அத்தியாயம் – 15
கடவுளின் பரலோக வர்ணணைகள்
பதம் 3.15.1
மைத்ரேய உவாச
ப்ராஜாபத்யம் து தத் தேஜ: பர-தேஜோ ஹனம் திதி:
ததார வர்ஷாணி ஸதம் ஸங்கமானா ஸூரார்தனாத்
மைத்ரேய: உவாச-மைத்ரேய முனிவர் கூறினார்; ப்ராஜா பத்யம்— சிறந்த பிரஜாபதியின்; து—ஆனால்; தத் தேஜ:-அவரது ஆற்றல் மிக்க சுக்கிலம்; பர-தேஜ:-பிறருடைய வீரம்; ஹனம்-துன்புறுத்துதல்; திதி:- திதி (கச்யபரின் மனைவி); ததார-தாங்குதல்; வர்ஷாணி- வருடங்கள்; ஸதம்—நூறு; ஸங்கமானா—ஐயங்கொண்டு; ஸூர- அர்தனாத்—தேவர்களுக்கு இடையூறு விளைவித்தல்;
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: அன்பான விதுரனே கச்யப முனிவரின் மனைவி திதிக்குத் தன் கருப்பையில் வளரும் மைந்தர்கள் தேவர்களுக்குத் தொல்லைக்கொடுக்கப் போகிறார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தும் அவள் பிறருக்குத் துன்பமளிக்கப் போகும் கச்யப முனிவரின் ஆற்றல் மிக்க சுக்கிலத்தைத் தன் அடிவயிற்றில் தொடர்ந்து நூறு வருடங்கள் சுமந்தாள்.
பதம் 3.15.2
லோகே தேனாஹதாலோகே லோக-பாலா ஹதௌஜஸ:
ந்யவேதயன் விஸ்வ-ஸ்ருஜே த்வாந்த-வ்யதிகரம் திஸாம்
லோகே-இப்பிரபஞ்சத்தினுள்; தேன – திதியின் கர்ப்பத்தின் வேகத்தினால்; ஆஹத-குனியமானது; ஆலோகே ஒளி; லோக- பாலா:- பல்வேறு உலகங்களைச் சேர்ந்த தேவர்கள்; ஹத – ஓஜஸ:- அவர்களது சக்தி குறைந்தது; ந்யவேதயன்-கேட்டனர்; விஸ்வ— ஸ்ருஜே – பிரம்ம தேவர்; த்வாந்த – வ்யதிகரம் – இருள் பரவியது; திஸாம் – எல்லாத் திசைகளிலும்;
திதி கொண்ட கர்ப்பத்தின் வேகத்தினால் அனைத்து உலகங்களும் சூரிய சந்திர ஒளியின்றிப் போயின. அவ்வேகத்தினால் பாதிக்கப்பட்டப் பல்வேறு உலகங்களைச் சேர்ந்த தேவர்கள் பிரம்மதேவரை அணுகி அவரிடம் “எல்லாத் திக்குகளும் இருளால் சூழப்பட்டிருக்கின்றன; இதன் காரணம் என்ன?” என்று கேட்டனர்.
பதம் 3.15.3
தேவா ஊசு:
தம ஏதத் விபோ வேத்த ஸம்விக்னா யத் வயம் ப்ருஸம்
ந ஹி அவ்யக்தம் பகவத: காலேனாஸ்ப்ருஷ்ட-வர்த்மன:
தேவா: ஊசு:-தேவர்கள் கூறினர்; தம:-இருள்; ஏதத்-இந்த; விபோ-ஒ, சிறப்பிற்குரியவரே; வேத்த-நீர் அறிவீர்; ஸம்விக்னா:- மிகுந்த கவலை; யத்—ஏனெனில்; வயம்-நாங்கள்; ப்ருஷம்-மிகவும்; ந – இல்லை; ஹி -ஏனெனில்; அவ்யக்தம்—தோன்றாதது; பகவத:- உமது (முழுமுதற் கடவுள்); காலேன—காலத்தினால்; அஸ்ப்ருஷ்ட- தொடுவதில்லை; வர்த்மன:—அவரத வழி;
அதிர்ஷ்டமிக்க தேவர்கள் கூறினர்: ஓ, சிறப்பிற்குரியவரே, இவ்விருளைக் காணுங்கள், இதனை நீர் நன்கறிவீர். இது எங்களை கவலைக் கொள்ளச் செய்கிறது. காலத்தின் பாதிப்பு உம்மைத் தொட முடியாத காரணத்தினால் உமக்கு முன்னால் தோன்றாதது என்று எதுவுமில்லை.
பதம் 3.15.4
தேவ தேவ ஜகத்-தாதர் லோகநாத-ஸிகாமணே
பரேஷாம் அபரேஷாம் த்வம் பூதானாம் அஸி பாவ-வித
தேவ- தேவ-தேவதேவனே ; ஜகத்-தாத:-பிரபஞ்சத்தைத் தாங்குபவரே; லோகநாத – ஸிகாமணே- பிற உலகிலுள்ள அனைத்துத் தேவர்களுக்கும் மணிமுடியாகத் திகழ்பவரே; பரேஷாம்-ஆன்மீக உலகின்; அபரேஷாம்-பௌதிக உலகின்; த்வம்-நீர்; பூதானாம்— எல்லா உயிர் வாழிகளின்; அஸி – இருக்கின்ற; பாவ – வித் – எண்ணங்களை அறிவீர்.
ஓ, தேவதேவனே, பிரபஞ்சத்தைத் தாங்குபவரே, அனைத்து உலகங்களிலுமுள்ள தேவர்கள் அனைவர்க்கும் மணிமுடியாகத் திகழ்பவரே, ஆன்மீக மற்றும் இம்மண் உலகங்களிலுள்ள அனைத்து உயிர்களின் எண்ணங்களையும் நீர் நன்றாக அறிவீர்.
பதம் 3.15.5
நமோ விஞ்ஞான-வீர்யாய மாயயேதம் உபேயுஷே
க்ருஹீத-குண-பேதாய நமஸ் தே ‘வ்யக்த-யோனயே
நம:மரியாதைக்குரிய வந்தனங்கள், விஞ்ஞான – வீர்யாய – ஓ வலிமைக்கும் விஞ்ஞான அறிவுக்கும் மூலாதாரமாக விளங்குபவரே; மாயயா-மாயையினால், புறச்சக்தியினால்; இதம்-பிரம்ம தேவனின் இந்த உடல்; உபேயுஷே – பெறப்பட்டது; க்ருஹீத—ஏற்றுக் கொண்டு; குண – பேதாய-வேறுபடுத்தப்பட்ட இரஜோகுணம்; நம: தே – உமக்கு எமது வந்தனங்களை சமர்ப்பிக்கிறோம்; அவ்யக்த-வெளிப்படாத; யோனயே-மூலம்;
ஓ, ஆற்றலுக்கும் அறிவியலுக்கும் மூலாதாரமாக விளங்குபவரே, உமக்கு எமது அனைத்து வந்தனங்களும் உரியதாகுக- முழுமுதற் கடவுளிடமிருந்து வேறுபடுத்தப்பட்ட இரஜோ குணத்தினை நீர் ஏற்றுக் கொண்டிருக்கிறீர். புறச் சக்தியான மாயையின் உதவியினால் அவ்யக்த மூலத்தினின்று நீர் பிறந்தீர். அனைத்து வந்தனங்களும் உமக்கே ஆகுக.
பதம் 3.15.6
யே த்வானன்யேன பாவேன பாவயந்தி ஆத்ம-பாவனம்
ஆத்மனி ப்ரோத-புவனம் பரம் ஸத்-அஸத்-ஆத்மகம்
யே – எவர் ஒருவர்; த்வா-உம்மை: அனன்யேன – எந்தவித மாற்றமுமின்றி: பாவேன-பக்தியுடன்; பாவயந்தி-தியானித்தல்; ஆத்ம – பாவனம்—அவரே உயிர்வாழிகள் அனைத்தையும் தோற்றுவித்தவர்; ஆத்மனி-உமது அகத்திலிருந்து: ப்ரோத-தொடர்புடைய;புவனம் – புவனமனைத்தும்; பரம்-பரமம்; ஸத்-விளைவு: அஸத்- காரணம்: ஆத்மகம்-தோற்றுவித்தவர்.
ஓ, தேவனே! அனைத்து உலகங்களும் உம்மிடத்தில் இருக்கின்றன. அவ்வுலகங்களில் வாழும் அனைத்து உயிர்களும் உம்மிடமிருந்தே தோன்றின. ஆகையினால் இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு நீரே காரணமாவீர். எவனொருவன் எந்தவித மாற்றமுமின்றி உம்மைத் தொடர்ந்து தியானிக்கின்றானோ அவன் பக்தித் தொண்டினை எய்துகிறான்.
பதம் 3.15.7
தேஷாம் ஸுபக்வ-யோகானாம் ஜித-ஸ்வாஸேந்த்ரியாத்மனாம்
லப்த-யுஷ்மத்-ப்ரஸாதானாம் ந குதஸ்சித் பராபவ:
தேஷாம்-அவர்கள்; ஸு – பக்வ—யோகானாம்—சுய பக்குவம் பெற்ற யோகிகள்; ஜித – கட்டுப்படுத்தி; ஸ்வாஸ – சுவாசத்தினை; இந்த்ரிய—புலன்கள்; ஆத்மனாம்—மனம்; லப்த—எய்துதல்; யுஷ்மத்— உமது; ப்ரஸாதானாம்-கருணை; ந-இல்லை; குதஸ்சித் – எங்கும்; பராபவ:-தோல்வி.
சுவாசப் பயிற்சி முறையினால் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துபவர்களுக்கு இந்த உலகில் தோல்வி என்பதே கிடையாது. அவர்கள் சுயபக்குவமுடைய ஞானிகள் ஆகின்றனர். யோகத்தின் இந்நிறைவினாலேயே அவர்கள் உமது கருணையினை அடைகின்றனர்.
பதம் 3.15.8
யஸ்ய வாசா ப்ரஜா: ஸர்வா காவஸ் தந்த்யேவ யந்த்ரிதா:
ஹரந்தி பலிம் ஆயத்தாஸ் தஸ்மை முக்யாய தே நம:
யஸ்ய- எவரது; வாசா-வேதக் கட்டளைகளினால்; ப்ரஜா:- உயிர்வாழிகள்; ஸர்வா:-எல்லாம்; காவ:-காளைமாடு; தந்த்ய- மூக்கணாங்கயிற்றினால்; இவ-போன்று; யந்த்ரிதா:- வழி காட்டப் படுகின்றன; ஹரந்தி-அர்ப்பணிப்பு; ஏற்றுக் கொள்ளுதல்; பலிம்- வழிபாட்டிற்குரிய பொருட்கள்; ஆயத்தா: – கட்டுப்பாட்டின் கீழ்; தஸ்மை-அவருக்கு; முக்யாய-தலைவருக்கு; தே-உமக்கு; நம:- மரியாதைக்குரிய வந்தனங்கள்.
பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து உயிர்களும், காளைமாடு மூக்கணாங்கயிற்றின் மூலம் வழிகாட்டப்படுதல் போல் வேத மந்திரங்களின் கட்டளைகளினால் வழிநடத்தப்படுகின்றன. வேதங்களின் விதிகளை யாராலும் மீற முடியாது. வேதங்களை அளித்தவரும், எல்லோர்க்கும் தலைவராகவும் விளங்கும் உமக்கு எமது மரியாதைகளை அர்ப்பணிக்கிறோம்.
பதம் 3.15.9
ஸ த்வம் விதத்ஸ்வ ஸம் பூமம்ஸ் தமஸா லுப்த-கர்மணாம்
அதப்ர-தயயா த்ருஷ்ட்யா ஆபன்னான் அர்ஹஸீக்ஷிதும்
ஸ:- அவர்; த்வம் – நீர்; விதத்ஸ்வ-செய்வது; ஸம்- நல்லதிர்ஷ்டம்; பூமன்-ஓ, சிறந்த தலைவரே; தமஸா-இருளினால்; லுப்த – தடைபட்டிருக்கிறது; கர்மணாம் – குறித்தக் கடமைகள்; அதப்ர-பெருந்தன்மை; குறைவற்ற; தயயா-கருணை; த்ருஷ்ட்யா- உமது பார்வையினால்; ஆபன்னான் — சரண்புகுந்த, எமக்கு; அர்ஹஸி- இயலும்; ஈக்ஷிதும்-பார்ப்பதற்கு.
தேவர்கள் பிரம்ம தேவரை வணங்கினர்: அருள்கூர்ந்து உமது கருணை மிகு பார்வையினை எம்மீது வைப்பீராக. நாங்கள் துன்பப் புயலில் சிக்குண்டிருக்கிறோம். எம்மைச் சூழ்ந்திருக்கும் இருளினால் எமது அனைத்துக் கடமைகளும் தடைபட்டிருக்கின்றன.
பதம் 3.15.10
ஏஷ தேவ திதேர் கர்ப ஒஜ: காஷ்யபம் அர்பிதம்
திஸஸ் திமிரயன் ஸர்வா வர்ததே ‘க்னிர் இவைதஸி
ஏஷ:- இந்த; தேவ – ஓ, தேவனே; திதே:-திதியின்; கர்ப:- கருப்பையில்; ஓஜ: – சுக்கிலம்; காஷ்யபம் – கச்யபரின்; அர்பிதம்- புகுந்தது; திஸ:-திசைகள்; திமிரயன் – முழு இருளுக்கு காரணம்; ஸர்வா:-எல்லாம்; வர்ததே-அதிகரித்தல்; அக்னி : – அக்கினியை; இவ – போன்று ; ஏதஸி- எரிபொருள்.
எரிபொருள் நெருப்புப் பிழம்பினை அதிகரிக்கச் செய்வதுபோல், திதியின் கருப்பையில் புகுந்த கச்யபரின் சுக்கிலம் உருவாக்கிய கருவானது இப்பிரபஞ்சம் முழுவதும் இருட்கடலில் மூழ்குவதற்குக் காரணமாகியது.
பதம் 3.15.11
மைத்ரேய உவாச
ஸ ப்ரஹஸ்ய மஹா-பாஹோ பகவான் ஸப்த-கோசர:
ப்ரதியாசஷ்டாத்ம-பூர் தேவான் ப்ரீணன் ருசிரயா கிரா
மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; ஸ:—அவர்; ப்ரஹஸ்ய- புன்னகைத்து; மஹா-பாஹோ-ஓ, தடந்தோளுடையவனே (விதுரர்): பகவான்—அனைத்து வளங்களும் உடையவர்; ஸப்த-கோசர:- உன்னத ஒலி அதிர்வினால் உணர்ந்து கொள்ளப்படுபவர்; பிரத்யாசஷ்ட- பதிலிறுத்தார்; ஆத்ம-பூ:-பிரம்ம தேவர்; தேவான்-தேவர்கள்; ப்ரீணன்—திருப்தியடைந்து; ருசிரயா-இனிய; கிரா – வார்த்தைகள்.
ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: உன்னதமான ஒலியுதிர்வுகளினால் உணர்ந்துக் கொள்ளப்படும் பிரம்ம தேவர், தேவர்களின் பிரார்த்தனைகளின் மனம் மகிழ்ந்து அவர்களைத் திருப்திப்படுத்த முயன்றார்.
பதம் 3.15.12
ப்ரஹ்மோ வாச
மானஸா மே ஸுதா யுஷ்மத்-பூர்வஜா: ஸனகாதய:
சேருர் விஹாயஸா லோகால் லோகேஷு விகத-ஸ்ப்ருஹா:
ப்ரஹ்மா உவாச-பிரம்ம தேவன் கூறினார்; மானஸா:-எனது மனதினின்று பிறந்தவர்கள்; மே-எனது ; ஸுதா:—புத்திரர்கள்; யுஷ்மத்-உம்மைவிட; பூர்வ-ஜா:- முன்னரே பிறந்தவர்கள்; ஸனக- ஆத்ய:-சனகரால் தலைமை தாங்கப்பட்டவர்கள்; சேரு:-பயணிப்பர்; விஹாயஸா-மேலுலகங்களில் அல்லது வானத்தில் பறந்து கொண்டே பயணம் செய்வர்; லோகான்—பௌதிக மற்றும் ஆன்மீக உலகங்களுக்கு; லோகேஷு – மக்கள் மத்தியில்; விகத-ஸ்ப்ருஹா:—எந்தவித விருப்பமுமின்றி.
பிரம்ம தேவர் கூறினார்: சனகர், சநாதனர், சநந்தனர், சநத்குமாரர் என்னும் நால்வரும் எனது மனதிலிருந்து பிறந்தவர்கள். உங்கள் அனைவர்க்கும் அந்நால்வரும் மூத்தோர்கள் ஆவர், சில நேரங்களில் அவர்கள் பௌதிக மற்றும் ஆன்மீக வானங்களில் எந்தவித குறிப்பிட்ட விருப்பமுமின்றி பயணம் செய்வர்.
பதம் 3.15.13
த ஏகதா பகவதோ வைகுண்டஸ்யாமலாத்மன:
யயுர் வைகுண்ட-நிலயம் ஸர்வ-லோக-நமஸ்க்ருதம்
தே-அவர்கள்; ஏகதா-முன்பு ஒரு சமயம்; பகவத:- முழுமுதற் கடவுளின்; வைகுண்டஸ்ய -பகவான் விஷ்ணுவின்; அமல- ஆத்மன:-அனைத்துப் பெளதிக மாகக்களிலிருந்தும் விடுதலை பெற்று; யயு-நுழைந்தனர்; வைகுண்ட—நிலயம்- வைகுண்ட லோகத்தினுள்; ஸர்வ-லோக -சர்வலோகங்களிலுமுள்ளோர்; நமஸ்க்ருதம் –வழிபட்டனர்.
இவ்வாறு எல்லாப் பிரபஞ்சங்களுக்கும் பயணம் செய்து முடித்த பின்னர். அவர்கள் அனைத்து விதமான மாசுக்களில் இருந்தும் விடுதலை பெற்றதினால் ஆன்மீக வானத்தினுள்ளும் நுழைந்தனர். இந்த ஆன்மீக வானத்தில் வைகுண்ட லோகம் போன்ற ஆன்மீக உலகங்கள் இருக்கின்றன. இவைகளே முழுமுதற் கடவுள் மற்றும் அவரது தூய பக்தர்களின் உறைவிடங்களாகும். இவையே கண் கூடான இந்த உலகவாசிகள் அனைவராலும் வணங்கப்படுபவையுமாகும்.
பதம் 3.15.14
வஸந்தி யத்ர புருஷா: ஸர்வே வைகுண்ட-மூர்தய:
யே ‘நிமித்த-நிமித்தேன தர்மேணாராதயன் ஹரிம்
வஸந்தி—அவர்கள் வாழ்வது; யத்ர—அங்கே; புருஷா:-புருஷர்கள்; ஸர்வே-எல்லோரும்; வைகுண்ட-மூர்தய:-பரமபுருஷரான விஷ்ணுவைப் போல நான்கு கரமுடையவர்கள்; யே— அவ்வைகுண்ட லோகத்திலுள்ளவர்கள்;அநிமித்த—புலனுகர்ச்சி விருப்பமின்றி; நிமித்தேன-நிமித்தத்தினால்; தர்மேண—பக்தித் தொண்டினால்;
ஆராதயன்—தொடர்ந்து வழிபடுவர்; ஹரிம்-முழுமுதற் கடவுளுக்கு.
வைகுண்ட லோகத்தில் இருக்கும் அனைவரும் முழுமுதற் கடவுளின் வடிவத்தைப் போன்று நான்கு கரங்களையுடையவர்களாக இருப்பர். இவர்கள் புலனுகர்ச்சி விருப்பம் எதுவும் இன்றி எப்பொழுதும் பகவானது பக்தித் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பர்.
பதம் 3.15.15
யத்ர சாத்ய: புமான் ஆஸ்தே பகவான் ஸப்த-கோசர:
ஸத்வம் விஸ்டப்ய விரஜம் ஸ்வானாம் நோ ம்ருடயன் வ்ருஷ:
யத்ர—வைகுண்ட லோகத்தில்; ச-மேலும்; ஆத்ய:- மூலம்; புமான்-புருஷர்; ஆஸ்தே-இருக்கிறார்; பகவான்-முழுமுதற் கடவுள்; ஸப்த-கோசர- வேத இலக்கியங்களின் மூலம் அறிந்து கொள்ளப்படுபவர்; ஸத்வம்- சத்துவ குணம்; விஸ்டப்ப- ஏற்றுக் கொண்டு; விரஜம்-மாசு அடையாத; ஸ்வானாம்.—அவரது துணைவர்களுடன்; ந:-நமது; ம்ருடயன்—அதிகரிக்கும் மகிழ்ச்சி; வ்ருஷ:-சமய அறநெறிகளின் உருவம்.
வைகுண்ட லோகத்தில் இருக்கும் முழுமுதற் கடவுளே ஆதிக்கடவுளாவார். அவரை வேத இலக்கியங்களின் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவரிடம் இரஜோ மற்றும் தமோ குணத்திற்குத் துளியளவு இடமும் கிடையாது. அவர் மாசு மருவற்ற சத்துவ குணத்தினால் நிரப்பப்பட்டவர். அவர் பக்தர்களுக்கு சமய அறநெறியில் முன்னேற்றம் அளிக்கிறார்.
பதம் 3.15.16
யத்ர நைஹ் ஸ்ரேயஸம் நாம வனம் காம-துகைர் த்ருமை:
ஸர்வர்து-ஸ்ரீபிர் விப்ராஜத் கைவல்யம் இவ மூர்திமத்
யத்ர-வைகுண்ட லோகத்தில்; நைஹ் ஸ்ரேயஸம்-புனிதமான; நாம-நாமத்தில்; வனம் -வனங்கள்; காம-துகை:-விருப்பினை நிறைவேற்றும்; த்ருமை:- மரங்களுடன்; ஸர்வ-எல்லாம்; ருது—பருவ காலங்கள்; ஸ்ரீபி:-மலர்கள் மற்றும் கனிகள்; விப்ராஜத்- ஒளிர்கின்ற; கைவல்யம்-ஆன்மீகம்; இவ-போன்று; மூர்திமத்-உருவமுடையன.
வைகுண்ட லோகத்தில் பல வனங்கள் இருக்கின்றன.அவையெல்லாம் மிகவும் புனிதமானவையாகும். அவ்வனங்களில் இருக்கும் மரங்கள் எல்லாம் நமது விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருட்சங்களாகும். எல்லாப் பருவங்களிலும் அவை மலர்களும், கனிகளும் பூத்துக் குலுங்கும். இதன் காரணம் வைகுண்ட லோகத்தில் உள்ள அனைத்தும் தனி உருவம் உடையன என்பதோடு ஆன்மீகமானவையும் கூட.
பதம் 3.15.17
வைமானிகா: ஸ- லலனாஸ் சரிதானி ஸஸ்வத்
காயந்தி யத்ர ஸமல-க்ஷபணானி பர்து:
அந்தர்-ஜலே ‘நுவிகஸன்- மது- மாதவீனாம்
கந்தேன கண்டித-தியோ ‘பி அனிலம் க்ஷிபந்த:
வைமானிகா:- தங்கள் விமானங்களில் பறந்தபடி; ஸ—லலனா: -அவர்கள் மனைவியருடன்; சரிதானி—செயல்கள்; ஸஸ்வத்- நித்தியமான; காயந்தி-பாடுவர்; யத்ர—அவ்வைகுண்ட லோகங்களில்: ஸமல-அமங்களக் குணங்கள் அனைத்தையும்; க்ஷபணானி-இல்லாமற் செய்யும்; பர்து:-பரமபுருஷ பகவானின்; அந்த:- ஜலே-நீரின் நடுவில்; அநுவிகஸத்—மலர்கின்ற; மது -நறுமணம், தேனைச் சுமக்கும்; மாதவீனாம்-மாதவி மலர்களின்; கந்தேன- நறுமணத்தினால்; கண்டித-இடையூறு; திய:-மனங்கள்; அபி— இருந்த போதிலும்; அனிலம்—தென்றல்; க்ஷிபந்த:-ஏளனம் செய்வர்.
வைகுண்ட லோகத்தில் வாழ்பவர்கள் தங்கள் மனைவியரும், காதலியரும் உடன்வர விமானங்களில் பறப்பர். இவ்வாறு பறக்கும் பொழுது எப்பொழுதும் அமங்களக் குணங்கள் அற்ற பகவானின் குணங்களையும், செயல்களையும் அவர்கள் நித்தியமாகப் பாடுவர். இவ்வாறு பகவானின் புகழைப்பாடிக் கொண்டிருக்கும் பொழுது, தேனைச் சுமந்து கொண்டிருக்கும் நறுமணமிக்க மாதவி மலர்கள் கூட அவர்களுக்கு முக்கியமற்றவையாகத் தோன்றும்.
பதம் 3.15.18
பாராவதான்யப்ருத-ஸாரஸ- சக்ரவாக
தாத்யூஹ-ஹம்ஸ-ஸுக-தித்திரி- பர்ஹிணாம் ய:
கோலாஹலோ விரமதே ‘சிர-மாத்ரம் உச்சைர்
ப்ருங்காதிபே ஹரி-கதாம் இவ காயமானே
பாராவத-புறாக்கள்; அன்யப்ருத- குயில்; ஸாரஸ-நாரை; சக்ரவாக- சக்கரவாகம்; தாத்யூஹ-நீர்க்கோழி; ஹம்ஸ—அன்னம்; ஸுக-கிளி; தித்திரி:-கௌதாரி; பர்ஹிணாம்- மயிலின்;ய:-அந்த; கோலாஹல:- கோலாகல ஓசை; விரமதே- நிறுத்தும்; அசிர— மாத்ரம்- தற்காலிகமாக: உச்சை:-உரக்க; ப்ருங்க -அதிபே- தும்பிகளின் அரசன்; ஹரி-கதாம்-பகவானின் புகழ்; இவ-போன்று; காயமானே- பாடும்பொழுது.
தலைமைத் தேனீ உச்சஸ்தாயியில் ரீங்கரிப்பதின் மூலம் இறைவனின் புகழையே பாடுகிறது. அப்போது புறா, குயில், நாரை, சக்கரவாகம், அன்னம், கிளி, கௌதாரி, மயில் போன்றவை எழுப்பும் ஓசையில் ஓர் இடைக்கால அமைதி ஏற்படுகிறது. இவ்வுன்னதப் பறவைகள் தங்கள் சொந்தப் பாடலையும் நிறுத்திவிட்டு பகவானின் புகழைக் கேட்பதில் ஆவல் கொள்கின்றன.
பதம் 3.15.19
மந்தார-குந்த-குரபோத்பல- சம்பகார்ண
புன்னாக-நாக-பகுலாம்புஜ- பாரிஜாதா:
கந்தே ‘ர்சிதே துளசிகாபரணேன தஸ்யா
யஸ்மிம்ஸ் தப: ஸுமனஸோ பஹு மானயந்தி
மந்தார-மந்தாரம்; குந்த-குந்தம்; குரப-குரபம்; உத்பல- உத்பலம்; சம்பக-சம்பகம்; அர்ண—அர்ணம்; புன்னாக—புன்னாகம்; நாக – நாககேஸரம்; பகுல-பகுலம்; அம்புஜ-அல்லி; பாரிஜாதா:- பாரிஜாதம்; கந்தே-நறுமணம்; அர்சிதே -வழிபடுகிறது; துளஸிகா- துளசி; ஆபரணேன—ஆபரணமாக; தஸ்யா:-அவளின்; யஸ்மின்- வைகுண்டத்தில்; தப:-தவம்; ஸு-மனஸ:-நன் மனம், வைகுண்ட மனம்; பஹு- மிகவும்; மானயந்தி—புகழ்தல்.
மேலும், மந்தாரம், குந்தம், குரபகம், உத்பலம், சம்பகம், அர்ணம், புன்னாகம், நாககேஸரம், பகுலம், மல்லிகை, மற்றும் பாரிஜாதம் போன்ற நறுமண மலர்கள் பல இருந்த போதிலும் அவை துளசிச் செடிசெய்யும் தவத்திலேயே கவனமுடையனவாக இருந்தன. துளசிக்கே பகவான் முதலிடம் தருகிறார். துளசி இலைகளையே அவர் மாலையாக அணிந்திருக்கிறார்.
பதம் 3.15.20
யத் ஸங்குலம் ஹரி-பதானதி- மாத்ர- த்ருஷ்டைர்
வைடூர்ய-மாரகத-ஹேம-மயைர் விமானை:
யேஷாம் ப்ருஹத்-கடி-தடா ஸ்மித- ஸோபி-முக்ய:
க்ருஷ்ணாத்மனாம் ந ரஜ ஆததுர் உத்ஸ்மயாத்யை:
யத்—அந்த வைகுண்டத்தில்; ஸங்குலம்- பரந்துபட்டிருக்கும்; ஹரி-பத-முழுமுதற் கடவுளான ஹரியின் இரு பத்மபாதங்களில்; ஆனதி—வந்தனங்களினால்; மாத்ர-மாத்திரம்; த்ருஷ்டை:– பெறப்படுகின்றன; வைடூர்ய-வைடூரியம்; மாரகத—மரசுதம்; ஹேம- தங்கம்; மயை:-செய்யப்பட்ட; விமானை:-விமானங்களுடன்; யேஷாம்-அப்பயணிகள்; ப்ருஹத்- விரிந்த; கடி- தடா:-இடை; ஸ்மித-புன்னகை; ஸோபி-எழில்: முக்ய:-முகங்கள்; க்ருஷ்ண- கிருஷ்ணரின்; ஆத்மனாம்—அவர்கள் மனம் கலந்திருக்கும்; ந- இல்லை; ரஜ:-பாலுணர்வு இச்சை; ஆதது:-தூண்டுவது; உத்ஸ்மய- ஆத்யை:- சிரித்துக்களிப்பது, எள்ளி நகையாடுவது போன்ற நெருங்கிய நட்பு முறைகள்.
வைகுண்ட லோகத்தில் உள்ளவர்கள், வைடூரியம், மரகதம் மற்றும் பொன்னால் செய்யப்பட்ட ஆகாய விமானங்களில் பயணம் செய்வர். புன்னகை முகமும் உடைய காதல் மங்கையர் சூழ்ந்திருந்த போதிலும் அவர்களது கவர்ச்சியினாலும் அழகினாலும் வைகுந்தவாசிகள் ஒருபோதும் உணர்ச்சி வசப்படுவதில்லை.
பதம் 3.15.21
ஸ்ரீரூபிணீ கவனயதீ சரணாரவிந்தம்
விலாம்புஜேன ஹரி-ஸத்மனி முக்த-தோஷா
ஸம்லக்ஷ்யதே ஸ்படிக-குட்ய உபேத-ஹேம்னி
ஸம்மார்ஜதீவ யத்-அநுக்ரஹணே ‘ன்ய-யத்ன:
ஸ்ரீ-இலட்சுமி; அதிர்ஷ்ட தேவதை:- ரூபிணீ – எழில்வடிவம் கொண்டு; க்வணயதீ—இனிய ஓசை; சரண- அரவிந்தம் தாமரைத்திருவடி; லீல-அம்புஜேன- தாமரை மலர் கொண்டு விளையாடும்; ஹரி-ஸத்மணி-முழுமுதற் கடவுளின் உறைவிடம்; முக்த-தோஷ- குற்றங்கள் அனைத்திலுமிருந்து நீங்கி; ஸம்லஷ்ணதே-பார்வைக்குப் புலனாகிறது; ஸ்படிக-படிகம்; குட்யே-மதில்கள்; உபேத-கலந்த; ஹேம்னி-பொன்; ஸம்மார்ஜதீ இவ -துப்புரவு செய்பவர் போன்று; யத்— அநுக்ரஹணே – அவள் கருணையைப் பெறுவதற்கு; அன்ய-மற்றவர்கள்; யத்ன-மிகுந்த எச்சரிக்கையுடன்.
வைகுண்ட லோகத்திலுள்ள பெண்கள் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமி தேவியைப் போல் எழில்மிக்கவர்களாவர். உன்னத அழகுடைய அம்மங்கையரின் கரங்கள் செந்தாமரை மலர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும். அவர்களது பாதங்களிலோ சலங்கைகள் இனிய ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும். இவர்கள் பொன்னால் அலங்கரிக்கப்பட்டப் பளிங்குக் கல் மதில்களை, முழுமுதற் கடவுளின் கருணையைப் பெறுவதற்காக சிலநேரங்களில் துடைத்து சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.
பதம் 3.15.22
வாபீஷு விக்ரும-தடாஸ்வ் அமலாம்ருதாப்ஸு
ப்ரேஷ்யான்விதா நிஜ-வனே துளஸீபிர் ஈஸம்
அப்யர்சதீ ஸ்வலகம் உன்னஸம் ஈஷ்ய வக்திரம்
உச்சேஷிதம் பகவநேதி அமதாங்க யச்-ச்ரீ:
வாபீஷு-குளங்களில்; வித்ரும-பவளத்தினால் செய்யப்பட்ட; தடாஸு—கரைகள்; அமல-தெளிந்த; அம்ருத-அமிர்தம்; அப்ஸு-தண்ணீர்; ப்ரேஷ்யா-அன்விதா— பணிப்பெண்கள் சூழ்ந்திருக்க நிஜ-வனே- அவளது சோலையில்; துளஸீபி:- துளசியுடன்; ஈஸம் -பரமபுருஷ பகவான்; அப்ர்யசதீ -வழிபடுதல்; ஸு- அலகம் -திலகத்தினால் அலங்கரிக்கப்பட்டத் திருமுகம்; உன்னஸம்- நேரான நாசி; ஈக்ஷ்ய-காண்பதினால்; வக்த்ரம்- முகம்; உச்சே ஷிதம்— முத்தமிடப்பட்டு; பகவதா-பரமபுருஷ பகவானால்; இதி-இவ்வாறு; அமத—நினைந்து; அங்க—ஒ, தேவர்களே; யத்- ஸ்ரீ:—அவளது அழகு.
அதிர்ஷ்ட தேவதைகள் தங்கள் நந்தவனத்திலுள்ள, பவளத்தினால் ஆனக் கரைகளையுடைய தாமரைத் தடாகங்களின் கரைகளில் துளசி இலைகளை அர்ப்பணித்து பகவானை வழிபடுவர். இவ்வாறு பகவானை வழிபடும் பொழுது நீரினுள் அவர்கள் தங்களது நேரான நாசிகளையுடைய எழில் முகங்களின் நிழல்களைக் காண்பர். பகவான் முத்தமிடுவதினால் நாணிச் சிவக்கும் எழில் முகங்களைப் போல் அவர்களது அழகியத் திருமுகங்கள் காட்சியளிக்கும்.
பதம் 3.15.23
யன் ந வ்ரஜந்தி அக-பிதோ ரசனானுவாதாச்
ச்ருண்வந்தி யே ‘ன்ய-விஷயா: குகதா மதி-க்னீ:
யாஸ் து ஸ்ருதா ஹத-பகைர் ந்ருபிர் ஆத்த-ஸாராஸ்
தாம்ஸ் தான் க்ஷிபந்தி அஸரணேஷு தமஹ் ஸு ஹந்த
யத்- வைகுண்டம்; ந-இல்லை; வ்ரஜந்தி-அணுகுதல்; அக-பித :- அனைத்துப் பாவங்களையும் அழிப்பவர்; ரசனா-படைப்பின்; அனுவாதாத்—கதைகளை விட; ச்ருண்வந்தி-கேட்டல்; யே — அவர்கள்; அன்ய-பிற; விஷயா:- விஷயங்களை; கு- கதா-தீய சொற்களை; மதி- க்னீ:-புத்தியைக் கெடுக்கும்; யா:-அது; து—ஆனால்; ஸ்ருதா:- கேட்கப்படுதல்;ஹத_பகை:- துரதிர்ஷ்டம்; ந்ருபி:-மனிதர்களால்; ஆத்த -தூக்கி; ஸாரா:-வாழ்வின் மதிப்புக்கள்; தான்தான்—இதுபோன்றவர்கள்; க்ஷிபந்தி- எறியப்படுகின்றனர்; அஸரணேஷு-தஞ்சம் புகுதற்கு இடமின்றி; தமஹ் ஸு-பௌதிகத் தோற்றத்தின் இருண்ட பகுதி; ஹந்த—அந்தோ.
துரதிர்ஷ்டசாலிகள் வைகுண்ட லோகத்தின் விளக்கங்களைப் பற்றி விவாதிக்காது, ஒருவனது புத்தியைக் குழப்புவதும், கேட்பதற்குத் தகுதியற்றதுமான விஷயங்களைப் பேசுவதில் ஈடுபட்டிருப்பது மிகவும் இரங்கத்தக்கதாகும். வைகுண்ட லோகம் போன்ற புனிதமான விஷயங்களை விடுத்து நடப்பு உலகைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அறியாமை என்னும் அந்தகாரத்தினுள் தூக்கி எறியப்படுவார்கள்.
பதம் 3.15.24
யே ‘ப்யர்திதாம் அபி ச நோ ந்ரு-கதிம் ப்ரபன்னா
ஜ்ஞானம் ச தத்வ-விஷயம் ஸஹ-தர்மம் யத்ர
நாராதனம் பகவதோ விதரந்தி அமுஷ்ய
ஸம்மோஹிதா விததயா பத மாயயா தே
யே-அம்மனிதர்கள்; அப்யர்திதாம்-விரும்பியது; அபி-நிச்சயம்; ச-மேலும்; ந:-நம்மால் (பிரம்மா உள்ளிட்ட தேவர்கள்); ந்ரு- கதிம்- மனித வடிவு பெற்ற வாழ்க்கை; ப்ரபன்னா:—அடைந்திருக்கின்றனர்; ஜ்ஞானம் – ஞானம்; ச-மேலும்; தத்வ-விஷயம்-பூரண உண்மை பற்றிய தத்துவ விஷயங்கள்; ஸஹ- தர்மம்- சமய அறநெறிகளுடன்; யத்ர—அங்கே; ந-இல்லை; ஆராதனம்—வழிபாடு; பகவத:-முழுமுதற் கடவுளின்; விதரந்தி- வழிபாடு; பகவத:-முழுமுதற் கடவுளின்; விதரந்தி-செய்யப்படுதல்; அமுஷ்ய-பரமபுருஷ பகவானின்; ஸம்மோஹிதா:-குழப்பமுற்று; விததயா—எங்கும் நிறைந்திருக்கும்; பத—அந்தோ; மாயயா- மாயா சக்தியின் பாதிப்பினால்; தே—அவர்கள்;
பிரம்ம தேவர் கூறினார்: அன்பிற்குரிய தேவர்களே, மனித வடிவு பெற்ற வாழ்க்கையானது, மிகவும் முக்கியமானது. நாமெல்லாம் கூட அந்த வாழ்க்கையினைப் பெற விருப்பங் கொள்கிறோம். மனித வடிவு கொண்ட வாழ்க்கையில் ஒருவன் சமய உண்மையின் நிறைவினையும் ஞானத்தையும் அடையமுடியும். மனித வடிவு பெற்ற வாழ்க்கையில் கூட ஒருவன் முழுமுதற் கடவுளைப் பற்றியோ, அவரது உறைவிடத்தைப் பற்றியோ அறிந்துக் கொள்ளவில்லையென்றால் அவன் புற இயற்கையின் செல்வாக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.
பதம் 3.15.25
யச் ச வ்ரஜந்தி அனிமிஷாம் ருஷாபானுவ்ருத்தயா
தூரே யமா ஹி உபரி ந: ஸ்ப்ருஹணீய–ஸீலா:
பர்துர் மித: ஸுயஸஸ: சுதனானுராக
வைக்லவ்ய-பாஷ்ப-கலயா புளகீ-க்ருதாங்கா:
யத்- வைகுண்டம்; ச-மேலும்; வ்ரஜந்தி—செல்வது; அனிமிஷாம்–தேவர்களின்; ருஷப:- தலைவர்; அனுவ்ருத்தயா— காலடிகளைப் பின்பற்றிக் கொண்டு; தூரே-தூரத்தில் வைத்து; யமா:- ஒழுங்கு முறை விதிகள்; ஹி-நிச்சயமாக; உபரி—மேலே; ந:-நமது; ஸ்ப்ருஹணீய-விரும்பப்படும்; ஸீலா:- நற்குணங்கள்; பர்து:- பரமபுருஷ பகவானின்; மித:-மற்ற ஒன்றிற்கு; ஸுயஸஸு:-புகழ்; கதன—உரையாடல்களினால்; சொற்பொழிவுகளினால்; அனுராக- கவர்ச்சி; வைக்லவ்ய-மெய் மறத்தல்; பாஷ்ப—கலயா—கண்ணீர் பெருகுதல் ; புளகீ-க்ருத-நடுங்குதல்; அங்கா:-உடல்கள்.
பகவானின் பெருமைகளைக் கேட்கும்பொழுது மெய்மறந்து, பெருமூச்சு விட்டு, உடல் புளகிதம் அடைந்து கண்ணீர் பெருக்கெடுப்ப வர்கள் தியானங்களிலோ ஐபதபங்களிலோ அக்கறையில்லாதவர்களாக இருந்தபோதிலும் கூட அவர்கள் கடவுளின் பரலோகத்திற்குச் செல்கின்ற உயர்வு பெறுகிறார்கள். பௌதிகப் பிரபஞ்சங்களுக்கும் மேலே கடவுளின் உலகம் இருக்கிறது. இது பிரம்ம தேவராலும், பிற தேவர்களினாலும் விரும்பப்படுகிறது.
பதம் 3.15.26
தத் விஸ்வ-குர்வ்-அதிக்ருதம் புவனைக-வந்த்யம்
திவ்யம் விசித்ர- விபுதாக்குய- விமான-ஸோசி:
ஆபு: பராம் முதம் அபூர்வம் உபேத்ய யோக-
மாயா-பலேன முனயஸ் தத் அதோ விகுண்டம்
தத்-பின்னர்; விஸ்வ-குரு-முழுமுதற் கடவுளான பிரபஞ்சத்தின் குருவினால்; அதிக்ருதம் – ஆட்சி செலுத்தப்பட்ட; புவன– புவனங்களின்; ஏக-தனியே; வந்தியம்-வணங்குவதற்குரிய; திவ்யம் – ஆன்மீகம்; விசித்ர-சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட; விபுத அக்ருய— பக்தர்களின் (கற்றவர்கள் அனைவரிலும் மிகவுயர்ந்தவர்கள்); விமான— ஆகாய விமானங்கள்; ஸோசி: ஒளிர்ந்தது; ஆபு:-எய்தினர்; பராம்- மிகவுயர்ந்த: முதம் -மகிழ்ச்சி; அபூர்வம் -முன் எப்பொழுதுமில்லாத; உபேத்ய- -அடைந்தனர்; யோக-மாயா –ஆன்மீகச் சக்தியினால்; பலேன -செல்வாக்கினால்; முனய:-முனிவர்கள்; தத் -வைகுண்டம்; அதோ-அந்த; விருண்டம்-விஷ்ணு.
இவ்வாறு மாமுனிவர்களான சனகர், சநாதனர், சநந்தனர், மற்றும் சநத் குமாரர் தமது யோக ஸித்தியின் பயனால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆன்மீக உலகிலுள்ள வைகுண்டத்தை அடைத்தவுடன் முன்னர் எப்பொழுதும் அனுபவித்தறியாத மகிழ்ச்சியினை உணர்ந்தனர். ஆன்மீக வானம் முழுவதும் பகவானின் சிறந்த பக்தர்களினால் ஓட்டிச் செல்லப்படும் விமானங்களினால் ஒளி செய்யப் பட்டிருப்பதையும் அங்கே முழுமுதற் கடவுளின் ஆட்சி நிலவுவதையும் அவர்கள் கண்டனர்.
பதம் 3.15.27
தஸ்மின் ஆதித்ய முனய: ஷட் அஸஜ்ஜமானா:
௧க்ஷா: ஸமான-வயஸாவ் அத ஸப்தமாயாம்
தேவாவ் அசக்ஷத க்ருஹீத-கதௌ பரார்த்ய
கேயூர-குண்டல-கிரீட-விடங்க- வேஷௌ
தஸ்மின்-அந்த வைகுண்டத்தில்; ஆதீத்ய -கடந்து சென்ற பின்னர்; முனய:- மாமுனிவர்கள்; ஷட்-ஆறு; அஸஜ்ஜமானா:— அதிகம் கவரப்படவில்லை; கக்ஷா:-மதில்கள்; ஸமான-சமம்; வயஸௌ— வயது; அத—அதன்பிறகு; ஸப்த மாயாம் -ஏழாவது வாயிலில்: தேவௌ- வைகுண்ட காவலர்கள் இருவர்; அசக்ஷத- கண்டனர்; க்ருஹீத-சுமந்து கொண்டு; கதெள—கதாயுதங்கள்; பர-அர்த்ய- மிகவும் மதிப்புயர்ந்த; கேயூர-கைவளைகள்; குண்டல-குண்டலங்கள்; கிரீட-கிரீடங்கள்; விடங்க-எழில்மிக்க; வேஷௌ-ஆடைகள்.
பகவானின் உறைவிடமான வைகுண்ட புரியின் ஆறு வாயில்களைக் கடந்து சென்ற பின்னரும் கூட அங்கே செய்யப்பட்டிருந்த அலங்காரங்களினால் அவர்கள் ஆச்சரியம் எதுவும் அடையவில்லை. ஏழாவது வாயிலில் ஒத்தவயதுடைய இருவர் கைகளில் கதாயுதம் தாங்கி, வைர வைடூரியங்களினால் ஆன கிரீடங்கள், கை வளைகள் மற்றும் கண்ணைக் கவரும் வண்ண ஆடைகளும் அணிந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டனர்.
பதம் 3.15.28
மத்த-த்விரேப-வனமாலிகயா நிவீதெள
வின்யஸ்தயாஸித-சதுஷ்டய-பாஹு-மத்யே
வக்த்ரம் ப்ருவ குடிலயா ஸ்புட-நிர்கமாப்யாம்
ரக்தேக்ஷணேன ச மனாக் ரபஸம் ததானௌ
மத்த-மயங்கிய; த்வி- ரேப – வண்டுகள்; வன – புத்தம் புது மலர்களினால் கட்டப்பட்ட மாலை; நிவீதௌ- கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தன; வின்யஸ்தயா—சுற்றி இடப்பட்டு; அஸித— நீல; சதுஷ்டயா – நான்கு; பாஹு-கரங்கள்; மத்யே- மத்தியில்; வக்த்ரம்–முகம்; ப்ருவா—அவர்கள் புருவங்களுடன்; குடிலயா- வளைந்த; ஸ்புட-நாசியின் சீற்றொலி; நிர்கமாப்யாம்-பெருமூச்சு விட்டுக் கொண்டு; ரக்த-சிவந்த; ஈக்ஷணேன-விழிகளுடன்; ச -மேலும்; மனாக்- ஏதோ; ரபஸம்-குமுறியெழுந்து; ததானௌ— பார்த்தனர்.
அந்த இரண்டு காவலர்களின் கழுத்தில் இடப்பட்டு நான்கு கரங்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்த புத்தம் புதுமலர்களினாலான மாலையில் வண்டுகள் மதுவருந்தி மயங்கிக் கொண்டிருந்தன. அவர்களது நெறித்த புருவங்களிலிருந்தும், நீண்டு விடைத்த நாசிகளிலிருந்தும், சிவந்த விழிகளிலிருந்தும் அவர்கள் எக்காரணத்தினாலோ சீற்றமுற்றிருக்கின்றனர் என்று தெரிந்தது.
பதம் 3.15.29
த்வாரி ஏதயோர் நிவிவிஸுர் மிஷதோர் அப்ருஷ்ட்வா
பூர்வா யதா புரட-வஜ்ர-கபாடிகா யா:
ஸர்வத்ர தே ‘விஷமயா முனய: ஸ்வ-த்ருஷ்ட்யா
யே ஸஞ்சரந்தி அவிஹதா விகதாபிஸங்கா
த்வாரி- வாயிலில்; ஏதயோ:-இரு வாயில்காவலர்களும்; நிவிவிஸு:—நுழைந்தனர்; மிஷதோ:-காணும் பொழுது; அப்ருஷ்ட்வா—அனுமதி எதுவுமின்றி; பூர்வா:-முன்போலவே; யதா – போன்ற; புரட-பொன்னாலான; வஜ்ர-வைரம்; கபாடிகா:-வாயில்கள்; யா: -அவை; ஸர்வத்ர -எங்கும்; தே—அவர்கள்; அவிஷமயா – வேறுபடுத்திக் காணும் உணர்வின்றி; முனய: மாமுனிவர்கள்: ஸ்வ -திருஷ்ட்யா-அவர்கள் எண்ணப்படி; யே-அவர்; ஸஞ்சரந்தி—சென்றனர்; அவிஹதா: எத்தடையுமின்றி; விகத-இன்றி; அபிஸங்கா: ஐயம்.
சனகரின் தலைமையின் கீழ் உள்ள முனிவர்கள் சென்றபோது எங்கினும் தாமாகவே கதவுகள் திறந்து இருந்தன. “யாம் ” “எமது” என்னும் எண்ணம் முனிவர்களிடம் ஒரு சிறிதும் இருந்ததில்லை. இவ்வாறு வைர வைடூரியங்களினால் பதிக்கப் பெற்றிருந்த ஆறு வாயில்களையும் எந்தவித சிரமமுமின்றி கடந்து சென்று அவர்கள் களங்கமற்ற மனதினராகத் தமது விருப்பம்போல் ஏழாவது வாயிலினுள் நுழைந்தனர்.
பதம் 3.15.30
தான் வீக்ஷ்ய வாத-ரஸனாம்ஸ் சதுர: குமாரான்
வ்ருத்தான் தஸார்த-வயஸோ விதிதாத்ம-தத்வான்
வேத்ரேண சாஸ்கலயதாம் அதத்-அர்ஹணாம்ஸ் தௌ
தேஜோ விஹஸ்ய பகவத்-ப்ரதிகூல-சீலௌ
தான்—அவர்கள்; வீக்ஷ்ய- கண்ட பின்னர்; வாத-ரஸனான்- நிர்வாணமாக; சதுர:-நான்கு; குமாரான்-குமாரர்கள்; வ்ருத்தான்-வயது; தஸ—அர்த—ஐந்து வருடங்கள்; வயஸ:-அவ்வயதின் தோற்றமுடையவர்களைப் போன்று; விதித-உணர்ந்தவர்கள்; ஆத்ம- தத்வான்-ஆத்மதத்துவத்தை; வேத்ரேண-தங்களது ஈட்டிகளினால்; ச-மேலும்; அஸ்கலயதாம்-தடுக்கப்பட்டு; அ-தத் -அர்ஹணான்- அவர்களிடமிருந்து இதனைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர்; தௌ— அந்த இரு காவலர்கள்; தேஜ- பெருமைகள்; விஹஸ்ய-ஒழுங்கு முறை புறக்கணிக்கப்பட்டு; பகவத்-ப்ரதிகூல—சீலௌ- பகவானுக்கு மகிழ்ச்சியளிக்காத தன்மை.
அந்நான்கு முனிவர்களும் சூழலைத் தவிர வேறு ஆடையெதுவும் அணியாமல் பார்ப்பதற்கு ஐந்து வயது பாலர்களைப் போன்று தோன்றினாலும் அவர்கள் உயிர்கள் அனைவர்க்கும் மூத்தவர்கள் என்பதோடு ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்களும் கூட. ஆனால் அவர்களது தோற்றத்தைக் கண்ட பகவானால் சிறிதும் விரும்பப்படாத குணங்களையுடைய அவ்விரு காவலர்களும் முனிவர்களின் பெருமைகளை அறியாது, அவர்களை இழிவாகக் கருதி அவர்கள் தடுக்கப்படுவதற்கு உரியவர்கள் அல்லர் என்ற போதிலும் அதனை அறியாது தமது கரங்களிலுள்ள ஈட்டிகளினால் தடுத்து நிறுத்தினர்.
பதம் 3.15.31
தாப்யாம் மிஷத்ஸ்வ் அநிமிஷேஷு நிஷித்யமானா:
ஸ்வர்ஹத்தமா ஹி அபி ஹரே: ப்ரதிஹார -பாப்யாம்
ஊசு: ஸுஹ்ருந்தம- தித்ருக்ஷித -பங்க ஈஷத்
காமானுஜேன ஸஹஸா த உபப்லுதாக்ஷா:
தாப்யாம்- அவ்விரண்டு காவலர்களினால்; மிஷத்ஸு – பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது; அநிமிஷேஷு:- வைகுண்ட லோகத்தில் உள்ள தேவர்கள்; நிஷித்ய மானா:-தடுக்கப்பட்டது; ஸு-அர்ஹத்தமா:- மேலான தகுதியுடையவர்கள்; ஹி அபி- இருந்தபோதும்; ஹரே:-முழுமுதற் கடவுளான ஹரி; ப்ரதிஹார- பாப்யாம்-இருவாயிற் காவலர்களினால்; ஊசு:-கூறினர்; ஸுஹ்ருத்- தம் மிகுந்த நேசிப்பிற்குரியவர்கள்; திக்ருக்ஷித-காண்பதற்கு ஆர்வமுடைய; பங்கே-பங்கமேற்பட்டதினால்; ஈஷத்-சிறிது ; காம- அனுஜேன- காமத்தின் இளைய சகோதரனால் (சினம்); ஸஹஸா- உடனே; தே-அம்மாமுனிவர்கள்; உபப்லுத-சீற்றங்கொண்டனர்; அக்ஷா:-விழிகள்.
அம்முனிவர்கள் மேலான தகுதியுடையவராயிருந்தும் பிற தேவர்கள் முன்னிலையில், தாம் மேலே செல்ல முடியாதவாறு ஸ்ரீஹரியின் வாயில் காவலர்களினால் தடைசெய்யப்பட்டவுடன் அவர்களது விழிகள் சிவந்தன. தங்களது நேசிப்பிற்குரிய குருவும், முழுமுதற் கடவுளுமான ஸ்ரீ ஹரியினைக் காண வேண்டும் என்னும் ஆர்வம் தடை செய்யப்பட்டதினால் எழுந்த சினமுமே அதன் காரணமாம்.
பதம் 3.15.32
முனய ஊசு:
கோ வாம் இஹைத்ய பகவத்- பரிச்சர்யயோச்சைஸ்
தத்-தர்மிணாம் நிவஸதாம் விஷம: ஸ்வபாவ:
தஸ்மின் ப்ரஸாந்த-புருஷே கத- விக்ரஹே வாம்
கோ வாத்மவத் குஹகயோ: பரிஸங்கனீய:
முனய:- மாமுனிவர்கள்; ஊக: கூறினர்; ஊசு:கூறினர்; க:-யார்; வாம் – நீவிர் இருவரும்; இஹ -வைகுண்டத்தில்; ஏத்ய-எய்தப் பெற்றது: பகவத்- முழுமுதற் கடவுளின்; பரிசர்யயா- தொண்டினால்; உச்சை:- முன்வினை புண்ணியச் செயல்களினால் உயர்வு பெற்று; தத் -தர்மிணாம் – பக்தர்களின்; நிவஸதாம்-வைகுண்டத்தில் இருக்கும்; விஷம:- விஷமம்; ஸ்வபாவ: சுபாவமுடையோர்; தஸ்மின்-பரம புருஷ பகவானிடத்தில்; ப்ரஸாந்த-புருஷே- கவலைகளற்றவர்; கத -விக்ரஹே—பகைவர் அற்றவர்; வாம் – நீவிர் இருவரின்; க:-யார்: வா—அல்லது; ஆத்ம—வத் -உம்மைப் போன்று; குஹகயோ:- பொய்ம்மையினைக் காக்கும்; பரிஸங்கணீய:- நம்பிக்கையற்றவர்களானது.
முனிவர்கள் கூறினர்: யார் இந்த இருவர்? பகவானுக்குப் பணி செய்யும் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டும் முரண்பட்ட செயலைச் செய்கின்றார்கள். பகவானிடமுள்ள அதே உயர்குணங்கள் இவர்களிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடியதாயிற்றே? வைகுண்ட லோகத்தில் இவர்கள் இருவரும் எப்படி வாழ்கின்றனர்? இறைவனது உலகத்தில் பகைவர் எவ்வாறு நுழைய முடியும்? முழுமுதற் கடவுள் பகைவர்கள் இல்லாதவராயிற்றே. அவர் மீது யார் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியும்? இவர்கள் இருவரும் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருத்தல் வேண்டும். அதனால்தான் இவர்கள் பிறரையும் தம்மைப் போல் கருதுகின்றனர்.
பதம் 3.15.33
நஹி அந்தரம் பகவதீஹ ஸமஸ்த குக்ஷாவ்
ஆத்மானம் ஆத்மனி நபோ நபஸுவ தீரா:
பஸ்யந்தி யத்ர யுவயோ: ஸுர- லிங்கினோ: கிம்
வ்யுத்பாதிதம் ஹி உதர-பேதி பயம் யதோ ‘ஸ்ய
ந-இல்லை; ஹி-ஏனெனில்; அந்தரம்-வேறுபாடு; பகவதி- முழுமுதற் கடவுளிடத்தில்; இஹ -இங்கே; ஸமஸ்த-குக்ஷௌ- அனைத்தும் அடிவயிற்றினுள் இருக்கிறது; ஆத்மானாம்—உயிர்வாழி; ஆத்மனி—பரமாத்மாவினிடத்தில்; நப:-சிறிதளவு வானம்; நபஸி- முழுவானத்தினுள்; இவ-போன்று; தீரா:-கற்றோர்; பஸ்யந்தி-காண்பது; யத்ர—அவரிடம்; யுவயோ:- நீவிர் இருவர்; ஸுர—லிங்கினோ:- வைகுண்ட லோகத்திலுள்ளவர்களைப் போல் ஆடையணிந்து; கிம்- எப்படி; வ்யுத்பாதிதம்-விழித்தல், வளர்ச்சியடைதல்; ஹி-உறுதியாக; உதர-பேதி—உடலுக்கும் ஆத்மாவிற்கும் இடையிலுள்ள வேறுபாடு; பயம்-பயம்; யத:எங்கிருந்து; அஸ்ய- பரமபுருஷ பகவானின்.
வைகுண்டலோகத்தில் முழுமுதற் கடவுளுக்கும் அங்கு வசிப்பவர்களுக்குமிடையே, எவ்வாறு பெரிய வானத்திற்கும் சிறிய வானத்திற்குமிடையே இணக்கம் நிலவுகிறதோ அதுபோல் முழு இணக்கம் நிலவுகிறது. சுமுகமான இணக்கம் நிலத்தில் அச்சத்தின் விதை எப்படி வேர் கொண்டது? இவ்விரு மனிதர்களும் வைகுண்டவாசிகளைப் போல் ஆடை அணிமணி அணிந்து தோன்றுகின்றனர். ஆனால் இவ்விணக்கமின்மையினை இவர்கள் எங்கிருந்து பெற்றிருந்தல் கூடும்?
பதம் 3.15.34
தத் வாம் அமுஸ்ய பரமஸ்ய விகுண்ட-பர்து:
கர்தும் ப்ரக்ருஷ்டம் இஹதீமஹி மந்த – தீப்யாம்
லோகான் இதோ வ்ரஜதம் அந்தர- பாவ-த்ருஷ்ட்யா
பாபீயஸஸ் த்ரய இமே ரிபவோ ‘ஸ்ய யத்ர
தத் – ஆகையினால்; வாம்- இவ்விருவருக்கும்; அமுஸ்ய- அவரது; பரமஸ்ய-பரம்பொருள்; விகுண்ட-பர்து:-வைகுண்டத்தின் பகவான்; கர்தும்- அருள்வதற்கு; ப்ரக்ருஷ்டம்-நன்மை; இஹ -இக்குற்றத்தைப் பொருத்தமட்டில்; தீமஹி-நாம் சிந்திப்போம்; மந்த-தீப்யாம்—இவர்களது புத்தி நிறைவுடையதாக இல்லை; லோகான்- பௌதிக உலகிற்கு; இத:-இந்த இடத்திலிருந்து; (வைகுண்டம்); வ்ரஜதம்— செல்வது; அந்தர-பாவ-இருமைநிலை; திருஷ்ட்யா- காண்பதின் நிமித்தமாக; பாபீயஸ:-பாவம் நிறைந்த; த்ரய:-மூன்று; இமே- இவை; ரிபவ:-பகைவர்கள்; அஸ்ய-உயிர்வாழியின்; யத்ர- எங்கே.
ஆகையினால் மாசுற்ற இவ்விருவரையும் எப்படித் தண்டிப்பது என்று நாம் சிந்திப்போம். அத்தண்டனை மிகப் பொருத்தமுடையதாக இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் இருவருக்கும் நன்மையருளப்பட வேண்டும். வைகுண்ட வாழ்க்கையிலேயே அவர்கள் இருமையினைக் கண்டதினால் அவர்கள் மாசுடையவர்களே ஆவர். ஆகையினால் அவர்கள் இருவரின் உயிர்கள் மூன்று வகையானப் பகைவர்களைப் பெற்றிருக்கும் மண் உலகிற்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
பதம் 3.15.35
தேஷாம் இதீரிதம் உபாவ் அவதார்ய கோரம்
தம் ப்ரஹ்ம-தண்டம் அதிவாரணம் அஸ்த்ர-பூகை:
ஸத்யோ ஹரேர் அனுசராவ் உரு பிப்யதஸ் தத்-
பாத-க்ரஹாவ் அபததாம் அதிகாதரேண
தேஷாம்- நான்கு குமாரர்களின்; இதி – இவ்வாறு; ஈரிதம்- உரைத்தது; உபெள-இரு வாயிற்காப்போரும்; அவதார்ய—புரிந்து கொண்டு; கோரம்-பயங்கரத்தினை; தம்- அந்த; ப்ரஹ்ம- தண்டம்- அந்தணரின் சாபம்; அநிவாரணம் – நிவாரணம் இல்லையென்று; அஸ்த்ர-பூகை; எந்தவிதமான ஆயுதத்தினாலும்; ஸத்ய:- உடனடியாக ; ஹரே:-பரமபுருஷ பகவானின்; அனுசரௌ-பக்தர்கள்; உரு–மிகவும்; பிப்யத:-அச்சமடைந்தனர்; தத்-பாத -க்ரஹௌ- அவர்கள் பாதங்களைப் பற்றினர்; அபததாம்-கீழே விழுந்து; அதி— காதரேண-மிகுந்த கவலையுடன்.
நிச்சயமாகப் பகவானின் பக்தர்களாயிருந்த அவ்விரு வாயிற் காவலர்களும் தாம் அந்தணர்களினால் சபிக்கப்படப் போகிறோம், அவ்வாறு சபிக்கப்பட்டால் அந்தணரின் சாபத்தினை எந்தவித ஆயுதத்தினாலும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து மிக்க கவலையுடன் அந்நால்வரின் பாதங்களில் வீழ்ந்தனர்.
பதம் 3.15.36
பூயாத் அகோனி பகவத்பிர் அகாரி தண்டோ
யோ நௌ ஹரேத ஸுர-ஹேலனம் அபி அஸேஷம்
மா வோ ‘நுதாப-கலயா பகவத்- ஸ்ம்ருதி -க்னோ
மோஹோ பவேத் இஹ து நௌ வ்ரஜதோர் அதோ ‘த:
பூயாத்-இவ்வாறிருக்கட்டும்; அகோனி – பாவத்திற்காக; பகவத்பி: -உம்மால்; அகாரி-செய்யப்பட்ட; தண்ட:-தண்டனை; ய:-அது; நௌ- எமக்குத் தொடர்புடைய; ஹரேத-அழிக்கப்பட வேண்டும்; ஸுர—ஹேலனம்-உயர்ந்த தேவர்களைப் பணியாதிருத்தல்; அபி- உறுதியாக; அஸேஷம்- எண்ணற்ற; மா—இல்லை; வ:-உமது: அநுதாப-அநுதாபத்தினால்; கலயா-சிறிய; பகவத்-முழுமுதற் கடவுளின் ஸ்ம்ருதி-க்ன:—நினைவினை அழிப்பதின்; மோஹ:- மாயை: பவேத்-இருத்தல் வேண்டும்; இஹ -மூட ஐந்துக்களின் வாழ்வில்; து-ஆனால்; நௌ—எமது: வ்ரஜதோ:-செல்கின்றவர்கள்; அத: அத:- கீழே பௌதிக உலகிற்கு;
இவ்வாறு முனிவர்களால் சபிக்கப்பட்டப் பின்னர் அக்காவலர்கள் கூறினர்: உம் போன்ற முனிவர்களுக்கு மரியாதையளிக்கத் தவறியமைக்காக நீங்கள் எம்மைத் தண்டித்தது நியாயமானதே. ஆயினும் எங்கள் பிரார்த்தனை என்னவென்றால் உங்கள் சாபத்தினால் நாங்கள் கீழுலகை அடைந்த போதிலும், முழுமுதற் கடவுளை மறக்கச் செய்யும் மாயைக்கு ஒரு நாளும் நாங்கள் ஆளாகிவிடக் கூடாது என்று எங்களுக்கு அருள்புரிய வேண்டுகிறோம்.
பதம் 3.15.37
ஏவம் ததைவ பகவான் அரவிந்த-நாப:
ஸ்வானாம் விபுத்ய ஸத்-அதிக்ரமம் ஆர்ய-ஹ்ருத்ய
தஸ்மின் யயௌ பரமஹம்ஸ- மஹா- முனீனாம்
அன்வேஷணீய-சரணௌ சலயன் ஸஹ-ஸ்ரீ
ஏவம் – இவ்வாறு; ததா ஏவ-அந்த நேரம்; பகவான் – முழுமுதற் கடவுள்; அரவிந்த-நாப:-அவரது நாபியில் ஒரு தாமரை மலருடன்; ஸ்வானாம்—அவரது பணியாளர்களின்; விபுத்ய-தெரித்து கொண்டு; ஸத்— மாமுனிவர்களுக்கு: அதிக்ரமம் -அவமரியாதை; ஆர்ய- நேர்மையானவர்களின்; ஹ்ருத்ய:- உவகைக்குரியவர்; தஸ்மின் – அங்கே; யயௌ – சென்றார்; பரம ஹம்ஸ— துறவிகள்;மஹா-முனீனாம் மகாமுனிவர்களினால்; அன்வேஷணீய – தேடி அடைவதற்குரிய; சரணௌ- இருதாமரைத் திருவடிகள்; சலயன்- நடந்து; ஸஹ-ஸ்ரீ:-அதிர்ஷ்ட தேவதையுடன்;
அதே நேரம், உந்திச் சுழியிலிருந்து தாமரை மலர் தோன்றியதினால் பத்மநாபர் என்றழைக்கப்படுபவரும், நேர்மையாளர்களின் மகிழ்ச்சியாக விளங்குபவருமான பகவான் தனது பணியாளர்களின் மூலம் முனிவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையினை அறிந்து கொண்டார். அதிர்ஷ்ட தேவதையான லட்சுமி தேவி உடன் வர அவர் துறவிகள் மற்றும் மகா முனிவர்களினால் நாளும் தேடப்படும் திருவடித் தாமரைகளினால் நடந்து அந்த இடத்தையடைந்தார்.
பதம் 3.15.38
தம் த்வ ஆகதம் ப்ரதிஹ்ருதௌபயிகம் ஸ்வ-பும்பிஸ்
தே ‘சக்ஷதாக்ஷ-விஷயம் ஸ்வ- ஸமாதி- பாக்யம்
ஹம்ஸ-ஸ்ரீயோர் வ்யஜனயோ: சிவ வாயு-லோலச் –
சுப்ராதபத்ர-ஸஸி-கேஸர- ஷீகராம்பும்
தம் — அவரது; து-ஆனால்; ஆகதம் -முன்வந்த; ப்ரதிஹ்ருத- ஏந்திய வண்ணம்; ஒளபயிகம்— அணிகலன்கள்; ஸ்வ-பும்பி:- அவரது துணைவர்களுடன்; தே-மாமுனிவர்கள் (குமாரர்கள்); அசக்ஷதா-கண்டு அக்ஷ-விஷயம் -காட்சிக்குரிய ஒரு பொருளாக; ஸ்வ-ஸமாதி- பாக்யம்-மெய்மறக்கும் நிலையில் காணக் கூடியவர்; ஹம்ஸ- ஸ்ரீயோ:-வெண்ணிற அன்னங்களைப் போல் அழகு மிக்க; வ்யஜனயோ:-சாமரங்கள்; சிவ-வாயு- சுகமானக் காற்று; லோலத்-அசைதல்; சுப்ர— ஆதபத்ர —வெண்கொற்றக்குடை; ஸஸி – சந்திரன்; கேஸர—முத்துக்கள்; ஷீகர-துளிகள்; அம்பும்-நீர்;
சனகரின் தலைமையின் கீழ் உள்ள முனிவர்கள், தம்மை மறந்த சமாதி நிலையில் தங்கள் உள்ளங்களில் தரிசித்த முழுமுதற் கடவுளான விஷ்ணுவை தங்கள் விழிகளினால் நேரே தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர். அவர் முன்னே வரும்பொழுது அவரது துணைவர்கள் அவருக்குரிய உபசாரப் பொருட்களான வெண்கொற்றக் குடை மற்றும் வெண்சாமரங்கள் போன்றவற்றை ஏந்திய வண்ணம் வந்தனர். வெண் சாமரங்கள் இரண்டும், இரு வெண்ணிற அன்னங்களைப் போல் வெண்மையான மயிர்களினால் செய்யப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து எழுந்த சுகமானக் காற்று வெண்கொற்றக் குடையிலிருந்த முத்து மாலைகளை அசைத்தபொழுது, முழு வெண்ணிலவிலிருந்து அமிர்தத் துளிகள் சிதறியது போன்றும் வெம்மைக்காற்றினால் வெண்பனிக்கட்டிகள் உருகி வழிவது போன்றும் இருந்தன.
பதம் 3.15.39
க்ருத்ஸ்ன -ப்ரஸாத-ஸுமுகம் ஸ்ப்ரூஹணீய-தாம
ஸ்நேஹாவலோக-கலயா ஹ்ருதி ஸம்ஸ்ப்ருஸந்தம்
ச்யாமே ப்ருதாவ் உரஸி ஸோபிதயா ஸ்ரீயா ஸ்வஸ்-
சூடாமணிம் ஸுபகயத்தம் இவாத்ம- திஷ்ண்யம்
க்ருத்ஸ்ன-ப்ரஸாத— அனைவரையும் ஆசீர்வதிக்கின்ற; ஸு-முகம்- மங்களகரமான முகம்; ஸ்ப்ருஹணீய-விரும்பத்தகும்; தாம- சரணாலயம்: ஸ்நேக-நேசம்; அவலோக- காண்பது; கலயா -விரிவினால்; ஹ்ருதி-இதயத்தினுள்; ஸம்ஸ்ப்ருஸந்தம்- தொடும்; ச்யாமே- கருமை நிற பசுவானுக்கு; ப்ருதௌ—அகன்ற; உரஸி- மார்பு: ஸோபிதயா-அலங்கரிக்கப்பட்ட; ஸ்ரீயா-அதிர்ஷ்ட தேவதை; ஸ்வ:-மேலுலகங்கள்; சூடா-மணிம் – உச்சிச் சிகரம்; ஸுபகயந்தம்— நல்லதிர்ஷ்டத்தினைப் பரப்புகின்ற; திஷ்ண்யம்-இருப்பிடம்.
பகவான் மகிழ்ச்சிகளின் உறைவிடமாக இருக்கின்றனர். அவரது மங்களகரமானத் தோற்றம் அனைவரையும் ஆசீர்வதிப்பதற்கானதாகும். அவரது நேசமிகுப் புன்னகையும் பாசமிகுப் பார்வையும் தம்மை ஊடுருவிச் சென்று இதயத்தைத் தொடும். பகவானின் எழில் உடல் கருநிறமுடையதாகும். அவரது பரந்து விரிந்த மார்பு அதிர்ஷ்ட தேவதையின் உறைவிடமாகும். தேவலோகங்களின் உச்சிச் சிகரமெனத் திகழும் ஆன்மீகலோகம் முழுவதையும் அவளே பெருமை செய்கின்றாள். இவ்வாறு ஆன்மீக உலகின் அழகினையும் நல்லதிர்ஷ்டத்தையும் பகவானே தனிப்பட்ட முறையில் விரிவடையச் செய்கின்றார் என்று தோன்றுகிறது.
பதம் 3.15.40
பீதாம்ஸுகே ப்ருது-நிதம்பினி விஸ்புரந்த்யா
காஞ்ச்யாலிபிர் விருதயா வன- மாலயா ச
வல்கு-ப்ரகோஷ்ட-வலயம் விநதா- ஸுதாம்ஸே
வின்யஸ்த-ஹஸ்தம் இதரேண துனானம் அப்ஜம்
பீத—அம்ஸுகே-பொன்னிற மஞ்சளாடை உடுத்து; ப்ருது- நிதம்பினி-அவரது விரிந்த இடைப் பகுதியில்; விஸ்புரந்த்யா— மின்னுகின்ற ஒளியுடன்; காஞ்சியா—ஒட்டியாணத்துடன்; அலிபி:- வண்டுகளினால்; விருதயா-ரீங்காரம் செய்ய; வன- மாலயா- அன்றலர்ந்த மலர் மாலையுடன்; ச-மேலும்; வல்கு-எழில்மிக்க; ப்ரகோஷ்ட-மணிக்கட்டு; வலயம்- கைவளைகள்; விநதா—ஸுத- விநதையின் மைந்தனான கருடன்; அம்ஸே-தோளின்மீது; வின்யஸ்த- வைத்து; ஹஸ்தம்- ஒரு கரத்தை; இதரேண—மற்றொரு கரத்தில்; துனானம்- சுழற்றியபடி; அப்ஜம்-ஒரு தாமரை மலர்.
அவரது விரித்த இடையில் அரைக்கச்சையாக உடுத்திருந்த பொன் மஞ்சள் நிற பட்டாடையின் மீது ஒளிர்கின்ற ஒட்டியாணம் ஒன்றை அணிந்திருந்தார். அவரது மார்பில் தொங்கிய அன்றலர்ந்த மலர்களினால் ஆன மாலையில் வண்டுகள் ரீங்காரமிட்டபடி மொய்த்துக் கொண்டிருந்தன. அவரது வன்மை மிக்க மணிக்கட்டுக்களை கைவளைகள் அணிசெய்தன. அவர் தனது ஒரு கரத்தினைத் தனது வாகனமாக கருடனின் தோள்மீது போட்டிருந்தார். மற்றொரு கரம் தாமரை மலரைச் சுழற்றியபடி இருந்தது.
பதம் 3.15.41
விதத்யுத்-க்ஷிபன்-மகர-குண்டல- மண்டனார்ஹ-
கண்ட-ஸ்தலோன்னஸ-முகம் மணிமத் – கிரீடம்
தோர்-தண்ட-ஷண்ட-விவரே ஹரதா பரார்த்ய-
ஹாரேண-சுந்தர-கதேன ச கௌஸ்துபேன
வித்யுத்-மின்னலடிக்கும்; க்ஷிபத் – மின்னுகின்ற; மகர- மகரவடிவிலான; குண்டல- குண்டலங்கள்; மண்டன- அலங்கரித்தல்; அர்ஹ- பொருந்துகிற; கண்ட-ஸ்தல— கன்னங்கள்; உன்னஸ- நேரான நாசி: முகம்- திருமுகம்; மணி- மத்-மணிகள் பதித்த; கிரீடம்-கிரீடம்; தோ: தண்ட- அவரது வலிமைமிக்க நான்கு கரங்கள்; ஷண்ட-கூட்டம்; விவரே-இடையில்; ஹரதா-அழகிய; பர-அர்த்ய-மதிப்புமிக்க; ஹாரேண- கழுத்தணி; சுந்தர-கதேன- கழுத்தினை அலங்கரித்தது; ச-மேலும்; கௌஸ்துபேன- கௌஸ்துப மணியினால்.
அவரது திருமுகத்தினை வேறுபடுத்திக் காட்டும் இரு கன்னங்களும், இரு செவிகளில் மின்னலைப் போல் ஒளிசெய்த தொங்கும் மகரகுண்டலங்களின் அழகினை மேலும் அழகு செய்தன. அவரது நாசி உயர்ந்து ஒரே சீராக இருந்தது. வைரங்களும் வைடூரியங்களும் பதிக்கப் பெற்ற மணிமகுடம் அவரது திருமுடியினை அணி செய்து கொண்டிருந்தது. அவரது கழுத்திற்கும் நாற்கரங்களுக்கும் இடையே அழகிய அட்டிகைத் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் கௌஸ்துப மணி பதிக்கப் பெற்றிருந்த மாலையொன்று அவர் கழுத்தினை அலங்கரித்தது.
பதம் 3.15.42
அத்ரோபஸ்ருஷ்டம் இதி சோத்ஸ்மிதம் இந்திராயா:
ஸ்வானாம் தியா விரசிதம் பஹு-ஸௌஷ்டவாட்யம்
மஹ்யம் பவஸ்ய பவதாம் ச பஜந்தம் அங்கம்
நேமுர் நிரீக்ஷ்ய ந வித்ருப்த- த்ருஸோ முதா கை:
அத்ர-இங்கே, அழகைப் பொருத்தமட்டில்; உபஸ்ருஷ்டம்-விழச் செய்யும்; இதி- இவ்வாறு; ச-மேலும்; உத்ஸ்மிதம்-அவள் அழகின் பெருமையினை; இந்ராயா:- அதிர்ஷ்ட தேவதையின்; ஸ்வானாம் -அவரது பக்தர்களின்; தியா -புத்தியினால்; விரசிதம்- தியானித்து; பஹு-ஸௌஷ்டவ ஆட்யம்- மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு; மஹ்யம்- எனது; பவஸ்ய-சிவபெருமானின்; பவதாம்- நீங்கள் அனைவரும்; ச – மேலும்; பஐந்தம்-வணங்கப்பட்டு; அங்கம்- அங்கம்; நேமு:கீழே குனிந்து; நிரீஷ்ய-கண்ட பின்னர்; ந-இல்லை! வித்ருப்த-திருப்தியடைதல்; த்ருஸ:-விழிகள்; முதா- மகிழ்ச்சியில்; கை:—அவர்களது தலைகளினால்;
பக்தர்களின் மதி நுட்பத்தினால் பல்லாற்றானும் விரித்துரைக்கப்படும் நாராயணரது கண்ணைக் கவரும் அழகு, அழகுக்கெல்லாம் அழகு செய்யும் அதிர்ஷ்ட தேவதையான இலட்சுமியின் அழகினையும் வெல்லும் வண்ணம் இருந்தது. அன்பார்ந்த தேவர்களே, இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டிய பகவான், என்னாலும், சிவபெருமானாலும், உங்கள் எல்லோராலும் வணங்குதற்குரியவராவார். திறந்த விழி மூடாது அவரது அழகினை அள்ளிப் பருகிய முனிவர்கள் ஆனந்தம் மீதுறத் தமது சென்னி தாழ்த்தி அவரது தாமரைத் திருவடிகளைப் பணிந்தனர்.
பதம் 3.15.43
தஸ்யாரவிந்த-நயனஸ்ய பதாரவிந்த-
கிஞ்ஜல்க-மிஸ்ர-துளஸுமகரந்த- வாயு:
அந்தர்-கத: ஸ்வ-விவரேண சகார தேஷாம்
ஸங்க்ஷோபம் அக்ஷர-ஜுஷாம் அபி சித்த-தன்வோ:
தஸ்ய-அவரது; அரவிந்த- நயனஸ்ய -செந்தாமரை விழிகளையுடைய பகவான்; பத-அரவிந்த—தாமரைத் திருவடிகளின்; கிஞ்ஜல்க— முன்பாதங்களின்; மிஸ்ர- கலந்திருக்கும்; துளஸீ-துளசி இலைகள்; மகரந்த – நறுமணம்; வாயு:-காற்றில்; அந்த:- கத: நுழைந்தது; ஸ்வ-விவரேண —அவர்கள் நாசிகளின் வழியே: சகார-செய்தது; தேஷாம் -குமாரர்களின்; ஸங்க்ஷோபம்-மாற்றத்திற்கான போராட்டம்; அக்ஷர—ஜுஷாம்—அருவப் பிரம்ம உணர்வில் பற்றுடையோர்; அபி— இருந்த போதிலும்; சித்த-தன்வோ:-மனம், உடல் இரண்டின்.
முழுமுதற் கடவுளின் திருவடித்தாமரைகளின் கீழிருந்த துளசி இலைகளில் இருந்து காற்றில் இழைந்து வந்த நறுமணமானது அம் முனிவர்களின் நாசிகளினுள் புகுந்தவுடன் அவர்கள் அருவப் பிரம்ம உணர்வில் மிகுந்த பற்றுடையோராக விளங்கிய போதிலும், தங்கள் உடல்களிலும் மனங்களிலும் ஒருமாற்றம் ஏற்படுவதை உணர்ந்தனர்.
பதம் 3.15.44
தே வா அமுஷ்ய வதனாஸித- பத்ம-கோஸம்
உத்வீக்ஷ்ய ஸுந்தரதராதர- ருத்த-ஹாஸம்
லப்தாஸிஷ: புனர் அலேக்ஷ்ய ததீயம் அங்க்ரி
த்வந்வம் நகாருண-மணி-ஸ்ரயணம் நிதத்யு:
தே—அம்முனிவர்கள்; வை-உறுதியாக; அமுஷ்ய – முழு முதற்கடவுளின்; வதன— வதனம்; அஸித-நீலம்;பத்ம- தாமரை; கோஸம்- உள்ளே; உத்வீக்ஷ்ய-கண்டபிறகு ; ஸுந்தர-தர_மிகுந்த அழகுடைய; அதர—அதரங்கள்; குந்த- முல்லை மலர்; ஹாஸம்-புன்னகை; லப்த- அடைந்தனர்; ஆஸிஷ:-வாழ்க்கை இலட்சியத்தினை; புன:- மீண்டும்; அவேக்ஷ்ய-கீழ்நோக்கி; ததீயம் -அவரது; அங்கீரி— த்வந்வம் -தாமரைத் திருவடிகள்; நக-நகங்கள்; அருண-சிவந்த; மணி-இரத்தினம்; ஸ்ரயணம்—அடைக்கலம்; நிதத்யு:- தியானித்தனர்.
பகவானின் அழகியத் திருமுகத் தோற்றம் நீல வண்ணத் தாமரையின் உட்பகுதியினைப் போல் அவர்களுக்கு காட்சி தந்தது. அவரது புன்னகையோ மலர்ந்த முல்லை மலர்களைப் போல் தோன்றியது. பகவானின் திருமுக அழகினைக் கண்டவுடன் அம்முனிவர்கள் முழுத் திருப்தியடைந்தனர். அவர்கள் அவரை மேலும் காண விரும்பி அவரது திருவடித்தாமரைகளில் சிவந்த இரத்தினங்களைப் போல் ஜொலித்த விரல் நகங்களை நோக்கினர். இவ்வாறு அவர்கள் பகவானின் உன்னத உடலின் எழிற்கோலங்களை மேலும் மேலும் கண்டு இறுதியில் பகவானின் தனிப்பட்ட வடிவத்தினைத் தியானிப்பதில் வெற்றியடைந்தனர்.
பதம் 3.15.45
பும்ஸாம் கதிம் ம்ருகயதாம் இஹ யோக-மார்கைர்
த்யானாஸ்பதம் பஹு-மதம் நயனாபிராமம்
பௌம்ஸ்னம் வபுர் தர்ஸயானம் அனன்ய-ஸித்தைர்
ஒளத்பத்திகை: ஸமக்ருணன் யுதம் அஷ்ட-போகை;
பும்ஸாம்- அவர்களின்; கதிம்-விடுதலை; ம்ருகயதாம்-தேடிக் கொண்டிருப்போர்; இஹ- இவ்வுலகில்; யோக-மார்கை:- அஷ்டாங்க யோக முறைகளினால்; தியான-ஆஸ்பதம்- தியானத்தின் இலட்சியப் பொருள்; பஹு-சிறந்த யோகிகளினால்; மதம்— அங்கீகரிக்கப்பட்டு; நயன- விழிகள்; அபிராமம்-மகிழ்ச்சியளிக்கும்; பெளம் ஸ்னம்— மனிதன்; வபு:வடிவம்;தர்ஸயானம் காட்சிப்படுத்துதல்; அனன்ய— பிறரால் அன்று; ஸித்தை:- நிறைவான; ஒளத்பத்திகை:-நித்தியமாக இருக்கும்: ஸமக்ருணன்-புகழ்ந்து; யுதம்—நிறைந்துள்ள முழுமுதற் கடவுள்; அஷ்ட-போகை:-எட்டு விதமான சாதனைகள்;
பகவானின் இக்கோலமே யோக முறைகளைப் பின்பற்றுபவர்களினால் தியானிக்கப்படுகிறது. இதுவே தியானத்தில் யோகிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மகா யோகிகளினால் நிரூபிக்கப்பட்டிருப்பதினால் இது கற்பனையன்று, உண்மையே ஆகும். பகவான் எட்டு வகையான சாதனைகளை முற்றிலும் உடையவராக விளங்குகிறார். ஆனால் பிறருக்கோ இச்சாதனைகள் முழு நிறைவுடன் கிடைப்பதற்குச் சாத்தியமே இல்லை.
பதம் 3.15.46
குமாரா ஊசு:
யோ ந்தர் ஹிதோ ஹ்ருதி கதோ ‘பி துராத்மனாம் த்வம்
ஸோ ‘த்யைவ நோ நயன மூலம் அனந்த ராத்த:
யர்ஹி ஏவ கர்ண-விவரேண குஹாம் கதோ ந:
பித்ரானுவர்ணீத-ரஹா பவத்- உத்பவேன
குமாரா: ஊசு:-குமாரர்கள் கூறினர்; ய:-அவர்; அந்தர்ஹித:- வெளிப்படுவதில்லை; ஹ்ருதி— இதயத்தில்; கத:-இருக்கின்றவர்; அபி-இருந்தபோதிலும்; துராத்மனாம்-துராத்மாக்கள்; த்வம் -நீர்; ஸ :-அவர்; அத்ய—இன்று; ஏவ-உறுதியாக; ந:-நாங்கள்; நயன – மூலம் நேருக்கு நேர்; அனந்த—ஓ எல்லையற்றவரே; ராத்த:- எய்துதல்; யர்ஹி—எப்பொழுது; ஏவ-உறுதியாக; கர்ண- விவரேண- செவிகளின் மூலம்; குஹாம்-புத்தி: கத: எய்தப் பெற்றது; ந- எங்கள்; பித்ரா-பிதாவினால்; அனுவர்ணீத—விளக்கப்பட்ட; ரஹா:-துன்பங்கள்; பவத்— உத்பவேன—உமது காட்சியினால்.
குமாரர்கள் கூறினர்: போற்றுதலுக்குரிய பகவானே, நீர் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருந்த போதிலும் தீயவர்களிடத்து நீர் தோன்றுவதில்லை. நீர் எல்லையற்றவராக இருந்த போதிலும் எங்கள் மீது கருணை கொண்டு நாங்கள் நேருக்கு நேர் தரிசிக்கும் பாக்கியத்தினை எமக்கு அருளியிருக்கின்றீர். உம்மைப் பற்றி எங்கள் தந்தையான பிரம்ம தேவரிடமிருந்து செவி வழியாக நாங்கள் கேட்டறிந்தவையெல்லாம் உமது அன்புவடிவினைக் கண்ட பின்பே உண்மையில் உணரப்படுகின்றன.
பதம் 3.15.47
தம் த்வாம் விதாம பகவன் பரம் ஆத்ம-தத்வம்
ஸத்வேன ஸம்ப்ரதி ரதிம் ரசயந்தம் ஏஷாம்
யத் தே ‘னுதாப-விதிதைர் த்ருட-பக்தி-யோகைர்
உத்க்ரந்தயோ ஹ்ருதி விதுர் முனயோ விராகா:
தம்—அவரது; த்வாம்- நீர்; விதாம-நாங்கள் அறிவோம்; பகவன்-ஓ, முழுமுதற் கடவுளே; பரம் –பரம; ஆத்ம- தத்வம்-பூரண உண்மை; ஸத்வேன—உமது சுத்த சத்துவ வடிவத்தினால்; ஸம்ப்ரதி- இப்பொழுது; ரதிம்-பகவான் மீதான அன்பு; ரசயந்தம்- ஏற்படுத்திக் கொண்டு; ஏஷாம்—அவர்கள் அனைவரும்; யத்—அந்த; தே-உமது; அனுதாப-அனுதாபம்; விதிதை:-புரிந்து கொள்ளப்படுதல்; த்ருட— மாறாத; பக்தி— யோகை:- பக்தி யோகத்தன் மூலம்; உத்க்ரந்தய:-பற்று ஏதுமின்றி, பெளதிகக் கட்டிலிருந்து விடுதலை பெறுதல்; ஹ்ருதி- இதயத்தில்; விது:-உணர்ந்துக் கொண்டு; முனய:-மாமுனிவர்கள்; விராகா:-பௌதிக வாழ்வில் பற்றுக் கொள்வதில்லை;
நீரே பூரண உண்மையென்றும், மாசற்ற சத்துவ குணத்தின் உன்னத வடிவத்தினை வெளிப்படுத்தும் முழுமுதற் கடவுள் என்றும், நாங்கள் நன்கறிவோம். இந்த உன்னதமான உமது நித்திய வடிவமானது, தமது உள்ளங்களைத் தூய்மை செய்து கொண்ட மாமுனிவர்களினால், மாறாத பக்தித் தொண்டின் மூலம் பெறும் உமது கருணையினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக் கூடியதாகும்.
பதம் 3.15.48
நாத்யந்திகம் விகணயந்தி அபி தே ப்ரஸாதம்
கிம்வ் அன்யத் அர்பித-பயம் ப்ருவ உன்னயைஸ்தே
யே ‘ங்க த்வத்-அங்க்ரி-ஸரணா பவத கதாயா:
கீர்தன்ய-தீர்த-யஸஸ: குஸலா ரஸ- ஜ்ஞா:
ந -இல்லை; ஆத்யந்திகம்- விடுதலை; விகணயந்தி -கவலைப்படுவது; அபி-கூட; தே-அவர்கள்; ப்ரஸாதம்-ஆசிகள்; கிம் உ- என்ன சொல்வது; அன்யத் – பிற பௌதிக இன்பங்கள்; அர்பித-கொடுக்கப்பட்ட; பயம் -பயம்; ப்ருவ:-புருவங்களின்; உன்னயை:-உயர்த்துவதினால்; தே-உமது; யே-அப்பக்தர்கள்; அங்க-ஓ, முழுமுதற் கடவுளே; த்வத்-உமது; அங்க்ரி- தாமரைத் திருவடி; ஸரணா:-சரணடைவோர்; பவத:-உமது; கதாயா:- சரிதங்களை; கீர்தன்ய-கீர்த்தனம் பண்ணுவதற்குரிய; தீர்த-தூய; யஸஸ:-பெருமைகள்; குஸலா:-மிகத் தேர்ச்சி பெற்ற; ரஸ-ஜ்ஞா:- ரஸ ஞானம் உடையோர்.
பொருட்களை உள்ளவாறு புரிந்து கொள்வதில் மிகுந்த தேர்ச்சியும் உயர்ந்த மதியும் உடையவர்கள் ஓதுவதற்கும் கேட்பதற்குமுரிய பகவானின் மங்களகரமான செயல்கள் மற்றும் லீலைகளைப் பற்றிய சரிதங்களைக் கேட்பதில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற மனிதர்கள் உலகின் மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படும் லெளகீக விடுதலையினைப் பற்றிக் கூடக் கவலைப்படுவதில்லை என்றால் முக்கியத்துவமற்ற தேவலோகம் போன்ற இன்பங்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பதம் 3.15.49
காமம் பவ: ஸ்வ-வ்ருஜினைர் நிரயேஷு ந: ஸ்தாச்
சேதோ ‘ளிவத் யதி நு தே பதயோ ரமேத
வாசஸ் ச நஸ் துளசிவத் யதி தே ‘ங்க்ரி-ஸோபா:
பூர்யேத தே குண-கணைர் யதி கர்ண-ரந்த்ர
காமம் -தகுதியுள்ளவரைக்கும்; பவ: -பிறப்பு; ஸ்வ -வ்ருஜினை:- எங்களது பாவச் செயல்களினால்; நிரயேஷு—கீழான பிறப்புக்களில்; ந:- எங்கள்; ஸ்தாத்—இருக்கட்டும்; சேத:-மனங்கள்; அளி -வத்—வண்டுகளைப் போன்று : யதி-இருந்தால்; நு—இருக்கலாம்; தே-உமது; பதயோ:-உமது தாமரைத் திருவடிகளிடத்து ரமேத- ஈடுபட்டிருத்தல்; வாச:-வார்த்தைகள்; ச – மேலும்; ந:- எமது; துளசி-வத் -துளசி இலைகளைப் போன்று ; யதி-இருப்பது போல்; தே-உமது; அங்க்ரி—உமது தாமரைத் திருவடிகளிடத்து; ஸோபா: அழகுபெறுகின்றன; பூர்யேத-நிரப்பப்படுதல்; தே-உமது; குண- கணை:- உன்னதக் குணங்களினால்; யதி—இருப்பது போல்; கர்ண— ரந்த்ர:-செவியின் துளைகள்;
ஓ, பகவானே உம்மை வணங்குகிறோம். நீர் எங்களை எந்தவித நரக நிலையுடைய வாழ்க்கையில் பிறக்கச் செய்தாலும், எங்களது இதயங்களும் மனங்களும் உமது திருவடித் தாமரைகளின் தொண்டில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும் வரை எமது வார்த்தைகள் (உமது செயற்கரியச் செயல்களைப் பேசுவதினால்) துளசி இலைகள் உமது திருவடித் தாமரைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் பொழுது எவ்வாறு எழில் பெறுகின்றவோ அதுபோல் அழகு செய்யப்படுகின்றன. மேலும் எமது செவிகளோ எப்பொழுதும் உமது உன்னதக் குணங்களின் பாடல்களை கேட்டுக் கொண்டுள்ளன.
பதம் 3.15.50
ப்ராதுஸ்சகர்த யத் இதம் புருஹூத ரூபம்
தேனேஸ நிர்வ்ருதிம் அவாபுர் அலம் த்ருஸோ ந:
தஸ்மா இதம் பகவதே நம இத் விதேம
யோ ‘நாத்மனாம் துருதயோ பகவான் ப்ரதீத:
ப்ராதுஸ்சகர்த—நீர் வெளிப்படுத்தியிருக்கும்; யத்—எது; இதம்- இது; புருஹூத-ஓ, சிறந்த வழிபடப்படுபவரே; ரூபம்- நித்திய வடிவம்; தேன- அந்த வடிவத்தினால்; ஈஸ-ஓ, பகவானே; நிர்வ்ருதிம் -திருப்தி; அவாயு:- எய்தினோம்; அலம்- மிகவும்; த்ருஸ:-பார்வை; ந-எமது; தஸ்மை—அவருக்கு; இதம் – இந்த; பகவதே- முழுமுதற் கடவுளுக்கு; நம:-வந்தனங்கள்; இத்-மட்டும்; விதேம-அர்ப்பணிக்க விடுவீராக; ய:-யார்; அநாத்மனாம்- – மதிகுறையுடையோர்; துருதய:-காணமுடியாது; பகவான்- முழுமுதற் கடவுள்; ப்ரதீத:-எம்மால் தரிசிக்கப்பட்டிருப்பது.
ஓ, வணங்குதற்குரிய பகவானே, ஆகையினால் நாங்கள் எமது மரியாதைக்குரிய வந்தனங்களை நீர் எங்கள் முன் மிகவும் அன்புடன் வெளிப்படுத்தியிருக்கும் முழுமுதற் கடவுளின் நித்திய வடிவத்திற்கு அர்ப்பணிக்கின்றோம். உமது மிக உயர்ந்த நித்திய வடிவத்தினைத் அறிவற்ற மூடர்களினால் காணவியலாது. ஆயினும் நாங்கள் எமது மனதாலும், பார்வையாலும் அதனைத் தரிசிப்பதில் மிகுந்த மன நிறைவு அடைகிறோம்.
ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “கடவுளின் பரலோக வர்ணனைகள்” எனும் தலைப்பைக் கொண்ட பதினைந்தாவது அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.