அத்தியாயம் – 1
முனிவர்களின் கேள்விகள்
பதம் 1.1.1
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஜன்மாதி அஸ்ய யதோ ‘ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ: ஸ்வராத்
தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி-கவயே முஹ்யந்தி யத் ஸூரய:
தேஜோ-வாரி-ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ‘ம்ருஷா
தாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த-குஹகம் ஸத்யம் பரம் தீமஹி

ஓம்—ஓ எனது பகவானே; நம— எனது வணக்கங்களை அளிக்கிறேன்; பகவதே — பரம புருஷரான பகவானுக்கு; வாசுதேவாய — வாசுதேவருக்கு (வாசுதேவரின் புதல்வருக்கு) அல்லது ஆதி முதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு; ஜன்ம—ஆதி-படைத்தல், காத்தல், அழித்தல்; அஸ்ய—உருப்பெற்றுள்ள பிரபஞ்சங்களின்; யத— எவரிடமிருந்து; அன்வயாத்—நேரடியாக; இதரத—மறைமுகமாக; சா—மேலும்; அர்தேஷு—காரணங்கள்; அபிஜ்ஞ— முழுவதும் அறிந்திருக்கிற; ஸ்வராத்— முழுவதும் சுதந்திரமான; தேனே- தெரிவிக்கிற; பிரஹ்ம—வேதங்களின் அறிவு; ஹ்ருதா—உள்ளத்தில் உணர்த்திய; ய:-ஆதி-கவயே —படைக்கப்பட்ட முதல் ஜீவராசிக்கு; முஹ்யந்தி— மாயத் தோற்றங்களே; யத்—அவரைப் பற்றி; ஸூரய— பெரும் முனிவர்களும், தேவர்களும்; தேஜ:—நெருப்பு; வாரி—நீர்; ம்ருதாம்— நிலம்; யத்ஹா—அவ்வளவிற்கு; வினிமய- செயலும் அதன் எதிர் விளைவும்; யத்ர-அதன்மேல்; த்ரி—ஸர்க:-மூன்று மாதிரியான படைக்கும் நியதிகள், உண்டாக்கும் வினைத் திறமைகள்; அம்ருஷா- அனேகமாக உண்மையான; தாம்னா- எல்லா தெய்வீக உபகரணங்களுடன்; ஸ்வேன- தன் நிறைவுடன்; ஸதா- எப்பொழுதும்; நிரஸ்த-இன்மையால் மறுத்தல்; குஹகம்- மாயை; ஸத்யம்-உண்மை; பரம்-வரம்பி ல்லாத; தீமஹி- நான் தியானிக்கிறேன்.

எம்பெருமானே, ஸ்ரீ கிருஷ்ணா, வசுதேவரின் புதல்வரே, எங்கும் வியாபித்திருக்கும் முழுமுதற் கடவுளே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன். தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரபஞ்சங்களின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய காரணங்களுக்கு மூல காரணமாகவும், பூரண உண்மையாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால் அவரை நான் தியானிக்கிறேன். எல்லா தோற்றங்களையும் அவர் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்துள்ளார். மேலும் அவருக்கப்பால் வேறேந்த காரணமும் இல்லாததால் அவர் சுதந்திரமானவராவார், முதல் ஜீவனான பிரம்மாவின் இதயத்தில் ஆதியில் வேத அறிவைப் புகட்டியவர் அவரேயாவார். நெருப்பினுள் காணப்படும் நீராகவும், நீர் மேல் காணப்படும் நிலமாவும் தோற்றமளிக்கும் மாயாஜாலத்தினால் ஒருவன் குழப்பமடைவதைப் போல், ஸ்ரீ கிருஷ்ணரால் பெரும் முனிவர்களும், தேவர்களும் கூட மாயையில் புகுத்தப்படுகின்றனர். இயற்கையின் முக்குண பிரதிபலன்களால் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஜடப் பிரபஞ்சங்கள் பொய்யானவை. ஆயினும், அவை உண்மையானவையாக காட்சியளிப்பதற்கு உரிய ஒரே காரணப் பொருளும் அவரேயாவார். எனவே, ஜடவுலக மாயைகளிலிருந்து நிரந்தரமாக விடுபட்டுள்ள பரலோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நித்திய வாசம் புரிகின்றார். அவரே பூரண உண்மையாகையால் நான் அவரைத் தியானிக்கின்றேன்.

பதம் 1.1.2
தர்ம: ப்ரோஜ்ஹித-கைதவோ அத்ர பரமோ நிர்மத்ஸராணாம் ஸதாம்
வேத்யம் வாஸ்தவம் அத்ர வஸ்து ஸிவதம்தாப-த்ரயோன்-மூலனம்
ஸ்ரீமத்-பாகவதே மஹா-முனி-க்ருதே கிம் வா பரைர் ஈஸ்வர:
ஸத்யோ ஹிருதி அவருத்யதே அத்ர க்ருதிபி: சுஸ்ரூஷுபிஸ் தத் க்ஷணாத்

தர்ம: —சமய உணர்வுடைமை; ப்ரோஜ்ஹித—முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட; கைதவ:—பலன் கருதும் எண்ணத்தால் மூடப் பெற்ற; அத்ர—இந்த; பரம:—மிகவுயர்ந்த; நிர்மத்ஸராணாம் நூற்றுக்கு நூறு தூய்மையான மனதில்; ஸதாம்—பக்தர்கள்; வேத்யம்— புரிந்து கொள்ளக்கூடிய; வாஸ்தவம்-உண்மையான; அத்ர—இந்த; வஸ்து—பொருள்; ஸிவதம்—நன்மைக்காக; தாப-த்ரய—மூவகையான துன்பங்கள்; அன்மூலனம்—வேரோடு களையக் காரணமான; ஸ்ரீமத்— அழகிய; பாகவதே—பாகவத புராணம்; மஹாமுனி—மிகச்சிறந்த முனிவர் (வியாசதேவர்); க்ருதே—தொகுத்தளித்த; கிம்—என்ன உள்ளது; வா—தேவை; பரை—மற்றவர்கள்; ஈஸ்வர:—மேலான பகவான்; சத்ய— உடனடியாக; ஹ்ருதி—உள்ளத்தின் உள்ளே; அவருத்யதே—நிலை நிறுத்தப்பட்டு விடுகிறார்; அத்ர—இந்த; க்ருதிபி:—இறையுணர்வுள்ள (பக்தியுள்ள) மனிதர்களால்; ஸுஸ்ரூஷுப்ஹி—வளர்த்துக் கொள்வதால்; தத்-க்ஷணாத்—தாமதமின்றி.

பௌதிக நோக்கங்களைக் கொண்ட எல்லா மதச் சடங்குகளையும் முற்றிலும் விலக்கி, பூரண இதயத் தூய்மை உடையவர்களான அந்த பக்தர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மிகவுயர்ந்த உண்மையை இந்த பாகவத புராணம் விவரிக்கின்றது. எல்லோருடைய நன்மைக்காகவும் மாயையிலிருந்து பிரித்தறியப்படும் நிஜமான நிலையே பரம உண்மையாகும். அத்தகைய உண்மை மூவகைத் துன்பங்களை களைந்தெறியச் செய்கின்றது. மஹா முனிவரான வியாசதேவரால் (அவரது முதிர்ந்த நிலையில்) தொகுக்கப்பட்டதான இந்த அழகிய பாகவதம் ஒன்றே, இறையுணர்வை உண்டாக்கப் போதுமானதாகும். வேறெந்த சாஸ்திரத்திற்கும் என்ன அவசியம் உள்ளது? பாகவதத்தின் செய்தியை ஒருவர் கவனத்துடனும், பணிவுடனும் கேட்டவுடனேயே, அறிவைப் பண்படுத்தும் இம்முறையினால் அவருடைய இதயத்திற்குள் பரம புருஷர் நிலை நிறுத்தப்படுகின்றார்.

பதம் 1.1.3
நிகம-கல்ப-தரோர் கலிதம் ஃபலம்
சுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யூதம்
பிபத பாகவதம் ரஸம் ஆலயம்
முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:

நிகம—வேத இலக்கியங்கள்; கல்ப-தரோ—கல்ப விருட்சம்; கலிதம்—பூரணமாக கனிந்துள்ள; ஃபலம்— பழம்; சுக—ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி; முகாத்—உதடுகளிலிருந்து; அம்ருத—அமிர்தம்; த்ரவ— விழுங்குவதற்குச் சுலபமான இளகிய தன்மையும், மென்மையும் கொண்ட; ஸம்யுதம்— எல்லா விஷயத்திலும் பூரணமான; பிபத— அதைச் சுவைப்பர்; பாகவதம்—பகவானுடனான நித்திய உறவைப் பற்றிய விஞ்ஞானத்தை விவரிக்கும் நூல்; ரஸம்—சாறு (சுவைத்து அனுபவிக்கக்கூடியது); ஆலயம்—முக்தியடையும்வரை அல்லது முக்திபெற்ற நிலையிலும்; முஹு—எப்போதும்; அஹோ—ஓ; ரஸிகா- ரஸானுபாவங்களில் பூரண அறிவுடையோர்; புவி—பூமி மீது : பாவுகா-— திறமையும், சிந்தனையும் கொண்ட.


திறமையும், சிந்தனையும் மிக்கவர்களே, கல்ப விருட்சமாகிய வேத இலக்கியங்களின், கனிந்த பழமாகிய ஸ்ரீமத் – பாகவதத்தை அனுபவியுங்கள். அமிர்தம் போன்ற அதன் ரசம் முக்தி பெற்ற ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் ஏற்கனவே அனுபவிக்கக் கூடியதாக இருந்தாலும், ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியின் உதடுகளிலிருந்து அது வெளிவந்திருப்பதால், இந்த பழம் அதைவிட அதிக சுவையுடையதாக ஆகியிருக்கிறது .

பதம் 1.1.4
நைமிஷே ‘நிமிஷ – க்ஷேத்ரே ருஷய: சௌனகாதய:
ஸத்ரம் ஸ்வர்காய லோகாய சஹஸ்ர-ஸமம் ஆஸத

நைமிஷே— நைமிஷாரண்யம் எனும் வனத்தில்; அனிமிஷ க்ஷேத்ரே—குறிப்பாக (தமது கண்ணிமைகளை மூடாதவரான) விஷ்ணுவுக்குப் பிரியமான ஓரிடம்; ருஷய—முனிவர்கள்; சௌனக -ஆதய:—சௌனக ரிஷியை தலைமையாகக் கொண்டு ; ஸத்ரம் —வேள்வி; ஸ்வர்காய—ஸ்வர்கத்தில் போற்றப்படும் பகவான்; லோகாய —மேலும் பகவானுடன் எப்போதும் தொடர்புகொண்டுள்ள பக்தர்களுக்கு; ஸஹஸ்ர—ஓர் ஆயிரம்; ஸமம்—ஆண்டுகள்; ஆஸத—நிறைவேற்ற.

ஒருமுறை நைமிஷாரண்ய வனத்திலுள்ள புனிதமான ஓரிடத்தில், சௌனக ரிஷியைத் தலைமையாகக் கொண்ட மகரிஷிகள், பகவானையும் அவரது பக்தர்களையும் திருப்திப் படுத்துவதற்காக, ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் மிகப்பெரிய யாகத்தை நடத்துவதற்காகக் கூடினர்.

பதம் 1.1.5
த ஏகதா து முனய: ப்ராதர் ஹுத – ஹுதாக்னய:
சத்-க்ருதம் ஸூதம் ஆஸீனம் பப்ரச்சுர் இதம் ஆதராத்

தே—ரிஷிகள்; ஏகதா— ஒருநாள்; து-ஆனால்; முனய—ரிஷிகள்; ப்ராத—காலை;ஹுத—எரியச் செய்து; ஹுத-அக்னய:—வேள்வித்தீ ; சத்-க்ருதம்—தகுந்த மரியாதைகளுடன்; ஸூதம்— ஸ்ரீ சூத கோஸ்வாமியை; ஆஸீனம்—அமரச் செய்து; பப்ரச்சு—விசாரணை செய்தனர்; இதம் — இவற்றின் மீது (பின்வருமாறு); ஆதராத்—தகுந்த மரியாதைகளுடன்.

ஒரு நாள் ஹோமம் செய்து தங்களது ஆராதனையை முடித்துக்கொண்டபின், சூதரை மதிப்பிற்குரிய ஓர் ஆசனத்தில் அமரச் செய்ததும், அவர்கள் பின்வரும் கேள்விகளை அவரிடம் கேட்டனர்.

பதம் 1.1.6
ரிஷய உவாச்ச :
த்வயா கலு புராணானி சேதிஹாஸானி சானகா
ஆக்யாதானி அபி அதீதானி தர்ம-சாஸ்த்ராணி யானி உத

ரிஷய—ரிஷிகள்; ஊச்சு-கூறினர்; த்வயா—உங்களால்; கலு—சந்தேகமில்லாமல்; புராணானி—விளக்கமான விவரணைகள் கொண்ட புராணங்கள்; ஸ-இதிஹாஸானி—வரலாறுகளுடனும்; ச—மேலும்; அநக— எல்லா களங்கத்திலிருந்தும் விடுபட்ட; ஆக்யாதானி— விளக்கியிருக்கிறீர்கள்; அபி—ஆயினும்; அதீதானி—கற்றறிந்து; தர்ம— சாஸ்த்ராணி—முன்னேற்றமான வாழ்வுக்காக சரியான வழிகளைக் கொடுக்கும் சாஸ்திரங்கள்; யானி—இவையெல்லாம்; உத—கூறிய.

ரிஷிகள் கூறினர். மதிப்பிற்குரிய சூத கோஸ்வாமியே, எல்லா களங்கத்திலிருந்தும் தாங்கள் முற்றிலும் விடுபட்டிருக்கிறீர்கள். சமய வாழ்வுக்குத் தேவையான புகழ்பெற்ற எல்லா சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மற்றும் சரித்திரங்களிலும் கூட தாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். அவற்றை முறையான வழிகாட்டலின் கீழ் தாங்கள் கற்றதுடன், அவற்றை நீங்கள் விளக்கியும் இருக்கிறீர்கள்.

பதம் 1.1.7
யானி வேத-விதாம் ஸ்ரேஷ்டோ பகவான் பாதராயண:
அன்யே ச முனய: சூத பராவர-விதோ விது:

யானி—அவையனைத்தும்; வேத-விதாம்—வேத- விற்பன்னர்கள்; ஸ்ரேஷ்ட:—அனைவரிலும் வயது முதிர்ந்த; பகவான்—பரம புருஷரின் அவதாரம்; பாதராயண:—வியாசதேவர்; அன்யே -பிறர்; ச—மேலும்; முனய:—முனிவர்கள்; சூத—ஓ சூத கோஸ்வாமி; பராவர – வித:— கற்றறிந்த பண்டிதர்களுக்கிடையில், சரீர மற்றும் அதைச்சார்ந்துள்ளவற்றின் அறிவில் ஆழ்ந்த அனுபவமுள்ள ஒருவர்; விது— அறிந்துள்ள ஒருவர்.

ஓ சூத கோஸ்வாமியே, கற்றறிந்த வேதாந்தகளில் மூத்தவரான தாங்கள், பரம புருஷரின் அவதாரமாகிய வியாசதேவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறீர்கள். எல்லா வகையான பௌதிக மற்றும் தம் ஆன்மீக அறிவுகளில் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களான மற்ற முனிவர்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்.

பதம் 1.1.8
வேத்த த்வம் செளம்ய தத் ஸர்வம் தத்வதஸ் தத்-அனுக்ரஹாத்
ப்ருயு: ஸ்நிக்தஸ்ய சிஷ்யஸ்ய குரவோ குஹ்யம் அபி உத

வேத்த—நீங்கள் ஆழ்ந்த அனுபவமுள்ளவர்; த்வம்—மேன்மை தாங்கிய;
செளம்ய— தூய்மையும், எளிமையும் உள்ள ஒருவர்; தத்—அந்த; ஸர்வம்—எல்லா;
தத்வத—உண்மையில்; தத்—அவர்களின்; அனுக்ரஹாத்—தயவினால்; ப்ரூயு:—கூறுவர்; ஸ்நிக்தஸ்ய—அடக்க முள்ள ஒருவரின்; சிஷ்யஸ்ய—சீடரின்; குரவ:—ஆன்மீக குருமார்கள்; குஹ்யம்—இரகசியம்; அபி உத—அளித்துள்ளனர்.

நீங்கள் பணிவு உள்ளவராகையால், உங்களுடைய ஆன்மீக குருமார்கள், ஒரு நற்பண்புள்ள சீடருக்கு அளிக்கப்பட வேண்டிய எல்லா கல்விகளையும் உங்களுக்கு அளித்துள்ளனர். எனவே, அவர்களிடமிருந்து தாங்கள் கற்றறிந்ததையெல்லாம் எங்களுக்குக் கூறுவீராக.

பதம் 1.1.9
தத்ர தத்ராஞ்ஜஸாயுஷ்மன் பவதா யத் வினிஸ்சிதம்
பும்ஸாம் ஏகான் தத: ஸ்ரேயஸ் தன் ந: சம்ஸிதும் அர்ஹசி

தத்ர—அதனுடைய; தத்ர—அதனுடைய; அஞ்ஜஸா— சுலபமாக்கி; ஆயுஷ்மன்—நீண்ட ஆயுளுடன் வாழ ஆசீர்வதிக்கப்பட்டு; பவதா —உங்களால்; யத்—எதுவாகிலும்; வினிஸ்சிதம்—ஆராய்ந்து கண்டு பிடித்திருப்பதை; பும்ஸாம்—பொதுமக்களுக்காக; ஏகான்தத— பூரணமான; ஸ்ரேய—முடிவான நன்மையை; தத்—அது; ந:—எங்களிடம்; சம்ஸிதும்—விளக்குவதற்கு; அர்ஹஸி—தகுதி.

நீண்ட ஆயுள் படைத்தவரே எது பொதுமக்களுக்கு, பூரணமானதாகவும், முடிவான நன்மையுடையதாகவும் இருக்கும் என்பதை சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தயவுசெய்து எங்களுக்கு விளக்கிக் கூறும்படி வேண்டுகிறோம்.

பதம் 1.1.10
ப்ராயேணால்பாயுஷ: ஸப்ய கலாவ் அஸ்மின் யுகே ஜனா:
மந்தா: ஸுமந்த-மதயோ மந்த-பாக்யா ஹி உபத்ருதா

ப்ராயேண—கிட்டத்தட்ட எப்பொழுதும்; அல்ப—அற்ப; ஆயுஷ: ஆயுள்; ஸப்ய—கற்றவர்களில் ஒருவர்; கலௌ—இக்கலியுகத்தில்; அஸ்மின்—இங்கே; யுகே — யுகம்; ஜனா:—பொதுமக்கள்; மந்தா: — மந்தம்; ஸுமந்த — மதய:-தவறான பாதையில் செலுத்தப்பட்ட; மந்த – பாக்ய—பாக்கியமற்ற; ஹி—அதோடு அனைத்திற்கும் மேலாக; உபத்ருதா—குழப்பமான.

ஓ கற்றறிந்தவரே, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர் களாகவும், அதிர்ஷ்ட மற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர்.

பதம் 1.1.11
பூரீணி பூரி-கர்மாணி ஸ்ரோதவ்யானி விபாகச :
அத: ஸாதோ ‘த்ர யத் ஸாரம் ஸமுத்த்ருத்ய மனீஷயா
ப்ரூஹி பத்ராய பூதானாம் யேனா த்மாஸுப்ரஸீததி

பூரீணி—பல வகைப்பட்ட; பூரி- பல; கர்மாணி— கடமைகள்; ஸ்ரோதவ்யானி—கற்கப்பட வேண்டிய; விபாகச:—விஷயங்களின் பிரிவுகளால்; அத:—எனவே; ஸாதோ—ஓ முனிவரே; அத்ர—இங்கு; யத்— எதுவாகிலும்; ஸாரம்— சாராம்சம்; ஸமுத்த்ருத்ய—தேர்வு செய்து; மனீஷயா — உங்களுடைய அறிவுக்கு எட்டியவாறு ; ப்ரூஹி—தயவுகூர்ந்து எங்களுக்குக் கூறுவீராக; பத்ராய—நன்மைக்காக; பூதானாம் —ஜீவராசிகள்; யேன—எதனால்; ஆத்மா—ஆத்மா; ஸுப்ரஸீததி—பூரண திருப்தியடைகிறார்.


பல வகையான சாஸ்திரங்களில் பல வகையான கடமைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் பல்வேறு பிரிவுகளையும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கற்றறிய முடியும். எனவே, ஓ முனிவரே, தயவுசெய்து இவ்வெல்லா சாஸ்திரங்களிலிருந்தும் சாராம்சத்தைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும் தயவுகூர்ந்து அதை விளக்குங்கள். இத்தகைய உபதேசங்களால் அவர்களுடைய இதயங்கள் பூரணமாக திருப்தியடையக்கூடும்.

பதம் 1.1.12
ஸூத ஜானாஸி பத்ரம் தே பகவான் ஸாத்வதாம் பதி!
தேவக்யாம் வஸுதேவஸ்ய ஜாதோ யஸ்ய சிகீர்ஷயா

ஸூத—சூத கோஸ்வாமியே; ஜானாஸி—உங்களுக்குத் தெரியும்; பத்ரம் தே—உமக்கு எல்லா ஆசீர்வாதங்களும் உண்டாகட்டும்; பகவான்—பரம புருஷர்; ஸாத்வதாம்—தூய பக்தர்களிடமிருந்து; பதி:— காவலர்; தேவக்யாம்— தேவகியின்; வஸுதேவஸ்ய—வசுதேவரால்; ஜாத:—அவருக்குப் பிறந்த; யஸ்ய—காரணத்துக்காக; சிகீர்ஷயா — நிறைவேற்றுதல்.

ஓ சூத கோஸ்வாமியே , உமக்கு மங்களம் உண்டாகட்டும். எக்காரணத்துக்காக, வசுதேவரின் மகனான பரம புருஷர் தேவகியின் கருவில் தோன்றினார் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

பதம் 1.1.13
தன் ந: சுஸ்ரூக்ஷமாணானாம் அர்ஹசி அங்கானுவர்ணி தும்
யஸ்யாவதாரோ பூதானாம் க்ஷேமாய ச பவாய ச

தத்— அந்த; ந – எங்களிடம்; கஸ்ரூக்ஷமாணானாம்— அதற்காக முயற்சி செய்பவர்கள்; அர்ஹஸி—அதைச் செய்ய வேண்டும்; அங்க— ஓசூதகோஸ்வாமி; அனுவர்ணிதும்—முந்தைய ஆச்சாரியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் முறையில் விளக்கம் அளிக்க; யஸ்ய— எவருடைய; அவதார:— அவதாரம்; பூதானாம்—ஜீவராசிகளிடம் இருந்து; க்ஷேமாய—நன்மைக்காக; ச—மேலும்; பவாய—முன்னேற்றம்; ச—மேலும்.


ஓ சூத கோஸ்வாமியே, பரம புருஷரையும் அவரது அவதாரங்களையும் பற்றி அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம். முந்தைய ஆச்சாரியர்களால் அளிக்கப்பட்ட உபதேசங்களை தயவுசெய்து எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள். ஏனெனில், அவைகளைப்பற்றி பேசுவதாலும், கேட்பதாலும், ஒருவர் உயர்வடைகிறார்.

பதம் 1.1.14
ஆபன்ன: ஸ்ம்ஸ்ருதிம் கோராம்யன்-நாம விவசோ க்ருணன்
தத: ஸத்யோ விமுச்யேத யத் பிபேதி ஸ்வயம் பயம்

ஆபன்ன:—சிக்கிக் கொண்டு இருப்பதால்; ஸம்ஸ்ருதிம்—பிறப்பு, இறப்பெனும் சிக்கலில்; கோராம்— மிகவும் சிக்கலான; யத் — எது; நாம் — புனித நாமம்; விவச:—அறியாமல்; க்ருணன்—பாடுதல்; தத:—அதிலிருந்து; ஸத்ய:— உடனே; விமுச்யேத—விடுதலை பெறுவார்; யத்—அது; பிபேதி—அஞ்சுகிறது; ஸ்வயம்—தானாகவே; பயம் — பயம் கூட.

பயமே சொரூபமானதும் கூட, கிருஷ்ணரின் புனித நாமத்தைக் கண்டு அஞ்சுகிறது. அத்தகைய புனித நாமத்தை அறியாமல் உச்சரிப்பதாலும் கூட, பிறப்பு, இறப்பெனும் சூழலில் சிக்கிக் கிடக்கும் ஜீவராசிகள் உடனே விடுவிக்கப்படுகின்றன.

பதம் 1.1.15
யத்-பாத-ஸம்ஸ்ரயா: சூத முனய: ப்ரசமாயனா:
ஸத்ய: புனந்தி உபஸ்ப்ருஷ்டா: ஸ்வர் துனி-ஆபோ ‘நுசேவயா
யத்— எவருடைய; பாத—தாமரைப் பாதங்களில்; ஸம்ஸ்ரயா: — புகலிடம் கொண்டுள்ளவர்கள்; ஸூத—ஓ! சூத கோஸ்வாமி; முனய: — மகா முனிவர்கள்; ப்ரசமாயனா:—பகவத் பக்தியில் ஆழ்ந்துள்ள; ஸத்ய:-உடனே; புனந்தி — புனிதப்படுத்த; உபஸ்ப்ருஷ்டா: —சகவாசத்தினாலேயே; ஸ்வர்துனீ— புனிதமான கங்கையின்; ஆப:—நீர்; அனுஸேவயா—உபயோகத்திற்கு கொண்டுவர.

ஓ சூதரே, பகவானின் தாமரைப் பாதங்களில் பூரணமாக புகலிடம் கொண்டவர்களான அச்சிறந்த முனிவர்களால், தங்களுடன் தொடர்பு கொள்பவர்களை உடனே புனிதப்படுத்திவிட முடியும். ஆனால் கங்கை நீரோ தொடர்ந்த உபயோகத்திற்குப் பின்தான் புனிதமடையச் செய்கிறது.

பதம் 1.1.16
கோ வா பகவதஸ் தஸ்ய புண்ய-ஸ்லோகேத்ய-கர்மண:
சுத்தி-காமோ நஸ்ருணுயாத் யச: கலி-மலாபஹம்

க: —யார்; வா-மாறாக; பகவத:—பகவானின்; தஸ்ய-அவரது(பகவானின்); புண்ய—மாசற்ற; ஸ்லோக—ஈத்ய — பிரார்த்தனைகளால் வழிபடத்தக்கவர்; கர்மண:—கர்மங்கள்; சுத்தி— காம:- எல்லா பாவங்களிலிருந்தும் விடுபெற விரும்பும்; ந—இல்லை; ஸ்ருணுயாத்— கேட்பவர்; யச:—மகிமைகளை; கலி—சண்டை சச்சரவுகள் கொண்ட யுகத்தின்;
மல—அபஹம்- தூய்மை அடைவதற்குரிய வழி.

கலி யுகத்திலுள்ள களங்கங்களிலிருந்து விடுபட விரும்பும் அதே சமயம், பகவானின் மாசற்ற மகிமைகளைக் கேட்க விரும்பாதவராகவும் இருப்பவர் யாராவது உண்டா ?

பதம் 1.1.17
தஸ்ய கர்மாணி உதாராணி பரிகீதானி சூரிபி:
ப்ரூஹி ந: ச்ரத்ததானானாம் லீலயா ததத:கலா:

தஸ்ய—அவருடைய (பகவான்); கர்மாணி—உன்னதச் செயல்கள்; உதாராணி—அற்புதமான; பரிகீதானி—ஒலிபரப்பு; சூரிபி:—மகாத் மாக்களால்; ப்ருஹி— தயவுகூர்ந்து கூறுவீராக; ந:—எங்களிடம்; ச்ரத்ததானானாம்—மரியாதையுடன் வரவேற்கத் தயாராக; லீலயா— லீலைகள்; ததத:—அவதரித்து; கலா—அவதாரங்கள்.

அவரது உன்னதச் செயல்கள் அற்புதமும், கவர்ச்சியும் கொண்டவையாகும். நாரதரைப் போன்ற கற்றறிந்த மகா முனிவர்கள் அவற்றைப் புகழ்ந்து பாடுகின்றனர். ஆகவே, பல்வேறு அவதாரங்களில் அவர் இயற்றும் சாகச செயல்களைப் பற்றி கேட்க ஆவலாக உள்ள எங்களிடம் அவற்றைக் கூறுவீராக.

பதம் 1.1.18
அதாக்யாஹி ஹரேர் தீமன் அவதார-சுதா: சுபா:
லீலா விததத: ஸ்வைரம் ஈஸ்வரஸ்யாத்ம- மாயயா


அத—எனவே; ஆக்யாஹி—விளக்கிக் கூறுங்கள்; ஹரே—பகவானின்; தீமன்—ஓ விவேகமுள்ளவரே; அவதார—அவதாரங்கள்; கதா:— வரலாறுகள்; சுபா:— மங்களகரமான; லீலா — சாகசங்கள்; விததத:—இயற்றப்பட்ட; ஸ்வைரம்—லீலைகள்; ஈஸ்வரஸ்ய—பரம் ஆளுநருடைய; ஆத்ம—சுய; மாயயா—சக்திகள்.

விவேகியான சூதரே, பரம புருஷரின் பல வகையான அவதாரக் கதைகளை தயவுகூர்ந்து எங்களுக்கு விவரிப்பீராக. பரம ஆளுநரான, பகவானின் இத்தகைய மங்களகரமான சாகசங்களும், திருவிளையாடல்களும் அவரது அந்தரங்க சக்திகளால் நிறைவேற்றப் படுகின்றன.

பதம் 1.1.19
வயம் து ந வித்ருப்யாம உத்தம-ச்லோக-விக்ரமே
யச்-ஸ்ருண்வதாம் ரஸ-ஞானாம் ஸ்வாது ஸ்வாது பதே பதே

வயம் — நாங்கள்; து —ஆனால்; ந—இல்லை; வித்ருப்யாம— ஓய்ந்திருக்க; உத்தமச்லோக—உன்னதமான சுலோகங்களால் போற்றப் படுபவரான பரம் புருஷர்; விக்ரமே—சாகசங்கள்;
யச்—எது; ஸ்ருண்வதாம்—தொடர்ந்துகேட்பதால்; ரஸ—மனநிலை; ஞானாம்— அனுபவமுள்ளவர்கள்; ஸ்வாது—அனுபவிக்கும்; ஸ்வாது—சுவையான; பதே பதே —ஒவ்வொரு அடியிலும்.

மந்திரங்களாலும் பிரார்த்தனைகளாலும் புகழப்படுபவரான பரம புருஷரின் தெய்வீகமான திருவிளையாடல்களைக் கேட்பதில் நாங்கள் களைப்படைவதே இல்லை. பகவானுடனான உன்னதமான உறவுமுறைகளில் ஒரு சுவையை விருத்தி செய்து கொண்டவர்கள் ஒவ்வொரு கணமும் அவரது திருவிளையாடல்களைக் கேட்டு இன்பம் அடைகின்றனர்

பதம் 1.1.20
க்ருதவான் கில கர்மாணி ஸஹ ராமேண கேசவ:
அதிமர்த்யானி பகவான் கூத: கபட-மானுஷ:


க்ருதவான்—செய்யப்பட்டது; கில-என்ன: கர்மாணி— செயல்கள்; ஸஹ—உடன்; ராமேண—பலராமர்; கேசவ:—ஸ்ரீகிருஷ்ணர்; அதிமர்த்யானி-அமானுஷ்யமான; பகவான்—பரம புருஷர்; கூத— மாறுவேடம் பூண்டு; கபட—வெளிப்படையாக; மானுஷ—மனிதன்.

தன் சொரூபத்தை மறைத்துக் கொண்டு மனிதரைப் போல் நடித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பலராமருடன் கூடி மனித சக்தியை மீறிய பல அற்புதங்களைச் செய்துள்ளார்.

பதம் 1.1.21
கலிம் ஆகதம் ஆக்ஞாய க்ஷேத்ரே ‘ஸ்மின் வைஷ்ணவே வயம்

ஆஸீனா தீர்க-ஸத்ரேண கதாயாம் ஸக்க்ஷணா ஹரே:

கலிம்—கலி யுகம் (பூசல்கள் மலிந்துள்ள இரும்பு யுகம்); ஆகதம்—வந்தடைந்து; ஆக்ஞாய—இதையறிந்து; க்ஷேத்ரே—இந்த நிலப் பகுதியில்; அஸ்மின்— இதில்; வைஷ்ணவே—குறிப்பாக பகவானின் பக்தர்களுக்கு என்று உள்ள; வயம்—நாங்கள்; ஆஸீனா—அமர்ந்திருக்கிறோம்; தீர்க— நீடித்த; ஸத்ரேண — யாகங்களைச் செய்வதற்காக; கதாயாம்—சொற்களில்; ஸக்க்ஷணா—எங்களுடைய நேரத்தின் வசதிக்கேற்ப; ஹரே—பரம புருஷரின்.

கலி யுகம் துவங்கிவிட்டதை நன்குணர்ந்து, பரம புருஷரின் உன்னதமான செய்தியை நீண்ட காலம் தொடர்ந்து செவியுறுவதன் வழியாக, யாகம் இயற்றுவதற்காக, புனிதமான இவ்விடத்தில் நாங்கள் கூடியுள்ளோம்.

பதம் 1.1.22
த்வம் ந: ஸந்தர்சிதோ தாத்ரா துஸ்தரம் நிஸ்தி தீர்ஷதாம்
கலிம் ஸத்வ-ஹரம் பும்ஸாம் கர்ண-தார இவார்ணவம்

த்வம்— மேன்மை தங்கியவரான தாங்கள்; ந: — எங்களுக்கு; ஸந்தர்சித: — சந்திக்கும்; தாத்ரா—இறையருளால்; துஸ்தரம்—கடக்க முடியாத; நிஸ்திதீர்ஷதாம்— கடக்க விரும்புவோருக்கு; கலிம்— கலியுகத்தை; ஸத்வ—ஹரம்—நற்குணங்களை சீரழிப்பது; பும்ஸாம்—ஒரு மனிதனின்; கர்ணதார—தலைவர்: இவ—இவ்வாறு: அர்ணவம்—சமுத்திரத்தை.

இறையருளால்தான் மேன்மை தங்கியவரான தங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இதனால் ஒரு மனிதனின் எல்லா நற்குணங்களையும் சீரழிப்பதான கலி, யுகமெனும் துன்பக் கடலைக் கடக்க உதவும் கப்பல் தலைவராக தங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்

பதம் 1.1.23
ப்ரூஹி யோகேஸ்வரே க்ருஷ்ணே ப்ரஹ்மண்யே தர்ம-வர்மணி
ஸ்வாம் காஷ்டாம்.அதுனோபேதே தர்ம: கம் சரணம் கத:

ப்ரூஹி— தயவுகூர்ந்து கூறுவீராக; யோக-ஈஸ்வரே—எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானரான; க்ருஷ்ணே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ப்ரஹ்மண்யே-பரம சத்தியம்; தர்ம தர்மம்; வர்மணி—காப்பவர்; ஸ்வாம்— சொந்த; காஷ்டாம்—வசிப்பிடம்; அதுனா—இக்காலத்தில்; உபேதே—திரும்பிச் சென்றுவிட்டதால்; தர்ம:—தர்மம்; கம்—யாரிடம்; சரணம்—புகலிடம்; கத:—சென்றுள்ளது.

எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானரும், பரம சத்தியமுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமது சொந்த வசிப்பிடத்துக்கு திரும்பிச் சென்று விட்டதால், சமயக் கொள்கைகள் இப்போது யாரிடம் சென்று அடைக்கலம் புகுந்துள்ளன என்பதை தயவுகூர்ந்து எங்களுக்குக் கூறுவீராக.

ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “முனிவர்களின் கேள்விகள்” எனும் தலைப்பைக் கொண்ட முதல் அத்தியாயத்திற்கான பக்தி வேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare