அத்தியாயம் – 29
கபில பகவானின் பக்தித் தொண்டு பற்றிய விளக்கம்
பதங்கள் 3.29.1 – 3.29.2
தேவஹுதிருவாச
லக்ஷணம் மஹதா-தீனாம் ப்ரக்குருதே: புருஷஸ்ய ச
ஸ்வரூபம் லக்ஷ்யதே மீஷாம் யேன தத்-பாரமார்த்திகம்

யதா ஸாங்க்யேஷு கதிதம் யந்-மூலம் தத்ப்ரசக்ஷதே
பக்தி-யோகஸ்ய மே மார்கம் ப்ரூஹி விஸ்தரச: ப்ரபோ

தேவஹுதி உவாச—தேவஹுதி கூறினாள்; லக்ஷணம்—அடையாளங்கள்; மஹத் ஆதீனாம்—மஹத் தத்துவம் முதலியவற்றின்; ப்ரக்ருதே:—இயற்கையின்; புருஷஸ்ய—ஆத்மாவின்; ச—மற்றும்; ஸ்வரூபம்—இயற்கை; லக்ஷ்யதே—வர்ணிக்கப்படுகிறது; அமீஷாம்—அவற்றின்; யேன—அதனால்; ததி—பாரம அர்த்திகம்—அவற்றின் உண்மை இயல்பு; யதா—போல; ஸாஸ்க்யேஷு—ஸாங்க்ய தத்துவம்; கதிதம்—விளக்கப்படுகிறது; யத்—எதன்; மூலம்—இறுதி முடிவு; தத்—அந்த; ப்ரசக்ஷதே—அவர்கள் அழைப்பர்; பக்தியோகஸ்ய—பக்தித் தொண்டில்; மே—என்னிடம்; மார்கம்—வழி; ப்ரூஹி—தயவு செய்து விளக்குங்கள்; விஸ்தரச—விளக்கமாக; ப்ரபோ—என் அன்புக் கபில பகவானே.

தேவஹுதி விசாரித்தாள்; என் அன்பு பகவானே, நீங்கள் முன்பே ஸாங்க்ய தத்துவ முறைப்படி ஆத்மாவின் குணநலன்களையும், முழு இயற்கையின் அடையாளங்களையும் அறிவுபூர்வமாக வர்ணித்தீர்கள். இப்போது நான் தத்துவ முறைகளின் இறுதி முடிவாகிய பக்தித் தொண்டின் பாதையை விளக்கும்படி வேண்டுகிறேன்.

பதம் 3.29.3
விராகோ யேன புருஷோ பகவன் ஸர்வதோ பவேத்
ஆசக்ஷ்வ ஜீவ-லோகஸ்ய விவிதா மம ஸம்ஸ்ருதீ:

விராக:—பற்றின்மை; யேன—எதனால்; புருஷ:—மனிதர்; பகவன்—என் அன்பு பகவானே; ஸர்வத:—முழுவதுமாக; பவேத்—வரும்; ஆசக்ஷ்வ—தயவுசெய்து வர்ணியுங்கள்; ஜீவ லோகஸ்ய—பொதுவாக மக்களுக்காக; விவிதா—பலவிதம்; மம—எனக்காக; ஸம்ஸ்ருதீ:—பிறப்பு, இறப்பின் சுழற்சி.

தேவஹூதி தொடர்ந்தாள்; என் அன்பு பகவானே, எனக்காவும் பொதுவில் மக்களுக்காகவும் பிறப்பு இறப்பின் தொடர்ந்த முறையை தயவுசெய்து விளக்கமாக வருணியுங்கள், ஏனெனில் அந்தப் பேரிடர்களைக் கேட்பதன் மூலம் நாம் இந்த உலகின், செயல்களிலிருந்து ஒதுங்கியிருக்க முடியும்.

பதம் 3.29.4
காலஸ்யேஸ்வர-ரூபஸ்ய பரேஷாம் ச பரஸ்ய தே
ஸ்வரூபம் பத குர்வந்தி யத்தேதோ: குசலம் ஜனா:

காலஸ்ய—காலத்தின்; ஈஸ்வரரூபஸ்ய—பகவானின் பிரதிநிதித்துவம்; பரேஷாம்—மற்றவர்களின்; ச—மற்றும்; பரஸ்ய—தலைவர்; தே—உன்னுடைய; ஸ்வரூபம்—இயல்பு; பத—ஓ; குர்வந்தி—நிகழ்த்து; யத்—தேதோ:—அவர் பாதிப்பால்; குசலம்—பக்திச் செயல்கள்; ஜனா:—பொதுவாக மக்கள்.

உங்கள் தோற்றம் என்றும் அழியாத காலத்தைப் பிரதிபலிக்கிறது. பக்திச் செயல்களை நிகழ்த்துவதில் ஈடுபட்டுள்ள மக்களைப் பொதுவாகப் பாதிக்கும் அந்த நிலையான காலத்தைப் பற்றியும் தயவு செய்து வர்ணியுங்கள்.

பதம் 3.29.5
லோகஸ்ய மித்யாபிமதேரசக்ஷூஷ
ஸ்சிரம் ப்ரஸுப்தஸ்ய தமஸ்யநாஸ்ரயே
ஸ்ராந்தஸ்ய கர்மஸ்வனுவித்தயா தியா
த்வமாவிராஸீ: கில யோக-பாஸ்கர:

லோகஸ்ய—வாழும் உயிரினங்களின்; மித்யா அபிமதே—போலி ஆளுமையால் மயங்கி; அசக்ஷூஷ:—குருடு; சிரம்—நீண்ட காலத்திற்கு; ப்ரசூப்தஸ்ய—தூங்குதல்; தமஸி—இருட்டில்; அநாஸ்ரயே—இருப்பிடமின்றி; ஸ்ராந்தஸ்ய—களைப்புற்று; கர்மஸு—ஜடச் செயல்களிடம்; அனுவித்தயா—பற்றுக் கொண்டு; தியா—அறிவுக்கூர்மையுடன்; த்வம்—நீங்கள்; ஆவிராஸீ:—தோன்றி; கில—உண்மையில்; யோக—யோக முறையின்; பாஸ்கர:—சூரியன்.

என் அன்பு பகவானே, நீங்கள் சூரியனைப் போன்றவர், ஏனெனில் நீங்கள் உயிரினங்களின் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வின் இருளுக்கு ஒளி தருபவர். அவர்களின் அறிவுக்கண்கள் மூடியிருப்பதால் உங்கள் பாதுகாப்பு இன்றி அந்த வீட்டில் நிரந்தரமாக உறங்குகிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் உலகியல் நடவடிக்கைகளின் செயல்கள் மற்றும் எதிர்ச்செயல்களால் போலியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் களைப்படைந்தவர்களாகத் தோன்றுகின்றனர்.

பதம் 3.29.6
மைத்ரேய உவாச
இதி மாதுர்வச: ஸ்லக்ஷ்ணம் ப்ரிதிநந்த்ய மாமுனி:
ஆபபாஷே குரு-ஸ்ரேஷ்ட ப்ரீதஸ்தாம் கருணார்தித:

மைத்ரேய உவாச—மைத்ரேயர் கூறினார்; இதி—இவ்வாறு; மாது:—அவர் அன்னையின்; வச:—சொற்கள்; ஸ்லக்ஷ்ணம்—உயர்குடிப்பிறந்த; ப்ரதிநந்த்ய—வரவேற்றல்; மஹாமுனி:—சிறந்த முனிவர் கபிலர்; ஆபபாஷே—பேசி; குரு—ஸ்ரேஷ்ட—குருக்களில் சிறந்தவரே விதுரரே; ப்ரீத:—மகிழ்ந்து; தாம்—அவளிடம்; கருணா—அன்புடன்; ஆர்தித:—அசைந்து.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: ஓ குருக்களில் சிறந்தவரே, சிறந்த முனிவர் கபிலர் அவர் புகழ்பெற்ற அன்னையின் சொற்களால் மகிழ்ந்து, கருணையால் நெகிழ்ந்து, பின்வருமாறு பேசினார்.

பதம் 3.29.7
ஸ்ரீ-பகவானுவாச
பக்தி-யோகோ பஹூவிதோ மார்கைர்பாமினி பாவ்யதே
ஸ்வபாவ-குண-மார்கேண பும்ஸாம் பாவோ விபித்யதே

ஸ்ரீ பகவான் உவாச—பரம புருஷ பகவான் பதில் கூறினார்; பக்தியோக:—பக்தித் தொண்டு; பஹூவித:—பல்வேறு வகைகள் கொண்ட; மார்கை:—வழிகளுடன்; பாமினி—உயர்குடியைச் சேர்ந்த பெருமாட்டியே; பாவ்யதே—வெளிப்பட்டு; ஸ்வபாவ—இயல்பு; குண—குணங்கள்; மார்கேண—நடத்தைகளில்; பும்ஸாம்—செயற்படுத்துபவர்களின்; பாவ:—தோற்றம்; விபித்யதே—பிரிக்கப்பட்டது.

பரமபுருஷ பகவான் ஆகிய பகவான் கபிலர் பதில் கூறினார்: ஓ உயர்குடிப் பிறந்த பெருமாட்டியே, அனுஷ்டிப்பவரின் வேறுபட்ட குணங்களுக்கேற்ப பல்வேறு வகையான பக்தி நெறிகள் உள்ளன.

பதம் 3.29.8
அபிஸந்தாய யோ ஹிம்ஸாம் தம்பம் மாத்ஸர்யமேவ வா
ஸம்ரம்பீ பிந்-நாக்ருக் பாவம் மயி குர்யாத்ஸ தாமஸ்

அபிஸந்தாய—நோக்கில் கொண்டு; ய:—அவர்; ஹிம்ஸாம்—வன்முறை; தம்பம்—தற்பெருமை; மாத்ஸர்யம்—பொறாமை; ஏவ:—உண்மையில்; வா—அல்லது; ஸம்ரம்பீ—கோபம்; பிந்ந—தனியாக; த்ருக்—அவர் நோக்கு; பாவம்—பக்தித் தொண்டு; மயி—என்னிடம்; குர்யாத்—செய்யலாம்; ஸ—அவர்; தாமஸ:—அறியாமையாகிய குணத்தில்.

பொறாமை, தற்பெருமை, வன்முறை மற்றும் கோபம் இவை உள்ள ஒருவரால் நிறைவேற்றப்படும் பக்தித் தொண்டு இருட்டாகிய (தமோ) குணத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது.

பதம் 3.29.9
விஷயானபிஸந்தாய யச ஐஸ்வர்யமேவ வா
அர்ச்சாதாவர்ச்சயேத்யோ மாம் ப்ருதக்-பாவ: ஸ ராஜஸ:

விஷயான்—புலனுக்கான பொறிகள்; அபிஸந்தாய—குறித்து; யச—புகழ்; ஐஸ்வர்யம்—செல்வ வளம்; ஏவ—உண்மையில்; வா—அல்லது; அர்ச்சா—அதௌ—தெய்வத்தின் வழிபாடு, முதலியன; அர்சயேத்—வழிபடலாம்; ய—அவர்; மா—என்னை; ப்ருதக்—பாவ:—பிரிவினையாளர்; ஸ—அவர்; ராஜஸ:—ராஜஸ குணத்தில்.

மாறுபட்ட சிந்தனையாளரால் கோவிலில், உலக இன்பம், புகழ் பொருள் இவற்றுக்கான நோக்கங்களுடன் செய்யப்படும் தெய்வ வழிபாடு ரஜோ குணத்தில் செலுத்தப்படும் பக்தியாகும்.

பதம் 3.29.10
கர்ம-நிர்ஹாரமுத்திஸ்ய பரஸ்மின் வா ததர்பணம்
யஜேத்யஷ்டவ்ய மிதி வா ப்ருதக் பாவ: ஸ ஸாத்விக:

கர்ம—விளைவு தரும் செயல்கள்; நிர்ஹாரம்—இருந்து அவரை விடுவித்தல்; உத்திஸ்ய—நோக்கத்துடன்; பரஸ்மின்—பரம புருஷ பகவானிடம்; வா—அல்லது; தத்—அர்பணம்—செயல்களின் விளைவை அர்ப்பணித்தல்; யஜேத்—வழிபடலாம்; யஷ்டவ்யம்—வழிப்பட வேண்டிய; இதி—இவ்வாறு; வா—அல்லது; ப்ருதக்—பாவ:—பிரிவினையாளர்; ஸ—அவர்; ஸாத்விக:—ஸத்வ குணத்தில்.

ஒரு பக்தர் பரமபுருஷ பகவானை வழிபட்டு செயல் விளைவுகளின் மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு தமது செயல்களின் பயனை அர்ப்பணிக்கும் பொழுது, அவரது பக்தி ஸத்வ குணத்தில் இருக்கும்.

பதங்கள் 3.29.11 – 3.29.12
மத்-குண-ஸ்ருதி-மாத்ரேண மயி ஸர்வ-குஹாசயே
மனோ-கதிரவிச்சிந்நா யதா கங்காம்பஸோம்புதௌ

லக்ஷணம் பக்தி-யோகஸ்ய நிர்குணஸ்ய ஹ்யுதாஹ்ருதம்
அஹைதுக்யவ்யவஹிதா யா பக்தி: புருஷோத்தமே:

மத்—என்னுடைய; குண—குணங்கள்; ஸ்ருதி—கேட்பதால்; மாத்ரேண—அப்படியே; மயி—என்னிடம்; ஸர்வ—குஹா—அசயே—எல்லாருடைய மனதிலும் உறையும்; மன: கதி:—மனம் செல்லும் வழி; அவிச்சிந்நா—தொடர்ச்சி; யதா—போல; கங்கா—கங்கையின்; அம்பஸ—நீரின்; அம்புதௌ—கடலிடம்; லக்ஷணம்—வெளிப்பாடு; பக்தி யோகஸ்ய—பக்தித் தொண்டின்; நிர்குணஸ்ய—கலப்படமற்ற; ஹி—உண்மையில்; உதாஹ்ருதம்—காட்டப்பட்டு; அஹைதுகீ—காரணமற்ற; அவ்யவஹிதா—பிரிக்கப்படாது; யா—எந்த; பக்தி:—பக்தித் தொண்டு; புருஷ—உத்தமே:—பரம புருஷ பகவானிடம்.

எல்லாருடைய மனதிலும் குடியிருக்கும் பரமபுருஷ பகவானின் குணங்கள் மற்றும் உன்னதமான பெயரையும் கேட்டதும் ஒருவருடைய மனம் உடனே கவரப்படும் பொழுது, கலப்படமற்ற பக்தித் தொண்டின் வெளிப்பாடு காட்டப்படுகிறது. கங்கையின் நீர் இயல்பாகவே கடலை நோக்கிப் பாய்வது போல, அந்தப் பக்திப் பேரின்பம் எந்த பூவுலகச் சூழலாலும் தடைப்படாமல், பகவானை நோக்கிப் பாய்கிறது.

பதம் 3.29.13
ஸாலோக்ய-ஸார்ஷ்டி-ஸாமீப்ய- ஸாரூப்பைகத்வமப்யுத
தீயமானம் ந க்ருஹ்ருணந்தி வினா மத்-ஸேவனம் ஜனா:

ஸாலோக்ய—அதே கோளில் வசிக்கும்; ஸார்ஷ்டி—அதே செல்வவளம் கொண்டு; ஸாமீப்ய—நெருங்கிய தோழராக; ஸாரூப்ய—உடல் தோற்றங்கள் கொண்டு; ஏகத்வம்—ஒருமை; அபி—உடன்; உத—ஆயினும்; தீயமானம்—அர்ப்பணிக்கப்பட்டு; ந—இல்லை; க்ருஹ்ணந்தி—ஏற்றுக்கொள்; வினா—இல்லாமல்; மத்—என்னுடைய; ஸேவனம்—பக்தித் தொண்டு; ஜனா:—தூய பக்தர்கள்.

ஒரு தூய பக்தர்-ஸாலோக்யம், ஸார்ஷ்டி ஸாமீப்யம், ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரமபுருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட, இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

பதம் 3.29.14
ஸ ஏவ பக்தி-யோகாக்ய ஆத்யந்திக உதாஹ்ருத:
யேனாதிவ்ரஜ்ய த்ரி-குணம் மத்-பாவாயோபபத்யதே

ஸ—இந்த; ஏவ—உண்மையில்; பக்தி—யோக—பக்தித் தொண்டு; ஆக்ய—அழைக்கப்படுகிறது; ஆத்யந்திக—மிகவுயர்ந்த மேடை; உதாஹ்ருத:—விளக்கப்பட்டுள்ளது; யேன—அதனால்; அதிவ்ரஜ்ய—மிஞ்சி நிற்றல்; த்ரி—குணம்—ஜட இயற்கையின் மூன்று குணங்கள்; மத்பாவாய:—என் எல்லை கடந்த நிலைக்கு; உபபத்யதே—ஒருவர் அடைகிறார்.

நான் விளக்கியது போல, பக்தித் தொண்டின் மிகவுயர்ந்த நிலையை அடைவதால், ஒருவர் ஜட இயற்கையின் மூன்று குணங்களின் பாதிப்பை மிஞ்ச முடியும். பகவானைப்போல, உன்னதமான நிலையில் அமையமுடியும்.

பதம் 3.29.15
நிஷேவிதேனாமித்தேன ஸ்வ-தர்மேண மஹீயஸா
க்ரியா-யோகேன சஸ்தேன நாதிஹிம்ஸ்ரேண நித்யச:

நிஷேவிதேன—நிறைவேற்றி; அநிமித்தேன—விளைவில் பற்றில்லாது இருத்தல்; ஸ்வ—தர்மேண—ஒருவரின் விதிக்கப்பட்ட கடமைகளால்; மஹீயஸா—புகழ்; க்ரியாயோகேன—பக்திச் செயல்களால்; சஸ்தேன—மங்களமான; ந—இல்லாமல்; அதிஹிம்ஸ்ரேண—அதிகமான வன்முறை; நித்யச:—ஒழுங்காக.

ஒரு பக்தர் உலகியல் லாபங்களைக் கருதாமல், புகழ் பெற்ற, தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யவேண்டும். அதிக வன்முறையின்றி, ஒருவர் ஒழுங்காக தமது பக்திச் செயல்களை நிகழ்த்த வேண்டும்.

பதம் 3.29.16
மத்-திஷ்ண்ய-தர்சனஸ்-பர்ச பூஜா-ஸ்துத்ய பிவந்தனை:
பூதேஷு மத்-பாவனயா ஸத்வேனாஸங்கமேன ச

மத்—என்னுடைய; திஷ்ண்ய—சிலை; தர்சன—பார்த்தல்; ஸ்பர்ச—தொடுதல்; பூஜா—வழிபடுதல்; ஸ்துதி—வேண்டி; அபிவந்தனை:—வணக்கங்களை அர்ப்பணிப்பதால்; பூதேஷு—எல்லா வாழும் உயிரினங்களில்; மத்—என்னிடம்; பாவனயா—எண்ணத்துடன்; ஸத்வேன—ஸத்வ குணத்தால்; அஸங்கமேன—பற்றின்மையுடன்; ச—மற்றும்.

பக்தர் ஒழுங்காக என் சிலைகளைக் கோவிலில் பார்க்க வேண்டும். என் தாமரைத் திருவடிகளைத் தொடவேண்டும் வணங்கத் தகுந்த கொடி, வேண்டுதல்களை அர்ப்பணிக்க வேண்டும். அவர் துறவின் ஆத்மாவில், ஸத்வ குணத்திலிருந்து, எல்லா உயிரினத்தையும் ஆன்மீகமானதாகப் பார்க்கவேண்டும்.

பதம் 3.29.17
மஹதாம் பஹு-மானேன தீனானாமனுகம்பயா
மைத்ர்யா சைவாத்மதுல்யேஷுயமேன- நியமேன ச

மஹதாம்—சிறந்த ஆத்மாக்களுக்கு; பஹு—மானேன—மிகுந்த மரியாதையுடன்; தீனானாம்—ஏழைகளுக்கு; அனுகம்பயா—கருணையுடன்; மைத்ர்யா—தோழமையுடன்; ச—கூட; ஏவ—நிச்சயமாக; ஆத்ம—துல்யேஷு—சமமாக இருப்பவர்களுக்கு; யமேன—புலன்களில் கட்டுப்பாட்டுடன்; நியமேன—ஒழுங்குடன்; ச—மற்றும்.

தூய பக்தர் ஆன்மீக குரு மற்றும் ஆச்சார்யர்களுக்கு மிகச் சிறந்த மதிப்புத் தருவதன் மூலம் பக்தித் தொண்டு புரியவேண்டும். அவர் ஏழைகளிடம் கருணையுள்ளவராய் இருக்க வேண்டும், அவருக்குச் சமமானவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவரது எல்லாச் செயல்களும் ஒழுங்கு மற்றும் புலன்களின் கட்டுப்பாட்டுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

பதம் 3.29.18
ஆத்யாத்மிகானுஸ்ரவணான் நாம-ஸங்கீர்தனாச்சமே ஆர்ஜவேனார்யஸங்கேன நிரஹங்க்ரியயா ததா

ஆத்யாத்மிக—அகநிலை விஷயங்கள்; அனுஸ்ரவணாத்—கேட்பதிலிருந்து; நாம ஸங்கீர்தனாத்—புனிதப் பெயரை உச்சரிப்பதிலிருந்து; ச—மற்றும்; மே—என்னுடைய; ஆர்ஜவேன—நேரான நடத்தையுடன்; ஆர்ய—ஸங்கேன—புனிதர்களின் தொடர்புடன்; நிரஹங்க்ரியயா—போலி ஆளுமையின்றி; ததா—இவ்வாறு.

ஒரு பக்தர் எப்போதும் ஆன்மீக விஷயங்களைப் பற்றிக் கேட்க முயற்சி செய்ய வேண்டும். எப்போதும் பகவானின் புனிதப் பெயரை உச்சரிப்பதில் தன் நேரத்தைப் பயன்படுத்தவேண்டும். அவரது நடத்தை எப்போதும் நேரானதாக, எளிமையாக இருக்கவேண்டும், அவர் பொறாமை அற்றவராக, ஆனால் எல்லாரிடமும் நட்புடன் இருந்த போதிலும், அவர் ஆன்மீகத்தில் முன்னேறாதவர்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும்.

பதம் 3.29.19
மத்-தர்மணோ குணைரேதை: பரிஸம்சுத்த ஆசய: புருஷஸ்யாஞ்ஸாம்யேதி ஸ்ருத-மாத்ர-குணம்ஹிமாம்

மத்தர்மேண:—என் பக்தரின்; குணை:—குண இயல்புகளுடன்; ஏதை—இந்த; பரிஸம்சுத்த—முழுதும் தூய்மையடைந்து; ஆசய:—உணர்வு நிலை; புருஷஸ்ய—ஒரு மனிதரின்; ஆஞ்ஜஸா—உடனடியாக; அப்யேதி—அணுகுதல்; ஸ்ருத—கேட்பதால்; மாத்ர—எளிமையாக; குணம்—தன்மை; ஹி—நிச்சயமாக; மாம்—என்னை.

ஒருவர் இந்த மனோவாக்குக் காயம் கடந்த இயல்புகளுடன் முழுதும் தகுதிபெற்று அவரது உணர்வு நிலை முழுதும் தூய்மையடையும் பொழுது, அவர் என் பெயரைக் கேட்பதன் மூலமே அல்லது என் தத்துவ குணங்களைக் கேட்பதன் மூலமே கவரப்படுகிறார்.

பதம் 3.29.20
யதா வாத-ரதோ க்ராணாம் ஆவ்ருங்க்தே கந்த ஆசயாத்
ஏவம் யோக-ரதம் சேத ஆத்மானம் அவிகாரியத்

யதா—போல; வாத—காற்றின்; ரத:—தேர்; க்ராணாம்—முகரும் புலன்; ஆவ்ருங்க்தே—பிடிகள்; கந்த—நறுமணம்; ஆசயாத்—மூலத்திலிருந்து; ஏவம்—அதுபோல; யோகரதம்—பக்தித் தொண்டில் ஈடுபட்டு; சேத—உணர்வு நிலை; ஆத்மானம்—பரமாத்மா; அவிகாரி—மாறாத; யத்—எந்த.

காற்றாகிய தேர் நறுமணத்தை அதன் மூலத்திலிருந்து தாங்கி வந்து, உடனே முகரும் புலனைக் கவர்வதுபோல் பக்தித் தொண்டில், கிருஷ்ண உணர்வில் தொடர்ந்து ஈடுபடும் ஒருவர், எல்லா இடத்திலும் சமமாக இருக்கும் முழுமுதற் கடவுளை அடைய முடியும்.

பதம் 3.29.21
அஹம் ஸர்வேஷு பூதேஷு பூதாத்மாவஸ்தித: ஸதா
தமவக்ஞாய மாம் மர்த்ய: குருதேர்சாவிடம்பனம்

அஹம்—நான்; ஸர்வேஷு—எல்லாவற்றில்; பூதேஷு—வாழும் உயிரினங்கள்; பூத—ஆத்மா—எல்லா உயிரினங்களிலும் உள்ள பரமாத்மா; அவஸ்தித:—அமைந்து; ஸதா—எப்போதும்; தம்—அந்த பரமாத்மா; அவக்ஞாய—புறக்கணித்தல்; மாம்—என்னை; மர்த்ய:—மாளும் மனிதன்; குருதே—நிகழ்த்தும்; அர்ச்சா—தெய்வ வழிபாட்டின்; விடம்பனம்—போலியானது.

நான் பரமாத்மாவாக ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கிறேன். எவராவது எங்கும் அந்தப் பரமாத்மாவைப் புறக்கணித்து அல்லது மதிக்காமல், கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபடுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அது போலியாகும்.

பதம் 3.29.22
யோ மாம் ஸர்வேஷு பூதேஷு ஸந்தமாத்மான மீஸ்வரம்
ஹித்வார்ச்சாம் பஜதே மௌட்யாத் பஸ்மந்யேவ சுஹோதிஸ

ய:—யார் ஒருவர்; மாம்—என்னை; ஸர்வேஷு—எல்லாவற்றில்; பூதேஷு—வாழும் உயிரினங்கள்; ஸந்தம்—இருந்து; ஆத்மானம்—பரமாத்மா; ஈஸ்வரம்—பகவான்; ஹித்வா—புறக்கணித்தல்; அர்ச்சாம்—தெய்வம்; பஜதே—வழிபடுகிறார்; மௌட்யாத்—அறியாமையால்; பஸ்மனி—சாம்பலாக; ஏவ—மட்டும்; சூஹோதி—படையல்கள் தருதல்; ஸ—அவர்.

கோவில்களில் பகவானை தெய்வமாக வழிபடும் ஒருவர், பகவான் பரமாத்மாவாக ஒவ்வொரு உயிரினத்தின் மனத்திலும் அமைந்திருக்கிறார் என்று அறியவில்லையாயின் அவர் அறியாமையில் இருக்கிறார் என்று பொருள். அவர் படையல்களைச் சாம்பலில் அர்ப்பணிப்பவருடன் ஒப்பிடப்படுகிறார்.

பதம் 3.29.23
த்விஷத: பர-காயே மாம் மானினோ பிந்ந-தர்சின:
பூதேஷு பத்த-வைரஸ்ய ந மன: சாந்திம்ருச்சதி

த்விஷத:—பொறாமைப்படுபவரின்; பர—காயே—மற்றொரு உடலை நோக்கி; மாம்—என்னிடம்; மானின:—மதிப்புத் தருதல்; பிந்ந—தர்சின:—பிரிவினையாளரின்; பூதேஷு—வாழும் உயிரினங்களை நோக்கி; பத்த—வைரஸ்ய—பகைமையுள்ள ஒருவரின்; ந—இல்லை; மன:—மனம்; சாந்திம்—அமைதி; ருச்சதி—அடைதல்.

எனக்கு மதிப்புத்தரும் ஒருவர், மற்றவரின் உடல்களைக் கண்டு பொறாமைப்பட்டால், வேறுபாட்டு உணர்ச்சியோடு இருந்தால் அவர் ஒருபோதும் மன அமைதி பெறுவதில்லை, ஏனெனில் அவர் பிற உயிரினங்களிடத்தில் பகைமையுணர்ச்சி உடையவர்.

பதம் 3.29.24
அஹம் உச்சாவசைர் த்ரவ்யை: க்ரியயோத்பந்நயானகே
நைவ துஷ்யேர்சிதோர் சாயாம் பூத-க்ராமாவமானின:

அஹம்—நான்; உச்சாவசை:—பல வகைகளுடன்; த்ரவ்யை:—கொடிகள்; க்ரியயா—மதச் சடங்குகளால்; உத்பந்நயா—நிறைவேற்றி; அனகே—ஓ பாவமற்ற அன்னையே; ந—இல்லை; ஏவ—நிச்சயமாக; துஷ்யே—மகிழ்ந்து; அர்சித—வணங்கி; அர்சாயாம்—தெய்வ வடிவில்; பூதக்ராம—மற்ற வாழும் உயிரினங்களிடம்; அவமானின:—அவமதிப்பு நிறைந்தவருடன்.

என் அன்பு அன்னையே, அவர் முறையான சடங்குகள், கொடிகளுடன் வழிபட்டாலும், எல்லா உயிரினங்களிலும் யான் பரவி இருப்பதை அறியாதவர், கோவிலில் தெய்வங்களின் வழிபாட்டால் ஒருபோதும் என்னை மகிழ்விப்பதில்லை.

பதம் 3.29.25
அர்ச்சாதாவர்சயோத்தாவத் ஈச்வரம் மாம் ஸ்வ-கர்மக்ருத்
யாவந்ந வேத ஸ்வஹ்ருதி ஸர்வ-பூதேஷ்வவஸ்திதம்

அர்ச்சா—அதௌ—தெய்வ வழிபாட்டுடன் தொடங்குதல்; அர்சயேத்—ஒருவர் வணங்க வேண்டும்; தாவத்—நீண்ட காலம்; ஈச்வரம்—பரம புருஷ பகவான்; மாம்—என்னை; ஸ்வ—அவருடைய; கர்ம—விதிக்கப்பட்ட கடமைகள்; க்ருத—நிகழ்த்துதல்; யாவத்—அதுவரை; ந—இல்லை; வேத—அவர் உணர்வார்; ஸ்வ—ஹ்ருதி—அவர் மனதில்; ஸர்வ—பூதேஷு—எல்லா உயிரினங்களில்; அவஸ்திதம்—அமைந்து.

தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்து கொண்டு ஒருவர் இறைவன் இருப்பதைத் தன் மனதில் உணர்ந்து உயிரனங்களின் மனதிலும் உணர்த்தும் வரை பரமபுருஷ பகவானின் தெய்வ நிலையை வழிபடவேண்டும்.

பதம் 3.29.26
ஆத்மனஸ்ச பரஸ்யாபி ய கரோத்யந்தரோதரம்
தஸ்ய பிந்ந-த்ருசோ ம்ருத்யுர் விததே பயமுல்பணம்

ஆத்மன:—அவரின்; ச—மற்றும்; பரஸ்ய—மற்றவரின்; அபி—கூட; ய—யார்; கரோதி—வேறுபாடு கண்டறிதல்; அந்தரா—இடையில்; உதரம்—உடல்; தஸ்ய—அவரின்; பிந்ந—த்ருச—வேறுபட்ட பார்வை கொண்டு; ம்ருத்யு—மரணம் போல; விததே—நான் விளைவிக்கிறேன்; பயம்—அச்சம்; உல்பணம்—சிறந்தது.

தனக்கும் பிற உயிரனங்களுக்கும் இடையில் வேறுபாடான மனநிலை கொண்டு பிறவற்றைக் கீழாக எண்ணுபவர்களிடம் மரணமாகிய ஒளிவீசும் நெருப்பு போல நான் மிகுந்த அச்சத்தைத் தோற்றுவிக்கிறேன்.

பதம் 3.29.27
அத மாம் ஸர்வ-பூதேஷு பூதாத்மானம் க்ருதாலயம்
அர்ஹயேத்தான -மானாப்யாம் மைத்ரயா பிந்நேன சக்ஷுஷா

அத—அதனால்; மாம்—என்னை; ஸர்வ—பூதேசு—எல்லா உயிரினங்களில்; பூதாத்மானம்—எல்லா உயிரினங்களில் உள்ள ஆத்மா; க்ருத—ஆலயம்; தங்கி—வாழ்தல்; அர்ஹயேத்—ஒருவர் அமைதிப்படுத்த வேண்டும்; தானமானாப்யாம்—தானம் மற்றும் மரியாதை மூலம்; மைத்ரயா—நட்பின் மூலம்; அபிந்நேன—சமம்; சக்ஷுஷா—பார்ப்பதன் மூலம்.

அதனால், தானமாக வழங்கக்கூடிய பரிசுகள் மற்றும் மதிப்பு மூலமும், நட்பான நடத்தை மூலமும் மற்றும் எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பதன் மூலமும், ஒருவர் எல்லா உயிரினங்களிலும் அவற்றின் ஆத்மாவாக உறையும் என்னை அமைதிப்படுத்த வேண்டும்.

பதம் 3.29.28
ஜீவா: ஸ்ரேஷ்டா ஹ்யஜீவானாம் தத ப்ராண-ப்ருத: சுபே
தத: ஸ-சித்தா: ப்ரவராஸ் ததஸ்சேந்த்ரிய-வ்ருத்தய:

ஜீவா:—வாழும் உயிரினங்கள்; ஸ்ரேஷ்டா—மேம்பட்ட; ஹி—உண்மையில்; அஜீவானாம்—உயிரற்ற பொருட்களை விட; தத—அவர்களை விட; ப்ராண—ப்ருத:—வாழும் அடையாளங்களுடன் உள்ள உயிரினங்கள்; சுபே—ஓ ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே; தத:—அவர்களை விட; ஸசித்தா:—வளர்ந்த உணர்வு நிலையுடன் கூடிய உயிரினங்கள்; ப்ரவரா:—மேம்பட்ட; தத—அவர்களைவிட; ச—மற்றும்; இந்த்ரிய—வ்ருத்தய:—புலனுணர்வுடன் உள்ளவர்கள்.

ஓ ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, உயிரினங்கள் உயிரற்ற பொருட்களை விட மேலானவை, உயிர் இருப்பதற்கான அடையாளங்களை வெளிப்படுத்தும் உயிரினங்கள் மேலும் மேம்பட்டவை. வளர்ச்சியடைந்த உணர்வு நிலையுடன் உள்ள விலங்குகள் அவற்றை விட மேம்பட்டவை, புலனுணர்வை வளர்த்துக் கொண்டவை இன்னும் மேம்பட்டவை.

பதம் 3.29.29
தத்ராபி ஸ்பர்ச -வேதிப்ய: ப்ரவரா ரஸ-வேதின:
தேப்யோ கந்தவித ஸ்ரேஷ்டாஸ் தத: சப்த-விதோ வரா:

தத்ர—அவற்றில்; அபி—மேலும்; ஸ்பர்ச வேதிப்ய—அந்த உணர்ந்து தொடுவதை விட; ப்ரவரா—மேம்பட்ட; ரஸ வேதின—அந்த உணர்ந்த சுவை; தேப்ய—அவற்றைவிட; கந்த—வித—அந்த உணர்ந்த மணம்; ஸ்ரேஷ்டா—மேம்பட்ட; தத—அவ்றறைவிட; சப்தவித—அந்த உணரும் ஒலி; வரா—மேம்பட்ட.

புலனுணர்வை வளர்த்துக் கொண்ட உயிரினங்களில், சுவைப் புலனை வளர்த்துக் கொண்டவர்கள் தொடு புலனை மட்டும் வளர்த்துக் கொண்டவர்களை விட மேலானவர்கள். அவர்களைவிட முகரும் புலனை வளர்த்துக் கொண்டவர்கள் மேலனாவர்கள், கேட்கும் புலனை வளர்த்துக் கொண்டவர்கள் இன்னும் மேலானவர்கள்.

பதம் 3.29.30
ரூப-பேதவித-ஸ்தத்ர ததஸ்சோபய -தோதத:
தேஷாம் பஹு-பதா ஸ்ரேஷ்டாஸ் சதுஷ்பாதஸ்ததோ த்வி-பாத்

ரூப பேத—வடிவத்தின் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள்; வித—உற்றுநோக்கி; உணர்பவர்கள்; தத்ர—அவர்களைவிட; தத—அவர்களைவிட; ச—மற்றும்; உபயத—இரு தாடைகளில்; தத—பற்களை உடையவர்கள்; தேஷாம்—அவர்களின்; பகு—பதா—பல கால்கள் உடையவர்கள்; ஸ்ரேஷ்டா—மேம்பட்ட; சது: பாத:—நான்கு கால்களுடைய; தத:—அவர்களை விட; த்விபாத்—இரு கால்கள் உடைய.

ஒலியை உற்றுணரக் கூடிய உயிரினங்களை விட மேம்பட்டவர்கள் பொருளுக்கும் மற்றொன்றிற்கும் இடையே வேறுபாடு கண்டுபிடிப்பவர்கள் ஆவர். அவர்களைவிட மேம்பட்டவர்கள் மேல் வரிசை கீழ்வரிசைப் பற்கள் உடையவர்களாவர், அவர்களை விட மேலும் மேம்பட்டவர்கள் பல கால்களை உடையவர்களாவர். அவர்களைவிட நான்கு கால்களை உடையவர்கள் மேம்பட்டவர்கள், மனித உயிர்கள் இன்னும் மேம்பட்டவை.

பதம் 3.29.31
ததோ வர்ணாஸ்ச சத்வாரஸ் தேஷாம் ப்ராம்மண உத்தம ப்ராம்மணேஷ்வபி வேத-க்ஞோ ஹ்யர்தக்-ஞோப்யதிகஸ்தத

தத—அவற்றில்; வர்ணா—பிரிவுகள்; ச—மற்றும்; சத்வார—நான்கு; தேஷாம்—அவற்றின்; ப்ராம்மண—ஒரு பிராம்மணர்; உத்தம்—சிறந்தது; ப்ராம்மணேஷு—ப்ராம்மணர்களில், அபி—மேலும்; வேத—வேதங்கள்; க்ஞ—தெரிந்து ஒருவர்; ஹி—நிச்சயமாக; அர்த்த—நோக்கம்; க்ஞா—தெரிந்தவர்; அப்யதிக—மேம்பட்ட; தத—அவரை விட.

மனித உயிரினங்களில் தகுதி மற்றும் வேலைக்கு ஏற்றபடி பிரிக்கப்பட்ட சமுதாயம் சிறந்தது, அந்தச் சமுதாயத்தில் பிராம்மணர்களாக அமர்த்தப்பட்ட புத்திசாலி மனிதர்கள் சிறந்தவர்கள். பிராம்மணர்களில் வேதங்களைப் படித்தவர்கள் சிறந்தவர்கள், வேதங்களைப் படித்த பிராம்மணர்களிலும் வேதத்தின் உண்மையான பொருளுரையை அறிந்தவர் சிறந்தவர்.

பதம் 3.29.32
அர்த்த-க்ஞாத்ஸம் -சயச்சேத்தா தத: ஸ்ரேயான் ஸ்வகர்ம க்ருத்
முக்த-ஸங்கஸ்ததோ பூயான் அதோக்தா தர்மமாத்மன:

அர்த்தக்ஞாத்—வேதங்களில் நோக்கத்தை அறிந்தவரைவிட; ஸம்சய—சந்தேகங்கள்; சேத்தா—அறுத்தெறிபவர்; தத—அவரைவிட; ஸ்ரேயான்—மேம்பட்ட; ஸ்வ—கர்ம—அவருடைய விதிக்கப்பட்ட கடமைகள்; க்ருத்—நிறைவேற்றுபவர்; முக்த—ஸங்க—ஜடத் தொடர்பிலிருந்து விடுபட்டு; தத—அவரைவிட; பூயான்—மேம்பட்ட; அதோக்தா—நிறைவேற்றாமல்; தர்மம்—பக்தித் தொண்டு; ஆத்மன—அவருக்கு.

வேதங்களின் நோக்கத்தை அறிந்த பிராம்மணர்களைவிட எல்லாச் சந்தேகங்களையும் சிதற அடிப்பவர் மேலானவர், பிராம்மணக் கொள்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுபவர் அவரை விட மேலானவர். எல்லா ஜட மாசிலிருந்தும் விடுபட்டவர் அவரை விட மேலானவர் அவரை விட மேலானவர் பிரதிபலனை எதிர்ப்பாக்காமல் பக்தித் தொண்டை நிறைவேற்றும் தூய பக்தர் ஆவார்.

பதம் 3.29.33
தஸ்மாந்மய்யர்பிதாசேஷ- க்ரியார்தாத்மா நிரந்தர:
மய்யர்பிதாத்மன: பும்ஸோ மயி ஸந்யஸ்த-கர்மண:
ந பச்யாமி பரம் பூதமகர்து: ஸம-தர்சனாத்:

தஸ்மாத்—அவரைவிட; மயி—என்னிடம்; அர்பித—அர்ப்பணிக்கப்பட்டது; அசேஷ—எல்லா; க்ரியா—செயல்கள்; அர்த்த—செல்வம்; ஆத்மா—வாழ்க்கை; நிரந்தர—ஓய்வின்றி; மயி—என்னிடம்; அர்பித—அர்ப்பணிக்கப்பட்டது; ஆத்மன—அவர் மனம்; பும்ஸ—அவரை விட; மயி—என்னிடம்; ஸந்ந்யஸ்த—அர்ப்பணித்தல்; கர்மண—அவர் செயல்கள்; ந—இல்லை; பச்யாமி—நான் பார்க்கிறேன்; பரம்—சிறந்தது; பூதம்—வாழும் உயிரினம்; அகர்து—உரிமை இன்றி; ஸம—அதே; தர்சனாத்—அவரது நோக்கு.

அதனால் என்னைத் தவிர வெளியில் எதிலும் ஆர்வமில்லாத தனியொருவரை விடச் சிறந்தவரை நான் காணவில்லை. அவர் அதனால் தன் வாழ்நாள் முழுவதும், ஓய்ச்சல் ஒழிவின்றி என்னிடம் ஈடுபட்டு தன் செயல்களை எல்லாம் அர்ப்பணிக்கிறார்.

பதம் 3.29.34
மனஸைதானி பூதானி ப்ரணமேத்பஹு- மானயன்
ஈச்வரோ ஜீவ-கலயா ப்ரவிஷ்டோ பகவானிதி

மனஸா—மனத்துடன்; ஏதானி—இவற்றிற்கு; பூதானி—பூதலத்தில் வாழும் உயிரினங்கள்; ப்ரணமேத்—அவர் மதிப்பு தருகிறார்; பஹு மானயன்—மரியாதை காட்டுதல்; ஈஸ்வர—அதிகாரி; ஜீவ—உயிரினங்களின்; கலயா—பரமாத்மாவாக அவர் விரிவால்; ப்ரவிஷ்ட—நுழைந்து; பகவான்—பரம புருஷ பகவான்; இதி—இவ்வாறு.

அந்த முழுமையான பக்தர் எல்லா வாழும் உயிரினத்திற்கும் மதிப்புத் தருகிறார். ஏனென்றால் பரமபுருஷ பகவான், பரமாத்மாவாக, அல்லது அதிகாரியாக எல்லா உயிரினத்தின் உடலிலும் ஊடுருவியுள்ளார் என்று உறுதியாகக் கூறி உள்ளார்.

பதம் 3.29.35
பக்தி-யோகஸ்ச யோகஸ்ச மயா மானவ்யுதீரித:
யயோரேகதரேணைவ புருஷ: புருஷம் வ்ரஜேத்

பக்தி-யோக—பக்தித் தொண்டு; ச—மற்றும்; யோக—அறிவார்ந்த யோகம்; ச—உடன்; மயா—என்னால்; மானவி—ஓ மனுவின் மகளே; உதீரித—வர்ணிக்கப்பட்டு; யயோ—அதில் இரண்டு; ஏகதரேண—ஏதாவ தொன்றால்; ஏவ—தனியாக; புருஷ—ஒருவர்; புருஷம்—பகவான்; வ்ரஜேத்—அடைய முடியும்.

என் அன்புத் தாயே, ஓ மனு மகளே, பக்தித் தொண்டையும், மாய யோக அறிவியலையும் இப்படிப் பிரயோகிக்கிற ஒரு பக்தரே, அந்த பக்தித் தொண்டினால் தான் பரம புருஷனின் இருப்பிடத்தை அடைய முடியும்.

பதம் 3.29.36
ஏதத் பகவதோ ரூபம் ப்ரம்மண: பரமாத்மன:
பரம் ப்ரதானம் புருஷம் தைவம் கர்ம-விசேஷ்டிதம்

ஏதத்—இந்த; பகவத—பரம புருஷ பகவானின்; ரூபம்—வடிவம்; ப்ரம்மண—பிரம்மனின்; பரம ஆத்மன—பரமாத்மா; பரம்—எல்லை கடந்த; ப்ரதானம்—தலைமை; புருஷம்—தனியொருவர்; தைவம்—புனிதமானது; கர்மவிசேஷ்டிதம்—அவர் செயல்கள்.

தனிப்பட்ட ஆத்மா அணுக வேண்டிய இந்தப் புருஷர், பிரம்மன் மற்றும் பரமாத்மா என்று அறியப்படும் பரமபுருஷ பகவானின் நிலையான வடிவமாகும். அவர் உன்னதமான தலைவர் (பரமன்) அவரது எல்லாச் செயல்களும் புனிதமானவை.

பதம் 3.29.37
ரூப-பேதாஸ்பதம் திவ்யம் கால இத்யபிதீயதே
பூதானாம் மஹதா-தீனாம் யதோ பிந்ந-த்ருஸாம் பயம்

ரூபபேத—வடிவங்களின் மாற்றங்களின்; ஆஸ்பதம்—காரணம்; திவ்யம்—தெய்வீகம்; கால—காலம்; இதி—இவ்வாறு; அபிதீயதே—அறியப்பட்டது; பூதானாம்—வாழும் உயிரினங்களின்; மஹத் ஆதீனாம்—பகவான் பிரம்மாவிடம் தொடங்கி; யத—அதன் காரணமாக; பிந்நத்ருசாம்—தனிப்பட்ட நோக்குடன்; பயம்—அச்சம்.

பல்வேறு பருவுடல் வெளிப்பாடுகளின் மாற்றத்திற்குக் காரணமாகிய காலக் கூறு பரமபுருஷபகவானின் மற்றொரு அம்சமாகும். காலமானது அதே பரமபுருஷ பகவான் தான் என்று அறியாதவர் காலக் கூற்றுக்குப் பயப்படுகிறார்.

பதம் 3.29.38
யோந்த ப்ரவிச்ய பூதானி பூதைரத்யகிலாஸ்ரய:
ஸ விஷ்ண்வாக்-யோதியஞோ ஸௌ கால: கலயதாம் ப்ரபு:

ய—அவர்; அந்த—உள்ளே; ப்ரவிச்ய—நுழைதல்; பூதானி—வாழும் உயிரினங்கள்; பூதை—வாழும் உயிரினங்களால்; அத்தி—நிர்மூலமாக்கி; அகில—ஒவ்வொருவரின்; ஆஸ்ரய—துணை; ஸ—அவர்; விஷ்ணு; விஷ்ணு—ஆக்ய—பெயரிடப்பட்ட; அதியக்ஞா—எல்லா வேள்விகளையும் அனுபவிப்பவர்; அஸௌ—அந்த; கால—காலக்கூறு; கலயதாம்—எல்லாத் தலைவர்களின்; ப்ரபு—தலைவர்.

எல்லா வேள்விகளையும் அனுபவிப்பவராகிய பகவான் விஷ்ணு, பரமபருஷ பகவானே காலக் கூறாவார். அவரே எல்லாத் தலைவர்களின் தலைவர். அவர் எல்லாருடைய மனத்திலும் ஊடுருவிச் செல்கிறார். அவர் எல்லாருக்கும் துணைவர், அவர் எல்லா உயிரினமும் மற்றொன்றால் நிர்மூலமாக்கப்படுவதற்குக் காரணமாகிறார்.

பதம் 3.29.39
நா சாஸ்ய கஸ்சித்தயிதோ நத்வேஷ்யோ நச பாந்தவ: ஆவிசத்யப்ரமத்தோ ஸௌ ப்ரமத்தம் ஜனமந்தக்-ருத்

ந—இல்லை; ச—மற்றும்; அஸ்ய—பரம புருஷ பகவானின்; கஸ்சித்—யாரும்; தயித:—அன்பான; ந—இல்லை; த்வேஷ்ய—பகைவன்; ந—இல்லை; ச—மற்றும்; பாந்தவ—நண்பர்; ஆவிசதி—அணுகி; அப்ரமத்த—கவனமுடன்; அஸௌ—அவர்; ப்ரமத்தம்—கவனமின்றி; ஜனம்—மக்கள்; அந்தக்ருத்—அழிப்பவர்.

பரமபுருஷ பகவானுக்கு மிக அன்பானவர் என்று யாருமில்லை, யாரும் அவருக்கு எதிரியோ அல்லது நண்பனோ இல்லை. ஆனால் அவர் தன்னை மறக்காதிருப்பவர்களுக்குத் தூண்டுதலைத் தந்து தன்னை மறப்பவர்களை அழிக்கின்றார்.

பதம் 3.29.40
யத் -பயாத்வாதி வாதோயம் சூர்யஸ்தபதி யத்-பயாத்
யத்-பயாத்வர்ஷதே தேவோ பக-ணோ பாதி யத்-பயாத்

யத்—யாருடைய (பரம புருஷ பகவான்); பயாத்—பயத்தினால்; வாதி—வீசுதல்; வாத:—காற்று; அயம்—இந்த; சூர்ய:—கதிரவன்; தபதி—ஒளிவீசி; யத்—யாருடைய; பயாத்—பயத்தால்; யத்—யாருடைய; பயாத்—பயத்தால்; வர்ஷதே—மழையை அனுப்புகிறது; தேவ:—மழைக் கடவுள்; ப—கண:—மேலுலகக் கோளங்களின் கூட்டம்; பாதி—ஒளி; யத்—யாருடைய; பயாத்—பயத்தால்.

பரமபுருஷ பகவானிடம் கொண்ட அச்சத்தால் காற்று வீசுகிறது, அவரிடம் கொண்ட பயத்தால் கதிரவன் ஒளி வீசிகிறது, அவரிடம் கொண்ட பயத்தால் மழை பொழிகிறது, அவரிடம் கொண்ட பயத்தால் மேலுலகக் கோளங்கள் தங்கள் ஒளியைச் சிந்துகின்றன.

பதம் 3.29.41
யத்வனஸ்பதயோ பீதா லதாஸ்சௌஷதிபி: ஸஹ
ஸ்வே ஸ்வே காலேபிக்ருஹ்ணந்தி புஷ்பாணி ச பலானிச

யத்—அவரால்; வன:—பதய:—மரங்கள்; பீதா:—அச்சம் தரத்தக்க; லதா:—கொடிகள்; ச—மற்றும்; ஓஷதிபி:—மூலிகைகள்; ஸஹ—உடன்; ஸ்வேஸ்வே—காலே—ஒவ்வொன்றும் அதற்கான பருவத்தில்; அபிக்ருஹ்ணந்தி—தாங்கி; புஷ்பாணி—மலர்கள்; ச—மற்றும்; பலானி—பழங்கள்; ச—உடன்.

பரமபுருஷ பகவானிடமுள்ள பயத்தால் மரங்கள், கொடிகள், மூலிகைகள் மற்றும் பருவகாலத் தாவரங்கள் மற்றும் பூக்கள் மலர்ந்து, காய் கனிகளை அதனதன் பருவத்தில் கொடுக்கின்றன.

பதம் 3.29.42
ஸ்ரவந்தி ஸரிதோ பீதா நோத்ஸர்பத்யுததிர்யத:
அக்நிரிந்தே ஸ-கிரிபிர்பூர்ன மஜ்ஜதி யத்-பயாத்

ஸ்ரவந்தி—பாய்கின்ற; ஸரித:—நதிகள்; பீதா:—அச்சம் தரத்தக்க; ந—இல்லை; உத்ஸர்பதி—நிரம்பி வழிதல்; உததி:—கடல்; யத:—அவரால்; அக்நி:—நெருப்பு; இந்தே—எரிதல்; ஸகிரிபி:—அதன் மலைகளுடன்; பூ:—பூமி; ந—இல்லை; மஜ்ஜதி—மூழ்குதல்; யத்—அவரிடம்; பயாத்—பயத்தால்.

பரமபுருஷ பகவானிடம் உள்ள பயத்தால் நதிகள் பாய்கின்றன, கடல்கள் நிரம்பி வழிவதில்லை. அவரிடம் உள்ள பயத்தால் மட்டுமே நெருப்பு எரிகிறது, பூமி அதன் மலைகளுடன் அண்டத்தின் நீரில் மூழ்காமல் உள்ளது.

பதம் 3.29.43
நபோ ததாதி ஸ்வஸதாம் பதம் யந்-நியமாதத:
லோகம் -ஸ்வ-தேஹம் தனுதே மஹான் ஸப்தபிராவ்ருதம்.

நப:—வான்; ததாதி—தருகிறது; ஸ்வஸதாம்—வாழும் உயிரிங்களுக்கு; பதம்—இருப்பிடம்; யத்—அவருடைய (பரம புருஷ பகவான்); நியமாத்—கட்டுப்பாட்டின் கீழ்; அத:—அந்த; யோகம்—அண்டம்; ஸ்வதேஹம்—சொந்த உடல்; தனுதே—விரிவடைதல்; மஹான்—மஹத் தத்துவம்; ஸப்தபி:—ஏழுடன் (அடுக்குகள்); ஆவ்ருதம்—மூடப்பட்டு.

பரமபுருஷ பகவானின் கட்டுபாட்டுக்கு உட்பட்டு, எண்ணிலடங்கா உயிரினங்களைத் தாங்கிய பல்வேறு கோள்களும் வான் வெளியில் தங்கியிருக்க வானம் அனுமதிக்கிறது. முழு அண்டவுடலும், அவருடைய மேலான கட்டுப்பாட்டின் கீழ் அதன் ஏழு அடுக்குகளுடன் விரிவடைகிறது.

பதம் 3.29.44
குணாபிமானினோ தேவா: ஸர்காதிஷ்வஸ்ய யத்பயாத் வர்த்தந்தேனுயுகம் யேஷாம் வச ஏதச்சராசரம்

குண—ஜட இயற்கையின் குணங்கள்; அபிமானின:—பொறுப்பில்; தேவா:—தேவர்கள்; ஸர்க—ஆதிசூ—படைப்பு முதலியவற்றில்; அஸ்ய—இந்த உலகின்; யத்—பயாத்—அவரிடம் உள்ள பயத்தால்; வர்த்தந்தே—செயல்களை நிகழ்த்தி; அனுயுகம்—யுகங்களுக்கேற்றபடி; யேஷாம்—அவருடைய; வச—கட்டுப்பாட்டின் கீழ்; ஏதத்—இந்த; சராசரம்—உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாம்.

பரமபுருஷ பகவானிடம் உள்ள பயத்தால், இயற்கையின் குணங்களின் பொறுப்பில் உள்ள வழிகாட்டும் தேவர்கள், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர். இந்த பூதவுலகினுள் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

பதம் 3.29.45
ஸோ னந்தோந்த-கர: காலோநாதி-ராதிக்ருதவ்யய:
ஜனம் ஜனேன ஜனயந் மாரயந்ம்ருத்யுனாந்தகம்

ஸ—அந்த; அனந்த—முடிவற்ற; அந்த—கர—அழிப்பவர்; கால—காலம்; அநாதி—தொடக்கமின்றி; ஆதி—க்ருத்—படைப்பாளர்; அவ்யய—மாற்றத்திற்கு உட்படாத; ஜனம்—மக்கள்; ஜனேன—மக்களால்; ஜனயந்—படைத்து; மாரயந்—அழித்து; ம்ருத்யுனா—மரணத்தால்; அந்தகம்—மரணதேவன்.

நிலையான காலக் கூறு தொடக்கமும் முடிவும் இல்லாதது. குற்ற இயல்புடைய உலகைப் படைப்பாகிய அது பரமபுருஷ பகவானின் பிரதிநிதி ஆகும். அது குறிப்பிடத்தக்க உலகை ஒரு கட்டத்தில் முடிவுக்குக் கொண்டு வருகிறது, ஒரு தனிப்பட்டவரை மற்றொன்றிலிருந்து வாழ்விற்குக் கொண்டு வருவதன் மூலம் படைப்புத் தொழிலைச் செய்கிறது, அதுபோல, மரணதேவன் ஆகிய யமராஜனையும் அழிப்பதன் மூலம் அது அண்டத்தைக் கலைக்கிறது.


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “கபில பகவானின் பக்தித் தொண்டு பற்றிய விளக்கம்“ எனும் தலைப்பைக் கொண்ட இருபத்தொன்பாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare