார்ணஸ்ய ப்ரபா பார்யா தோஷா ச த்வே பபூவது:
ப்ராதர் மத்யந்தினம் ஸாயம் இதி ஹ ஆஸன் ப்ரபா-ஸுதா:
புஷ்பார்ணய்—புஷ்பாரணனின்; ப்ரபா—பிரபா; பார்யா—மனைவி, தோஷா—தோஷா; ச—மேலும்; த்வே—இரு; பபூவதே:—இருந்தனர்; ப்ராத:—பிராதர்; மத்யந்தினம்—மத்யந்தினன்; ஸாயம்—சாயன்; இதி—இவ்வாறு; ஹி—உறுதியாக; ஆஸன்—இருந்தனர்; ப்ரபா-ஸுதா:— பிரபாவின் மைந்தர்கள்.
புஷ்பராணனுக்கு பிரபா மற்றும் தோஷா என்று இரு மனைவியர். பிராதர், மத்யந்தினன் மற்றும் சாயன் என்னும் மூன்று புதல்வர்களை பிரபா ஈன்றெடுத்தாள்.
பதம் 4.13.14
ப்ரதோஷோ நிஷிதோ வ்யுஷ்ட இதி தோஷா-ஸுதாஸ் த்ரய:
வ்யுஷ்ட: ஸுதாம் புஷ்கரிண்யாம் ஸர்வதேஜஸம் ஆததே
ப்ரதோஷ:—பிதோஷன்; நிஷித:—நிசிதன்; வ்யுஷ்ட:—வியுஷ்டன்; இதி—இவ்வாறு; தோஷா—தோஷவின்; ஸுதா:—மைந்தர்கள்; த்ரய:—மூன்று; வ்யுஷ்ட:—வியுஷ்டின்; ஸுதம்—புதல்வன்; புஷ்கரிண்யாம்—புஷ்கரிணீயிடம்; ஸர்வ-தேஜஸம்—சர்வதேஜன் (அனைத்து சக்திகளும் உடையவன்); ஆததே—ஈன்றனள்.
தோஷாவிற்கு மூன்று புதல்வர்கள் பிரதோஷன், நிசிதன், மற்றும் வியுஷ்டன். வியுஷ்டனின் மனைவி புஷ்கரணீ என்பவளாவார். அவள் சர்வதேஜன் என்ற ஒரு சக்தி மிக்க மைந்தனை ஈன்றெடுத்தாள்.
பதங்கள் 4.13.15 – 4.13.16
ஸ சக்ஷு ஸுதம் ஆக்ஷத்யாம் பத்னியாம் மனும் அவாப ஹ
மனோர் அஸுத மஹிஷீ விரஜான் நட்வலா ஸுதான்
புரும் ருத்ஸம் த்ரிதம் த்யுமனம் ஸத்யவந்தம் ருதம் வ்ரதம்
அக்னிஷ்டோமம் அதீராத்ரம் ப்ரத்யும்நம் ஸிபிம் உல்முகம்
ஸ:—அவன் (சர்வதேஜன்); சக்ஷு:—சக்ஷு என்ற பெயரில்; ஸுதம்—மைந்தன்; ஆக்ஷத்யாம்—ஆக்ஷதியினிடத்தில்; பத்னியாம்—மனைவி; மனும்—சக்ஷுஷன் மனு; அவாப—பெற்றான்; ஹ—உண்மையில்; மனோ:—மனுவின்; அஸுத—ஈன்றெடுத்தல்; மஹிஷீ—அரசி; விரஜான்—விருப்பமின்றி; நட்வலா—நட்வலான்; ஸுதான்—புத்திரர்கள்; புரும்—புரு; குத்ஸம்—குத்ஸம்; த்ரிதம்—திரிதன்; த்யும் நம்—தியும்நன்; ஸத்யவந்தம்—சத்தியவான்; ருதம்—உருதன்; வ்ரதம்—விரதன்; அக்னிஷ்டோமம்—அக்னிஷ்டோமன்; அதீராத்ரம்—அதீராத்திரன்; ப்ரத்யும்நம்—பிரத்யும்நன்; ஸிபிம்—சிபி; உல்முகம்—உல்முகன்.
சர்வதேஜனின் மனைவி ஆகூதி என்பவள் சாட்சூசன் என்னும் புதல்வனை ஈன்றெடுத்தாள். அவர் மன்வந்தரத்தின் இறுதியில் ஆறாவது மனுவாக ஆனார். சாட்சூசன் மனுவின் மனைவியான நட்வலா என்பவள் குற்றமற்ற பின்வரும் ஆண்மக்களை ஈன்றெடுத்தாள்; புரு, ருத்ஸன், திரிதன், தியும்நன், சத்யவான், உருதன், விரதன், அக்கினிஷ்டோமன், அதீரத்திரன்,பிரத்யும்நன், சிபி மற்றும் உல்முகன்.
பதம் 4.13.17
உல்முகா ‘ஜனயத் புத்ரான் புஷ்கரிண்யாம் ஷட் உத்தமான்
அங்காம் ஸுமநஸம் க்யாதிம் க்ரதும் அங்கிரஸம் கயம்
உல்முக:—உல்முகன்; அஜயைத்—ஈன்றாள்; புத்ரான்—புத்திரர்கள்; புஷ்கரிண்யாம்—புஷ்கரிணீயினிடத்தில்; அவன் மனைவி; ஷட்—ஆறு; உத்தமான்—உத்தமமான; அங்கம்—அங்கன்; ஸுமநஸம்—சுமநன்; க்யாதிம்—கியாதி; க்ரதும்—கிரது; அங்கிரஸம்—அங்கிரான்; கயம்—கயன்.
பன்னிரெண்டு புதல்வர்களில், உல்முகன் தன் மனைவி புஷ்கரிணியிடத்தில் அறுவரைப் பெற்றெடுத்தான். அவர்கள் அனைவரும் உத்தம புத்திரர்கள். அவர்களின் பெயர்கள், அங்கன், சுமநன், கியாதி, கிரது, அங்கிரான், மற்றும் கயன் என்பவையாகும்.
பதம் 4.13.18
ஸுனீதாங்கஸ்ய யதா பத்னீ ஸுஷுவே வேனம் உல்பணம்
யத்-தௌ: ஸீல்யாத் ஸ ராஜரிஷிர் நிர்விண்ணோ நிரகாத் புராத்
ஸுனீதா—கனீதா; அங்கஸ்ய—அங்கனின்; யா—அவள்; பத்னீ—மனைவி; ஸுஷுவே—ஈன்றெடுத்தாள்; வேனம்—வேனன்; உல்பணம்—மிகவும் மோசமானவன்; யத்—எவருடைய; தௌ:-ஸீல்யாத்—தவறான நடத்தையினால்; ஸ:—அவர்; ராஜரிஷி:—ராஜரிஷியான அங்கன்; நிர்விண்ண:—மிகவும் ஏமாற்றமடைந்தார்; நிரகாத்—வெளியேறினார்; புராத்—இல்லத்திலிருந்து.
அங்கனின் மனைவி சுனீதா வேனன் என்னும் தீய மகனை ஈன்றெடுத்தாள். ராஜரிஷியான அங்கன் வேனனின் தவறான நடத்தையினால், மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி நாட்டையும், வீட்டையும் துறந்து, காட்டிற்குச் சென்றுவிட்டார்.
பதங்கள் 4.13.19 – 4.13.20
யம் அங்க ஸேபு: குபிதா வாக்-வஜ்ரா முனய: கில
கதாஸோஸ்ய தஸ்ய பூயஸ் தே மமந்துர் தக்ஷிணம் கரம்
அராஜகே ததா லோகே தஸ்யுபி: பீடிதா: ப்ரஜா:
ஜாதோ நாராயணாம் ஸேன ப்ருதுர் ஆத்ய: க்ஷிதீஸ்வர
யம்—அவன் (வேனன்); எவளை; அங்க—அன்பார்ந்த விதுரனே; ஸேபு:—அவர்கள் சபித்தனர்; ருபிதா:—ஆத்திரமுற்று; வாக்-வஜ்ர:—வஜ்ராயுதம் போன்ற வன்மைமிக்க வார்த்தைகள்; முனய:—மகா முனிவர்கள்; கில—உண்மையில்; கத-அஸோ:-தஸ்ய—அவர் மறைந்த பின்னர்; பூய—மேலாக; தே—அவர்கள்; மமந்து:—கடைந்தனர்; தக்ஷிணம்—வலது; கரம்—கரம்; அராஜகே—அரசரின்றி; ததா—பின்னர்; லோகே—உலகம்; தஸ்யுபி:——துஷ்டர்கள் மற்றும் திருடர்களால்; பீடிதா:—துன்புற்று; ப்ரஜா:—குடிமக்கள் அனைவரும்; ஜாத:—வருகை தந்தார்; நாராயண—முழுமுதற் கடவுளின்; அம்ஸேன—அம்சமாக; ப்ருது:—பிருது; ஆத்ய—உண்மையான; க்ஷிதி-ஈஸ்வ:—உலகின் மன்னராக.
அன்பார்ந்த விதுரனே! மாமுனிவர்களின் சாபமானது வெல்வதற்கரிய வஜ்ராயுதம் போல் வலிமைமிக்கதாகும். அவர்கள் ஆத்திரத்தினால் மன்னன் வேதனைச் சபிக்க அவன் இறந்து போனான். அவனது மறைவுக்குப் பிறகு அரசர் யாரும் இல்லாததினால் துஷ்டர்களும், திருடர்களும் பெருகினர், அரசுமுறை தவறியது, அதனால் குடிமக்கள் அனைவரும் மிகுந்த துயருற்றனர். இதனைக் கண்ட மாமுனிவர்கள் மன்னன் வேனனின் வலது கரத்தை தயிர்மத்தைப்போல் எடுத்து அதனைக் கடைந்தனர். அதன் விளைவாக பகவான் விஷ்ணு தனது இயல்புகள் பொருந்திய மன்னர் பிருதுவாக, இவ்வுலகின் ஆதிப்பேரரசராக அவதரித்தார்.
பதம் 4.13.21
விதுர உவாச
தஸ்ய ஸீல-நிதே: ஸாதோர் ப்ரஹ்மண்யஸ்ய மஹாத்மன:
ராஜ்ஞ: கதம் அபூத் துஷ்டா ப்ரஜா யத் விமநா யயௌ
விதுர: உவாச—விதுரர் கூறுகிறார்; தஸ்ய—அவரின் (அங்கன்); ஸீல-நிதே:—நற்குணங்களின் உறைவிடம்; ஸாதோ:—தெய்வீக மகான்; ப்ரஹ்மண்யஸ்ய—அந்தணக் கலாச்சாரத்தை விரும்புவோன்; மஹாத்மன:—மகாத்மா; ராஜ்ஞ:—அரசனின்; கதம்—எவ்வாறு; அபூத்—நேர்ந்தது; துஷ்ட—துஷ்டன்; ப்ரஜா—புத்திரன்; யத்—எதனால்; விமநா:—கருத்து வேறுபாடு கொண்டு; யயௌ—அவர் வெளியேறினார்.
விதுரர் மைத்ரேய முனிவரிடம் வினவினார்: மரியாதைக்குரிய அந்தணரே, மன்னர் அங்கன் மிகவும் நேர்மையானவர். அவர் நன்னடத்தையும், அறச்சான்றோராகவும், அந்தணக் கலாச்சாரத்தில் அன்புடையவராகவும் விளங்கினார். அப்படிப்பட்ட மகாத்மாவிற்கு எவ்வாறு வேனனைப் போன்று ஒரு தீய புத்திரன் பிறந்தான்? அதனால் தானே அவர் வெறுப்புற்றுத் தன் நாட்டைத் துறந்து ஏகினார்?
பதம் 4.13.22
கிம் வாம்ஹோ வேன உத்திஸ்ய ப்ரஹ்ம-தண்டம் அயூயுஜன்
தண்ட-வ்ரத-தரே ராஜ்நீ முனயோ தர்ம-கோவிதா:
கிம்—ஏன்; வா—மேலும்; அம்ஹ:—பாவச் செயல்கள்; வேனே—வேனனுக்கு; உத்திஸ்ய—காணப்பட்டது; ப்ரஹ்ம-தண்டம்—அந்தணர் சாபம்; அயூயுஜன்—அவர்கள் அளிக்க விரும்பினர்; தண்ட-வ்ரத-தரே—தண்டனைக்குரிய தண்டத்தை கையில் சுமந்திருத்தல்; ராஜ்நீ—அரசனுக்கு; முனய:—மகாமுனிவர்கள்; தர்ம-கோவிதா—சமய அறநெறிகளைக் கற்றுத் துறை போகியவர்கள்.
விதுரர் மேலும் கேட்டார்: சமய அறநெறிகளை நன்கு கற்றுத் துறைபோகிய மாமுனிவர்கள் கையில் பிரம்ம தண்டத்தை வைத்திருக்கும் மன்னன் வேனனைத் தண்டிக்க விரும்பலாமா? அவனுக்கு மிகக் கொடிய தண்டனை (பிரம்ம சாபம் அளித்தது சரிதானா).
பதம் 4.13.23
நாவத்யேய: ப்ரஜா-பால: ப்ரஜாபிர் அகவான் அபி
யத் அஸௌ லோக-பாலானாம் பிபர்தி ஒஜ: ஸ்வ-தேஜஸா
ந—இல்லை; அவத்யேய:—அவமதித்தல்; ப்ரஜா-பால:—மன்னர்; ப்ரஜாபு:—குடிமக்களினால்; பகவான்—பாவம் செய்தவனாக; அபி—இருந்தாலும்; யத்—ஏனென்றால்; அஸௌ—அவன்; லோக-பாலானாம்—அனேக மன்னர்களின்; பிபர்தி—காக்கிறான்; ஓஜ:—வீரம்; ஸ்வ-தேஜஸா—சுயச் செல்வாக்கினால்.
ஒரு அரசன் சில சமயம் மிகப் பெரிய பாசம் செய்தவனாகத் தோன்றிய போதிலும், அந்நாட்டுக் குடிமக்களின் கடமை, அந்த அரசனுக்கு ஒரு போதும் அவமரியாதை செய்யாதிருத்தலாகும். அவனது பேராண்மையின் காரணமாக ஓர் அரசன் குடிமக்களுக்குப் பிற அரசர்களைக் காட்டிலும் மரியாதைக்குரியவனாவான்.
பதம் 4.13.24
ஏதத் ஆக்யாஹி மே ப்ரஹ்மன் ஸுனீதாத்மஜ-சேஷ்டிதம்
ஸ்ரத்ததானய பக்தாய த்வம் பராவர-வித்தம:
ஏதத்—இவையெல்லாம்; ஆக்யாஹி—அருள் கூர்ந்து விளக்குவீர்; மே—எனக்கு; ப்ரஹ்மன்—ஓ அந்தணரிற் சிறந்தோரே; ஸீனீதா-ஆத்மஜ—சுனீதாவின் மைந்தனான வேனன்; சேஷ்டிதம்—செயல்கள்; ஸ்ரத்ததானய—நம்பிக்கை; பக்தய—உமது பக்தனுக்கு; த்வம்—நீர்; பா-அவர—கடந்த மற்றும் எதிர் காலங்கள்; வித்தம—நன்கறிந்தவர்.
மைத்ரேயரிடம் விதுரர் வேண்டிக் கொண்டார்: போற்றுதலுக்குரிய அந்தணரே! நீர் எல்லாம் அறிந்தவர். ஏன் நடந்ததையும், நடைபெறப் போவதையும் கூட நன்கறிந்தவர். ஆகையினால் மன்னன் வேனனின் செயல்கள் அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன். நான் உமது நம்பிக்கைக்குரிய பக்தன் ஆதலினால் அருள் கூர்ந்து எனக்கவற்றை விளக்குவீராக.
பதம் 4.13.25
மைத்ரேய உவாச
அங்கோ ‘ஸ்வமேதம் ராஜர்ஷிர் ஆஜஹார மஹா-க்ரதும்
ராஜக்முர் தேவதாஸ் தஸ்மின்ன ஆஹுதா ப்ரஹ்ம-வாதிபி:
மைத்ரேய:-உவாச—மைத்ரேயர் கூறினார்; அங்க:—மன்னர் அங்கன்; அஸ்வமேதம்—அசுவமேத யாகம்; ராஜ-ரிஷி:—ராஜரிஷி; ஆஜஹார—செய்தார்; மஹா-க்ரதும்—பெரிய வேள்வி; ந—இல்லை; ஆஜக்மு:—வருவது; தேவதா:—தேவர்கள்; தஸ்மின்—அவ்வேள்வியில்; ஆஹுதா:—வரவேற்றும்; ப்ரஹ்ம-வாதிபி:—வேள்வியை நடத்துவதில் தேர்ந்தவர்கள்.
ஸ்ரீ மைத்ரேயர் பதிலிறுத்தார்: ஒருமுறை மாமன்னர் அங்கன் மிகப்பெரிய அசுவமேதயாகம் ஒன்றை நடத்தினார். தேவர்களை அவ்வேள்வியில் எவ்வாறு கலந்து கொள்ளச் செய்வது என்பதனை நன்கறிந்த அந்தணர்கள் அனைவரும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தும் தேவர்கள் அவ்வேள்வியில் பங்கு கொள்ளவோ அல்லது தோன்றவோ இல்லை.
பதம் 4.13.26
தம் ஊசுர் விஸ்மிதாஸ் தத்ர யஜமானம் அதர்த்விஜ:
ஹவீம்ஷி ஹுயமானானி ந தே க்ருஹ்ணந்தி தேவதா:
தம்—மன்னர் அங்கனுக்கு; ஊசு:கூறினர்; விஸ்மிதா:—அதிசயம்; தத்ர—அங்கு; யஜமானம்—வேள்வியைச் செய்பவர்; அத—பிறகு; ருத்விஜ:—புரோகிதர்கள்; ஹவீம்ஷி—சுத்தம் செய்யப்பட்ட வெண்ணெயினை அர்ப்பணித்தல்; ஹுயமானானி—அர்ப்பணித்தும்; ந—இல்லை; தே—அவர்கள்; க்ருஹ்ணந்தி—ஏற்றுக்கொள்ள; தேவதா:—தேவர்கள்.
வேள்வியை நடத்திக் கொண்டிருந்த புரோகிதர்கள் மன்னர் அங்கனிடம்: “ஓ, அரசனே, சுத்தம் செய்யப்பட்ட வெண்ணெயினை வேள்வித் தீயில் அர்ப்பணித்தும் இதுபோன்ற பல முயற்சிகள் செய்தும், தேவர்கள் ஏனோ அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்” என்று கூறினர்.
பதம் 4.13.27
ராஜன் ஹவீம்ஷி அதுஷ்டானி ஸ்ரத்தயாஸாதிதானி தே
சந்தாம் ஸி அயாத-யாமனி யோஜிதானி த்ருத-வ்ரதை:
ராஜன்—ஓ, அரசனே; ஹவீம்ஷி—வேள்வியில் அர்ப்பணிப்பவை; அதுஷ்டானி—அசுத்தமானவையன்று; ஸ்ரத்தயா—முழு நம்பிக்கையுடனும், கவனத்துடனும்; ஆஸாதிதானி—சேகரிக்கப்பட்டன; தே—உமது, சந்தாம்ஸி—மந்திரங்கள்; அயாத-யாமானி—குறைந்ததுவுமன்று; யோநிதானி—சரியாக நிறைவேற்றப்பட்டது; த்ருத-வ்ரதை:—தேர்ச்சி பெற்ற அந்தணர்களினால்.
ஓ, அரசனே வேள்விக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் உன்னால் நம்பிக்கையுடனும், கவனத்துடனும் சேகரிக்கப்பட்டிருப்பதோடு அனைத்தும் தூய்மையானவையுங்கூட, உச்சாடனம் செய்த மந்திரங்களும் சக்தியில் குறைந்தவையன்று. ஏனெனில் இங்கு குழுமியிருக்கும் அந்தணர்களும், புரோகிதர்களும் அதில் மிகவும் வன்மை பெற்றவர்களாவர். மேலும் அவர்கள் அனைத்தையும் மிகவும் ஒழுங்காகவே நிறைவேற்றுகின்றனர்.
பதம் 4.13.28
ந விதாமேஹ தேவானாம் ஹேலனம் வயம் அண்வ அபி
யன் ந க்ருஹ்ணந்தி பாகான் ஸ்வான் யே தேவா: கர்ம—ஸாக்ஷிண:
ந—இல்லை; விதாம—கண்டுகொள்ள; இஹ—இது தொடர்பாக; தேவானாம்—தேவர்களின்; ஹேலனம்—அவமரியாதை; புறக்கணிப்பு; வயம்—நாங்கள்; அணு—ஓரணுவும்; அபி—கூட; யத்—ஏனென்றால் அதில்; ந—இல்லை; க்ருஹ்ணந்தி—ஏற்றுக்கொள்ள; பாகான்—பங்கு; ஸ்வான்—சொந்த; யே—யாவர்; தேவா:—தேவர்கள்; கர்ம-ஸாக்ஷிண:—வேள்வியைக் காணும் சாட்சிகள்.
அன்பிற்குரிய அரசனே, தேவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ கருதுவதற்கு எந்தவிதக் காரணத்தையும் நாங்கள் காணவில்லை. ஆயினும் வேள்விக்குச் சாட்சியாக விளங்க வேண்டிய தேவர்கள் ஏனோ தங்கள் பாகங்களைப் பெறுவதற்கு மறுக்கின்றனர். இது ஏன் என்று எங்களுக்கும் தெரியவில்லை.
பதம் 4.13.29
மைத்ரேய உவாச
அங்கோ த்விஜ-வச: ஸ்ருத்வா யஜமான: ஸுதுர்மனா:
தத் ப்ரஷ்டும் வ்யஸ்ருஜத் வாசம் ஸத ஸ்யாம்ஸ் தத்-அனுஜ்ஞாயா
மைத்ரேய: உவாச—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; அங்க:—மன்னர் அங்கன்; த்விஜ-வச:—அந்தணர்களின் வார்த்தைகள்; ஸ்ருத்வா—கேட்ட பிறகு; யஜமான:—வேள்வித் தலைவன்; ஸுதுர்மனா:—மிகுந்த மனவருத்தமுற்று; தத்—அதைப்பற்றி; ப்ரஷ்டும்—கேட்டறிய வேண்டுமென்று; வ்யஸ்ருஜத்வாசம்—அவர் கேட்டார்; ஸதன்யான்—புரோகிதர்களுக்கு; தத்—அவர்கள்; அனுஜ்ஞாயா—அனுமதி பெற்று.
மைத்ரேயர் கூறினார், புரோகிதர்களின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர் அங்கன் மிகுந்த மனத் துயர் கொண்டார். அவர் தன் அமைதியைக் கலைத்து புரோகிதர்களிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையில் குழுமியிருந்த அனைத்து புரோகிதர்களிடமும் கேட்கலானார்.
பதம் 4.13.30
நாகச்சந்தி ஆஹுதா தேவா ந க்ருஹ்ணந்தி க்ரஹான் இஹ
ஸதஸஸ்-பதயோ ப்ரூத கிம் அவத்யம் மயா க்ருதம்
ந—இல்லை; ஆகச்சந்தி—வருவதற்கு; ஆஹுதா:—அழைத்தும்; தேவா:—தேவர்கள்; ந—இல்லை; க்ருஹ்ணந்தி—ஏற்றுக்கொள்ள; இஹ—வேள்வியில்; ஸதஸ:-பதய:—மரியாதைக்குரிய புரோகிதர்களே; ப்ரூத—அருள் கூர்ந்து கூறுவீர்; கிம்—என்ன; அவத்யம்—குற்றம்; மயா—என்னால்; க்ருதம்—செய்யப்பட்டது.
புரோகிதர்க்குரிய மரியாதையுடன் மன்னர் அங்கன் கேட்கலானார்: “மரியாதைக்குரிய அந்தணர்களே! நான் என்ன குற்றம் செய்தேன் என்பதை அருள் கூர்ந்து உரைப்பீராக. முறையாக அழைத்தும் கூட தேவர்கள் இவ்வேள்வியில் கலந்து கொள்ளவோ அல்லது அவர்கள் அவிர்பாகத்தினைப் பெறவோ மறுத்துள்ளனர்” என்று.
பதம் 4.13.31
ஸதஸஸ்-பதய ஊசு:
நர தேவேஹ பவதோ நாகம் தாவன் மனாக் ஸ்திதம்
அஸ்தி ஏகம் ப்ராக்தனம் அகம் யத் இஹேத்ருக் த்வம் அப்ரஜ:
ஸதஸ:-பதய: ஊசு:—தலைமைப் புரோகிதர் கூறினார்; நர-தேவ—ஓ, அரசனே, இஹ—இப் பிறப்பில்; பவத:—உனது; ந—இல்லை; அகம்—பாவச் செயல்; தாவத்-மனாக்—சிறிது கூட; ஸ்திதம்—நிலையடைதல்; அஸ்தி—அங்கே; ஏகம்—ஒன்று; ப்ராக்தனம்—முற்ப்பிறவியில்; அகம்—பாவச் செயல்; யத்—எதனால்; இஹ—இப்பிறப்பில்; ஈத்ருக்—இதுபோன்ற; த்வம்—உனக்கு; அப்ரஜ:—மைந்தனின்றி.
தலைமைப் புரோகிதர் கூறினார்: “ஓ, அரசனே, இப்பிறப்பில் நீ மனதினால் கூட எந்தவிதப் பாவமும் செய்ததில்லை, ஆகையினால் எந்நிலையிலும் நீ குற்றவாளி இல்லை. ஆனாலும் உனது சென்ற பிறவியில் நீ பாவம் செய்திருப்பாய் என்று நாங்கள் கருதுகிறோம். அதன் காரணமாகவே உன்னிடம் இத்தனை நற்குணங்கள் இருந்தும் உனக்கு ஒரு புத்திரன் இல்லாது போயிற்று.” என்றார்.
பதம் 4.13.32
ததா ஸாதய பத்ரம் தே ஆத்மானம் ஸுப்ரஜம் ந்ருப
இஷ்டஸ் தே புத்ர-காமஸ்ய புத்ரம் தாஸ்யதி யஜ்ஞா-புக்
ததா—ஆகையினால்; ஸாதய—பெறுவதற்குரிய வேள்வியினைச் செய்; பத்ரம்—மங்கலம்; தே—உனக்கு; ஆத்மானம்—உனக்குச் சொந்தமாக; ஸு-ப்ரஜம்—நன்மைந்தன்; ந்ருப—ஓ, அரசனே; இஷ்ட:—வழிபட்டு; தே—உன்னால்; புத்ர-காமஸ்ய—புதல்வனைப் பெறுவதற்குரிய புத்திர காமேஸ்டியாகம்; புத்ரம்—ஒரு புத்திரன்; தாஸ்யதி—அவர் அருள்வார்; யஜ்ஞா-புக்—வேள்விகளின் நாயகரான பகவான்.
ஓ, மன்னனே அனைத்து மங்கலங்களும் உனக்கு உண்டாவதாக. உனக்கு புதல்வன் இல்லை. ஆகவே நீ பரமபுருஷ பகவானை, ஒரு மைந்தன் அருளுமாறு துதித்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் வேள்விகளின் நாயகனாக முழுமுதற் கடவுள் உனது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்.
பதம் 4.13.33
ததா ஸ்வ-பாகதேயானி க்ரஹீஷ்யந்தி திவௌகஸ:
யத் யஜ்ஞா-புருஷ: ஸாக்ஷாத் அபத்யாய ஹரிர் வ்ருத:
ததா—அதன்மேல்; ஸ்வ-பாக-தேயானி—வேள்வியில் அவர்க்குரிய அவிர் பாகத்தினை; க்ரஹீஷ்யந்தி—ஏற்றுக்கொள்வர்; திவ-ஓகஸ:—அனைத்துத் தேவர்களும்; யத—ஏனென்றால்; யஜ்ஞா-புருஷ:—அனைத்து வேள்விகளின் நாயகன்; ஸாக்ஷாத்—நேரடியாக; அபத்யாய—ஒரு மைந்தனைப் பெறும் நோக்கத்திற்காக; ஹரி:—முழுமுதற் கடவுள்; வ்ருத:—அழைக்கப்படுதல்.
அனைத்து வேள்விகளுக்கும் நாயகனாக விளங்கும் முழுமுதற் கடவுளான ஹரி, உனக்கு ஒரு புதல்வன் வேண்டும் என்பதற்காக அழைக்கப்பட்டாரென்றால், அனைத்துத் தேவர்களும் அவருடன் சேர்ந்து வந்து வேள்வியில் அவர்க்குரிய அவிர்பாகத்தினைப் பெற்றுக் கொள்வர்.
பதம் 4.13.34
தம்ஸ் தான் காமான் ஹரிர் தத்யாத் யான் யான் காமயதே ஜன:
ஆராதிதோ யதைவைஷ ததா பும்ஸாம் பலோதய:
தான் தான்—அவர்கள்; காமான்—விரும்பும் எண்ணம்; ஹரி:—பகவான்; தத்யாத்—அருளப்பெறுவர்; யான் யான்—எதுவாயினும்; காமயதே—விருப்பங்கள்; ஜன:—மனிதன்; ஆராதித:—வழிபடுதல்; யதா—இருப்பது போன்று; ஏவ—உறுதியாக; ஏஷ:—பகவான்; ததா—போன்று; பும்ஷாம்—மனிதர்களின்; பல-உதய:—முடிவு.
வேள்விகளைச் செய்பவர் (கர்ம காண்டச் செயல்களின் கீழ்) பகவானை எந்நோக்கத்திற்காக வழிபடுகிறாரோ அந்நோக்கம் நிறைவேறப் பெறுவார்.
பதம் 4.13.35
இதிவ்யவஸிதா விப்ராஸ் தஸ்ய ராஜ்ஞா: ப்ரஜாதயே
புரோடாஸம் நிரபவன் ஸிபி-விஷ்டாய விஷ்ணவே
இதி—இவ்வாறு; வ்யவஸிதா:—தீர்மானித்து; விப்ராஹி—அந்தணர்கள்; தஸ்ய—அவரது; ராஜ்ஞா:—மன்னரின்; ப்ரஜாதயே—மைந்தனைப் பெறவேண்டும் என்னும் நோக்கத்திற்காக: புரோடஸம்—வேள்விக்குரிய பொருள்கள்; நிரவபன்—அர்ப்பணித்தனர்; ஸிபி-விஷ்டாய—வேள்வித்தீயில் நிலைகொண்டிருக்கும் பகவான்; விஷ்ணுவே—பகவான் விஷ்ணு.
மன்னர் அங்கன் ஒரு மைந்தனைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் அனைத்து உயிர்களின் உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பகவான் விஷ்ணுவுக்கு வேள்விப் பொருள்களை நிவேதனம் செய்வது என்று தீர்மானித்தார்.
பதம் 4.13.36
தஸ்மாத் புருஷ உத்தஸ்தென ஹேம-மாலி அமலாம்பர:
ஹிரண்மயேன பாத்ரேண ஸித்தம் ஆதாய பாயஸம்
தமாத்—அந்நெருப்பினின்று; புருஷ:—ஒருவன்; உத்தஸ்தென—தோன்றினான்; ஹேம-மாலீ—பொன்மாலையுடன்; அமல-அம்பர:—வெண்ணிற ஆடையுடன்; ஹிரண்மயேன—பொன்னாலான; பாத்ரேண—ஒரு கலசத்துடன்; ஸித்தம்—சமைத்த; ஆதாய—ஏந்திக் கொண்டு; பாயஸம்—பாயசம்.
வேள்வித்தீயில் நிவேதனங்கள் போடப்பெற்றவுடன் யாக குண்டத்திலிருந்து ஒருவன் வெண்ணிற ஆடையணிந்து கழுத்தில் பொன்னாலான மாலை மின்னத் தோன்றினான். அவன் தன் கைகளில் பாயசம் நிரம்பிய பொற்கலம் ஒன்று வைத்திருந்தான்.
பதம் 4.13.37
ஸ விப்ரானுமதோ ராஜா க்ருஹீத்வாஞ்ஜலிநௌதனம்
அவக்ராய முதா யுக்த: ப்ராதாத் பத்னியா உதார-தீ:
ஸ:—அவன்; விப்ர—அந்தணர்களின்; அனுமத:—அனுமதி பெற்று; ராஜா—அரசன்; க்ருஹீத்வா—எடுத்துக்கொண்டு; அஞ்ஜலினா—அவர் இணைந்த கரங்களில்; ஓதனம்—பாயசம்; அவக்ராய—முகர்ந்து பார்த்த பின்னர்; முதா—மிகுந்த மகிழ்ச்சியுடன்; யுக்த:—நிலையிலிருத்தல்; ப்ராதாத்—அர்ப்பணித்த; பத்னியை—அவரது மனைவிக்கு; உதார-தீ:—தாராள மனதுடன்.
தாராளமான மனமுடையவராக இருந்த மன்னர், புரோகிதர்களிடம் அனுமதி பெற்று, தனது கரங்களில் ஏந்தியிருந்த பாயசக்கலசத்தை முகர்ந்து பார்த்துப் பின்னர் அதிலிருந்த பாயசத்தின் ஒரு பகுதியைத் தனது மனைவிக்கு வழங்கினார்.
பதம் 4.13.38
ஸா தத் பும்-ஸவனம் ராஜ்ஞீ ப்ராஸ்ய வை பத்யுர் ஆததே
கர்பம் கால உபாவ்ருத்தே குமா ஸுஷுவே ‘ப்ரஜா
ஸா—அவள்; தத்—அந்த உணவு; பும்-ஸவனம்—ஆண் குழந்தையைத் தரவல்லது; ராஜ்ஞீ—இராணி; ப்ராஸ்ய—உண்டு; வை—உண்மையில்; பத்யு:—கணவனிடமிருந்து; ஆததே—கருவுற்றாள்; கர்பம்—கர்ப்பம்; காலே—உரிய காலத்தில்; உபாவ்ருத்தே—தோன்றினான்; குமாரம்—ஒரு ஆண்குழந்தை; ஸுஷுவே—ஈன்றெடுப்பதற்கு; அப்ரஜா—மைந்தனில்லாததினால்.
அரசிக்கு குழந்தைப் பேறு இல்லாமையால் அப்பேற்றினைக் கொடுக்கும் ஆற்றல் மிக்க அப்பாயசத்தினை உண்டபிறகு அவள் தன் கணவனின் மூலம் கர்ப்பவதியானாள். மேலும் உரிய காலத்தில் ஓர் ஆண்மகவினையும் ஈன்றெடுத்தாள்.
பதம் 4.13.39
ஸ பால ஏவ புருஷ மாதா மஹம் அநுவ்ரத
அதர்ம அம்ஸ உத்பவம் ம்ருத்யும் தேன இபவத் அதார்மிக
ஸ:—அந்த; பால:—குழந்தை; ஏவ—உறுதியாக; புருஷ:—ஆண்; மாதா-மஹம்—தாய்வழித் தாத்தா; அநுவ்ரத:—பின்பற்றுவர்; அதர்ம—சமயத்திற்கெதிரான; அம்ஸ—அம்சம்; உத்பவம்—அவன் பிறந்தான்; ம்ருத்யும்—மரணம்; தேன—இதனால்; இபவத்—அவன் ஆனான்; அதார்மிக:—அதர்மன்.
அக்குழந்தை சமயத்திற்குப் புறம்பான அரச பரம்பரையின் இயல்பினை உடையதாயிருந்தது. அவன் தாத்தா மரணத்தின் உருவமாகத் திகழ்ந்தார். அவரையே இவனும் பின்பற்றி வளர்ந்தான் அதனால் அவன் முற்றிலும் சமயத்திற்குப் புறம்பான ஒரு மனிதனாக மாறினான்.
பதம் 4.13.40
ஸ ஸராஸனம் உத்யம்ய ம்ருகயுர் வன-கோசர:
ஹந்தி அஸாதுர் ம்ருகான் தீனான் வேனோ ‘ஸாவ் இதி அரௌஜ்ஜன:
ஸ:—வேனன் என்னும் பெயருடைய அச்சிறுவன்; ஸராஸனம்—தனது வில்லில்; வன-கோசர:—வனத்திற்குச் சென்று; ஹந்தி-—வழக்கமாகக் கொல்வதற்கு; அஸாது:—மிகக் கொடியவன்; ம்ருகான்—மான்; தீனான்—இயலாத; அஸென—அவனைக் கண்டால்; ததி—இவ்வாறு; வேன:—வேனன்; அரெளத்—அலறுவர்; ஜன:—மக்கள் எல்லோரும்.
தனது வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு அத்துஷ்டச் சிறுவன் காட்டிற்கு ஓயாது சென்று தேவையின்றி மான் போன்ற இயலாத விலங்குகளைக் கொல்வான், அதனால் அவன் வருதலைக் காணும் மக்கள் உடனே “ஐயோ கொடிய வேனன் வருகிறான்! கொடிய வேனன் வருகிறான்!” என்று அலறுவர்.
பதம் 4.13.41
ஆக்ரீடே க்ரீடதோ பாலான் வயஸ்யான் அதிதாருண:
ப்ரஸ ஹ்ய நிரனுக்ரோஸ: பஸீ-மாரம் அமாரயத்
ஆக்ரீடே—விளையாட்டு மைதானத்தில்; க்ரீடத:—விளையாடும் பொழுது; பாலான்—சிறுவர்கள்; வயஸ்யான்—அவன் வயதொத்த; அதி-தாருண:—மிகக் கொடிய; ப்ரஸஹ்ய—வேகத்தினால்; நிரனுக்ரோஸ:—கருணையின்றி; பஸீ-மாரம்—மிருகங்களைக் கொல்வது போல்; அமாரயத்—கொல்வான்.
அவன் தன்னொத்த சிறுவர்களுடன் விளையாடும் பொழுது அவர்களையெல்லாம் பலியிடுவதற்கான மிருகங்களாகவே கருதி சிறிதும் கருணையின்றி அவர்களைக் கொன்றுவிடுவான்.
பதம் 4.13.42
தம் விசக்ஷ்ய கலம் புத்ரம் ஸாஸனைர் விவிதைர் ந்ருப:
யதா ந ஸாஸிதும் கல்போ ப்ருஸம் ஆஸீத் ஸீதுர்மனா:
தம்—அவனது; விசக்ஷய—கண்டு; கலம்—கொடிய; புத்ரம்—புத்திரன்; ஸாஸனை:—தண்டனைகளினால்; விவிதை:—பல்வேறு வகையான; ந்ருப:—மன்னர்; யதா—எப்பொழுது; ந—இல்லை; ஸாஸிதும்—அவனை திருத்துவதற்காக; கல்ப:—முடிந்தஅளவு; ப்ருஸம்—மிகுந்த; ஆஸீத்—ஆனார்; ஸீ-துர்மனா:—துயருற்றார்.
தன் மைந்தன் வேனனின் கருணையில்லாக் கொடூர நடத்தையினைக் கண்ட மன்னர் அங்கன் அவனைத் திருத்துவதற்காக அவனுக்குப் பல்வேறு வகையான தண்டனைகளைக் கொடுத்தார். ஆயினும் அவனை சீரிய பாதைக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. எனவே அவர் மிகவும் துயருற்றார்.
பதம் 4.13.43
ப்ராயேணாப்யர்சிதோ தேவோ யே ‘ப்ரஜா க்ருஹ மேதின:
கத்-அபத்ய-ப்ருதம் து: கம் யெ ந வின்டந்தி துர்பரம்
ப்ராயேண—உண்மையில்: அப்யர்சித:—வழிபட்டு; தேவ:—பகவான்; இயே—எவர்கள்; அப்ரஜா:—குழந்தையின்றி; க்ருஹ மேதின:—இல்லறத்தில் வாழ்பவர்கள்; கத்-அபத்ய—ஒரு துர்புத்திரனை; ப்ருதம்—காரணமான; து:கம்—துக்கம்; யே—அவர்கள்; ந—இல்லை; விந்தந்தி—அடைதல்; துர்பரம்—தாங்க முடியாத.
மன்னர் தனக்குள் நினைத்தார்: குழந்தையில்லாதவர்கள் உண்மையில் பேறு பெற்றவர். அவர்கள் தமது முற்பிறப்பில் பகவானை வழிபட்டிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் இப்பிறப்பில் ஒரு தீய மைந்தனைப் பெற்று அவனால் ஏற்படும் தாங்கவொண்ணாத் துன்பங்களை அடையாதிருக்கின்றனர் போலும்.
பதம் 4.13.44
யத: பாபீயஸீ கீர்திர் அதர்மஸ் ச மஹான் ந்ருணாம்
யதோ விரோத: ஸர்வேஷாம் யத ஆதிர் அனந்தக:
யத:—ஒரு மோசமான மைந்தனால்; பாபீயஸீ—பாவம் நிறைந்த; கீர்தி:—பெருமை; அதர்ம:—அதர்மம்; ச—மேலும்; மஹான்—சிறந்த; ந்ருணாம்—மனிதர்களின்; யத:—அதிலிருந்து; விரோத:—விரோதம்; ஸர்வேஷாம்—மக்கள் அனைவரும்; யத:—எதிலிருந்து; ஆதி:—ஆர்வம்; அனந்தக:—முடிவற்றது.
ஒரு பாவம் நிறைந்த மைந்தனால் அவன் தந்தையின் புகழ் மறைகிறது. அவனது தீய செயல்கள் அவன் குடும்பத்தினரையும் தீமையில் ஆழ்த்தி ஒருவருக்கொருவர் பூசலிட்டு அவர்களை முடிவற்றக் கவலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
பதம் 4.13.45
கஸ் தம் ப்ரஜாபதேஸம் வை மோஹ-பந்தனம் ஆத்மன:
பண்டிதோ பஹீ மன்யதே யத்-அர்தா: க்லேஸதா க்ருஹா:
க:—யார்; தம்—அவரது; ப்ரஜா-அபேதஸம்—பெயருக்கு மட்டும் பிள்ளை; வை—நிச்சயம்; மோஹ—மோகம்; பந்தனம்—கட்டு; ஆத்மன:—ஆத்மாவிற்கு; பண்டித:—புத்திமான்; பஹீமன்யேத—மதிப்பிடுவது; யத்-அர்தா:—யார் காரணமாக; க்லேஸ-தா:—துன்பம்; க்ருஹா:—வீடு.
கூர்ந்த மதியும், நற்குணம் உடைய யார்தான் இதுபோன்ற பயனற்ற மைந்தனை விரும்புவர்? இப்படிப்பட்ட மைந்தன் உயிர்களுக்கு மாயவலை போன்றவனாவான், அதனால் அவன் இல்லமே துன்பமயமாகிறது.
பதம் 4.13.46
கத் அபத்யம் வரம் மன்யே ஸத்-அபத்யாச் சுசாம் பதாத்
நிர்வித்யேத க்ருஹான் மர்த்யோ யத்-க்லேஸ-நிவஹா க்ருஹா:
கத்-அபத்யம்:—துர்புத்திரன்; வரம்—நல்லவன்; மன்யே—நான் நினைக்கிறேன்; ஸத்-அபத்யாத்—நற்புத்திரனைக் காட்டிலும்; சுசாம்—துன்பத்தின்; பதாத்—ஆதாரம்; நிர்வித்யேத—பற்றற்றவனாகிறான்; க்ருஹாத்—வீட்டிலிருந்து; மர்த்ய:—இறந்தவனாவான்; யத்—யார் காரணமாக; க்வேஸ-நிவஹா:—நரகமயமான; க்ருஹா:—இல்லம்.
பின்னரும் மன்னர் நினைத்தார்: நற்குணமுள்ள மைந்தனைக் காட்டிலும் தீய குணமுற்றவன் நல்லவன். ஏனென்றால், நன்மைந்தன் வீட்டின் மீது பற்றினை அதிகரிக்கச் செய்வான். ஆனால் கெட்டவனோ அவ்வாறு செய்வதில்லை. மேலும் தீய மைந்தன் வீட்டை நரகமாகச் செய்வதினால் நல்லவன் இயற்கையிலேயே மிக எளிதில் தன் குடும்பத்தின் மீதுள்ள பற்றை விட்டுவிடுகிறான்.
பதம் 4.13.47
ஏவம் ஸ நிர்விண்ண-மனா ந்ருபோ க்ருஹான்
நிஸீத உத்தாய மஹோதயோ தயாத்
அலப்த-நித்ரோ ‘னுபலக்ஷிதோ ந்ருபிர்
ஹித்வா கதோ வேன-ஸீவம் ப்ரஸீப்தாம்
ஏவம்—இவ்வாறு; ஸ:—அவர்; நிர்விண்ண-மனா:—மனதில் வேற்றுமையின்றி; ந்ருப:—மன்னர் அங்கன்; க்ருஹாத்—வீட்டிலிருந்து; நிஸீதே—நள்ளிரவில்; உத்தாய—எழுந்து; மஹா-உதய-உதயாத்—மகாத்மாக்களின் ஆசியினால் பெற்ற வளம்; அலப்த-நித்ர:—உறக்கமின்றி; அனுபவக்ஷித:—யாரும் அறியாது; ந்ருபி:—பொது மக்களினால்; ஹித்வா—துறந்து; கத:—சென்றார்; வேன-ஸீவம்—வேனனின் அன்னை; ப்ரஸீப்தாம்—ஆழ்ந்து தூங்குகையில்.
இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த மன்னர் அங்கன் இரவில் துயில் கொள்ளாது தவித்தார். இல்லற வாழ்க்கை அவருக்கு முற்றிலும் பயனற்றதாயிற்று. நள்ளிரவில் தனது படுக்கையிலிருந்து எழுந்த அவர், தன்னருகில் ஆழ்ந்து துயில் கொண்டிருந்த வேனனின் அன்னையை அவரது மனைவி விட்டு நீங்கினார். அவரது நாட்டின் வளம் போன்றவற்றின் மீதிருந்த மோகமனைத்தையும் விட்டொழித்து யாரும் அறியாது தனது அரண்மனை, செல்வம் ஆகிய அனைத்தும் துறந்து காட்டை நோக்கிப் பயணமானார்.
பதம் 4.13.48
விஜ்ஞாய நிரவித்ய கதம் பதிம் ப்ரஜா:
புரோஹிதாமாத்ய-ஸீஹ்ருத்-கணாதய:
விசிக்யுர் உர்வ்யாம் அதிஸோக-காதரா
யதா நிகூடம்புருஷம் குயோகின:
விஜ்ஞாய—புரிந்து கொண்ட பின்னர்; நிர்வித்ய—முக்கியத்துவமற்றதாக; கதம்—வெளியேறினார்; பதிம்—மன்னர்; ப்ரஜா:—குடிமக்களனைவரும்; புரோஹித—புரோகிதர்கள்; ஆமாத்ய—அமைச்சர்கள்; ஸீஹ்ரும்—நண்பர்கள்; கண-தய:—பொதுவாக மக்கள் எல்லோரும்; விசிக்யு:—தேடினர்; உர்வ்யாம்—பூமியின் மேல்; அதி-ஸோக காத-ர:—மிகுந்த கவலையுற்றனர்; யதா—போன்று; நிகூடம்—மறைந்திருக்கும்; புருஷம்—பரமாத்மா; கு-யோகின:—அனுபவமற்ற இறை உணர்வால்.
மன்னர் தனது அரண்மனையை விட்டு வெளியேறியதைக் கேள்விப்பட்ட குடிமக்கள், புரோகிதர்கள், அமைச்சர்கள், நண்பர்கள் என்று அனைவரும் மிகுந்த துயருற்றனர். அவர்கள், அனுபவமற்ற யோகிகள் தன்னுள் இருக்கும் பரமாத்மாவைத் தேடியது போல் இப்பூவுலகம் முழுவதும் மன்னரைத் தேடினர்.
பதம் 4.13.49
அலக்ஷயந்த: பதவீம் ப்ரஜாபதேர்
ஹதோத்யமா: ப்ரத்யுபஸ்ருத்ய தே புரீம்
ருஷீன் ஸமேதான் அபிவந்த்ய ஸாஸ்ரவோ
ந்ய வேதயன் பௌரவ பர்த்ரு-விப்வலம்
அலக்ஷயந்த:—காணமுடியாமல்; பதவீதம்—எந்த அடையாளமும்; ப்ரஜாபதே:—மன்னர் அங்கனின்; ஹத-உத்யமா:—ஏமாற்றமடைந்தனர்; பிரத்யு-பஸ்ருத்ய—திரும்பிவந்து; தே—அக்குடிமக்கள்; புரீம்—நகருக்கு; ருஷீன்—மகாமுனிவர்கள்; ஸமேதான்—கூடியிருந்த; அபிவந்த்ய—மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்து; ஸ-அஸ்வர:—தங்கள் கண்களில் கண்ணீர் ததும்ப; ந்யவேதயன்—தெரிவித்தனர்; பெளரவ—ஓ, விதுரனே; பர்த்ரு—மன்னரின்; விபல்வம்—மறைவு.
மன்னரை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த குடிமக்கள் அவரைப்பற்றிய எந்தவித அடையாளமும் கிடைக்காததினால் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாயினர். மன்னரைக் காணாது குடிமக்கள் வருத்தமுற்றுக் கூடியிருந்த முனிவர்களிடம் வந்தனர். கண்களில் நீர் வழிய அவர்கள் முனிவர்களை வணங்கி, மன்னரை எல்லா இடங்களிலும் தேடியும் அவரை எங்கேயும் காண முடியவில்லை என்ற விபரத்தைக் கூறினர்
ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “துருவ மன்னரது மரபினர் பற்றிய விளக்கம்” எனும் தலைப்பை கொண்ட பதிமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.