அத்தியாயம் – 9
பகவானுக்கு ஏற்புடைய விடைகள்
பதம் 2.9.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அரசே, ஒருவன் பரமபுருஷ பகவானின் சக்தியால் கவரப்பட வேண்டும். இல்லையெனில் தூய ஆத்மா ஜட உடலுடன் கொண்டுள்ள உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அத்தகைய உறவு, தனது உடல் இயங்குவதை ஒருவன் சொப்பனத்தில் காண்பதைப் போன்றதாகும்.
பதம் 2.9.2 : மாயையால் கவரப்பட்ட ஜீவராசி பகவானின் பகிரங்க சக்தியால் அளிக்கப்படும் பலவித ரூபங்களில் தோன்றுகிறான். ஜட இயற்கைக் குணங்களில் இன்பம் அனுபவிக்கும் வேளையில், சிறைப்பட்ட ஜீவராசி, “நான், எனது” எனும் தப்பெண்ணத்தில் ஆழ்ந்து விடுகிறான்.
பதம் 2.9.3 : ஜீவராசி தனது மகிமை வாய்ந்ததான உண்மையான நிலையில் நிலைபெற்று, காலத்திற்கும் ஜட சக்திக்கும் அப்பாற்பட்ட உன்னதத்தை அனுபவிக்கத் துவங்குகிற உடனேயே, (நான், எனது எனும்) இரு தப்பான எண்ணங்களைத் துறந்து பரிபூரண ஆத்மாவாக தோற்றமளிக்கிறான்.
பதம் 2.9.4 : ராஜனே, பிரம்ம தேவர் பக்தியோகத்தில் உண்மையான தவத்தை மேற்கொண்டார். இதனால் மிகவும் திருப்தியடைந்த முழுமுதற் கடவுள். தமது நித்தியமான உன்னத ரூபத்துடன் பிரம்மாவின் எதிரே காட்சியளித்தார். அதுவே பந்தப்பட்ட ஆத்மாவை தூய்மைப்படுத்துவதற்குரிய குறிக்கோளாகும்.
பதம் 2.9.5 : முதல் ஆன்மீக குருவும், பிரபஞ்சத்திலேயே உயர்ந்தவருமான பிரம்ம தேவரால் தமது தாமரை ஆசனத்திற்குரிய பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஜட உலகைப் படைக்க வேண்டுமென்று அவர் சிந்தித்தபொழுது, அதற்கான சரியான மார்க்கத்தை அவரால் புரிந்து கொள்ள முடியாதது மட்டுமல்லாமல், அத்தகைய படைப்பிற்கான முறையையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதம் 2.9.6 : நீருக்குள், இத்தகைய சிந்தனையில் ஈடுபட்டிருந்த வேளையில், அருகில் இரு அட்சரங்கள் இருமுறை ஒலித்ததைக் கேட்டார். அட்சரங்களில் ஒன்று, ‘ஸ்பர்ச” எழுத்துக்களின் பதினாறாம் இடத்திலிருந்தும், மற்றது இருபத்தொன்றாம் இடத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும். இரண்டும் இணைந்து துறவு வாழ்வின் செல்வமாயின.
பதம் 2.9.7 : ஒசையைக் கேட்டதும் அதை உச்சரித்தவர் யாரென்பதை எல்லாத் திசைகளிலும் தேடிக் கண்டுபிடிக்க அவர் முயன்றார். ஆனால் தன்னைத் தவிர வேரொருவரையும் அவரால் காண முடியவில்லை, அச்சமயம் தனக்குக் கட்டளை இடப்பட்டதுபோல், தன் தாமரை ஆசனத்தில் திடமாக அமர்ந்து, தவத்தை நிறைவேற்றுவதில் தன் கவனத்தைச் செலுத்துவதுதான் விவேகம் என்று அவர் எண்ணினார்.
பதம் 2.9.8 : பிரம்ம தேவர் தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினார். உன்னதமான இந்த அசரீரியைக் கேட்ட அவர், அதை தெய்வவாக்காக ஏற்று தமது மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்தினார். அவர் இயற்றிய தவங்கள் ஜீவராசிளுக்கு மிகச் சிறந்த பாடமாக அமைகின்றன. இவ்வாறாக அவர் எல்லா தபஸ்விகளிலும் மிகச்சிறந்தவரென அறியப்படுகிறார்.
பதம் 2.9.9 : பிரம்ம தேவரின் தவத்தில் மிகவும் திருப்தியுற்ற முழுமுதற் கடவுள். தமது சொந்த வசிப்பிடமாகிய வைகுண்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். வைகுண்டம் மற்றெல்லாக் கிரகங்களையும் விட பரமானதாகும். பகவானின் உன்னதமான இவ்வசிப்பிடம், எல்லாத் துன்பங்களிலிருந்தும், பௌதிக பயத்திலிருந்தும் விடுபட்டுள்ள தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்களால் வணங்கப்படுகிறது.
பதம் 2.9.10 : பகவானுக்குச் சொந்தமான அந்த வசிப்பிடத்தில், பௌதிக குணங்களான அறியாமையும், தீவிர உணர்ச்சியும் கிடையாது. அங்குள்ள நற்குணத்தின் மீது அவற்றின் ஆதிக்கமும் கிடையாது. அங்கு காலத்தின் ஆதிக்கம் இல்லை. ஆகவே மாயையான, பகிரங்க சக்தியைப் பற்றி கூற என்ன இருக்கிறது; அப்பிரதேசத்தினுள் அதனால் புக முடியாது. வித்தியாசமில்லாமல் தேவர்களும், அசுரர்களும் பக்தர்களாக இருந்து பகவானை வழிபடுகின்றனர்.
பதம் 2.9.11 : வைகுண்டலோக வாசிகள், பிரகாசிக்கும் நீல நிற மேனியைப் பெற்றிருப்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கண்கள் தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன. அவர்களின் ஆடை மஞ்சள் நிறமுடையதும், தேக அம்சங்கள் மிகவும் கவர்ச்சியானவையுமாகும். அவர்கள் இளமைப் பருவத்துடனும், நான்கு கரங்களுடனும், அலங்காரப் பதக்கங்கள் கொண்ட முத்தாரங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு பிரகாசத்துடனும் காணப்படுகின்றனர்.
பதம் 2.9.12 : அவர்களில் சிலர் பவளத்தையும், வைடூர்யத்தையும் போல் பிரகாசமான தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன், தாமரை மலர்களைப் போல் பிரகாசிக்கும் மாலைகளைத் தலைகளில் அணிந்துள்ளனர், சிலர் குண்டலங்களை அணிந்துள்ளனர்.
பதம் 2.9.13 : வைகுண்ட லோகங்களும் கூட பளபளப்பாக, ஒளி வீசும் ஆகாய விமானங்களால் சூழப்பட்டுள்ளன. இவ்விமானங்கள் சிறந்த மகாத்மாக்களுக்கு அல்லது பகவத் பக்தர்களுக்குச் சொந்தமானவையாகும். பெண்மணிகள் தங்களின் விண்ணுலக தேக வர்ணங்களினால் மின்னலைப் போன்ற அழகுடன் விளங்குகின்றனர். இவையனைத்தும் இணைந்து, மேகங்களாலும் மின்னலாலும் அலங்கரிக்கப்பட்ட வானத்தைப் போலவே காட்சியளிக்கின்றன.
பதம் 2.9.14 : உன்னத வடிவம் கொண்ட லக்ஷ்மி தேவி பகவானின் தாமரைப் பாதங்களில் அன்புத் தொண்டாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறாள். வசந்த கால கருந்தேனீக்களால் உணர்ச்சியூட்டப்பட்ட அவள், இணைபிரியாத தமது சகாக்களுடன் பகவானின் தொண்டில் ஈடுபட்டு, அவருடைய செயல்களின் பெருமைகளைப் பாடுவதில் ஈடுபட்டுள்ளாள்.
பதம் 2.9.15 : பக்தர் குழாம் முழுமைக்கும் பகவானாக இருப்பவரும், லக்ஷ்மி தேவியின் பதியும், அனைத்து யக்ஞங்களின் உரிமையாளரும், அகில லோக நாயகனும், நெருங்கிய சகாக்களான நந்தர், சீனந்தர், பிரபலர் மற்றும் அர்ஹணர் முதலான அந்தரங்க தொண்டர்களால் சேவிக்கப் படுபவருமான முழுமுதற் கடவுளை, வைகுண்ட லோகங்களில் பிரம்ம தேவர் தரிசித்தார்.
பதம் 2.9.16 : பரமபுருஷர், அவரது அன்பிற்குரிய தொண்டர்களிடம் பாரபட்சம் கொண்டவராவார் போதையூட்டுபவராகவும், கவர்ச்சியுடனும் தோற்றமளித்த அவர், மிகவும் திருப்தியுடையவராகக் காணப்பட்டார். அவர், மயக்கமூட்டும் சிவந்த வர்ணத்தால் அலங்கரிக்கப்பட்டார், புன்னகை பூத்த முகத்துடன், மஞ்சள் நிற ஆடையணிந்து, காதில் குண்டலங்களுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சியளித்தார். அவருக்கு நான்கு கரங்கள் இருந்தன. மேலும் அவரது மார்பு லக்ஷ்மி கோடுகளால் குறிக்கப்பட்டிருந்தது.
பதம் 2.9.17 : தமது சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள பகவான், நான்கு, பதினாறு, ஜந்து மற்றும் ஆறு இயற்கையான ஐசுவரியங்கள் எனப்படும் வேறுபட்ட சக்திகளாலும். நிலையற்ற மற்ற சாதாரண சக்திகளாலும் சூழப்பட்டவராய் அமர்ந்திருந்தார். தமது சொந்த வசிப்பிடத்தை அனுபவிப்பவரான அவரே உண்மையான பரமபுருஷராவார்.
பதம் 2.9.18 : இவ்வாறாக முழுமுதற் கடவுளை முழு தோற்றத்தில் தரிசித்த பிரம்ம தேவர், ஆனந்தத்தால் அன்பும், பரவசமும் மேலிட, கண்களில் அன்புக் கண்ணீர் ததும்பியபடி, பகவானின் முன் தலை வணங்கினார். அதுவே ஜீவராசிகளுக்குரிய மிகவுயர்ந்த பூரணத்துவ (பரமஹம்ஸ) நிலையை அடைவதற்கான வழியாகும்.
பதம் 2.9.19 : தம் முன் பிரம்மா இருப்பதைக் கண்ட பகவான், ஜீவராசிகளை படைப்பதற்குத் தகுதி வாய்ந்தவராக அவரை ஏற்று, தம் விருப்பப்படியே அவரால் ஆளப்படுவதற்கு உடன்பட்டார். இவ்வாறாக அவரிடம் மிகவும் திருப்தியடைந்த பகவான், பிரம்மாவுடன் கரம்குலுக்கி, இலேசாக புன்னகை செய்து, பின்வருமாறு கூறினார்.
பதம் 2.9.20 : அழகிய முழுமுதற் கடவுள் பிரம்ம தேவரை நோக்கிக் கூறினார்: ஒ பிரம்மா, என்னிடமிருந்து வேதங்களைப் பெற்று, சிருஷ்டிக்கும் விருப்பத்துடன் நீண்ட காலமாக நீர் செய்த தவத்தில் நான் மிகவும் திருப்தியடைகிறேன். போலித்தனமுடைய யோகிகளிடம் நான் திருப்தியடைவதில்லை.
பதம் 2.9.21 : உமக்கு நன்மை உண்டாக வாழ்த்துகிறேன். ஓ பிரம்மா, அனைத்து வரங்களையும் அளிக்கும் என்னிடமிருந்து நீர் விரும்புவதையெல்லாம் கேட்கலாம். தங்களால் அடையப்படும் தன்னுணர்வின் மூலமாக, என்னை தரிசிப்பதே மிகச்சிறந்த வரம் என்பதை நீர் அறிவீராக.
பதம் 2.9.22 : எனது லோகங்களைச் சொந்தமாக அனுபவித்தறிவதே மிகவுயர்ந்த பூரணத்துவமாகும். மேலும் என்னுடைய கட்டளைக்கேற்ப கடுந்தவத்தை இயற்றுவதில் நீர் மேற்கொண்ட அடக்கமான மனோ நிலையால் இது சாத்தியமாகியுள்ளது.
பதம் 2.9.23 : பாவமற்றவரே, கடமையில் நீர் கலக்கமுற்றிருந்தபொழுது தவத்தை மேற்கொள்ளுமாறு முதலில் கட்டளையிட்டது நானே என்பதை அறிவீராக. அத்தகைய தவமே எனது இதயமும், ஆத்மாவுமாகும். எனவே தவத்திற்கும் எனக்கும் வேறுபாடில்லை.
பதம் 2.9.24 : அத்தகைய தவத்தால் இப்பிரபஞ்சத்தை நான் படைத்து, அதே சக்தியால் அதைக் காத்து, மீண்டும் அதே சக்தியால் அவையனைத்தையும் ஒடுக்கியும் விடுகிறேன். எனவே மறைந்துள்ள சக்தி தவம் மட்டுமேயாகும்.
பதம் 2.9.25 : பிரம்ம தேவர் கூறினார்: எம்பெருமானே- தாங்கள் அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் பரம வழிகாட்டியாக அமர்ந்திருக்கிறீர்கள். இதனால் உங்களது சிறந்த மதிநுட்பத்தின் மூலமாக, ஜீவராசிகளின் எல்லா முயற்சிகளைப் பற்றியும் எவ்வித இடையூறுமின்றி நீங்கள் அறிகிறீர்கள்.
பதம் 2.9.26 : எம்பெருமானே அப்படியிருந்தும், எனது விருப்பத்தை தாங்கள் அன்புடன் நிறைவேற்ற வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன். உங்களது உருவம் உன்னதமானது. பௌதிக உருவம் உங்களுக்கு இருந்ததில்லை என்றாலும், அத்தகைய உருவத்தை தாங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை தயவுசெய்து என்னிடம் அறிவிக்க வேண்டுகிறேன்.
பதம் 2.9.27 : மேலும், சேர்க்கையின் மூலமாக, மாற்றத்தின் மூலமாகவும் தாங்கள் எப்படி அழிக்கவும், உற்பத்தி செய்யவும், ஏற்கவும் மற்றும் பராமரிக்கவும் பலதரப்பட்ட சக்திகளை வெளிப்படுத்துகிறீர்கள்? (தயவுசெய்து என்னிடம் தெரிவிக்கவும்).
பதம் 2.9.28 : சர்வ சக்திகளுக்கும் எஜமானரே, அவைகளைப் பற்றிய அனைத்தையும் தத்துவார்த்தமாக தயவு செய்து என்னிடம் கூறியருளுங்கள். சிலந்தி தன்னுடைய சொந்த சக்தியால் தன்னை மறைத்துக் கொள்வதைப் போலவேதான் தாங்களும் நடந்து கொள்கிறீர்கள். உங்களுடைய தீர்மானம் என்றுமே தவறாததாகும்.
பதம் 2.9.29 : பரமபுருஷரான தங்களுடைய உபதேசத்தின் மூலமாக இவ்விஷயத்தில் நான் கற்பிக்கப்பட்டால், ஜீவராசிகளைப் படைப்பதில் நான் உங்களுடைய கருவியாகச் செயற்பட்டு, அத்தகைய செயல்களால் பந்தப்பட்டுவிடாமல் என்னால் இருக்க முடியும். எனவே அவைகளைப் பற்றி தயவுசெய்து எனக்குக் கூறுங்கள்.
பதம் 2.9.30 : எம்பெருமானே. பிறப்பற்றவரே, ஒரு நண்பனைப் போல் (சம நிலையில் இருப்பவரைப் போல்) தாங்கள் என்னுடன் கரம் குலுக்கினீர்கள், வெவ்வேறு வகையான ஜீவராசிகளைப் படைப்பதில் ஈடுபட்டு, தங்களுடைய சேவையில் நான் ஆழ்ந்துவிட வேண்டும். எந்த குழப்பமும் எனக்கு ஏற்படாதிருக்க வேண்டும். மேலும் நானே பரமன் என்றெண்ணி, இவையனைத்தும் என்னிடம் கர்வத்தை எழுப்பிவிடாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்.
பதம் 2.9.31 : முழுமுதற் கடவுள் கூறினார்: சாஸ்திரங்களில் விவரிக்கப் பட்டுள்ளதைப் போல், என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியுடன் உணர வேண்டும். அதற்குத் தேவையான விஷயம் இப்பொழுது என்னால் விளக்கப்படுகிறது. இதை நீர் கவனத்துடன் கேளும்.
பதம் 2.9.32 : எனது உண்மையான நித்திய ரூபம், எனது உன்னத வாழ்வு, வர்ணம், குணங்கள் மற்றும் செயல்கள் ஆகிய என்னைப் பற்றிய அனைத்தும், எனது அகாரணமான கருணையில், உமது உண்மையான இறையுணர்வின் மூலமாக உமக்குள் எழுந்தருளட்டும்.
பதம் 2.9.33 : பிரம்மா, படைப்பிற்கு முன் முழுமுதற் கடவுளாகிய என்னைத்தவிர வேறொன்றும் இருக்கவில்லை. இப்படைப்பிற்குக் காரணமாக இருக்கும் ஜட இயற்கையும் கூட அப்பொழுது இருக்கவில்லை. இப்பொழுது நீர் காண்பவையும் கூட முழுமுதற் கடவுளாகிய நானே, மேலும் அழிவுக்குப் பின் எஞ்சியிருக்கப் போவதும் முழுமுதற் கடவுளாகிய நானே.
பதம் 2.9.34 : ஓ பிரம்மா, மதிப்புடையதாகக் காட்சியளிப்பது எதுவானாலும், அது என்னுடைய சம்பந்தப்பட்டு இருக்கவில்லையெனில் அதில் உண்மையில்லை. இருளில் உள்ளதாகச் காட்சியளிக்கும் அந்த பிரதிபலிப்பை எனது மாயா சக்தியென அறிவீராக.
பதம் 2.9.35 : ஓ பிரம்மா, பஞ்சபூதங்கள் பிரபஞ்சத்தினுள் நுழைகின்றன, அதேசமயம் நுழையாமலும் இருக்கின்றன; அதைப் போலவே, படைக்கப்பட்ட அனைத்திற்குள்ளும் நான் இருக்கிறேன், அதேசமயம் அவற்றிற்கு வெளியிலும் இருக்கிறேன்.
பதம் 2.9.36 : பரம சத்தியமான முழுமுதற் கடவுளைத் தேடும் ஒருவன், எல்லாச் சூழ்நிலைகளிலும், எக்காலத்திலும், எவ்விடத்திலும், நேராகவோ அல்லது மறைமுகமாகவோ, இந்நிலை வரைக்கும் தேடுவான் என்பது நிச்சயம்.
பதம் 2.9.37 : ஓ பிரம்மா, இம்முடிவை உறுதியான மன ஒருமையுடன் நீர் பின்பற்ற வேண்டும். இதனால் இடைபட்ட அல்லது முடிவான அழிவு காலத்தில், எவ்விதமான அகங்காரமும் உமது அமைதியைக் குலைக்காது.
பதம் 2.9.38 : சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார் ஜீவராசிகளின் தலைவரான பிரம்ம தேவருக்கு உபதேசிக்கும்பொழுது தமது உன்னதமான உருவத்தில் காணப்பட்ட பரமபுருஷரான ஹரி, பிறகு மறைந்துவிட்டார்.
பதம் 2.9.39 : பக்தர்களுடைய புலன்களுக்கு உன்னதமான இன்பத்தை அளிப்பவரான பரமபுருஷ பகவான் ஸ்ரீஹரியின் மறைவுக்குப் பின், பிரம்மா, கூப்பிய கரங்களுடன், முன்பு ஜீவராசிகளால் நிரப்பப்பட்டிருந்ததைப் போன்ற பிரபஞ்சத்தை மறுபடியும் சிருஷ்டிக்கத் துவங்கினார்.
பதம் 2.9.40 : இவ்வாறாக, முன்னொரு காலத்தில், ஜீவராசிகளின் மூதாதையும், சமயத்தில் தந்தையுமான பிரம்ம தேவர், அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை செய்ய விரும்பி, கட்டுப்பாடான வாழ்வை மேற்கொண்டார்.
பதம் 2.9.41 : பிரம்மாவின் வாரிசுகளிலேயே மிகப் பிரியமானவரான நாரதர், தமது தந்தைக்குச் சேவை செய்ய எப்பொழுதும் தாயாராக இருப்பதுடன், அவரது கட்டளைகளை, நன்னடத்தையுடனும், பணிவுடனும் மற்றும் புலனடக்கத்துடனும் கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்.
பதம் 2.9.42 : ராஜனே, முனிவர்களுக்கெல்லாம் தலை சிறந்தவராகவும், பக்தர்களுக்கெல்லாம் சிகரமாகவும் விளங்கி, தம் தந்தையை மிகவும் திருப்திபடுத்திய நாரதர், சர்வ சக்திகளுக்கும் எஜமானராகிய விஷ்ணுவின் சக்திகளைப் பற்றிய அனைத்தையும் அறிய விரும்பினார்.
பதம் 2.9.43 : தமது தந்தையும், பிரபஞ்சங்களின் பிதாமகருமான பிரம்மா, நன்கு திருப்தியடைந்திருப்பதைக் கண்ட பின், மிகச் சிறந்த முனிவரான நாரதரும் அவரிடமிருந்து விவரமாக விசாரித்தார்.
பதம் 2.9.44 : அதன் பிறகு, முழுமுதற் கடவுளால் விவரிக்கப்பட்டதும், பத்து சிறப்பியல்புகளைக் கொண்டதும், வேத அநுபந்தமுமான ஸ்ரீமத் பாகவதம், தந்தையால் (பிரம்மா) அவரது மகன் நாரதருக்கு திருப்தியுடன் கூறப்பட்டது.
பதம் 2.9.45 : அரசே! சரஸ்வதி நதிக்கரையில், பரமபுருஷரிடம் அல்லது பரபிரம்மத்திடம் பக்திபூர்வமாக தியானத்தில் ஆழ்ந்திருந்தவரான, எல்லையற்ற சக்தி படைத்த வியாஸதேவரிடம், மகாமுனிவரான நாரதர், பரம்பரையின் வாயிலாக ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார்.
பதம் 2.9.46 : அரசே முழுமுதற் கடவுளின் விஸ்வ ரூபத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்ற உமது கேள்விக்கும், பிற கேள்விகளுக்கும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பதங்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலமாக விவரமாக நான் விடையளிக்கப் போகிறேன்.