அத்தியாயம் – 5
மைத்ரேயருடனான விதுரரின் உரையாடல்கள்
பதம் 3.5.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக, குருவம்சத்தில் சிறந்தவரும், பகவத் தொண்டில் பூரணத்துவம் பெற்றவருமான விதுரர், உலகில் ஆழங்காண முடியாத அறிவைப் பெற்றிருந்த மாமுனிவரான மைத்தேயர் அமர்ந்திருந்த, தெய்வீகமான கங்கா துவாரத்தை (ஹரித்துவாரத்தை) அடைந்தார். அமைதியில் பூரணத்துவமும், உன்ன தத்தில் திருப்தியும் பெற்றிருந்த விதுரர், மைத்ரேயரிடம் பின் வருமாறு வினவினார்.
பதம் 3.5.2 : விதுரர் கூறினார்: மிகச்சிறந்த முனிவரே, மகிழ்ச்சியடையும் பொருட்டு, இவ்வுலகிலுள்ள அனைவரும் பலன் நோக்குக் கருமங்களில் ஈடுபடுகின்றனர். ஆயினும், முழு திருப்தியையோ அல்லது துன்ப நிவர்த்தியையோ ஒருவரும் காண்பதில்லை. செயல்களால் மாறாக, இத்தகைய செயல்களால் நிலைமை இன்னும் மோசமடைகிறது. எனவே, உண்மையான மகிழ்ச்சியைப் பெற, எப்படி ஒருவர் வாழவேண்டும் என்பதை எங்களுக்குக் கூறியருளுங்கள்.
பதம் 3.5.3 : எம்பெருமானே, பகவானுக்கு அடிபணிய மறுக்கும் வீழ்ந்த ஆத்மாக்களிடம் இரக்கம் காட்டுவதற்காக சமுதாயத் தொண்டர்களான சிறந்த ஆத்மாக்கள், பரமபுருஷரின் சார்பாக பூமியில் சஞ்சரிக்கின்றனர்.
பதம் 3.5.4 : எனவே, மாமுனிவரே, பகவானின் உன்னதமான பக்தித்தொண்டைப் பற்றி எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன். இதனால் பகவான் திருப்தியடைந்து, பக்தித்தொண்டு முறையினால் தூய்மை அடைந்துள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும் என்ற வேதக் கொள்கைகளுக்கேற்ப, எல்லோருடைய இதயத்திலும் உள்ள பகவான், என் இதயத்தில் இருந்து கொண்டே பரம சத்தியத்தைப் பற்றிய அறிவைப் புகட்டட்டும்.
பதம் 3.5.5 : மாமுனிவரே, சுதந்திரமானவரும், விருப்பற்றவரும், மூவுலகங்களின் இறைவனும், எல்லாச் சக்திகளையும் ஆள்பவருமான பரமபுருஷர்ப்படி அவதாரங்களை ஏற்று, பிரபஞ்ச தோற்றத்தை அதன் பராமரிப்பிற்குரிய பக்குவமான கட்டுப்பாட்டு விதிகளுடன் படைத்தார் என்பதை விளக்கியருளுங்கள்.
பதம் 3.5.6 : ஆகாயத்தின் வடிவில் பரவியுள்ள அவரது சொந்த இதயத்தின் மேல் சயனிப்பதன் மூலமாக, முழு சிருஷ்டியையும் அந்த இடத்தில் அவர் வைக்கிறார். பிறகு வெவ்வேறு உயிரினங்களாகத் தோன்றும் பல ஜீவராசிகளாக அவர் விரிவடைகிறார். அவர் எல்லா யோக சக்திகளும் உட்பட, அனைத்திற்கும் உரிமையாளர் என்பதால், தமது சொந்த பராமரிப்பிற்காக அவர் எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டிய தில்லை. இவ்வாறாக அவர் ஜீவராசிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார்.
பதம் 3.5.7 : இருபிறப்பெய்தியவர்கள். பசுக்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் தன்மைக்காக, வெவ்வேறு அவதாரங்களாகத் தோன்றும் பகவானின் மங்களகரமான சிறப்பியல்புகளைப் பற்றியும் விவரிக்க வேண்டுகிறேன். பசுவானின் உன்னத செயல்களைப் பற்றி நாங்கள் தொடர்ந்து கேட்ட போதிலும், எங்களுடைய மனங்கள் திருப்தியடையவே இல்லை.
பதம் 3.5.8 : அகிலலோக நாயகர், இயற்கைக் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப அமைந்துள்ள, ஜீவராசிகள் உள்ள வெவ்வேறு கிரகங்களையும், வசிப்பிடங்களையும் படைத்திருப்பதுடன். அவற்றை ஆளும் வெவ்வேறு லோக பாலகர்களையும் கூட படைத்திருக்கிறார்.
பதம் 3.5.9 : பிராமணர்களில் தலைமையானவரே, சுய திருப்தியுடையவரும், பிரபஞ்ச சிருஷ்டிக்கர்த்தாவுமான நாராயணர், எப்படி வெவ்வேறு ஜீவராசிகளின் இயல்புகள், செயல்கள், உருவங்கள், அம்சங்கள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றை வெவ்வேறாகப் படைத்துள்ளார் என்பதையும் தயவுகூர்ந்து விளக்கியருளுங்கள்.
பதம் 3.5.10 : மாமுனிவரே, மனித சமூகத்தின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த அந்தஸ்துகளைப் பற்றி, வியாச தேவரின் வாயிலிருந்து திரும்பத் திரும்ப நான் கேட்டிருக்கிறேன். இத்தாழ்ந்த விவகாரங்களும், அவற்றினால் உண்டாகும் மகிழ்ச்சியும் எனக்குத் திகட்டி விட்டன. ஆனால் அமுதம் போன்ற ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களில் அத்திருப்தி எனக்குக் கிடைக்கவில்லை.
பதம் 3.5.11 : மாமுனிவர்களாலும், பக்தர்களாலும் வணங்கப்படுபவரும், எல்லா புண்ணிய தீர்த்தங்களுக்கும் உறைவிடமாக உள்ள தாமரைப் பாதங்களை உடையவருமான பகவானைப் பற்றி, போதுமான அளவிற்கு கேட்காமல் திருப்தியடையக் கூடியவர் மனித சமூகத்தில் யார் இருக்கக் கூடும்? இத்தகைய விவகாரங்கள் ஒருவரது செவித்துவாரங்களில் நுழைவதாலேயே அவரது குடும்பப் பாசத்தினால் உண்டான பந்தத்தை அது துண்டித்து விடுகிறது.
பதம் 3.5.12 : உங்களது நண்பரான கிருஷ்ண துவைபாயன வியாசர், பகவானின் உன்னத குணங்களை அவரது சிறந்த காவியமான மகாபாரதத்தில் முன்பே விளக்கியுள்ளார். ஆனால் பௌதிக விஷயங்களைக் கேட்பதில் பாமர மக்களுக்குரிய உறுதியான விருப்பத்தை, கிருஷ்ண கதையை (பகவத்கீதை) நோக்கித் திருப்புவதே அதன் முக்கிய நோக்கமாகும்.
பதம் 3.5.13 : இத்தகைய விஷயங்களைக் கேட்பதில் இடையறாது ஈடுபட ஆவல் கொண்டுள்ளவருக்கு, மற்ற விஷயங்களிலுள்ள அவரது அசிரத்தையை கிருஷ்ண கதை படிப்படியாக அதிகரிக்கச் செய்கிறது. உன்னத ஆனந்தத்தை அடைந்துள்ள பக்தனால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்கள் இவ்வாறு இடையறாது சிந்திக்கப் படும்பொழுது, அவனது எல்லாத் துன்பங்களையும் அது தாமதமின்றி அழித்துவிடுகிறது.
பதம் 3.5.14 : முனிவரே, பாவச் செயல்களின் காரணத்தால் ஹரி கதையை விரும்பாமலும், மகாபாரதத்தின் (பகவத்கீதை) நோக்கத்தைப் பற்றி அறியாமலும் இருப்பவர்கள் வருந்தத்தக்கவர்களிலும் வருந்தத் தக்கவர்களாக உள்ளனர். நானும் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். ஏனெனில், தத்துவக் கற்பனைகளிலும், செயல்முறைக்கு ஒவ்வாத நோக்கங்களிலும் வெவ்வேறு சடங்குகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அவர்களுடைய ஆயுள் எப்படி நித்திய காலத்தினால் வீணடிக்கப்படுகிறது என்பதை நான் காண்கிறேன்.
பதம் 3.5.15 : மைத்ரேயரே- துன்புற்றோரின் நண்பரே- ஹரி கதை மட்டுமே உலக மக்களுக்கு நன்மை செய்யக்கூடியதாகும். எனவே, மலர்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிப்பதைப் போலவே, அனைத்திற்கும் சாரமான ஹரி கதையைக் கூறியருளுங்கள்.
பதம் 3.5.16 : பரமபுருஷர், பிரபஞ்ச படைப்பிற்காகவும், பராமரிப்புக்காகவும் சர்வ சக்திகளையும் பூரணமாகக் கொண்ட அவதாரங்களை ஏற்றார். பரம ஆளுனரான அவரது அமானுஷ்யமான உன்னத செயல்களைப்
பற்றிய அனைத்தையும் தயவுசெய்து கூரியருளுங்கள்.
பதம் 3.5.17 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மாமுனிவரான மைத்ரேயர், விதுரரை மிகவும் கௌரவித்தபின், அவரது வேண்டுகோளின்படி, எல்லோருடைய
உயர்ந்த நன்மைக்காகவும் பேசத் துவங்கினார்.
பதம் 3.5.18 : ஶ்ரீ மைத்ரேயர் கூறினார்: விதுரரே, உமக்கு சர்வ மங்களம். அனைத்திலும் மிகவுயர்ந்த நன்மையைப் பற்றி நீர் என்னிடம் கேட்டதன் மூலம், உலகிற்கும், எனக்கும் கருணை காட்டியவரானீர். ஏனெனில், உமது மனம் எப்பொழுதும் உன்னதத்தைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கிறது.
பதம் 3.5.19 : விதுரரே, நீர் வியாசதேவரின் வீரியத்திலிருந்து பிறந்தவரென்பதால், மாறாத சிந்தனையுடன் பகவானை நீர் ஏற்றுக்கொண்டதில் சிறிதும் ஆச்சரியமில்லை.
பதம் 3.5.20 : முன்பு நீர், ஜீவராசிகளின் மரணத்திற்கு அதிபதியான யமராஜன் என்பதையும், மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் இப்பொழுது விதுராகப் பிறந்திருக்கிறீர் என்பதையும், சத்தியவதியின் மகனான வியாசதேவருக்கும், அவரது சகோதரரின் வைப்பு மனைவிக்கும் பிறந்தவர் என்பதையும் நானறிவேன்.
பதம் 3.5.21 : பரமபுருஷ பகவான் அவரது வசிப்பிடத்திற்குச் செல்லுகையில், உமக்கு ஞானோபதேசம் செய்வதற்காகவே என்னிடம் உபதேசங்களை விட்டுச் சென்றார். அத்தகைய நல்லாத்மாவான நீர் பகவானின் நித்திய சகாக்களுள் ஒருவராவீர்.
பதம் 3.5.22 : ஆகையால், ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் பிரபஞ்ச படைப்பு, காப்பு மற்றும் அழிவு ஆகியவற்றிற்காக, தமது உன்னத சக்தியை விரிவடையச் செய்யும் பரமபுருஷரின் லீலைகளைப் பற்றி நான் விளக்குகிறேன்.
பதம் 3.5.23 : அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனான பரமபுருஷர், படைப்பிற்கு முன்பே இரண்டற்ற ஒருவராக இருந்தார். அவரது விருப்பத்தினால் தான் சிருஷ்டி சாத்தியமாக்கப்பட்டு, மீண்டும் அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. இப்பரமாத்மாவான இவர் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.
பதம் 3.5.24 : அனைத்திற்கும் உரிமையாளரான பகவான்தான் உண்மையான பார்வையாளராவார். அப்பொழுது பிரபஞ்ச படைப்பு நிகழவில்லை என்பதால், தமது அம்சங்களும், பிரிக்கப்பட்ட பின்னப் பகுதிகளும் இல்லாமல், தாம் குறையுடையவராக இருப்பதாக அவர் உணர்ந்தார். ஜட சக்தி செயலற்றுக் கிடந்தது. ஆனால் அந்தரங்க சக்தி மட்டும் தோற்றுவிக்கப்பட்டு இருந்தது.
பதம் 3.5.25 : பகவான் காண்பவர், காணப்படுவதான பகிரங்க சக்தி, பிரபஞ்ச தோற்றத்தில் செயல், விளைவுகளாக செயற்படுகின்றது. சிறந்த பாக்கியசாலியான விதுரரே, இந்த பகிரங்க சக்தியானது மாயா எனப்படுகிறது. இச்சக்தியின் மூலமாகத்தான் முழு பௌதிகத் தோற்றமும் சாத்தியமாக்கப்படுகிறது.
பதம் 3.5.26 : பரமபுருஷர்.தமது விரிவங்கமாகிய, உன்னதமான புருஷாவதார அம்சத்தில், முக்குணங்களைக் கொண்ட ஜட இயற்கையை கருவுறச் செய்கிறார். இவ்வாறாக நித்திய காலத்தின் ஆதிக்கத்தால் ஜீவராசிகள் தோன்றுகின்றன.
பதம் 3.5.27 : அதன்பிறகு, நித்திய காலத்தினால் தூண்டப்பட்டு மஹத்-தத்வம் எனப்படும் மொத்த ஜட சக்தி தோன்றியது. பரமபுருஷர் தமது சொந்த உடலிலிருந்து, தூய நற்குணமான இந்த மஹத்-தத்வத்திற்குள், பிரபஞ் தோற்றத்திற்குரிய விதைகளைப் பதித்தார்.
பதம் 3.5.28 : அதன்பிறகு மஹத்-தத்துவமானது, தோற்றுவிக்கப்படவிருக்கும் ஜீவன்களின் களஞ்சியமாக, பல்வேறு வடிவங்களில் தன்னைப் பிரித்துக் கொண்டது. பொய் அகங்காரத்தை உற்பத்தி செய்யும் இந்த மஹத்-தத்துவம் பிறகு அறியாமைக் குணம் மேலோங்கியதாக மாறுகிறது.பரம புருஷரின் முழு விரிவாகிய அது, கருவுறச் செய்வதற்குரிய அடிப்படைப் பொருட்கள் மற்றும் காலம் ஆகியவற்றின் முழு உணர்வை கொண்டதாகும்.
பதம் 3.5.29 : மிகப்பெரிய காரண உண்மை எனப்படும் மஹத்-தத்வம், பொய் அகங்காரமாக உருமாறுகிறது. இந்த பொய் அகங்காரமானது, காரணம், விளைவு மற்றும் செய்பவர் என மூன்று நிலைகளில் தோற்றுவிக்கப்படுகிறது. மனத்தளத்திலுள்ள இத்தகைய செயல்கள் அனைத்தும், பஞ்ச பூதங்களையும், ஸ்தூல புலன்களையும் மற்றும் மனக் கற்பனையையும் ஆதாரமாகக் கொண்டுள்ளன. பொய் அகங்காரமானது, சத்வம், ரஜஸ், தமஸ் எனும் மூவேறு குணங்களில் பிரதிநிதிக்கிறது.
பதம் 3.5.30 : பொய் அகங்காரம் சத்வ குணத்துடன் கலப்பதால் மனமாக உரு மாற்றப்படுகிறது. ஜட உலகை ஆளும் தேவர்களும் கூட, பொய் அகங்காரம் மற்றும் சத்வ குணம் ஆகியவற்றின் சேர்க்கையிலிருந்து தான் உண்டாகின்றனர்.
பதம் 3.5.31 : புலன்கள், பொய் அகங்காரத்தினால் ஆளப்படும் ரஜோ குணத்தி லிருந்து உற்பத்தியானவை என்பதில் சந்தேகமில்லை. எனவே, ரஜோ குணத்தில், தத்வார்த்தமான கற்பனை அறிவும், பலன் கருதும் செயல்களும் ஆட்சி செலுத்துகின்றன.
பதம் 3.5.32 : ஆகாயம் ஓசையிலிருந்து உண்டாகிறது. ஓசை, தீவிர அகங்காரத்திலிருந்து உருமாற்றம் பெறுகின்றது. அதாவது, ஆகாயம் பரம ஆத்மாவின்ஓர் உருவச் சின்னமாகும்.
பதம் 3.5.33 : அதன்பிறகு, நித்திய காலம் மற்றும் புறச் சக்தி ஆகியவற்றினால் ஒரு பகுதி கலப்படமாகியிருந்த ஆகாயத்தின் மீது பரமபுருஷர் பார்வையைச் செலுத்தினார். இவ்வாறாக ஸ்பரிச உணர்வு விருத்தியடைந்தது. இதிலிருந்து ஆகாயத்திலுள்ள காற்று உற்பத்தியானது.
பதம் 3.5.34 : அதன்பிறகு, மிகவும் சக்திவாய்ந்த காற்று ஆகாயத்துடன் பின்னிப் பிணைந்ததனால், வடிவத்தை அறியும் சக்தி உண்டாயிற்று. பிறகு, வடிவத்தை அறியும் சக்தியானது, உலகைக் காண உதவும் ஒளியான, மின்சாரமாக உருமாறியது.
பதம் 3.5.35 : காற்று மின்சார சக்தியால் நிரப்பப்பட்டதும், பகவான் அதைப் பார்த்தார். அப்பொழுது, நித்திய காலம் மற்றும் புறச்சக்தி ஆகியவற்றின் கலப்படத்தினால் நீரும், சுவையும் உண்டாயின.
பதம் 3.5.36 : அதன்பிறகு, மின்சாரத்திலிருந்து உண்டான நீர், பரமபுருஷரின் பார்வைக்கு இலக்காகி நித்திய காலத்துடனும், புறச் சக்தியுடனும் கலந்தது. இவ்வாறாக, வாசனை மேலோங்கிய தன்மையைக் கொண்ட பூமியாக அது உருமாற்றப்பட்டது.
பதம் 3.5.37 : நற்குணவானே, ஆகாயத்திலிருந்து, பூமி வரையுள்ள எல்லா பௌதிக மூலப் பொருட்களிலும், உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் உள்ள எல்லா குணங்களுக்கும், பரமபுருஷரின் பார்வையாக உள்ள கடைசிப் பூச்சுதான் காரணம்.
பதம் 3.5.38 : மேற்குறிப்பிட்ட பௌதிக மூலப் பொருட்களை ஆள்பவர்களான தேவர்கள், பகவான் விஷ்ணுவின் சக்தி வாய்ந்த அம்சங்களாவர். புறச்சக்திக்கு உட்பட்ட நித்திய காலத்தினால் உருவமைக்கப்பட்டுள்ள அவர்கள் பகவானின் பின்னப் பகுதிகளாவர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட, பிரபஞ்ச இயக்கத்திற்குரிய பல்வேறு கடமைகளை அவர்களால் நிறைவேற்ற முடியாததால், அவர்கள் பின்வருமாறு பகவானிடம் மனங்கவரும் பிரார்த்தனைகளைச் செய்தனர்.
பதம் 3.5.39 : தேவர்கள் கூறினர்: எம்பெருமானே, குடையைப் போன்றுள்ள தங்களுடைய தாமரைப் பாதங்கள், சரணடைந்த ஆத்மாக்களை எல்லா பௌதிகத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அவற்றைப் புகலிடம் கொண்ட முனிவர்கள் பௌதிகத் துன்பங்களையெல்லாம் எறிந்து விடுகின்றனர். எனவே தங்களுடைய தாமரைப் பாதங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.
பதம் 3.5.40 : தந்தையே, எம்பெருமானே, பரமபுருஷரே, ஜட உலகிலுள்ள ஜீவராசிகள் மூவகைத் துன்பங்களால் அலைக்கழிக்கப்படுவதால், அவர்களால் எவ்வித மகிழ்ச்சியையும் அடைய முடியாது. எனவே அறிவுமயமாக உள்ள உங்களுடைய தாமரைப் பாதங்களின் நிழலில் அவர்கள் அடைக்கலம் புகுகின்றனர். நாங்களும் அவற்றையே புகலிடமாகக் கொள்கிறோம்.
பதம் 3.5.41 : பகவானின் தாமரைப் பாதங்கள் எல்லா தீர்த்த ஸ்தலங்களுக்கும் புகலிடமாக விளங்குகின்றன. வேதங்கள் எனும் சிறகுகளால் தூக்கிச் செல்லப்படும் தெளிந்த மனதுடைய மாமுனிவர்கள், பறவைக்கூடு போன்ற உங்களுடைய தாமரைத் திருமுகத்தையே எப்பொழுதும் தேடி அலைகின்றனர். அவர்களில் சிலர், மிகச்சிறந்த நதியும், எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் ஒருவரை விடுவிப்பதுவுமான கங்கையைப் புகலிடம் கொள்வதன் மூலமாக, ஒவ்வொரு அடிக்கும் உங்களுடைய தாமரைப் பாதங்களையே சரணடைகின்றனர்.
பதம் 3.5.42 : உங்களுடைய தாமரைப் பாதங்களைப் பற்றி சிரத்தையுடனும், பக்தியுடனும் கேட்பதாலும், இதயத்தில் அவற்றை தியானிப்பதாலுமே உடனடியாக ஒருவர் ஞான ஒளி பெற்று, துறவின் வலிமையால் அமைதி பெறுகிறார். எனவே நாங்கள் உங்களுடைய தாமரைப் பாதங்கள் எனும் சரணாலயத்தைப் புகலிடம் கொள்ளவேண்டும்.
பதம் 3.5.43 : எம்பெருமானே, பிரபஞ்ச தோற்றத்தின் படைத்தல், காத்தல், மற்றும் அழித்தல் ஆகியவற்றிற்காக நீங்கள் அவதாரங்களை ஏற்கிறீர்கள். எனவே தங்களுடைய தாமரைப் பாதங்களை நாங்கள் தஞ்சமடைகிறோம். ஏனெனில் அப்பாதங்கள் உங்களுடைய பக்தர்களுக்கு எப்பொழுதும் ஞாபகத்தையும், தைரியத்தையும் அளிக்கின்றன.
பதம் 3.5.44 : பகவானே, நிலையற்ற உடலிலும், உறவினர்களிடமும் விரும்பத்தகாத ஆசை கொண்டிருப்பவர்களும் “நான்’, ‘எனது” என்ற எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களும், தங்களுடைய சொந்த உடல்களுக்குள் உங்களுடைய தாமரைப் பாதங்களைப் பெற்றிருந்த போதிலும், அவற்றை அவர்களால் காணமுடியவில்லை. ஆனால் உங்களுடைய தாமரைப் பதங்களை நாங்கள் தஞ்சமடைகிறோம்.
பதம் 3.5.45 : மிகச்சிறந்த பரமபுருஷரே, யாருடைய உள்நோக்கம் பௌதிகச் செயல்களால் அளவுக்கதிகமாக பாதிப்படைத்துள்ளதோ, அத்தகைய குற்றவாளிகளால் உங்களுடைய தாமரைப் பாதங்களைக் காண முடியாது. ஆனால் உன்னதமான உங்களுடைய செயல்களை அனுபவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உங்களது தூய பக்தர்களால் அவற்றைக் காண முடியும்.
பதம் 3.5.46 : பகவானே, உறுதியான நோக்கத்தினால், அறிவுபூர்வமான பக்தித்தொண்டு நிலையை அடைபவர்கள், அறிவு மற்றும் துறவு ஆகியவற்றின் முழு ஞானத்தைப் பெற்று, அமுதம் போன்ற உங்களுடைய கதைகளைப் பருகுவதாலேயே ஆன்மீக ஆகாயத்திலுள்ள வைகுண்ட லோகத்தை அடைகின்றனர்.
பதம் 3.5.47 : உன்னதத் தன்னுணர்வில் திருப்தியடைபவர்களும், உறுதியான சக்தியாலும், அறிவாலும் இயற்கைக் குணங்களை வெற்றி கொள்பவர்களுமான மற்றவர்களும் உங்களுக்குள் பிரவேசிக்கின்றனர் என்றாலும், அவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். ஆனால் பக்தரோ, பக்தித் தொண்டை நிறைவேற்றுவதால், இத்தகைய துன்பத்தை உணர்வதில்லை.
பதம் 3.5.48 : எனவே ஆதி புருஷரே, நாங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமாவோம். நாங்கள் உங்களுடைய ஜீவன்கள் என்ற போதிலும், இயற்கையின் முக்குண ஆதிக்கத்தின் கீழ் ஒருவர் பின் ஒருவராகப் பிறந்திருப்பதால், செயலில் நாங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, சிருஷ்டிக்குப் பின் உங்களுடைய உன்னத ஆனந்தத்திற்காக எங்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியவில்லை.
பதம் 3.5.49 : பிறப்பற்றவரே, அனுபவிக்கத் தகுந்த தானியங்களையும், பிற உபயோகமுள்ள பொருட்களையும் உங்களுக்கு நாங்கள் நிவேதனம் செய்ய வேண்டிய வழிகளையும், மார்க்கங்களையும் பற்றி தயவு கூர்ந்து எங்களுக்கு அறிவுறுத்த வேண்டுகிறோம். இதனால் இவ்வுலகிலுள்ள நாங்களும், பிற ஜீவராசிகளும் தொல்லையின்றி எங்களைப் பராமரித்துக் கொள்ள முடியும் என்பதுடன், உங்களுக்கும், எங்களுக்கும் வேண்டிய வாழ்க்கைத் தேவைகளை எங்களால் சுலபமாக சேகரிக்கவும் முடியும்.
பதம் 3.5.50 : பகவானே, நீங்கள் தேவர்களையும், பலதரப்பட்ட ஜீவராசிகளையும் தோற்றுவித்த மூல புருஷர் என்றாலும், நீங்கள் ஆதி புருஷரும். மாற்றமற்றவருமாவீர், உங்களை விட உயர்ந்தவர் அல்லது உங்களுக்குக் காரணமானவர் எவருமில்லை. மொத்த ஜீவராசிகளுக்குரிய விந்தால் நீங்கள் புறச்சக்தியை கருவுறச் செய்திருப்பினும், பிறப்பற்றவராக இருக்கிறீர்கள்.
பதம் 3.5.51 : பரமாத்மாவே, துவக்கத்தில், மொத்த பிரபஞ்ச சக்தியான மஹத் – தத்வத்திலிருந்து படைக்கப்பட்ட நாங்கள், செயற்பட வேண்டிய வழிமுறையை தயவுகூர்ந்து எங்களுக்கு அருளுங்கள். தயவுகூர்ந்து பக்குவமான அறிவையும், ஆற்றலையும் கூட அருளவேண்டும். இதனால் பின்தொடரும் சிருஷ்டியின் வெவ்வேறு இலாக்காக்களில் உங்களுக்கு எங்களால் தொண்டு செய்ய முடியும்.