அத்தியாயம் – 8
பரீட்சித்து மகாராஜனின் கேள்விகள்
பதம் 2.8.1 : பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் விசாரித்தார்: நாரத முனி பேசுவதைக் கேட்டவர்கள் பிரம்ம தேவரால் உபதேசிக்கப்பட்டவர்களுக்கு ஈடான அதிர்ஷடசாலிகளாவர். அத்தகைய நாரதர் பௌதிக குணங்களற்றவரான பகவானின் திவ்யமான குணங்களை எவ்விதம் விவரித்தார்? மேலும் யார் முன்னிலையில் அவர் பேசினார்?
பதம் 2.8.2 : அரசர் கூறினார்: அற்புத சக்திகளைப் பெற்றுள்ள பகவானைப் பற்றிய வரலாறு, எல்லாக் கிரகங்களுக்கும் நிச்சயமாக, மங்களம் அளிப்பவையாகும். அவற்றை நான் அறிய விரும்புகிறேன்.
பதம் 2.8.3 : பெரும் பாக்கியசாலியாள சுகதேவ கோஸ்வாமியே, தயவு செய்து ஸ்ரீமத் பாகவத்தைத் தொடர்ந்து சொல்லும்படி வேண்டுகிறேன். இதனால் பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மனதை நான் பதிக்க முடியும். இவ்வாறு ஜடக் குணங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலையில், இவ்வுடலை என்னால் கைவிட முடியும்.
பதம் 2.8.4 : ஸ்ரீமத் பாகவத்தை ஒழுங்காகக் கேட்பவர்களும், இவ்விஷயத்தை எப்பொழுதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களும், முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை விரைவில் தங்களது இதயங்களில் எழுந்தருளச் செய்வர்.
பதம் 2.8.5 : பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “சபத்” அவதாரமாக (ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில்), தன்னுணர்வு பெற்ற ஒரு பக்தனின் இதயத் தாமரைக்குள் புகுந்து, நீரின் கலக்கத்தை இலையுதிர்க்கால மழை போக்குவதைப் போல், பௌதிக சகவாசத்தால் விளைந்த காமம், கோபம், லோபம் (பேராசை) முதலான அழுக்குகளைப் போக்கி விடுகிறார்.
பதம் 2.8.6 : பக்தித் தொண்டு முறையால் இதயம் ஒரு முறை தூய்மை அடையப் பெற்ற தூய பக்தரொருவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை ஒருபொழுதும் கைவிடுவதில்லை. ஏனெனில், துன்பம் நிறைந்த ஒரு பிரயாணத்திற்குப் பின் வீட்டில் திருப்தியுடன் இருக்கும் ஒரு பிரயாணியைப் போல், அவரை பக்தித் தொண்டு பூரண திருப்தியடையச் செய்கிறது.
பதம் 2.8.7 : கற்றறிந்த பிராமணரே, உன்னதமான ஆத்மா ஜட உடலிலிருந்து வேறுபட்டதாகும். அவன் தனது உடலை தற்செயலாகப் பெறுகிறானா? அல்லது ஏதேனும் சில காரணத்தால் பெறுகிறானா? இதைத் தாங்கள் அறிந்திருப்பதால், அன்புடன் இதை விளக்கியருள வேண்டுகிறேன்.
பதம் 2.8.8 : யாருடைய வயிற்றிலிருந்து தாமரைத் தண்டு முளைத்ததோ, அந்த பரமபுருஷ பகவான், அவரது சுய மனோபலத்திற்கும், அளவிற்கும் ஏற்ற ஒரு பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருப்பாரயின், பின் அவரது உடலுக்கும், சாதாரண ஜீவராசிகளின் உடலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதம் 2.8.9 : பௌதிக மூலத்திலிருந்து பிறக்காமல், பகவானின் நாபியிலிருந்து வெளிவரும் தாமரைப் பூவில் பிறந்தவரான பிரம்மாவே, பௌதிக பிறவியேற்கும் அனைவரையும் படைப்பவராவார். பகவானின் கருணையால் அவரது ரூபத்தை பிரம்மாவால் காண முடிந்தது.
பதம் 2.8.10 : எல்லோர் இதயங்களிலும் பரமாத்மாவாக இருப்பவரும், சர்வ சக்திகளுக்கும் இறைவனாக இருந்தும், அவரது பகிரங்க சக்தியால் தொடப்படாதவராக இருப்பவருமான பரமபுருஷரைப் பற்றியும் தயவு கூர்ந்து விளக்கியருள வேண்டும்.
பதம் 2.8.11 : கற்றறிந்த பிராமணரே, பிரபஞ்சத்தின் அனைத்து கிரகங்களும், அவற்றின் ஆளுனர்களும் விராட்-புருஷரின் பிரம்மாண்டமான உடலின் வெவ்வேறு பாகங்களில் அமைந்திருப்பதாக முன்பு விவரிக்கப்பட்டது. அதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவற்றின் உண்மை நிலையென்ன? அதை தயவுகூர்ந்து விளக்கிக் கூறுவீரா?
பதம் 2.8.12 : மேலும் படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலம், இரண்டாம்பட்சமான படைப்புக்களின் ஆயுள், அத்துடன் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களின் தன்மை ஆகியவற்றையும் அதுமட்டுமல்லாமல், பிரபஞ்சத்தின் வெவ்வேறு கிரகங்களிலுள்ள தேவர்களையும், மனிதர்களையும் போன்ற ஜீவராசிகளின் ஆயுட்காலத்தையும் கூட தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.
பதம் 2.8.13 : பிராமணர்களின் புனிதமானவரே, ஆயுள் நீண்டும், குறுகியும் உள்ளதன் காரணத்தையும், காலத்தின் ஆரம்பம் மற்றும் அதைத் தொடர்ந்த செயலின் போக்கு ஆகியவற்றையும் கூட தயவு செய்து விவரிக்க வேண்டும்.
பதம் 2.8.14 : மேலும், வெவ்வேறு ஜட இயற்கைக் குணங்களின் அளவிற்கேற்ப உண்டாகும் பலன்கள், எவ்வாறு தேவர்கள் முதற்கொண்டு மிகவும் அற்பமான ஜீவன்கள் வரையிலான, வேறுபட்ட ஜீவராசிகளை உயர்வடையவோ அல்லது இழிவடையவோ செய்கின்றன என்பதையும் அன்புடன் விளக்குவீராக.
பதம் 2.8.15 : பிராமண சிரேஷ்டரே, பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள கோளங்கள் சுவர்க்கத்தின் நான்கு திசைகள், ஆகாயம், கிரகங்கள், நட்சத்திரங்கள், மலைகள், நதிகள், கடல்கள் மற்றும் தீவுகள் ஆகியவையும் அவற்றின் வேறுபட்ட வாசிகளும் எவ்வாறு படைக்கப்படுகின்றன என்பதையும் தயவு செய்து விளக்கியருளுங்கள்.
பதம் 2.8.16 : பிரபஞ்சத்தின் உள்வெளியையும், புறவெளியையும் அவற்றின் பிரிவுகளுக்கேற்ப விளக்கவும். அத்துடன் மகாத்மாக்களின் குணம் மற்றும் செயல்களையும், மேலும் சமூக மற்றும் ஆன்மீக பிரிவினர்களின் செயல் முறைகளையும் கூட தயவு செய்து விளக்குவீராக.
பதம் 2.8.17 : சிருஷ்டியிலுள்ள யுகங்களையும், அவற்றின் வெவ்வேறு ஆயுட்காலத்தையும் தயவு செய்து விவரிக்க வேண்டுகிறேன். அத்துடன், வெவ்வேறு யுகங்களில் அவதரிக்கும் பகவானின் வெவ்வேறு செயல்களைப் பற்றியும் கூறுவீராக.
பதம் 2.8.18 : மனித சமூகத்தின் பொதுவான சமய ஒற்றுமைகளை ஏற்படுத்தக் கூடியது என்னவாக இருக்கும்? மேலும் மக்களின் வர்ணாஸ்ரம பற்றியும், கடமைகளைப் பற்றியும், சமூக மற்றும் அரசாளும் பிரிவினரைப் பற்றியும், துன்பத்தில் உள்ளவனுக்குரிய மதக் கடமைகளையும் தயவு செய்து விவரிக்க வேண்டும்.
பதம் 2.8.19 : படைப்பின் மூலப் பொருட்கள், அவற்றின் எண்ணிக்கை, அவற்றிற்குரிய காரணங்கள், அவற்றின் வளர்ச்சி, அத்துடன் பக்தித் தொண்டின் முறை மற்றும் யோக சக்திகளின் முறை ஆகியவற்றையும் அன்புடன் விளக்குவீராக.
பதம் 2.8.20 : மகா யோகிகளின் ஐசுவரியங்கள் யாவை? முடிவாக அவர்களால் உணர்ப்படுகிறது என்ன? பக்குவமடைந்த யோகி எப்படி சூட்சும உடலிருந்து தன்னை பிரித்துக் கொள்கிறான்? இதிகாசம் மற்றும் பிற்சேர்க்கையான புராணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வேத இலக்கியங்களின் அடிப்படை அறிவு என்ன?
பதம் 2.8.21 : ஜீவராசிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றனர், எப்படி பராமரிக்கப்படுகின்றனர், மேலும் அவர்கள் அவர்கள் எப்படி அழிக்கப்படுகின்றனர் என்பதையெல்லாம் தயவு செய்து என்னிடம் விளக்கிக் கூறுவீராக. பகவானிடம் பக்தித் தொண்டாற்றுவதால் விளையும் நன்மை, தீமைகளைப் பற்றியும் எனக்குக் கூறுவீராக. ஸ்மிருதி சாஸ்திரங்களின் வேதச் சடங்குகளும், கட்டளைகளும் யாவை? மேலும் மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் திருப்தி ஆகியவற்றிற்குரிய செயல் முறைகள் யாவை?
பதம் 2.8.22 : பகவானின் உடலோடு ஐக்கியப்பட்டுள்ள ஜீவராசிகள் எப்படி படைக்கப்படுகின்றன என்பதையும், இவ்வுலகில் நாஸ்திகர்கள் எப்படி தோன்றுகின்றனர் என்பதையும், பந்தப்படாத ஜீவராசிகள் எப்படி வாழ்கின்றனர் என்பதையும் தயவு செய்து விளக்குவீராக.
பதம் 2.8.23 : சுதந்திரமுள்ளவரான முழுமுதற் கடவுள் அவரது லீலைகளைத் தமது அந்தரங்க சக்தியின் மூலமாய் அனுபவிக்கிறார். அழிவுக் காலத்தில் அவற்றை பகிரங்க சக்தியிடம் விட்டுவிட்டு, அனைத்திற்கும் சாட்சியாக மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
பதம் 2.8.24 : பகவானின் பிரதிநிதியாகிய மகா முனிவரே, உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கும், எனது விசாரணையின் ஆரம்பத்திலிருந்து என்னால் விசாரிக்கப்படாமல் விடுபட்டுப்போன கேள்விகளுக்கும் விடையளித்து என்னைத் திருப்திபடுத்துவீராக. நான் உங்களிடம் சரணாகதியடைந்த ஆத்மாவாகையால், இவ்விஷயத்தில் பூரண அறிவை எனக்குப் புகட்ட வேண்டுகிறேன்.
பதம் 2.8.25 : மகாமுனிவரே, நீங்கள் முதல் ஜீவராசியான பிரம்மாவுக்கு நிகரானவர். முந்தைய தத்துவவாதக் கற்பனையாளர்களால் பின்பற்றப்படுவதைப் போல், வழக்கமாக இருந்துவருவதை மட்டுமே மற்றவர்கள் பின்பற்றுகின்றனர்.
பதம் 2.8.26 : கற்றறிந்த பிராமணரே, கடல் போன்ற தங்களுடைய பேச்சிலிருந்து பெருகியோடும், பரமபுருஷரின் அமிர்தம் போன்ற செய்தியை நான் பருகிக் கொண்டிருப்பதால், எனது உபவாசத்தின் காரணமாக எவ்விதமான சோர்வையும் நான் உணரவில்லை.
பதம் 2.8.27 : சூத கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக பக்தர்களுக்கிடையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களைப் பேச பரீட்சித்து மகாராஜனால் அழைக்கப்பட்டதால், சுகதேவ கோஸ்வாமி மிகவும் திருப்தியடைந்தார்.
பதம் 2.8.28 : பரீட்சித்து மகாராஜனின் கேள்விகளுக்கு இவ்வாறாக விடையளிக்கத் துவங்கிய அவர் பகவத் விஞ்ஞானமும், வேத அநுபந்தமுமான ஸ்ரீமத் பாகவத புராணம் வேதங்களுக்குச் சமமானதென்றும், பிரம்மா பிறந்தபொழுது அவருக்கு பகவானாலேயே முதலில் உபதேசிக்கப்பட்டது என்றும் கூறினார்.
பதம் 2.8.29 : பரீட்சித்து மகாராஜன் தம்மிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடையளிக்க அவர் தம்மை தயார் செய்துகொண்டார். பரீட்சித்து மகாராஜன் பாண்டுக்களின் வம்சத்திலேயே மிகவும் சிறந்தவராவார். இதனால் சரியான கேள்விகளை சரியான நபரிடம் அவரால் கேட்க முடிந்தது.