அத்தியாயம் – 10
எல்லாக் கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை
பதம் 2.10.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஸ்ரீமத் பாகவதத்தில் பின்வரும் பத்து பிரிவுகளைக் கொண்ட விஷயங்கள் உள்ளன: பிரபஞ்ச சிருஷ்டி. உப சிருஷ்டி, கிரக அமைப்புக்கள், பகவானால் அளிக்கப்படும் பாதுகாப்பு, படைப்பைத் தூண்டும் சக்தி, மனுக்களின் மாற்றம், பகவத் விஞ்ஞானம், பரம பதத்தைச் சென்றடைதல், முக்தி, மற்றும் உத்தம புருஷர்.
பதம் 2.10.2 : உத்தம புருஷரின் (ஆஸ்ரய:) உன்னதத் தன்மையை பிரித்தறிவதற்காக, மற்றவைகளின் அறிகுறிகள் சில சமயங்களில் வேத முடிவுகளால் விவரிக்கப்படுகின்றன. சில சமயங்களில் அவை நேரடியான விளக்கத்தாலும், மற்ற சமயங்களில் பெரும் முனிவர்களின் சுருக்கமான விளக்கங்களாலும் விவரிக்கப்படுகின்றன.
பதம் 2.10.3 : ஆரம்பப் படைப்பின் பதினாறு பொருட்களான: ஜம்பூதங்கள் (நெருப்பு, நீர், நிலம், காற்று மற்றும் ஆகாயம்), ஓசை உருவம், சுவை, வாசனை, ஸ்பரிசம், மேலும் கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல் மற்றும் மனம் ஆகியவை ஸர்கம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஜட இயற்கைக் குணங்களின் சேர்க்கையினால் பின் தொடர்ந்து நிகழ்வது விஸர்கம் என்று அழைக்கப்படுகிறது.
பதம் 2.10.4 : ஜீவராசிகளுக்குரிய சரியான சூழ்நிலை, பகவானின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, பரமபுருஷ பகவானுடைய பாதுகாப்பின் கீழ் மன அமைதியுடன் இருப்பதாகும், மனுக்களும் அவர்களது சட்டங்களும் வாழ்வில் சரியான வழியைக் கொடுப்பதற்காகவே உள்ளனர். கர்ம வாசனையால் ஏற்படும் ஆசையே செயலாற்றுவதற்கான கோலாகும்.
பதம் 2.10.5 : பகவத் விஞ்ஞானமானது, முழுமுதற் கடவுளின் அவதாரங்களையும், அவரது பல்வேறு செயல்களையும் மற்றும் அவரது சிறந்த பக்தர்களின் செயல்களையும் விவரிக்கிறது.
பதம் 2.10.6 : பந்தப்பட்ட நிலையில் வாழும் சுபாவம் கொண்ட ஜீவராசி, யோக நித்திரையில் சயனித்திருக்கும் மஹா-விஷ்ணுவுடன் கலந்து விடும் நிலை, பிரபஞ்ச சிருஷ்டியின் ஒடுக்கம் என்று அழைக்கப்படுகிறது. முக்தி என்பது நித்தியமான உருவத்தை ஜீவராசி பெற்றிருக்கும் நிலையாகும். மாற்றமடையக்கூடிய ஸ்தூல மற்றும் சூட்சுமமான ஜட உடல்களைக் கைவிட்ட பின் இந்நிலையை அவன் பெறுகிறான்.
பதம் 2.10.7 : பரமாத்மா என்று போற்றப்படும் பரமபுருஷர்தான் பிரபஞ்ச தோற்றம், மற்றும் அதன் ஒடுக்கம் ஆகியவற்றின் ஆதி மூலமாவார். இவ்வாறாக அவரே பரம உற்பத்தி ஸ்தானமாகவும், பரபிரம்மமாகவும் இருக்கிறார்.
பதம் 2.10.8 : புலன் கருவிகளைப் பெற்றுள்ள தனித்தன்மை வாய்ந்த நபர் அத்யாத்மிக நபர் என்றும், புலன்களை ஆளும் தனித்தன்மையுள்ள மூர்த்தி அதிதைவிக நபர் என்றும், கண் விழிகளால் காணப்படும் உருவம் அதிபௌதிக நபர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பதம் 2.10.9 : ஜீவராசிகளின் மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவையாகும். ஒன்று இல்லாத வேளையில், மற்றது அறியப்படுவதில்லை. ஆனால் அவர்களில் ஒவ்வொருவரையும் புகலிடத்தின் புகலிடமாகக் காண்பவரான பரமபுருஷர் அனைவரிலும் சுதந்திரமானவராவார். இதனால் அவரே மிகச் சிறந்த புகலிடமாவார்.
பதம் 2.10.10 : பிரபஞ்சங்களை தனித்தனியாக பிரித்த பின், முதல் புருஷ அவதாரத்தின் தோற்றத்திற்குரிய இடமாகிய காரண கடலிலிருந்து வெளிவந்த, பகவானின் (மஹா-விஷ்ணு) பிரம்மாண்டமான பிரபஞ்சரூபம், படைக்கப்பட்ட உன்னத நீரின் (கர்போதக) மேல் சயனித்திருக்க விருப்பங்கொண்டு, ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் புகுந்தது.
பதம் 2.10.11 : அந்த பரமபுருஷர் அருவமானவரல்ல. அவர் விசேஷமான ஒரு நரர், அல்லது நபராவார். ஆகவே பரம நரரிலிருந்து படைக்கப்பட்ட உன்னதமான நீர் நார எனப்படுகிறது. அந்த நீரில் சயனித்திருப்பதால், அவர் நாராயணர் எனப்படுகிறார்.
பதம் 2.10.12 : அனைத்து பெளதிக மூலப் பொருட்கள், செயல்கள், காலம் மற்றும் குணங்கள் ஆகியவையும், அவற்றை அனுபவிப்பதற்கென உள்ள ஜீவராசிகளும் அவரது கருணையால் மட்டுமே இருக்கின்றன. அவற்றை அவர் அலட்சியப்படுத்திய உடனேயே அனைத்தும் மறைந்துவிடுகின்றன.
பதம் 2.10.13 : யோக நித்திரையில் சயனித்திருக்கும் பொழுது, ஜீவராசிகளைத் தம்மிடமிருந்து படைக்க விரும்பிய பகவான், அவரது பகிரங்க சக்தியின் மூலமாக, பொன்னிறமுள்ள விந்தை உற்பத்தி செய்தார்.
பதம் 2.10.14 : மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஒன்றேயான பகவானின் ஆற்றல் எப்படி ஆளும் ஜீவன்கள், ஆளப்படும் ஜீவன்கள் மற்றும் ஜட உடல்கள் என மூன்றாகப் பிரிகின்றன என்பதை என்னிடமிருந்து கேளும்.
பதம் 2.10.15 : மஹா-விஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து, புலன் சக்தி, மனோ பலம் மற்றும் உடல் பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப்போலவே, மொத்த உயிர்ச் சக்திக்கும் அதுவே பிறப்பிடமாக உள்ளது.
பதம் 2.10.16 : பிரஜைகள் தங்கள் அரசரை பின்பற்றுவதைப் போலவே, மொத்த சக்தி அசையும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் அசைகின்றன. மொத்தசக்தி முயற்சியைக் கைவிடும்பொழுது, மற்றெல்லா ஜீவராசிகளும் புலன் இயக்கங்களைக் கைவிடுகின்றன.
பதம் 2.10.17 : விராட் புருஷரால் கிளறப்பட்ட உயிர்ச்சக்தி, பசியையும், தாகத்தையும் உண்டாக்கியது. அவர் உண்ணவும், அருந்தவும் விரும்பிய பொழுது வாய் திறந்தது.
பதம் 2.10.18 : வாயிலிருந்து சுவை தோன்றியது. அதன் பலனாக நாவும் கூட உற்பத்தி செய்யப்பட்டது பின், நாவால் சுவைத்து அனுபவிக்கப்படுவதற்காக எல்லா வகையான சுவைகளும் தோற்றத்திற்கு வந்தன.
பதம் 2.10.19 : பரமன் பேச விரும்பியதும் வாயிலிருந்து பேச்சுகள் அதிர்ந்தன. பிறகு வாயிலிருந்து அக்னி தேவன் உற்பத்தி செய்யப்பட்டார். ஆனால் பகவான் நீரில் சயனித்திருக்கும்பொழுது, இச் செயல்கள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன.
பதம் 2.10.20 : அதன்பின், பரமபுருஷர் வாசனைகளை முகர விரும்பியபொழுது, நாசித்துவாரங்களும், சுவாசமும் உண்டாயின, மூக்கும், மணங்களும் தோன்றின, வாசனையைச் சுமந்து வரும் காற்று தேவனும் தோன்றினார்.
பதம் 2.10.21 : இவ்வாறாக அனைத்தும் இருளில் இருந்த பொழுது, பகவான் தம்மையும், படைக்கப்பட்டுள்ள அனைத்தையும் காண விரும்பினார். பிறகு கண்கள், ஒளிக்கடவுளான சூரியன், காணும் சக்தி மற்றும் காட்சிக்குரிய பொருள் ஆகிய அனைத்தும் தோன்றின.
பதம் 2.10.22 : பெரும் முனிவர்கள் பரமபுருஷரைப் பற்றி கேட்க விரும்பியதால், செவிகள், செவியுறும் சக்தி, செவியுறுவதை ஆளும் மூர்த்தி, மற்றும் செவியுறுவதற்கான பொருட்கள் ஆகியவை தோன்றின.
பதம் 2.10.23 : ஜடத்தின் இயற்கைக் குணங்களாகிய மிருது தன்மை, கடினத் தன்மை, சுடு, குளிர், இலேசான தன்மை மற்றும் பாரமான தன்மை, உண்ர்ச்சியின் பின்னணியான, தோல், மயிர்க் கண்கள், உடலின் மேலுள்ள ரோமங்கள் மற்றும் அவற்றின் ஆளும் மூர்த்திகள் (மரங்கள்) ஆகியவற்றை அறிய விரும்பியதும், அவை உற்பத்தி செய்யப்பட்டன. தோலின் உள்ளும், புறமும் உள்ள காற்றுத் திரையின் மூலமாக புலன் உணர்வு முக்கியத்துவம் பெற்றது.ஜடத்தின் இயற்கைக் குணங்களாகிய மிருது தன்மை, கடினத் தன்மை, சுடு, குளிர், இலேசான தன்மை மற்றும் பாரமான தன்மை, உண்ர்ச்சியின் பின்னணியான, தோல், மயிர்க் கண்கள், உடலின் மேலுள்ள ரோமங்கள் மற்றும் அவற்றின் ஆளும் மூர்த்திகள் (மரங்கள்) ஆகியவற்றை அறிய விரும்பியதும், அவை உற்பத்தி செய்யப்பட்டன. தோலின் உள்ளும், புறமும் உள்ள காற்றுத் திரையின் மூலமாக புலன் உணர்வு முக்கியத்துவம் பெற்றது.
பதம் 2.10.24 : அதன் பிறகு பல வகையான செயல்களைச் செய்ய பரமபுருஷர் விரும்பிய பொழுது, இருகரங்களும், அவற்றின் ஆளும் வலிமையும் மற்றும் சுவர்க்க தேவனான இந்திரனும் தோற்றத்திற்கு வந்தனர். அவ்வாறே, கரங்கள் மற்றும் தேவர் ஆகிய இரண்டையும் சார்ந்த செயல்களும் தோன்றின.
பதம் 2.10.25 : அதன்பிறரு, அசைவை கட்டுப்படுத்த அவர் விரும்பியதால், அவரது பாதங்கள் தோற்றத்திற்கு வந்தன. அப்பாதங்களிலிருப்பதால் ஆளும் மூர்த்தியான விஷ்ணு தோற்றுவிக்கப்பட்டார், இச்செயலின் மீதான அவரது சொந்த மேற்பார்வையினால், எல்லா வகையான மனிதர்களும் சுறுசுறுப்பாக அவரவர் வர்ணாஸ்ரம கடமைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
பதம் 2.10.26 : அதன் பிறகு, பாலுறவு சுகத்திற்காகவும், குழந்தை பெறுவதற்காகவும் மற்றும் சுவர்க்கம் போன்ற அமிர்தத்தை சுவைப்பதற்காகவும், பகவன் புறப் பாலுறுப்புக்களை விருத்தியடையச் செய்தார். இவ்வாறக பாலுறுப்யும், அதனை ஆளும் மூர்த்தியான பிரஜாபதியும் தோன்றின. இவை பகவானுடைய புறப்பாலுறுப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பதம் 2.10.27 : அதன்பிறகு, ஆகாரத்தில் மிச்சத்தைக் (மலம்) கழிக்க அவர் விரும்பியதும் ஆளும் மூர்த்தியான மித்ரனோடு மலத்துவாரமும் அதன் புலனுறுப்பும் விருத்தியடைந்தன. புலனுறுப்பு மற்றும் கழிவுப் பொருள் ஆகிய இரண்டும் ஆளும் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பதம் 2.10.28 : அதன்பிறகு, ஓருடலிலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல அவர் விரும்பிய பொழுது, நாபி, பிரிக்கும் காற்று மற்றும் மரணம் ஆகியவை சேர்ந்து படைக்கப்பட்டன. மரணம் மற்றும் பிரிக்கும் சக்தி ஆகிய இரண்டுக்கும் நாபியே அடைக்கலம்.
பதம் 2.10.29 : உணவும், பானமும் அருந்த விருப்பம் ஏற்பட்டபொழுது, வயிற்றுப் பகுதியும், குடல்களும் மற்றும் தமனிகளும் தோற்றத்திற்கு வந்தன. நதிகளும், சமுத்திரங்களுமே அவற்றின் பராமரிப்புக்கும், ஜீவ பரிணாமத்திற்கும் மூலங்களாகும்.
பதம் 2.10.30 : தமது சுய சக்தியின் செயல்களைப் பற்றி சிந்திக்க ஆவல் ஏற்பட்ட பொழுது, இதயம் (மனதின் இருப்பிடம்), மனம், சந்திரன், மன உறுதி மற்றும் ஆசை ஆகியவை தோன்றின.
பதம் 2.10.31 : உடலின் ஏழு மூலப் பொருட்களாகிய, தோலின் மீதுள்ள இலேசான அடுக்கு, தோல், சதை இரத்தம், கொழுப்பு, மஜ்ஜை மற்றும் எலும்பு ஆகியவை, நிலம், நீர், நெருப்பால் ஆனவையாகும். ஆனால் உயிர் மூச்சானது. ஆகாயம். நீர், காற்று ஆகியவற்றால் உண்டாக்கப்படுகிறது.
பதம் 2.10.32 : புலன் உறுப்புகள் ஜட இயற்கைக் குணங்களில் பற்று கொண்டுள்ளன. ஜட இயற்கைக் குணங்கள் பொய் அகங்காரத்திலிருந்து விளைந்தவையாகும். மனம் எல்லா வகையான பௌதிக அனுபவங்களுக்கும் (இன்ப, துன்பம்) அடிமைப்பட்டுள்ளது மேலும் புத்தி, மனமாழ்ந்த யோசனையின் முக்கிய அம்சமாகும்.
பதம் 2.10.33 : என்னால் உமக்கு விவரிக்கப்பட்டது போல், கிரகங்களைப்போல் ஸ்தூல உருவங்களைக் கொண்ட இவை அனைத்தினாலும் முழுமுதற் கடவுளின் புற உருவம் மறைக்கப்பட்டுள்ளது.
பதம் 2.10.34 : ஆகவே இதற்கும் (ஸ்தூல தோற்றம்) அப்பால் ஓர் உன்னதமான தோற்றம் உள்ளது. அது மென்மையிலும் மென்மையான உருவம் கொண்டதாகும். அதற்கு ஆரம்பமோ, மத்திய நிலையோ அல்லது முடிவோ கிடையாது; ஆகவே அது நமது விளக்கத்திற்கும், மனக் கற்பனைக்கும் அப்பாற்பட்டதும், பௌதிக எண்ணத்திலிருந்து முற்றிலும் வேறானதுமாகும்.
பதம் 2.10.35 : உமக்கு பௌதிக கோணத்திலிருந்து இப்பொழுது நான் விளக்கியதைப் போல், மேற்குறிப்பட்ட பகவானின் ரூபங்களில் எதுவும், அவரை நன்கறிந்துள்ள பகவத் பக்தர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பதம் 2.10.36 : முழுமுதற் கடவுளாகிய அவர், தமது உன்னதமான நாமம், குணம், லீலைகள், பரிவாரம் மற்றும் உன்னதமான பலவகைப்பட்ட நிலை ஆகியவற்றின் கருப்பொருளாக இருப்பதால், தம்மை ஒர் உன்னதமான உருவில் அவர் தோற்றுவித்துக் கொள்கிறார். அத்தகைய செயல்கள் அனைத்தினாலும் அவர் பாதிப்படையாதவராக இருப்பினும், அவ்வாறு ஈடுபட்டிருப்பதைப் போன்று அவர் காணப்படுகிறார்.
பதங்கள் 2.10.37 – 2.10.40 : ராஜனே அனைத்து ஜீவராசிகளும் அவர்களின் கடந்த கால கருமங்களுக்கேற்ப பரமபுருஷராலேயே படைக்கப்படுகின்றனர் என்பதை என்னிடமிருந்து அறிவீராக, இது பின்வரும் ஜீவராசிகளையும் உள்ளடக்கியதாகும்: பிரம்மா மற்றும் தட்சனைப் போன்ற அவரது மகன்கள், குறித்த காலத்தில் அவ்வப்பொழுது தோன்றும் வைவஸ்வத மனுவைப் போன்றவர்கள், இந்திரன், சந்திரன் மற்றும் வருணனைப் போன்ற தேவர்கள், பிருகு, வியாசர் மற்றும் வசிஷ்டரைப் போன்ற பெரும் முனிவர்கள், பித்ருலோக மற்றும் சித்தலோக வாசிகள், சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், மற்றும் தேவதைகள், பரம்பினங்கள், குரங்கு வடிவ கிம்புருஷர்கள், மனிதர்கள், மாத்ருலோக வாசிகள், இராட்சஸர்கள், பிசாசுகள், பேய்கள், ஆவிகள், பைத்தியக்காரர்கள்: மற்றும் துர் தேவதைகள், நல்ல மற்றும் துர் நட்சத்திரங்கள், வேதாளங்கள், காட்டு மிருகங்கள், பறவைகள், வீட்டு மிருகங்கள், ஊர்வன, மலைகள், அசையும் மற்றும் நிற்கும் ஜீவராசிகள், கருவிலிருந்தும், முட்டையிலிருந்தும், வியர்வையிலிருந்தும் மற்றும் விதையிலிருந்தும் பிறக்கும் ஜீவராசிகள், மேலும் நீரிலோ, நிலத்திலோ அல்லது ஆகாயத்திலோ, மற்றும் இன்பத்திலோ, துன்பத்திலோ, அல்லது அவற்றின் கலப்படத்திலோ வாழும் மற்றெல்லா ஜீவராசிகள், இவர்களனைவரும் அவர்களின் கடந்த கால கருமங்களுக்கேற்ப பரமபுருஷரால் படைக்கப்படுகின்றனர்.
பதம் 2.10.41 : சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும் ஜட இயற்கை குணங்களுக்கேற்ப வெவ்வேறு ஜீவராசிகள் உள்ளனர். இவர்கள் தேவர்களென்றும், மனிதர்களென்றும் மற்றும் நரக வாழ்விலுள்ள ஜீவராசிகள் என்றும் அறியப்படுகின்றனர். ஓ ராஜனே, இயற்கையின் ஒரு குறிப்பிட்ட குணமும் கூட. மற்ற இரண்டுடனும் கலந்திருப்பதால், அது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒவ்வொரு வகையான ஜீவராசியும் மற்ற குணங்களால் வசிகரிக்கப்பட்டு, அவற்றின் சுபாவங்களையும் கூட பெறுகிறான்.
பதம் 2.10.42 : முழுமுதற் கடவுளாகிய அவர், படைப்பை ஏற்படுத்திய பின், பிரபஞ்சத்திலுள்ள அனைவரையும் பாதுகாப்பவர் எனும் முறையில் வெவ்வேறு அவதாரங்களில் தோன்றுகிறார். இவ்வாறாக மனிதர்கள், மனிதரற்றவர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோருக்கு இடையிலுள்ள எல்லா வகையான பந்தப்பட்ட ஆத்மாக்களையும் அவர் காப்பாற்றுகிறார்.
பதம் 2.10.43 : அதன்பிறகு, யுக முடிவில், அழிவை ஏற்படுத்துபவரான ருத்ரனின் உருவில் தோன்றும் பகவான், மேகங்களை காற்று கலைத்து விடுவதைப் போல், முழு படைப்பையும் அழித்து விடுவார்.
பதம் 2.10.44 : சிறந்த ஆன்மீகிகள் பரமபுருஷ பகவானின் செயல்களை இவ்வாறு விவரிக்கின்றனர். ஆனால் தூய பக்தர்கள், இந்த அம்சங்களை விட அதிக பெருமை வாய்ந்த விஷயங்களை பகவானில் காணும் தகுதியுடையவர்களாவர்.
பதம் 2.10.45 : ஜட உலகின் படைப்பு மற்றும் அழிவு எனும் விஷயங்களில் பகவானின் நேரடியான மேற்பார்வை இல்லை. ஜட இயற்கைதான் சிருஷ்டிக் கர்த்தா எனும் கருத்தை மறுப்பதற்காகவே பகவானின் நேரடியான ஈடுபாட்டைப் பற்றி வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
பதம் 2.10.46 : இவ்விடத்தில் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ள படைப்பு மற்றும் அழிவைப் பற்றிய இம்முறையே பிரம்மாவின ஒரு பகலுக்குரிய கட்டுப்பாட்டு விதியாகும். எதில் பௌதிக இயற்கை கலைக்கப்டுகிறதோ. அந்த மஹத்தின் படைப்பிலும் கூட இதுவே கட்டுப்பாட்டு விதியாக உள்ளது.
பதம் 2.10.47 : ஓ ராஜனே, காலத்தின் அளவை, அதன் ஸ்தூல மற்றும் சூட்சும அம்சங்களில், அவற்றின் குறிப்பிட்ட அறிகுறிகளுடன், போகப் போக நான் விளக்குவேன். ஆனால் இப்பொழுது பாத்ம-கல்பத்தைப் பற்றி உமக்கு நான் விளக்கப் போகிறேன்.
பதம் 2.10.48 : விட்டுப் பிரிவதற்கு மிகவும் கடினமானவர்களான உறவினர்களை ஒரு புறம் விட்டுவிட்டு, விதுரர் எப்படி வீட்டை விட்டு வெளியேறினார் என்பதைப் பற்றி சுத கோஸ்வாமி ஏற்கனவே சௌனக ரிஷியிடம் அறிவித்திருந்ததால், படைப்பைப் பற்றிய அனைத்தையும் கேள்விப்பட்ட பின், சௌனக ரிஷி சுத கோஸ்வாமியிடம் விதுரரைப் பற்றி விசாரித்தார்.
பதங்கள் 2.10.49- 2.10.50 : சௌனக ரிஷி கூறினார்: ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசிய மைத்ரேயருக்கும், விதுரருக்கும் இடையில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டன, விதுரர் எதைப்பற்றி விசாரணை செய்தார், அதற்கு மைத்ரேயர் கூறிய பதிலென்ன என்பதையெல்லாம் தயவு செய்து எங்களுக்குக் கூறியருளுங்கள். மேலும் விதுரர் தமது குடும்ப அங்கத்தினர்களின் உறவைக் கைவிட்டதன் காரணத்தையும், அவர் ஏன் மீண்டும் திரும்பினார் என்பதையும், புண்ணிய யாத்திரை ஸ்தலங்களில் இருந்தபொழுது விதுரர் ஆற்றிய செயல்களைப் பற்றியும் தயவு செய்து எங்களுக்குக் கூற வேண்டுகிறேன்.
பதம் 2.10.51 : ஸ்ரீ சுத கோஸ்வாமி விளக்கினார்: பரீட்சித்து மகாராஜனின் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் மகா முனிவரால் விவரிக்கப்பட்ட அதே விஷயங்களை இப்பொழுது நான் உங்களிடம் விளக்கிக் கூறுகிறேன். தயவு செய்து அவற்றை கவனமாகக் கேளுங்கள்.
ஸ்ரீமத்பாகவதம், இரண்டாம் காண்டத்தின், “எல்லாக் கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை” எனும் தலைப்பைக் கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.