அத்தியாயம் – 6
விஸ்வ ரூபத்தின் சிருஷ்டி
பதம் 3.6.1 : மைத்ரேய ரிஷி கூறினார்: இவ்வாறாக, மஹத்- தத்வத்தைப் போன்ற பகவானுடைய சக்திகளின் சேர்க்கையின்மையால், படைப்புச் செயல்களின் முன்னேற்றம் தடைப்பட்டிருப்பதைப் பற்றி பகவான் கேள்விப்பட்டார்.
பதம் 3.6.2 : பரமசக்தி படைத்தவரானபகவான்,பிறகு, எல்லா மூலப்பொருட்களையும் கலக்கும் தமது புறச் சக்தியான காளி தேவியுடன், இருபத்து மூன்று மூலப் பொருட்களுக்குள் புகுந்தார்.
பதம் 3.6.3 : இவ்வாறாக, பரமபுருஷர் தமது சக்தியின் மூலமாக மூலப்பொருட்களுக்குள் புகுந்தபொழுது, உறங்கி எழுபவன் மீண்டும் தனது செயலில் ஈடுபடுவதைப் போலவே, அனைத்து ஜீவராசிகளும் வெவ்வேறு செயல்களைச் செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
பதம் 3.6.4 : பகவானின் விருப்பத்தால், இருபத்து மூன்று முக்கிய மூலப் பொருட்களும் செயற்படத் தூண்டப்பட்ட பொழுது, பகவானின் பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபம், அல்லது விஸ்வ-ரூபம் தோற்றத்திற்கு வந்தது.
பதம் 3.6.5 : பகவான் தமது விரிவங்க ரூபத்தில், பிரபஞ்ச சிருஷ்டியின் மூலப் பொருட்களுக்குள் நுழைந்த பொழுது, அவை பகவானின் விஸ்வ – ரூபமாக மாற்றமடைந்தன. இந்த விஸ்வ-ரூபத்திற்குள்தான் எல்லாக் கிரக அமைப்புக்களும், அசையும், அசையாத படைப்புக்களும் ஓய்வெடுக்கின்றன.
பதம் 3.6.6 : ஹிரண்மயன் எனப்படும் பிரம்மாண்டமான விராட்-புருஷர், ஆயிரம் தேவ ஆண்டுகளுக்கு பிரபஞ்ச நீரின் மேல் வாழ்ந்தார்.அனைத்து ஜீவராசிகளும் கூட அவருடன் ஒடுங்கிக் கிடந்தன.
பதம் 3.6.7 : பிரமாண்டமான விராட்-ரூபத்தின் வடிவிலிருந்த, மஹத் -தத்வத்தின் மொத்த சக்தியான பகவான், தாமாகவே தம்மை ஜீவராசிகளின் உணர்வாகவும், செயல்களைக் கொண்ட வாழ்வாகவும், மற்றும் தேகாபிமானமாகவும் வகுத்துக் கொண்டார். இம் மூன்றும் முறையே ஒன்றாகவும், பத்தாகவும் மற்றும் மூன்றாகவும் மேலும் வகுக்கப்படுகின்றன.
பதம் 3.6.8 : பரமபுருஷரின் பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபம் தான் பரமாத்மாவின் முதல் அவதாரமும், அம்சமும் ஆகும். அவர் எண்ணற்ற ஜீவராசிகளைக் கொண்ட ஆத்மாவாக இருக்கிறார். இவ்வாறு விருத்தியடையும் மொத்த சிருஷ்டியும் கூட அவரில்தான் ஓய்வெடுக்கிறது.
பதம் 3.6.9 : பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபமானவர், மூன்று, பத்து மற்றும் ஒன்று என வர்ணிக்கப்படுகிறார். அவர் உடல், மனம் மற்றும் புலன்கள் என மூன்றாகவும், எல்லா அசைவுகளையும் இயக்கும் பத்து வகையான சக்திவாய்ந்த உயிர்ச்சக்திகளென பத்தாகவும், மேலும் உயிர்ச்சக்தி உற்பத்தி செய்யப்படும் ஓர் இதயம் என ஒன்றாகவும் இருக்கிறார்.
பதம் 3.6.10 : பரமபுருஷர், பிரபஞ்சத் தோற்றத்தை நிர்மாணிக்கும் தொழில் ஒப்படைக்கப்பட்டுள்ள எல்லா தேவர்களுக்குள்ளும் பரமாத்மாவாக இருக்கிறார். (தேவர்களால்) இவ்வாறு வேண்டப்பட்ட பகவான், தமக்குள் சிந்தித்தவாறு தேவர்களின் புரிந்துணர்வுக்காக தமது பிரம்மாண்ட ரூபத்தைத் தோற்றுவித்தார்.
பதம் 3.6.11 : மைத்ரேயர் கூறினார்; பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபத்தின் தோற்றத்திற்குப் பிறகு பரமபுருஷர் எப்படி தேவர்களின் பல்வேறு ரூபங்களாகத் தம்மைப் பிரித்துக் கொண்டார் என்பதை என்னிடமிருந்து கேளும்.
பதம் 3.6.12 : அக்னி (உஷ்ணம்), அவரது வாயிலிருந்து பிரிந்தது. எல்லா பிரபஞ்ச நிர்வாகிகளும் அவரவர் நிலைகளில், அதற்குள் பிரவேசித்தனர். அந்த சக்தியைக் கொண்டுதான் ஜீவராசி தன்னை வார்த்தைகளால் விவரிக்கிறான்.
பதம் 3.6.13 : பிரம்மாண்ட ரூபத்தின் மேல் வாய் தனியாக தோற்றுவிக்கப்பட்ட பொழுது, பிரபஞ்ச அமைப்புக்களின் காற்றுத் தேவனான வருணன், அதற்குள் புகுந்தார். இவ்வாறாக தன் நாவினால் அனைத்தையும் சுவைக்கக்கூடிய வசதி ஜீவராசிக்கு ஏற்பட்டது.
பதம் 3.6.14 : பகவானின் இரு நாசித் துவாரங்கள் தனித்தனியாக தோன்றியதும், இரு அஸ்வினி குமாரர்கள் தங்களுடைய சரியான நிலைகளில் அவற்றிற்குள் புகுந்தனர். இக்காரணத்தினால் எல்லாப் பொருட்களின் வாசனைகளையும் ஜீவராசிகளால் முகர முடிந்தது.
பதம் 3.6.15 : அதன்பிறகு பகவானுடைய பிரம்மாண்ட ரூபத்தின் இரு கண்கள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டன. ஒளியின் அதிபதியான சூரியன், பார்வையின் ஒரு பகுதி பிரதிநிதியாக அதற்குள் புகுந்தார். இவ்வாறாக ஜீவராசிகளால் உருவங்களைக் காணமுடிந்தது.
பதம் 3.6.16 : பிரும்மாண்ட ரூபத்திலிருந்து பிரிக்கப்பட்ட தோல் தோன்றிய பொழுது, காற்றுத் தேவனான அனிலன், பாதி ஸ்பரிசத்துடன் புகுந்தார். இவ்வாறாக ஜீவராசிகளால் தொட்டு உணரக்கூடிய அறிவை உணர் முடிந்தது.
பதம் 3.6.17 : பிரும்மாண்ட ரூபத்தின் காதுகள் தோன்றிய பொழுது, எல்லா திக் பாலகர்களும் கேட்பதற்குரிய ஆற்றல்களுடன் அவற்றினுள் புகுந்தனர். இவற்றினால் ஜீவராசிகளால் கேட்கவும், ஓசைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.
பதம் 3.6.18 : தோலின் தனித் தோற்றம் ஒன்று உருவான பொழுது, உணர்ச்சிகளை ஆளும் தேவர்களும், அவர்களின் பகுதிகளும் அதற்குள் புகுந்தனர். இவ்வாறாக ஸ்பரிசத்தின் காரணத்தினால் ஜீவராசிகள் அரிப்புணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்கின்றன.
பதம் 3.6.19 : பிரும்மாண்ட ரூபத்தின் புறப்பாலுறுப்புக்கள் தனியா தோன்றியபொழுது, முதல் ஜீவராசியான பிரஜாபதி அவரது ஒரு பகுதி விந்துடன் அவற்றிற்குள் புகுந்தார். இவ்வாறாக, ஜீவராசிகளால் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்க முடிகிறது.
பதம் 3.6.20 : மலத்துவாரம் தனியாகத் தோன்றியது. மித்திரன் என்ற ஆளும் தேவர், மலம் கழிப்பதற்குரிய பகுதி உறுப்புக்களுடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக, ஜீவராசிகளால் மலத்தையும், சிறுநீரையும் கழிக்க முடிகிறது.
பதம் 3.6.21 : அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் கரங்கள் தனியாகத் தோன்றிய பொழுது, சுவர்க்க லோகங்களை ஆள்பவரான இந்திரன் அவற்றிற்குள் புகுந்தார். இவ்வாறாக, வாழ்க்கைத் தேவைக்குரிய வியாபாரத்தை ஜீவராசிகளால் செய்ய முடிகிறது.
பதம் 3.6.22 : அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் கால்கள் தனியாகத் தோன்றின. விஷ்ணு எனும் தேவர் (பரமபுருஷரல்ல) பகுதி அசைவுகளுடன் அவற்றிற்குள் புகுந்தார். ஜீவராசி அவனது இலக்கை நோக்கிச் செல்ல இது உதவுகிறது.
பதம் 3.6.23 : பிரும்மாண்ட ரூபத்தின் புத்தி தனியாகத் தோன்றியபொழுது, வேதங்களின் தலைவரான பிரம்மா, ஒரு பகுதி புரிந்து கொள்ளும் சக்தியுடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக, புரிந்துணர்வுக்குரிய பொருள் ஜீவராசிகளால் அனுபவித்து உணரப்படுகிறது.
பதம் 3.6.24 : அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் இதயம் தனியாகத் தோன்றியது. சந்திர தேவன் ஒரு பகுதி மன இயக்கத்துடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக, ஜீவராசியில் அவனது மனக் கற்பனைகளைச் செய்ய முடிகிறது.
பதம் 3.6.25 : அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் பௌதிக அகங்காரம் தனியாகத் தோன்றியது. பொய் அகங்காரத்தை ஆள்பவரான ருத்திரன் அவரது சொந்த பகுதிச் செயல்களுடன் அதற்குள் புகுந்தார். இதன் மூலமாக ஜீவராசி அவனது ஸ்தூலமான செயல்களைச் செய்கிறான்.
பதம் 3.6.26 : அதன்பிறகு, அவரது (பகவான்) உணர்வு தனியாகத் தோன்றிய பொழுது, மொத்த சக்தியான மஹத்-தத்வத்தின் வடிவிலுள்ள பகவான், அவரது உணர்வுப் பகுதியுடன் அதற்குள் புகுந்தார். இவ்வாறாக ஜீவராசியால் குறிப்பிட்ட அறிவை மனதால் புரிந்துகொள்ள முடிகிறது.
பதம் 3.6.27 : அதன்பிறகு, பிரும்மாண்ட ரூபத்தின் தலையிலிருந்து, சுவர்க்க லோகங்கள் தோன்றின. அவரது கால்களிலிருந்து மண்ணுலகங்களும், அவரது வயிற்றுப் பகுதியிலிருந்து ஆகாயமும் தனித்தனியாகத் தோன்றின. அவற்றிற்குள் தேவர்களும், மற்றவர்களும் ஜட இயற்கைக் குணங்களுக்கேற்ப தோன்றினர்.
பதம் 3.6.28 : மிகச்சிறந்த குணமான சத்வ குணத்தில் தகுதி பெற்றுள்ள தேவர்கள் சுவர்க்க லோகங்களில் உள்ளனர். ஆனால் மனிதர்களோ, அவர்களுடைய ரஜோ குண சுபாவத்தினால், அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களுடன் பூமியில் வாழ்கின்றனர்.
பதம் 3.6.29 : ருத்திரனின் சகாக்களாக உள்ள ஜீவராசிகள், ஜட இயற்கையின் மூன்றாவது குணத்தை, அல்லது அறியாமையை விருத்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் மண்ணுலகங்களுக்கும், சுவர்க்க லோகங்களுக்கும் இடையிலுள்ள ஆகாயத்தில் உள்ளனர்.
பதம் 3.6.30 : குரு வம்சத்தில் சிறந்தவரே, பிரும்மாண்ட ரூபமான விராட் புருஷரின் வாயிலிருந்து வேத ஞானம் தோன்றியது. இந்த வேத ஞானத்தில் நாட்டம் கொண்டவர்கள், பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எல்லா சமூகப் பிரிவுகளுக்கும் இயல்பான போதகர்கனாகவும், ஆன்மீக குருமார்களாகவும் உள்ளனர்.
பதம் 3.6.31 : அதன்பிறகு பிரம்மாண்டமான விராட்-ரூபத்தின் கரங்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி உற்பத்தியானது. இத்தகைய சக்தியின் தொடர்பாக க்ஷத்திரியர்களும் தோற்றத்திற்கு வந்தனர். இவர்கள் க்ஷத்திரியத் தொழில்களைப் பின்பற்றுவதன் மூலம் சமூகத்தை, திருடர்கள் மற்றும் துஷ்டர்கள் ஆகியோரின் தொல்லைகளிலிருந்து காப்பாற்றினர்.
பதம் 3.6.32 : அனைவருக்கும் ஜீவனோபாயமாக உள்ள தானிய உற்பத்தியும் பிரஜைகளுக்கு அவற்றை விநியோகித்தலும், பகவானின் பிரம்மாண்ட ருபத்தின் தொடைகளிலிருந்து உற்பத்தியானது. இதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுள்ள வர்த்தகப் பிரிவினர், வைசியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
பதம் 3.6.33 : அதன்பிறகு, வர்ணாஸ்ரம கடமைகளைப் பாதுகாப்பதற்காக, பரமபுருஷரின் கால்களிலிருந்து சேவை தோன்றியது, பகவானின் கால்களில் உள்ள சூத்திரர்கள் அவரைச் சேவையினால் திருப்திப்படுத்துகின்றனர்.
பதம் 3.6.34 : இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும், அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும், உயிர்வாழ்ச்சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன. இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும், தன்னுணர்வையும் பெறுவதற்கு, ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ், பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும்.
பதம் 3.6.35 : விதுரரே. பரமபுருஷரின் அந்தரங்கச் சக்தியினால், தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ரூபத்தின் உன்னதமான காலத்தையும், செயலையும், மற்றும் ஆற்றலையும் யாரால் அளவிட முடியும்?
பதம் 3.6.36 : என்னுடைய இயலாமைக்கிடையிலும், (ஆன்மீக குருவிடமிருந்து) எதையெல்லாம் என்னால் கேட்க முடிந்ததோ, எதையெல்லாம் என்னால் கிரகிக்க முடிந்ததோ, அந்த பகவானின் பெருமைகளை எல்லாம் தூய வார்த்தையினால் இப்பொழுது நான் விவரிக்கிறேன். இல்லையெனில் எனது பேசும் சக்தி தூய்மையற்றதாகவே இருக்கும்.
பதம் 3.6.37 : புண்ணிய புருஷரான பகவானின் செயல்களையும், பெருமைகளையும் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுபவதுதான் மனித குலத்தால் அடையப்படக்கூடிய மிகவுயர்ந்த இலாபமாகும். இத்தகைய செயல்கள், கற்றறிந்த மாமுனிவர்களால் எழுத்து வடிவில் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக அவற்றிற்கு அருகில் இருப்பதாலேயே செயலின் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறது.
பதம் 3.6.38 : அருமைப் புதல்வரே, ஆயிரம் தேவ ஆண்டுகள் நீடித்த ஆதி கவியான பிரம்மாவின் முதிர்ந்த தியானத்திற்குப் பிறகுதான், பரமாத்மாவின் மகிமைகள் நினைத்தற்கரியவை என்பதை அவரால் அறிய முடிந்தது.
பதம் 3.6.39 : பரமபுருஷரின் அற்புதச் சக்தியானது, ஜாலக்காரர்களுக்குக் கூட குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளது. மறைந்துள்ள அந்த சக்தி, சுய பூர்த்தியுடையவரான பகவானால் கூட அறிய முடியாததாக உள்ளது. எனவே மற்றவர்களால் அதை அடைய முடியாது என்பது நிச்சயம்.
பதம் 3.6.40 : வார்த்தைகளும், மனதும் மற்றும் அகங்காரமும், அவற்றை ஆளும் தேவர்களும், பரமபுருஷரை அறிவதில் வெற்றியடையத் தவறிவிட்டனர். எனவே, விவேகத்தின் காரணத்தினால், அவருக்கு நமது பணிவான வணக்கங்களை நாம் அளிக்க வேண்டியுள்ளது.